Home Blog Page 209

தமிழக அரசு பணி வந்தாச்சு!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை!!

மாநில அரசு பணிக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் அலுவலகத்தில் “அலுவலக உதவியாளர்” பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழக அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் அலுவலகம்

பணி: அலுவலக உதவியாளர்

பணியிடம்: தமிழகம் முழுவதும்

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை: நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

முகவரி:

இப்பணிக்கு தகுதி இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

தலைவர்,மாவட்ட குறைதீர் ஆணையம்,எண் 52,குமரன் கோவில் தெரு,திருவாரூர் 610001.

திருச்சி NIT-இல் அசத்தல் வேலை!! இதுவே லாஸ்ட் டேட்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

நமது திருச்சி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் தேசிய தொழில்நுட்ப கழகம் அதாவது NIT-யில் காலியாக இருக்கின்ற Junior Research Fellow பணிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப கழகம்(NIT)

பணி: Junior Research Fellow

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: திருச்சி

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்:12-05-2025

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.37,000/- முதல் ரூ.42,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பிஇ,பி.டெக்,எம்.டெக் போன்ற படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.nitt.edu என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 12 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

இனி முக்கி மலம் கழிக்க தேவையில்லை.. 1 கிளாஸ் தண்ணீரில் இதை மட்டும் கலந்து குடியுங்கள்!!

நாம் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை மலச்சிக்கல்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

எலுமிச்சை சாறு
விளக்கெண்ணெய்
தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை அதில் பிழிந்துவிட வேண்டும்.இந்த தண்ணீரை காலையில் எழுந்த பின்னர் பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

பால்
நெய்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் சிறிது சூடானதும் அதில் 5 மில்லி நெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

ஏலக்காய் பொடி
மஞ்சள் தூள்
தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி போட்டுக் கொள்ள வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு ஊற்றி பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.அதேபோல் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் பப்பாளி ஜூஸ் குடித்தால் மலம் இளகி வெளியேறும்.

ஒரு கிளாஸ் நீரில் சிறிது கல் உப்பு கலந்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மலம் அடித்துக் கொண்டு வெளியேறும்.

உங்களின் தொங்கும் தொப்பை வற்ற.. இதோ கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

மோசமான உணவால் உடலில் கெட்ட கொழுப்பு படிகிறது.ஆண்,பெண் தங்கள் தொப்பை கொழுப்பை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை
2)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜார் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கொத்தமல்லி ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கொத்தமல்லி சாறில் பிழிந்துவிட வேண்டும்.இந்த கொத்தமல்லி ஜூஸை தினமும் பருகி வந்தால் தொப்பை கொழுப்பு வேகமாக கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை
2)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த முருங்கை ஜூஸை கிளாஸிற்கு வடித்து ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிட வேண்டும்.இந்த முருங்கை கீரை ஜூஸை பருகி வந்தால் தொப்பை கொழுப்பு கூடிய விரைவில் குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லி ஜூஸை தினந்தோறும் செய்து பருகி வந்தால் தொப்பை,தொடை,இடுப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் கொழுப்பு கரையும்.

உங்கள் SUN TAN ஒரே நாளில் நீங்க.. இதோ சைத்ரா சொன்ன சீக்ரெட் டிப்ஸ்!!

இந்த கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.குறிப்பாக வெளியில் சென்று வந்தால் சரும நிறம் கருப்பாக மாறிவிடுகிறது.இந்த சருமப் பிரச்சனைகளில் இருந்து மீள தக்காளியை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி
2)மஞ்சள் தூள்
3)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் நன்கு கனிந்த தக்காளி பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை இரண்டாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளை அதில் சேர்க்க வேண்டும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை தக்காளி கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)மஞ்சள் தூள்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மிக்ஸ் செய்து சருமத்தில் தடவினால் தோல் பளபளப்பாக மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)பாசி பருப்பு பொடி
2)கற்றாழை ஜெல்

செய்முறை விளக்கம்:-

முதலில் பாசி பருப்பை பவுடர் பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பிரஸ் கற்றாழை ஜெல் இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து ஸ்க்ரப் செய்தால் வெயிலில் கருத்து போன சருமம் பொலிவாக மாறும்.

இந்த காய் மட்டும் உங்கள் உணவில் இருந்தால்..’ கட்டாயம் சர்க்கரை முதல் மஞ்சள்காமாலை வரை அறவே அண்டாது!!

நாம் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.குறிப்பாக கசப்பு சுவை கொண்ட காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பாகற்காய்,சுண்டைக்காய்,அதலைக்காய் போன்றவை அதிக நன்மைகளை கொண்டிருக்கிறது.

இதில் அதலைக்காய் தோற்றத்தில் பாகற்காய் போன்று இருக்கும்.கடந்த காலங்களில் இந்த காயின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது இந்த காயின் பெயர் கூட பலருக்கு தெரியாமல் இருக்கின்றது.இந்த அதலைக்காயை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

அதலைக்காய் ஊட்டச்சத்துக்கள்:

**துத்தநாகம் **பாஸ்பரஸ் **வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

அதலைக்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்:

1)சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பட அதலைக்காயை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இந்த காயை உலர்த்தி பொடித்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

2)இந்த அதலைக்காயை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு குணமாகும்.

3)குடலில் நாடாப்புழு,பட்டைப்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதலைக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

4)உடலிலுள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அதலைக்காயை உணவாக சாப்பிடலாம்.

5)கல்லீரலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை அகற்ற இந்த காயை ஜூஸாக செய்து பருகலாம்.

6)சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாக அதலைக்காயை உணவாக உட்கொள்ளலாம்.

7)வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து மீள அதலைக்காய் சாப்பிடலாம்.பாகற்காய் போன்றே அதலைக்காயிலும் பொரியல்,வறுவல்,கிரேவி செய்து சாப்பிடலாம்.

வெயில் காலத்தில் உடல் துர்நாற்றம் வீசுகிறதா.. இதை மட்டும் செஞ்சா உங்களுக்கு வியர்வை 1 சொட்டு கூட வராது!!

நமது உடலுக்குள் இருந்து தோல் வழியாக திரவ வடிவில் கழிவுகள் வெளியேறுகிறது.இதை வியர்வை என்று நாம் சொல்கின்றோம்.இந்த வியர்வை உடலில் இருந்து வெளியேறுவது நல்லது என்றாலும் அவை அதிகமாக வெளியேறினாலோ அல்லது துர்நாற்றத்துடன் வெளியேறினாலோ நமக்கு பிரச்சனையாகிவிடும்.

நமது உடலில் அக்குள் பகுதியில் இருந்துதான் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த வாசனை திரவியத்தை பலரும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தாது.நாம் இயற்கை வழிகளை பின்பற்றினால் மட்டுமே உடலில் துர்நாற்ற வியர்வை வெளியேறாமல் இருக்கும்.

யாருக்கு ஆதிகமாக வியர்வை வெளியேறும்?

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் துர்நாற்ற வியர்வை வெளியேறும்.அதேபோல் உடல் எடை அதிகமாக இருந்தால் அதிகமாக வியர்வை வெளியேறும்.சிவப்பு இறைச்சி உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் உடலில் வெளியேறும் வியர்வையில் துர்நாற்றம் வீசும்.

அதேபோல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மன அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வியர்வை துர் நாற்றத்துடன் வெளியேறும்.

வியர்வை வாராமல் இருக்க வழிகள்:

1)குளிக்கும் நீரில் சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொண்டால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.

2)தக்காளி பழத்தை ஜூஸாக அரைத்து குடித்து வந்தால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.

3)உருளைக்கிழங்கை அரைத்து அக்குள் பகுதியில் தடவி குளித்தால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.

4)குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு,கல் உப்பு சேர்த்துக் கொண்டால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.

5)தினமும் இரண்டு நேரம் குளியல் மேற்கொண்டால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.தினமும் ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸ் செய்து பருகி வந்தால் வியர்வை வெளியேறாமல் இருக்கும்.

6)தேங்காய் எண்ணையில் ஒரு கட்டி கற்பூரம் போட்டு சூடாக்கி உடலில் அதிகமாக வியர்க்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சம் பழம் போதும்.. இனி உங்கள் வீட்டில் ஒரு எறும்பு நடமாட்டம் கூட இருக்காது!!

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்ட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்க.

டிப்ஸ் 01:

ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் பிழிந்து தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை எறும்பு நடமாட்டம் உள்ள பகுதியில் ஸ்ப்ரே செய்தால் அவற்றை கட்டுப்படுத்தலாம்.

டிப்ஸ் 02:

புதினா இலையை அரைத்து சிறிது தண்ணீர் கலந்து எறும்பு நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.

டிப்ஸ் 03:

ஒரு கப் தண்ணீரில் ஒரு மூடி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து வீட்டில் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் நடமாட்டம் கட்டுப்படும்.

டிப்ஸ் 04:

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு பொடி சேர்த்து வீட்டில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.

டிப்ஸ் 05:

ஒரு பாட்டிலில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிதளவு மிளகு கீரை எண்ணெய் கலந்து ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் நடமாட்டம் குறையும்.

டிப்ஸ் 06:

வேப்பம் பூவை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடித்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் நடமாட்டம் குறையும்.

டிப்ஸ் 07:

ஆரஞ்சு பழத் தோலை அரைத்து எறும்புகள் நுழையும் இடத்தில் பூசினால் அவற்றின் நடமாட்டம் குறையும்.அதேபோல் கடையில் விற்கும் எறும்பு சாக் அல்லது எறும்பு பொடியை பயன்படுத்தியும் எறும்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

இந்த 1 இலையை இப்படி சாப்பிட்டால்.. எப்பேர்ப்பட்ட சளியும் அறுத்துக்கொண்டு வெளியேறும்!!

நாம் அனைவரும் மறந்து வரும் ஒரு மூலிகை கட்டுக்கொன்னை.இது நாட்டு மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டுக்கொன்னை கொன்றை மர வகையை சேர்ந்தது.இந்த மூலிகை இருமல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.

கட்டுக்கொன்னை மூலிகையின் வேரை சுத்தம் செய்துவிட்டு கஷாயம் செய்து குடித்தால் சளி,காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.

கட்டுக்கொன்னை இலையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.

சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து மீள கட்டுக்கொன்னை வேரை பொடித்து பாலில் கலந்து பருகலாம்.நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற கட்டுக்கொன்னை இலையை பொடித்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

கடுகு எண்ணையில் கட்டுக்கொன்னை வேர் மற்றும் இலை பொடியை மிக்ஸ் செய்து மூட்டு பகுதியில் தடவினால் வலி,வீக்கம் குறையும்.

கட்டுக்கொன்னை இலையை பொடித்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்தால் சளி தொல்லை நீங்கும்.உடலில் இருக்கின்ற உஷ்ணம் தணிய கட்டுக்கொன்னை இலையை பொடித்து மோரில் கலந்து சாப்பிடலாம்.உடலில் படியும் அழுக்குகளை வெளியேற்ற கட்டுக்கொன்னை மூலிகை வேரை பாலில் கலந்து குடிக்கலாம்.

கட்டுக்கொன்னை மூலிகை கஷாயம் செய்வது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்:

கட்டுக்கொன்னை இலை பொடி
கட்டுக்கொன்னை வேர் பொடி
தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கட்டுக்கொன்னை இலை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி கட்டுக்கொன்னை வேர் பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து பருகலாம்.

உங்கள் வீட்டில் சீலிங் ஃபேன் ஸ்பீடு கம்மியா இருக்கா? வேகத்தை அதிகரிக்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணுங்க!!

இப்பொழுது எல்லா வீடுகளிலும் சீலிங் ஃபேன் பயன்பாடு அதிகமாக உள்ளது.மழை,வெயில்,குளிர் என்று அனைத்து பருவ காலங்களிலும் சீலிங் ஃபேன் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.சிலருக்கு ஃபேன் ஆனில் இருந்தாலே மட்டுமே தூக்கம் வரும்.

குளிர் மற்றும் மழை காலத்தில் வேகமாக இயங்கும் சீலிங் ஃபேன் வெயில் காலத்தில் மட்டும் போதுமான காற்றை நமக்கு வழங்குவதில்லை.பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் ஃபேன் வெப்பக்காற்றையே நமக்கு வழங்குகிறது.ஏசி,ஏர் கூலர் போன்ற குளிர் காற்று தரும் சாதனங்கள் இருந்தாலும் கொளுத்தும் கோடை காலத்தில் சீலிங் ஃபேனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் சீலிங் ஃபேன் வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்:

1)சீலிங்கை ஃபேனில் தூசி இருந்தால் அதன் வேகம் குறையும்.எனவே ஃபேனை ஆப் செய்துவிட்டு ஒரு ஈரத் துணி பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.நீண்ட நேரம் ஃபேன் இயங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஃபேன் அதிக நேரம் இயங்கினால் சூடாகி வெப்பக்காற்றை வழங்கும்.எனவே நீண்ட நேரம் ஃபேன் காற்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

2)சீலிங் ஃபேன் வேகத்தை அதிகரிக்க கண்டென்ஸரை மாற்றலாம்.ஃபேனின் மேல் அதாவது மோட்டாருக்கு அருகில் கண்டென்ஸர் இருக்கும்.இந்த பழைய கண்டென்ஸரை அகற்றிவிட்டு புதியவற்றை இணைக்க வேண்டும்.இப்படி செய்தால் சீலிங் ஃபேன் வேகம் அதிகரிக்கும்.

3)மதிய நேரத்தில் மட்டும் சீலிங் ஃபேன் பயன்படுத்துங்கள்.காலை நேரத்தில் முடிந்தவரை ஃபேன் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.