Home Blog Page 210

பெற்றோர் கவனத்திற்கு.. உங்கள் குழந்தைகளுக்கு Sunscreen யூஸ் பண்ணலாமா? கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தப்படுகிறது.வெயிலால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.சருமப் புள்ளிகள்,கரும் புள்ளிகள்,அரிப்பு,எரிச்சல்,தோல் நிற மாற்றம் போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வெளியில் செல்லும் முன் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக பெண்கள் தங்கள் சரும அழகை பரமரிக்க சன்ஸ்க்ரீனை பயன்படுத்த விரும்புகின்றனர்.அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சன்ஸ்க்ரீன் SPF 30 மற்றும் SPF 50 ஆகும்.நீங்கள் UVA,UVB போன்ற கதிர்களில் இருந்து நமது சருமத்தை காக்கும் சன்ஸ்க்ரீன் வாங்க வேண்டும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் ஆயில் கலந்த சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.இந்த சன்ஸ்க்ரீனை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் பயன்படுத்தலாம்.வெயில் காலத்தில் குழந்தையின் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1)நீங்கள் முதன் முதலில் குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் குழந்தையின் சருமத்தில் சிறிதளவு அதை அப்ளை செய்து பரிசோதித்து பார்க்க வேண்டும்.

2)குழந்தைகள் சருமத்தை பாதுகாக்கும் சன்ஸ்க்ரீன் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.அதிகளவு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

3)சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் பொழுது குழந்தையின் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்திய பிறகு அதிக நேரம் வெயிலில் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4)குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சன்ஸ்க்ரீனில் SPF 30 இருக்கின்றதா என்பதை சோதிக்க வேண்டும்.அதேபோல் SPF 30க்கு மேல் இருக்கும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம்.

5)குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்த பிறகு எரிச்சல் ஏற்பட்டால் அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் ஒருமுறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

தெய்வ குத்தம் ஆகிவிட்டால் உங்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காது!! அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா??

0

நாம் வணங்கும் கடவுளை மீறி ஏதேனும் தீங்கு செய்தால் அதை தெய்வ குத்தம் என்று சொல்கின்றோம்.பிற உயிர்களை காயப்படுத்துவது,இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது,பிறருக்கு துன்பம் கொடுத்து அதில் மகிழ்ச்சி காண்பது போன்றவை தெய்வ குத்தமாகும்.

நாம் வழிபாடும் கடவுளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நம் வாழ்வில் அதிக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாம் தெய்வ குத்தத்திற்கு ஆளாகிவிட்டோம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறுகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

தெய்வ குத்த அறிகுறிகள்:

1)உங்களுக்கு தொடர் மன உளைச்சல்,மனக் கவலை இருந்தால் அது தெய்வ குத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.

2)வாழ்வில் எப்பொழுதும் சோகம்,கோபம் மட்டுமே இருந்தால் தெய்வ குத்தமாகிவிட்டது என்று அர்த்தம்.

3)தொடர்ந்து மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தால் தெய்வ குத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

4)அதேபோல் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனை,கடன் பிரச்சனையும் தெய்வ குத்தத்திற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.

5)செய்து கொண்டிருக்கும் தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டால் தெய்வ குத்தமாகிவிட்டது என்று அர்த்தம்.

6)செய்து கொண்டிருக்கும் வேலையை இழத்தல்,வேலை கிடைக்காமல் போதல்,வேலை கிடைக்க தாமதமாதல் போன்றவை தெய்வ குத்தம் ஏற்பட்டதற்கான காரணங்களாகும்.

7)அடிக்கடி குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தெய்வ குத்தம் உண்டாகிவிட்டதாக அர்த்தம்.

9)தினந்தோறும் கணவன் மனைவி இடையே சண்டை,பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே சண்டை வருதல் போன்றவை தெய்வ குத்தம் ஏற்பட்டுவிட்டதை காட்டுகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அதில் இருந்து மீள குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை நாளில் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் தெய்வ குத்தம் விலகும்.

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

0

நம் தமிழ் பாரம்பரியத்தில் பல பயனுள்ள விஷயங்கள் கால காலமாக பின்பற்றப்படுகிறது.இதில் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.காலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம்.

மார்கழி மாதம் மட்டுமின்றி வெள்ளிக்கிழமை,சுப தினங்களில் கோலமிடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பச்சரிசி மாவில் கோலமிடுவதால் இரும்பு,பூச்சிகளுக்கு அது உணவாக மாறுகிறது.இது ஒருவகையில் தானத்திற்கு இணையாகும்.

சிக்கல் இல்லாத கோலங்களை இடுதல் நல்லது.பூகோலமிடுதல் ஒருவித நேர்மறை எண்ணத்தை நமக்கு கொடுக்கும்.அதேபோல் கோலத்திற்கு நடுவில் பூசணி பூ அல்லது பிள்ளையார் வைத்தல் இன்னும் சிறப்பு.

வெள்ளிக்கிழமை நாளில் செம்மண் பயன்படுத்தி கோலமிட்டால் பல நேர்மறை ஆற்றல் உண்டாகும்.வெறும் தண்ணீர் தெளிப்பதற்கு பதில் சாணம் தெளித்தால் வீட்டில் கிருமிகள் அண்டாமல் இருக்கும்.வீட்டு வாசலில் கோலமிடுதல் மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் கோலமிடுதல் மனதிற்கு ஒருவித மகிழ்வை தருகின்றது.கோலமிட்ட பிறகு மண் விளக்கை கோலத்தின் நடுவில் வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருகும்.வாரத்தில் ஏழு தினங்களும் கோலமிட முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமை நாளில் தலைக்கு குளித்துவிட்டு வாசல் பெருக்கி சாணம் தெளித்து கோலமிட்டால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சூரிய உதயத்திற்கு முன்பு வாசலில் கோலமிட வேண்டும்.உப்பு பயன்படுத்தி கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.உப்பு லட்சுமி தேவி குடியிருக்கும் இடம் என்பதால் இதை கோலமிட பயன்படுத்தினால் கால் மிதிபட்டுவிடும்.இதனால் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.எனவே கோலமிட உப்பு பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு பச்சரிசி மாவு,செம்மண் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பிடி ஆருக்கு எதிராக செருப்பை சுழட்டியடித்த பாஜக சரண்யா!! துடிக்க துடிக்க கொன்ற மர்ம கும்பல்!!

BJP DMK: பட்டுக்கோட்டையில் நேற்று இரவு பாஜக பிரமுகர் சரண்யா கொலை செய்யப்பட்டது தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இவர் மதுரையின் மத்திய தொகுதியுடைய பொறுப்பாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு கடைக்கு சென்று திரும்பும் போது மர்ம கும்ப இவரை துரத்தி சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் இவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையானது முன்விரோத காரணமாக நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர். ஆனால் இவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பை கழட்டி வீசியுள்ளார். 2022 ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பணியில் இருந்த போது எதிர் தாக்குதலால் உயிரிழந்தார். இவரது உடல் மதுரைக்கு வந்த போது அஞ்சலி செலுத்துவதற்காக பி.டி.ஆர் வருகை புரிந்திருந்தார். அச்சமயத்தில் பலர் பி டி ஆர் காரை வழி மறித்ததோடு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்ட கலவரத்தில் குறிப்பிட்ட சில பெண்கள் தங்கள் காலணிகளை எடுத்து காருக்கு எதிராக வீசினர்.

அதில் ஒரு செருப்பு காருக்குள் விழுந்ததை அடுத்து, இந்த செருப்புக்கு சொந்தக்காரியான சிண்ட்ரெல்லா எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலகத்திற்கு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று நக்கலான பதிவையும் பி.டி.ஆர் ட்விட்டரில் போட்டிருந்தார். பின்பு அதை வைத்தே அந்த செருப்பு யாருடையது, மேற்கொண்டு அவரது காரில் இந்தியாவின் கொடி இருந்ததால் அதன் மீது தாக்கியுள்ளனர் எனக் கூறி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதி, ஒரு அமைச்சர் காரில் செல்லும் பொழுது அருவருக்கத்தக்க வகையில் பேசக்கூடாது.

மேற்கொண்டு காரில் கொடி இருக்கும் பட்சத்தில் செருப்பு கொண்டு வீசுவது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் எனக் கூறி இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இருக்கையில் தற்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் வீட்டையே தரை மட்டமாக இடிச்சிட்டான் ஆர்யா!. பகீர் தகவலை சொன்ன சந்தானம்!..

ஆர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் சந்தானம்.  ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார்.

இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால நான் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன பல விஷயங்களில் மாட்டிவிட்டு விடுவான். ஒருமுறை ஒரு இடம் வாங்கி சிறியதாக ஒரு வீடு கட்டினேன். என் அம்மா வாரம் ஒருமுறை அங்கு சென்று விளக்கு ஏற்றி வந்தார். எனவே, அந்த வீட்டுக்கு குடி போய் விடலாம் என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். ஆர்யாவை அழைத்துகொண்டு போய் அந்த வீட்டை காட்டினேன். அதைப்பார்த்த ஆர்யா ‘வீட்டை சரியா கட்டல மச்சான். எல்லாமே தப்பா இருக்கு. வீட்ட இடிச்சிட்டு புதுசா கட்டலாம்’ என்றேன். நான் ஷாக் ஆகிவிட்டேன்.

ஆனால்,நான் சொன்னதை கேட்காமல் யாருக்கு போன் பண்ணினான். 3 நாட்களில் விட்டை இடித்து தரை மட்டம் ஆக்கிவிட்டான். எப்படி சொல்வது என தெரியாமல் என் அம்மாவிடம் இதை நான் சொல்லவில்லை. ஒருநாள் அங்கு போன என் அம்மா வீடே இல்லாததை பார்த்து ஷாக் ஆகிவிட்டார். இரண்டு தெருக்களில் அந்த வீட்டை தேடியிருக்கிறார். அதன்பின் நான் நேரில் சென்று ‘ஆர்யாதான்மா வீட்டை இடிச்சிட்டு வேறமாறி கட்டலாம்னு சொன்னான்’ என சொல்ல ‘நீங்க ரெண்டு பேரும் சினிமாவுலதான் இப்படி செய்வீங்கன்னா நிஜத்திலும் இப்படியாடா?. வீட்டை ஏன்டா இடிச்ச?’ என என்னை திட்டிவிட்டார்’ என பேசியிருக்கிறார்.

சந்தானத்தை ரஜினியிடம் மாட்டிவிட்ட ஆர்யா!.. மனுசன் இப்படி புலம்புறாரே!..

நடிகர் ஆர்யா சினிமாவில் ஹீரோவா வளர்ந்தபோது ஒருபக்கம் சந்தானம் காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். அதாவது இருவருமே ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள். சூர்யா தனது இரண்டாவது படமான ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் சந்தானமும் நடித்திருந்தார்.

ஆர்யா பிரபலமான பின் நடித்த ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் அவருடன் சந்தானம் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார்.

இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால் ரஜினியிம் மாட்டிக்கொண்ட சம்பவம் பற்றி பேசியிருக்கிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடிக்கும்போதே நக்கலாக என்னை காமெடி சூப்பர்ஸ்டார் என மற்றவர்களிடம் அறிமுகம் செய்வான். அதை அவன் கடைசி வரை விடவில்லை. சேட்டை படத்தில் நடித்த படத்தின் டைட்டில் கார்டிலிலும் என்னை காமெடி சூப்பர்ஸ்டார் என போட்டுவிட்டான்.

லிங்கா படத்தில் நடித்தபோது ரஜினி சார் ‘நீங்க காமெடி சூப்பர்ஸ்டராமே’ எனக்கேட்டார். நானோ, இல்ல சார். அது ஆர்யா அப்படி போடுட்டான் என சொல்ல ‘நீஙக சொல்லாமதான் அவர் அப்படி போட்டாரா?’ எனக்கேட்டார். எதையோ சொல்லி அவரை சமாளித்தேன். இப்படித்தான் ஆர்யா என்ன பல இடங்களில் மாட்டியிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.

வீட்டில் ஏசி.. காரில் ஏசி.. ஆனா அரசியல்வாதி!.. விஜயை கலாய்க்கும் திருமா!…

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்வதற்காக விஜய் கோவை வந்தார். எனவே, அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என தவேக கட்சியினர் மற்றும் அவரின் ரசிகர்கள் திரண்டனர். அவரை பர்க்க விமான நிலையத்தில் கூட்டம் கூடியது. பலரும் பொருட்களை தள்ளி செல்லும் டிராலிகள் மற்றும் தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்று கொண்டனர். இதனால், அவற்றில் பல சேதமடைந்தது. அதோடு, விமான நிலையமே களேபரமானது. விஜய் வந்த பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோது விஜய் ரசிகர்கள் பைக்கில் அவரை பின் தொடர்ந்தனர்.

vijay

அது நடந்து 2 நாட்களில் கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போதும் அங்கே பெரும் கூட்டம் கூடியது. அதன்பின் அவர் கொடைக்கானல் சென்றபோதும் அங்கும் ரசிகர்கள் அதிகமாக கூடினார். எனவே, அவர்களைச் சந்தோஷப்படுத்த ரோட் ஷோட் நடத்தினார். விஜய்க்கு கூடும் கூட்டம் மற்ற அரசியல் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய திருமாவளவன் ‘ ஏசி அறையில் இருந்து கொண்டு செய்யும் அரசியல் அல்ல விடுதலை சிறுத்தைகளின் அரசியல். வீட்டில் ஏசி, காரில் ஏசி. வீட்டில் இருந்து ரெஸ்டாரண்ட் போனால் அங்கேயும் ஏசி. கொஞ்சம் நேரம் வெளியே வந்து கையை காண்பித்துவிட்டு மீண்டும் ஏசியில் போய் அமர்ந்துகொள்வது. அதுவல்ல விடுதலை சிறுத்தைகள் அரசியல்’ என பேசியிருக்கிறார். அவர் விஜயின் பெயரை சொல்லவில்லை என்றாலும் அவரைத்தான் குறிப்பிட்டு பேசினார் என புரிந்துகொள்ள முடிகிறது.

அதிமுக பாஜக கூட்டணியில் விசிக.. திருமா கொடுத்த பரபரப்பு பேட்டி!! பதற்றத்தில் திமுக!!

VSK BJP: சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பார்த்து வருகின்றனர். குறிப்பாக விஜய் அதிமுகவுடன் இணைந்தால் கட்டாயம் திமுக கூட்டணி உடையும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். அதைப் போலவே திருமா மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை அதிருப்தி நிலையையே தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் எதிர்பாராவிதமாக மீண்டும் பாஜகவுடன் அதிமுக இணைந்து விட்டது.

அதேபோல திமுக தலைமைக்கு கூட்டணி கட்சிகள் கொடுத்து வந்த அழுத்தமும் தொய்வு அடைந்து போனது. மீண்டும் திமுக கூட்டணி கட்சிகளை அடிப்பணிய வைக்க ஆரம்பித்துவிட்டது. இப்படி இருக்கையில் திருமா தொகுதி ரீதியாக இம்முறை பெரும் கட்சிகளை தாண்டி தங்களுக்கு கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என கேட்டு வருகிறார். இதனை பொதுவெளியில் தெரிவித்திருந்ததால் திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதனை வைத்து இவர் மாற்றுக் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக பலரும் பேசினர். ஆனால் திருமா இது ரீதியாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவில் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நான் ஒருபோதும் சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் இணைய மாட்டேன் எனக்கூறி கும்பிடு போட்டு திரும்பி விட்டேன்.

பதவி கொடுத்தாலும் சரி ஆசை வார்த்தைகள் பேசி மயக்கினாலும் சரி ஒருபோதும் விடுதலை சிறுத்தை கட்சி ஒத்துழைப்பு தராது என கூறியுள்ளார். தற்போது அரசியல் வட்டாரத்தில் பாஜகவின் மூத்த நிர்வாகி எனக் கூறினாரே அவர் யார்?? அல்லது எடப்பாடியாக இருக்குமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவு.. இந்தியாவின் தேச துரோகியாக மாறிய சீமான் மற்றும் திருமா!! 

BJP: காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஒட்டுமொத்த நாடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா அவர்களுக்கு செல்லும் சிந்து நதிநீரை தடுத்துள்ளது. இப்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்ததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளவர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திருமா உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சீமான் இது ரீதியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நம்மை தாக்கியவர்களின் முகாம்களை அடித்து அழிப்பதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை பாதிக்கும் வகையில் தண்ணீரின்றி துன்புறுத்துவதா? என கேட்டிருந்தார். இதனையெல்லாம் வைத்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவர்களெல்லாம் பச்ச திரேச துரோகிகள் என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பகல்ஹாமில் நடத்திய தாக்குதலால் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து நமக்கு ஆதரவாளித்துள்ளது. ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தவறு என்று சீமான் மற்றும் திருவாவளவன் கூறுவது மிகப்பெரிய தேச துரோகம். இவ்வாறு அவர்கள் கூறுவது இவர்களை தேச துரோகிகள் என நினைக்க வைக்கிறது என கூறியுள்ளார். திருமா மற்றும் சீமானை தேச துரோகிகள் என கூறியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்: வைகோ-விற்கு பலத்த காயம்.. தீவீர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

MDMK Vaiko: மதிமுக பொது செயலாளரான வைகோ விற்கு 80 வயதாகிறது. அவ்வபோது உடல்நல பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வருவது வழக்கம். தற்போது சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டும் வருகிறார். இவர் சமூகநீதிக்கு எதிரான பல போராட்டங்களுக்கு குரல் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் சென்னையில் உள்ள வைகோ, திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அவரது வீட்டில் கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வைகோவிற்கு அடிபட்டதை அடுத்து அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி விரைவில் அவர் குணமடைந்து வரவேண்டுமென்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இவருக்கு எம்மாதிரியான சிகிச்சை கொடுக்கப்படுகிறது? என்ன காயம்?? என்பது குறித்து தற்போது வரை அப்போலோ மருத்துவமனை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இது ரீதியாக ஒரு சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மருத்துவமனை சார்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு மருத்துவமனையில் அவர்கள் தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் பரப்பரப்பாக காணப்படுகிறது.