Home Blog Page 208

பாகிஸ்தானிலிருந்து சென்னையை குறிவைக்கும் ஏவுகணை!! எச்சரித்த பாகிஸ்தான்!!

0

India Pakistan: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது இடங்களை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தியா வின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா முழுவதும் இன்று போர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதனால் சென்னை ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாகிஸ்தான் குறி வைக்க அதிக வாய்ப்புள்ளதால் அங்கு இருப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்தியா பாகிஸ்தானின் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பகுதியில் ஏவுகணை கொண்டு தாக்கியதில், பதிலடியாக சென்னையை தாக்க அதிக வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.

ஏனென்றால் பாகிஸ்தானிடம் 1500 கிலோமீட்டர் இலக்கை தாக்கக்கூடிய சாஹீன் 2 மற்றும் அபபீல் போன்ற ஏவுகணைகள் உள்ளது. இதன் மூலம் சென்னையை எளிமையாக தாக்கலாம். ஆனால் இந்த ஏவுகணைகள் ஏவப்படும் நேரத்தில் அதனை தடுக்கும் விதமாக இந்தியாவிடம் பல தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனை திருப்பி வேறு திசைக்கு மாற்ற வழி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என்பதால் தமிழகத்தில் அணுமின் நிலையம், சென்னை துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Just Now: ஆப்ரேஷன் SINDOOR என்றால் என்ன?? எதற்கு இந்த பெயர் வந்தது தெரியுமா??

0

Operation Sindoor: 1999 கார்கில் போரின் போது இந்தியா அந்த தாக்குதலுக்கு வைத்த பெயர் விஜய், இரண்டாவதாக பங்களாதேஷ் பிரிக்கப்பட்ட போது ஆப்ரேஷன் சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது. 54 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய துணைக் கண்டத்தில் அதிகளவு கிடைக்க கூடிய குங்குமம் என்று அர்த்தம். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இது அதிகளவு விளையக்கூடிய பொருள்.

தற்போது அங்கு ஏற்பட்ட தாக்குதலால் அங்கிருக்கும் ஆண்களை தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினர். இதனால் அந்த பெண்களின் குங்குமம் பறிக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் மையமாக வைத்து தான் ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை பகுதிகள் குறிப்பாக 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 250 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பஹவல்பூர் என்ற பகுதியில் ஏவுகணை மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பது இடங்களிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் இருந்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் தற்போது வரை கிட்டத்தட்ட 100 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் விமான போக்குவரத்து சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தான் எல்லையிலும் வான்வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இந்திய எல்லைகளில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதால் எதிரி நாட்டினரிடமிருந்து வரும் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனையெல்லாம் முன்கூட்டியே அறிந்து தான் பாதுகாப்பு ஒத்திகை குறித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

0

சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிய ஒரு செய்தியில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய அரசு ₹50,000 ரொக்கம் மற்றும் அவசியமான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி பலரிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என பத்திரிகைத் தகவல் பூர்வமான பிஐபி (Press Information Bureau) அதிகாரப்பூர்வமாக மறுக்கிறது. இது போலியான அறிவுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டு, இதுபோன்ற பச்சை பொய்களை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் எப்போதும் அரசு இணையதளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மட்டும் நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

லிங்க்:

https://x.com/PIBFactCheck/status/1919774839218540992?t=kZ3frP9sxxNg5H-76ne9Pg&s=19

இந்த போலி செய்தி வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பல சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது இந்திய இணைய குற்றச் செயல்கள் சட்டப்படி கடும் குற்றமாகும். தவறான செய்திகள் சமூகத்தில் பயம், குழப்பம் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை பரப்பாமல் இருக்க ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக லாம் கணக்குலே இல்லை.. விஜய்யுடன் தனி டீம்!! எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு!!

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி இணைந்திருந்தாலும் எடப்பாடி வேறொரு திட்டம் மூலம் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை போட்டுள்ளார். அரசியலில் தற்போது நுழைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியாவது தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளாராம். அதிமுக பாஜக மீண்டும் இணைந்ததால் விஜய் சற்று அதிருப்த்தியில் உள்ளாராம். இவரும் அதிமுகவின் கூட்டணிக்கு தான் பெரும் வாரியாக எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஆனால் தொகுதி ஒதுக்கீடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அதிகளவு டிமாண்டுகளை விஜய் வைத்ததால் எடப்பாடி நிராகரித்துவிட்டார். மேற்கொண்டு திமுகவின் கூட்டணி கட்சிகளையும் வலுவிழக்க திட்டமிட்டார். ஆனால் திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதாக தெரியவில்லை. இதனால் யாருடனும் கூட்டு இல்லாமல் தனித்து இருக்கிறார். இந்த சூழ்நிலை தமக்கு லாவகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளார்.

நாம் திமுக- வை வீழ்த்துவதற்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம், ஆனால் கொள்கை அடிப்படையில் வேறு தான் எனக் கூறியுள்ளார். இதனால் அதனை சுட்டிக்காட்டி திமுகவை எதிர்க்கும் கட்சிகளை தனி அணியாக கூட்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் விஜய் சீமான் உள்ளிட்டவர்களை இந்த அணியில் சேர்த்து தேர்தலில் நின்றால் கட்டாயம் நமக்கு தான் வெற்றி. இதனால் இனிவரும் நாட்களில் விஜய் குறித்து எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க கூடாதென நிர்வாகிகளுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குண்டு விழ அதிக வாய்ப்பு.. இந்த பகுதி தான் டார்கெட்!! சீனியர் கொடுத்த தகவல்!!

0

India Pakistan: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதரால் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தான் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியது. ஆனால் இதனை உலக நாடுகள் முதல் யாரும் நம்பவில்லை. இதனையடுத்து இந்தியாவும் அவர்களுக்கு செல்லும் சிந்துநதி நீரை தடுத்து நிறுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என இரண்டு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.

இப்படி போர் மோதல் முற்றுவதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ள நிலையில், நேற்று நாடு முழுவதும் போர்கால ஒத்திகை நிகழ்ந்தது. இதில் குறிப்பாக போர் நடக்கும் சமயத்தில் பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ராணுவ வீரர்கள் எந்த முறையை கையாள வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பாதுகாக்கப் பட வேண்டிய இடங்களை அவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இப்படி இருக்கையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்ணன் கணேசன் இது குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், இந்தியாவில் போர் என்று பேச்சு அடிபட்டாலே அது எல்லையில் தான் நடக்கும் என வழக்கமாக கூறுவதுண்டு. அப்படி கிடையாது, தற்பொழுது வளர்ந்துள்ள டெக்னாலஜியில் எங்கு வேண்டாமானாலும் குண்டு வெடிக்கலாம். ஏன் நாளைக்கு கூட தமிழகத்தில் குண்டு விழலாம், இந்த சமயத்தில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

அதற்காகத்தான் இந்த நாடு தழுவிய போர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. இது ரீதியாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனையில் போதுமான வசதி உள்ளதா? ஒரு கட்டிடம் விழுவதற்கு முன் மக்கள் தங்களை அங்கிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?? என்பதெல்லாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்.

நமது தமிழகத்தை பொறுத்தவரை அணுமின் நிலையம் மிகவும் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. எதிரிகள் அதனை குறி வைத்து தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே அங்குள்ள மக்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காயமடையாத மக்கள் காயமடைந்தவர்களை காப்பாற்ற முன் வரவேண்டும். அந்தவகையில் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தெரிந்திருப்பது அவசியம்.

தற்போது மோடி எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பாகிஸ்தான் நமக்கு எதிராக தாக்குதல் நடத்தியது தவறான ஒன்று அதற்காக பெரிய அளவில் போர் நடத்த தேவையில்லை. இந்த தாக்குதலால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறியுள்ளார்.

மாணவர்களே ரெடியா.. நாளை வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு!! எந்த இணையத்தில் பார்க்கலாம்??

0

10 12 Result: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தான் பேச்சாக இருந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இது ரீதியாக அருவி போன்ற வெளியிட்டுள்ளது. வரும் எட்டாம் தேதி அதாவது நாளை 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொது தேர்வு மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ள நிலையில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்பது நாளை அறிந்து கொள்ள முடியும். மேற்கொண்டு இவர்களின் உயர் கல்வியில் எதில் இணையலாம் எந்த பாடத்துறையை தேர்வு செய்யலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான http//tnresults.nic.in தெரிந்துக் கொள்ளலாம்.

திமுக வை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டு வைக்கவில்லை.. விஜய் புரிஞ்சிக்கோ!! அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

BJP: பாஜக அண்ணாமலை சிவகிரியில் நடைபெற்ற இரட்டை கொலை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், முக்கிய தெருக்களில் சிசிடிவி கேமரா என்பதே இல்லை. குறிப்பாக கொங்கு பகுதியில் தொடர்ந்து கொலை குற்றங்கள் நடந்து வருகிறது. தற்போது வரை நடைபெற்ற நான்கு கொலை வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

எவ்வளவு காலம் மக்கள் அச்சத்துடன் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். மேற்கொண்டு நாங்கள் எப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டோமோ அன்றையிலிருந்து ஸ்டாலின் பேச்சு இதுவாகத்தான் உள்ளது. எங்களது கூட்டணி குறித்து இப்படி பயப்படுவது ஏன்?? திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி கிடையாது மாறாக நல்லாட்சி அமைக்க தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் பாஜக தான் மிகவும் பலவீனமான கட்சி என முதல்வர் கூறுகிறார். தற்சமயம் ஓபன் பீல்டாக தான் அரசியல் உள்ளது. யார் வேண்டுமானாலும் களம் காணலாம். அதேபோல மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் பட்சத்தில் இந்தியாவில் ஜாதி என்ற அரசியல் இருக்காது என கூறினார். அதுமட்டுமின்றி விஜய் என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பது குறித்து மக்களிடம் விளக்க வேண்டும்.

இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது நல்லது என்று அறிவுரை கூறியுள்ளார். மேலும் பாஜக மட்டுமின்றி மாற்று கட்சியும் ஆட்சிக்கு வர ஏதுவான சூழல்தான் தற்போது இருப்பதாக தெரிவித்தார்.

பெரும் சிக்கலில் மாட்டிப்பீங்க திருந்திக்கோங்க.. பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா!!

India Pakistan: காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எல்லையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப கட்ட தாக்குதலில் பாகிஸ்தான் இதில் எனக்கு சம்பந்தமில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் அதனை யாரும் நம்பவில்லை. இது ரீதியாக ஐநா-வில் விவாதம் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் தற்போது நடத்திய தாக்குதலுக்கு சம்பந்தமில்லை என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

அதேபோல நடைபெற்ற தாக்குதலில் ஷல்கர்- ஏ- தொய்யா என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கு சம்பந்தமில்லை எனக் கூறும் பாகிஸ்தான் தான் கட்டாயம் அணு ஆயுதத்தால் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தது. அதற்கு இந்த கூட்டத்தில் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐநாவின் பொதுச் செயலாளர் பேசுகையில், இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மிகவும் கொடுமை.

இது முழுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த தாக்குதலில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் போரால் தற்பொழுது உள்ள நாடுகள் அச்சுறுத்தலில் உள்ளனர். குறிப்பாக இரு நாட்டின் பங்கு ஐநாவிற்கு மிகவும் முக்கியம். இவர்களின் இந்த உறவு முடிவடைந்த நிலையானது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக கருதப்படுகிறது. உலக நாடுகள் அச்சுறுத்தலை தவிர்க்க இவர்கள் இருவரும் சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பாகிஸ்தான் வைக்கும் கருத்தை ஐநா நம்பவில்லை. வரும் நாட்களிலாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தை விடுத்து அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் பெரும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.

BANK OF BARODA வங்கியில் பியூன் வேலை!! மாதம் 37,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

நமது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியில் காலியாக உள்ள பியூன் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: BANK OF BARODA

பணி: பியூன்

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 23-05-2025

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.37,800/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 26 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.bankofbaroda.in/career/ என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 23 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு!! இந்த லிங்க் க்ளிக் செய்து இப்போவே அப்ளை பண்ணுங்க!!

வங்கி சார்ந்த வேலைகள் தேடி கொண்டிருக்கும் நபர்களுக்கு யூனியன் வங்கி ஒரு அற்புத வாய்ப்பு வழங்கி இருக்கின்றது.அதாவது யூனியன் வங்கியில் காலியாக இருக்கின்ற உதவி மேனேஜர்(Credit) பணிக்கு 250 மற்றும் உதவி மேனேஜர்(IT) பணிக்கு 250 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: யூனியன் வங்கி(UNION BANK)

பணி:

உதவி மேனேஜர்(Credit): 250

உதவி மேனேஜர்(IT): 250

காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: மே 20 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

உதவி மேனேஜர் (Credit) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் CA/CMA(ICWA)/CS உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி மேனேஜர் (IT) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் B.E./BTech/MCA/MSc (IT)/MS/MTech உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 22 முதல் 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து https://www.unionbankofindia.co.in/ என்ற ஆன்லைன் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 23 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி