Home Blog Page 215

4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் தெற்கு ரயில்வே அதிகரித்து வரக்கூடிய பயணிகளுக்காக 4 முக்கிய விரைவு ரயில் முன்பதிவு இல்லா பெட்டிகளை எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ள 4 விரைவு ரயில்கள் :-

 

✓ எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில். இந்த ரயிலானது இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாவிட்டால் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

✓ சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலிலும் இரண்டு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

✓ நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காட்சிகுடா விரைவு ரயில். இதனுடைய இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லா பெட்டி ஜூலை 5 ஆம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் இணைக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

தெற்கு ரயில்வே எடுத்திருக்கக்கூடிய இந்த முக்கிய முடிவானது ரயிலில் பயணிக்க கூடிய பயனர்களுக்கு அதிக அளவில் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு இந்த நான்கு வழித்தடங்களிலும் இயக்கப்படக்கூடிய விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டியின் மூலம் அதிக அளவில் பயணிகள் பயணிப்பதற்கான வசதி கூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

சமீப காலமாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது பாகத்தில் நடித்து வரக்கூடிய நயன்தாரா குறித்து இயக்குனர் நடன கலைஞர் மற்றும் நடிகரான பிரபுதேவா பேசியிருக்க கூடிய வீடியோவானது வைரலாகி வருகிறது.

 

நயன்தாராவின் வாழ்வில் சிம்பு முதல் காதல் என்றும் பிரபுதேவா இரண்டாவது காதல் என்றும் அனைவருக்கும் தெரியும். முதல் காதலை விட இரண்டாவது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என இருவரும் மிகுந்த நம்பிக்கையோடும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் திடீரென இவர்களுக்கிடையே இருந்த காதலானது துண்டிக்கப்பட்டது யாரும் எதிர்பாராத ஒன்று. காரணம் இவர்கள் இருவருக்கிடையே ஆனா காதலுக்காக பிரபுதேவா அவருடைய முதல் மனைவி குழந்தைகளை விடுத்து நயன்தாரா அவருடைய மதமாற்றம் போன்றவற்றை ஈடுபட்டதோடு சினிமா துறையும் விட்டு வெளியேறினார். ஆனால் ஏன் இருவரும் பிரிந்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

 

அதன்பின் சினிமாவிற்கு சிறிது காலம் ஓய்வலித்த நயன்தாரா அவர்கள் மீண்டும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய இடம் தான் நானும் ரவுடிதான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் இயக்குனரான விக்னேஷ் சிவனை தன்னுடைய இரண்டாவது சினிமா இன்னிங்ஸில் நயன்தாரா காதலிக்க துவங்கினார். இருவரும் சில வருடங்கள் லிவிட் கேதரிலிருந்து பின்பு திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபுதேவா அவர்கள் நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது :-

 

எப்பொழுதுமே ஒரு ஹீரோயின் ஒரு படத்தை நடித்து முடித்து விட்டார் என்றால் அந்த படத்தை பற்றி முழுவதுமாக மறந்து விடுவது வழக்கமான ஒன்று ஆனால் நயன்தாராவோ அப்படி இல்லை படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆன பிறகும் அது தன்னுடைய படம் என நினைத்து ஒரு ஹீரோ இயக்குனர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களோ அதே போல் நயன்தாராவும் கொடுத்தார் என்று அவர் அனைத்திலும் சின்சியராக இருப்பார் என்றும் பிரபுதேவா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

தடம் மாறிய காதல்!! இப்போ சுப்மன் கில் இல்ல.. இவர்தான்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் உடைய கேப்டனாக இருக்கக்கூடிய கில் அவர்கள் சச்சின் டெண்டுல்கரின் உடைய மகளான சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், சமீபத்தில் இவர் திரைத்துறையில் ஒருவரை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

பல வருடங்களாக சுப்மன் கில் மற்றும் சாரா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட பொழுதிலும் இதனை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் பரவிய நிலையில் 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரின் இடையே கில் – லிடம் நீங்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அப்படி எதுவும் இப்பொழுது இல்லை என அவர் அளித்திருக்கக்கூடிய பதில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்திகள் வெளியாக காரணமாக இருந்தது.

 

இது ஒரு புறம் இருக்க சாரா டெண்டுல்கர் பாலிவுட் நடிகர் சித்தார்த் சாத்தூர் வேட்டியுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன. சதுரகிரி இதற்கு முன் அமிதாப்பச்சனையினுடைய பேத்தியான நவ்யா நவேலினி நந்தாவுடன் டேட்டிங் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் பிரிந்த நிலையில் தற்பொழுது சாரா டென்டுல்கருடன் இணைந்து தற்பொழுது இவர் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஃபிலிம் சார் இதழில் சாரா டெண்டுல்கர் மற்றும் சித்தாந்தத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் அவர்களுக்கிடையே இருக்கக்கூடியது ஒரு அழகான உறவு என குறிப்பிட்டு இருப்பது இந்த செய்தியை உண்மையாக்குவது போல் அமைந்துள்ளது.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!

இருசக்கர வாகனத்தை ஓட்ட கூடியவர்கள் அழியக்கூடிய ஹெல்மெட்டில் பல ஹெல்மெட்டுகள் தரம் இல்லாதவை என்றும் அதனால் இனி முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்தால் மட்டுமே சாலை விதிகளின் படி அவர்களை காவல் துறையினர் எந்தவித அபராதமும் இன்றி விடுவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு போலி ஹெல்மெட்டுகள் தயாரிப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இதனை பொதுமக்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை விதித்திருக்கிறது உத்திரப்பிரதேச மாநில அரசு. மேலும் BIS சான்று வழக்கப்பட்டு தலைக்கவசங்கள் மட்டும்தான் அணிய வேண்டும் என்றும் தரம் இல்லாத தலை கவசங்களால் ஒரு ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் உயிரிழப்புக்காக தெரிவித்திருக்கின்றனர்.

 

இது குறித்து 2WHMA தலைவர் ராஜூவ் கபூர் தெரிவித்திருப்பதாவது :-

 

போலியான ஹெல்மெட்டுகள் அமைதியான கொலையாளிகள் என்றும் உத்தரபிரதேச அரசு எடுத்து இருக்கக்கூடிய துணிச்சலான நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் BIS சான்றுடன் இருக்கக்கூடிய தலைக்கவசங்கள்தான் இந்தியாவில் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு தேசிய சாலை பாதுகாப்பு இயக்கத்தில் தொடக்கமாக இந்த சட்டம் அமையக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டதாரிகளின் கவனத்திற்கு!! வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!!

இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய முக்கிய ஆராய்ச்சி மையமான சர் சி வி ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கக்கூடிய பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

 

பணி விவரங்கள் :-

 

பணிப் பெயர் – ட்ரெய்னி இன்ஜினியர்

 

காலிப் பணியிடங்கள் – 13

 

சம்பள விவரம் – ரூ.31,000

 

கல்வித் தகுதி – பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஷ் & கம்யூனிகேஷன் போன்ற பாடப்பிரிவில் 70 சதவிகிதம் மதிப்பெண்.

 

வயதுவரம்பு – 23 வயது குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் எஸ்சி எஸ்டி போன்றவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

தேர்வு முறை – எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை :-

 

பெங்களூரில் இருக்கக்கூடிய சர் சி வி ராமன் பாலியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்க்க நினைப்பவர்கள் தங்களுடைய முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவினை https://rhino.tri.res.in/forms/trainee-eng-2025.php என்று அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 9.2025.

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை!. 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசும் காற்று!…

தமிழகத்தை பொறுத்த வரை கோடை காலத்தில் மழை என்பது குறைவாகவே இருக்கும். அதிலும், சென்னையில் வெயில் மக்களை வாட்டி அடிக்கும். இன்றுதான் அக்னி நட்சத்திரம் துவங்கியது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறரது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வட பழனி, வளசரவாக்கம், போரூட், கோயம்பேடு, மதுரவாயல், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வாருகிறது.

அதேபோல், எழும்பூர், காசி மேடு, செண்ட்ரல், பாரிமுனை, தண்டையார் பேட்டை, ராயபுரம் ,திருவொற்றியூர், பெரம்பூர் போன்ற வட சென்னை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஒருபக்கம், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிலும், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அந்த பகுதியில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…

கோவையில் சமூகசேவை செய்த வந்த வைஷ்ணவி என்கிற இளம்பெண் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும் பகீர் புகாரை அவர் கூறியிருக்கிறார்.

tvk vaishanavi

மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா?. உனக்கெல்லாம் எதுக்கு அரசியல். ஒழுங்கா வீட்டுக்குள்ளயே இரு. அரசியலை உனக்கு என்ன தெரியும் என வசவு வார்த்தைகள் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். மாநாடு, பூத் கமிட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, தலைமையை சந்திக்க கூட புஸ்ஸு ஆனந்த் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜி புகார் கூறியிருந்த நிலையில் தற்போது வைஷ்ணவியும் கட்சியிலிருந்து விலகியிருப்பது தவெகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘சகோதரி வைஷ்ணவி உண்மையிலேயே மக்களுக்கு பணியாற்ற விரும்பினால் பாஜகவுக்கு தாராளமாக வரலாம். இங்கு எல்லா வாய்ப்பும் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் பிரதமர் மோடி சொல்கிறார்’ என கூறியிருக்கிறார்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்த 3 நடிகர்கள்!. போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்!..

கோலிவுட்டில் சில நடிகர்கள் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் எல்லா படங்களும் வெற்றிப்படங்களாக அமையாது. ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி இந்த வரிசையில் வருகிறார்கள். இவர்கள் நடித்து தோற்றுப்போன படங்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஆகியிருக்கிறது. ஆனால், அதைபற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

குறைந்த காலத்தில் அசுரவேகத்தில் பலகோடி சம்பாதித்து விடவேண்டும் என்பதால் கதையை பற்றி கவலைப்படாமல்.. உடனே கால்ஷீட் தந்து கொசகொசவென்று நடித்து தள்ளியவர்கள் சசிகுமார், விஜய சேதுபதி மற்றும் ஜி.வி.பிரகாஷ்‌. கடனை அடைக்க….‌ஓடாது என தெரிந்தும் மொக்கை படத்தில் நடித்தேன் என சசிகுமார் பேட்டி தந்துள்ளார்

Divya Bharti posted that GV Prakash and Chaindavi did not agree to the divorce

அதேபோலத்தான் விஜய‌சேதுபதியும்.‌காட்டு மொக்கை படங்களில் ஹீரோவாக நடித்து தொடர் தோல்விகளை தந்தார். இது ஜி.வி. பிரகாஷ்க்கும் பொருந்தும். குறுகிய காலத்தில் பெருமறவு சம்பாதிக்க பல குப்பை படங்களில் நடித்து மக்களின் பணத்தை மொட்டை அடித்துள்ளார்கள் இந்த வெள்ளிக்கிழமை ராமசாமிகள்.

இவர்களால் பலகோடிகள் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள் நிலைமை கொடுமை. இனியும் இவர்களிடம் ஏமாறாமல் மக்களும், தயாரிப்பாளர்களும் உஷாரான பிறகுதான்.. சமீபகாலமாக வேறுவழியின்றி நிதானமாக நடித்து வருகிறார்கள்.

மகாராஜா பெரிய ஹிட் என்பது அனைவரும் அறிந்தது. அயோத்தி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால் வசூலில் பெரிதாய் தேறவில்லை. தற்போது டூரிஸ்ட் ஃபேமிலிக்கு நல்ல‌ ஓப்பனிங்‌ முழு ரிசல்ட் சில தினங்களில் தெரியும்’ என பதிவிட்டிருக்கிறார்.

அந்த நடிகையுடன் இருட்டுக்குள்ள போய்விடுவாரு அஜித்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே!…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டவர். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து மாஸ் நடிகராக நடித்து வருகிறார்.

விடாமுயற்சி படத்தில் மாஸ் எதுவும் காட்டாமல் நடித்திருந்தார். இதனால் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இந்த படம் 250 கோடி வரை வசூல் செய்து ஹிட் படமாக அமைந்துவிட்டது.

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ் என கலக்கி வரும் நிலையில் அவரின் மகன் ஆத்விக்கும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அஜித் 3 தனது வாழ்வில் 3 காதல்களை கடந்து வந்திருக்கிறார். முதலில் அஜித் காதலித்தது நடிகை ஸ்வாதியை. வான்மதி படத்தில் நடிக்கும்போது அவரை காதலித்தார். ஆனால், அது கை கூடி வரவில்லை. அதன்பின் காதல் கோட்டை படத்தில் நடித்தபோது ஹீராவை காதலித்தார். அதுவும் திருமணத்தில் முடியவில்லை.. அதன்பின்னரே அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ajith

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு பிஸ்மி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அஜித்தின் மூன்று காதல்களையும் பத்திரிக்கையில் முதலில் சொன்னது நான்தான். அஜித் காதல் கோட்டை படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் வேலை செய்துவந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அஜித் – ஹீரா காதல் பற்றி பல விஷயங்களை என்னிடம் பேசினார். எல்லாவற்றையும் ரெடி பண்ணி அஜித் – ஹீராவை தேடினால் அவர்கள் இருக்க மாட்டார்கள். இருட்டான பகுதிக்கு ஹீராவை தள்ளிகொண்டு போய் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அவர்களை வைத்து ஷூட்டிங் நடத்துவதே படாதபாடாக இருக்கிறது’ என சொன்னார்’ என கூறியிருக்கிறார்.

நான் காசு கேட்டேனா?!. தயாரிப்பாளர் யாருன்னே தெரியாது!. யோகிபாபு சொன்ன விளக்கம்.

கோலிவுட்டில் இப்போது அதிக படங்களில் காமெடி நடிகராக நடிப்பவர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. லொள்ளு சபாவின் சில நிகழ்ச்சிகளில் கும்பலில் நிற்கும் வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகர் என யாருமில்லை. ஏனெனில், வடிவேலு ஏறக்குறைய ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். சந்தானமும், சூரியும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பார்கள் எனத்தெரிகிறது. எனவேதான், கிடைத்த இடைவெளியை யோகிபாபு பிடித்துக்கொண்டார். அவரின் காமெடி ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைப்பது இல்லை என்றாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது.

kajana

இந்நிலையில், கஜானா என்கிற படத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகிபாபு கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 லட்சம் பணம் கேட்டதால் அவர் வரவில்லை ராஜா என்கிற தயாரிப்பாளர் அந்த விழாவில் பேசியிருந்தார். ‘காசு கொடுத்தாதான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நீ வருவியா?. நடிகனா இருக்கவே உனக்கு தகுதி இல்லையே’ என கோபத்துடன் பேசியிருந்தார்.

இதுபற்றி யோகிபாபு தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் ‘அப்படி பேசியவர் யாரென்றே எங்களுக்கு தெரியாது. யோகிபாபு அப்படி எதுவும் சொல்லவில்லை’ என சொல்லியிருந்தனர். அதேபோல், அப்படி பேசியவருக்கும் கஜானா படக்குழுவிற்கும் சம்பந்தம் இல்லை என அப்படத்தின் இயக்குனரும் கூறியிருக்கிறார்.