Home Blog Page 216

ரொம்ப டார்ச்சர் கொடுக்குறாங்க!.. தவெக கட்சியை விட்டு விலகினார் வைஷ்ணவி!..

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் வைஷ்ணவி. இவர் கோவையை சேர்ந்தவர். மக்கள் நலப்பணித்திட்டத்தில் ஆர்வமுள்ள வைஷ்ணவி ஏற்கனவே தனது சொந்த பணத்தில் மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார். விஜய் கட்சி துவங்கிய பின்னர் அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும் பகீர் புகாரை அவர் கூறியிருக்கிறார்.

vasishnavi

மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா?. உனக்கெல்லாம் எதுக்கு அரசியல். ஒழுங்கா வீட்டுக்குள்ளயே இரு. அரசியலை உனக்கு என்ன தெரியும் என வசவு வார்த்தைகள் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். மாநாடு, பூத் கமிட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

notice

ஏற்கனவே, தலைமையை சந்திக்க கூட புஸ்ஸு ஆனந்த் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜி புகார் கூறியிருந்த நிலையில் தற்போது வைஷ்ணவியும் கட்சியிலிருந்து விலகியிருப்பது தவெகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

notice

இராணுவ எச்சரிக்கை மீறி செயல்பட்ட பத்திரிக்கையாளர் மீது நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!!

0

சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு ஊடகங்களுக்கு கடுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் வரை இராணுவ நடமாட்டத்தைப் புகாரளிப்பதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடிய எந்தவொரு தற்செயலான கசிவுகளையும் தடுப்பதே இந்த ஆலோசனையின் நோக்கமாகும்.

எச்சரிக்கையை மீறி, மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் இருந்து காட்சிகளைப் படம்பிடித்தார் – இது கடுமையான இராணுவ பிரசன்னத்தின் கீழ் ஒரு உணர்திறன் மண்டலம். அவரது நடவடிக்கைகள் ஆன்லைனில் சீற்றத்தைத் தூண்டியுள்ளன, பல நெட்டிசன்கள் பத்திரிகை என்ற பெயரில் அவர் தேசிய நலனை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

பல சமூக ஊடக பயனர்கள் அவரை “துரோகி” என்று முத்திரை குத்தினர், முந்தைய மோதல்களின் பழைய குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுப்பினர். கார்கில் போர் மற்றும் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் போது அவர் செயல்பாட்டு விவரங்களை சமரசம் செய்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர் – குற்றச்சாட்டுகளை தத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

https://x.com/PoornimaNimo/status/1918126586953646296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1918126586953646296%7Ctwgr%5Efcdbe6a37b1ccbf69c2248d855c80dfad056449e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newsx.com%2Findia%2Fcontroversy-erupts-over-barkha-dutts-presence-in-kashmir-amid-security-restrictions%2F

“காஷ்மீரில் இந்தியப் படைகளைப் படம்பிடித்ததற்காக பர்கா தத்தை குறை சொல்லாதீர்கள்” என்று ஒரு பயனர் எழுதினார். “அவள் தனக்குப் பிடித்ததைச் செய்கிறாள் – ஒரு துரோகி. உண்மையான பிரச்சினை அதை அனுமதிப்பவர்களிடம்தான் உள்ளது.”

சிலர், அவரது இருப்பை, தகவல் கசிவுகள் என்று கூறப்படும் பெரிய வடிவத்துடன் தொடர்புபடுத்தும் அளவுக்குச் சென்றனர். மற்றவர்கள், நிலையற்ற சூழ்நிலைகளில் இராணுவத் தொடரணிகள் அல்லது பாதுகாப்பு மண்டலங்களுக்கு அருகில் ஊடகவியலாளர்கள் ஏன் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் ஆலோசனை, சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், அனைத்து செய்தி சேனல்கள் மற்றும் கள நிருபர்களால், குறிப்பாக போர்க்கால சூழ்நிலைகள் அல்லது அதிகரிக்கும் எல்லை தாண்டிய பதட்டங்களின் போது, ​​ஒரு நிலையான நெறிமுறையாகப் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் இருந்து சமீபத்தில் அவர் செய்தி வெளியிட்டது தொடர்பான ஆன்லைன் குற்றச்சாட்டுகள் அல்லது எதிர்வினைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பர்கா தத் அல்லது அவரது ஊடகக் குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

மோதல் மண்டலங்களில் பத்திரிகையாளர்களின் பங்கு குறித்த விவாதத்தை இந்த அத்தியாயம் மீண்டும் தூண்டியுள்ளது – பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை தேசிய பாதுகாப்பின் கட்டாயத்துடன் சமநிலைப்படுத்துதல்.

இதை மீறினால் அவ்வளவுதான்.. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

0

TN: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்த முறை சட்டப்பேரவையில் கூடுதல் திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் மேலும் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவங்கர் வெளியிட்டுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் பலர் தொடர்ந்து போக்குவரத்து துறை மீது புகார் அளித்து வருகின்றனர்.

அவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்தால், பேருந்தை யாரும் நிறுத்துவதில்லை என பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாக உள்ளதாம். இதனையெல்லாம் திருத்தி தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் முதலாவதாக, எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் பேருந்து நிறுத்தத்தில் இருந்தால் கட்டாயம் பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல நடத்துனரும், பேருந்தில் இடமில்லை என என அவர்களிடம் கூறக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் அவர்களை அமர்த்த விட வேண்டும். மேற்கொண்டு அவர்களிடம் நடத்துனர்கள் கடிந்து கொள்ளாமல், தன்மையுடன் பேசி பயண சீட்டு வழங்க வேண்டும்.அதேபோல அவர்கள் இறங்கும்போதும் காத்திருந்து பொறுமையாக உதவி செய்ய வேண்டும். யாரேனும் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை வேறு ஒரு இடத்தில் அமர செய்துவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு விடுத்த உரிய இடத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

அதேபோல பேருந்து எடுக்கும் வரை மாற்றுத்திறனாளி இடத்தில் யாரையும் அமர விடக்கூடாது. யாரும் வரவில்லை என்று சாதாரண பயணி அமர்ந்தபின் மாற்றுத்திறனாளிகள் இறுதியில் வந்தால் கூட அவர்கள் இடத்தை மாற்றி இவர்களை அமர வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் மிகுந்த கவனமுடன் பேருந்தை இயக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு உரிய உரிமை தேசிய அடையாள அட்டையை வைத்திருந்தால், அவர்களுடன் பயணம் செய்வோர் முதற்கொண்டு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கலாம். இருவருக்கும் கட்டணமில்லா பயணச்சீட்டும் நடத்துனர் வழங்க வேண்டும்.

அதேபோல அவசர காலங்களில் பெண்களின் பாதுகாப்பினங்க மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்த்து கட்டணம் இல்லா பேருந்து நிறுத்தத்தில் கோரிக்கையின் அடிப்படையில் பேருந்து நிறுத்தலாம். இறுதியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயிற்சியின் போது சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி வரவழைத்து அவர்களின் பேருந்து பயண கருத்தை தெரிவிக்கும்படி செய்யலாம். வரும் நாட்களில் பயணிக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதனை சரி செய்து பயணம் செய்யும்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ளார்.

காசு கொடுத்தாதான் வருவியா?!. நீயெல்லாம் ஒரு நடிகனா?!.. யோகிபாபுவை திட்டும் தயாரிப்பாளர்!…

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் அடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு ஹவில்தார். அதனால் யோகிபாபு குழந்தையாக இருக்கும்பொழுதே நிறைய பயணிக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக இவர் 1990களில் தொடர்ந்து ஜம்முவில் படித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா படப்பிடிப்பிற்கு நண்பருடன் சென்றிருந்தபோது யோகிபாபு வை முதல் முதலில் இயக்குனர் ராம் பாலம் கண்டறிந்தார். யோகி பாபுவின் தனித்துவம், தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இயக்குனர் ராம் பாலாவை ஈர்த்தது. லொள்ளு சபாவின் சில நிகழ்ச்சிகளில் கும்பலில் நிற்கும் வேடத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகர் என யாருமில்லை. ஏனெனில், வடிவேலு ஏறக்குறைய ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். சந்தானமும், சூரியும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பார்கள் எனத்தெரிகிறது. எனவேதான், கிடைத்த இடைவெளியை யோகிபாபு பிடித்துக்கொண்டார். அவரின் காமெடி ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைப்பது இல்லை என்றாலும் அவரை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது.

இந்நிலையில், கஜானா என்கிற படத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகிபாபு கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 லட்சம் பணம் கேட்டதால் அவர் வரவில்லை என்கிறார்கள். இதையடுத்து கோபத்துடன் பேசிய கஜானா படத்தின் தயாரிப்பாளர் ராஜா ‘காசு கொடுத்தாதான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நீ வருவியா?. நடிகனா இருக்கவே உனக்கு தகுதி இல்லையே’ என கோபத்துடன் பேசியிருக்கிறார்.

ஆயிரம் கோடி பட்ஜெட்!. தொடர்ந்து 10 படங்கள்!. லைக்கா போடும் பக்கா ஸ்கெட்ச்!..

இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை.

எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் இந்த நிறுவனத்துக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், பெரிய ஹீரோக்களை வைத்து லைக்கா நிறுவனம் எடுத்த எல்லா படங்களுமே அந்த நிறுவனத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.

ரஜினியை வைத்து எடுத்த தர்பார் மற்றும் வேட்டையன், கமலை வைத்து எடுத்த இந்தியன் 2, அஜித்தை வைத்து எடுத்த விடாமுயற்சி போன்ற எல்லா படங்களுமே நஷ்டத்தை கொடுத்தது. இதனால், லைக்கா நிறுவனம் மீண்டும் எழுமா என்கிற சந்தேகமே பலருக்கும் வந்தது. குறிப்பாக இந்தியன் 2 ம் மற்றும் விடாமுயற்சி படங்கள் லைக்காவுக்கு பல கோடி நஷ்டங்களை கொடுத்தது. அதேபோல், ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான லால் சலாம் படமும் தோல்வியடைந்தது.

எனவே, லைக்காவின் கதை முடிந்தது என திரையுலகிலேயே பலரும் பேச துவங்கினார். இப்போது இந்தியன் 2 மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ஒரு படம் என மொத்தம் 2 படங்கள் லைக்காவின் கையில் இருக்கிறது. இந்த படங்கள் இல்லாமல் இன்னும் 10 படங்களை தொடர்ந்து தயாரிக்க லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அதுவும் பெரிய நடிகர்களை வைத்து இந்த படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறார் சுபாஷ்கரன். இருவரும் இணைந்து இந்த படங்களை தயாரிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

2வது நாளிலேயே வசூல் குறைஞ்சிடுச்சே!.. மெட்ரோ கலெக்‌ஷன் ரிப்போர்ட் இதோ…

கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 1ம் தேதி வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால், கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, கோடை விடுமுறை காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 46 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதேநேரம், படம் வெளியாகி 2ம் நாளான நேற்று இப்படம் தமிழகத்தில் 7.50 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் தமிழகத்தில் 17.50 கோடி வசூலான நிலையில் அதில் பாதியை கூட நேற்று இப்படம் தமிழ்நாட்டில் வசூலிக்கவில்லை. அதேநேரம், சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் வருவதால் வசூல் அதிகரிக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்!. இவருக்கும் அந்த ஆசை இருக்கா?!..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது.

அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த படம் மூலம் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார்.

அடுத்து கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதை பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். முதன் முறையாக ரஜினியுடன் லோகேஷ் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கூலி படத்திற்கு பின் கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என தொடர்ந்து படங்களை இயக்கவுள்ளார். இதற்கிடையில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் லோகேஷ் நடிக்கவுள்ளாராம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார் என சொல்கிறார்கள். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றே கணிக்கப்படுகிறது.

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!SI பணிக்கான தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க!!

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியானதோடு அதற்கான கால அவகாசம் மே 3 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த கால அவகாசமானது மே 10 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 

 

சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழக காவல்துறையில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது இதற்கான அறிவிப்புகள் அபபோது வெளியிடப்படுவதும் உண்டு அப்படியாக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என காத்திருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இசை தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 3 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு மே 10ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடிய 1352 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதோடு 53 இடங்கள் எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கும் பின்னடைவு பணியிடங்கள் என குறிப்பிடப்பட்டு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு வயது வரம்பு 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் பி சி, பி சி முஸ்லிம் ,எம் பி சி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 32 இருக்கலாம் என்றும் எஸ்சி , எஸ்டி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பானது 35 என்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 37 இன்றும் வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தக் லைப் பார்த்துவிட்டு கமல் அடித்த கமெண்ட்!. அப்ப ஹீரோ அவர் இல்லயா?!…

நாயகனுக்கு பின் 36 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் தக் லைப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில்., கமல் நீண்ட தலைமுடியுடன் சண்டை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது.

எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பின் அவர்கள் அப்படத்தில் நடிக்கவில்லை, சிம்பு நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. கமலுடன் சிம்பு நடிக்கிறார் என்றதும் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு எகிறியது.

படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடந்து வந்தது. வழக்கம்போல் மணிரத்னத்தின் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்துள்ளார். மேலும், நாசர், அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் முடிந்து இப்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூன் 5ம் தேதி படம் ரீலீஸ் என அறிவித்துவிட்டனர்.

சமீபத்தில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பும் சென்னையில் நடந்தது. அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இந்நிலையில், முழு படத்தையும் பார்த்த கமல் சிம்புவிடம் ‘இந்த படம் துவங்கிய போது என்னுடைய படமாக இருந்தது. படம் முடியும்போது உங்கள் படமாக மாறிவிட்டது’ என சொன்னாராம். கமல் சொல்வதை பார்க்கும்போது தக் லைப் படத்தில் சிம்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுகப்பட்டிருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

இனி அனைவருக்கும் வந்தே பாரத் பயணம்!! விலை குறைக்கப்பட இருக்கும் டிக்கெட்டுகள்!!

ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் பயணத்தினுடைய டிக்கெட் விளைவுகள் குறைப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

வந்தே பாரத் ரயில் பயணமானது 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி நாட்டில் 136 வந்தே வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ரயிலில் மாணவர்கள் தொழிலாளர்கள் நடுத்தர மக்களுக்கான கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் பாராளுமன்றத்தில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ரஹீபுல் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் இது குறித்து கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அப்பொழுது, ரயில்களுக்கான சலுகை கட்டணங்கள் வருமான அடிப்படையில் கட்டண திட்டங்கள் போன்றவை பரிசீலனையில் இருப்பதாகவும் இது வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க கூடிய அனைவருக்கும் ஏற்றதாக மாற்றக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

வந்தே பாரத் ரயிலினுடைய கட்டணத்தை குறைப்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் அரசியல் லாபத்தை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் பொதுமக்களின் நலனை கூட்டத்தில் கொண்டு விரைவில் வந்தே பாரத் ரயிலின் உடைய கட்டணமானது குறைக்கப்படும் என்றும் சென்னை ஐ சி எப் இல் உருவாக்கப்பட்ட இந்த ரயில்களின் கதவுகள் தானாக திறக்கக்கூடியதாகவும் உட்கார வசதியான இருக்கைகள் ஒன்று நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும் 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.