Home Blog Page 217

தவெக கட்சித் தலைவரை பார்க்க சென்றது குற்றமா!! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்!!

மதுரையை சேர்ந்த காவலர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை பார்க்க சென்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். 

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனநாயகன்படத்தின் சூட்டிங் காக நடிகர் மற்றும் கட்சித் தலைவரான விஜய் அவர்கள் மே ஒன்றாம் தேதியன்று சென்னையில் இருந்து தனி விமான மூலமாக மதுரைக்கு சென்று இருக்கிறார் அப்பொழுது மதுரையை சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் என்பவர் எமர்ஜென்சி எனக் கூறி பெர்மிஷன் வாங்கிக்கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பார்க்க சென்றுள்ளார். அப்பொழுது, தமிழக வெற்றிக்கழகத்தின் தூண்டினை அவர் கழுத்தில் அணிந்திருந்ததாகவும் எமர்ஜென்சி என கூறிவிட்டு இது போன்ற காரியத்திற்கு அவர் சென்றதால் தற்போது காவல் ஆணையர் அவர்கள் அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கதிரவன் மார்க்ஸ் என்ற காவலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த விளக்கு தூண் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் மே ஒன்றாம் தேதி அன்று மதுரைக்கு வந்திருந்த விஜயவர்களை நேரில் சந்திப்பதற்காக எமர்ஜென்சி எனக் கூறி பவர் மிஷின் வாங்கிக் கொண்ட சென்றுள்ள அப்பொழுது இவர் தமிழக வெற்றி கழகத்தின் உடைய துண்டினை அணிந்திருந்ததாகவும் இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாக இருப்பதால் அவர் மீது காதல் ஆணையர் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது காவலர் கதிரவன் மார்க்ஸ் மீது காவல் ஆணையர் லோகநாதன் என்பவர் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பல வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.10,000 அபராதம்!! அதிரடி காட்டும் RBI!!

ஒரு நபர் தன்னுடைய பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கியானது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

 

அதன்படி, வங்கி பயனரின் உடைய வங்கி கணக்குகளில் தவறான செயல்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆர் பி ஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது முடியவில்லை என்றால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் கூட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

 

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய தேவையற்ற கணக்குகளை மூடுவது நல்லது என்றும் அவர்களுடைய பெயரில் இருக்கக்கூடிய அனைத்து வங்கி கணக்குகளும் செயல்படுத்தப்படவில்லை என்றால் அவற்றை முறையாக மூடிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பிழையான பரிவர்த்தனைகள் நடக்காத படி கவனமாக இருத்தல் வேண்டும் என்றும் ஒருவேளை தவறான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருடைய பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகள் ஆனது சமீப காலங்களாக மோசடி நபர்களால் கைப்பற்றப்பட்டு பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை தடுப்பதற்கு வங்கி பயணங்கள் தங்களுடைய தேவையற்ற வங்கி கணக்குகளை முறையாக வங்கிகளுக்கு சென்று மூட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான இலவச தையல் மெஷின்!! உடனே விண்ணப்பிக்க!!

பின் தங்கிய மற்றும் வாழ்க்கை பிழைகள் எதிர்கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசனது ஒரு புதிய மற்றும் பயனுள்ள திட்டத்தை உருவாக்கியிருக்கிறது அதன்படி இலவச தையல் மெஷின் பெறுவதற்கு பெண்கள் தமிழக அரசின் உடைய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டத்தின் மூலமாக தையல் தெரிந்த பெண்கள் இலவசமாக தையல் மெஷின்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கக்கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

மேலும், இத்திட்டத்தில் தகுதி பெற குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் :-

 

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அடையாள ஆவணம் வருமான சான்றிதழ் பிறப்பு சான்றிதழ் தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்களுக்கு சென்று இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இலவச தையல் மெஷின் ஆனது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் உடைய இந்த திட்டத்தின் கீழ் பயன்பட நினைக்கக்கூடிய பெண்கள் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்களுக்கு தங்களுடைய அடையாள சான்றிதழ்களை எடுத்துச் சென்று விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கக்கூடிய ரயில் பயணிகள் யூ டி எஸ் ஆப்ஸ் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

 

பொதுவாக யூ டி எஸ் ஆப்சை பயன்படுத்தி இரண்டு முறைகளில் டிக்கெட்டை பெறலாம் என்றும் ஒன்று காகித வடிவிலான டிக்கெட் என்றும் மற்றொன்று ஆன்லைன் வடிவிலான டிக்கெட் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்லைன் வடிவிலான டிக்கெட்டை பொருத்தவரையில் நேரடியாக ரயில்களில் பயணம் செய்யலாம் என்றும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது மொபைல் மூலமாகவே டிக்கெட் காட்டி விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காகித வடிவிலான டிக்கெட் தான் பெரும்பாலான தேர்வு செய்வதாகவும் அப்படி தேர்வு செய்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து நேரடியாக ரயிலில் ஏறி விடுவது தவறான காரியம் என்றும் ரயில்வே துறை எச்சரித்து இருக்கிறது.

 

காரணம் இது காகித வடிவிலான டிக்கெட் என்பதால் ரயில்வே நிலையத்திற்கு வந்தவுடன் டிக்கெட் கவுண்டரை அணுகி காகித வடிவிலான டிக்கெட்டை பெற்ற பின்பு தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றும் இதை மீறக்கூடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலர் யு டி எஸ் ஆப்புகளால் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனிப்பதில்லை என்றும் அதுபோன்ற விதிமீறல்கள் ஈடுபடுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள்!! சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கல்விகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் துவங்கி விட்டது. இவர்களுக்கான பள்ளி திறப்பு தேதி கோடை வெயிலின் தாக்கம் பொருத்த தள்ளி வைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

 

பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அதன்படி, 15 நாட்கள் கோடை விடுமுறை மற்றும் அதற்கான சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் இந்த முடிவானது 2022 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெப்ப அலை காரணமாக 15 நாட்கள் விடுமுறை விடப்பட இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மே 11 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

மேலும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இந்த போரை விடுமுறையானது 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் இதோடு கூடவே அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் உள்ளிட்டவைகளும் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது அங்கன்வாடி ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி சார்ந்த சட்டம் நிலைக்காது!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

SC /ST என்ற சாதி பிரிவில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய பின் அவர்கள் SC/ ST பிரிவின் கீழ் வர மாட்டார்கள் என்றும் அவர்களுக்கான சட்டம் மற்றும் தள்ளுபடி அரசு சார்ந்த சலுகைகள் என எதுவும் கிடைக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

 

2021 ஜனவரி மாதத்தில் பாஸ்டர் ஆக பணியாற்றிய சிந்தாரா ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தியதாக சான்றோ போலீசில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் SC/ST தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது இந்த வழக்கானது நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறது.

 

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய இந்த வழக்கிற்கு சமீபத்தில் நீதிபதிகள், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு அவருக்கு சாதி சார்ந்த SC/ST தடுப்புச் சட்டம் உதவாது என்றும் அவர்கள் இந்த சாதிக்குள் அடங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்ததோடு இதனை பரிசீலனை செய்யாமல் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பு தங்களுடைய சாதியை யாராலும் குறிப்பிட முடியாது என்றும் சாதியை உரிமை கோருவதும் சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து இருக்கின்றனர்.

 

ஒருவர் மதம் மாறிய பின்பு அந்த சாதி தனக்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்பு வழங்கும் என நினைக்கக் கூடாது என்றும் இனி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்சி எஸ்டி களுக்கு அந்த பாதுகாப்பு சட்டம் பயன்படாது என்றும் அதன் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

சென்னை மாநகராட்சியானது சென்னையில் பெண்களினுடைய பெயரில் வீடுகளை வாங்கினால் 50 சதவிகித சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. 

 

இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது :-

 

சென்னை மாநகராட்சி திட்டமிட்டபடி சென்னையில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு 50 சதவிகித வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருக்கிறார். மேலும் இது குறித்து கவுன்சிலர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் மேயர் பிரியா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து , பெண்கள் பயிரில் பதிவு செய்யப்படும் சத்துக்களுக்கான பதிவு கட்டணத்தை தமிழக அரசு சமீபத்தில் தான் குறைத்திருக்கிறது என்றும் பத்து லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகள் வீட்டு மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட்ட அனைத்து அசையா சொத்துக்களுக்கும் பதிவு கட்டணம் ஒரு சர்டிபிகிதம் குறைக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் டிவி செம்மொழி 50 சதவிகித வரி தள்ளுபடி ஆனது வழங்க வேண்டும் என்றும் இது பெண்களை மேம்படுத்தும் வரி தள்ளுபடியால் ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக ஆராய வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

உங்ககிட்ட பழைய 2000 ரூபாய் நோட்டு இருக்கா!!RBI வெளியிட்ட அறிவிப்பை பாருங்க!!

2023 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மீதமுள்ள 2 சதவிகிதம் இந்தியாவில் இருக்கக்கூடிய பலரிடம் இருப்பதாகவும் அவற்றை பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் அந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக் கொள்வதற்கான வழிகள் திறந்திருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 

 

இந்தியன் ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி,

 

மே 19 2023 ஆம் ஆண்டு முதல் உலகத்திலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட பொழுதிலும் அவற்றில் 98.24% மட்டுமே இதுவரை பெறப்பட்டு இருப்பதாகவும் மீதி 6 ஆயிரம் கோடிக்கு மேல் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கக் கூடியவர்கள் என்ன கவலையும் பட வேண்டாம் என்றும் இதனை வங்கிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் ரிசர்வ் வங்கி இதனை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான மாற்று வழிகளை வழங்கி இருக்கிறது.

 

குறிப்பாக தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தங்களுடைய பழைய 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என்றும் அல்லது தங்களுடைய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த வசதி இன்றளவும் மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முடிக்க தொடர்ந்து உதவுவதாகவும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. உதவியோடு தங்களுடைய 2000 ரூபாய் நோட்டுகளை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பயனர்களின் உடைய வங்கி கணக்கில் அந்த 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!! நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணத்தின் போது சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

 

ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் வருக திறனாளிகள் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.

 

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புதிய வழிமுறைகள் :-

 

✓ மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்களை முறையாக ஏற்றி செல்ல வேண்டும்.

 

✓ பேருந்தில் இடமில்லை என்று சொல்லி அவர்களை பாதியில் இறக்கி விடுவதோ அல்லது பேருந்தில் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதோ தண்டனைக்குரிய விஷயம்

 

✓ ஓட்டுனர் பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்து நிறுத்த வேண்டும் அதற்கு மாறாக பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவோ அல்லது பின் பாகவோ தள்ளி நிறுத்தவும் கூடாது

 

✓ மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கான இருக்கைக்குமே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.அதனை சுட்டிக்காட்டி அதில் அவரை அமர வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய இருக்கையில் அமர செய்த பின் அவர்களிடம் கனியுடன் பயண சீட்டுகள் வழங்க வேண்டும் என்றும் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நிறுத்தி மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர் உதவியுடன் அவர்களை இறக்கி விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

✓ சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகளின் உடைய இருக்கையில் அமரும்பொழுது அவர்களிடம் பணிவுடன் மாற்றுத்திறனாளிகளின் இருக்கை எனக் கூறி அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ பேருந்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் அன்புடனும் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

✓ மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அசல் அட்டை கொண்டு வரக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் எல்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாச்சார மரியாதை.. ரஜினியின் ஓய்வு!! லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டி!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட்டிங் என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் உடைய பாரம்பரிய கைவினை பொருட்கள் விவசாய பொருட்கள் குடிசை தொழில் பொருட்கள் கண்காட்சி மே மாதம் 1 ஆம் தேதி துவங்கியது.

 

இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியை பார்வையிட லதா ரஜினிகாந்த் வந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு மற்றும் தமிழகத்தில் அதிகமாக இருக்கக்கூடிய கலாச்சார சீரழிவு பற்றி பேசி இருக்கிறார்.

 

செய்தியாளர்கள் சந்திப்பில் லதா ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது :-

 

நம் நாட்டில் இருக்கக்கூடிய அடையாளங்கள் எல்லாமே சிறந்து விளங்க கூடியவை அவற்றை அறிய விடக்கூடாது என்றும் கைவினைப் பொருட்கள் விவசாய உற்பத்தி பொருட்கள் போன்றவற்றின் மூலம் பலருடைய வாழ்வாதாரம் கிடைத்து வருவதாகவும் நமது கலைகளை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள யோகாவை எடுத்துக் கொள்கின்றனர் என்றும் நமது தமிழர்கள் பண்பாக பேசக்கூடியவர்கள் என்றும் தெரிவித்ததோடு இன்றைக்கு இருக்கக்கூடிய கலாச்சாரம் மரியாதையே இல்லாமல் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வயதிற்கு தகுதிக்கோ மரியாதை இல்லாமல் ஒரு பாஷையில் அனைவரையும் பேசி விடுவதாக வருத்தம் தெரிவித்து இருக்கிறார். வெளிநாட்டு மோகத்தில் அனைவரும் மூழ்கி செல்லாமல் தமிழர்களுடைய பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

 

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு குறித்து பேசும் பொழுது, ரஜினிகாந்த் ஓய்வு குறித்து எனக்கு தெரிந்தால் கட்டாயமாக நான் சொல்லலாம் என்றும் இன்னும் அதனைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.