Home Blog Page 229

இந்த ஏழு நன்மைகள் கிடைக்க.. தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிடுங்கள்!!

0

நாம் பயன்படுத்தி வரும் பூசணி விதையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பூசணி காய் பிடிக்காதவர்கள் அதன் விதையை சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.பூசணி விதை ஆண்களின் விந்தணு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

பூசணி விதையில் ஜிங்க்,மெக்னீசியம்,நல்ல கொழுப்புகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பூசணி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பூசணி விதை நன்மைகள்:-

1)தினமும் பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற மெக்னீசியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படும்.தினமும் பூசணி விதை பொடியை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

3)பூசணி விதையில் இருக்கின்ற மெக்னீசியம் சத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதயத் துடிப்பு சீராக இருக்க பூசணி விதையை உட்கொள்ளலாம்.

4)உடலில் படியும் தேவையற்ற கொழுப்பை கரைக்க பூசணி விதையை வறுத்து சாப்பிடலாம்.தினமும் இரவு நேரத்தில் நேரத்தில் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்தை அனுபவிக்கலாம்.

5)தினமும் பூசணி விதை பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.ஆண்கள் மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து மீள பூசணி விதையை சாப்பிடலாம்.

6)ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

7)உடல் சூடு தணிய தினமும் ஒரு தேக்கரண்டி பூசணி விதையை வறுத்து சாப்பிடலாம்.கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பூசணி விதையை சாப்பிடலாம்.

காலையில் நான்கு துளசி இலை பறித்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

0

கோயில் தீர்த்தத்தில் சேர்க்கப்படும் துளசி இலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பல உடல் நலப் பிரச்சனைக்கு இந்த மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக சளி பாதிப்பு குணமாக துளசி இலைகளையே மருந்தாக பயன்படுத்தி வருகின்றோம்.

துளசி இலையில் கஷாயம் வச்சி குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் நான்கு துளசி இலைகளை பறித்து சாப்பிட்டாலே உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

துளசி இலையின் ஆரோக்கிய நன்மைகள்:-

1)இருமல்,சளி பாதிப்பில் இருந்து மீள துளசி இலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

2)ஆஸ்துமா பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.தொண்டைப்புண் பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்.

3)அஜீரணக் கோளாறு பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை உட்கொள்ளலாம்.வெறும் வயிற்றில் துளசி சாப்பிட்டால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.

4)இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க துளசி இலைகளை தினமும் சாப்பிடலாம்.துளசி இலைகள் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.

5)வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் பாதிப்புகள் குணமாக துளசி இலைகளை சாப்பிடலாம்.நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீள துளசி இலைகளை சாப்பிடலாம்.

6)சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.தினமும் காலையில் துளசி தேநீர் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துளசி தேநீர் செய்முறை:

தேவைப்படும் பொருட்கள்:

துளசி
தேன்
தண்ணீர்

முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் பத்து துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் துளசி பானத்தை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து பருகலாம்.

BODY HEAT குறையணுமா? அப்போ இந்த 3 டிப்ஸ் கண்டிப்பாக உதவும்!! நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

0

அதிக வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து பல பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றோம்.உடலில் அதிக வெப்பம் உருவானால் பித்தம் அதிகரிக்கும்.சருமப் பிரச்சனைகள்,நீர்க்கடுப்பு போன்ற பாதிப்புகள் உடல் வெப்பத்தால் ஏற்படுகிறது.

கோடை காலத்தில் உடல் சூட்டால் அம்மை பாதிப்பை பலரும் எதிர்கொள்கின்றனர்.எனவே கோடை சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

1)ஆயில் பாத்

வாரம் இருமுறை நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரை அப்ளை செய்து நன்றாக ஊறிய பிறகு குளிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் உடல் சூடு முற்றிலும் தணியும்.

2)இளநீர் + பனங்கற்கண்டு

ஒரு இளநீரை வெட்டி அதன் தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு பனங்கற்கண்டு மிக்ஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.இளநீர் குடிப்பதால் உடல் வெப்பம் தணிந்து உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கும்.

3)கற்றாழை ஜெல்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஏழு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கற்றாழை துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை குடித்தால் உடல் சூடு தணியும்.

அதேபோல் வெட்டி வேரை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.வெந்தய நீர்,துளசி நீர்,புதினா நீர் போன்றவற்றை செய்து பருகினால் உடல் சூடு தணியும்.

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

0

இந்த வருடம் அட்சய திருதியை நாளானது நாளை ஏப்ரல் 30-ஆம் தேதி வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். தங்கம் மற்றும் வெள்ளி வாங்கக்கூடிய சூழ்நிலை இருப்பவர்கள் தங்கத்தை வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை அட்சய திருதியை அன்று செய்தால் பண பற்றாக்குறை என்பது அவர்களுக்கு இருக்காது. எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக அவர்களால் தங்கம் அல்லது வெள்ளி வாங்க முடியும்.

தங்கம் மற்றும் வெள்ளி வாங்க இயலாதவர்கள் கல் உப்பு மட்டுமாவது கண்டிப்பாக அட்சய திருதியை நாளன்று வாங்க வேண்டும். அட்சய திருதியை நாள் என்பது தங்கம், வெள்ளி வாங்குவதற்கு உரிய நாள் மட்டும் கிடையாது. அன்றைய நாளில் முடிந்தவர்கள் தங்கத்தை தானம் செய்யலாம், முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். அதாவது அட்சய திருதியை என்பது தானம் செய்யக்கூடிய நாளாகும். அன்றைய நாளில் தானம் வழங்கினால் மட்டுமே பணவரவு என்பது ஏற்படும்.

எனவே அட்சய திருதியை நாள் அன்று உங்களால் முடிந்த அளவிற்கு யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் வழங்குங்கள். இதனால் கோடி புண்ணியம் உங்களுக்கு உண்டாகும். அட்சய திருதியை அன்று அதிகாலை குளித்துவிட்டு காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை உங்களால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது பூஜை செய்து கொள்ளலாம்.

சுவாமி படங்களை சுத்தம் செய்து பூக்களை போட்டு அலங்கரித்த பின்னர், உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து படிக்க வேண்டும். இந்த மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய உப்பு ஜாடியில் சிறிதளவு கல் உப்பை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியில் சிறிதளவு வெந்தயம், ஒரு 5 ரூபாய் நாணயம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வைத்து முடிந்து அதன் மேல் மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

தங்கம் மற்றும் வெள்ளியை வைக்க முடிந்தவர்கள் வைக்கலாம். முடியாதவர்கள் வெந்தயம் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இதனை உப்பு ஜாடியில் வைக்க வேண்டும். வைக்கும் பொழுது “மகாலட்சுமியே வருக ஐஸ்வர்யம் தருக” என்று கூறிக் கொண்டு வைக்க வேண்டும்.

புதன் பகவானுக்கு உகந்த தானியம் என்றால் பச்சபயிறு மற்றும் வெந்தயம். அதே போன்று புதன் பகவானுக்கும் குபேரருக்கும் உகந்த எண் 5. எனவேதான் வெந்தயமும், ஐந்து ரூபாய் நாணயமும் இதனுள் வைக்கிறோம். இந்த உப்பு ஜாடியை ஒரு சிறிய தட்டில் சில்லறை காசுகளை பரப்பி அதன் மேல் தான் வைக்க வேண்டும். இவ்வாறு உப்பு ஜாடியை வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து, மகாலட்சுமி தாயை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த எளிய வழிபாட்டை அட்சய திருதியை நாளன்று செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். இந்த வருடம் தங்கம் வாங்க முடியாதவர்கள் கண்டிப்பாக அடுத்த வருடம் தங்கம் வாங்கக்கூடிய நிலைக்கு உயர்வீர்கள். எனவே அட்சய திருதியை அன்று இந்த ஒரு எளிய வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

தினமும் மூட்டு வலியால் அல்லாடுகிறீர்களா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்!!

0

பெரியவர்களுக்கு வயது முதுமை காரணமாக மூட்டு வலி தொந்தரவு ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்சனை வந்தால் அதை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

மோசமான உணவுமுறை பழக்கம்,சோமேறி வாழ்க்கைமுறை,உடல் நலப் பிரச்சனையால் மூட்டு பகுதியில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றலாம்.

மூட்டு வலிமையை அதிகரிக்கும் உணவுப்பழக்க வழக்கம்:

1)உளுந்து கஞ்சி

தினமும் இரவு நேரத்தில் உளுந்து கஞ்சி செய்து குடித்து வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.உளுந்து பருப்பில் இருக்கின்ற கால்சியம் சத்து மூட்டு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

2)பிரண்டை துவையல்

வாரம் இருமுறை பிரண்டை சூப்,பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.மூட்டு வலி,மூட்டு வீக்கப் பிரச்சனை இருப்பவர்கள் அதன் வலிமை அதிகரிக்க பிரண்டையை சாப்பிடலாம்.

3)முடக்கத்தான் சூப்

இந்த கீரையில் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.வயதான பிறகு மூட்டுகள் சம்மந்தபட்ட பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க முடக்கத்தான் கீரை சாப்பிடலாம்.

4)வாதமடக்கி இலை துவையல்

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

5)முருங்கை கீரை சூப்

இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் முருங்கை கீரையை சூப்பாக செய்து சாப்பிட்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.முருங்கை கீரை துவையல்,முருங்கை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.

யார் சொன்னது நெல்லிக்காய் நல்லதுனு? இதன் டேஞ்சர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

0

நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருள் நெல்லிக்காய்.சருமப் பிரச்சனை முதல் முடி சார்ந்த பாதிப்புகள் வரை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்தாக நெல்லிக்காய் திகழ்கிறது.ஆயுர்வேதத்தில் இந்த நெல்லிக்காய் பெரிதும் பயனுள்ளதாக திகழ்கிறது.

நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமப் பிரச்சனைகள் முழுமையாக குணமாகும்.தினமும் இரண்டு பெரிய நெல்லிக்காய் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரும்.

இத்தனைவித நன்மைகள் கொண்டிருக்கும் நெல்லிக்காயில் சில ஆபத்துகளும் நிறைந்திருக்கிறது.இரத்தக் கசிதல் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.வயிற்றில் அமிலத் தன்மை பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.நெல்லிக்காயில் அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறதால் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

இருப்பினும் அதிகளவு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஜலதோஷ பாதிப்பு இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிறுநீரக எரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாது.

வறண்ட சருமப் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.நெல்லிக்காய் சாப்பிட்டால் நெஞ்சு கரிப்பு,தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

குடலை டீப் க்ளீன் செய்யும் அபூர்வ பூ!! இதில் டீ போட்டு குடித்தால் எந்த நோயும் அண்டாது!!

0

ஆவாரம் பூ பலவகை மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பூவை சாப்பிட்டால் உச்சி முதல் பாதாம் வரையிலான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இது ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு ஆவாரம் பூவை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த ஆவாரம் பூ பானத்தை வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து குடித்தால் குடல் நச்சுக் கழிவுகள் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆவாரம் பூ பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

உலர்ந்த நிலையில் ஆவாரம் பூ எடுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடியை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.குடல் கழிவுகளை வெளியேற்ற ஆவாரம் பூ பானம் பருகலாம்.

ஆவாரம் பூவை பொடித்து சருமத்தில் அப்ளை செய்து குளித்து வந்தால் சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.ஆவாரம் பூ தேநீர் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.செரிமானப் பிரச்சனை குணமாக ஆவாரம் பூவில் டீ செய்து குடிக்கலாம்.பாத எரிச்சல் குணமாக ஆவாரம் பூ உட்கொள்ளலாம்.வெயில் காலத்தில் சருமப் பராமரிப்பை மேம்படுத்த ஆவாரம் பூவை உட்கொள்ளலாம்.

ஆவாரம் பூவை பொடித்து மஞ்சள் தூள் கலந்து சருமத்தில் தடவி குளித்தால் தடிப்பு,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

உதடுகள் மேல் கருப்பா இருக்கா? இந்த இலையை உதட்டில் தேய்த்தால் சிவப்பாக மாறும்!!

0

உங்கள் உதட்டு கருமை நீங்கி சிவப்பழகு பெற இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும்.உதடுகள் அழகு பெற இதை தினமும் முயற்சி செய்யலாம்.

தீர்வு 01:

புதினா இலை

இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து உதட்டின் மேல் பூசி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்து வந்தால் உதடு கருமை நீங்கும்.

தீர்வு 02:

கொத்தமல்லி தழை

முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை உதட்டின் மீது தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீர் கொண்டு உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு கருமை நீங்கும்.

தீர்வு 03:

கற்றாழை ஜெல்

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கிண்ணத்தில் இந்த கற்றாழை ஜெல் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இதை போட்டு அரைக்க வேண்டும்.இந்த பேஸ்டை உதடுகள் மீது தடவி ஸ்க்ரப் செய்தால் கருமை உதடு சிவப்பாக மாறும்.

தீர்வு 04:

பீட்ரூட்
தேங்காய் எண்ணெய்

ஒரு முழு பீட்ரூட்டை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மிக்சர் ஜாரில் பீட்ரூட் துண்டுகளை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் வாணலி வைத்து பீட்ரூட் பேஸ்டை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பீட்ரூட் கலவையை ஆறவைத்து டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை உதடுகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் உதடுகள் மீதான கருமை நீங்கிவிடும்.

பெண்கள் கருமுட்டை தரத்தை உயர்த்த.. ஒரே மாதத்தில் கரு தரிக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!

0

இயற்கை முறையில் கருத்தரிக்க பெண்கள் தங்கள் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி குறைவாக மற்றும் பலவீனமாக காணப்படுகிறது.இதனால் அவர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாமல் போகிறது.

தற்பொழுது செயற்கை கருத்தரித்தல் மூலமே குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்.பெண்கள் தங்கள் கருப்பை மற்றும் கருமுட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கருமுட்டை தரத்தை அதிகரிக்கும் ஐந்து உணவுகள்:-

1)வால்நட் ஒமேகா மற்றும் 3 கொழுப்பு அமிலம்
2)ஆளிவிதை
3)பழங்கள்
4)முருங்கை காய்
5)முருங்கை பூ

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.வால்நட்,சால்மன்,பாதாம் பருப்பு,அவகேடோ போன்ற உணவுப் பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.

ஆளிவிதையை ஊறவைத்து அல்லது பொடித்து சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்தால் தரமான கருமுட்டை வளர்ச்சி இருக்கும்.

முருங்கை காய் மற்றும் முருங்கை பூவை உலர்த்தி பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.பருப்பு வகைகளை வறுத்து சாப்பிட்டு வந்தால் கருப்பை ஆரோக்கியம் மேம்படும்.முருங்கை பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பூசணி விதை,முட்டை,கோழி இறைச்சி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா?

0

நம் அன்றாட வாழ்வில் சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த காலங்களில் மண் பானை,இரும்புசெம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்தநிலையில் தற்பொழுது அலுமியம்,நான் ஸ்டிக்,செராமிக்,எவர் சில்வர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

இதில் நான்ஸ்டிக்கில் வித விதமான சமையல் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்து உட்கொண்டால் அதில் இருக்கின்ற இரசாயனம் உடலுக்குள் நுழைந்துவிடும்.நான் ஸ்டிக் பாத்திர இரசாயனங்கள் புற்றுநோய் பாதிப்பை உருவாக்கிவிடும்.

நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும்.சர்க்கரை நோய்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட நான் ஸ்டிக் பாத்திர பயன்பாடே காரணம்.

தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.இந்த வகை பாத்திரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு,வயிறு உப்பசம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள இரசாயனங்கள் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.அதில் இருக்கின்ற ஒருவித இரசாயனம் நமது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.எனவே நான்ஸ்டிக் பாத்திரத்திற்கு பதிலாக மண் பாத்திரம்,இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம்.அதேபோல் அலுமினியத்தை தவிர்த்துவிட்டு எவர் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.