Home Blog Page 228

பஹல்கம் தாக்குதல்!. அடையாளம் காணப்பட்ட தீவிரவாதி!.. பகீர் தகவல்!…

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

attack

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவனின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பரா கமாண்டோ என விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவன் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தின் சிறப்பு பிரிவான எஸ்.எஸ்.ஜி சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் உறுதியானது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என தகவல் தெரியவந்திருக்கிறது.

பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்!. விஜய், பவன் கல்யாண் வாழ்த்து!…

0

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று இந்த விருதை வாங்கி அஜித் குடும்பத்துடன் டெல்லி சென்றார்.

நேற்று மாலை ஜனாதிபதி கையில் பத்ம பூஷன் விருதை அஜித் வாங்கினார். அவர் விருது வாங்கியபோது அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் என எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். அஜித் விருது வாங்கிய வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

ajith

இந்நிலையில், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘நமது நண்பர் அஜித்குமர் மதிப்பு மிக்க பத்மபூஷன் விருது வாங்கி நம்மை பெருமைப்படுத்தியிருக்கிறார். என் ரசிகர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல், நடிகரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் ‘பத்மபூஷன் விருதை பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து அனைத்து வயதினரையும் மகிழ்வித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை அவர் பதித்துள்ளார். ஃபார்முலா 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் திரு.அஜித்குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்’ என அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!

0

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கீழ் இயங்கி வரக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக இருக்கக்கூடிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

காலியாக உள்ள பணியிடத்தின் விவரங்கள் :-

 

காலி பணியிடம் – 1

 

கல்வி தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு. பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை

 

வயது வரம்பு – 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

 

சம்பளம் – ரூ.13,240

 

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்கும் முறை – https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/04/2025042397.pdf என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மே மாதம் 6 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி மே 6 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகவரி :-

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,

கொக்கிரகுளம்,

திருநெல்வேலி – 9

தீவிரவாதிகள் சுடுவது தெரியாமல் ஜிப்லைனில் செல்லும் சுற்றுலா பயணி!.. அதிர்ச்சி வீடியோ!..

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பகல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அது பற்றி தெரியாமல் சுற்றுலாப்பயணி ஜிப்லைனில் சென்ற படியே செல்பி வீடியோ எடுத்திருக்க்கிறார். அந்த வீடியோவில் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் குண்டடி பட்டு கீழே விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. தற்போது அந்த ஜிப்லைன் ஆப்பரேடருக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் இது பற்றி அவர்கள் விசாரிக்கவுள்ளனர்.

terrorist

ஏனெனில், அந்த பயணி கொடுத்துள்ள தகவல்படி ‘அந்த ஜிப்லைன் ஆபரேட்டர் மூன்று முறை அல்லாக்கு அக்பர் என சொன்ன பின்னர்தான் தீவிரவாதிகள் சுட துவங்கினார்கள். என் கண் முன்னே 8 பேர் இறந்துபோனர்கள். அந்த ஆபரேட்டர் சாதாரணமாக இருந்தார் என சொல்லியிருக்கிறார். எனவே, அந்த ஜிப்லைன் ஆபரேட்டர் தீவிராவதிகளுக்கு உதவி இருக்கிறாரா என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

Picture and Video courtesy to Spark Media

பல ஆண்டுக்குப் பின் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு!! நீதிமன்றம் அறிவிப்பு!!

0

கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தையே அதிர வைக்கக்கூடிய பாலியல் வழக்கு ஒன்று வெளியுலகிற்கு தெரிய வந்தது.

 

இந்த பாலியல் வழக்கில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெண்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய பாலியல் வன்புணர்வுக்கு உணவாக மாற்றி இருக்கின்றனர். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து மீண்டும் மீண்டும் அந்த பெண்களை பாலியல் தொந்தரவு செய்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

 

இந்த வழக்கு வெளியுலகிற்கு தெரிவதற்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பெண்கள் கொடுத்த புகார் தான் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக திருநாவுக்கரசு சபரி ராஜன் வசந்த் குமார் சதீஷ் மணிவண்ணன் ஆகிய 5 குற்றவாளிகளை 2019 ஆம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கானது சிபிசிஐடி இடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது.

 

அதன்பின் சிபிஐ, 2021 இல் ஹேரேன் பால், பாபு , அருளானந்தம், அருண்குமார் என மீண்டும் 4 பேரை குற்றவாளிகளாக கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வளத்திற்கான முழு விசாரணையும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் மற்றும் அரசு தரப்பு வாதங்களும் தற்பொழுது கேட்டு நிறைவடைந்து விட்டதாகவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற மே 13 ஆம் தேதி வழங்கப்படும் என்றும் நீதிபதி நந்தினி தெரிவித்திருக்கிறார்.

இதுபோல் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது!… பஹல்காம் தாக்குதல் பற்றி பேசிய அஜித்!..

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி நடிகர் அஜித் கருத்து தெரிவித்திருக்கிறார். பகல்ஹாம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இனியும் இதுபோல ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது. அனைத்து வேற்றுமைகளையும் கடந்து ஒதுக்கிவிட்டு ஒரு நல்ல சமூகமாக வாழ்வோம். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். எல்லையில் உள்ள நம் வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். நமக்குள் மோதல் இருக்கக் கூடாது’ என அவர் பேசியிருக்கிறார்.

கூடுதல் வருமானம் ஈட்ட 5 எளிய வழிமுறைகள்!! மாதம் ரூ20,000 சம்பாதிக்க வாய்ப்பு!!

0

தற்பொழுது உள்ள விலைவாசியில் வீட்டில் ஒருவருடைய சம்பளம் போதவில்லை என தொடங்கி ஒருவருடைய ஒரு சம்பளம் பத்தவில்லை என்ற அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதனால் பலரும் தாங்கள் பார்க்கக்கூடிய வேலையோடு சேர்த்து கூடுதல் வருமானம் ஏற்றுவதற்கான வழிகளை தேடி வருகின்றனர். அவ்வாறு தேடக்கூடிய அவர்களுக்கு 5 நிலையான கூடுதல் வருமானங்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்

 

✓ டிஜிட்டல் வேலைவாய்ப்பு :-

 

கிராபிக்ஸ் வடிவமைப்பு விலை மேம்பாடு டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற திறன்களை கொண்டவராக இருந்தால் அவர்களுக்கு Fiverr, Upwork போன்ற தளங்களில் வேலைகளை பெற முடியும். இதில் மாதத்திற்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்வதன் மூலமாக 15,000 முதல் 25 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

 

✓ ஆன்லைன் பயிற்சி :-

 

நீங்கள் கணிதம் அறிவியல் அல்லது ஆங்கிலம் போன்ற ஏதேனும் ஒரு தனி பாட பிரிவில் சிறந்து விளங்குபவராக இருந்தால் ஆன்லைன் பயிற்சி மூலமாக Vedantu, Unacademy போன்ற வலைதளங்களை பயன்படுத்தி கூடுதல் வருமானம் என்ற முறையும். இதில் உங்களுடைய வார இறுதி நாட்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை வகுப்புகள் எடுப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டலாம்.

 

✓ விளம்பரப்படுத்துவதன் மூலம் வருமானம் :-

 

அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற பெரிய தலங்களின் துணை நிறுவனங்களாக சேர்ந்து அவர்களின் உடைய பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனை நீங்கள் instagram youtube வலை பதிவு மூலம் விளம்பரப்படுத்தினால் கமிஷன் பெறலாம்.

 

✓ பொருட்கள் இல்லாமல் வணிகம் :-

 

எந்த ஒரு பொருளையும் வாங்கவோ சேமிக்கவோ தேவையில்லாமல் ஆன்லைனில் ஆர்டர்களை பெறுவதன் மூலம் அதனை மூன்றாம் தரப்பினருக்கு டெலிவரி செய்து , குறிப்பாக Shopify, WooCommerce போன்ற மூன்றாம் தரப்பு தளங்களை தொடங்குவதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.

 

✓ பகுதிநேர கடைகளின் மூலம் வருமானம் :-

 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் வார இறுதி நாட்களில் சந்தைகளில் அல்லது உள்ளூர் கண்காட்சிகளில் கடையமைத்து வீட்டில் தயாரிக்க கூடிய பொருட்கள் சிற்றுண்டிகள் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மேலும் உங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்த சந்தைப்படுத்துதல் நல்ல நோக்கமாக அமையும்.

சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடியில் ஆபாச காட்சிகள்!! உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி!!

0

முன்னாள் தகவல் ஆணையர் மற்றும் பத்திரிக்கையாளரான உதை மற்றும் பிறர் சேர்ந்து தொடர்ந்தால் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் ஏஜி மாஷிஷ் இருவரும் இணைந்து சாரணை நடத்தினர்.

 

விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாக பேசிய வழக்கறிஞர் தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்பொழுது பொது பிரச்சனை ஆக உருவெடுத்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாத ஓட்டிட்டு தலங்கள் வரையில் இன்று அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் வன்முறை பரவி இருக்கிறது என்றும் இதை ஒழுங்குபடுத்தியே தீர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது போன்ற வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளால் சமூக மதிப்பீடுகள் மனநலன் மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்றும் இது போன்ற கண்டன்டுகள் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான செயல்களில் இளம் வயதினரை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இந்த மனு வெறும் விளம்பர நோக்கத்தில் போடப்பட்டது அல்ல என்றும் உண்மையான சமூக அக்கறை கொண்டவரின் வெளிப்பாடு என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

 

வாதங்களைக் கேட்ட நீதிபதி தெரிவித்திருப்பதாவது :-

 

சமூக வலைதளங்கள் மற்றும் ஓ டி டி களங்களில் பரவி இருக்கக்கூடிய இதுபோன்ற வன்முறை மற்றும் ஆபாச வீடியோக்கள் மீது மத்திய அரசு ஏதேனும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி காவாய் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓட்டியடித்த தலங்கள் மற்றும் சில சமூக வலைதளங்களுக்கு இது குறித்து பதிலளிக்க வேண்டும் என நோட்டஸ் அனுப்ப உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் பேசிய வக்கீல் இந்த கண்டன்டுகள் மீது சில வரைமுறைகள் வகுக்கப்பட்ட வருவதாக தெரிவித்ததோடு மத்திய அரசு சட்டவரம்புக்கு உட்பட்டு இதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

0

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி குறித்து பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை வன்கூடா மைதானத்தில் நடைபெற்ற MI VS LSG ஆட்டத்தின் பொழுது 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில், அன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் செயின்ட் அணியினுடைய பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறி LSG அணியினுடைய கேப்டனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிறுவனம். ஏற்கனவே தங்கள் அணியினுடைய தோல்வியை குறித்து மணமடைந்து அழக்கூடிய ஒருவராக ரிஷப் பண்ட் இருந்து வரும் நிலையில் இது ரிஷப் பண்டிற்கு மேலும் ஒரு அடியாக அமைந்திருக்கிறது.

 

LSG அணியின் உடைய கேப்டனான ரிஷப் பண்டுக்கு மட்டும் அபராதம் விதிக்காமல் அந்த அணியில் இருக்கக்கூடிய மற்ற வீரர்களுக்கும் அந்த போட்டியினுடைய சம்பளத்திலிருந்து அனைவருக்கும் தனித்தனியாக தலா 6 லட்சம் ரூபாய் அல்லது 25% அபராத தொகை பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை விளையாட்டு வீரர்கள் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் வெள்ளை முடி வராமல் இருக்க.. 48 நாட்கள் இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க!!

0

உங்கள் தலையில் இருக்கின்ற வெள்ளைமுடியை கருமையாக மாற்ற இந்த பானத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம் – ஒன்று
2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
3)மஞ்சள் துண்டு – சிறிய பீஸ்
4)புதினா இலைகள் – ஐந்து

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் ஒரு முழு நெல்லிக்காயை எடுத்து அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் ஐந்து புதினா இலைகள் மற்றும் ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து மஞ்சள் துண்டு மற்றும் ஐந்து புதினா இலைகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த பானத்தை தினமும் காலை நேரத்தில் பருக வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 தினங்கள் காலை நேரத்தில் இந்த ஜூஸ் குடித்து வந்தால் வெள்ளைமுடி பிரச்சனையை வாழ்நாளில் சந்திக்க மாட்டீர்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் இரண்டு கொத்து கறிவேப்பிலை எடுத்து தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜாரில் கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் வெள்ளை முடி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.