Home Blog Page 230

இனி குளிக்கும் நீரில் கொஞ்சம் கல் உப்பு சேருங்கள்!! நிறைய பலனை பெறுங்கள்!!

0

உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை ஆகும்.உடலில் வியர்வை,தூசு,அழுக்கு போன்றவை படிந்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் இருமுறை குளிப்பதை பலரும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

இப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சமையலில் கல் உப்பு பயன்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் குளிக்கும் பொழுதும் கல் உப்பை சேர்த்துக் கொள்வது முக்கியமாகும்.

கல் உப்பில் சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.நாம் குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்துக் கொண்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.கல் உப்பு கலந்த நீரில் குளித்தால் தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

கல் உப்பு நீரில் குளித்தால் தசை வலி,தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் குணமாகும்.தேமல்,சொறி சிரங்கு,முகப்பரு,உடல் காயங்கள் அனைத்தும் கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் சரியாகும்.சருமம் பளபளப்பாக மாற கல் உப்பு குளியல் போடலாம்.

என்றும் இளமையாக இருக்க கல் உப்பு கலந்த நீரில் குளிக்க வேண்டும்.அதேபோல் குளிக்கும் நீரில் எப்சம் உப்பு சேர்த்துக் கொண்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

கல் உப்பு குளியல்:

நீங்கள் ஒருகைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த உப்பை குளிக்கும் நீரில் போட்டு கரையும் வரை மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இந்த நீரை கொண்டு குளியல் போட வேண்டும்.

கல் உப்பை அரைத்து சருமத்தில் அழுத்தம் கொடுக்காமல் தேய்த்து குளித்தால் பொலிவான சருமம் கிடைக்கும்.எனவே இனி குளிப்பதற்கு முன் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா ஏறாதா?

0

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பாதாம் பருப்பு உடல் எடையை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை சாப்பிட தயங்குகின்றனர்.பாதாமில் புரதம்,வைட்டமின்கள்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.நாம் தினசரி பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நாம் தினசரி பாதாம் பருப்பை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக பாதாம் பருப்பை சாப்பிடலாம்.பாதாமில் மெக்னீசிய சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஐந்து பாதாம் பருப்பு உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு குணமாகும்.

பாதாம் பருப்பு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஞாபக சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பை சாப்பிடலாம்.பாதாமை ஊறவைத்து சாப்பிடலாம்.அதேபோல் பொடித்து பவுடராக உட்கொள்ளலாம்.ஊறவைத்த பாதாம் பருப்பு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் இளமை பொலிவை தக்க வைக்கலாம்.அதேபோல் கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

எலும்புகளின் வலிமை அதிகரிக்க பாதாம் பருப்பை சாப்பிடலாம்.தினசரி காலை நேரத்தில் பாதாம் பருப்பை சாப்பிட்டால் பசி கட்டுப்படும்.சிலர் பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதில் கலோரி மிகவும் குறைவு என்பதால் டயட் இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடலாம்.

பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரையும்.பாதாம் பருப்பை பொடித்து பாலில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாதாம் சாப்பிடுவதால் பசி கட்டுப்படும் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பாதாம் பருப்பை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

0

ஒரு வீட்டின் சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு அறையாகும். பூஜை அறையில் எவ்வாறு தெய்வங்கள் குடிகொண்டு இருக்கிறதோ, அதேபோன்றுதான் சமையலறையிலும் தெய்வங்கள் குடி கொண்டு இருக்கும். அத்தகைய சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து பணவரவை தடுத்து விடுகிறது. இதனால் தான் குடும்பத்தில் வறுமை, கடன் பிரச்சனை, பண பற்றாக்குறை, குடும்பத்தில் நிம்மதியின்மை இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே நாம் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

பூஜையறையில் எப்படி ஒரு சில பொருட்களை வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் உள்ளதோ, அதேபோன்றுதான் வீட்டின் சமையலறையிலும் ஒரு சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்கக் கூடாது. இந்த பொருட்கள் உங்களது சமையலறையில் இருந்தால் தெய்வங்களின் வரவை அது தடுத்துவிடும். மேலும் லட்சுமி தேவியும் உங்களது வீட்டில் தங்க மாட்டார்.

ஏனென்றால் லட்சுமி தேவிக்கு பிடிக்காத ஒரு சில பொருட்கள் உள்ளன. அதேபோன்று லட்சுமிதேவி இருக்கக்கூடிய இடம் எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும். எனவே லட்சுமி தேவிக்கு பிடிக்காத இந்த பொருட்களை உங்களது சமையலறையில் மறந்தும் வைத்து விடாதீர்கள். அது எந்தெந்த பொருட்கள் என்பதை இந்த பதிவில் காண்போம்.

1. சமையலறை என்பது மகாலட்சுமியும், அன்னபூரணியும் வாசம் செய்யக்கூடிய இடம். எனவே அந்த இடத்தில் உடைந்த பாத்திரங்களையும், துருப்பிடித்த இரும்பு பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. இது போன்ற பொருட்களை சமையலறையில் வைத்திருந்தால், அது குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகளை ஏற்படுத்தி விடும்.

2. சமையலறையில் சமைத்த கழிவு பொருட்களை குவித்து வைப்பது, குப்பை தொட்டிகளை வைப்பது கூடாது. அவ்வபோது சமைத்த கழிவுகளை வீட்டிற்கு வெளியே குப்பையில் போட்டு விட வேண்டும். குப்பை கழிவுகளை போடுவதற்கு என சமையலறையில் குப்பை தொட்டிகளை வைக்க கூடாது. இதுபோன்று குப்பைகளை வைத்திருந்தால் துர்நாற்றம் வீசும். இதனால் மகாலட்சுமி அங்கு தங்க மாட்டார்.

3. அரிசியை அளந்து போடுவதற்கு பிளாஸ்டிக் டம்ளரயோ, எவர்சில்வர் டம்ளரயோ பயன்படுத்தக் கூடாது. சமையல் அறையில் எப்பொழுதும் அரிசி அளக்கும் படி இருக்க வேண்டும். அதில் தான் அரிசியை அளக்க வேண்டும். இதை தவிர்த்து வேறு பொருட்களால் அரிசியை அளந்து போட்டால், வீட்டில் செல்வ செழிப்பு குறைந்துவிடும்.

4. சமையலறையில் துடைப்பம் வைக்க கூடாது. இது வீட்டில் தீராத வறுமையை ஏற்படுத்தி விடும். எனவே மறந்தும் சமையலறையில் துடைப்பத்தை வைத்து விடாதீர்கள்.

5. சமையலறையில் மருந்து மாத்திரைகளை வைக்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றல்களையும், எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கிவிடும். இதனால் நோய் உங்களை விட்டு நீங்காது. எனவே மருந்து மாத்திரைகளை சமையலறையில் வைத்து பயன்படுத்தாதீர்கள்.

இரத்த சோகை குணமாக.. இரத்த உற்பத்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!

0

நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டம் சீரக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்தத்தில் கழிவுகள் தேங்கி இருந்தாலோ அல்லது இரத்தம் குறைவாக இருந்தாலோ அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.நமது உடலில் இரத்த ஓட்டம் குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

1)அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.தினமும் உலர் அத்திப்பழம் ஊறவைத்த தண்ணீர் குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

2)நாவல் பழத்தை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.அதேபோல் பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து உட்கொண்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

3)தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் செய்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

4)முருங்கை கீரையை பொடித்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.கோழி ஈரல் சாப்பிட்டால் அதிகமாக இரத்தம் ஊரும்.

5)தக்காளி பழத்தை ஜூஸாக அரைத்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.விளாம்பழத்தை சாப்பிட்டால் இரத்த விருத்தியாகும்.

6)வாரம் ஒருமுறை ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தம் ஊரும்.

7)தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.இஞ்சி துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகமாகும்.

8)இலந்தை பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் அகலும்.இரத்த உற்பத்தி அதிகரிக்க இலந்தை பழம் சாப்பிடலாம்.ஆட்டு ஈரலை வறுத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஊரும்.

9)கேரட்,பீட்ரூட்,ஆப்பிள் ஆகியவற்றை பயன்படுத்தி ஜூஸ் செய்து குடித்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

10)இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

0

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இம்யூனிட்டி பவர் குறைந்தால் எளிதில் நோய் வாய்ப்படக் கூடும்.உடலில் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்த நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:-

1)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

2)பீட்ரூட்,கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தக்காளி பழத்தில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

3)மீன்,முட்டை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.பீன்ஸ் மற்றும் பயறு வகைகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

4)புரோபயாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.தயிர்,கெபிர் போன்ற புளிப்பு உணவுகளில் புரோபயாடிக் நிறைந்து காணப்படுகிறது.

5)வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.

6)இஞ்சி,பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.

7)உலர் விதைகள்,கொட்டை வகைகள் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது.பன்னீர்,பாலாடைக்கட்டி,பால் பொருட்களை சாப்பிட்டு வாந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8)முருங்கை கீரை,முருங்கை காய்,முருங்கை பூ ஆகியவற்றை உணவாக சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பேரிச்சம் பழம்,சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.தினமும் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.இதையெல்லாம் பின்பற்றி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

0

கருத்தரித்த பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கருத்தரித்த பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,துத்தநாகம் மற்றும் அயோடின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

கோழி இறைச்சி,ஆட்டிறைச்ச,பால்,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

கீரைகள்,பழங்கள்,முழு தானிய உணவுகளில் வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இவற்றை சாப்பிட்டு வந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும்.மீன்,வால்நட் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாகவே நிறைந்திருக்கிறது.கடல் பாசி,அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படும்.

தினசரி புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்த உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும்.அதிக சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் உணவுகள்,கொழுப்பு உணவுகளை குறைவான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் எந்தஉணவு எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

தினமும் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும்.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.வால்நட்டை தேனில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.ஊறவைத்த ஆளிவிதை,தயிர்,கீரை உணவுகளை சாப்பிட வேண்டும்.இதையெல்லாம் கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

பெண்கள் இந்த 5 விஷயங்களை தப்பி தவறியும் வேறு யாரிடமும் கூறி விடாதீர்கள்..!!

0

குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் மூலமாக குடும்பம் முன்னேற்றம் அடையும், பணவரவும் அதிகரிக்கும். அதேபோன்றுதான் பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் கூறும் பொழுது குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, பண பற்றாக்குறை ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி கொடுத்து விடும். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

1.முதலாவதாக நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதனை வேறு யாரிடமும் கூறக் கூடாது. குண்டூசி முதல் தங்கம் வரை நீங்கள் எந்த பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, வாங்குவதற்கு முன்பாக அதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது. ஒரு விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதாக இருந்தால் அதற்காக பணம் சேர்த்து வருகிறேன் என்று மற்றவர்களிடம் கூறும் பொழுது அந்தப் பொருளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

நீங்கள் மற்றவர்களிடம் கூறிய நேரத்தில் இருந்து ஏதேனும் ஒரு புதிய பிரச்சினைகள் உங்கள் குடும்பத்திற்கு வரத் தொடங்கி இருக்கும். அந்தப் பிரச்சினைக்காக அந்த பணத்தை செலவிட நேரிடும். இறுதியாக நீங்கள் நினைத்த பொருளை வாங்க முடியாமல் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஒருவேளை அந்த பொருளை நீங்கள் வாங்கி விட்டாலும் கூட, கண் திருஷ்டியின் காரணமாக அது விரைவில் உங்களது கையை விட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2. இரண்டாவதாக உங்களுடைய வருமானத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. குடும்பத்தில் இருக்கும் யாருடைய வருமானமாக இருந்தாலும் சரி, அந்த விவரத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் கூறக்கூடாது.

வருமானம் இவ்வளவு வருகிறது, செலவு போக இவ்வளவு சேமித்து வைக்கிறேன் என்று எந்தவித தகவலையும் மற்றவர்களிடம் கூறக்கூடாது. கண் திருஷ்டியின் காரணமாக வருமானம் குறைய வாய்ப்புகள் உண்டு அல்லது பணத்தை சேமிக்க முடியாமல் போய்விடும்.

3. பெண்கள் கருவுற்றிருந்தால் அதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது. பெண்களுக்கு கடவுள் கொடுக்கின்ற ஒரு பெரிய வரம் என்றால் அது தாய்மை தான். எனவே இந்த விஷயத்தை ஒரு மூன்று அல்லது ஐந்து மாதத்திற்கு பிறகு தான் வெளி ஆட்களிடம் கூற வேண்டும். கணவர் வீடு மற்றும் அம்மா வீட்டில் கூறலாம். ஆனால் வெளி ஆட்களிடம் கண்டிப்பாக கூற கூடாது. ஏனென்றால் இதுவும் ஒரு கண் திருஷ்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.

4. நான்காவதாக அடுத்தவர்களிடம் அதிகம் பேசக்கூடாது. பெண்கள் அனாவசியமாக எங்கேயும் எதனையும் பேசக்கூடாது. முக்கியமாக குடும்பத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளை வேறு யாரிடமும் கூறக்கூடாது. ஏனென்றால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

எனவே நீங்கள் அளவுக்கு அதிகமாக பேசும் பொழுது அது பிரச்சினையை தான் ஏற்படுத்துமே தவிர, உங்களுடைய பிரச்சினைக்கான தீர்வாக அது அமையாது. மேலும் உங்களது குடும்பத்திலும் வீண் சண்டைகள் ஏற்படாது.

5. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள் மற்றும் அன்யோன்ய உறவுகள் போன்ற எதையும் வேறு யாரிடமும் கூறக்கூடாது. அது கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.

கணவன் மனைவிக்கு இடையே மிகப்பெரிய சண்டை என்றால், அந்த குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் கூறலாமே தவிர வெளி ஆட்கள் யாரிடமும் கூறக்கூடாது. மேலும் அன்யோன்ய உறவை மற்றவர்களிடம் கூறும் பொழுது, மற்றவர்களின் பொறாமை மற்றும் கண் திருஷ்டி குணத்தால் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் உருவாக கூடும்.

மேலே கூறிய ஐந்து விஷயங்களையும் மற்றவர்களிடம் கூறும் பொழுது கண் திருஷ்டி மற்றும் பொறாமை தான் உருவாகுமே தவிர, அது உங்களது குடும்பத்திற்கு நல்லதாக அமையாது. இந்த கண் திருஷ்டியின் காரணமாக உங்களது குடும்பத்தில் தான் தேவையில்லாத சண்டைகள் உருவாகும். எனவே இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

0

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.4.2025) மூன்றாம் பிறை தரிசனம் காணக்கூடிய நாளாகும். மேலும் இன்றைய தினத்துடன் ஒரு முக்கியமான தினமும் வருகிறது. அதாவது சித்திரை மாதத்தின் 16-வது நாள் என்பது மிகவும் விசேஷமான ஒரு நாள். இந்த ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டின் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், குழந்தை பாக்கியம், சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

பொதுவாக மாதம் மாதம் வருகின்ற அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாள் தான் மூன்றாம் பிறை. இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எவர் ஒருவர் செய்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்காது. மாதம் மாதம் தொடர்ந்து இந்த ஒரு வழிபாட்டை செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும். குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி இந்த சந்திர தரிசனத்தை செய்யும் பொழுது உடனடியாக தீரும்.

மேலும் இந்த மூன்றாம் பிறையானது செவ்வாய்க் கிழமையோடு, கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. எனவே இந்த நாளை தவிர விடாமல் வழிபாடு செய்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும். இந்த செவ்வாய் கிழமை என்பது முருகனுக்கு உகந்த தினம் என்பதால், முருகன் துணை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். இந்த நாளில் விரதம் இருக்க நினைப்பவர்கள் விரதம் இருக்கலாம்.

காலை எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் முருகனுக்கு உகந்த சிவப்பு நிற மற்றும் செவ்வரளி பூக்களால் அலங்கரித்து தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரலாம். உங்களுக்கு என்ன வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமோ அதனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மாலை நேரத்தில் முருகனுக்கு உகந்த நெய்வேத்தியம் சக்கரை பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் அல்லது முருகனுக்கு மிகவும் பிடித்த தேனும், திணைமாவும் வைக்கலாம். முருகனுக்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு, ஆறு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மேலும் இன்றைய தினம் முழுவதும் உங்களால் முடிந்த அளவிற்கு “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும் இந்த முருகன் வழிபாட்டை மாலை 6:00 மணி முதல் 7:15 மணி வரை செய்து கொள்ளலாம். அடுத்ததாக வீட்டிற்கு வெளியே வந்து மூன்றாம் பிறை சந்திரனை தரிசிக்க வேண்டும். இந்த சந்திர தரிசனத்தின் பொழுது பிறை நிலவை தனது தலையில் கொண்டுள்ள சிவன், விநாயகர், அம்பாள் ஆகியோரையும் வணங்க வேண்டும்.

இந்த சந்திர தரிசனத்தின் பொழுது உங்களுடைய வேண்டுதல்களை கூறிய பின்னர் “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ”என்ற மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். இறுதியாக பூஜை அறையில் இருக்கும் முருகனுக்கு தீப ஆராதனை காட்டி “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த உணவினை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நீங்களும் உண்டு உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இன்றைய தினம் செவ்வாய்க் கிழமையோடு வருகின்ற மூன்றாம் பிறை தினத்தன்று இந்த வழிபாட்டை தொடங்கி, தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமை உங்களது வேண்டுதல்களை வைத்து, இந்த வழிபாட்டை செய்யும் பொழுது உங்களுடைய வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் நிறைவேறும்.

அந்த பதவியும் இல்லயா?!. அண்ணாமலையை டீலில் விட்ட பாஜக?!..

0

தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதுபற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என் பதவியை தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. பதவியை தூக்கிப்போட்டு வந்தவன் நான்.

இதைவிட 10 மடங்கு அதிக பவர் என்னிடம் இருந்தது. நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நேற்று கூட என் தோட்டத்துக்கு போனேன். எனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறேன். ஆடு மாடுகளை பார்த்தேன். எனக்கென ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது. அரசியல் நான் சொன்ன கருத்துக்களை மாற்றி பேசமாட்டேன். என்னுடைய தனி உலகத்தில் நான் அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். மோடிக்காக அரசியல் செய்ய வந்தேன். அட்ஜஸ்மெண்ட் பாலிக்டிக்ஸ் என்னிடம் கிடையாது’ என பேசினார். அவருக்கு பின் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அண்ணாமலையோ இமயமலைக்கு ஆன்மிக பயணமும் போனார்.

ஒருபக்கம், மாநிலங்களவை உறுப்பினர் அதாவது அண்ணாமலைக்கு எம்.பி. பதவி கொடுக்கப்படவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அதுவும் ஆந்திர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அவர் தேர்வு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளீயானது. இது தொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக மத்திய தலைமை பேசி வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், இந்த பதவியும் அண்ணாமலைக்கு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாஜக சார்பில் பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுகிறார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்ந்தெடுக்கபடுவார் என தகவல் வெளியான நிலையில், பகா வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்திருக்கிறது. இதனால் அண்ணாமலையில் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்டன் ஸ்டார்ட்!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!…

0

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார்.

ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி கைவிட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பாஜகவுடன் கூட்டணியும் வைத்துவிட்டார். இதை விஜயே எதிர்பார்க்கவில்லை. இது வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக முடியுமா என்பது தேர்தல் ரிசல்ட்டில்தான் தெரியவரும்.

இந்நிலையில், சமீபகாலமாகவே எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக அரசை திட்டி செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதோடு, சட்டசபையில் பல விஷயங்களையும் பேசி கேள்விகளை எழுப்பி வருகிறார். இது ஸ்டாலினிக்கே தலைவலியாக இருந்து வருகிறது.

இன்று கூட சட்டசபையில் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த அநீதி, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு அமைச்சர் பதவி போனது, உள்ளிட்ட பல விஷயங்களை பற்றியும் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. தோல்வியில் சாதனை படைத்து வரும் பழனிச்சாமி அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்கிறார்., பழனிச்சாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா?.. அதிமுக ஆட்சியியில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர் ஈபிஎஸ். அமைச்சரவை மாற்றம் குறித்து பேசாமல் இருப்பது பழனிச்சாமிக்கு நல்லது. செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா பற்றி பேச பழனிச்சாமிக்கு அருகட்தை இல்லை’ என பொங்கியிருக்கிறார்.