Home Blog Page 232

ஜம்மு வழியாக தப்ப முயன்ற தீவிரவாதிகள்?!.. தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்!..

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

ஒருபக்கம், பகல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த தீவிரவாதிகள் ஜம்மு வழியாக தப்பியோட முயற்சி செய்து வருவதை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். கிஷ்த்வர் மலை வழியாக அவர்கள் தப்பியோட முயற்சி செய்து வருதாக சொல்லப்படுகிறது.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை இதுவரை 4 முறை இந்திய ராணுவத்தினர் சுற்றி வளைத்ததாக சொல்லப்படுகிறது. தாக்குதல் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்களை தீவிரவாதிகள் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை திருடிச் சென்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கேங்கர்ஸ் தோல்வி!. பழைய பாணி அறுவை காமெடியை வடிவேலு நிறுத்தினா நல்லது!.

0

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ். தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய கிரி, வின்னர்,லண்டன், தலைநகர் மறுபக்கம் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். 15 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.

வழக்கமாக சுந்தர்.சி படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்துவிடும். அவர் கடைசியாக இயக்கிய 4 படங்களுமே வெற்றிதான். ஆனால், கேங்கர்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை 5 கோடி வசூலை தாண்டவில்லை என்கிறார்கள். படத்திற்கு பெரிய மைனஸே வடிவேலுதான் என்கிறார்கள். படத்தின் முதல் பாதி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் ‘இம்சை அரசன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் அட்டர் ஃப்ளாப். கேங்கர்ஸ் உட்பட. காமடியனாக நடித்த கத்திசண்டை, சந்திரமுகி 2 போன்றவையும் ஓடவில்லை. வெற்றிப்படங்களை தந்துவந்த சுந்தர் சி. காமடியில் எப்போதோ ஃபீல்ட் அவுட் ஆன வடிவேலுவை மீண்டும் நடிக்க வைத்து.. தனக்குத்தானே ஆப்பை சொருகிக்கொண்டார்.

கலர் கலராக கோமாளித்தனமான உடைகள் அணிவது, விதவிதமாக விக் வைப்பது, பழைய வசனங்களை ரெஃப்ரன்ஸ் வைத்து பேசுவது என மொக்கை போடாமல்.. தற்கால ரசிகர்கள் விரும்பும் காமடியை செய்தால் மட்டுமே வடிவேலு இனி காமெடியில் ஜெயிக்க முடியும். இல்லாவிட்டால் மாமன்னன் போல நல்ல கேரக்டர்களில் நடித்தால் இன்னொரு ரவுண்ட் வரலாம். தயவு செய்து இந்த பழையபாணி அறுவை காமடிகளை தவிர்க்கவும். தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் மிகவும் நொந்துபோய் இருக்கிறார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு இலவச பேருந்து பயணம்!!போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!!

0

கோடை விடுமுறை துவங்கியிருக்கக் கூடிய நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கோடை வெயில் காரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுத்திருக்க கூடியவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கிறது. 

 

கோடை விடுமுறை துவங்கியதால் ரயிலில் முன்பதிவுகள் வேகமாக முடிவடைந்த நிலையில் மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கான பயணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு கோடைகால ஆஃப்ராக ஒரு வருடத்திற்கு இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

 

தமிழக போக்குவரத்து கழகம் தரப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

 

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளின் பெயர்களை கணினி மூலமாக குழுக்கள் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பயணம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படக்கூடிய 75 நபர்களுக்கு 3 பிரிவுகளாக பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

✓ முதலில் தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர்களுக்கு ஒரு வருடத்தில் 20 முறை இலவசமாக பயணிக்கலாம் என்றும் அதற்கான கால அளவு ஜூலை 1 2025 முதல் ஜூன் 30 2026 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட கூடிய 25 நபர்களுக்கு ஒரு வருடத்தில் 10 முறை இலவசமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதற்கான கால அளவு ஜூலை 1 2025 முதல் ஜூன் 30 2026 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ கடைசியாக தேர்வு செய்யப்படக்கூடிய 25 நபர்களுக்கு ஒரு வருடத்தில் 5 முறை இலவசமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இதற்கான கால அளவு ஜூலை 1 2025 முதல் ஜூன் 30 2026 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு :-

 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இருக்கக்கூடிய பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யக்கூடிய பயணிகள் www.tnstc.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தின் கீழ் சென்று தங்களுடைய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

0

சினிமா துறையில் ஆகட்டும் அரசியல் துறையிலாகட்டும் யாருக்கும் எதற்காகவும் அடிபணிந்து போகாத ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் நடித்த மொத்த படங்களில் பாதிக்கு பாதி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் மட்டுமல்லாத பலரை இந்த திரையுலகில் வளர்த்து விட்டவர் இவர் ஆவார். 

 

திரையுலகம் முழுவதும் விஜயகாந்த் பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கிய காலத்தில் அந்த விஜயகாந்த் அவர்களை ஒருவரை பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கி நின்றார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மை இதுதான். விஜயகாந்தினுடைய அனைத்து முடிவுகளையும் முடிவு செய்யக்கூடியவராக மட்டுமல்லாது அவர் சொல்லும் படங்களில் மட்டுமே விஜயகாந்த் அவர் சொன்னபடி நடிக்கக்கூடிய ஆளாகவும் இருந்திருக்கிறார். இவ்வாறு நடிகர் விஜயகாந்த் அவர்களை அடக்கி ஆண்ட ஒருவர் என்றால் இப்ராஹிம் ராவுத்தர் அவர்.

 

விஜயகாந்த் அவர்களுக்கு வரக்கூடிய திரைப்படங்களின் கதைகளை இப்ராகிம் ராவுத்தர் கேட்டு கதை நன்றாக இருந்தால் விஜயகாந்த் நடிப்பார் என்று ஒப்புதல் கூறி அனுப்பி வைப்பாராம். அதன் பின் விஜயகாந்த் இடம் சென்று கதையைக் கேள் நடிக்கலாம் என்று மட்டும் கூறி விடுவாராம். ஒருவர் கதையைக் கேட்டு உனக்கு பிடித்திருந்தால் நடிக்கலாம் என்ற வாய்ப்பு தராமல் கதையைக் கேள் நடிக்கலாம் என சொல்வது கதை நன்றாக இருக்கிறது அதற்கு நான் ஒப்புதல் வழங்கி விட்டேன் நீ நடித்து தீர வேண்டும் என்பது போல் தெரிவிக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இது போன்ற வார்த்தைகளுக்கு எந்த வித எதிர்ப்புமின்றி ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்றால் உடனடியாக நான் நடிக்கிறேன் என விஜயகாந்த் அவர்களும் கூறி விடுவாராம்.

 

ஒருமுறை, விஜயகாந்த் அவர்கள் தயாரிப்பாளரிடம் சென்று தன்னுடைய படத்திற்கு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தும் படி கேட்டு இருக்கிறார். அந்த தயாரிப்பாளர் உடனடியாக இதை இப்ராகிம் ராவுத்தரிடம் தெரிவிக்க அவர், ” அவனுக்கு என்ன தெரியும் நீங்கள் எப்பொழுதும் போல் நடிகையை தேர்வு செய்யுங்கள் என்றும் அவனால் தான் படம் ஓடுகிறது எனவே புதுமுக நடிகைகள் தேவை இல்லை ” என சொல்லி இருக்கிறார். இதனைக் கேட்ட விஜயகாந் அவர் சொல்லிவிட்டார் என்றால் சரி என எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லையாம்.

வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!

0

வீடு கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய விலை நிலவரப்படி 1000 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

 

கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அளித்த மனுவல் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலைகள் 1000 ரூபாய் குறைப்பது மற்றும் சாதாரண கற்களுக்கான சீனியரேஜ் தொகை மெட்ரிக் டன்னுக்கு 33 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையானது ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

  • தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாக எம்சாண்ட் டி சாண்ட் மற்றும் ஜல்லிக்கட்டு விலையானது யூனிட்டுக்கு 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், இந்த விலை உயர்வுக்கான எதிர்ப்பை பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தெரிவித்திருந்தார். மேலும் கட்டுமான பொருட்களினுடைய விலைகள் அதிகமாக உள்ளது என்றும் இதனை விரைவில் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கட்டுமான பொருட்களினுடைய விலை உயர்வால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படும் என்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு புதிதாக விதிக்கப்பட்ட சிறு கனிம நில வரிவிதிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்தராமையா!! கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!!

0

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருப்பது குறித்தோ 12 பேர் காயமடைந்திருப்பது குறித்தோ பேசாமல் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவு தான் காரணம் எனக் கூறியிருப்பது இந்திய மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவுதான் இது போன்ற ஒரு தாக்குதலுக்கு காரணம் என்றும் இதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா போர் நடத்த தேவையில்லை என்றும் இருநாட்டினுடைய அமைதி காக்கப்பட வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள் அவரை கொண்டாடி வருகின்றன. பயங்கரவாதிகளை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத சித்தராமையா பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறார் என பாஜகவின் ஐடி விங் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்தியர்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பேசுவதற்கு பதிலாக நாட்டினுடைய பாதுகாப்பின் குறைபாடு இருப்பதாக கூறியதோடு, பாகிஸ்தானுடன் இந்தியா அமைதியை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுகூறியிருப்பது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இவர் நிற்கிறார் என்பதை நிரூபிப்பது போல் உள்ளதாகவும் இதனை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் இவரை கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சித்தராமையா அவர்களை துரோகி என சுட்டிக்காட்டி மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். குறிப்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடகாவில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை தனக்கு தெரியாது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!

0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைக் கிராமங்களில் இல்லம் தேனி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தற்பொழுது விரிவு படுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

 

தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதாரண பகுதிகளில் மக்கள் நேரடியாக சென்ற ரேஷன் பொருட்களை வாங்கி வரக்கூடிய நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது அந்த திட்டமானது பிரிவு படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மலைப்பகுதிகள் என்ற காரணத்தால் அங்கு இருக்கக்கூடிய கிராமங்களில் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பு காரணமாக முதன் முதலில் கொடைக்கானல் வட்டம், வெள்ளக்கவி மலை கிராமத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து தற்பொழுது வெள்ளக்கவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு தேடி சென்று பொருட்களை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு 7 கிலோமீட்டர் தூரம் வரை மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்றும் மக்கள் வட்டக்காணல் பகுதிக்கு வந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொண்டு அதன் பின் தலையில் அந்த சுமையை சுமந்து கொண்டு மலை பாதையில் பயணிக்க வேண்டி உள்ளதால் 7 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக குதிரைகள் மூலமாக ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு வசிக்கக்கூடிய மலை கிராம மக்களுக்கு இல்லம் தேடி ரேஷன் என்ற வகையில் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கக்கூடிய 30 குடும்ப அட்டைதாரர்கள் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பதால் ஒரே நாடு ஒரே கார்டு என்று திட்டத்தின் கீழ் அவர்கள் இருக்கக்கூடிய ஊர்களில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

0

கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க தவறிய மாணவர்கள் புதுப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பதாவது :-

 

தமிழகத்தில் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முறை செய்யாமல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இந்த கோடை விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதனை முடித்து விடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் முடிக்காத மாணவர்கள் அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்கள் அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு நேரில் சென்று அங்கு நடைபெறக்கூடிய சிறப்பு முகாம் கல்லில் ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

மேலும் பள்ளியில் நடைபெறக்கூடிய சேர்க்கையின் பொழுது மாணவர்களிடம் ஆதார் பயோமெட்ரிக் கால பணிகள் நிறைவு செய்து வரும்படி கூற வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் வங்கி கணக்குகள் தொடங்குதல் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற முக்கிய பணிகள் எளிமையான முறையில் மற்றும் வேகமாக நடைபெற உதவிகரமாக இருக்கும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!

0

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று ஏப்ரல் 26 அன்று காலநிலை சுற்றுச்சூழல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற்றது.

 

இந்த மானிய கோரிக்கையின் பொழுது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

 

ஏப்ரல் 1 ஆம் தேதி 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத்தின் விவரங்கள் :-

 

✓ முன்னாள் எம்எல்ஏ காலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் தற்பொழுது 30000 இருந்து 5000 ரூபாய் உயர்ந்து 35000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ இறந்த முன்னாள் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 15,000 குடும்ப ஊதியம் ஆனது தற்பொழுது 2000 ரூபாய் உயர்த்தப்பட்ட 17,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ அதேபோன்று , முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களின் ஆண்டு மருத்துவ உதவி தொகை 75,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மேற்கொண்ட தியாகங்களுக்காகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர்களின் பங்களிப்புக்காகவும் இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் நடைபெற்ற மாநில கோரிக்கையின் பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

அங்கன்வாடி நிலையத்தின் நேரம் மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் நேரம் மற்றும் தற்காலிக தொகுப்பு புதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் போன்றவற்றிற்கான சில முக்கிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

 

202203-ஆம் கல்வியாண்டில் இருந்து அரசினுடைய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் செயல்பட்டு வரக்கூடிய 2381 அங்கன்வாடி மையங்களில் LKG & UKG போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது . மேலும் இந்த வகுப்புகளை நடத்தக்கூடிய தற்காலிக மழலையர் பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கான ஊதியம் குறித்து பல கோரிக்கைகளை வைத்திருந்த நிலையில் அவற்றிற்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கன்வாடி நிலையங்களில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரை அங்கன்வாடி மையங்கள் செயல்படுமென கூறப்பட்டுள்ளது. மழலையர் வகுப்புகளை எடுக்கக்கூடிய தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மழலே பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மேலாண்மை தகவல் முறைமை தளத்தில் பதிவுகளை மேற்கொண்டு அவர்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இதுவரை EMIS என் பெறாத ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் மூலமாக பயன்பாட்டில் இருக்கக்கூடிய லாகினில் ஆசிரியர் உடைய விவரம் முழுவதையும் உள்ளீடு செய்து EMIS எங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பெற்ற எண் விவரத்தினை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.