Home Blog Page 231

பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்!.. வைரல் புகைப்படம்!. குவியும் வாழ்த்துக்கள்!…

0

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது அஜித்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ajith

இதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றார் அஜித். இன்று மாலை ஜனாதிபதி கையில் விருதையும் அஜித் வாங்கினார். அவர் விருது வாங்கியபோது அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் என எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். இந்நிலையில், அஜித் விருது வாங்கிய வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

 

பாலு மகேந்திராவின் மனைவி வாழ்வில் பங்கு போட்டது தவறுதான்.. ஆனா!! உண்மையை உடைத்த நடிகை!!

0

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒளிப்பதிவாளர் ஆக படிப்பு அதன் பின் தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றால் அது பாலு மகேந்திரா தான் என்று பேசக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளர் ஆக மட்டுமல்லாது சிறந்த இயக்குனராகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர்.

 

சினிமாத்துறை உலகில் எந்த அளவிற்கு இவருக்கு பெயரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு இவர் மீதான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருந்தன. காரணம், முதலில் இவர் அகிலா என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் பட்சத்தில் நடிகை சோபாவை இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் அத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நடிகை மௌனிகாவுடன் லிவிங் டுகெதரில் இருந்தது இவர் மீது பேசப்பட்ட சர்ச்சைகளை அதிகரிக்க தொடங்கின. எது எப்படி இருந்தாலும் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் இன்றளவும் இவர் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை மௌனிகா பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலு மகேந்திரா பற்றி பேசியிருப்பதாவது :-

 

இன்னொரு பெண்ணினுடைய வாழ்க்கையை பங்கு போட்டு வாழ்ந்தது தவறான செயல்தான் என்றும் ஆனால் அந்த தவறான செயலை தான் சரியாகவே வாழ்ந்ததாகவும் நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய வாழ்வில் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல மதிப்பு மரியாதைகளை கொடுத்துக் கொண்டதாகவும் , தனக்கு மரியாதை கொடுப்பதில் அவர் எந்த அளவு குறை வைத்ததில்லை என்றும் அதேபோன்றுதான் மௌனிகாவும் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் பாலு மகேந்திரா அவர்களின் மகனுக்கும் தனக்கும் 5 முதல் 6 வயது வரை மட்டுமே வித்தியாசம் என்றும் தன் மகனுடைய பேண்ட் சர்ட் போன்றவற்றை தனக்கு போட்டு போட்டோ சூட் எடுத்ததாகவும், அவருடைய சைக்கிளில் அமர வைத்து என்னை நிறைய போட்டோக்கள் பாலுமஹிந்திரா அவர்கள் எடுத்தார் என்றும் மௌனிகா தெரிவித்திருக்கிறார்.

அவமானம் என்பதற்கு என் பெயர் உதாரணமாக இருக்கிறது.. மனம் உடைந்து பேசிய வடிவேலு!!

0

சினிமாவில் நடிகர் வடிவேலு அவர்களின் காமெடி என்பது இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டதாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மீம்ஸ் என்றாலே வடிவேலு இல்லாமல் இல்லை என்பது போல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே அவர் இருக்கிறார் என்று கூட சொல்லலாம். அவர் சினிமாவை விட்டு விலகியது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தது அரசியலில் தேவை இன்றி வார்த்தைகளை விட்டது அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் என அனைத்தும் நாம் அறிந்தவையே. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு அவர்கள் வடிவேலு என்ற பெயர் அவமானமாக பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த நடிகர் வடிவேலு பேசி இருப்பதாவது :-

 

சமீபத்தில் தான் ஊருக்கு சென்று இருந்ததாகவும் ஊருக்கு சென்ற பொழுது அங்கு ஒரு அம்மா தன்னிடம் வந்து ஒரு நிகழ்வு ஒன்றினை பகிர்ந்ததாகவும் வடிவேலு அந்த நிகழ்வினை விவரித்து இருக்கிறார். அதாவது ஒருவர் சிறையிலிருந்து விடுபட்டு வெளியே வந்த மற்றொருவரிடம் பணம் கேட்டதாகவும் அவர் பணம் தர மறுக்கவே மாலை 5 மணிக்கு உன்னை கொலை செய்து விடுவேன் அதற்குள் பணத்தை கொடு என மிரட்டி இருக்கிறார். இது போன்ற ஒரு சமயத்தில் பணத்தை தர மறுத்தவருடைய தாயார் வரவும் அவரிடம் நடந்த அனைத்தையும் அந்த மற்றொருவர் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது பணம் தர மறுத்தவரின் தாயார் அவன் கிடக்கிறான் வடிவேலு, நீ வா வீட்டிற்கு செல்லலாம் என தன் மகனை அழைத்துள்ளார். உடனே யாரைப் பார்த்து வடிவேலு என சொன்னாய் என பொங்கி எழுந்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபர் கத்தி கூச்சலிட்டதாக அந்த அம்மா அவர்கள் வடிவேலுவிடம் தெரிவித்துள்ளார்.

 

இதைக் கேட்ட நடிகர் வடிவேலு அவர்கள் தன்னுடைய பெயர் இன்று பலரால் அவமானமாக பார்க்கப்படுவதாகவும் வடிவேலு என்று கூப்பிட்டாலே அதை மிகப்பெரிய அவமானமாக இளைஞர்கள் பார்ப்பதாகவும் தெரிவித்து மனம் வருந்தியுள்ளார்.

நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! எங்கு எப்போது பதிவிறக்கம்.. முழு விவரம் இதோ!!

0

12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேசிய மருத்துவ முகமை நடத்தக்கூடிய நீட் தேர்வானது வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எங்கு எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, மே 1 ஆம் தேதி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதிலும் குறிப்பாக ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற அரசனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்த்த பின் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உங்களுடைய பெயர் , பதிவு எண் பிறந்த தேதி போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளும்படி நீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

2025 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வானது மே 4 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படக்கூடிய நீட் தேர்வானது இந்த ஆண்டு ஒரே ஷிப்ட் இல் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

0

நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா துறைக்கு வந்தவர். எனினும் இவர் நடித்த சில படங்கள் குறிப்பாக தவமாய் தவமிருந்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொக்கிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா துறையில் திருமணத்திற்கு பின் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை பத்மப்பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது :-

 

தன்னுடைய சினிமா கேரியரில் நல்ல படங்களில் நடித்த இருப்பதாகவும் ஆனால் தான் மிகப்பெரிய ஆனால் தான் மிகப்பெரிய ஆனால் தான் ஒரு நல்ல டான்ஸர் என்றும் அதை நிரூபிப்பதற்கான கதைக்களம் தனக்கு இப்பொழுது வரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பழசி ராஜா திரைப்படத்தில் களரி பாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இது போன்ற கதைகளை வைத்திருக்கக் கூடியவர்களுடன் பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.

 

சினிமா துறையை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும் அந்த சினிமா துறையில் தற்பொழுது மிகவும் தாழ்வான நிலையில் தான் நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் எடுக்கப்படக்கூடிய படங்களில் கூட ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்றும் நான் விரும்புவது போல கதைக்களன்களை வைத்திருப்பவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் கதை படித்திருக்கும் பட்சத்தில் படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஊடகப் பத்திரிகையாளர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள் என்றும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தை இருக்கிறது ஆனாலும் படம் நடிக்க வந்திருக்கிறேன் என்பது போல எப்படி வேண்டுமானாலும் அவர்கள் எழுதலாம் ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இனி செந்தில் பாலாஜி எப்போதும் அமைச்சராக கூடாது.. ED போட்ட கண்டிஷன்!! நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

0

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் நீதிமன்றம் ஜாமீனா பதவியா என்ற கெடுபிடியை விதித்திருந்தது. மேற்கொண்டு உரிய பதிலை 28 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமெனவும் கோரியது. இவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் நீதிமன்றம் இந்த நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு அமர்வுக்கு வருவதற்கு முன்பாகவே பதவியையும் விலகிக் கொண்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ED) முக்கியமான சில வாதங்களை முன்வைத்துள்ளது. அதில், “திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கக் கூடாது என கூறியுள்ளது. ஏனெனில் அவரை பதவியில் அமர்த்துவது விசாரணை செயல்முறைகளை பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

அத்தோடு , அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, பலமுறை வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கோரி உள்ளார் என்றும், தொடர்ந்து தனது வழக்குரைஞர்களை மாற்றி, விசாரணையை முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு உரிய பதிலக்குமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, விசாரணை செய்யப்படவேண்டிய சாட்சிகள் எத்தனை பேர், மற்றும் வழக்கின் தற்போதைய நிலை என்பது குறித்து விவரித்து கூறுமாறு கேட்டுள்ளது. அதேபோல செந்தில் பாலாஜி தரப்பும் , எப்படி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றால் அமைச்சராக கூடாது என அமலாக்கத்துறை சொல்லலாம் என்று கேட்டுள்ளது.

இதற்கு உயர்நீதிமன்றம், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அமைச்சராக முடியாது. மேற்கொண்டு வேறேதும் இதற்கென புதிய நிபந்தனைகள் தேவையில்லை எனக் கூறியுள்ளனர்.

ராணுவத்தில் இருந்து வெளியேறும் வீரர்கள்!. அதிர்ச்சியில் பாகிஸ்தான் அரசு…

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை 1200 பேர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் வீரார்கள் பணியிலிருந்து வெளியேறுவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியேறுவதற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பட்டு மற்றும் வேறு சில பிரச்சனைகளும் காரணம் என சொல்லப்படுகிறது.

OTT தளங்களில் பாலியல் படங்களுக்கு தடை கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

0

OTT மற்றும் சமூக ஊடக தளங்களில் “பாலியல் ரீதியாக வெளிப்படையான படங்களை” ஸ்ட்ரீமிங் செய்வதைத் தடைசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவில், உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மத்திய அரசு மற்றும் பிறரிடமிருந்து பதிலைக் கோரியது.PTI அறிக்கையின்படி, நீதிபதிகள் BR கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு ஒரு முக்கியமான கவலையை எழுப்புகிறது என்றும், இந்தப் பிரச்சனை நிர்வாகக் குழு அல்லது சட்டமன்றத்தின் எல்லைக்குள் உள்ளது என்றும் கூறியது.

இப்போதுள்ள நிலையில், நாங்கள் சட்டமன்றம் மற்றும் நிர்வாக அதிகாரத்தை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன,” என்று நீதிபதி கவாய் கூறினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனை குறித்து அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

“நீங்கள் அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும்,” என்று பெஞ்ச் கூறியது.இது தொடர்பாக சில விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதாகவும், இன்னும் சில விதிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மேத்தா கூறினார்.

OTT மற்றும் சமூக ஊடக தளங்களில் வெளிப்படையான பாலியல் படங்களின் ஒளிபரப்பை தடைசெய்ய தேசிய உள்ளடக்கக் கட்டுப்பாட்டு ஆணையத்தை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கோரிய ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

சமூக ஊடக தளங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஆபாசப் படங்களை பரப்பும் பக்கங்கள் அல்லது சுயவிவரங்கள் இருப்பதாகவும், பல்வேறு OTT தளங்கள் குழந்தை ஆபாசத்தின் சாத்தியமான கூறுகளைக் கொண்ட படங்களை ஸ்ட்ரீமிங் செய்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“இதுபோன்ற பாலியல் ரீதியாக மாறுபட்ட படங்கள் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மனதை கெடுக்கின்றன, இது வக்கிரமான மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் போக்குகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் குற்ற விகிதம் அதிகரிக்கிறது” என்று பிடிஐ மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், “ஆபாசப் படங்களின் கட்டுப்பாடற்ற பரவல் சமூக மதிப்புகள், மன ஆரோக்கியம் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டது. பொது ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும், டிஜிட்டல் இடம் மாறுபட்ட நடத்தைக்கான இனப்பெருக்கக் களமாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு தனது அரசியலமைப்பு கடமையை நிலைநிறுத்துவது காலத்தின் தேவை” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது

இளையராஜாவுக்கு தேவை இதுதான்!.. விஜய் ஆண்டனி போட்டு உடைச்சிட்டாரே!…

0

இளையராஜாவின் பழைய பாடல்களை இப்போதும் திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதேபோல், குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என கூறினார்கள்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி ‘பாடலை பயன்படுத்தும் முன்பு தன்னுடைய அனுமதியை வாங்க வேண்டும் என இளையராஜா சார் நினைக்கிறார். ஒரு பாட்டை உருவாக்குவது என்பது பெத்தவங்க மாதிரிதானே. அதனால் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்றுதான் அவர் நினைக்கிறார். அவர் பணத்தாசை பிடித்தவர் எல்லாம் இல்லை. சம்பளமே வாங்காமல் பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். ராஜ்கிரண், ராமராஜன் போன்றவர்களை உருவாக்கியிருக்கிறார்’ என பேசியிருக்கிறார்.

பத்மபூஷன் விருது பெறும் 5வது ஹீரோ அஜித்!.. மீதி 4 பேர் யாருன்னு தெரியுமா?!…

0

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது அஜித்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றிருக்கிறார் அஜித். இன்று மாலை ஜனாதிபதி கையில் விருது வாங்கவிருக்கிறார்.

அஜித்துக்கு முன்பு சிவாஜி, கமல், ரஜினிகந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருதும், 2016-ல் ரஜினிகாந்துக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.