Home Blog Page 238

ஜூலை 1 முதல் குறிப்பிட்ட கார் வகைகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தடை செய்ய முடிவு!! மத்திய அரசு அதிரடி!!

0

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்டு வரும் அதிக அளவு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 வருட டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்கள் ANPR மூலமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குவது முழுவதுமாக தடை செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் எரிவாயு நிலையங்களில் ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் பழைய கார்களை கண்டறிவதன் மூலம் அந்த கார்களுக்கு எரிவாயு வழங்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத், கௌதம் புத்த நகர், சோனிபத் ஆகிய இடங்களில் இந்த விதி நவம்பர் 1 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வரும் என்றும் அதற்கான முன்னேற்பாடாக அக்டோபர் மாதத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லி NCR மற்றும் மீதமுள்ள மாவட்டங்களில் மார்ச் 31 2026 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஏப்ரல் 1 2026 முதல் டெல்லியில் இருக்கக்கூடிய அனைத்து பழைய வகை வாகனங்களுக்கும் குறிப்பாக கார்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயு தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இதுவரை 27.5 லட்சம் தடை செய்யப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும் உத்திரபிரதேசத்தில் 61 லட்சம் மற்றும் ஹரியானாவில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

காற்று மாசுபாட்டை அதிகரிக்க கூடிய வாகனங்களை கண்டறிந்து அவை முழுவதுமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தடை செய்யப்படும் என்றும் இதற்காக போக்குவரத்து சாலைகளில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களும் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

0

தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளும் எவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் எம்பிபிஎஸ் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம் வருகிற மே 4 ஆம் தேதி நீட் தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் எவ்வளவு கட் ஆப் எடுத்தால் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

 

எவ்வளவு கட் ஆஃப் எடுத்தால் எம்பிபிஎஸ் சீட் பெற முடியும் என்பது குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற youtube சேனலில் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலின்படி, 2023 ஆம் ஆண்டு முதல் கட் ஆப் ஆனது ஒவ்வொரு வருடத்திற்கும் அதிக அளவில் உயர்ந்து வருவதாகவும் 2024 ஆம் ஆண்டில் கணிசமாக கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது இது மாணவர்களின் உடைய தீவிர பயிற்சி மற்றும் அவர்களுக்கிடையே நடைபெறும் கட் ஆப் மதிப்பெண்களானது உயர்ந்து வருகிறது.

 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2024 ஆம் ஆண்டுக்கான கட் ஆப் விவரங்கள் :-

 

✓ பொதுப் பிரிவு – 651

 

✓ பி.சி – 620

 

✓ பி.சி.எம் – 612

 

✓ எம்.பி.சி – 603

 

✓ எஸ்.சி – 536

 

✓ எஸ்.சி.ஏ – 463

 

✓ எஸ்.டி – 488

 

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2024 ஆம் ஆண்டுக்கான கட் ஆப் விவரங்கள் :-

 

✓ பொதுப் பிரிவு – 607

 

✓ பி.சி – 584

 

✓ பி.சி.எம் – 579

 

✓ எம்.பி.சி – 574

 

✓ எஸ்.சி – 494

 

✓ எஸ்.சி.ஏ – 427

 

✓ எஸ்.டி – 413

 

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் உடைய செயல் திறன் மற்றும் மாணவர்களுக்கிடையே இருக்கக்கூடிய போட்டிகளின் காரணமாக கட் ஆப் மதிப்பெண்கள் உயர்ந்து வருகிறது. எனவே வருகிற மே மாதம் 4 ஆம் தேதி அன்று நடைபெறக்கூடிய நீட் தேர்வு மாணவர்கள் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்களை விட கூடுதலாக எடுக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயிக்கும் பட்சத்தில் கட்டாயமாக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே மாணவர்கள் தங்களுடைய இலக்கை முடிவு செய்துவிட்டு அதன் பெண் அதை நோக்கி செல்வது சிறந்ததாக இருக்கும்.

RBI எடுத்த அதிரடி முடிவு!! 2 வங்கிகளின் உரிமம் ரத்து!!

0

இந்தியன் ரிசர்வ் வங்கியானது குறிப்பிட்ட வங்கிகள் தங்களுடைய விதிமுறைகளை பின்பற்றாமல் மீறியதற்காக அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்றவற்றை செய்திருக்கிறது. 

 

அதன்படி, இந்தியன் வங்கி மற்றும் மகேந்திரா & மகேந்திரா நிதி சேவைகள் நிறுவனங்களுக்கு எதிராக இந்தியன் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆர்பிஐ இன் ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு 1.61 கோடி ரூபாய் அபராதம் ஆக விதிக்கப்பட்டுள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிதி நிறுவனத்திற்கு ஆர்பிஐ வங்கி ஆனது 71.30 லட்சம் அபராதம் விதித்திருப்பதையும் உறுதி செய்துள்ளது.

 

இந்த இரண்டு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜலந்தரை தளமாக கொண்டிருக்கக்கூடிய இம்பீரியல் அர்பன் கூட்டுறவு வங்கியின் உடைய உரிமத்தை இந்தியன் ரிசர்வ் வங்கி முழுவதுமாக ரத்து செய்து உத்தரவு பெற்று இருக்கிறது காரணம் வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லை என்பதாலும் எதிர்பார்த்த அளவு வருவாய் கிடைக்காததாலும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாது ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் அரசின் உடைய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இடம் ஊடல் நடவடிக்கைகளை தொடங்கவும் வங்கியின் செயல்பாடுகளுக்கு ஒரு களைப்பாளரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?!.. பாஜக அரசை கிழித்து தொங்கவிட்ட சீமான்!…

0

சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த இந்தியர்களை குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டைல் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பல வருடங்களாக புகார் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.

பகல்காமில் அப்பாவி மக்களைத் தாக்கிய பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ, அதுபோலத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப்பயணிகளைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய உள்ளூர் காஷ்மீர் மக்களும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சுற்றுலா சென்ற இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான கொடுந்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது!

பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என்பது இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வியால் நிகழ்ந்த கொடுநிகழ்வாகும். பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்க, மறக்கடிக்க, சிந்து நதியைத் தடுப்பதென்பது, மக்களின் உணர்வுகளைத் தூண்டி திசைதிருப்பும் செயலன்றி வேறில்லை. பாஜக அரசிற்கு உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும். பயங்கரவாதச்செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும்.

அவற்றை விடுத்து 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? பாகிஸ்தான் நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையோ, வர்த்தகத் தடையோ அந்நாட்டு அரசையும், பெருமுதலாளிகளையுமே அதிகம் பாதிக்குமே தவிர, ஏழை மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், உயிர் ஆதாராமாக விளங்கும் நதிநீரை தடுப்பதென்பது, பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தத் தொடர்புமற்ற அப்பாவி ஏழை மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற கொடுஞ்செயலாகும்.

சிந்து நதியால் அதிகம் பயன்பெறுவது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாழும் சீக்கிய மக்களும்தான். அவர்கள் அனைவரும் எல்லை பிரிப்புவரை இந்த நாட்டின் குடிகளாக இருந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நதிநீர் என்பது வெறும் மனிததேவை மட்டுமன்று. அது மரங்கள், கால்நடைகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர் ஆதாரத்தேவையாகும்.

உயர்ந்த நோக்கங்களோ, உன்னத லட்சியங்களோ இல்லாது கண்மூடித்தனமாகச் அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், சிந்து நதியை முடக்கி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயலும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சனநாயக அரசு இத்தகைய இரக்கமற்றச்செயலில் ஈடுபடுவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.

பாகிஸ்தானுடன் வர்த்தக நிறுத்தம், எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், போர்ப்பதற்றம், பாகிஸ்தான் மக்கள் வெளியேற்றம், நதிநீர் தடுத்து நிறுத்தம் என இத்தனை அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாகிஸ்தான் இசுலாமியர் நாடு என்பதால் பகை நாடென பதறி துடிக்கும் இந்திய அரசுக்கு, இத்தனை படுகொலைகள் செய்த பிறகும் இலங்கை நட்பு நாடாக இருப்பதற்கு காரணம் கொன்றது சிங்களவர், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால்தானே?

எல்லையற்ற கருணையையும், எதிர்ப்பார்ப்பற்ற அன்பையும் தந்து பெற்ற பிள்ளைகளை வாழ்விக்கும் தாய்மையின் அடையாளமாக, சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டா வாங்குவதற்கு முன் இந்த விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்!! உடனடியாக கவனிக்க வேண்டியவை!!

0

ஒருவருக்கு சொந்த நிலம் இருக்கிறது என்றால் அந்த நிலம் தன்னுடையது தான் என நிரூபிக்க முக்கிய ஆவணமாக பட்டா பயன்படுகிறது. இந்த பட்டாவில் நிறத்தினுடைய உரிமையாளரின் பெயர் நிலத்தினுடைய அளவு நிலத்திற்கான பட்டா எண் என அனைத்து விவரங்களும் சரியானதாக அமைந்திருக்கும். இந்த பட்டா எண் பயன்படுத்தி நிலத்தினுடைய அனைத்து விவரங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். பட்டாக்களில் எத்தனை வகைகள் இருக்கிறது ? எந்தெந்த வகைக்கு என்னென்ன மாதிரியான அர்த்தங்கள் என தெரியுமா ?

 

பொதுவாக நிலத்தினுடைய உரிமையாளருக்கு வழங்கப்படக் கூடிய பட்டாவில் பல வகைகள் உள்ளன. அவை நிலங்கள் இருக்கக்கூடிய இடங்களை பொருத்தும் அந்த நிலத்தினுடைய தன்மையை பொருத்தும் மாறுபடுகிறது. பட்டாக்களின் உடைய வகைகளை கீழே காணலாம் :-

 

✓ TSLR பட்டா :-

 

இந்த பட்டாவானது நகர்புறங்களில் இருக்கக்கூடிய நிலங்களுக்கு ஏற்றவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பட்டா வகைகள் விவசாய நிலங்களுக்கான பட்டா வகைகளாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் TSLR பட்டா வகையானது நகர்ப்புறங்களில் இருக்கக்கூடியவர்களுக்கு துல்லியமான நில சர்வே மற்றும் எந்த வித பிரச்சனைகளும் இல்லாத வகையில் வழங்கப்படக் கூடிய பட்டாவாக பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பட்டா என்றால் அதில் 5 ஏக்கர் நிலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ கூட்டு பட்டா :-

 

அப்பாவுடைய சொத்து அல்லது தாதா உடைய சொத்து பிள்ளைகள் அல்லது பேரன்களுக்கு வரும் பொழுது ஒரு பட்டாவில் பலருடைய பெயர் இடம் பெற்றிருக்கும். அதில் யார் யாருக்கு எவ்வளவு நிலம் என்பது குறிப்பிடப்படாமல் பொதுவாக அந்த நிலத்திற்கான உரிமையாளர்கள் இவர்கள்தான் என பலருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அது கூட்டுப்பட்டாவாக கருதப்படுகிறது.

 

✓ தனிப் பட்டா :-

 

கூட்டு பட்டாவில் இருந்து உட்பிரிவு எண் பெற்று அதன் பின் நிலத்தில் தனக்கு இவ்வளவு உரிமை இருக்கிறது என அதனை அளந்து கூட்டு பட்டாவில் இருந்து பிரித்து நிலத்தின் உரிமையாளரான இவருக்கு உட்பிரிவு எண் வழங்கப்படுவதோடு அந்த நிலத்தில் இவருக்கு இவ்வளவு உரிமை இருக்கிறது என நிலத்தை அளந்து தனியாக வழங்கப் படக் கூடியது தனிப் பட்டா.

 

✓ நிபந்தனை பட்டா :-

 

அரசு தனியார் அல்லது சமூக ரீதியான குழுக்களுக்கு வழங்கக்கூடிய இலவச பட்டாக்கள் குறிப்பிட்ட கால வரையறை வைத்து நிபந்தனையோடு கொடுக்கப்படும் பட்சத்தில் அந்த காலம் முடிவடையும் வரை பட்டாவிற்கு உரிய இடத்தை அல்லது வீட்டை யாராலும் விற்க முடியாது இதற்கு பெயர்தான் நிபந்தனை பட்டா.

 

✓ TKT பட்டா :-

 

மலைவாழ் கிராமவாசிகளுக்காக அரசால் வழங்கப்படக்கூடிய டி கே டி பட்டா வகைகள், வேறு யாருக்காவது விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அந்த இடத்தை விவசாயத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்த முடியாது. குறிப்பாக ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களில் இது போன்ற பட்டாக்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு இருப்பதால் அங்கு நிலம் வாங்குபவர்கள் இதனை கவனித்து அதன் பின் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டி கே டி பட்டா கொண்ட நிலத்தை வணிகம் மற்றும் வர்த்தகத்திற்காக பயன்படுத்தும் பட்சத்தில் அதனை அரசுடைமை ஆக மாற்றி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

0

பலருக்கு வங்கி கணக்குகளை ஏன் திறந்தோம் என்பது போல தோன்றக்கூடிய சூழ்நிலை ஆனது உருவாக்கி வருகிறது. காரணம் மினிமம் பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதன் மூலம் அந்த அக்கவுண்டுகளில் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன்ஸ் செய்யப்பட்டாலும் மெசேஜ்க்கான பணம், ஏடிஎம் சேவைகளுக்கான பணம், பேலன்ஸ் என்கொயரிக்கான பணம் என பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்பின் மினிமம் பேலன்ஸ் குறைவதால் அதற்கு ஒருமுறை பணம் பிடித்தம் என அக்கவுண்ட் முழுவதுமாக காலியாவதோடு மட்டுமல்லாது அக்கவுண்ட் மைனஸில் செல்வதும் வழக்கமாக நடைபெறுகிறது. 

 

இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க கீழே குறிப்பிடும் வழிமுறைகளை பின்பற்றினால் போதும். இந்த வழிமுறைகள் குறிப்பாக கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ மாணவியர் மற்றும் குறைவான வங்கி தேவைகளை விரும்பக் கூடியவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இப்பொழுது வீட்டில் இருந்தபடியே 5 நிமிடத்தில் நம்மால் வங்கி கணக்கு திறக்க முடிகிறது அப்படி திறக்கப்படக்கூடிய வங்கி கணக்கானது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆக இருத்தல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த அக்கவுண்ட் பலருக்கும் மிக அத்தியாவசிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

ஏனெனில், ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டில் நாம் எந்த விதமான மெயின்டனன்ஸ் தொகையையும் செலுத்த வேண்டியது இருக்காது. எப்பொழுதாவது ஒருமுறை வங்கி கணக்கை பயன்படுத்தக் கூடியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். சேமிப்பு கணக்காக இருக்கக்கூடிய ஜீரோ பேலன்ஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய தேவை இல்லை என்பதால் இது மாதம் சம்பளம் வாங்கக்கூடிய அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திறக்க நினைப்பவர்கள் அதற்கான வங்கியை தேர்வு செய்த பின் அந்த வங்கிக்கான கணக்கை வீட்டில் இருந்தபடியே நம்மால் ஐந்து நிமிடங்களில் திறந்து கொள்ள முடியும். இன்னும் சில வங்கிகள் நேரடியாக வீட்டிற்கு ஊழியர்களை அனுப்பி நமக்கு தேவையான ஸிரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதற்கு உதவி செய்கின்றன.

சச்சினை தொடர்ந்து அந்த 2 படங்கள் ரீ-ரிலீஸ்!. ஒரு முடிவோடதான் இருக்காங்க!…

0

இப்போது ரீ-ரிலீஸ் காலம் ஆகிவிட்டது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை இப்போது மீண்டும் வெளியிடுகிறார்கள். ரஜினின் பாபா படம் அப்படி வெளியானது. விஜியின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வசூல் செய்தது. அதன்பின் பல தயாரிப்பாளர்களும் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ஆர்வம் வந்துவிட்டது.

அஜித்தின் சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு போகப்போகிறேன் என அறிவித்துவிட்டதால் அவரின் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

சமீபத்தில் கூட கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்து 2005ம் வருடம் வெளியான சச்சின் படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். கில்லியை போல இப்படம் வசூலை அள்ளவில்லை. ஆனாலும் சச்சின் ரீ-ரிலீஸ் வெற்றி என அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான வெற்றி விழாவில் பேசிய கலைப்புலி தாணு ‘விஜயின் சச்சின் படத்தை தொடர்ந்து அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவின் காக்க காக்க போன்ற படங்களை ரீ-ரிலீஸ் செய்யவிருக்கிறேன். அதேபோல், 2026ல் விஜயின் தெறி மற்றும் ரஜினியின் கபாலி படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.

நிறைய நடிகர்களின் படங்கள் இருந்தாலும், விஜய், அஜித் மற்றும் ரஜினியின் படங்களை மட்டுமே ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கமல், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்கள் இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகல்ஹாம் தாக்குதல்!.. விசாரணைக்கு நாங்கள் தயார்!. இறங்கி வந்த பாகிஸ்தான்!…

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நடுநிலையான விசாரணைக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பழிபோடும் விளையாட்டிற்கான மற்றொரு உதாரணமாகி விட்டது. இது முடிவுக்கு வர வேண்டும். ஒரு பொறுப்பான நாடாக இவ்விவகாரம் தொடர்பாக நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு நாங்கள் தயார் என அவர் சொல்லியிருக்கிறார்.

1000 கோடி போட்டாலும் இப்படி படம் பண்ண முடியாது!.. மெய்யழகனை பாராட்டிய நானி…

0

96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் வரும் காதலை இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தார். இந்த படம் பலருக்கும் தங்களின் பழைய காதலை நினைவு படுத்தியது.

அதன்பின் பிரேம் இயக்கிய திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் பேசியது. சின்ன வயதிலேயே சொந்த ஊரை விட்டு சென்னை வந்து செட்டில் ஆன குடும்பத்தில் இருந்து அரவிந்த்சாமி ஒரு திருமணத்திற்காக மீண்டும் சொந்த ஊருக்கு போகிறார்.

அப்போது அவருக்கு ஏற்படும் உணர்வுகள், அவரிடம் பழகும் உறவுகள், அதனால் அவருக்கு ஏற்படும் மாற்றங்கள் என மனித உணர்வுகளை மிகவும் ஆழமாக காட்டியிருந்தனர். தஞ்சாவூரில் வசிக்கும் மக்களின் அன்பு, அவர்கள் உறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றை இதில் பிரேம் பதிவு செய்திருந்தார்.

சின்ன வயதில் பழகிய நபரை யார் என தெரியாமலேயும், ‘நீங்கள் யார்?’ என அவரிடம் கேட்க முடியாமலும் அவருடனே ஒரு நாள் கழித்துவிட்டு அவரின் அன்பை தாங்க முடியாமல் அவரிடம் சொல்லாமலேயே அங்கிருந்து ஓடி வரும் அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கு நடிகர் நானி பாராட்டியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘தமிழில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் மெய்யழகன். 1000 கோடி போட்டாலும் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது. மெய்யழகன் படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், அதை பிரேம் செய்து காட்டியிருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு கார்த்திக்கு போன் செய்து பாராட்டினேன்’ என பேசியிருக்கிறார்.

வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை!.. மசோதாவை தாக்கல் செய்த உதயநிதி…

0

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தொடர்பான பல விஷயங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சில மக்கள் சரியாக அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அப்போது அந்த கடனை வசூல் செய்வதற்காக வரும் நபர்கள் மிகவும் அநாகரீகமாக பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் பல வருடங்களாக இருக்கிறது.

இந்நிலையில்தான், தனி நபர்கள், சுய உதவிகுழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருக்கிறார். அதில் உள்ள அம்சங்கள் கீழ் வருமாறு:

கடன் வாங்குவோருக்கும், கடன் வழங்கியவருக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.

கடன் வழங்கிய நிறுவனம் கடன் வாங்கியவரையோ அல்லது அவரின் குடும்பத்தினரையோ வலுக்கட்டாயமான நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது. அதேபோல், அவர்களை மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களின் சொத்துக்களை பறிக்கவோ கூடாது. அப்படி செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபாராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வலுக்கட்டாய கடனை வசூலுக்கும் காரணத்தில் கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்பத்தில் யாரேனும் தற்கொலை செய்தால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளியே வரமுடியாது. கடன் வழங்கும் நிறுவனங்கள் அதை வசூலிக்க முறையான வழிகளை பின்பற்ற வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய, நலிவடைந்த மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்த மசோதாவை தாக்கல் செய்யும் போது உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.