Home Blog Page 237

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைக்கலாமா? டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!!

0

நாம் தினசரி சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.தற்பொழுது எண்ணெய் உணவுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.உணவுகளை வறுக்க,பொரிக்க என்று அனைத்திலும் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

இதில் பூரி,பஜ்ஜி,போண்டா போன்ற எண்ணையில் பொரிதெடுக்க கூடிய உணவுகளை சமைத்த பிறகு மீதமாகும் எண்ணையை திரும்ப பயன்படுத்துவதை பலரும் வழக்கத்தில் ஒன்றாக வைத்திருக்கின்றனர்.ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா என்பது ஆரோக்கியமான செயலா என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

சமைத்த எண்ணையை மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைத்து உட்கொண்டால் வயிறு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

எண்ணையை மீண்டும் சூடுபடுத்தினால் அதில் இருக்கின்ற கொழுப்பு டிரான்ஸ் கொழுப்பாக மாறிவிடும்.இந்த கொழுப்பு நிறைந்த எண்ணைய் உணவை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி சமைக்கும் பொழுது உடலுக்கு தீங்காக மாறிவிடும்.அசைவ உணவுகள் பொரித்த எண்ணையை மீண்டும் பயன்படுத்தினால் அது குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.

ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்தினால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.சமைத்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் நீரிழிவு நோய் அபாயம் உருவாகும்.உணவு சமைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் யூஸ் செய்தால் இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல்,உடல் பருமன்,மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்துவது நல்லது அல்ல என்றாலும் அதை ஒருமுறை மட்டும் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊறுகாய் சாப்பிட்டால் கிட்னி ஆரோக்கியம் பாதிக்குமா? உண்மை என்ன தெரியுமா?

0

சிறுநீரகம் நமது உடல் கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.உடலில் தேங்கும் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.

சிறுநீரகத்தில் அழுக்கு,உப்பு,யூரிக் அமிலம்,கற்கள் படியாமல் பார்த்துக் கொண்டாலே அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை காக்க செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்.

உடலுக்கு போதுமான நீரை பருக வேண்டும்.சிறுநீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரகத்தில் யூரிக் அமிலம் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.உப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சிறுநீர் வந்தால் அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்:

1)சோடா
2)அசைவ உணவுகள்
3)வெண்ணெய்
4)ஊறுகாய்
5)துரித உணவுகள்

இந்த ஐந்து உணவுகளை தவிர்த்தால் சிறுநீரக ஆரோக்கியம் அதிகரிக்கும்.இவற்றில் அதிக உப்பு நிறைந்திருக்கிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உப்பு அதிகமாக தேங்கிவிடும்.அதேபோல் யூரிக் அமில அளவு அதிகரித்துவிடும்.எனவே சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

கிட்னி ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்:

1)முட்டைகோஸ்
2)ப்ளூபெர்ரி
3)கருப்பு மிளகு
4)வெள்ளைப்பூண்டு பல்
5)முட்டையின் வெள்ளைக்கரு

இந்த ஐந்து உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.முட்டைகோஸில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் ப்ளூபெர்ரியில் கால்சியம்,பொட்டாசியம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

கருப்பு மிளகில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.வெள்ளிப்பூண்டு சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் முட்டையின் வெள்ளைக்கரு சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கோடையில் இரத்த சர்க்கரை லெவல் உயருமா? சுகர் குறைய இதை மட்டும் செய்யுங்கள்!!

0

ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.உணவு வழக்கத்தில் அதிக கவனமாக செலுத்த வேண்டியது முக்கியம்.

அதேபோல் கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.அதிக வெயிலால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உடல் சோர்வை உண்டாக்கிவிடும்.கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவு உயர அதிக வாய்ப்புள்ளது.

கோடையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வழிகள்:

1)அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.இதனால் உடலில் நீரிழப்பு அபாயம் குறையும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

2)மெலிந்த புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முழு தானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

3)தினந்தோறும் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.தவறாமல் இன்சலின் மருந்து மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4)பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெந்தய நீர் பருகலாம்.

5)முழு நெல்லிக்காய் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.

6)பாகற்காய் சாறு,கோவைக்காய் சாறு சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

7)உடற்பயிற்சி,நடைபயிற்சி போன்றவற்றை தினமும் செய்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்கும்.

8)இன்சுலின்,மருந்துகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.இதனால் குளிர்ந்த இடம் அல்லது உலர்ந்த இடத்தில் இதை வைத்து பராமரிக்கலாம்.

தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

0

இந்த உலகில் சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நம் நாட்டில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.கார்போ ஹைட்ரேட் உணவுகள்,சுத்திகரிக்கபட்ட சர்க்கரை உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது.

முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இன்று சர்க்கரை நோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள்.

குறிப்பாக எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.இதில் அசைவ உணவுகள்,துரித உணவுகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

சர்க்கரை உள்ளவர்கள் வேகவைத்த முட்டை,மீன்,கோழி இறைச்சி,புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.ஆனால் சிவப்பு இறைச்சி அதாவது மாட்டிறைச்ச,ஆட்டிறைச்சி போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

ஆனால் வறுத்த பொரித்த உணவுகளை உட்கொண்டால் கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.அதேபோல் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.

முட்டையின் மஞ்சள் கரு,நண்டு,சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.அசைவ உணவுகளை எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.எனவே அசைவ உணவுகளை குறைந்த எண்ணெயில் வறுத்து சாப்பிடுங்கள்.அதேபோல் கொழுப்பு நிறைந்து உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.பதப்படுத்தி வைக்கப்படும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

0

உங்களில் பெரும்பாலானவர்கள் காலையில் குளியல் போட்டுவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வீர்கள்.அலுவலகம் செல்பவர்கள்,பள்ள கல்லூரிக்கு செல்பவர்கள் என்று அனைவரும் காலை குளியலை கடைபிடிக்கின்றனர்.

காலையில் குளிப்பதால் உடலுக்கு ஒருவித புத்துணர்வு கிடைக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் உண்மை.உடலில் சேரும் அழுக்கு,வியர்வை,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்களை வெளியேற்ற குளிக்கிறோம்.நம் வழக்கத்தில் ஒன்றாக மாறிப்போன காலை குளியல் ஒரு தவறான பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காலையில் குளிப்பதை காட்டிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் குளித்தால் உடல் புத்துணர்வு அதிகமாகும்.காலையில் குளிப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்று ஆராய்ச்சி சொல்கிறது.இரவில் உறங்க செல்வதற்கு முன் குளித்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அகலும்.வெளியில் சென்று வந்த பின்னர் குளித்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகலும்.காலையில் எழுந்த பிறகு குளிப்பது நமது உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்றாலும் இரவு அல்லது மாலை நேரத்தில் குளித்தால் மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டும் புத்துணர்வுடன் இருக்கும்.

இரவில் குளித்தால் உடல் சூடு தணியும்.சருமத்தில் ஈரப்பதம் தக்கவைப்படும்.இரவில் குளிப்பதால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.பகலில் குளிப்பதை காட்டிலும் இரவு குளியல் அதிக பலன்களை நமக்கு தருகிறது.இரவில் குளிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

மேலும் குளிப்பதற்கு முன்னர் தலைக்கு சிறிது எண்ணெய் வைத்து மசாஜ் செய்த பிறகு குளித்தால் உடல்சூடு முழுமையாக குறைந்துவிடும்.இது தவிர தலை முடி சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.காலை குளியலை தவிர்க்க முடியவில்லை என்றாலும் மாலை அல்லது இரவு நேர குளியலையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

விஜய் இவ்வளவுதான் பேசுவாரா?!.. ஒரு பாட்டே 5 நிமிஷம் வருதே!.. முகவர் மாநாடு பரிதாபங்கள்!..

0

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு இன்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் இன்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே அவ்வளவு கூட்டம் இருந்தது. அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது.

அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம். மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசியிருக்கிறார்.

விஜய் நிறைய பேசுவார். குறிப்பாக ஆளும் கட்சியை விமர்சித்து நிறைய பேசுவார் என அங்கு கூடியிருந்த தவெக நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவரோ 4.30 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு ‘நன்றி வணக்கம்’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இதனால் அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து. இப்பலாம் சினிமே பாட்டே 5லிருந்து 6 நிமிஷம் வரை இருக்கு. இவர் இவ்வளவு கம்மியாவா பேசுவாரு!. என சமூகவலைத்தளங்களில் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

தவெக என்றாலே பயம் வந்துடுச்சி!. கோவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு!…

0

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திக்கிறது. விஜய் இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.

இன்று, தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு இன்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் இன்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே அவ்வளவு கூட்டம் இருந்தது. அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் அந்த கருத்தரங்களில் விஜய் பேசியதாவது:

கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம். மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசியிருக்கிறார்.

அவருக்கு முன்பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ‘தவெக என்றாலே இப்ப எல்லாருக்கும் பயம் வந்துடுச்சி. வாக்குச்சாவடி முகவர்னா சாதாரன ஆள் இல்லை. கட்சி வெற்றிக்கு நீங்கதான் பொறுப்பு. தினமும் காலையில் 2 மணி நேரங்கள் செலவு செய்து உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்று பேசுங்கள். அவர்களின் பிரச்சனை என்ன என கேளுங்கள். ஒரு வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதில் விவாதித்து அவர்களுக்கு உதவுங்கள். அரசு மருத்துவமனைகளில் எலிகள் ஓடிகொண்டிருக்கிறது. நம் கட்சியில் நிறைய கொத்தனார்கள் இருக்கிறீர்கள். அதையெல்லாம் போய் சரி செய்யுங்கள். இன்னும் 10 மாதங்கள் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 2026ல் நம் தலைவரே முதல்வராக வருவார். உங்கள் என்ன பிரச்சனை என்றாலும் கட்சி உங்கள் பக்கம் நிற்கும்’ என பேசியிருக்கிறார்.

உங்ககிட்ட தில் இருக்கு!. தைரியமா போய் கலக்குங்க!.. முகவர்கள் கருத்தரங்கில் விஜய் பேச்சு!..

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பதில்லை.

இன்று, தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு இன்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் இன்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே அவ்வளவு கூட்டம் இருந்தது. அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் அந்த கருத்தரங்களில் விஜய் பேசியதாவது:

கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். இதுக்கு முன் வந்தவர்கள் நிறைய பொய் பேசியிருப்பார்கள். நாம் மக்களின் நலனுக்காகவே ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறோம். பேர்தான் பயிற்சி பட்டறை. ஆனால், இது வேறலெவல் விழாவாக இருக்கிறது. மக்களை ஏமாற்றை ஆட்சிக்கு வர விடமாட்டோம்.

எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் திறமையை பற்றி எனக்கு தெரியும். உங்களிடம் என்ன இல்லை?.. மனதில் நேர்மை இருக்கு. லட்சியம் இருக்கும் உழைக்க தெம்பு இருக்கு. செயல்படும் திறமை இருக்கு. அர்ப்பணிக்கும் குணம் இருக்கு. களம் இருக்கு. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்’ என அவர் பேசியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியிட தடை!! மத்திய அரசு அறிவிப்பு!!

0

தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், தேசியப் பாதுகாப்பு நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

“தேசியப் பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும்போது மிகுந்த பொறுப்புடன் செயல்படவும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கூறினார்.

“குறிப்பாக: பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது இயக்கம் தொடர்பான “மூலங்கள் சார்ந்த” தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்நேர ஒளிபரப்பு, காட்சிகளைப் பரப்புதல் அல்லது அறிக்கையிடல் மேற்கொள்ளப்படக்கூடாது. முக்கியமான தகவல்களை முன்கூட்டியே வெளியிடுவது கவனக்குறைவாக விரோத சக்திகளுக்கு உதவக்கூடும் மற்றும் செயல்பாட்டு செயல்திறன் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்,” என்று அது மேலும் கூறியது.

கார்கில் போர் மற்றும் மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல கடந்த கால சம்பவங்களை அமைச்சகம் எடுத்துக்காட்டியது, அங்கு ‘கட்டுப்பாடற்ற செய்திகள் எதிர்பாராத பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது’ தேசிய நலன்களில்.

“கடந்த கால சம்பவங்கள் பொறுப்பான அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. கார்கில் போர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் (26/11), மற்றும் காந்தஹார் விமானக் கடத்தல் போன்ற நிகழ்வுகளின் போது, ​​கட்டுப்பாடற்ற செய்திகள் தேசிய நலன்களில் எதிர்பாராத பாதகமான விளைவுகளை ஏற்படுத்தின,” என்று அமைச்சகம் குறிப்பிட்டது.

https://x.com/MIB_India?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1916070991744139269%7Ctwgr%5Ed5789913eaa2f2dde0104d59528f68e2d60eac46%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fno-realtime-coverage-centre-issues-advisory-to-media-channels-over-covering-defense-operations-after-pahalgam-terror-attack

முன்னதாக, கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2021 இன் விதி 6(1)(p) ஐப் பின்பற்றுமாறு அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் அமைச்சகம் ஏற்கனவே ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. விதி 6(1)(p) கூறுகிறது, “பாதுகாப்புப் படையினரின் எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் நேரடி ஒளிபரப்பைக் கொண்ட எந்தவொரு நிகழ்ச்சியும் கேபிள் சேவையில் ஒளிபரப்பப்படக்கூடாது, அதில் ஊடக ஒளிபரப்பு பொருத்தமான அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியால் அவ்வப்போது விளக்கமளிக்கப்பட வேண்டும், அத்தகைய நடவடிக்கை முடிவடையும் வரை.”

“தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சட்டப்பூர்வ கடமைகளைத் தவிர, நமது கூட்டு நடவடிக்கைகள் தற்போதைய செயல்பாடுகளையோ அல்லது நமது படைகளின் பாதுகாப்பையோ சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது பகிரப்பட்ட தார்மீகப் பொறுப்பாகும்” என்று அது மேலும் கூறியது.

ஏப்ரல் 22 அன்று, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசரன் புல்வெளிகளில் ஐந்து முதல் ஆறு பயங்கரவாதிகள் கொண்ட குழு 28 பேரைக் கொன்றது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாகும். இறந்தவர்களில் 27 சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் குதிரைவண்டி வழிகாட்டியும் அடங்குவர்.

ரயில் பயணத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா!! பழ வகைகள் கூட இருக்கு!!

0

உலகில் மிகப்பெரிய 4 ஆவது ரயில்வே அமைப்பாக இந்தியன் ரயில்வே விளங்கி வருகிறது. பொதுவாக ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. ரயிலில் பயணம் செய்யக்கூடிய பலருக்கு ரயில்வே என்னுடைய விதிகள் முழுவதுமாக தெரிந்திருப்பதில்லை. அந்த விதிகள் குறித்தும் ரயில் பயணத்தின் பொழுது என்ன மாதிரியான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

 

ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்கள் எடுத்த செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் :-

 

✓ அடுப்புகள்

✓ எரிவாயு சிலிண்டர்கள்

✓ எரியக்கூடிய ரசாயனங்கள்

✓ பட்டாசுகள்

✓ கடுமையான வாசனை கொண்ட பொருட்கள்

✓ தோல் அல்லது ஈரமான தோல்

✓ எண்ணெய்

✓ சிகரெட்

✓ வெடிக்கும் பொருட்கள்

✓ உலர்ந்த தேங்காய்

 

விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை :-

 

✓ ரயில் பயணத்தின் பொழுது ரயிலில் பயணிக்க கூடிய பயணிகள் மது அருந்தி இருந்தால் அவர்களுடைய ரயில்வே டிக்கெட் ரத்து செய்யப்படுவதோடு அவர்களுக்கு 6 மாதகால சிறை தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டிருப்பது ரயில் பயணியின் தவறு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சாத்திய கூறாக அமையும்.

 

✓ அதேபோன்று ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி அழைத்து செல்லவில்லை என்றால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

✓ ஏசி கோச் முதல் வகுப்பில் இருக்கக்கூடியவர்களுக்கு சில சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.