Home Blog Page 243

ஆளுநர் நடத்திய மாநாடு!.. ஒட்டு மொத்தமாக புறக்கணித்த துணைவேந்தர்கள்!…

0

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல்.

பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டுமென தமிழக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு முன்னும் பின்னரும் கூட நிறைய மசோதக்கள் அனுப்பப்பட்டது. ஆனால், எதற்குமே அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக அரசு. அதைத்தொடர்ந்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசு கொண்டு வந்த எல்லா மசோதக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. எனவே, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான எல்லா விஷயங்களும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், ஊட்டியில் துணை வேந்தர் மாநாட்டை நடத்துவதாக ஆளுனர் அலுவகம் அறிவித்தது. அதன்படி இன்று உதகையில் மாநாடு துவங்கியுள்ளது. ஆனால், பல துணை வேந்தர்கள் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது ஆளுநர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!! OMR தாளில் புதிய மாற்றம்!!

0

குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆக்கி வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, OMR ஸ்டாலின் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் OMR தாளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆனால் தற்பொழுது அதை தாண்டி புதிய மாற்றம் ஒன்றை OMR தாளில் மேற்கொண்டு வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் தேர்வுகளை எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் OMR Answer Sheet – Sample என்ற தலைப்பில் புதிய ஓஎம்ஆர் படிவத்தினை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓஎம்ஆர் தாளில், தேர்வர்கள் தங்களுடைய 4 இலக்க வினாத்தாளினுடைய எண்ணை கருமை நிற பந்து முனை பேனாவை வைத்து வட்டங்களில் கருமை நிறத்தை தீட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஓஎம்ஆர் விடைத்தாளின் பக்கம் 1 இல் பகுதி 2 இல் இருக்கக்கூடிய உறுதிமொழியை தேர்வர்கள் படித்து அதன் கீழ் அவர்களுடைய கையெழுத்தை போட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரக்கூடிய அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய ஓஎம்ஆர் முறை தான் பின்பற்றப்படும் என்றும் குரூப்-1 தேர்விற்கு தயாராக இருக்கக்கூடிய தேர்வர்கள் ஜூன் 15ஆம் தேதி தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த புதிய ஓஎம்ஆர் தேர்வு தாள்களின் சாம்பிலை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

12,000 குடும்பங்களை வாழ வைத்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறோம்!! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார்.

இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :-

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறிய, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்கள் ஆக பணியமர்த்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பரிசீலனை செய்து வருவதாகவும் கூடிய விரைவில் இதற்கான நல்ல முடிவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த பதிலை நாங்கள் வரவேற்கிறோம் என செந்தில் குமார் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்பொழுது பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரக்கூடிய 12,500 சம்பளமானது குடும்ப செலவை பராமரிக்க சிரமமாக இருக்கிறது என்றும் உடனடியாக பதவி உயர்வு வழங்கி காலமுறை ஓதியமானது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர் பணியில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும் இந்த 12 ஆயிரம் குடும்பங்களையும் முதல்வர் மு க ஸ்டாலின் எடுக்கக்கூடிய நல்ல முடிவு வாழவைக்கும் என்று நம்புவதாகவும் அப்படி பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தும் பட்சத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா எடுப்போம் என்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கேங்கர்ஸ் படம் செம சரவெடி!.. பாராட்டி டிவிட் போட்ட சிம்பு..

0

தமிழ் சினிமாவில் காமெடி கலந்த காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. இவருடன் வடிவேலுவும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா!.. ஏற்கனவே தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இப்போது இருவரும் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படம் நேற்று வெளியானது.

பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் கேத்ரின் தெரஷா, மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.

ஒரு கிராமத்தில் இருக்கும் பள்ளியில் வடிவேலு பி.டி ஆசிரியராக இருக்க அங்கு சுந்தர்.சியும் பி.டி.ஆசிரியராக வருகிறார். அந்த பள்ளியில் படித்த ஒரு சிறுமி காணாமல் போக ஆசிரியை புகார் கொடுக்க அதுபற்றிய விசாரணையும் துவங்குகிறது. அங்கு ரவுடிசம் செய்து கொண்டிருக்கும் குரூப்பை பார்த்து சுந்தர்.சி பொங்க என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

வில்லனிடம் இருக்கும் 150 கோடி பணத்தை வடிவேலு உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க நினைக்கிறார் சுந்தர்.சி. இது தொடர்பாக நடக்கும் காமெடி கலாட்டாதான் கேங்கர்ஸ் படம். இந்நிலையில், இப்படம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சிம்பு ‘கேங்கர்ஸ் படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு சார் அவரின் மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்திவிட்டார். படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்’ என சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!!

0

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அஞ்சல் மகேஷ் அவர்கள் புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆசிரியர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :-

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 3,087 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டிருப்பது ஆகவும் இதற்கான வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தான் பணி நியமனத்திற்கு தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூடிய விரைவில் வழக்கு நிறைவடைந்து பணி நியமனம் வழங்கப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.

தற்பொழுது அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பகுதிநேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றுவதற்கான பரிசீலனையை தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதற்கான செய்தியும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக அரசின் நோக்கம் நீட் தேர்வை முழுவதுமாக நீக்குவது தான் என்றும் நீட் தேர்வை முழுவதுமாக நீக்கும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். மாணவர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்வதில் எந்த வித அரசியலும் திமுக அரசு செய்யவில்லை என்றும் இதுவரை 67 பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்களை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இனி கிடையாது!! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!

0

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆனது இனி வரக்கூடிய காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடாது என பிசிசிஐ அதிரடி முடிவை வெளியிட்டு இருக்கிறது. காஷ்மீரில் உள்ள பஹல் காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ ஐசிசிஐ க்கு எழுதிய கடிதம் :-

இனி வரக்கூடிய காலங்களில் ஐசிசி போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணி ஆனது பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து விளையாடாது என்றும் குழுவில் சேர்க்கும் பொழுது இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா தெரிவித்திருப்பதாவது :-

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசு என்ன சொன்னாலும் அதை நாங்கள் செய்வோம் என குறிப்பிட்டதோடு அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி வரக்கூடிய காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரவ போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றும் ஐசிசி போட்டிகள் வரும் பொழுது ஐசிசி வலியுறுத்தல் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம் ஐசிசிக்கும் இப்போது என்ன நடக்கிறது என்பது தெரியும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தான் சின்ன நாடு!.. இதே சீனாக்கிட்ட சண்டை போடுவீங்களா?!.. பொங்கும் சீமான்…

0

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது. ஏற்கனவே, சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் 95 சதவீத தண்ணீருக்கு இந்த நீரைத்தான் நம்பியிருக்கிறது.

இந்தியா செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தி வைபப்தாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. மேலும், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா தாக்கினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

modi

ஒருபக்கம், பீகாரில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி ‘பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்து வேட்டையாடுவோம். தீவிரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு துணை நின்றவர்களும் அழிக்கப்படுவர்கள்’ என மிகவும் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘முப்படை பிரிவு இருந்தும் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்?. சீனாவும் தான் நம்மை அச்சுறுத்துகிரது. சீனா மீது போர் தொடுக்க முடியுமா?.. சீனா பெரிய நாடு. ராணுவத்தில் வலிமை மிகுந்தது. பாகிஸ்தான் சிறிய நாடு என்பதால் மிரட்டுகிறார்கள்’ என பேசியிருக்கிறார்.

வடிவேலு என்னென்னவோ செய்யுறாரு!.. சிரிப்புதான் வரல!. கேங்கர்ஸை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!…

0

Gangers movie: சுந்தர் சி இயக்கத்தில் அவரும் வடிவேலுவும் இணைந்து நேற்று வெளியான படம்தான் கேங்கர்ஸ். 15 வருடங்களுக்கு பின் சுந்தர் சி-யுடன் வடிவேலு இணைந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் பற்றி விமர்சனத்தை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த படத்தோட கதை என்னன்னா. ஆரம்பத்துல ஒரு ஸ்கூலை காட்டுறாங்க.. அதுல ஒரு சின்ன பொண்ணு காணாம போயிடுது. அந்த ஊர்ல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு சுத்துற 2 பேருதான் காரணம்னு அந்த ஸ்கூல்ல வேலை பாக்குற டீச்சர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்குறாங்க. எனவே, அதை கண்டுபிடிக்க போலீஸ் ஒருத்தர அனுப்புது.

அந்த ஸ்கூல்ல ஏற்கனவே வடிவேலு பிடி மாஸ்டரா இருக்க சுந்தர்.சியும் புது பிடி மாஸ்டரா வராறு. அந்த ஊர்ல் ரவுடிசம் நடக்குற பாத்து கோபப்படுறாரு. அதுக்கு அப்புறம் என்ன நடக்குது என்பதுதான் கதை. இந்த படத்தில் வடிவேலு என்னென்னவோ செய்யுறாரு. ஆனா சிரிப்புதான் வரல. ஏன்னா ஒரு சின்ன காமெடியை 200 சதவீதம் பெட்டரா கொடுத்து சிரிக்க வைப்பாரு வடிவேலு. ஆனால், இந்த படத்தில் அவருக்கு எனர்ஜியே இல்ல.

இந்த படத்தில காமெடி ஒர்க் அவுட் ஆகவும் இல்ல. சில இடத்துல மட்டும் ஆடியன்ஸ் சிரிக்குறாங்க. அந்த காமெடிய கூட வடிவேலு பெட்டரா பண்ணியிருக்கலாம். பல வருஷத்துக்கு அப்புறம் சுந்தர்.சியும், வடிவேலும் சேர்ந்திருக்காங்க.. காமெடி அள்ளும் என போனால் முடிஞ்சா சிரிங்கடா என சொல்வது போல முதல் பாதியும், முதல் பாதிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என சொல்ற மாதிரி இரண்டாம் பாதியும் எடுத்து வச்சிருக்காங்க. வாழ்ந்து கெட்ட வடிவேலுவை பார்த்து வருத்தப்படுவதா என தெரியவில்லை’ என என கிண்டலடித்திருக்கிறார்.

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக மாற்ற முயற்சிக்கும் பாஜக!! ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!!

0

பாஜகவின் சமூக ஊடக குழுவினரால் ராகுல் காந்தி குறித்து போடப்பட்ட பதிவு ஒன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கர்நாடகா போலீசில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது.

அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்து இணைத்து பதிவு ஒன்றினை கர்நாடகா பாஜக குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

அவர்கள் பகிர்ந்த ட்விட் ,

” ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டில் ஏதேனும் பயங்கரமான சம்பவங்கள் பதறவைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன “.

இந்த பதிவை பாஜகவில் ஊடக குழுவினர் போட்டவுடன் இதை பார்த்த கர்நாடகா காங்கிரஸின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி எம் இதை பார்த்த கர்நாடகா காங்கிரஸின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி எம் தனஞ்சயா இந்த டுவிட் பதிவினை காங்கிரஸ் அலுவலகத்தில் இருக்கும் பொழுது வாட்ஸ்அப் மூலமாக பெற்றதாகவும் பாஜக சமூக ஊடக குழுவினர் இந்த பதிவை பகிர்ந்த மற்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா போன்ற செல் புகாரளித்திருக்கிறார். அவர் அளித்த புகாரில், ” இது ராகுல் காந்தியின் நற்பயறை குலைக்கும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது ” என தெரிவித்திருக்கிறார்.

இது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற பொழுது ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் அதிலும் குறிப்பாக அவர் ரோட் ஐலேண்டில் இருக்கக்கூடிய பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் குறித்து அவர் கேள்விப்பட்டவுடன் உள்துறை அமைச்சர் அமைச்சர் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஹோமர் அப்துல்லா மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஆகியோருடன் பேசியதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை.. கண்ணீர் விடும் லக்சர் இ தொய்பா!! இந்தியாவை யாரும் நம்ப வேண்டாம்!!

0

காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நேற்று லக்சர் இ தொய்வா துணைத் தலைவன் சைபுல்லா கசூரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து லக்சர் இ தொய்பா துணைத் தலைவன் தெரிவித்திருப்பதாவது :-

காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் பாகிஸ்தானில் அமைதியை குறைக்க வேறு யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாடுகள் இந்தியாவை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டாம் எனவும் உண்மைக்கு துணையாக உலக நாடுகள் நின்றால் போதும் என்றும் தெரிவித்ததோடு இந்த சம்பவத்தில் இந்தியா நாடகம் ஆடுகிறது என குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருக்கக்கூடிய அந்த பகுதியில் இந்தியர்களை தவிர வேறு யாரும் இல்லை என்றும் இந்த தாக்குதலை அவர்களை செய்து கொண்டார்கள் என்றும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு அல்லது எந்த அமைப்புகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்திருப்பது அனைவரிடையயும் பல விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கூறுகையில், திவேதியை அவருடைய மனைவி முன்பு எப்படி கொன்றார்களோ அதே போல் உன்னுடைய நெற்றியிலும் இந்தியா புல்லட்டை வைக்கும் என்றும் இந்த பயங்கரவாத நிகழ்விற்கு இந்தியா கட்டாயமாக பழிவாங்கிய தீரும் என்றும் தெரிவித்ததோடு இந்தியாவிடம் நாம் கிடைத்தால் நம்முடைய நிலை என்ன ஆவது என பயந்தே இதுபோன்ற நீலி கண்ணீரை தீவிரவாதி வடிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.