Home Blog Page 242

தமிழக அரசு வழங்கும் இன்டர்நெட் சேவை!! ஒரு வீட்டிற்கு 200 ரூபாய் மாத கட்டணம் அறிவிப்பு!!

0

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பது போல இன்டர்நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் 4700 கிராம பஞ்சாயத்துகள் இடம் இருந்து இன்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்திருப்பதாகவும் மாதம் 200 ரூபாய் செலவில் 100 Mbps அளவில் வேகம் கொண்ட இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த 4700 கிராம பஞ்சாயத்துக்களில் உரிய வசதிகள் இருக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து பரிசீலனைக்குப் பின் இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்ததோடு 200 ரூபாய் கட்டணத்தில் இணையதள சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய வேலை பார்ப்பவர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இத்திட்டம் மிக பயனுள்ளதாக அமையும் என்றும் ஸ்மார்ட் வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் தங்களுடைய வீட்டிலும் இணையதளத்தை பயன்படுத்தி பல அறிவுப்பூர்வமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாக இத்திட்டம் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ 1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெண்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை. இந்த திட்டம் செல்லுபடி ஆகவேண்டும் என்றால் தாங்கள் கூறிய வரைமுறை கீழ் தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தது.அதன்படி இத்திட்டம் பல மகளிருக்கும் கிடைக்காமலே போனது. நாளடைவில் திமுக மீதான அதிருப்தியானது வளரவே திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் என அனைவருக்கும் இத்திட்டம் மூலம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது.தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் இனி வருடம் தோறும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் அச்சமயத்தில் விடுபட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து ஆயிரம் உதவித்தொகையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

அதன்படி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், மே மாதம் முடிந்து ஜூன் மாதம் முதல் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம்.யாருக்கெல்லாம் இந்த உதவி தொகை திட்டம் கிடைக்கவில்லையும் அவர்கள் பயன்பெறலாம் என கூறியுள்ளார். அதேபோல மாற்றுத் திட்டத்தின் மூலம் பயனடையும் மகளிருக்கு கட்டாயம் இத்திட்டம் செல்லுபடி ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. சற்றும் எதிர்பாரா EPS!! சட்ட பேரவையில் திடீர் பரபரப்பு!!

0

ADMK: அத்திக்கடவு அவிநாசி திட்டம் சார்பாக எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர் அந்த நிகழ்ச்சியிலிருந்தே மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு விரிசல் போக்கானது உண்டாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மூத்த நிர்வாகியான தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கிடைக்க வில்லை என்பது தான் செங்கோட்டையனின் புலம்பலாக உள்ளது. இவர்களுக்குள் உட்கட்சி மோதல் உள்ளது என்பதை பேச்சிலேயே அறிய முடிந்தது.

மேற்கொண்டு இவர் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வரும் நாட்களில் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனிடையே பாஜக அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் செங்கோட்டையனையும் சமாதானம் படுத்தினர். அதேபோல உட்கட்சி மோதல் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து தனது பங்களிப்பையும் கொடுத்தார்.

இப்படி இருக்கையில் ஒரு சில இடங்களில் ஆர்வம் காட்டாமலேயே செங்கோட்டையன் இருந்து வருகிறார். குறிப்பாக அதிமுக பாஜக இணைந்தது சார்பாக விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையன் இதில் கலந்து கொள்ளவில்லை. மேற்கொண்டு பாஜக அழைப்பு விடுத்தவர்கள் அனைவரும் வந்தார்களா என்பது குறித்து கிராஸ் செக் செய்துள்ளது.

இதில் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் உடனடியாக பாஜக தலைமை செங்கோட்டையனை அழைத்து பேசியுள்ளது. தற்போது தான் கட்சி ஒன்று பட்டுள்ளது, மீண்டும் கட்சிக்குளிருந்து கொண்டு வேறுபாட்டை காட்டாதீர்கள். இது நல்லதல்ல என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைக் கேட்டுக் கொண்ட செங்கோட்டையன் இன்று சட்டசபையில் தனது பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் நல்லாட்சி புரிந்த எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களின் வழியில் அதனைத் தொடரும் எடப்பாடியாரை வணங்கி உரையை தொடங்குகிறேன் என இவர் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவின் தலைமை சொல்லுக்கு கட்டுப்பட்டு செங்கோட்டையன் நடந்து கொண்டிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..

0

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு கட்டி அடித்தார். அவரின் இசைக்கு இளைஞர்கள் ரசிகர்களாக மாறினார்கள். அவரின் வெஸ்டர்ன் இசை பலரையும் ஆட்டம் போட வைத்தது.

அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் துவங்கி பல ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட்டுக்கு போனார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் இவர். நிறைய படங்களில் பாடியும் இருக்கிறார்.

காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..
#image_title

இந்நிலையில்தான் அவரின் ஒரு பாடல் காப்புரிமையில் சிக்கி இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ரஹ்மான் இசையமைத்த வீரா ராஜ வீரா பாடல் தனது தந்தை இசையமைத்த ‘சிவா ஸ்துதி’ பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாக பாடகர் வாசிஃபுதீன் தாகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த பாடலின் உந்துதலால் (inspired) அப்பாடலை உருவாக்கியதாக ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் ரஹ்மான் 2 கோடி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும் செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இளையராஜாதான் தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பி வந்தார். இப்போது முதல்முறையாக ஏ.ஆர்.ரஹமான் இந்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

திமுக உடன் ரகசிய டீலிங்.. உடனே இவரை நீக்குங்கள்!! கொந்தளிக்கும் பாமக நிர்வாகிகள்!!

0

PMK: பாமகவில் சமீப காலமாக அப்பா மகன் இருவருக்குமிடையே பனிப்போரானது முடிவடைந்த பாடில்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி இக்கட்சியை குடும்ப அரசியலாக்குவதா என அன்புமணி கூறியது சர்ச்சையானது. இதற்கு முக்கிய காரணம் ராமதாஸ் மகள் வழி பேரனுக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி கொடுத்தது தான்.

பிறகு சமாதானம் செய்து கட்சி சுமுகமாக சென்ற நிலையில் திடீரென்று ராமதாஸ், நான்தான் கட்சியின் தலைவர் அன்புமணி கிடையாது என அறிவிப்பை வெளியிட்டார். இது ரீதியாக அப்போதையிலிருந்தே இதற்குப் பின்னணியில் இருப்பது ஜிகே மணி தான் என பலரும் கூறினர். ஏனென்றால் முதலில் தலைவராக இருந்தது இவர்தான்.

பின்பு அன்புமணி தலைவராக்கி இவருக்கு கௌரவ தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது. பின்பு இளைஞர்கள் அணி தலைவர் பதவியை ஜிகே மணி மகனான தமிழ் குமரனுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவரே பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ரீதியாக இவருக்கு கொடுத்த அழுத்தம் தான் என கூறினர். ஜிகே மணி இதனையெல்லாம் நினைத்துதான் தற்பொழுது ராமதாஸ் பின்னணியிலிருந்து கொண்டு பலி வாங்குகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல இவர் திமுகவுடன் ரகசிய கூட்டணியில் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கலைஞர் உள்ளிட்டோரை புகழ்ந்துறைத்துள்ளார். இவ்வாறு ஜிகே மணி செய்தது பாமகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இருந்த ஆட்சிக் காலத்திலேயே வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய 10.5 சதவீதம் இட ஒதுக்கிடானது கிடைத்தும், திமுகவால் தான் செயல்படுத்த முடியாமல் போனது.

தற்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர். இப்படி திமுக வன்னியர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் ஏன் புகழாரம் சூட்டியுள்ளார்?? நாளடைவில் திமுகவுடன் இணைய போகிறாரா என பலரும் கேட்டு வருகின்றனர். மேற்கொண்டு இவ்வாறு அவர் பேசியதற்கு கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என சோசியல் மீடியாவில் இவருக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது.

செந்தில் மற்றும் பொன்முடி பதவி இனி இவர்களுக்கு தான்.. நேரம் பார்த்து அடிக்கும் ஸ்டாலின்!!

0

DMK: தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தங்கள் மீதுள்ள அதிருப்திகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி உள்ளனர். இதில் செந்தில் பாலாஜி வழக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அவதூறு பேச்சில் சிக்கிய அமைச்சர் பொன்முடி மற்றும் ஊழல் வழக்கிலிருக்கும் செந்தில் பாலாஜி இவர்கள் இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க உள்ளார்களாம். இவர்களின் பதவியை அமைச்சர்களான சக்கரபாணி, சாமிநாதன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் லட்சுமணன் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இதனையெல்லாம் திருத்திக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அடுத்தடுத்து தங்கள் கட்சி மீதுள்ள கரையை துடைக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி வழக்கில் பதவியா? ஜாமீனா? என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து சொல்ல வேண்டுமென்ற கட்டாயத்தில் நிறுத்தியுள்ளது. நேரம் பார்த்து நீதிமன்றமும் அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் தலைமைக்கு இதை விட்டு வேறு வழி தெரியவில்லை.

இதனால் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் உண்டாகும் என ஸ்டாலின் கூறியுள்ளார். இது ரீதியான அறிவிப்பு செந்தில் பாலாஜி வழக்குக்கு முன்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலுவுக்கு மார்க்கெட் போனதுக்கு காரணமே அவர்தான். போட்டு பொளக்கும் பயில்வான்!..

0

மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார்.

கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் அதில் 5 படங்களில் வடிவேலு இருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர், கிரி, தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எனவே, கதாநாயகர்களை விட வடிவேலுவுக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள்.

வடிவேலுவுக்காகவே படங்களை பார்க்கும் ரசிகர்களும் அதிகரித்தார்கள். ஆனால், ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார் வடிவேலு. அப்படி அவர் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான படங்கள் ஓடவில்லை. அதோடு 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்டு படத்திலிருந்து விலகினார். இதனால் வடிவேல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டது.

vadivelu
The famous actress kicked Vadivelu at the shooting spot!

எனவே, 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. அதன்பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படமும் ஓடவில்லை. தற்போது மீண்டும் பழைய மாதிரி காமெடி வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார். சுந்தர் சியுடன் கேங்கர்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மெகா ஹிட் இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஓடிவிடும் என்கிறார்கள்.

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாலர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது ‘சினிமா எடுக்கும்போது தயாரிப்பாளருக்கு எந்த லாபமும் வராது. தியேட்டரில் வெளியாகிதான் காசு பார்க்க முடியும். அதுவரைக்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பொறுமையாக இருப்பாங்க.. ஆனால், வடிவேலு அந்த பொறுமையை சோதித்தார். அதுதான் அவரின் குறை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்வம். அதுதான் அவருக்கு பட வாய்ப்பை குறைத்தது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் அவரின் தலையீடு அதிகம் இருந்தது. அதனால்தான் அப்படம் தோற்றுப்போனது’ என சொல்லியிருக்கிறார்.

தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

0

காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது. ஏற்கனவே, சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துவிட்டது. பாகிஸ்தான் 95 சதவீத தண்ணீருக்கு இந்த நீரைத்தான் நம்பியிருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு உதவுவது உண்மைதான்!.. ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..

இந்தியா செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. மேலும், பாகிஸ்தானின் ராணுவம் தயார் நிலையில் இருக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியா தாக்கினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல வருடங்களாக உதவி செய்து வருகிற என்கிற குற்றச்சாட்டு பல வருடங்களாக இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல உதவிகளை பாகிஸ்தான் செய்வதாக புகார் எழுந்த நிலையில் இதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஒரு நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் ‘இந்த மோசமான காரியத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடுகளுக்காக கடந்த 30 வருடங்களாக செய்து வருகிறோம். இது தவறுதான். இந்த தவறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்’ என சொல்லியிருக்கிறார்.

ஆளுநர் ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு.. 9 பேர் மட்டுமே பங்கேற்பு!.. இந்த அசிங்கம் தேவையா?!..

0

பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை கொண்ட நபர்களை ஆளுநராக நியமித்து மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் ஸ்டைல். இதை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். தமிழகத்திற்கும் ஆர்.என்.ரவியை ஆளுநராக கொண்டு வந்தனர். தமிழக அரசு சட்டபையில் நிறைவேற்றும் எந்த மசோதக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தப்படிப்பது ரவியின் ஸ்டைல்.

பல விஷயங்களிலும் தொடர்ந்து தமிழக அரசோடு மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். குறிப்பாக, பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்க வேண்டுமென தமிழக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு முன்னும் பின்னரும் கூட நிறைய மசோதக்கள் அனுப்பப்பட்டது. ஆனால், எதற்குமே அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தை நாடியது திமுக அரசு. அதைத்தொடர்ந்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசு கொண்டு வந்த எல்லா மசோதக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. எனவே, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான எல்லா விஷயங்களும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், ஊட்டியில் துணை வேந்தர் மாநாட்டை நடத்துவதாக ஆளுனர் அலுவகம் அறிவித்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று உதகையில் மாநாடு துவங்கியுள்ளது. ஆனால், பல துணை வேந்தர்கள் இதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது ஆளுநர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனால்தான் ஆளுநரின் மாநாட்டை பலரும் புறக்கணித்திருக்கிறார்கள். 41 பேருக்ல்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்த மாநாட்டில் வெறும் 9 துணை வேந்தர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். அந்த 9 பேரும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆவர். இதையடுத்து அந்த அவமானம் தேவையா என திமுகவினர் சமூகவலைத்தளங்களில் ஆளுநரை கலாய்த்து வருகிறார்கள்.

டிராகன் பட ஸ்டைலில் மோசடி செய்த வாலிபர்!. ஆனா கொஞ்ச நாளிலேயே சிக்கிட்டாரு!…

0

சாஃப்ட்வேர் துறையில் வேலைக்கு இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் எடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் நேர்காணலுக்கு நேரில் வரசொல்லாமல் ஜூம் மீட்டிங் உள்ளிட்ட சில ஆன் லைன் ஆப் மூலம் வீடியோ மூலமாக நேர்காணலை நடத்துகிறார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், அதிலும் மோசடி செய்ய முடியும் என்பதை டிராகன் படத்தில் காட்டியிருந்தார்கள்.

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனை கவுதம் மேனன் வீடியோ காலில் இண்டர்வியூ நடத்துவார். அப்போது பிரதீப்புக்கு பதிலாக அங்கே வேறு ஒருவர் ஆங்கிலத்தில் பதிலளிப்பார். அவர் பேசுவதற்கு ஏற்ப பிரதீப் வாயை மட்டும் அசைப்பார். வீடியோ காலில் எதிரே இருந்து பார்ப்பவருக்கு பிரதீப் பேசுவது போலவே தெரியும். அப்படி மோசடி செய்து ஒரு லட்ச ரூபாய் வேலையில் சேர்வார் பிரதீப்.

தற்போது இது போல நிஜ சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இன்போசில் நிறுவனத்தில் ராபா சர்ய் பிரசாந்த் என்பவர் போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆன்லைனில் நேர்காணல் நடந்த போது சரளமாக ஆங்கிலம் பேசிய சாய் வேலைக்கு சேர்ந்த பின் தடுமாறியதால் அவர் மீது சந்தேகம் வந்திருக்கிறது. அதன்பின் நடத்திய விசாரணையில் நேர்காணலில் அவருக்கு பதில் வேறொருவர் பேசியது தெரியவந்திருக்கிறது. தற்போது இவரின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வேலைக்கு சேர்ந்த 15 நாட்களில் அவர் செய்த மோசடி தெரியவந்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் படங்கள் தெலுங்கிலும் ஹிட் அடிப்பதால் டிராகன் படமும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.