Home Blog Page 248

மயோனைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சி!! தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்து உத்தரவு!!

0

தமிழகத்தில் மயோனைஸ் முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால் வேணா திருவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மயோனைஸ் என்பது பச்சை முட்டை எலுமிச்சைச்சாறு எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது என்றும் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டதோடு இந்த மயோனைஸ் இடம்தான் சிக்கன் சாண்ட்விச் போன்ற அனைத்தையும் மக்கள் சாப்பிட்டு வருவதாகவும் இதனால் மக்களுக்கு அதிக அளவு ஆபத்துக்கள் ஏற்படும் என்றும் உயிர் இழப்பு இதனால் நடந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு மயோனிசில் ஆபத்து இருப்பதால் பல மாநிலங்களில் மயானசுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கானாவில் மயோனைஸ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்திலும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இந்த தடையானது அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பேசுறேன் இதுக்கு குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஆர் லால் வேணா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பது :-

முட்டையின் உடைய மஞ்சள் கரு எண்ணெய் வினிகர் போன்றவற்றால் உருவாக்கப்படக்கூடிய மயோனைஸ் ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் பரிமாறப்படுவதாகவும் இந்த மயோனைசை சாப்பிடுவதால் அதிக ஆபத்து விளைவிக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் பல உணவு கடைகளில் மயான செய் தயாரிப்பதற்கு பச்சை மூட்டையை பயன்படுத்துவது மற்றும் முறையற்ற தயாரிப்பு சேமிப்பு வகைகள் போன்றவற்றால் நுண்ணுயிரிகளால் மாசுபட்ட நோய்கள் பரவுகிறது என்றும் இது உயிருக்கே மிகவும் ஆபத்தானதாக முடிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, மயோனைஷில் சால்மோனெல்லா , டைபிமுறியம் லிஸ்ட்டிரியா போன்ற பல தீங்க விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் இது உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அது மட்டுமல்லாத உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அவற்றை முறையாக தயாரிப்பதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 பிரிவு 30 (2)(a) கீழ் ஒரு வருடத்திற்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் நீரும் கடைகள் மீது அபராதமும் உரிமம் ரத்து செய்யப்படும் என சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் குறித்து அவதூறு.. கோபத்தில் நெப்போலியன் எடுத்த முடிவு!! அதிரடி காட்டும் போலீஸ்!!

0

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் நெப்போலியன் அவருடைய மூத்த மகனான தனுஷ் அவர்களுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக பல விமர்சனங்கள் வீடியோக்களாக வெளிவந்தது. அதனை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் மீண்டும் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டிருக்கிறது.

நெப்போலியன் அவர்கள் நடத்திவரக்கூடிய ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் இருக்கக்கூடிய தலைமை மருத்துவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் நெப்போலியன் அவர்களின் மூத்த மகனான தனுஷ் அவர்களின் உடல்நிலை குறித்து அவதூறு வீடியோக்கள் youtube இல் பரப்பப்படுவதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என புகார் ஒன்றினை அழித்திருக்கிறார். அதன்படி ஒரு வாரத்திற்குள் அவதூறாக பரப்பப்பட்ட யூடியூப் வீடியோக்கள் நீக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு நாட்களிலேயே அவதூறு வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில் அந்த youtube அவர்களை தேடி அவர்களுக்கான தண்டனை வழங்கவும் காவல்துறை முடிவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்பொழுது அவதூறு வீடியோக்களை பரப்பிய யூடியூப் அவர்களை தேடி வருவதாகவும் அந்த சேனல்களை உரிமையாளர் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை உறுதியளித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெப்போலியன் மூத்த மகன் ஆன தனுஷ் திருமணம் நடந்த முதலே பல வீடியோக்கள் அவரைக் குறித்தும் அவரது உடல்நலம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் எம் பி கனிமொழி சில தினங்களுக்கு முன்பாக நெப்போலியன் அவர்களின் வீட்டுக்கு சென்று தனுஷ் அவர்களுக்கு திருமண பரிசுகளை வழங்கி இருக்கிறார். இதனையும் வீடியோவாக எடுத்த நெப்போலியன் அவர்கள் இணையதளத்தில் போடவே பல youtube சேனல்களில் தனுஷின் உடல்நலம் குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளாத பிரியங்கா!! இவர் வெளியேறியது நிகழ்ச்சியை விட்டா.. சேனலை விட்டா!!

0

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியங்கா அவருடைய முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் மாகாபா உடன் விஜய் டிவி சீரியல் நடிகை தொகுப்பாளனியாக இடம் பெற்றிருப்பது மேலும் சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது.

சென்ற வாரத்தில் பிரியங்கா வசி என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் இது மிகப்பெரிய பேச்சுப்பொருளாக அமைந்திருக்கக்கூடிய நிலையில் பிரியங்கா விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்றபின் தற்பொழுது வசின்ற வரை காதலித்த திருமணம் செய்திருக்கிறார். இதற்கு ஒரு புறம் எதிர்ப்புகளும் மறுபுறம் ஆதரவுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. சூழல் ஒருபுறம் இப்படி இருக்க பிரியங்கா முழுவதுமாக விஜய் டிவியை விட்டு வெளியேறப் போகிறார் என மறுபுறம் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மாகாபாவுடன் பெண் தொகுப்பாளனியாக மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை லட்சுமி பிரியா களம் இறங்கி இருக்கிறார். இவர் வந்ததும் அதிர்ந்த மாகாபா என்ன நீ வந்திருக்க என்பது போல கேட்க, அதற்கு லட்சுமி பிரியா அவர்கள் PK அனுப்பிய VK நான் என்பது போல கிண்டலாக பதில் கொடுத்திருந்தார். ஒருபுறம் பிரியங்கா திருமணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தாலும் மறுபுறம் இவர் சேனலை விட்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல் தான் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகின்றன.அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுபாலனியாக பிரியங்கா மீண்டும் களம் இறங்கினால் இவற்றை காண முடிவு ஏற்படும்.

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

0

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அவரை ஆதரித்து தீவிர இணைய பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அவரது ஆதரவாளர் விஷ்ணு, பல்வேறு வீடியோக்களில் விஜயின் நேர்மையான அரசியல் பார்வையை தூக்கி பேசினார். அதே போல திரைத்துறையில் விஜய்க்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு நடிகர் அஜித் மற்றும் அரவிந்தசாமி உள்ளிட்டவர்களை தர குறைவாக விமர்சித்தார்.

அதே போல விஜய்யின் அரசியல் எதிரிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் அவர் கைகாட்டாமல் இருந்ததில்லை. விஜய்க்கு எதிராக யாராவது அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்தால் அவர்களையும் இவர் கடுமையாக சாடி வந்தார். இதனால், விஜய் ரசிகர்கள் மத்தியில் விஷ்ணுவுக்கு தனி இடம் உருவானது.

இந்நிலையில் இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அதற்காக பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் விஷ்ணுவை அடித்து துவைக்கும் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. நண்பனின் தங்கையிடம் இவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் அவரது அண்ணனிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது அண்ணன் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விஷ்ணுவின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது அண்ணன் அவரை அவரது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கும் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரை அடிப்பதற்கான காரணமும் அந்த வீடியோவில் அவர்கள் கூறியுள்ளனர்.

யூடீயூப் அலுவலகத்தில் விஷ்ணு காண்டம் வைத்துள்ளதாகவும், அங்கு அதனுடைய தேவை என்ன என்பது குறித்தும் கேள்விகள் கேட்டவாரே அவரை அடித்து துவைக்கும் காட்சியானது வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு பேசிய போது தனது ரசிகர்களையும் விர்ச்சுவல் வாரியர் என குறிப்பிட்டிருந்தார். அப்படி குறிப்பிட்ட ஒரு விர்ச்சுவல் வாரியர் விஷ்ணு பெண்ணிடம் சில்மிஷம் செய்து தர்மஅடி வாங்கிய சம்பவம் அவருக்கு எதிராக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

காஷ்மீர் பிரச்சினையால் அதிரடி காட்டும் மோடி!! பாகிஸ்தானியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் பாதுகாப்பிற்காக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

மோடி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

இந்தியாவிற்குள் இனி பாகிஸ்தானியர்கள் வருவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் SVES விசாவை வைத்து தற்பொழுது இந்தியாவிற்குள் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கிறது. குறிப்பாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை தரும் வரை இந்திய அரசு ஓயாது என்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே மாதத்தின் துவக்கத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவினுடைய பாதுகாப்பு விமானப்படை கடற்படை ஆலோசகர்கள் இஸ்லாம் அதில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தூதரக உதவிகளை குறைக்கவும் சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என காஷ்மீர் காவல் துறையினர் அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. இன்று ஏப்ரல் 24ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெரிஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மையோனைஸுக்கு தமிழகத்தில் தடை!.. தமிழக அரசு அதிரடி…

0

பல வருடங்களாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம் பிரபலமாகி வரும் உணவு மையானைஸ். முட்டையின் வெள்ளைக்கருவில் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இது தமிழ்நாட்டே உணவே கிடையாது. ஆனால், கடந்த சில வருடங்களில் மையோனைஸ் பல உணவகங்களிலும் பறிமாறப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஃபிங்கர் சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறிக்கும் உணவுகளுடன் மையோனைஸ் கொடுக்கப்படுகிறது. அதிலும், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்ற உணவுகளை உண்ணும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மையோனைஸை உட்கொள்கிறார்கள். மையோனைஸை சரியான முறையில் தயாரிக்கவில்லை என்றால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதோடு, அதில் அதிகப்படியான எண்னெய் சேர்க்கப்படுவதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்பு கூடுவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அதோடு, கடந்த சில வருடங்களில் மையோனைஸை சாப்பிட்டு சிலர் இறந்தும் போனார்கள். இந்நிலையில்தான், தமிழகத்தில் ஒராண்டுக்கு மையோனைஸ் உணவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிக்கிறது.

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தெலுங்கானாவில் மையோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து சொன்னது குத்தமா.. தலை நிமிர முடியாமல் சிக்கி தவிக்கும் சூர்யா!!

0

ஜோதிகா குறித்த பல்வேறு கருத்துகளும் சர்ச்சை பேச்சுகளும் இழந்து வரக்கூடிய நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் சமீப காலமாகவே அவருடைய படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் சூர்யா தான் என பலர் கூறிவரும் நிலையில் அப்படி என்ன சூர்யா செய்து விட்டார். ஏன் சூர்யாவிற்கு இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என பலரும் யோசிக்கலாம்.

2018 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஞாபகம் இருக்கும் பட்சத்தில் சூர்யாவிற்கு ஏன் தற்பொழுது இந்த நிலைமை என்பது அனைவராலும் யோகிக்க முடியும். காரணம் 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வு உட்பட பல்வேறு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நடிகர் சூர்யா தன்னுடைய கருத்துக்களை சொல்ல துவங்கினார். அதே சமயம் அவருடைய காப்பான் திரைப்பட விழாவின் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்பது போல சூர்யாவிற்கு எச்சரிக்கையும் விட்டுச் சென்றார்.

அவரைப் போலவே அவருடைய மனைவி நடிகை ஜோதிகா அவர்களும் தஞ்சை பெரிய கோவில் பற்றிய பல கருத்துக்களை தெரிவித்ததும் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது போராளியாக தன்னை காட்டிக் கொண்டார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் உடைய குரலும் வெளிவரவில்லை.இவை அனைத்துமே இவர்களுடைய சினிமாவின் லாபத்திற்காகத்தான் என பலரும் கூறி வருகின்றனர். கருத்து தெரிவிப்பதை நிறுத்திவிட்டது மட்டுமல்லாது மும்பைக்கு குடும்பத்தோடு சென்று விட்டனர்.

தேவையற்ற அரசியல் விஷயங்களில் மூக்கை நுழைத்து தங்களுடைய விருப்பப்படி கருத்து தெரிவித்து வந்தது தான் தற்பொழுது நடிகர் சூர்யா அவர்களின் திரைப்படங்கள் போடாமல் போவதற்கான காரணம் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பயங்கரவாத தாக்குதலுக்கு அமிதாபச்சன் போட்ட டுவிட்!! சர்ச்சை மன்னனுக்கு விழும் பலத்த அடிகள்!!

0

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதிகளில் இருக்கக்கூடிய ரெசார்ட் ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நேரத்தில் அங்கு திடீரென துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகளும் சட்டத்தில் 26 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஆண்களை குறி வைத்த லதாகுதல் நடத்தப்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை மட்டுமே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலால் உலகமே அதிர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை போட்டு இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை பெற்று வருகிறது.

அமிதா பச்சனின் X தள பதிவு :-

எப்பொழுதும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை மட்டுமே பதிவிடக்கூடியவராக பார்க்கப்படுபவர் அமிதாப்பச்சன். அதேபோன்ற ஒரு சர்ச்சை தான் மீண்டும் இவர் செய்திருக்கிறார். அதாவது தீவிரவாத தாக்கத்தால் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கக்கூடிய பதிவில் ” பதிவு 5356 ” என்று மட்டும் குறிப்பிட்டு வேறு எதுவும் நடந்த நிகழ்வு பற்றி குறிப்பிடாமல் விட்டுவிட்டார். எவ்வளவு பெரிய துயரமான நிகழ்வு நடந்திருக்கிறது என்றும் இவர் அதற்கு இரங்கல் தெரிவிக்காமல் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இவர் இவ்வாறு ஒரு புறம் விளையாடிக் கொண்டிருக்க மறுபுறம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஜான்வி கபூர் சஞ்சய் தத் சோனு சூட் உள்ளிட்ட பலர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்தியா vs அமெரிக்கா.. மருத்துவத்துறையில் யார் சிறந்தவர்கள்!! உண்மையை உடைக்கும் அமெரிக்க பெண்!!

0

இந்தியாவில் வசித்து வரக்கூடிய அமெரிக்க பெண்ணான கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே சுகாதார கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறது என்றும் இதில் காத்திருக்கக்கூடிய நேரம் செலவுகள் காப்பீடு போன்றவற்றை ஒப்பீடு செய்த எங்கு மருத்துவம் எளிமையாகவும் சிறந்ததாகவும் அமைகிறது என்பதை விளக்கி இருக்கிறார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய அமெரிக்க பெண் தெரிவித்திருக்கும் உண்மைகள் பின்வருமாறு :-

பொதுவாக அனைவரின் உடைய மனநிலையும் அமெரிக்காவில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும் ஆனால் உண்மை அப்படி இல்லை. நேரடியாக அமெரிக்காவில் இருப்பவர்களை கேட்கும் பொழுது அங்கு என்ன நடக்கிறது என்பது நமக்கு ஓரளவு புரிந்துவிடும். முதலில் இரு நாட்டு மருத்துவமனைகளிலும் இருக்கக்கூடிய மருத்துவர்களை பார்க்க வேண்டும் என்றால் அவர்களுக்கான காத்திருப்பு நேரம் எவ்வாறு அமையும் என்பதை பார்க்கலாம்.

காத்திருப்பு நேரம் :-

✓ அமெரிக்காவில் மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் 2 முதல் 4 வாருங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி கிடையாது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்று ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி கிடையாது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்று டோக்கன் பெற்று சிறிது நேரத்திலேயே மருத்துவரை நம்மால் பார்த்து விட முடியும்.

செலவுகள் :-

✓ இந்தியாவில் ஒரு மருத்துவரை சந்திக்க செல்கிறோம் என்றால் அதிகபட்சமாக 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை செலவாகும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு டாக்டர் செக்கப் இருக்கு 12 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகும். செலவு அதிகம் இருப்பதாலேயே அமெரிக்கர்கள் பெரும்பாலும் தங்களுடைய உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மருத்துவர்களிடம் செல்வார்களாம்.

பெட் சார்ஜ் :-

✓ மருத்துவமனைகள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளுக்கு பெட் சார்ஜ் என 6000 ரூபாய் செலவாகும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒருநாள் நீங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றால் 2.5 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார்.

காப்பீடு :-

✓ இந்தியாவில் அதிக அளவு மக்கள் தொகை இருப்பதால் இங்கு காப்பீட்டின் செலவும் மிக மிக குறைவாக இருக்கிறது. அதிலும் தனியார் மருத்துவ காப்பீடுகள் எடுக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு 2000 முதல் 5000 வரை செலவு செய்தாலே போதும் என்ற நிலை உள்ளதாகவும் ஆனால் அமெரிக்காவில் மருத்துவ காப்பீட்டிற்காக ஒரு மாதத்திற்கு 64,000 முதல் 1.2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்றும் இவ்வாறு செலவு செய்தால் கூட மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகும் பட்சத்தில் கையில் இருந்தும் பணம் போட வேண்டும் என தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இப்பதானே லீவ் விட்டாங்க.. அதற்குள் தமிழக பள்ளிகளின் திறப்பு தேதி அறிவிப்பு!!

0

2024 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை துவங்கிவிட்டது. ஒருபுறம் தேர்வர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தக்கூடிய பணி துவங்கி மும்முறமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதலும் கொடை விடுமுறை துவங்கி இருக்கக்கூடிய நிலையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு துவங்கக்கூடிய தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி,

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கக்கூடிய 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று ஏப்ரல் 24ஆம் தேதி உடன் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித் தீர்வுகள் முடிவடைவதை தொடர்ந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு ஏதுவாக ஏப்ரல் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கான இறுதி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.