Home Blog Page 247

பகல்காம் தாக்குதல்!. பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?.. அதிர்ச்சி புகைப்படம்!..

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகலை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது.

இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலை நிலவும்போது பாகிஸ்தான் தூதகரத்தை சேர்ந்த ஒருவர் கேக் வாங்கிகொண்டு உள்ளே செல்லும் புகைப்டமும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்க்கும்போது 23 இந்தியர்கள் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்ததை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கொண்டாடுவது போல இருக்கிறது என பலரும் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை பாகிஸ்தான் தூதரகம் இதுபற்றி விளக்கமளிக்கவில்லை.

யாரையும் விடமாட்டோம்!.. ஒவ்வொருத்தரா வேட்டையாடுவோம்!. மோடி ஆவேசம்..

0

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

ஒருபக்கம் இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என லஷ்கர் இ தொய்பா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரே முயற்சி செய்கிறார்கள். உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம். இந்தியா நாடகம் ஆடுகிறது. இந்த தாக்குதலை அவர்களே நடத்தியிருக்கிறார்கள்’ என அவர் பேசியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி முளையாக செயல்பட்டர் என குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில்தான் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்நிலையில், பீகாரில் மக்களுக்கு முன் பேசிய பிரதமர் மோடி ‘பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்து வேட்டையாடுவோம். தீவிரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு துணை நின்றவர்களும் அழிக்கப்படுவர்கள்’ என மிகவும் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இந்தியா நாடகம் ஆடுகிறது.. நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!. லஷ்கர் இ தொய்பா விளக்கம்!…

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என லஷ்கர் இ தொய்பா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரே முயற்சி செய்கிறார்கள். உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம். இந்தியா நாடகம் ஆடுகிறது. இந்த தாக்குதலை அவர்களே நடத்தியிருக்கிறார்கள்’ என அவர் பேசியிருக்கிறார்./

பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி முளையாக செயல்பட்டர் என குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில்தான் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

பாஜகவுக்கு டிவிஸ்ட் கொடுக்கும் பாமக.. விஜய்யுடன் போட்ட டீலிங்!! வெளியாகப்போகும் பரபர அறிவிப்பு!!

0

TVK PMK: ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியில் உறுதியாக இருக்கும் நிலையில் மாற்றுக் கட்சியினர் அதற்கு எதிராக கூட்டணி வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் பிளவில் இருந்த அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஆனால் இவர்களை தாண்டி மூன்றாவது கட்சி ஒன்று கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என கூறுகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி பிடிக்காத கட்சிகள் தொடர்ந்து விலகி வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வரிசையில் பாமகவும் பாஜகவை விட்டு வெளியேறிவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாறாக அரசியலுக்கு வருகை புரிந்து இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். அதேபோல தற்போதைய விஜய்க்கு தேர்தல் வியூக அமைப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் 2016 ஆம் ஆண்டு அன்புமணிக்கு அரசியல் வியூக அமைப்பாளராக இருந்தார். தற்போது இவர்களை இணைக்கும் பாலமாக செயல்படுவது ஜான் ஆரோக்கியசாமி எனக் கூறுகின்றனர்.

இவர்கள் கூட்டணி அமைந்தால் இரண்டரை ஆண்டுகள் அன்புமணியும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் விஜய்யும் ஆட்சி செய்வது என இதனைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதுகுறித்த பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளனர். இவர்கள் கூட்டணியால் அதிமுக திமுக வாக்கு வங்கி சிதற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாகவே மாற்று ஆட்சி வேண்டுமென நினைப்பவர்கள் பெரும்பாலும் சீமானுக்கு ஆதரவளிப்பது உண்டு. அந்த வரிசையில் தற்போது விஜய் இடம் பெற்றுள்ளார்.

நானும் எடுக்குறேன்டா சாதி படம்!.. ரஞ்சித், மாரியை திட்டும் இயக்குனர்!…

0

தமிழ் திரையுலகில் 90களில் நிறைய சாதிய படங்கள் வெளிவந்தது. குறிப்பாக கவுண்டர் மற்றும் தேவர் சமூகத்தின் பெருமைகளை பேசும் நிறைய படங்கள் அப்போது உருவானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்கள் கவுண்டர் சாதி பெருமைகளை பேசியது. அதேபோல், ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற படங்களை இயக்கினார்கள். கமல் கூட தேவர் மகன் எடுத்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் சாதியை வைத்து படமெடுப்பது என்பது கிரின்ச்சாக மாறிவிட்டது. அதோடு, சமூகவலைத்தளங்களில் பலரும் சாதி பற்றி பேசுகிறார்கள். அதை விட முக்கிய காரணம், ஒரு சாதியை மட்டம் தட்டி இப்போது படமெடுத்தால் படம் வெளியே வராது என்கிற நிலைதான் சமூகத்தில் நிலவுகிறது. ஏனெனில், சென்சார் போர்ட் விட்டாலும் சாதிய அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இதனாலேயே ‘தேவையில்லாத பிரச்சனை எதற்கு?’ என இயக்குனர்கள் யோசிக்கிறார்கள். அதேநேரம், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மேல் சதி மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை தங்களின் படங்களில் தொடர்ந்து காட்டி வருகிறார்கள். அதேபோல். பா.ரஞ்சித்தும் தனது படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியலை பேசி வருகிறார்.

tharun gopi

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை போன்ற படங்களில் சாதிய பிரச்சனைகளை மாரி செல்வராஜ் அழுத்தமாக பேசியிருந்தார். எனவே, ரஞ்சித் மாரி, செல்வராஜ் ஆகியோர் சாதியை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என சிலர் கடுமையாக விமர்சிப்பதும் உண்டு.

இந்நிலையில், திமிறு, காளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தருண் கோபி ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் ‘பா.ரஞ்சித், மாரி, வெற்றி மாறன் நீங்களாம் சாதிய பத்தி படம் எடுங்க.. ஆனால், அதுக்காக மத்த சாதியை ஏன் மோசமா காட்டுறீங்க.. இருங்கடா நானும் சாதிய படம் எடுக்க வரேன். என் சாதி வாழ்வியலை நான் காட்டுறேன்’ என கோபமாக பேசியிருக்கிறார்.

இந்த அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு.. ஸ்டாலினிடம் போன லிஸ்ட்!! முதல் ஆளே இவர் தான்!!

0

DMK: திமுக அமைச்சர்களால் தொடர் இன்னல்களை அதன் தலைமை சந்தித்து வருகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பலமுறை எச்சரித்தும் கனிவுடனும் சொல்லி பார்த்து விட்டார். ஆனால் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து கட்சி தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றனர். அதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் கட்டாயம் அமைச்சரவை மாற்றம் இருக்குமென ஸ்டாலின் நேரடியாகவே கூறியுள்ளார். அதன்படி எந்தெந்த அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்பது குறித்து உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் அளித்துள்ளது. அதன்படி முதலாவது பெயரை பொன்முடி தான்.

சமீபத்தில் பெண்களை தொடர்புபடுத்தி சைவ வைணவ இனம் குறித்து அவதூறாக பேசினார். இவ்வாறாக பேசியதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனங்களை எழுப்பினர். ஏன் சொந்தக் கட்சிக்குள்ளையே இவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்டாலின் அவரது பொறுப்பை பரித்தாரே தவிர பதவியில் கை வைக்கவில்லை. ஆனால் இவரை பதவி விலகியிருக்க வேண்டுமென பலதரப்பிடமிருந்து அழுத்தம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் விதமாக பொன்முடி நடந்து கொள்வதால் அவருக்கு டம்மி பதவி கொடுக்க உள்ளதாக கூறுகின்றனர்.

இரண்டாவதாக இருப்பது பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தான். குறிப்பாக இவர் துறை சார்ந்து நடக்கும் பணியிட மாற்றம் புதிய நிர்வாகிகள் நியமிப்பு போன்றவை அதிகாரப்பூர்வமற்ற நிலையில் இவர் தலைமையில் தான் நடைபெறுகிறதாம். அதேபோல இவர்களை வைத்து தங்களுக்கு தேவையான பத்திர பதிவுகளையும் செய்து கொள்கிறார்களாம். அமைச்சர் துரைமுருகன் தற்போது சிக்கிய பொன்முடி வரிசையில் இவரும் ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில், ஆண்ட பரம்பரை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி இவர் கட்சி ரீதியான தகவல்களை வேறு ஒருவரிடம் செல்போன் மூலம் பகிர்ந்த தகவல் ஸ்டாலின் மேஜைக்கு சென்றுள்ளது. அது மட்டும் வெளியே வந்தால் இவர்களது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவிடும். இதனையெல்லாம் கணக்கில் கொண்டு தான் இவரை மாற்ற முடிவெடுத்துள்ளனர். மூன்றாவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி. இவர் இவருடைய பதவி சார்ந்து எந்த ஒரு செயல்பாடுகளையும் கவனிப்பதில்லையாம். மாறாக தனக்குப்பின் என் மகனுக்கும் இதே போல் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென அவர் சூழ்ந்துள்ள நிர்வாகிகளிடம் கடிந்து கொள்கிறாராம்.

அதனாலேயே இவரை பதவி மாற்றம் செய்ய உள்ளார்களாம். இதை தொடர்ந்து மா சுபிரமணியம் இலக்காவையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தன் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்காமல் தன்னைத்தானே விளம்பரம் படுத்துவதையே மும்மரம் காட்டு வருகிறார். தற்போது வரை கிண்டியில் இருக்கும் மருத்துவமனைக்கு போதிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை. அங்கு சிகிச்சை எடுக்க வரும் நபர்களை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். தொடர்ந்து இது ரீதியாக புகாரானது வந்த வண்ணமாகவே உள்ளது.

அதனால் இவரை மாற்ற உள்ளனர். இறுதியாக பிடிஆர், இவர் இலக்கா மட்டும் மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் தனக்கு சரியான பதவி கிடைக்கவில்லை என்பதை நேரடியாகவே புலம்பியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன்படி இவருக்கு சரியான பொறுப்பு கொடுத்து உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மட்டும் முக்கிய பொறுப்பாளர் பதவி கொடுக்கலாம் எனக் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!.. மத்திய அரசு நடவடிக்கை…

0

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகலை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது.

ஏற்கனவே 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் முழுவதுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பாகிஸ்தானில் எல்லையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டேரி பகுதியில் இருக்கக்கூடிய சோதனை சாவடி முழுவதுமாக மூடப்படுவதாகவும் எல்லை வழியாக நாடு தாண்டி சென்றவர்கள் மே 1ஆம் தேதிக்குள் அவரவர் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் இருக்கக்கூடிய முப்படை தலைவர்களும் ஒரு வாரத்திற்குள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அதேபோல பாகிஸ்தானில் இருக்கக்கூடிய இந்திய முப்படை தூதர்கள் உடனடியாக இந்தியாவிற்கு திரும்பி வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ

0

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ

பஹல்காம் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்த அந்த வீடியோவில் “தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பயணிகள் சத்தம், அலறல், குழப்பம்”, மற்றும் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்தவர்கள்மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடக்கும் தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோக்களில் துப்பாக்கிச் சத்தமும், பயத்தில் அலறும் பயணிகள் குரலும் கேட்கப்படுகின்றன.

வீடியோ லிங்க்:

https://www.instagram.com/share/reel/BBJsxhFD4u

“இதை மோடிக்கு சொல்லிவிடு” – உயிர்தப்பியவரிடம் பயங்கரவாதி கூறியதாக குற்றச்சாட்டு

இந்த தாக்குதலில் உயிர்தப்பியவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். கேரளாவில் இருந்து வந்த பல்லவி என்ற பெண், தன்னுடைய கணவர் மஞ்சுநாத் கொல்லப்பட்ட பின், தானும் தன்னுடைய 18 வயது மகனும் பயங்கரவாதியிடம் தங்களையும் கொல்லக் கோரியதாக கூறியுள்ளார். ஆனால், அந்த பயங்கரவாதி, “உன்னை கொல்ல மாட்டேன், இந்த சம்பவத்தை பிரதமர் மோடிக்கு சொல்ல வேண்டும்” என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்லவி கூறியதாவது:

“நாங்கள் பஹல்காமில் இருந்தோம். என் கணவர் என் கண்முன்னே உயிரிழந்தார். நான் அழவும் முடியவில்லை, என்ன நடந்தது என்பதே புரியவில்லை. நாங்கள் எங்கள் மகன் அபிஜேயாவுடன் கேரளாவின் சிவமோகாவிலிருந்து வந்திருந்தோம்.”

அவர்கள் பயணித்த கார் டிரைவர் ஒருவர் இந்து பயணிகள் குறிவைக்கப்பட்டதாக கூறியுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு மூன்று பேர் ‘பிஸ்மில்லா’ என்று கூறியவாறு அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

“மூன்று அல்லது நான்கு பயங்கரவாதிகள் இருந்தனர். என் கணவர் கொல்லப்பட்ட பின், நான் ஒரு பயங்கரவாதியை நேரில் பார்த்து, ‘என் கணவரை கொன்றீர்களே, என்னையும் கொல்லுங்கள்’ என்று கேட்டேன். என் மகனும் அந்த பயங்கரவாதியை நோக்கி, ‘நாயே, என் அப்பாவை கொன்றாய், நம்மையும் கொல்’ என்று கூறினான்.”

இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PM மோடி, பாதுகாப்பு அமைப்புகள் மீது பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 5 அதிரடி முடிவுகள்!! பிரதமர் மோடி வைத்த செக்!!

0

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார்.

நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பானது காஷ்மீரில் இறந்த துப்பாக்கிச் சூடுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதனால் கோபம் அடைந்த பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சில முக்கியமான முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட 5 முக்கிய முடிவுகள் :-

✓ 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் முழுவதுமாக தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கிறார்.

✓ பாகிஸ்தானில் எல்லையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டேரி பகுதியில் இருக்கக்கூடிய சோதனை சாவடி முழுவதுமாக மூடப்படுவதாகவும் எல்லை வழியாக நாடு தாண்டி சென்றவர்கள் மே 1ஆம் தேதிக்குள் அவரவர் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

✓ இந்தியாவில் இருக்கக்கூடிய முப்படை தலைவர்களும் ஒரு வாரத்திற்குள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அதேபோல பாகிஸ்தானில் இருக்கக்கூடிய இந்திய முப்படை தூதர்கள் உடனடியாக இந்தியாவிற்கு திரும்பி வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ டெல்லியில் இருக்கக்கூடிய பாகிஸ்தான் தூதரகத்தில் 55 பேர் பணியாற்றி வரும் நிலையில் உடனடியாக அவர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட SEVS முழுவதுமாக நிறுத்தப்படுவதாகவும் இந்த விசாவின் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு சென்று விட வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பியிருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!!

0

செவ்வாய்க்கிழமை இன்று 22ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து அதே செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவருடைய மின்னஞ்சலுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் செய்தி வந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.

பயங்கரவாத கும்பலின் நடவடிக்கையை எதிர்த்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கௌதம் கம்பீர் அவர்கள் தன்னுடைய பதிவை போட்டதை தொடர்ந்து தன்னுடைய மின்னஞ்சலுக்கு கொலை மிரட்டல் வந்ததாக தெரிவித்திருக்கிறார். எனவே இவர் எம்பி ஆக இருந்த 2021 ஆம் ஆண்டில் இவருக்கு இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காவல்துறையும் தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதோடு உக்கிரமாக கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கௌதம் கம்பீர் அவர்களுக்கு வந்த மின்னஞ்சலில் ” நாங்கள் உன்னை கொல்ல போகிறோம் ” என்ற வரிகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கிறது.