Home Blog Page 253

குடல் அல்சர் புண் குணமாக.. இந்த எண்ணையை தினமும் காலையில் 10 மில்லி குடிங்க!!

0

மோசமான உணவுமுறை பழக்கத்தால் வயிற்றுப்புண்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர்.

அல்சர் புண் பாதிப்பால் வயிற்றுப்போக்கு,ஆசனவாய் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள்:

1)மோசமான உணவுமுறை பழக்கம்
2)உணவு தவிர்த்தல்
3)காரசாரமான உணவுகள்
4)புளிப்பு உணவுகள்
5)பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அல்சர் அறிகுறிகள்:

1)மலம் கழிப்பதில் சிரமம்
2)ஆசனவாய் எரிச்சல்
3)வயிறு எரிச்சல்
4)வயிற்று வலி

வயிற்றுப்புண் குணமாக வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)மாசிக்காய் பொடி
2)தேங்காய் பால்

செய்முறை விளக்கம்:-

மாசிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.மாசிக்காய் வாங்கி பவுடராக அரைத்தும் பயன்படுத்தலாம்.

பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மாசிக்காய் பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 மில்லி அளவு சாப்பிட வேண்டும்.இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் அல்சர் புண்கள் விரைவில் ஆறும்.

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

0

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன்.

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும்.

நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். அதேபோன்று இந்த ஒரு மந்திரத்தை ஆறு முறை கூறுவதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையே மாறிவிடும்.

“ஓம் முருகா போற்றி!
கந்தா போற்றி! கடம்பா போற்றி!
கதிர்வேலா போற்றி! ஆறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானே போற்றி! என் செல்லப் பிள்ளையை போற்றி!”

இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை கூறினாலே போதும், உங்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும். நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், துன்பங்கள் அனைத்துமே கடந்து விடும். நீங்கள் இதுவரை இழந்ததை விட வலிமையான ஒன்றை முருகப்பெருமான் உங்களுக்கு ஒதுக்கி இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தாண்டி செல்லக்கூடிய மனவலிமை உங்களுக்கு கிடைக்கும். எதிரிகள் அனைவரும் விலகி சென்று விடுவார்கள். அதேபோன்று இந்த ஒரு மந்திரத்தையும் இரவு தூங்குவதற்கு முன்பு ஆறு முறை கூறினால் முருகன் அருளால் கிடைக்கக்கூடிய பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.

“ஓம் பாலசுப்பிரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வரவர சுவாஹா!”

இந்த ஒரு மந்திரத்தை இரவு தூங்குவதற்கு முன்பு ஆறு முறை கூறிவிட்டு தூங்கினால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும் மறுநாள் நல்லதொரு திருப்பமாக உங்களுக்கு அமையும்.

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போகமாட்டீங்க!!

0

நாம் தினமும் ஒரு பழம் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.விலை அதிகம் இருக்கின்ற பழங்களைவிட விலை குறைவான பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக கொய்யா பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.

கொய்யா பழத்தில் வைட்டமின் சி,மெக்னீசியம்,கால்சியம்,வைட்டமின் பி6,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கொய்யா பழம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடலாம்.கொய்யா பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.இரத்த அழுத்தம் குணமாக கொய்யா பழம் சாப்பிடலாம்.

சளி,இருமல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டால் விடுதலை கிடைக்கும்.தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் இருக்கின்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்ற கொய்யா பழம் சாப்பிடலாம்.

உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைய வைக்க கொய்யா பழத்தை சாப்பிடலாம்.கொய்யா பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.கொய்யா பழத்தை சாப்பிட்டால் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.கொய்யா பழத்தை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

கொய்யா பழம் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுறது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடலாம்.

இந்த பொடி சாப்பிட்டால்.. உங்கள் தலையில் ஒரு வெள்ளைமுடி கூட இருக்காது!!

0

தற்பொழுது வெள்ளைமுடி பாதிப்பை வயது பேதமின்றி அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மோசமான வாழ்க்கைமுறையால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.தலைமுடியை பராமரிக்க தவறுவதால் தலைமுடி இளம் வயதிலேயே வெள்ளையாகிவிடுகிறது.

இளம் வயது நரைமுடியை கருப்பாக மாற்ற ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வு ஏற்படும்.கெமிக்கல் ஹேர் டை சீக்கிரம் முடியை கருமையாக மாற்றும் என்றாலும் தலைமுடி ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் சில சரும பிரச்சனைகளும் ஏற்படும்.எனவே கெமிக்கல் ஹேர் டைக்கு மாற்று இயற்கை பொருட்களை கொண்டு டை அல்லது ஆயில் தயாரித்து பயன்படுத்தலாம்.

அதேபோல் நாம் சாப்பிடும் உணவுகள் மூலமும் நரைமுடியை கருப்பாக மாற்றலாம்.கரிசலாங்கண்ணி கீரையை பொடித்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி கீரை பொடி சாப்பிட்டால் வெள்ளை முடி கருப்பாக மாறும்.

அதேபோல் 100 கிராம் நெல்லிக்காய் வற்றலை பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

வெள்ளை முடியை கருமையாக மாற்றும் மூலிகை பானம் தயாரிக்கும் முறை:

1)கரிசலாங்கண்ணி கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)பெரிய நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடி,ஒரு தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் பொடி போட்டு கலந்துவிட வேண்டும்.பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸில் ஊற்றி பருகினால் வெள்ளைமுடி கருமையாக மாறும்.

அதேபோல் முருங்கை கீரை,கரிசலாங்கண்ணி கீரை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை பொடித்து டீ செய்து குடித்தால் நரைமுடி அடர் கருமையாக மாறிவிடும்.

வாழ்நாள் முழுவதும் 20 வயது தோற்றத்துடன் இருக்க.. இந்த ஒரு ஜூஸை தினமும் பருகலாம்!!

0

வாழைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.வாழைப்பழம்,வாழைப்பூ,வாழைத்தண்ட,வாழையிலை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் வாழைத்தண்டில் ஜூஸ்,சூப் செய்து குடித்து வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு – ஒரு கப்(பொடியாக நறுக்கியது)
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய வாழைத்தண்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வாழைத்தண்டை நான்கு முதல் ஐந்துமுறை சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் அரை தேக்கரண்டி சீரகத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி சிறிது இந்துப்பு கலந்து பருகலாம்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1.உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.சருமம் பளபளப்பாக மாற வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம்.

2.முகத்தில் உள்ள பருக்கள் நீங்க வாழைத்தண்டு ஜூஸ் செய்து பருகலாம்.சிறுநீரக கற்கள் நீங்க வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.

3.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகள் அகல வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.

4.வாழைத்தண்டு ஜூஸ் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.தினமும் ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு பருகினால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் குணமாகும்.

5.வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் அகலும்.டீ,காபிக்கு பதில் வாழைத்தண்டு சாறு குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் தோல் சுருக்கம் வராமல் இருக்கும்.அதேபோல் வாழைத்தண்டில் சூப் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தள்ளிப்போன மாதவிடாயை வரவைக்கும் ஜூஸ்!! இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!!

0

பெண்கள் மாதவிடாய் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.இப்பொழுது பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கிறது.இதனால் உடல் மற்றும் மன அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் பாதிப்பு குணமாக வாழைப்பூவில் ஜூஸ் மற்றும் சூப் செய்து குடிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வாழைப்பூ
2)பனங்கற்கண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த வாழைப்பூ ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் பீரியட்ஸ் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பூ
2)சீரகம்
3)மஞ்சள் தூள்
4)மிளகுத் தூள்
5)இந்துப்பு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும.அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கிய வாழைப்பூவை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்துக் கொளல் வேண்டும்.பின்னர் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கொதிக்க வைத்து மூன்றுவேளை குடித்தால் ஒரே நாளில் மாதவிடாய் வந்துவிடும்.

கிட்னி ஸ்டோன் பனி போல் கரைய.. இந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்!!

0

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.நிச்சயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

தீர்வு 01:

சிறுகன்பீளை மற்றும் மூக்கிரட்டை கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொளல் வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மூக்கிரட்டை மற்றும் சிறுகன்பீளையை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

தீர்வு 02:

ரணகள்ளி மற்றும் கல்லுருக்கி ஆகிய இரண்டு இலைகளையும் சம அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய ரணகள்ளி மற்றும் கல்லுருக்கி இலையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து குடித்தால் சிறுநீரக கல் கரையும்.

தீர்வு 03:

வெட்டி வேர்,தொட்டால் சிணுங்கி ஆகியவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து 100 மில்லியாக சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் அறவிட வேண்டும்.பின்னர் இந்த பானத்தை பருக வேண்டும்.

தீர்வு 03:

பத்து பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் சிறுநீரக கல் கரையும்.

வேனல் கட்டியை வலி இன்றி குணமாக்க.. இந்த 04 வீட்டு வைத்தியங்களை உடனே செய்து பாருங்கள்!!

0

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாகிறது.குறிப்பாக தோலில் வேனல் கட்டிகள் வந்து வலி,எரிச்சலை ஏற்படுத்தும்.எனவே வேனல் கட்டி குணமாக இந்த நான்கு வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

வேப்பிலை

ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை வேனல் கட்டிகள் மீது பூசி நன்றாக காய்ந்த பின்ன வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.இப்படி செய்தால் வேனல் கட்டி குணமாகும்.

தீர்வு 02:

மஞ்சள் தூள்

குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொண்டால் வேனல் கட்டி கொப்பளங்கள் குணமாகும்.மஞ்சளில் இருக்கின்ற இயற்கை எதிர்ப்பு பண்புகள் வேனல் கட்டியை குணப்படுத்த உதவுகிறது.

தீர்வு 03:

வேப்ப எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது வேப்ப எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.பிறகு காட்டன் பஞ்சை அதில் போட்டு நினைத்து சூட்டு கொப்பளம் மீது வைத்து ஒத்தி எடுக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சூட்டு கொப்பளம் குணமாகும்.

தீர்வு 04:

வேப்பிலை பொடி
நல்லெண்ணெய்

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி வேப்பிலை பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு இதை வேனல் கட்டி மீது தடவி நன்றாக உலர்த்த வேண்டும்.அதன் பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு வேனல் கட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் சூட்டு கொப்பளங்கள் குணமாகும்.

உங்கள் பார்வை திறன் அதிகரிக்க கண் பிரச்சனைகள் குணமாக.. இந்த ஒரு ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

0

கண் பார்வை திறனை மேம்படுத்த கேரட்டை உணவாக சாப்பிடலாம்.வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.கண் எரிச்சல்,கண் நமைச்சல்,கண் சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட் – ஒன்று
2)நெல்லிக்காய் – ஒன்று
3)கறிவேப்பிலை – ஒரு கொத்து
4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் ஒரு முழு கேரட்டை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 02:

பின்னர் ஒரு முழு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் விதையை மட்டும் நீக்கிவிட வேண்டும்.

படி 03:

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை தண்ணீர்விட்டு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 04:

பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து அதில் கேரட் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய நெல்லிகாய் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலையை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து பருகினால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.கண் எரிச்சல்,கண் வீக்கம்,கண் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட் – ஒன்று
2)பாதாம் பருப்பு – நான்கு
3)தேங்காய் துருவல் – அரை கப்
4)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

படி 01:

முதலில் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு பாதாம் பருப்பு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 02:

பிறகு தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.அடுத்து நறுக்கிய கேரட் துண்டுகள்,பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸை குடித்து வந்தால் கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.கேரட்டில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை அதிகரிக்கும்.

உங்கள் விந்து தண்ணீர் போல் ஊத்துதா? இதை கெட்டிப்படவைக்க பாலில் இதை கலந்து சாப்பிடுங்கள்!!

0

பெரும்பாலான ஆண்களுக்கு நீர்த்த விந்து பிரச்சனை இருக்கின்றது.இந்த நீர்த்த விந்துவை கெட்டிப்பட வைக்க முருங்கை கீரையை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)பசும் பால் – ஒரு கப்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் முருங்கை கீரையை சுத்தம் செய்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்னர் இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த முருங்கை கீரை பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் நீர்த்த விந்து கெட்டிப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை விதை – 100 கிராம்
2)முருங்கை பூ – 100 கிராம்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் முருங்கை விதை மற்றும் முருங்கை பூ ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கிண்ணத்தில் இந்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒன்றரை தேக்கரண்டி அளவு தேனை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டு வந்தால் நீர்த்த விந்து கெட்டிப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின் – ஒரு கப்
2)பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் முருங்கை பிசினை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை பிசின் பொடியை கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் நீர்த்த விந்து கெட்டிப்படும்.