Home Blog Page 254

இந்த கீரை சூப் குடித்தால்.. சாகும் வரை மூட்டு வலி பாதிப்பை சந்திக்கவே மாட்டீங்க!!

0

மூட்டு இணைப்பு வலிமையை அதிகரித்தால் மூட்டு வலி,வீக்கம் போன்ற பாதிப்புகளை பார்க்காமல் இருக்கலாம்.ஆகவே மூட்டு வலிமையை அதிகரிக்க முடக்கத்தான் கீரையில் சூப் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)முடக்கத்தான் கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் முடக்கத்தான் கீரையை உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை வெயிலில் காயவைத்து பொடி பக்குவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த முடக்கத்தான் கீரை பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் மூட்டு எலும்பு வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முடக்கத்தான் கீரை – கால் கப்
2)சின்ன வெங்காயம் – 10
3)பூண்டு பல் – நான்கு
4)உப்பு – தேவையான அளவு
5)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முடக்கத்தான் கீரையை தண்ணீரில் போட்டு அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு வைத்துள் கொள்ள வேண்டும்.

பிறகு நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து முடக்கத்தான் கீரையை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயத்தை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து பூண்டு பல்லை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு தேவையான அளவு இந்துப்பு போட்டு குடித்து வந்தால் மூட்டு இணைப்பு வலிமையாக இருக்கும்.மூட்டு வலி,மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படமால் இருக்க முடக்கத்தான் கீரையில் சூப் செய்து குடிக்கலாம்.

உடல் சூட்டை குறைக்கும் வெற்றிலை!! சூடு தணிய இந்த மாதிரி ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

0

வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வெற்றிலையை அரைத்து ஜூஸ் செய்து பருகலாம்.குளிர் பானங்களுக்கு பதில் வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – இரண்டு
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தேங்காய் துருவல் – அரை கப்
4)கற்கண்டு – சிறிதளவு
5)குல்கந்து – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெற்றிலையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அரை கப் அளவிற்கு தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் வெற்றிலையை போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்த பெருஞ்சீரகத்தை போட வேண்டும்.அதன் பிறகு துருவி வைத்துள்ள தேங்காயை கொட்டிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டிய் குல்கந்து மற்றும் தேவையான அளவு கற்கண்டு போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெற்றிலை ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் வெற்றிலையை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த வெற்றிலை ஜூஸை வடிகட்டி குடித்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.

தீராத மனக்குழப்பங்கள் மற்றும் மனக்கஷ்டங்கள் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!!

0

தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தை தரும் மன வேதனை என்பது வேறு. ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சிலருக்கு பிரச்சனைகள் இருக்கும். ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஒரு எளிய பரிகாரம் அதற்கான தீர்வை கொடுத்து விடும்.

இதனை தெரியாமல் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய பதிவுதான் இது. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு முழு நம்பிக்கை தான் மூலாதாரம். இந்த பரிகாரத்திற்கும் அப்படித்தான் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் இந்த ஒரு பொருளை எடுத்து தண்ணீரில் கரைத்து விடும் பொழுது, உங்களது கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போகும்.

இந்த பரிகாரம் செய்வதற்கு மண்டை வெல்லம் என்று சொல்லக்கூடிய வெல்லத்தை கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வ கோவிலில் இருக்கும் குளத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது உங்களது இஷ்ட தெய்வம் இருக்கும் கோவிலில் உள்ள குளத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மீன்கள் இருக்கக்கூடிய கோவில் குளத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நிச்சயம் 100% பலன் கொடுக்கும்.

அந்த மண்டை வெல்லத்தை உங்கள் கையாலையே வாங்கி, உங்கள் கையினாலே குளத்தில் கரைத்து விட வேண்டும். வெல்லத்தை அப்படியே தூக்கி கொட்ட கூடாது. ஒரு கைப்பிடி அளவு வெள்ளத்தை எடுத்து, உங்களது கை தண்ணீரில் மூழ்கும் படி அந்த வெல்லத்தை கரைக்க வேண்டும். அந்த வெல்லம் கரைவது போல உங்களுடைய கஷ்டங்களும் கரைந்து போக வேண்டும் என்று உங்களது குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதனுடன் சேர்த்து அந்த குளத்தில் இருக்கும் மீன்களுக்கு பொறி போன்ற ஏதேனும் ஒரு உணவை வழங்க வேண்டும். அந்த மீன்கள் நீங்கள் போட்ட உணவை உண்ணும் பொழுது, உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். தீராத நோய்கள், தீராத வினைகள், தீராத கஷ்டங்கள், தீராத மன அழுத்தம் இப்படி பல நாட்களாக உங்களுக்குள் இருந்த மன கஷ்டத்தை போக்கக்கூடிய பரிகாரம் தான் இந்த பரிகாரம். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் பலன் உண்டு.

குழப்பம் தீர்ந்து தெளிவான முடிவை எடுக்க செய்ய வேண்டிய பரிகாரம்:

ஒரு செயலை குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை, ஆயிரம் பேர் கிட்ட கருத்துக்கள் கேட்டாலும் தெளிவான ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்று நினைக்கும் பொழுது உங்களது குழப்பம் தீர இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இந்த பரிகாரம் செய்வதற்கு ஐந்து முதல் ஆறு கருந்துளசி செடியின் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சின்னதாக படிகார கல் தேவை. இந்த இரண்டு பொருளையும் ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டி தலையணைக்கு அடியில் வைத்து அன்று இரவு தூங்குங்கள். மறுநாள் காலையில் எழும்பொழுது உங்களது மனம் தெளிவு பெறும். குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். பிரச்சனைக்கு உண்டான தீர்வை எளிதில் எடுத்து விடுபவர்கள்.

இதுஒரு எளிய பரிகாரம் தான். ஆனால் இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும் பொழுது, நல்ல ஒரு மாற்றத்தை உணருவீர்கள். பிரச்சனை சரியாகி விட்டது என்றால், அந்த பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட்டு வர வேண்டும்.

அதே போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் கருந்துளசியின் இலைகளை கசக்கி அதிலிருந்து சாற்றினை எடுத்து, நெற்றியில் பூசிக்கொண்டு தூங்குவதன் மூலம் குழப்பங்கள் தீர்ந்து மனம் தெளிவடையும்.

தக்காளி காம்பு நீக்காமல் யூஸ் பண்றிங்களா? உஷார் இனி இந்த தப்ப பண்ணிடாதீங்க!!

0

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று தக்காளி.குழம்பு,சட்னி,வறுவல்,கிரேவி என்று பெரும்பாலான உணவுகள் செய்ய தக்காளி தேவைப்படுகிறது.தக்காளியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

தக்காளி பழத்தை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.தக்காளி பழத்தை உட்கொண்டால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக தக்காளி பழத்தை உட்கொள்ளலாம்.தக்காளி பழத்தை சாப்பிட்டால் இளமை பொலிவு அதிகரிக்கும்.

ஆனால் நாம் தக்காளி பயன்படுத்தும் பொழுது அதன் காம்பு பகுதியை நீக்கிவிட வேண்டும்.இன்று பலர் காம்பு பகுதியை நீக்காமல் அப்படியே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.தக்காளியின் காம்பு பகுதியில் கெமிக்கல் உள்ளது.தக்காளியை காம்பு பகுதியோடு சேர்த்து உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

தக்காளியை காம்போடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.தக்காளியை காம்போடு சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.தக்காளியை காம்பு பகுதியோடு சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கல்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அமிலத் தன்மை கொண்ட தக்காளி பழத்தை காம்பு நீக்காமல் உணவாக எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும்.காம்பு நீக்கப்படாத தக்காளி பழத்தை சாப்பிட்டால் இரைப்பை அலர்ஜி பிரச்சனை ஏற்படும்.

காம்பு நீக்கப்படாத தக்காளி பழத்தை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படும்.சிலருக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்படலாம்.எனவே இனி தக்காளி பழத்தை காம்பு நீக்கிவிட்டு சமைக்க பயன்படுத்துங்கள்.

இந்த இரண்டு செடிகளை வீட்டில் வைத்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்..!!

0

ஒரு வீடு வாஸ்து படி கட்டி இருந்தாலும் சரி, வாஸ்து பார்த்து கட்டாமல் இருந்தாலும் சரி அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றத்தை காண முடியும். வாஸ்து படி சரியான முறையில் ஒரு வீட்டினை கட்டி இருந்தாலும், குலதெய்வ அருள் இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.

ஒரு வீட்டிற்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை என்ன செய்தாலும் தீர்க்கவே முடியாது. ஏனென்றால் ஒரு குடும்பம் என்பதற்கு அந்த குடும்ப குலதெய்வத்தின் அருள் என்பது மிக மிக முக்கியம். மற்ற தெய்வங்களின் அருள் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கிறதோ இல்லையோ, குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

பொதுவாக அனைத்து வீடுகளிலும் ஏதேனும் ஒரு செடியை கண்டிப்பாக வளர்த்து வருவார்கள். அது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம் அல்லது அழகிற்காகவும் இருக்கலாம். அவ்வாறு வளர்க்கக்கூடிய செடிகளுள் இந்த இரண்டு செடியையும் சேர்த்து வளர்த்து வந்தால் உங்கள் குலதெய்வத்தினுடைய அருளை கண்டிப்பாக பெற முடியும்.

ஏனென்றால் இந்த இரண்டு செடிகளும் குலதெய்வத்தின் அருளை ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டது. வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளுள் 1.பவளமல்லி செடியும், மருதாணி செடியும் ஒன்றாக இணைந்து இருந்தால் மிகவும் சிறப்பு. அதேபோன்று வீட்டில் 2.மாதுளை செடி வளர்த்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எனவே இந்த இரண்டு செடிகளையும் வளர்க்கும் பொழுது குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

பிரம்ம கமலம் செடியையும் வீட்டில் வளர்க்கலாம். அது குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும். அதேபோன்று உங்கள் வீட்டின் பூஜையறையில் ஸ்ரீ சக்கரம் வரைந்து வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை செடியிலிருந்து பூக்களை பறித்து வர சொல்லி அந்த ஸ்ரீ சக்கரத்திற்கு போட்டு வழிபட செய்யும் பொழுது குழந்தைகளது கல்வி, ஞானம் மற்றும் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஒரு வீட்டின் வடகிழக்கு திசை மிகவும் குளிர்ச்சியாக அதாவது நீரோட்டத்துடன் இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம், உடல் ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை ஆகிய அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதேபோன்று வடகிழக்கு திசையில் செடிகள் வளர்த்து வந்தால் பெரிய செடிகளாக வளர விடக்கூடாது. வீட்டின் ஜன்னல் மட்டத்திற்கு மட்டுமே செடிகளின் உயரம் இருக்க வேண்டும்.

வீட்டை சுற்றிலும் பசுமையான செடிகளை வைத்து வளர்த்து வருவது, தெய்வ கடாட்சத்தை உருவாக்கி தரும். அதே போன்று வீட்டில் உள்ளேயும் எப்பொழுதும் நறுமணத்துடனும், காற்றோட்டத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி வெற்றியில் முடிய வேண்டுமா..??

0

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் என்பது இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பலவிதமான முயற்சிகளை எடுப்போம். ஆனால் நாம் நினைத்ததற்கு எதிர் மாறாகவே அந்த செயல் முடியும். அதாவது நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும்.

இதுபோன்று நாம் எடுக்கின்ற காரியம் அனைத்தும் தோல்வியிலே முடிகிறது, வெற்றியை காண முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய செயலை செய்வதன் மூலம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடிவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

வாழ்க்கையில் தோல்வியையே கண்டு வருபவர்கள், வெற்றியை நோக்கி முதல் படி எடுத்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய செயலை செய்து பலன் அடையலாம்.
ஒரு காரியம் சித்தி அடைய வேண்டும் என்றால் சித்தி விநாயகரை வழிபட வேண்டும் என்று கூறுவார்கள்.

கோவில் கும்பாபிஷேகம், பூமி பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற அனைத்து பூஜைகளிலும் முதலாவதாக கணபதியை தான் வழிபடுவார்கள். அனைவரது துன்பங்களையும், துயரங்களையும் அறவே நீக்க கூடியவர் தான் பிள்ளையார்.

எந்த ஒரு முக்கியமான செயலை செய்வதற்கு முன்பாகவும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை உடைத்து விட்டு செய்தோம் என்றால், அந்த காரியம் நிச்சயம் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். நூறு சூரிய பகவானுக்கு இணையானவர் தான் இந்த விநாயகர்.

“வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்பிரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா!”

விநாயகருக்கு உரிய இந்த மூல மந்திரத்தை அனுதினமும் கூறும் பொழுது, அனைத்து நாட்களும் நிச்சயம் நன்மையை கொடுக்கக்கூடிய நாளாக உங்களுக்கு அமையும்.

சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது தீபாவளி நாட்கள், பொங்கல் நாட்கள், பிறந்தநாள் வரக்கூடிய நாட்கள் இது போன்ற நாட்கள் வருவதற்கு முன்பாகவே எவ்வாறு ஆவலுடன் இருப்போமோ, அதேபோன்றுதான் ஒரு முக்கியமான செயலை நாளை செய்யவிருக்கிறோம் என்கின்ற பொழுது, அந்த நாள் அதிகாலையில் இருந்தே ஒரு பத்து நிமிடம் ஆவது அந்த செயல் வெற்றியில் முடிந்ததாக எண்ணி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சிறு பிள்ளை பருவத்தில் எவ்வாறு ஆர்வமாக இருந்து அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோமோ, அதே போன்று நாம் செய்யக்கூடிய செயலிலும் ஆர்வமாக இருந்தோம் என்றால் அந்த செயல் நிச்சயம் வெற்றியில் முடியும். மனதில் எந்த ஒரு பயமும், குழப்பமும் இருக்கக் கூடாது.

பெண்கள் இந்த பூஜை வழிபாட்டை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்..!! தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!!

0

இந்த உலகில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு காரணம் பணம் வேண்டும் என்பதற்காக மட்டுமே. பணம் இல்லாமல் எவராலும் வாழ்க்கையை நடத்த முடியாது. எனவே தான் மனிதனாய் பிறந்த அனைவரும் வேலைக்கு சென்று உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஒரு சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை சிறிதளவும் கூட சேமித்து வைக்க முடியாது. ஏதேனும் ஒரு பண விரயம் ஏற்படுவதற்கான சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும். வரக்கூடிய செலவுகள் சுபச் செலவுகளாக இருந்தாலும் கூட பரவாயில்லை, ஆனால் அசுப செலவுகள் ஆகவே வந்து கொண்டு இருக்கும். இதனால் பணம் சம்பாதித்தும் ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்கும்.

ஒருவரது வாழ்க்கை சுபிட்சமாக அமைய வேண்டும் என்றால் நல்ல வேலை, நல்ல படிப்பு, நல்ல சம்பாத்தியம், பணம் சேமிக்க கூடிய சூழ்நிலை இவை அனைத்தும் ஏற்பட வேண்டும். ஆனால் அதற்கு மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.

மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் தான் அதற்கு முயற்சிக்க வேண்டும். அதாவது ஒரு குழந்தையை நாம் திட்டிக்கொண்டே இருந்தால் அது நம்மிடம் வராது. அந்த குழந்தையை அன்பாக அரவணைத்து பாசம் காட்டினால் மட்டுமே நம்மிடம் வரும். அது போல தான் மகாலட்சுமியின் வருகை உங்களது இல்லத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமியை அனு தினமும் பூஜிக்க வேண்டும்.

மகாலட்சுமியின் அருள் உங்கள் வீட்டிற்கு கிடைக்க வேண்டும் என்றால், தினமும் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரின் விக்கிரகம் உங்கள் வீட்டில் இருக்கிறது என்றால், அந்த விக்கிரகத்திற்கு தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். தண்ணீர், பசும்பால், சுத்தமான சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

விக்கிரகம் இல்லாதவர்கள் மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்தை சுத்தம் செய்து, சுத்தமான சந்தனம் மற்றும் குங்குமத்தை கொண்டு பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். உங்களால் எவ்வாறு அலங்கரிக்க முடியுமோ, அவ்வாறு மகாலட்சுமி தாயை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு குங்குமம் மற்றும் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை செய்த பிறகு மகாலட்சுமிக்கு உகந்த நாமங்களை படிக்க வேண்டும். பெரிய நாமங்களை கூறாவிட்டாலும் கூட “ஓம் மகாலட்சுமியே நமஹ”என்ற எளிய நாமத்தை கூறி வழிபட்டு கொள்ளலாம். 108, 54, 27 முறை என உங்களால் முடிந்த அளவிற்கு தினமும் இந்த நாமத்தை கூறி தாயாரை வணங்க வேண்டும்.

உங்களால் முடிந்த நெய்வேத்தியத்தை மகாலட்சுமி தாயாருக்கு படைத்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும். இந்த முறைகளைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக தாயாரை வணங்க வேண்டும் என்று நினைத்தால் இட்லி பூ என்று அழைக்கக்கூடிய பூவினை கொண்டு அர்ச்சனை செய்யலாம். இந்த பூவினை தேன், காய்ச்சாத பசும்பால் ஆகியவற்றில் நினைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

மாதுளை பழத்தின் முத்துக்களைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு வழிபடும் பொழுது அனைத்து விதமான பலன்களும் நமக்கு கிடைக்கும். இதனால் அஷ்ட லட்சுமிகளின் வருகையும் உங்களது இல்லத்திற்கு கிடைக்கும். மேலும் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்த பூக்களை நிலை வாசலின் இரண்டு புறங்களிலும், வீட்டின் எட்டுத் திக்குகளிலும் வைப்பதன் மூலம் மகாலட்சுமியின் பாதுகாப்பு கவசம் வீடு முழுவதும் நிறைந்து இருக்கும்.

மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்து விட்டால் போதும் நாம் உழைக்கின்ற உழைப்புக்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிடும். வாழ்கின்ற வீட்டில் நிம்மதி பிறக்கும். பணவரவு அதிகரித்து, வீட்டில் பணம் தங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

No Work No Pay.. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி இன்று முதல் 24 ஆம் தேதி வரை ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக கொடுக்கவும், ரேஷன் ஊழியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி ஊதியம் உயர்த்தி வழங்குவது போன்ற சில கோரிக்கைகளை முன்னெடுத்து ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் மற்றும் சில கோரிக்கைகளுக்காக இது போன்ற போராட்டங்களை நடத்திய பொழுது அலுவலகத்தில் பணி செய்யாத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்தது போலவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ரேஷன் கடை ஊழியர்களை கண்டறிந்து அவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் இருக்கும்பட்சத்தில் ரேஷன் கடைகளில் மாற்று ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களுக்கு ரேசன் பொருட்கள் இதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைத்திட அரசு வலியுறுத்தி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பணிக்கு வராத ஊழியர்களுக்கு no work no pay என்பதன் அடிப்படையில் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த போது அவர்களின் பெயர்களை கண்டறிந்து அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படும் என்பது போல எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

திரிஷாவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய கமலஹாசன்!! கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

0

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய திரைப்படம் தான் தாக் லைஃப். இந்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசன் சிலம்பரசன் மற்றும் திரிஷா உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வரக்கூடிய நிலைகள் ப்ரோமோஷன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா அவர்களிடம் நடிகர் கமலஹாசன் அவர்கள் வாழைப்பழத்தை வைத்து இரட்டை அர்த்த காமெடி செய்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகராக விளங்கக்கூடிய கமலஹாசன் அவர்கள் இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டு இருப்பது அருவருக்கத்தக்க ஒன்றாக உள்ளது என்றும் இதனை அவர் விளையாட்டாக கூறியிருந்தாலும் அவர் சொல்லியிருப்பது தவறு என்றும் பல தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா அவர்கள் வாழைப்பழத்தை எண்ணெயில் பொரித்து உண்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அதனுடைய பெயர் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அருகில் இருந்த அசோக் செல்வன் அவர்கள் பழம்பொரி என பதிலளிக்க கமலஹாசனும், பெயர் தெரியாது ஆனால் வாயில் மட்டும் நுழைத்துக் கொள்வார்கள் என தெரிவித்தது அங்கிருந்த ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

சிம்புவை கல்யாணம் பண்ணிக்க.. இந்த தகுதி மட்டும் போதும்!! அவரே வெளிப்படையாக சொன்னது!!

0

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய தக்லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன், அசோக் செல்வன், சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்வுகள் வேகம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் உடைய முதல் சிங்களான ஜிங்குச்சா வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சிம்புவிடன் அவருடைய திருமணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நடிகர் சிம்பு அவர்களின் தனக்கு மனைவியாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் தன்னுடைய கனவுகள் என்ன என்பது குறித்தும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்திருப்பதாவது :-

தனக்கு திருமணத்தில் பிரச்சனை இல்லை என்றும் இங்க இருக்கக்கூடிய மக்களிடத்தில் தான் பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்த சிம்பு, இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கக்கூடிய மனப்பான்மை இல்லாமல் போய்விட்டது எனவும் ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் இல்லை என்றால் அதற்கு பதில் மற்றொருவர் என மாற்றிக் கொள்ளக்கூடிய மனப்பான்மை தவறானது என்றும் பொதுவாகவே வாழ்க்கையை பலர் வந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் அதற்காக வந்தவர்களை வேண்டாம் என நினைப்பது தவறான காரியம் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, நமக்குன்னு ஒருத்தர் வரும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே நல்ல படியாக மாறும் என்றும் அந்த உறுத்தல் காச நான் கடைசி வரை வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்யவே நான் சொல்ல வருவது எனக்கு மறந்து விடும் என கூறி சென்று அவர்கள் தன்னுடைய உரையை முடித்தார்.