Home Blog Page 252

1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!! (ஏப்ரல் 23) இன்று ரூ.92,910 க்கு விற்பனை!!

0

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் ஏப்ரல் 23 2025 ஆன இன்று 92 ஆயிரம் ரூபாயை அதாவது கிட்டத்தட்ட 93 ஆயிரம் வரை 10 கிராம் தங்கமானது விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மிகப்பெரிய சேமிப்பு முதலீடாக இருந்த நிலையில் தற்போது தங்கத்தில் சேமிப்பு என்பது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய கனவாக மாறிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்றைய தங்கம் விலை :-

✓ 24 கேரட்

1 கிராம் – ரூ.10,136
8 கிராம் – ரூ.81,088
10 கிராம் – ரூ. 1,01,360

✓ 22 கேரட்

1 கிராம் – ரூ.9,291
8 கிராம் – ரூ. 74,088
10 கிராம் – ரூ. 92,910

✓ 18 கேரட்

1 கிராம் – ரூ. 7602
8 கிராம் – ரூ. 60,816
10 கிராம் – ரூ. 76,020

தங்கத்தின் விலை நிலவரம் ஆனது நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தினம் தினமும் மாறுபட்டு வருகிறது. எனவே தங்கம் வாங்க செல்லும் முன்பு அன்றைய தங்கத்தின் விலை என்ன என்பதை தெரிந்து கொண்டு மக்கள் தங்கம் வாங்குவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சேலம் தமிழ்நாட்டில் வெள்ளி விலை நிலவரம் :-

1 கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படும் நிலையில் 10 கிராம் வெள்ளி 1042 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியானது 1,10,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்த வரை ஏப்ரல் மாதத்தில் உயர்வு தாழ்வு என மாறி மாறி வரக்கூடிய நிலையில் இன்றைய வெள்ளி விலை 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க முடிவு!! மகிழ்ச்சியில் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள்!!

0

தமிழ்நாட்டில் இந்த வருடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் முதலில் இந்த நிகழ்வு மதுரையில் துவங்கிய நிலையில் தற்பொழுது நாமக்கல்லில் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

பட்டா வழங்குவதற்கான நிகழ்வு கடந்த மார்ச் மாதமே நடைபெற இருந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வருகிறமே 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மதுரைக்கு நேரில் வந்து பட்டாக்களை உரியவர்களுக்கு வழங்குவார் என்றும் அதனால் 11 தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்கள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புறம்போக்கு நிலங்களில் வசிக்கக்கூடியவர்களின் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் அதற்கான பட்டாக்கள் பெண்களினுடைய பெயரில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து நகர்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டா என்று இருக்கக்கூடியவர்களுக்கு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழக்கூடிய நபர்களுக்கும் பட்டா வழங்க அறிவுறுத்தி இருப்பதாகவும் அதற்கான பணிகள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரம் என்கின்ற ஊரில் இருக்கக்கூடிய குடியிருப்பு வாசிகள் நகர்ப்புற வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருவதாகவும் அவர்களுக்கு கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதோடு அவர்கள் நீண்ட நாட்களாக அங்கு வாழ்வதற்கான வீட்டு வரி ரசீதையும் மின் இணைப்பு ரசீது வருமான வரம்ப உள்ள தாவணங்களையும் சரிபார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முழுவதும் ஒரு வருடத்திற்கு 1.11 கோடி பட்டாக்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிப்பது பட்டா இல்லாத நிலம் மற்றும் வீடு வைத்திருக்கக் கூடியவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேமிப்பு கணக்கிற்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்!! உங்களுக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா!!

0

இந்தியாவில் இருக்கக்கூடிய சில குறிப்பிட்ட வங்கிகளில் எப் டி கணக்குகளுக்கு மட்டுமல்லாது சேமிப்பு கணக்குகளுக்கும் 7 முதல் 7.5% வரையிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. என்ன சேமிப்பு கணக்குகளால் நமக்கு அதிக அளவு வட்டி கொடுக்கக்கூடிய சிறந்த வங்கிகளாக இருக்கக்கூடிய சில வங்கிகளை இந்த தொகுப்பில் காணலாம்.

RBL வங்கி :-

இந்த வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 7.5% வட்டி வழங்கப்படுவதோடு அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையிலான இருப்பு வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளுக்கு 7.5% வட்டியும் ஒரு லட்சம் வரையிலான இருப்பு வைத்திருக்கக்கூடிய கணக்குகளுக்கு 3.5 சதவிகிதமும் 5 லட்சம் வரையிலான வாய்ப்புகளுக்கு 4.5% வட்டியும் 5 முதல் 10 லட்சம் வரையிலான இருப்பு வைத்திருக்கக்கூடிய கணக்குகளுக்கு 5.5 சதவிகிதமும் 10 முதல் 25 லட்சம் வரையிலான வைப்பு வைத்திருக்க கூடியவர்களுக்கு 6.5 சதவீத வட்டியையும் இந்த வங்கி வழங்கி வருகிறது.

IDFC FIRST வங்கி :-

இந்த வங்கியில் அதிகபட்ச வட்டியாக 7.25 சதவிகிதம் வழங்கப்படுகிறது. இதற்கான நிபந்தனை குறைந்தபட்ச இருப்புத்தொகை 10 லட்சம் இருக்க வேண்டும் என்பதாகும்.

INDUSINT வங்கி :-

இந்த வங்கியில் 10 லட்சத்திற்கும் மேல் இருப்பு வைத்திருக்கக்கூடிய சேமிப்பு கணக்கு தாரர்களுக்கு 7 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது

YES வங்கி :-

இந்த வங்கியில் தினசரி 10 லட்சத்திற்கு மேல் இருப்புத் தொகையை பராமரிக்கக் கூடியவர்களுக்கு 7% வட்டியானது வழங்கப்பட்டு வருகிறது.

BANDHAN வங்கி :-

எஸ் வங்கியை போலவே பந்தன் வங்கிகளும் தினசரி 10 லட்சத்திற்கும் மேல் இருப்பு வைத்திருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.

AU வங்கி :-

இந்த வங்கிகளும் 7 சதவீத வட்டி விகிதத்தை பெறுவதற்கு குறைந்தபட்ச இருப்பு தொகையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா பேசுறது சும்மா!.. குட் பேட் அக்லி சர்ச்சைக்கு பிரேம்ஜி என்ன சொல்றார் பாருங்க!…

0

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என விளக்களித்துள்ளனர். இதையடுத்து இளையராஜாவுக்கு பணத்தாசை என சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

Gangai Amaran who hit the ball!! The moment he roasted Ilayaraja with words!!
Gangai Amaran who hit the ball!! The moment he roasted Ilayaraja with words!!

அதைத்தொடர்ந்து ஒரு விழாவில் பேசிய இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் ‘நீங்கள் 7 கோடி கொடுத்து இசையமைப்பாளர் போடும் பாட்டு ஹிட் அடிக்கவில்லை. எங்களின் பாடல்கள்தான் ஹிட் ஆகிறது. குட் பேட் அக்லி படத்தின் ஹிட்டுக்கு அந்த பாடல்களும் ஒரு காரணம். அப்படியெனில் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் இல்லையா?.. எங்களுக்கு காசு ஆசையெல்லாம் இல்லை. பணம் கொட்டிக் கிடக்கிறது. அண்ணனிடம் அனுமதி கேட்டால் அவர் கொடுப்பார். கேட்காமல் பயன்படுத்துவதால்தான் கோபப்பட்டு அவர் நோட்டீஸ் அனுப்புகிறார். அன்னக்கிளி பாடல் சூப்பர் ஹிட். ஆனால், எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால்தான் படம் துவங்கும்போது பாடல்களின் உரிமையை அண்ணன் தயாரிப்பாளரிடம் எழுதி வாங்க துவங்கினார்’ என பொங்கியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரேம்ஜி ‘பெரியப்பா (இளையராஜா) பாட்டாலதான் குட் பேட் அக்லி ஓடுதுன்னு சொல்றதெல்லாம் சும்மா. அஜித்தாலதான் அந்த படம் ஓட்து. என் அப்பா அவர் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றார். நான் தல-க்கு சப்போர்ட் பண்ணுவேன்’ என பேசியிருக்கிறார்.

காஷ்மீரில் நுழைந்த பயங்கரவாதிகள்!! பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

0

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பஹல்காம் பகுதியில் இருக்கக்கூடிய பைசர்ான் பள்ளத்தாக்கில் நேற்று அதாவது ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் வாசிகளும் படுகாயம் அடைந்ததோடு பலர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதழ் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரக்கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு 24 மணி நேர சிறப்பு உதவி மையம் தமிழ்நாடு இல்லத்தில் அதாவது டெல்லியில் இருக்கக்கூடிய தமிழ்நாடு இல்லத்தில் துவங்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு 0112419300 மற்றும் 9289516712 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருவது 0112419300 மற்றும் 9289516712 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருவது 0112419300 மற்றும் 9289516712 என்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இன்று காலை இது குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கக் கூடிய தகவல் :-

காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலால் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய காவல் துறையின் கூட்டு நடவடிக்கையில் பைசலான் பகுதியில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடலானது துவங்கி இருப்பதாகவும் தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்ரனால் தன் சொத்துக்களை விற்ற அமிதாப் பச்சன்!! இனிமேல் நீ இங்க வேண்டாம்.. துரத்தி அடிக்கப்பட்ட நடிகை!!

0

நடிப்பால் மட்டுமல்லாது நடனத்தாலும் நம் அனைவரையும் கட்டி போட்ட ஒரு நடிகையாக சிம்ரன் விளங்கி வருகிறார். பல ஆண்டு இடைவெளிக்கு பின்பு மீண்டும் திரைத்துறையில் நடிக்க துவங்கியிருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, தான் நடித்த திரைப்படத்தில் தனக்கு கிடைத்த விருதினை தன் திரையுலக தோழியுடன் இணைத்து கூறி மகிழும் பொழுது அவர் இது போன்ற ஒரு ஆன்டி கேரக்டருக்கு நீ இவ்வளவு பெருமைப்படுவது கேவலமாக இருக்கிறது என்பது போன்ற வார்த்தையை விட, அதை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றும் டப்பா கேரக்டரில் நடிக்கக்கூடிய அவர் எப்படி தன்னை ஆன்ட்டி கேரக்டரில் நடிக்கக்கூடிய நான் என தெரிவிக்கலாம் இது தனக்கு மிகவும் மன வருத்தமாக இருப்பதாகவும் திரை துறையில் ஆன்டி கேரக்டர் என்று ஒன்று தனியாகவும் இருக்கிறதா அனைத்தும் நடிப்பதானே என மனம் வருந்தி பேசி இருக்கிறார். நடிகை சிம்ரன் டப்பா கேரக்டர் என கூறியதுமே அனைவராலும் அவர் நடிகை ஜோதிகாவை தான் கூறுகிறார் என அறிந்து கொள்ள முடிந்தது. காரணம் ஹிந்தி திரை உலகில் டப்பா கேரக்டரில் தான் அவர் நடித்த வருகிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட நடிகை சிம்ரன் அவர்கள் முதலில் ஹிந்தி திரையுலகில் தொகுப்பாளினியாக நுழைந்த பொழுது ஜெயாபட்சன் அவரை பார்த்து இவரை நம் திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என கூறியவுடன் அமிதாப்பச்சனும் தங்களுடைய திரைப்படத்தில் சிம்ரனை நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமையவே சிம்ரனுக்கு அங்கு இருந்தவர்கள் நீ தென்னிந்திய திரைத்துறையில் சென்று முயற்சி செய்து பார் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். தென்னிந்திய திரை உலகில் வந்தவுடன் தெலுங்கில் ஒரு படமும் தமிழில் நேருக்கு நேர் என இரண்டு திரைப்படங்களும் நடித்த படங்கள் வெற்றி பெறவே தொடர்ந்து தமிழில் மிகப்பெரிய கதாநாயகியாக உருவெடுத்தார் நடிகை சிம்ரன்.

பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025!! மே மாதம் துவங்கும் புதிய திட்டம்!!

0

கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற பக்கங்களில் செய்திகளை பரப்பி வருகிறது.

அந்த செய்தியில், காற்றில் கரியமில வாயு வெளியேறுவதை குறைக்கவும், மின்சார தேவை மற்றும் மக்களின் மின்கட்டணங்களை குறைக்கவும் 5 ஸ்டார் ஏசியை மத்திய அரசு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி யோஜனா என்ற பெயரின் கீழ் மே மாதம் முதல் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைப்பவர்கள் யமுனா பவர் லிமிடெட் என்ற வலைதளத்திற்கு சென்று பதிவு செய்தால் 30 நாட்களில் இலவச ஏசி கிடைக்கும் என்பது போல குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி :-

பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி மக்களுக்கு ஏசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொய்யானது என்றும் மதியம் என் துறை அமைச்சகத்தில் இருந்து இது போன்ற எந்த விதமான செய்திகளும் வெளிவிடப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற போலியான தகவல்கள் பொதுமக்களின் உடைய தனிப்பட்ட விவரங்களை திருடுவதற்கான வழி என்றும் இது போன்ற இணைப்புகளை மக்கள் கிளிக் செய்த தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கட்டிய ஆடையுடன் நடுரோட்டிற்கு வந்த ராம பிரபா!! ரஜினி செய்த காரியம் என்ன தெரியுமா!!

0

தன் திரை உலக வாழ்க்கையில் 1400 திரைப்படங்களுக்கு மேல் நடித்த அசத்திய நடிகையாக ராம பிரபா விளங்குகிறார். தமிழ் மட்டுமல்லாத தெலுங்கு திரையுலகிலும் காமெடியாக நடித்த கொடிகட்டி பறந்தவர் இவர். மறைந்த நடிகர் சரத் பாபுவின் முதல் மனைவியான ராம பிரபா மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்க அவர் என்ன செய்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தன்னைவிட நான்கு வயது மூத்தவரான சரத்பாபுவை திருமணம் செய்து கொண்ட கிராம பிரபா வாழ்வில் பல சவால்களை சந்தித்த நிலையில் 1988 இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து இருக்கின்றனர். விவாகரத்து பெற்ற பின் ஏராளமான கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்த ராம பிரபா ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கை சூழல் மிகவும் கடினமாக மாறவே தெலுங்கு சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு இணையாக நடித்து சொத்து சேர்த்தார். ஆனால் ஒருவரை நம்பி அனைத்து சொத்துக்களையும் இழந்து கட்டிய புடவையுடன் நடுத்தெருவிற்கு வந்திருக்கிறார் ராமபிரபா.

அந்த நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்ததோடு தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு வழி செலவிற்கு பணம் கிடைத்தால் கூட போதும் என நினைத்து ரஜினிகாந்த் அவர்களிடம் சென்றதாகவும் ஆனால் சற்றும் யோசிக்காதவாறு ரஜினிகாந்த் தன்னுடைய சூழ்நிலையை கேட்டவுடன் 40000 எடுத்து தன்னிடம் கொடுத்து விட்டதாகவும் அந்த காலத்தில் 40 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்றும் ராம பிரபா நெகிழ்ச்சி பட தெரிவித்திருக்கிறார்.

ATM Alert: மே 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!! அதிர்ச்சியில் மக்கள்!!

0

பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது.

சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :-

✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ 21 ரூபாயாக வசூலிக்கப்படும் கூடுதல் பரிவர்த்தனை மே ஒன்றாம் தேதிக்கு பிறகு 4 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மெட்ரோ அல்லாத நகரத்தில் 21 ரூபாய் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2 ரூபாய் சேர்த்து 23 ரூபாயாக வசூலிக்கப்படும் விட தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற வங்கி ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தும் பொழுது :-

✓ மெட்ரோ நகரங்களில் 1 மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

✓ இதுவரை 21 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு 4 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 21 ரூபாயிலிருந்து 23 ரூபாய் ஆக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஏடிஎம் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் :-

✓ நிதி அல்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பொழுது இதுவரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் மே 1 ஆம் தேதிக்கு பின்பு 5 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ சர்வதேச ஏடிஎம் சேவையைப் பெறும் பொழுது 125 முதல் 150 ரூபாய் வரை பெறப்பட்டு வந்த கட்டணம் மே 1 முதல் 200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ பயணருடைய வங்கி கணக்கில் பணம் இல்லாத பொழுது ஏடிஎம் சேவை பயன்படுத்தினால் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்த நிலையில் இனி 25 ரூபாய் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் 5 நிமிடத்தில் சுகர் லெவல் உங்கள் கண்ட்ரோலுக்கு வர.. இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

0

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட கீழா நெல்லி,பாகல்,கோவைக்காய் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

கீழாநெல்லி ஜூஸ்
தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி கீழாநெல்லி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்சர் ஜாரில் கீழாநெல்லி இலையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கீழாநெல்லி சாறை கிண்ணத்திற்கு வடிகட்டி பருகினால் சர்க்கரை நோய் குணமாகும்.

கீழாநெல்லி ஜூஸ் ஜூஸ் கசப்பாக இருக்கும்.அதிக கசப்பு சுவை விரும்பாதவர்கள் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.இப்படி தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கோவைக்காய் – நான்கு
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு கோவைக்காயை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை மிக்சர் ஜாரில் இந்த கோவைக்காயை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த கோவைக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பாகற்காய் – ஒன்று
2)தண்ணீர் ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு முழு பாகற்காய் எடுத்து அதன் விதையை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பாகற்காய் ஜூஸை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.