Home Blog Page 255

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தேதி அறிவிப்பு!.. வேகம் காட்டும் பழனிச்சாமி…

0

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.

eps

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவற்றி கட்சி மேலிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 25.4.2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம் என்பதால் இது கவனம் பெறுகிறது. இதற்கு அடுத்து மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டமும் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தவே இந்த கூட்டம் நடைபெறும் என கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி – நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!.. பேசியது என்ன?..

0

2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது அதிமுக. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.

எனவே, இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரெய்டை காட்டி மிரட்டும் வேலையெல்லாம் எங்களிடம் நடக்காது. அமித்ஷா இல்லை.. எத்தனை ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பலிக்காது. 2026-லிலும் திராவிட ஆட்சிதான்’ என பேசினார் ஸ்டாலின். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘1999ம் ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஊழலை விட மதவாதம் கொடுமையானது அல்ல என கூறினார் கருணாநிதி. பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது இனித்தது, அதிமுக கூட்டணி வைத்தல் மட்டும் ஸ்டாலினுக்கு கசக்கிறதா?’ என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், எடப்பாடி பழனிச்சாமியும் இன்று சந்தித்து பேசிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. சட்டசபையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. முதலில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் அதன்பின் பழனிச்சாமியிடன் தனியாக சந்தித்து பேசினார். இன்று அவையில் அதிமுக மற்று பாஜக இரு கட்சிகளும் இணைந்து பொது கவன ஈர்ப்புக்கான பிரச்சனை எழுப்புவது தொடர்பாகவும், வேறு சில விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது.

5 கோடிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய மகேஷ் பாபு!.. அமலாக்கதுறை சம்மன் அனுப்பியதன் பின்னணி..

0

Mahesh Babu: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. ஆந்திர திரையுலகம் இவரை பிரின்ஸ் அதாவது இளவரசன் என அழைக்கிறது. இவரின் அப்பா கிருஷ்ணா 70களில் பெரிய நடிகராக இருந்தார். எனவே, வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்தவர்தான் மகேஷ் பாபு.

பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் ஒக்கடு படத்தை தமிழில் விஜய் நடித்து கில்லி என உருவாக்கினார்கள். விஜய் நடித்த போக்கிரி படம் கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படம்தான். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்திலும் நடித்தார். இப்போது ராஜமவுலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்போதைக்கு எஸ்.எஸ்.எம்.பி.29 என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் மகேஷ் பாபு வருகிற 27ம் தேதி ஹைதராபத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. சுரானா குரூப்ஸ் மற்ரும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் விளம்பர தூதராக மகேஷ் பாபு இருக்கிறார். சமீபத்தில் இந்த நிறுவனங்களின் மீது பணமோசடி புகார் எழுந்த நிலையில்தான் அமலாக்கத்துறை மகேஷ்பாபுவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

அந்த நிறுவனங்களை விளம்பரப்படுத்த மகேஷ் பாபுவுக்கு ரூ.5.9 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 27ம் தேதி மகேஷ் பாபு நேரில் ஆஜராகி இதுபற்றி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யூனிட்டுக்கு ரூ.1000 உயர்ந்த எம்சாண்ட் & ஜல்லி!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

0

கனிம வளங்களின் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்க கோரி கல்குவாரி கிரஷர் சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் துரைமுருகன் ஏப்ரல் 21ஆம் தேதி ஆகிய நேற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏன் வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த முறையான விளக்கங்களை தெரிவித்ததன் பெயரில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இது குறித்த கல்குவாரி கிரஷர் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :-

கனிமவள வரிவிதிப்பானது ஏப்ரல் நாலாம் தேதி போடப்பட்ட நிலையில் அதிகமான வரியால் தொழில் செய்வது மிகவும் சிரமமாக்க மாறியது என்றும் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற ஒரு வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அமைச்சர் சந்தித்தல் இது குறித்த கேள்வி கேட்ட பொழுது நியாயமான காரணங்களை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறியதோடு கனிமவள வரி விதிப்பை உடனடியாக குறைக்க முடியாது என்றும் அதற்கு சில காலம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

கனிமவள வரிவிதிப்பை தொடர்ந்த தற்பொழுது எம் சாண்ட், விசாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலையானது உயர்த்தப்படுவதாக அறிவித்ததோடு இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கல்குவாரி கிரஷர் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதன்படி, ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்று முதல் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தும் யூனிட் ஒன்றுக்கு 1000 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் பொதுமக்கள் இதற்கு எந்தவித தயக்கமும் காட்டாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! ஒரு கேள்விக்கு போனஸ் மதிப்பெண்.. அட்டென்ட் பண்ணி இருக்கீங்களா!!

0

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 28ஆம் தேதி துவங்கிய ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வில் முரணாக ஒரு கேள்வி அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது மாநிலம் முழுவதும் 4113 மையங்களில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,46,465 மாணவிகளும், 25,888 தனித் தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் சேர்த்து மொத்தமாக தமிழகத்தில் 9,13,036 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளனர்.

பொதுத் தேர்வு முடிந்த பின் மாணவர்களின் உடைய விடைத்தாழிகள் 118 மண்டலங்களில் சேகரிக்கப்பட்ட நேற்று முதல் அதாவது ஏப்ரல் 21ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியானது துவங்கியிருக்கிறது. இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் 95,000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை இந்த விடைத்தாள் திருத்தும் பணியானது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொது தேர்வின் பொழுது சமூக அறிவியல் தேர்வில் 4 வது ஒரு மதிப்பெண் வினாவில் முரண்பாடான கேள்வி இடம் பெற்று இருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அந்த நான்காவது கேள்வியான ” ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும் விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம் ஜோதிபா புலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார் ” என்று குறிப்பிடப்பட்டு இருக்கக்கூடிய கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலளித்திருந்தாலும் அதற்கு கருணை அடிப்படையில் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் அலட்சியப்போக்கு!! விவசாயத்தில் களமிறங்கிய வடமாநிலத்தவர்கள்!!

0

விவசாய பயிர் நிலங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக குறைந்த சம்பளத்தில் வட மாநில தொழிலாளர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்துவது குறித்த பல முடிவுகளை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னெடுத்து இருக்கின்றனர்.

காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் மட்டும் 1 லட்சுமி ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுவது இல்லை என குற்றம் சாட்டியதோடு வாய்க்கால்களை தூர்வாரும் பணியானது முறையாக நடைபெறாததால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்து சேர்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே மயிலாடுதுறை சீர்காழி பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக மின் மோட்டார்கள் சமீபமாக தமிழக அரசின் உடைய புதிய திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததோடு இங்கு மும்முனை மின்சாரமானது பெறப்பட்டு அதன் அடிப்படையில் தான் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. தண்ணீர் மின்சாரம் என இவை கிடைத்தாலும் ஆட்கள் கிடைப்பது சிரமமாகவே உள்ளதாகவும் இந்த பகுதிகளில் இருக்கக்கூடியவர்களை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அழைத்துக்கொள்வதால் விவசாயத்திற்கு ஆட்பற்ற குறை அதிக அளவில் உள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றனர். இயந்திரங்களை வைத்து நடவுப் பணிகளை செய்தாலும் மழை வரும் காலங்களில் பயிர்கள் மூழ்கி நாசமாவதால் ஆட்களை வைத்தே நடவு பணி மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்து வடமாநிலத்தவர்களை வேளையில் இறக்கி இருக்கின்றனர் மயிலாடுதுறை விவசாயிகள்.

அரசிற்கு விவசாயிகள் பல கோரிக்கைகள் வைத்தும் அரசு அதனை கண்டு கொள்ளாததால் தற்பொழுது வடமாநில தொழிலாளர்களை நம்பி விவசாயம் மேற்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்ததோடு ஏக்கருக்கு 8000 முதல் 8,500 வரை வழங்கி வந்த நிலையில் வடமாநிலத்தவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 4500 மட்டுமே சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் காலை 6:00 மணிக்கு வேலை துவங்கி மாலை வரை 4 ஏக்கர்களை நடவு பணி முடிக்கப்பட்டு விடுவதாகவும் சாப்பாட்டிற்கு அரிசி மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலை இருப்பதால் விவசாயிகளுக்கு பெருமளவு பணம் மிச்சமாகும் என்ற காரணங்களாலும் குறிப்பாக குத்தாலம் தாலுகா கோனேரி ராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் அதிக அளவு வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமனார் சொத்தில் மருமகன் பங்கு கோர முடியுமா!! இந்திய சட்டம் சொல்லும் உண்மை!!

0

ஒரு மருமகன் தன்னுடைய மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ நிதி உதவி செய்திருந்தாலும் கூட அந்த சொத்தின் மீது தன்னால் உரிமை கூற முடியாது என நீதிமன்றம் சட்டபூர்வமாக தெரிவித்திருக்கிறது. இதற்கு சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதோடு அவற்றின்படி உங்களுடைய வேண்டுகோள் நியாயமானதாக இருப்பின் மாமனார் சொத்தை மருமகன் பெறுவதற்கான வழிமுறைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட தக்க சட்ட வழக்குகளில் மருமகன் மாமனாரின் உடைய சொத்தை தான் அளித்த நிதி உதவியை காரணம் காட்டி பெற நினைப்பது சட்டபூர்வமாக செல்லுபடி ஆகாது என கூறி இருக்கக்கூடிய நீதிமன்றம், அதற்கான ஆதாரங்கள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் கட்டாயமாக உரிமை கோர முடியும் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால் மாமனாருக்கு சொத்தை வாங்குவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ மருமகன் நிதி உதவி செய்திருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் சரியானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, மாமனார் ஒரு மருமகனுக்கு தன்னுடைய சொத்தை அவரின் சொந்த நினைவின் பேரிலோ அல்லது பரிசு பத்திரமாகவோ வழங்கும் பட்சத்தில் மருமகன் முழு உரிமை அந்த சொத்தில் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் மாமனாரிடம் இருந்து பெறப்படக்கூடிய உயிலோ அல்லது பரிசு பத்திரமோ அவருக்கு வற்புறுத்தலை கொடுத்தோ அல்லது மன அழுத்தத்தை கொடுத்தோ வரப்பட்டு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக உரிமை அறியும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தங்களுடைய சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற முடியும் என்றும் இந்தியா சட்டம் தெரிவிக்கிறது.

கமலை அமெரிக்கா அனுப்பும் தமிழக அரசு!! இனி அவர் சொல்றபடி தான் எல்லாமே!!

0

தற்பொழுது தக்கலைப் திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக ஓடிக் கொண்டிருக்கக்கூடிய கமலஹாசன் இதற்கு முன்பாக அமெரிக்காவிற்கு சென்று AI தொழில்நுட்பம் முழுவதையும் படித்துவிட்டு திரும்பினார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தமிழக அரசு ஆனது மொத்த செலவையும் ஏற்று கவலை அமெரிக்காவிற்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கான முழு முடிவையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடுத்திருப்பதாகவும் நடிகர் கமலஹாசன் அவர்களை அமெரிக்கா அணுகுவதற்கான திட்டமும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தீட்டுவது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் அமெரிக்காவின் டெக்னாலஜியைக் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக ஒரு பிலிம் சிட்டி உருவாக்க நினைத்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் அமைத்த ஃபிலிம் சிட்டி தற்பொழுது ஐடி பார்க்கப்பட்டது. அதனால் சென்னையில் புதிதாக ஒரு ஃபிலிம் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்ததோடு அந்த கட்டிடம் கட்டுவதற்கு தலைமை ஆலோசகராக கமலஹாசன் அவர்களை நியமிக்க துணை முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காகத்தான் இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேலம் சிட்டி ஆனது சென்னை திருமயிலைசையில் உருவாக்கப்பட இருப்பதாகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தில் இந்த ஃபிலிம் சிட்டியை முழுவதுமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்காகத்தான் நடிகர் கமலஹாசன் அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு பல்வேறு அனுபவம் இருக்கும் பட்சத்தில் இது குறித்த அவரிடம் யோசனை கேட்பதும் அவரை தலைமை நிர்வாகியாக வைப்பதும் தான் சிறந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோட் பண்ணுங்க மக்களே!! இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது!!

0

நியாய விலை கடை ஊழியர்கள் சில முக்கிய நிபந்தனைகளை அதாவது உணவுப்பொருட்களை முழுவதுமாக வழங்குவது, ஊழியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் என குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமாக 34,790 ரேஷன் கடைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் கோதுமை போன்றவை இரண்டு கோடி பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வருவது வெள்ளிக்கிழமை நாட்களில் கொண்டு வருவதால் தங்களுக்கு விடுமுறை நாட்கள் கூட சரியாக கிடைக்க பெறுவதில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அதனை அரசு சரி செய்து இருந்த நிலையில், கிடங்குகளில் இருந்து வரக்கூடிய பொருட்கள் அளவு குறைவாக வருவதாகவும் ஆனால் மக்களுக்கு நிறைவான பொருட்களை கொடுக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் இது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய நியாய விலை கடைகள் செயல்படாது என நியாய விலை கடை சங்கம் தலைமையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தினுடைய முக்கிய கோரிக்கையை சரியான அடியில் உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து தர வேண்டும் என்பதுதான். அதோடு கல்வி தகுதிக்கு ஏற்றவாறு சம்பளம் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கு புதிய பதவி!. அதுவும் அந்த மாநிலத்தில் இருந்தா?!. பரபர தகவல்!…

0

Annamalai: தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. இதுபற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என் பதவியை தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. பதவியை தூக்கிப்போட்டு வந்தவன் நான்.

அண்ணாமலைக்கு புதிய பதவி!. அதுவும் அந்த மாநிலத்தில் இருந்தா?!. பரபர தகவல்!...
annamalai

இதைவிட 10 மடங்கு அதிக பவர் என்னிடம் இருந்தது. நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நேற்று கூட என் தோட்டத்துக்கு போனேன். எனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறேன். ஆடு மாடுகளை பார்த்தேன். எனக்கென ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது. அரசியல் நான் சொன்ன கருத்துக்களை மாற்றி பேசமாட்டேன். என்னுடைய தனி உலகத்தில் நான் அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். மோடிக்காக அரசியல் செய்ய வந்தேன். அட்ஜஸ்மெண்ட் பாலிக்டிக்ஸ் என்னிடம் கிடையாது’ என பேசினார். அவருக்கு பின் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அண்ணாமலையோ இமயமலைக்கு ஆன்மிக பயணமும் போனார்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் அதாவது அண்ணாமலைக்கு எம்.பி. பதவி கொடுக்கப்படவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அதுவும் ஆந்திர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அவர் தேர்வு செய்யப்படவுள்ளதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இது தொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக மத்திய தலைமை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.