Home Blog Page 259

எங்க பாட்டாலதான் உங்க படம் ஹிட்டு!. காசு கொடுக்க கசக்குதா?!.. பொங்கும் கங்கை அமரன்…

0

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

good bad ugly

ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என விளக்களித்துள்ளனர். இதையடுத்து இளையராஜாவுக்கு பணத்தாசை என சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் ‘நீங்கள் 7 கோடி கொடுத்து இசையமைப்பாளர் போடும் பாட்டு ஹிட் அடிக்கவில்லை. எங்களின் பாடல்கள்தான் ஹிட் ஆகிறது. குட் பேட் அக்லி படத்தின் ஹிட்டுக்கு அந்த பாடல்களும் ஒரு காரணம். அப்படியெனில் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் இல்லையா?.. எங்களுக்கு காசு ஆசையெல்லாம் இல்லை. பணம் கொட்டிக் கிடக்கிறது. அண்ணனிடம் அனுமதி கேட்டால் அவர் கொடுப்பார். கேட்காமல் பயன்படுத்துவதால்தான் கோபப்பட்டு அவர் நோட்டீஸ் அனுப்புகிறார். அன்னக்கிளி பாடல் சூப்பர் ஹிட். ஆனால், எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால்தான் படம் துவங்கும்போது பாடல்களின் உரிமையை அண்ணன் தயாரிப்பாளரிடம் எழுதி வாங்க துவங்கினார்’ என பொங்கியிருக்கிறார்.

நெப்போலியன் மகன் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!.. காவல் நிலையத்தில் மருத்துவர் புகார்!…

0

புதுநெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நெப்போலியான். அதன்பின் பல படங்களிலும் நடித்தார். ஹீரோ, வில்லன் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். வில்லன், ஹீரோ எப்படி நடித்தாலும் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி படம் சூப்பர் ஹிட் அடித்தது.

எஜமான் உள்ளிட்ட பல படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், கமலின் தசாவதாரம், விருமாண்டி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குணால், தனுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷுக்கு 4 வயதாகும் போது தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டது.

அதன்பின் பல மருத்துவர்களிடம் சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை. மகனுக்கு தொடர்ந்து அமெரிக்கவில் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதற்காக பல வருடங்களுக்கு முன்பே குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு நிலங்களை வாங்கி விவசாயமும் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தனுஷுக்கு திருமணமும் நடந்தது. இதை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுத்துவிட்டார் என்றெல்லாம் பேசினார்கள். இது எங்கள் குடும்ப விவகாரம். இதில் மற்றவர்கள் பேச வேண்டாம் என நெப்போலியன் கோரிக்கை வைத்தார். ஆனால், யாரும் கேட்கவில்லை.

இந்நிலையில், தனது மகன் தனுஷுன் உடல்நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. என் மகனும், மருமகளும் மகிழ்ச்சியாக வாழும் நிலையில் அவர்கள் சொந்த வாழ்க்கை பற்றி அவதுறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி குறித்து விஜய் முடிவெடுப்பது எப்போது?!.. கசிந்த தகவல்!..

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பததில்லை.

தான் கட்சி துவங்கிவிட்டதால் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தன்னை தேடி வருவார்கள். தனது தலைமியில்தான் கூட்டணி விஜய் நினைத்தார். கூட்டணிக்காக அதிமுக அவரை அணுகியபோது நிறைய சீட்களும், துணை முதலவர் பதவியும் விஜய் தரப்பில் கேட்டதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக பக்கம் போய்விட்டார் என்கிறார்கள்..

இதை விஜயே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், சீமான் கண்டிப்பாக தன்னுடன் கூட்டணிக்கு வரமாட்டார். அதோடு, தனித்துப்போட்டி எனவும் அவர் அறிவித்துவிட்டார். எனவே, யாருடன் கூட்டணி அமைப்பது என்கிற குழபத்தில் விஜய் இருக்கிறார் என்கிறார்கள். இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்கு பின்னரே யாருடன் கூட்டணி என விஜய் முடிவெடுக்கவுள்ளாராம்.

ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தபின் விஜய் மக்களை சந்திக்க பயணம் செய்கிறார் எனவும், அது முடிந்த பின்னரே கூட்டணி முடிவு எனவும் செய்திகள் கசிந்திருக்கிறது. அதேநேரம், விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் தவெக உறுதியாக இருக்கிறதாம்.

சிவாஜி இல்லம் ஜப்தி!.. சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!…

0

ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனமானது ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்தை நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக சிவாஜி அவர்களின் பேரன் மற்றும் நடிகரான துஷ்யந்த் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடமிருந்து 3, 74,75,000 பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார்.

இந்த கடனானது கட்டப்படாமல் விடப்பட்டதாலும், கடன் பெற்ற பொழுது ஒவ்வொரு மாதமும் 30 சதவிகித வட்டியுடன் சேர்த்து அசலையும் அடைத்து விடும்படி கூறிய நிலையில் அதனை சரிவர செய்யாததால் இது வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வாறு வழக்காக மாற்றப்பட்ட நிலையில் அந்த கடன் தொகை 9 கோடியை தாண்டியது. இந்த வழக்கினை விசாரித்த ஹை கோர்ட் நீதிபதிகள் சிவாஜி அவர்களின் வீட்டை ஜப்தி செய்த அதை விற்று அதில் வரக்கூடிய பணத்தை தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இருக்கு வழங்கச் சொன்னது.

இதனை எதிர்த்து நடிகர் பிரபு அவர்கள் வழக்கு தொடர்ந்து, தான் இதுவரை ஒரு ரூபாய் கூட வெளியில் கடன் பெற்றதில்லை என்றும் தன்னுடைய அண்ணன் ராம்குமார் அவர்கள் வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுவரை கடனை பெற்று விடாத என்னுடைய சொத்துக்களும் இதில் முடக்கப்பட்டுள்ளது என்றும் அன்னை இல்லம் வீட்டை அப்பா என் பெயரில் எழுதி வைத்திருப்பதால் அதை ராம்குமார் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்யக்கூடாது எனவும் மனு அளித்தார்.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார். நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் சிரிப்பை நான் அடக்கிக் கொண்டேன்!! வடிவேலு பகிர்ந்த உண்மை!!

0

இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகராக விளங்குபவர் சிவாஜி கணேசன். தன்னுடைய நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களை தன் பால் இழுத்து வைத்திருப்பதோடு, என்றுமே தன் பெயரை நிலை நாட்டின் சென்று இருக்கிறார். எம்ஜிஆர் திரை உலகில் எவ்வாறு அவருக்கு நிகராகவும் சில நேரங்களில் அவரை விட அதிக அளவில் தன்னுடைய கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே போற்றப்பட்டவர் நடிகர் சிவாஜி. இப்படிப்பட்டவரின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்து வடிவேலு வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்தது குறித்து வடிவேலு பகிர்ந்த உண்மை :-

ரஜினி கமல் இளையராஜா என அனைவரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது தங்களுடன் கையில் மது பாட்டிலை ஏந்தி கொண்ட குடிகாரன் ஒருவனும் தொடர்ந்து வந்ததாகவும் அவன் வரும் வகையில் தமிழ் சினிமாவில் இருந்த ஒரே நடிகன். அவனையும் கொன்று விட்டீர்களே என தெரிவித்திருக்கிறார்
.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அங்கு இருந்த ஆனந்தராஜ் அவர்களை பார்த்து நீ தான் வில்லன் நீதான் சிவாஜியை கொன்று விட்டாய் இனிமேல் வரும் காலங்களில் வீசினமாவல் நடித்த அவ்வளவுதான் என எச்சரித்து இருக்கிறார். இதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அந்த இறுதி ஊர்வலம் முழுவதுமாக பின் தொடர்ந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த அனைவரையும் பார்த்து திட்டிய வாரே வந்திருக்கிறார். இளையராஜா அவர்களும் அவன் சரியாகத்தான் சொல்கிறான் நாம் தான் அண்ணனை கொன்று விட்டோம் என தெரிவித்ததாகவும் அங்கு நடந்தவை அனைத்தும் தாங்க முடியாத அளவு சிரிப்பை உருவாக்கியதாகவும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அங்கு பல கேமராக்கள் இருந்ததால் தங்களால் சிரிக்க முடியவில்லை என்றும் சிரித்தால் அந்த சூழ்நிலையில் நன்றாக இருக்காது என்பதால் அனைவரும் தங்களுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு அமைதியாக இறுதி ஊர்வலத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சீனியருக்கு ஒரு ரூல்ஸ்.. ஜூனியருக்கு ஒரு ரூல்ஸா!! விராட் கோலியின் செயலுக்கு பொங்கி எழுந்த ரசிகர்கள்!!

0

நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடையே போட்டியின் நடைபெற்ற பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஐ பி எல் மேட்ச் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இளம் வீரர்களுக்கு மட்டும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் மூத்த வீரர்கள் என்றால் அவர்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு தண்டனை குறித்து பேசப்படுவதே இல்லை என மட்டும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் மூத்த வீரர்கள் என்றால் அவர்களுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு தண்டனை குறித்து பேசப்படுவதே இல்லை என குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அதற்கு காரணம் பிசிசிஐ லக்னோ சூப்பர் ஜெயிண்டா நீ வீரரான திக்வேஷ் ரதி விக்கெட் எடுத்த பொழுது பேட்ஸ்மேன் ஆட்டமிலிருந்து வெளியில் செல்லும் பொழுது அவர்களை சீண்டும் வகையில் கையில் அவருடைய விக்கெட்டை குறித்து வைப்பது போல் எழுதி சைகை செய்ததற்கு இரண்டு முறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

பிசிசிஐ விதிகளின்படி எதிரணி வீரர்களை கோவமடைய செய்தாலோ அல்லது சீண்டினாலோ அதற்கான தண்டனை வழங்கப்படும் என்பது விதி. இந்த விதியின்படி பார்க்கும்பொழுது நேற்றைய ஆட்டத்தில் மூத்தவீரர் ஆன விராட் கோலி அவர்கள் பஞ்சாப் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடி இருப்பது தண்டனைக்குரிய விஷயம் என்றும் ஆனால் மூத்தவீரர் என்பதால் அவருக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்க மறுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிற்கு மீண்டும் மீண்டும் பெருமை சேர்க்கும் அஜித் ரேசிங் அணி!! இந்த முறை எங்க தெரியுமா!!

0

நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருந்த விலக்கி அக்டோபர் மாதம் வரை கார் ரேசிங்கில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தது முதல் இன்று வரை இந்தியாவிற்காக கோப்பைகளை வென்று குவித்து வருகிறார். அந்த வகையில் பெல்ஜியம் இல் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணி 2 நமது இடத்தை பிடித்து வெற்றி கண்டுள்ளது.

இது குறித்த அஜித்குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி :-

கார் ரேசிங்கிற்காக துபாயில் பயிற்சி மேற்கொண்டு அங்கு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அஜித் ரேசிங் அணியானது 3 அவரது இடத்தைப் பெற்று இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்ததோடு அதனை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3 அவரது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத்தாலியில் இருந்து பெல்ஜியம் வந்து கார் ரேசிங்கில் கலந்து கொண்ட அஜித் கார் ரேசிங் அணி ஆனது மீண்டும் 2 நமது இடத்தை பெற்று வெற்றி இடத்தில் முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

துபாயில் நடைபெற்ற போட்டியானது 24 மணி நேர போட்டி மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டி 12 மணி நேர போட்டியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே கார் ரேசிங்கள் மட்டுமே கவனம் செலுத்து வரக்கூடிய நடிகர் அஜித்குமார் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான பொழுது கூட தான் ஒரு நடிகர் என்ற விதத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் கொடுக்காமல் தன்னுடைய கார் ரேசிங்கில் மட்டுமே முழுவதுமாக செயல்பட்டு வந்தார் தற்பொழுது அதற்கான பலனையும் அடைந்திருக்கிறார்.

தன்னுடைய கவனம் முழுவதையும் கார் ரேசிங்கில் செலுத்தி வந்த நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு தற்பொழுது மீண்டும் ஒரு வெற்றி கிடைத்திருப்பது மிகப்பெரிய கொண்டாட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது கார் ரேசிங்கில் மீண்டும் மீண்டும் கோப்பைகளை குவிப்பது இந்தியாவிற்கு பெருமையை அளிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை நோயிலிருந்து முழுவதுமாக நான் இப்படித்தான் விடுபட்டேன்!! அமித்ஷா வெளியிட்ட வழிமுறை!!

0

ஏப்ரல் 19ஆம் தேதி அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருளாக உணவே மருந்து அமைக்கப்பட்டது. உடலினுடைய ஆரோக்கியத்திற்கு கல்லீரல் ஆனது மிகவும் முக்கிய பங்கு வகிப்பதோடு வளர்ச்சி துறை மாற்றம் செரிமானம் நச்சு நீக்கம் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல்வேறு இயக்கங்களுக்கு கல்லீரல் தன்னுடைய பங்கினை கொடுக்கிறது.

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கட்டாயமாக கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட டெல்லியில் உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கல்லீரல் மற்றும் பெத்த நீர் அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் மற்றும் இன்சுலினை தன்னுடைய உடம்பிலிருந்து முழுவதுமாக அகற்ற தன் மேற்கொண்ட வழிமுறைகள் என அனைத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதன்படி, இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கட்டாயமாக தங்களுடைய ஆரோக்கியத்தில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததோடு இவ்வாறு கவனம் செலுத்துவதால் 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழ்ந்து நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.அதிலும் குறிப்பாக எந்தவித இன்சுலின் மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்வில் இன்சுரனை முழுவதுமாக நீக்கிவிட்டதாகவும் அதற்காக தனது உணவு முறையை மாற்றியதாகவும் தூக்க நேரத்தை அதிகரித்ததாகவும் அது மட்டுமல்லாத தினமும் உடற்பயிற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நம் உடலுக்கு தேவையான அளவு தூக்கம் தண்ணீர் உணவு வழக்கமான உடற்பயிற்சி இவை அனைத்தையும் சரிவர கொடுத்து வரும் நிலையில் நம் உடலில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது என தெரிவித்ததோடு கட்டாயமாக இரண்டு மணி நேர உடற்பயிற்சியும் 6 மணிநேர உறக்கமும் அவசியம் என தெரிவித்திருக்கிறார். இது தன்னுடைய சொந்த அனுபவம் என அவர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து துறையில் தொழிற்பழகுநர் பயிற்சி!! ரூ.9000 உதவித்தொகையுடன்!!

0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் 1 ஆண்டு தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கு தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற் பழகுநர் பயிற்சியில் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

✓ Graduate apprentice ( engineering ) :-

காலி பணியிடம் – 157
உதவித்தொகை – ரூ.9000
கல்வி தகுதி – மெக்கானிக்கல் ஆட்டோமொபைல்ஸ் சிவில் எலக்ட்ரிக்கல் இசிஇ

✓ Graduate apprentice ( non engineering ) :-

காலி பணியிடம் – 151
உதவித்தொகை – ரூ.9000
கல்வி தகுதி – பி ஏ, பி எஸ் சி, பி காம், பி பி ஏ, பி சி போன்றவற்றில் இளங்கலை பட்டம்

✓ Diploma apprentice ( technician apprentice ) :-

காலி பணியிடம் – 270
உதவித்தொகை – ரூ.8000
கல்வி தகுதி – மேற்படி பொறியியல் பிரிவுகளில் டிப்ளமோ

விண்ணப்பிக்கும் முறை :-

www.nats.education.gov.in என்ற அரசினுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதன் பின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசி தேதி என்றும் மே 10 முதல் 14ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்படும் முறைகேடுகள்!! ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

0

மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொடர்புடைய ஊழியர்கள் மீது துறைவாரியாக ஒழுங்குமுறை நடவடிக்கை நடக்கவும் அல்லது நிர்வாக தீர்ப்பாயம் மூலம் விசாரணை நடக்கவும், குற்றவியல் வழக்கு மற்றும் அதே குற்றச்சாட்டுகளுக்கான இணையான துறை வழி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசால் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு தணிக்கை செயல்முறையானது மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தணிக்கையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது குற்றங்கள் கண்டறியப்பட்டாலோ அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழுவுக்கு உரிய அதிகாரத்தை வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.