Home Blog Page 258

வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

0

அனைவரது இல்லத்திலும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. ஏனென்றால் அந்த தீப ஒளி வீட்டில் இருக்கும் இருளை நீக்கி குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீபத்தை ஒரு சில நாட்களில் ஏற்றக்கூடாது என்ற முறைகளும் உள்ளது. அது எந்தெந்த நாட்கள் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம்.

குறிப்பிட்டு சில நாட்களில் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது என்ற வரைமுறைகள் உள்ளன. இதனை சிலர் அறிந்திருந்தாலும் பலர் அறியாமல் இருப்பர். வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது அந்த வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்து, சுபிட்சம் உண்டாகும். ஆனால் தீபம் ஏற்ற கூடாத நாட்களில் தீபத்தை ஏற்றினால் அது அபசகுனமாக மாறிவிடும். எனவே எந்தெந்த நாட்களில் தீபம் ஏற்றக்கூடாது என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.

1.உங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவுகளான பங்காளிகள், அதாவது ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள் யாராக இருந்தாலும் இறப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக அடுத்த 16 நாட்களுக்கு உங்கள் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது. ஏனென்றால் இது இறப்பு தீட்டு என்று கூறப்படும். இதுபோன்ற தீட்டு காலங்களில் தீபம் ஏற்றக்கூடாது.

ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளிடம் பேசுவதில்லை என்றாலும் கூட ,அவர்களது வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக 16வது நாள் காரியம் முடியும் வரையிலும் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோன்று சுப காரியங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது.

2.உங்களது தெருக்களில் அல்லது ஊர்களில் யார் என்று தெரியாதவர்களாக இருந்தாலும் கூட, உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சமயத்தில் அவர்களின் இறப்பு சடங்கு முடியும் வரையிலும் உங்களது வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது.

ஒரு தெருவில் இறப்பு ஏற்பட்டால் அந்த ஊரில் உள்ள கோவில்களில் அன்று பூஜை நடக்காது, கோவில் நடையையும் திறக்க மாட்டார்கள். அது போன்று தான் உங்களது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபடக் கூடாது.

3. அதேபோன்று உங்களது வீட்டில் யாருக்கேனும் குழந்தை பிறந்து இருந்தாலும் அதுவும் ஒரு தீட்டாகத் தான் கருதப்படும். எனவே அந்த குழந்தை பிறந்தது முதல் அந்த குழந்தைக்கு புண்ணியாதானம் செய்யும் வரையிலும் அந்த வீட்டில் தீபம் ஏற்றக் கூடாது.

இதுபோன்ற தீட்டு காலங்களில் வீட்டில் தீபம் ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தீட்டு காலங்கள் முடிந்து வீட்டை சுத்தம் செய்த பின்னர் தீபம் ஏற்றுவது தான் சரியான முறையாகும். அப்பொழுது தான் குடும்பத்தில் எந்த ஒரு தோஷமும் ஏற்படாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

ஆண்களே உங்கள் விதைப்பை அடிக்கடி வீங்கிப்போகுதா? அப்போ இந்த ஒரு சாறு 100 மில்லி குடிங்க!!

0

ஆண்குறி விதைப்பை வீக்கம் குணமாக வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு – ஒரு கப்
2)வெள்ளரிக்காய் – ஒன்று
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
4)புதினா தழை – 10
5)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.பின்னர் ஒரு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து நறுக்கிய வெள்ளரி துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் பத்து புதினா தழையை மிக்சர் ஜாரில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழுதை கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு ஊறவைத்த சப்ஜா விதைகளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை பிழிந்து குடித்தால் விதைப்பை வீக்கம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)அத்திப்பால் – சிறிதளவு
2)காட்டன் பஞ்சு – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு அத்திக்காயை எடுத்து அதில் இருந்து பாலை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு காட்டன் பஞ்சை அதில் வைத்து நினைத்து விதைப்பை மீது தடவினால் வீக்கம் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு – இரண்டு
2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கிராம்பை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பின்னர் இடித்த கிராம்பை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கிராம்பு எண்ணையை ஆறவைத்து விதைப்பை மீது தடவினால் வீக்கம் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்பூரம் – ஒன்று
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை விளக்கம்:-

ஒரு கற்பூரத்தை இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் போட்டு கரைய வைக்க வேண்டும்.பின்னர் இந்த எண்ணையை விதைப்பை மீது தடவ வேண்டும்.இப்படி செய்தால் வலி,வீக்கம் குறையும்.

முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!

0

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன்.

அப்படிப்பட்ட முருக பக்தனாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய வீட்டிற்கு முருகன் வருகிறார் என்றால் சில அறிகுறிகள் உங்களுக்கு தென்படும். அதேபோன்று சில உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வருவதை வைத்து, தெள்ளத் தெளிவாக இது முருகனின் திருவிளையாடல் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

முருகன் உங்களுடன் இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? முருகன் வருகையை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்த தகவல்களை தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.

1. உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தை அல்லது ஆண் குழந்தை முருகனின் முக லட்சணத்தை கொண்டிருப்பார்கள். அதேபோன்று முருகனுக்கு உகந்த நட்சத்திரத்திலோ, திதியிலோ அதாவது கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திரத்திலோ செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இது போன்ற நாட்களில் பிறந்து இருந்தாலும் முருகப்பெருமான் உங்கள் வீட்டில் பிறந்து இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

2. முருகப்பெருமானை மனதார வேண்டி விளக்கேற்றும் பொழுது, அந்த விளக்கின் ஜோதி பிரகாசமாக சிறிது தூரத்திற்கு உயர்ந்து எறிந்தால், அந்த விளக்கின் ஜோதியில் முருகன் உங்கள் கண் முன் நிற்கிறார் என்று அர்த்தம்.

3. அதேபோன்று முக்கியமான வேண்டுதலுக்காக முருகனை மனதார நினைத்து விளக்கேற்றும் பொழுது, அந்த ஜோதியில் இருந்து ஏதேனும் சத்தம் ஏற்பட்டால் முருகன் உங்களது வேண்டுதலை மனதார ஏற்றுக் கொண்டு பதிலளிக்கிறார் என்று அர்த்தம்.

4. தெய்வ சக்தி இருக்கின்ற வீடுகளில் மட்டுமே பல்லிகள் அதிகம் இருந்து சத்தமிடும். தெய்வ சக்தி இல்லாத வீடுகளில் பல்லிகள் இருக்காது. முருகனை நினைத்து வேண்டும் பொழுது பல்லிகள் சத்தமிட்டால் முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்று அர்த்தம்.

5. முருகனை நினைத்து வேண்டி கொண்டிருக்கும் பொழுதோ அல்லது முருகனின் நாமங்களை பாராயணம் செய்து கொண்டிருக்கும் பொழுதோ, முருகன் படத்தில் இருந்து பூக்கள் கீழே விழுகிறது என்றால் முருகன் உங்கள் வீட்டில் எழுந்தருளி இருக்கிறார் என்று அர்த்தம்.

6. நீங்கள் வெளியில் செல்லும் பொழுதோ அல்லது வீட்டில் இருக்கும் பொழுதோ உங்களுக்கு சொந்தம் இல்லாத உயிரினமான மயிலோ அல்லது சேவலோ உங்கள் கண் முன் அடிக்கடி வருகிறது என்றால், முருகனின் துணை உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.

7. முருகனின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்றால் உங்கள் கனவில் அடிக்கடி வேல், மயில், சேவல் இது போன்ற முருகனுக்கு சொந்தமான பொருட்கள் வரும்.

8. நீங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கும் பொழுது உங்கள் கண் முன்னே அடிக்கடி முருகனின் படம் தோன்றுகிறது என்றால், முருகன் உங்களுக்கு துணையாக இருக்கிறார் என்று அர்த்தம்.

9. உங்களுடைய பிரச்சனையை சரி செய்ய நீங்கள் உதவி கேட்காமலேயே ஒருவர் வருகிறார் என்றால், அவர் முருகனின் மறு உருவம் என்று அர்த்தம். உங்களுடைய மன குறை தீர்வதற்கு ஒரு வழி கிடைக்கிறது என்றாலே, முருகனின் துணை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

10. முருகன் உங்களுடன் இருக்கிறார் என்றால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் இல்லாதது போல் விபூதி, சந்தனம் இது போன்ற வாசனை வரும். வீட்டில் மட்டுமல்லாமல் வெளியில் சென்று முருகனை நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் இது போன்ற வாசனை வருகிறது என்றால் முருகன் உங்கள் உடனேயே இருக்கிறார் என்று அர்த்தம்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள்..!!

0

1. தலைக்கு குளித்த அன்றே எண்ணெய் தடவினால் சகோதரர்களுக்கு நல்லதில்லை.

2. உங்களுடைய தந்தையை நீங்கள் பகைத்துக் கொண்டால் தொழில் பாதிக்கும். அதே போன்று உங்களுடைய தாயை பகைத்துக் கொண்டால் கணவன் மனைவி உறவு பாதிக்கும்.

3. சகோதரிகளை பகைத்தால் ஆண் குழந்தை பிறக்காது. சொத்துக்களுக்கு சிக்கல் வரும்.

4. தினமும் மனைவியிடம் 10 ரூபாயை பெற்றுக் கொண்டு வெளியே வேலைக்கு செல்லும் பொழுது அந்த பணம் பெருகும். மனைவி தான் வீட்டின் மகாலட்சுமி. அவள் சந்தோஷமாக இருந்தால் பணம் பெருகும், அவள் அழுதால் பண வரவு பாதிக்கும்.

5. இரும்பு உலோகப் பொருட்களை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது. குடும்பத்தில் சண்டை ஏற்படும்.

6. ஓடாத கடிகாரம் மற்றும் உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தால் அது எதிர்மறை சக்திகளை உருவாக்கும்.

7. வாசலில் சாணம் தெளிப்பது நல்லது. முடியாதவர்கள் வெறும் தண்ணீரில் வாசல் தெளிக்க கூடாது. அது கெட்ட சகுனமாக கருதப்படும். எனவே தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து தெளிக்க வேண்டும்.

8. வீட்டில் எப்பொழுதும் பணக்கஷ்டம், சண்டைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். அந்த அரிசியை எறும்பு சாப்பிடும் பொழுது தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

9. வாழை இலையில் சூடாக செய்த பிரசாதத்தை கடவுளுக்கு படைத்து, வழிபட்ட பின்னர் அதனை உணவாக உண்ணும் பொழுது பல நோய்கள் குணமாகும்.

10. காலையில் பெண்கள் குளித்துவிட்டு தான் சமையல் வேலையை தொடங்க வேண்டும். குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி விட்டு, சிறிதளவு கல் உப்பை வாயில் போட்டுக் கொண்டு சமையல் வேலையை தொடங்கினால் தோஷம் நீங்கும்.

11. சமைக்கும் பொழுது பாத்திரத்தை சுரண்டக் கூடாது. இந்த சத்தம் மகாலட்சுமிக்கு பிடிக்காது. இதனால் தரித்திரம் உண்டாகும்.

12. மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அந்தப் பொருளுடன் நமது வீட்டில் இருக்கும் மகாலட்சுமியும் சென்று விடுவாள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

13. முக்கியமாக பணம், தீப்பெட்டி, இரும்பு, தங்கம், உரை மோர் போன்றவற்றை கொடுக்கக் கூடாது. மறுநாள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்து விட வேண்டும்.

சீமானின் ஆட்டத்தை இனிமே பார்ப்பீங்க!.. செய்தியாளர் சந்திப்பில் பொங்கிய சீமான்!…

0

சினிமாவில் இயக்குனர், நடிகர் என வலம் வந்துகொண்டிருந்த சீமான் 15 வருடங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கினார். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நடந்தபோது அந்த போரில் இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாய் இறந்து போனார்கள். இதையே அடிப்படையாக வைத்து கட்சியை துவங்கினார் சீமான்.

இலங்கை போர் நடந்த போது பிரபகாரனை சந்தித்து பிரபாகரனை சந்தித்து பேசியதாகவும், அப்போது தனக்கு அவரின் வீட்டில் ஆமைக்கறி சமைத்து போட்டதாகவும் கூறினார். அதோடு, நான் எந்த உணவை விரும்பி சாப்பிடுகிறேன் என ஒருவரை வைத்து குறிப்பெடுக்க வைத்தார் பிரபாகரன் என சீமான் சொன்ன கதையில் தம்பிகள் கூஸ்பம்ஸ் அடைந்தார்கள்.

சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறி விஜயின் கட்சிக்கு போய்விட்டார்கள். விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது.

seeman
seeman

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவாரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், வரும் தேர்தலில் சீமானின் ஆட்டத்தை பார்ப்பீர்கள். 5வது முறையாக தனித்து போட்டியிடுவோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் இல்லை. கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே பயமுறுத்திய மத்திய அரசு!! சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட மறுப்பு!!

0

ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசு முக்கிய முடிவுகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுவதாகவும் அரசுக்கு நீதிமன்றம் ஆணையிடுவது முறையானதாக இல்லை என மத்திய அரசு சம்பந்தப்பட்ட பலரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தங்களுடைய வாய்க்கு வந்தபடி பேசி வரக்கூடிய நிலையில் அவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதற்கே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தயங்கி வருகின்றனர்.

இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் ஆஜராகி வக்பு திருத்த மசோதா பிரச்சனையால் மேற்கு வங்காளத்தில் சட்ட சீர்கேடு நடைபெறுவதாகவும் இதனை தடுக்க அம் மாநில அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அங்கு பிரச்சனையை சமாளிப்பதற்காக துணை ராணுவ படையை அனுப்பி வைக்க உச்ச நீதிமன்ற தரப்பில் ஆணை பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே மத்திய அரசினுடைய அனைத்து முடிவுகளிலும் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது என அவர்கள் கோபத்தில் இருக்கும் பொழுது மீண்டும் மீண்டும் அரசினுடைய செயல்களில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது போல் அமைவதாக கூறி இனி இதுபோன்ற வழக்குகளை தொடர வேண்டாம் என்றும் மீறி வழக்கு தொடரப்பட்டால் அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் மீது வன்மத்தை கக்கும் வடிவேலு!! நீ எல்லாம் திருந்தவே மாட்டியா!!

0

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும், காமெடி ட்ரெண்டிங் வீடியோ போடக்கூடியவர்களுக்கும் முன்னுதாரணமாகவும் பல கண்டனன்ட் கிரியேட்டர்களுக்கு தன்னுடைய காமெடியால் உதவி வருபவர் நடிகர் வடிவேலு. சினிமாவில் இருந்து சிறிது காலம் வெளியே அவர் மீண்டும் மாமன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

சமீப காலமாக இவர் சுந்தர்சியுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி வெளியாக இருக்கக்கூடிய நிலையில் காங்கிரஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக பட குழு பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலுவும் பல சேனல்களுக்கு தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்கள் குறித்து விவரித்து வருகிறார்.

அந்த வகையில் விஜயகாந்த் குறித்து நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது :-

நடிகர் வடிவேலு தமிழ் சினிமா துறையில் நுழைவதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் அவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன கவுண்டர் திரைப்பட வாய்ப்பானது உதயகுமார் என்பவரால் நடிகர் வடிவேலுக்கு கிடைத்த நிலையில் அவருக்கு உடை கூட இல்லாமல் இருந்த நிலையில் பேட்டி சட்டை அவருக்கு விஜயகாந்த் வாங்கி கொடுத்தார் என பலரும் சொல்லி வந்த நிலையில் நடிகர் வடிவேலு அதனை மறைமுகமாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் தனக்கு வாங்கி கொடுத்ததாகவும் கேப்டன் தனக்காக எதையும் இதுவரை செய்ததில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சின்ன கவுண்டர் திரைப்படத்தை தொடர்ந்து 10 மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுக்கு படத்தின் கதாநாயகனுடன் இணைந்து வேலை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் உண்மையை ஒப்புக்கொள்ள வடிவேலும் மறுக்கிறார். இவரிடம் திறமை இருந்தாலும் திறமைக்கு அதிகமாக திமிர் இருக்கிறது என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Please & Thank You என்ற 2 வார்த்தையால் பல மில்லியன் டாலரை இழக்கும் சாட்ஜிபிடி!! புலம்பும் ஓபன் AI தலைவர்!!

0

சமீபகாலமாகவே AI தொழில்நுட்பமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் GPT செயலியானது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் பயனர்கள் சொல்லக்கூடிய ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளால் பல மில்லியன் டாலர்களை இழப்பதாக ஓபன் ஏஐ தலைவர் ஷாம் ஆல்ட்மேன் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக சாட் GPT பயன்படுத்தக்கூடிய பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற நினைக்கும் பொழுது ப்ளீஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் தங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைத்த பின்பு சாட் ஜிபிடிக்கு மரியாதை செலுத்துவதாக நினைத்து தேங்க்யூ என்ற வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் இதனால் பேக் எனில் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதால் செலவுகளும் அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, AI தொழில்நுட்பமாக இருக்கக்கூடிய சேட் ஜி பி டி யில் 100 பயனர்கள் தேங்க்யூ என்றும் 100 பயனர்கள் ப்ளீஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுது அதற்காக 8 Wh முதல் 40 Wh வரையிலான மின்சாரம் செலவாகிறது என்றும் இதனை சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய செல்போனை சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளும் மின்சாரத்தை விட கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக 100 பேருக்கு இவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்றால் பல கோடி பயனர்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என சற்று சிந்தித்துப் பாருங்கள். இது குறித்து ஓப்பன் AI தலைவர் கூறுகையில், இந்த இரண்டு வார்த்தைகளுக்காக மட்டும் பல மில்லியன் டாலர் அளவில் செலவு செய்வதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போறதுண்ணா போங்க.. ஆனா என் தம்பி விஜய் உங்களை சேர்த்துக்க மாட்டார்!.. சீமான் ஃபீலிங்!…

0

நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் சீமான். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

ஒருபக்கம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறி விஜயின் கட்சிக்கு போய்விட்டார்கள். விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவாரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய சீமான் ‘2026 சட்டமன்ற தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள். நான் சொல்வதையும் மீறி தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி விஜயின் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.. நானே சேர்த்துவிடுகிறேன்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘நாம் தமிழர் கட்சியினர் வேறு கட்சிக்கு போவதில் என் தம்பி விஜய் கட்சிக்கு போகட்டும். அவர் உங்களை சேர்த்துக்கொள்ளமாட்டார் என்கிற தைரியத்தில்தான் இதை சொல்கிறேன். அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டர்கள் என்று நினைத்து உங்களை அவர் சேர்க்கமாட்டார்’ என கூறினார். பாமக மாநாட்டிற்க்கு அழைத்தால் போவீர்களா?’ என்கிற கேள்விக்கு ‘பாமக மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என பதில் சொல்லியிருக்கிறார்.

அப்ப இனிச்சுது!.. இப்ப கசக்குதா?!.. கூட்டணியை விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு பழனிச்சாமி பதிலடி!…

0

2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது அதிமுக. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.

eps

எனவே, இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரெய்டை காட்டி மிரட்டும் வேலையெல்லாம் எங்களிடம் நடக்காது. அமித்ஷா இல்லை.. எத்தனை ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பலிக்காது. 2026-லிலும் திராவிட ஆட்சிதான்’ என பேசினார் ஸ்டாலின். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘1999ம் ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ஊழலை விட மதவாதம் கொடுமையானது அல்ல என கூறினார் கருணாநிதி. பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது இனித்தது, அதிமுக கூட்டணி வைத்தல் மட்டும் ஸ்டாலினுக்கு கசக்கிறதா?’ என கேள்வி எழுப்பினார்.,

மேலும், ‘முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக ஒரு வாருடம் வைத்திருந்தபோது திமுகவுக்கு பாஜக நல்ல கட்சியாக தென்பட்டது. இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின் அது கெட்ட காட்சி ஆகிவிடுமா?.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலின் ஏன் பதறுகிறார்?., ஏன் பயப்படுகிறீர்கள்?. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணியை அமைப்போம். நிச்சயமாக வெற்றி பெறுவோம்’ என கூறினார்.