Home Blog Page 276

அமைச்சர் கொச்சை பேச்சு இதை அப்படியே விட முடியாது!! கோர்ட் போட்ட அதிரடி!!

0

DMK Ponmudi திமுக அமைச்சர் பொன்முடி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் சைவம் வைணவம் குறித்தும் விலைமாது பெண்களை அவதூறாக ஒப்பிட்டும் மிகவும் கொச்சையாக பேசினார். இவர் அவ்வாறு பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக ஸ்டாலின் இவரின் பொறுப்புத் துறையை பறித்து உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கானது இன்று நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது.

மேற்கொண்டு இவர் கொச்சையாக பேசிய வீடியோவை திரையிட்டு பொறுப்பை கொண்டிருக்கும் அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டாமா?? என்று கேட்டுள்ளார். எப்படி இது ரீதியாக யார் வழக்கு தொடுக்கவில்லை?? கட்டாயம் அவர் பேசியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். அப்படி அமைச்சருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது அந்த நிர்வாகிகள் மீது தொடரும் என கூறியுள்ளனர்.

இதே போல இவர் அவ்வாறு பேசியதற்கு அவர் மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டுள்ளதா என டிஜிபி யை விசாரித்து இன்று மாலைக்குள் கூறும் படி உத்தரவிட்டுள்ளனர். இவர் இப்படி பேசியது மக்கள் மனதில் நேரடியாக சென்றடைந்து விட்டது. அதன்பின் மன்னிப்பு கேட்டு எந்த பயனும் இருக்காது. இது ரீதியாக தற்போது வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. தெரியாமல் அல்ல நன்றாக தெரிந்தே அமைச்சர் இப்படி பேசியுள்ளார்.

இவரை தவிர்த்து அந்த இடத்தில் வேறு யார் இது மாதிரியாக பேசினாலும் குறைந்தபட்சமாவது 50 வழக்குகள் போடப்பட்டிருக்கும். அப்படி இவர் மீது தற்போது வரை வழக்கில்லை. அனைவரும் சட்டத்துக்கு கீழ் தான் மேலானவர்கள் கிடையாது. ஒரு துறையில் எப்படி ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாதோ, அதை போல் நாகரீகமற்ற பேச்சையும் சகித்து கொள்ள முடியாது. இவரைப் போலவே பல அரசியல் தலைவர்களை எச்சரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததுண்டு என்று சுட்டிக்காட்டி பேசினார்.

முன்னதாகவே ஒரு வழக்கில் அவருக்கு தண்டனை வந்தும் அது நிலுவையில் உள்ளது. மேற்கொண்ட அதனை உதாசனம் படுத்தும் வகையில் இப்படி பேசி வருவது மிகவும் தவறு. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் ரத்து செய்யலாம் என்று தெரிவித்தார்

நாளையே முதல்வரே நயினார் நாகேந்திரன் தான்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த பாஜக!!

0

ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் இணைந்தாலும் இந்த கட்சி நிர்வாகிகளினாலே மனக்கசப்பு ஏற்படுவது உறுதி எனக் கூறுகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி தான், ஆனால் கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது, அதிமுக பாஜக கூட்டணி அரசு என்றும் அமித்ஷா சொல்லவில்லை என கூறினார். நாங்கள் தேர்தலுக்காக தான் கூட்டணியில் உள்ளோம். இதனால் ஆட்சியில் பங்கு போட்டுக்கொள்ள மாட்டோம் என்பதை தீர்க்கமாக தெரிவித்தார்.

இவ்வாறு எடப்பாடி கூறியது பாஜகவிற்கு சற்று அதிருப்தியை உருவாக்கியது. இவரைத் தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளரும், கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை தெரிவித்தார். இப்படி ஒருவர் பின் ஒருவராக எங்களுக்கு கீழ் தான் ஆட்சி எனக் கூறுவது பாஜக தலைமையில் மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் ராகேந்திரனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளார். அவர் ஒட்டி போஸ்டர் தான் தற்பொழுது சர்ச்சையாகி இருக்கிறது.

அந்த போஸ்டரில் எடப்பாடிக்கு எதிராக கூறும் வகையில், வருங்கால முதல்வரே வருக வருக என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலரும் சோசியல் மீடியாவில் அந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் எனகூறி  கேலி கிண்டலுமாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே இந்த மோதல் போக்கை சரி செய்யவில்லை என்றால் கட்டாயம் கூட்டணியானது முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்கு வந்துவிடும்.

அதிமுக+பாஜக.. இனி நம்பி புரோஜனம் இல்லை!! விஜய் பக்கம் ரூட்டை திருப்பிய ஓபிஎஸ்!!

0

BJP OPS: வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பல்வேறு கட்சிகள் உள்ளது. மேற்கொண்டு கூட்டணி ரீதியான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி அதிமுக பாஜக இணைந்துள்ள நிலையில் இவர்கள் மீது அதிருப்தி உள்ள சில கட்சிகள் வெளிவந்துள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து சட்டமன்றத் தேர்தலை களம் காணலாம் என்று ஓபிஎஸ் எண்ணுகிறாராம். அதிமுக பாஜக கூட்டணி இணைந்தவுடன் ஓபிஎஸ் பாஜகவில் இணைந்து செயல்படலாம் என்று எண்ணியிருந்தார்.

ஆனால், எடப்பாடி, ஓபிஎஸ் தினகரன் சசிகலா உள்ளிட்டோரை எக்காரணம் கொண்டு நெருங்க விடக்கூடாது என்று ஆணித்தரமாக கூறிவிட்டாராம். இதனால் ஓபிஎஸ் யிடம் பாஜக நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் வீணாகியது. மேற்கொண்டு தங்கள் கட்சி ரீதியாக காயை நகர்த்தினால் கூட, எடப்பாடி பாஜக கூட்டணி முறித்து விடுவாராம். இதனால் செய்வதறியாது பாஜக குழம்பி வருகிறது.

ஆனால் பன்னீர்செல்வம் பாஜக விற்காக காத்திருப்பதாக தெரியவில்லை, பாஜகவிலிருந்து முழுமையாக வெளியேறி விட்டு புதிய கட்சி தொடங்க ஆலோசனை செய்து வருகிறாராம். இது ரீதியாக மாநாட்டை நடத்தி முடித்துவிட்டு கூட விஜய்யுடன் கூட்டு வைக்கலாம் என்று சக நிர்வாகிகளிடம் பேசியுள்ளாராம். அதேபோல சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி முக்கோண கூட்டணியை உருவாக்க மும்பரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இது ரீதியான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வாக்கானது சிதறக்கூடும். பாஜக திட்டம் வீணற்று போகும்.

பாஜக முக்கிய புள்ளி சீமான் 30 நிமிடம் ரகசிய மீட்டிங்.. கன்பார்ம் ஆகப்போகும் கூட்டணி!!

0

BJP NTK: பாஜக தமிழகத்தின் திமுகவிற்கு எதிரான அதிருப்தி நிறைந்த கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் சீமானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது சீமானிடம் மிகுந்த நெருக்கம் காட்டியது குறிப்பிடத்தக்கது. அதேபோல சீமானும் பாஜகவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

திமுக அதிமுக இரு கட்சிக்கும் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசமே இருக்கிறது. குறிப்பாக புதிய தமிழகம் நாம் தமிழர் கட்சி போன்றோர்கள் இதனை பெறுகின்றனர். அவர்களையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டால் அனைவரின் வாக்கும் ஒன்றுபடும். அப்படி இருக்கையில் திமுக தனது டெபாசிட்டை கூட இழக்க அதிக வாய்ப்புள்ளது. தற்சமயம் பாஜகவின் மூத்த நிர்வாகியான எஸ்ஜி சூர்யா விடம் சீமான் அரை மணி நேரத்திற்கு மேலான ஆலோசனை செய்து வந்துள்ளார்.

இதற்குப் பின்னணியில் என்ன காரணம் இருக்குமென பலரும் கேட்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொகுதி பிரிப்பு போன்றவை இருந்திருக்கும் என்ற தகவல்கள் கமலாலே வட்டாரங்களில் உலாவி வருகிறது. எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளிவந்தால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக அமைந்துவிடும். ஏனென்றால் திமுக அதிமுக வேண்டாம் எனையின்றி மாற்றாட்சி வேண்டுமென்று நினைப்பார்கள் பெரும்பாலும் சீமானை தான் தேர்வு செய்வார்கள்.

அப்படி இருக்கையில் தற்போது இவர் தேசிய கட்சியுடன் இணைகிறார் என்றால், கட்டாயம் இவருடைய வாக்குகள் அனைத்தும் விஜய் பக்கம் திரும்ப அதிக வாய்ப்புள்ளது. அதேபோல திமுகவிற்கு இது பலவீனத்தையே ஏற்படுத்தும்.

Awareness: வாட்ஸாப்பில் இதை டவுன்லோடு செய்தால்.. உங்க அக்கவுண்டிலிருக்கும் மொத்த பணமும் காலியாகிவிடும்!!

0

உலகளவில் டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருகிறது, இதனால் தனிநபர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்தி, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற பல்வேறு முறைகள் மூலம் நுகர்வோரை முன்பை விட அதிக பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்தியாவில், ஒரு புதிய வாட்ஸ்அப் மோசடியானது தற்போது அதிகரித்து வருகிறது, இது மூலம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடக்கூடும், மேலும் ஒரு தவறான கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வாட்சாப் ககட்டுப்படுத்தவும் முடியும்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து அனுப்பப்பட்ட படத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு, தனது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.2 லட்சத்தை இழந்தார்.

வாட்ஸ்அப் பட மோசடி என்றால் என்ன?

புகைப்படங்களுக்குள் தீம்பொருளைப் பொருத்த ஹேக்கர்கள் பயன்படுத்தும் ஸ்டீகனோகிராபி என்ற நுட்பமே இந்தப் புதிய மோசடியின் மையமாகும். அதவாது  படத்தைப் பதிவிறக்கம் செய்யும்போது, ​​வைரஸ் செயல்படுத்தப்பட்டு, மோசடி செய்பவர்கள், அதன் மூலம் UPI ஐடி மற்றும் கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், சமூக ஊடகக் கையாளுதல்கள், OTPகள் மற்றும் பிற முக்கியத் தகவல்கள் உள்ளிட்ட பிற தனிப்பட்ட விவரங்களைக் ஹாக் செய்கின்றனர்.

மற்ற மோசடிகளைப் போலல்லாமல், ஸ்டிகனோகிராஃபியின் போது, ​​பாதிக்கப்பட்டவர்களுக்கு OTP எச்சரிக்கை அல்லது அலாரம் கிடைக்காது, மாறாக ஒரு எளிய WhatsApp படம் மட்டுமே கிடைக்கும்.

இந்த புதிய ஹேக்கிங் முறை வாட்ஸ்அப் பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது, ஏனெனில் இது இந்த மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.

வாட்ஸ்அப் புகைப்பட மோசடி: பாதுகாப்பாக இருப்பது எப்படி

அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடி வழக்குகளைப் பார்க்கும்போது, ​​கேரள காவல்துறை, வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து வரும் புகைப்படத்தைத் டவுன்லோடு செய்வதன் மூலம் அவர்களின் தொலைபேசி ஹேக் செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

எனவே, இந்த மோசடிகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, வாட்ஸ்அப், சாதாரண எஸ்எம்எஸ் அல்லது வேறு எந்த தளத்திலும் தெரியாத எண்ணிலிருந்து பெறப்பட்ட எந்த புகைப்படம், வீடியோவையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது எந்த இணைப்பையும் கிளிக் செய்யவோ கூடாது.

பயனர்கள் வாட்ஸ்அப் அமைப்புகளில் மீடியா ஆட்டோ-டவுன்லோடை முடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் தொலைபேசியின் மென்பொருள் மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், பயனர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து சைபர் மோசடி குறித்து புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகையின் பாலியல் புகார்!.. ரெய்டுக்கு பயந்து தப்பி ஓடிய குட் பேட் அக்லி பட நடிகர்!..

0

Shine Tom Chacko: மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பெரும்பாலும் வில்லன் வேடத்தில் நடிப்பார். தமிழில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். தெலுங்கில் நானி நடித்த தசரா படத்திலும் வில்லனாக நடித்திருப்பார்.

கார்த்தி சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். தெலுங்கில் தேவரா, டக்கு மகாராஜ், ராபின்ஹுட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருந்தார்.

இவர் படப்பிடிப்பின் போது தன்னிடம் அத்து மீறியதாக மலையாள நடிகை வின்ஸி அலோசியஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு தன்னிடம் அவர் தரக்குறைவாக நடந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்., இதைத்தொடர்ந்து அவர் கேரளா எர்ணாகுளத்தில் அவர் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் போதை பொருள் ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

hotel

போலீசார் வருவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட ஷைன் டாம் சாக்கோ. அப்போது அங்கு போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. அதேநேரம் போலீஸ் வருவதற்கு முன்பே ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பி ஓடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த ஹோட்டலில் அவருடன் தங்கியிருந்த அவரின் பெண் தோழியிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விரைவில் ஷைன் டாம் சாக்கோவிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி தேர்தலில் போட்டி இல்லமலையே பதவி!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

0

TN Gov: தமிழகத்தின் 2025 மற்றும் 26 யின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுடைய நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் தங்களின்மகன் மற்றும் மகள் திருமணத்தின் போது உதவித்தொகை 2000 ஆக கொடுக்கப்பட்டு வந்தது. இதனை தற்பொழுது 5000 ஆக உயர்த்தியுள்ளனர். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்கு செய்வதற்காக 17,000 ரூபாயிலிருந்து 30000 அதிகரித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மரபணு ரீதியான தசை சிதைவு மற்றும் முதுகு தண்டுவடம் பாதிப்பால் குறைபாடடைந்தவர்கள் தங்களின் நிற்க உபாதைகளை கழிக்கும் வகையில் சர்க்கரை நாற்காலி வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளனர். இது ரீதியாக 1.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயிரம் பேருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வுகளில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததில் இருந்து தற்போது வரை 1493 பேர் வேலை பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். இதனையும் தாண்டி இரண்டு புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதில் உள்ளாட்சி அமைப்புகளில் வரும் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாகவே மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். சமூகத்தில் இவர்களின் அதிகாரத்தை உயர்த்துவதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளனர். தற்போது வரை இத்திட்டத்தின் மூலம் 35 பேர் தேர்வு செய்துள்ள நிலையில், இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பொழுது கிட்டத்தட்ட 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சியிலும், மேற்பட்டோர் கிராம பஞ்சாயத்திலும் இதேபோல ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவர்களில் நியமன செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த திட்டமானது அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ஸ்கெட்சில் சிக்கிய அதிமுக முக்கிய நிர்வாகி.. தலை உருளும் எடப்பாடி!!

0

ADMK DMK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையடுத்து கட்சிக்குள்ளேயே அதிருத்தியடைந்த சில நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் அனைத்துமாக இருந்த இளைஞரணி மாநில செயலாளரான சந்திரசேகர் கட்சியிலிருந்து விலகி இருப்பது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகள் எப்போதும் இவருக்கு தான் போய் சேரும். அந்த அளவிற்கு மிகவும் நம்பிக்கை வாய்ந்த நபர். நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கூட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தனது மனைவியை நிற்க வைத்து வெற்றி பெற செய்தார்.

இப்படி அதிமுகவிற்கு கோவை யில் உள்ள பேரூராட்சிகளில் நல்ல மதிப்பை பெற்று தந்த இவருக்கு ஒரு பிரச்சனை வந்தபோது யாரும் கைகொடுக்கவில்லை. குறிப்பாக விஜிலென்ஸ் சோதனை செய்து வழக்கு தொடுத்த போதெல்லாம் இவரை யாரும் கண்டுக்க கூட இல்லை. அப்போதிலிருந்து இவருக்கு அதிமுக மீது அதிரப்தி நிலவ ஆரம்பித்துவிட்டது. அப்படியே இவரின் மதிப்பானது கட்சியில் குறைந்து கொண்டே வந்தது. இப்படி இருக்கையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் வேலுமணிக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட ஆரம்பித்தது. கடந்த முறை கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இம்முறை குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளிலாவது திமுக கொடியை ஊன்றி விட வேண்டுமென எண்ணுகின்றனர். அதற்கேற்றார் போல செந்தில் பாலாஜியும் கோவை-யில், நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு பேசுகையில், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் குறிப்பாக 10 தொகுதிகளிலும் திமுக கட்டாயம் வெற்றி பெறும்.

அதிலும் தொண்டாமுத்தூர் தொகுதி அதிகப்படியான வாக்குகளை பெறும் என்று கூறியுள்ளார். இதற்குப் பின்னணியில் சந்திரசேகர் இருப்பதாகவும் அவரின் மேல் உள்ள நம்பிக்கையால் தான் செந்தில் பாலாஜி இப்படி பேசியுள்ளாராம். சந்திரசேகர் திமுகவில் இணைய போவதாகவும், அவரை செந்தில் பாலாஜி முழுவதுமாக வளைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்திரசேகர் திமுக – விற்கு சென்றால் கோவை பேரூராட்சிகளில் அதிமுக கட்டாயம் அடி வாங்குவது உறுதி.

2026- தேர்தலை புறக்கணிக்க போகும் விஜய்.. அரசியலே வரல!! புலம்பி தள்ளும் தவெக தலைவர்!!

0

TVK: அதிமுக பாஜக மீண்டும் இணைந்த நிலையில் விஜய் கூட்டணியின்றி தவித்து வருகிறாராம். நாம் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் நமது செல்வாக்கை பார்த்து பல கட்சிகள் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கும் என்ற தப்பு கணக்கை விஜய் போட்டு விட்டதாக பல நிர்வாகிகள் கூறுகின்றனர். இவர் திருச்சியில் மாநாடு நடத்தி கட்சிய ரீதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சிகப்பு கம்பளம் விரித்து பல கட்சிகள் கூட்டணி வைத்து முயற்சித்தது உண்மைதான்.

அந்த வரிசையில் அதிமுக நாம் தமிழர் பாமக உள்ளிட்ட பலர் அடங்குவர். ஆனால் இவருடன் இருந்த சக நிர்வாகிகள் இவரை குழப்பத்தில் ஆழ்த்தியதால் கூட்டணி பேச்சு வார்த்தை சரிவராமலே போனது. தற்சமயம் பாஜகவுடன் அதிமுக இணைந்த நிலையில், பெரிய கட்சி கூட்டணியின்றி புலம்பி வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளை உடைக்கலாம் என்ற திட்டமும் தவிடு பொடியாகிவிட்டது. இதனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை தனி பெரும்பான்மையுடன் சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறுகின்றனர்.

உடனிருக்கும் நிர்வாகிகள் தேர்தல் இருக்கும் சமயத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறி வருகிறார்களாம். அதேபோல கட்சியில் விஜய் தவிர்த்து குறிப்பிட்ட சில நிர்வாகிகள் மட்டும்தான் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மேற்கொண்டு பெரும்வாரியான நிர்வாகிகள் யாரென்று கூட தெரியாதாம். இதனால் கால அவகாசம் எடுத்து இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தலை கூட சந்திக்கலாம் என்ற யோசனையில் உள்ளதாக கூறுகின்றனர். பெரும் செல்வாக்கு பெற்ற கட்சியின் கூட்டணி கிடைக்காத பட்சத்தில் விஜய் இப்படியான முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாம்.

இதை மட்டும் சீமான் செஞ்சா.. கட்டாயம் திமுக க்ளோஸ்!! பாஜக மாநில தலைவர் பரபர பேட்டி!!

0

BJP NTK: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பிறகு கூட்டணி கட்சி ரீதியாக எந்த கேள்வி கேட்டாலும் மலுப்பும் பதிலை தான் கூறி வருகிறார். ஏன் எடப்பாடி பழனிச்சாமி கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாம் ஆனால் கூட்டணி அரசு ஆட்சியும் கிடையவே கிடையாது என்று கூறினார். இது குறித்து நாகேந்திரனிடம் கேட்டபோது கூட மேலிடம் பார்த்துக் கொள்ளும் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனக் கூறியதோடு அண்ணாமலை புயல் மாதிரி நான் தென்றல் மாதிரி என நைசாக விலகிக் கொண்டார்.

இதன் மூலமே தெரிகிறது அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் எவ்வளவு அழுத்தம் கொடுத்திருக்கும் என்று, கூட்டணி கட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்ற நிபந்தனையை விதித்துள்ளதையும் இதன் மூலம் பார்க்க முடிகிறது. இப்படி இருக்கையில் சிறு கட்சி வாக்குகளையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்று பாஜக எண்ணுகிறது. அதன் வெளிப்பாடாக இன்று நயினார் நாகேந்திரன் நேரடியாகவே சீமானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சியையும் தான் நாங்கள் கூட்டணிக்கு வர சொல்லி அழைக்கிறோம். குறிப்பாக சீமான் திமுகவை வீழ்த்த வேண்டுமென்று நினைக்கிறார். அப்படி இருக்கும் அவரை பாஜக கூட்டணியில் இணைய வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இவர் அவ்வாறு அழைப்பு விடுத்ததற்கு சீமான் பக்கத்திலிருந்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி அமைதியாக இருப்பதற்கு கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள போகிறார் என கூறுகின்றனர்.