Home Blog Page 278

பித்த லெவல் குறைய.. இந்த 3 பொருட்களை சாப்பிடுங்கள்!! சூப்பர் நாட்டு மருந்து இது!!

0

உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு மருந்து செய்முறையை பின்பற்றி குறைத்துக் கட்டுப்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு சர்க்கரை – கால் கிலோ
2)இஞ்சி சாறு – கால் லிட்டர்
3)ஏலக்காய் – ஐந்து

செய்முறை விளக்கம்:-

150 கிராம் அளவிற்கு இஞ்சி துண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கிலோ நாட்டு சர்க்கரை கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து அதில் இஞ்சி சாறு ஊற்றி நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக சுண்டி வந்த பின்னர் அதில் ஐந்து ஏலக்காய் இடித்து போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு இதை நன்றாக ஆற வைக்க வேண்டும்.பிறகு ஒரு பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் முழுமையாக குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)வெல்லம் – ஒரு தேக்கரண்டி
2)கிராம்பு – நான்கு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு நான்கு இலவங்கத்தை அதில் போட வேண்டும்.

பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கிராம்பு பானத்தை வடித்து குடித்தால் பித்தம் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம் போட்டு வறுக்க வேண்டும.பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை வடித்து குடித்து வந்தால் பித்தம் தணியும்.

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

0

உங்கள் பல் ஈறுகள் வலிமை இழந்தால் இரத்தக் கசிவு,பல் கூச்சம்,பல் ஆடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே பல் ஈறுகள் வலிமை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கீழா நெல்லி இலை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**தரமான கீழேநெல்லி இலைகளை சேகரித்துக் கொண்டு வர வேண்டும்.பின்னர் இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு இந்த கீழேநெல்லி பொடி ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரில் போட்டு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.இப்படி செய்தால் பல் ஈறு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இந்த தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

**இந்த மஞ்சள் பானத்தை இளஞ்சூட்டில் வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்தால் பல் ஈறு வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சிறிது கல் உப்பு போட்டு கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

**இந்த கல் உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.உங்களுக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு இருந்தால் இந்த கல் உப்பு நீரை கொண்டு வாய் சுத்தம் செய்யலாம்.

இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

0

அதிக மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் மன ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.மன அழுத்தம் மனிதர்கள் அனைவருக்கும் வராக கூடிய ஒரு பிரச்சனைதான்.பதட்டம்,மன பாரம் போன்றவை அதிகமாக இருந்தால் நிச்சயம் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

நம் இதய தசைகளின் வலிமையை அதிகரிக்க மருதம்பட்டை தண்ணீர்,குப்பைமேனி கீரை தண்ணீர் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

மருதம்பட்டை
தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் மருதம்பட்டையை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு மிக்ஸ் செய்து குடித்தால் இதய தசைகள் பலப்படும்.

தேவையான பொருட்கள்:-

குப்பைமேனி கீரை
தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் குப்பைமேனி கீரையை வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் குப்பைமேனி கீரை பொடி போட்டு கலக்க வேண்டும்.

இந்த பானத்தை குடித்தால் இதய தசைகள் வலிமைபெறும்.இதய பாரம்,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

அஸ்வகந்தா பொடி
பால்

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா பொடி கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி போட்டு கலந்து குடித்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??

0

சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து கையில் அடித்து சத்தியம் செய்வது, தலையில் அடித்து சத்தியம் செய்வது, கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது இவை அனைத்தும் தேவையில்லாத ஒன்றுதான்.

இவ்வாறு சத்தியம் செய்து விட்டு சத்தியத்திற்கு மாறாக நடந்து கொண்டாலும், நமது நடவடிக்கையே மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். சிறிய வயதில் இருந்தே மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக வளர வேண்டும். ஒருவர் மீது சந்தேகம் என்பது தோன்றி, நம்பிக்கை இல்லாமல் போகும் பொழுது மட்டுமே சத்தியம் என்ற வார்த்தை அங்கு பேசப்படுகிறது.

தவிர்க்க முடியாத சூழ்நிலை, அதாவது தன்னை எந்த விதத்திலும் நிரூபிக்க முடியவில்லை என்கின்ற சூழ்நிலையில் வேண்டுமானால் கையில் அடித்து சத்தியம் செய்து கொள்ளலாம். இதனை தவிர்த்து தலையில் அடித்து சத்தியம் செய்வது என்பது கூடவே கூடாது.

ஏனென்றால் தலையில் அடித்து சத்தியம் செய்யும்பொழுது ஏதேனும் ஒரு சிறிய பொய்யை நாம் கூறிவிட்டாலும் கூட, அது எதிர்மறையான பலன்களை கொடுத்து விடும். ஒரு சிறிய பொய்யை கூறினால் நல்லது நடக்கும் என எண்ணி, தலையில் அடித்து சத்தியம் செய்துவிட்டால் நாம் நினைத்துக் காரியம் எதிர் மாறாக நடந்து விடும்.

இவை இரண்டையும் தாண்டி அசுர பலத்தைக் கொண்டதுதான் கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது. இது போன்ற சத்தியத்தை கண்டிப்பாக செய்யவே கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் கற்பூரம் என்பது அக்னி. இந்த அக்னியை சாட்சியாக வைத்து தான் இந்து மதத்தில் அனைத்து விதமான சடங்குகளும் நடைபெறும்.

பிறப்பு முதல் இறப்பு வரை அக்னி இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. இந்த உலகிற்கே அடிப்படை ஆகாரமாக திகழ்வது நீர். இந்த நீர் உருவாவதற்கும் இந்த அக்னி தான் காரணமாக இருக்கிறது. இவ்வாறு விளங்கும் அக்னியை அணைத்து சத்தியம் செய்வது என்பது கண்டிப்பாக செய்யவே கூடாது.

தவிர்க்க முடியாத சூழ்நிலை அதாவது தன்னை மெய்ப்பிக்க வேண்டும் நான் உண்மையானவன் தான், என்று மற்றவர்களுக்கு உணர்த்த வேறு எந்த வழியும் கிடைக்காத பொழுது அக்னியை வளர்த்து, அதாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து அதன் முன்பாக நின்று சத்தியம் செய்யலாமே தவிர, அந்த அக்னியை அடித்து அணைத்து சத்தியம் செய்யக் கூடாது. இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும்.

இப்படி கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது தற்காலிகமாக உங்களை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றுமே தவிர, நீங்கள் பொய் கூறி அந்த சத்தியத்தை செய்திருந்தால் அந்த பாவம் உங்களது அடுத்த தலைமுறைகளை கண்டிப்பாக பாதித்து விடும்.

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

0

முருங்கை மரத்தில் இருக்கும் இலை,பூ,காய்,பட்டை,பிசின் அனைத்தும் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை கீரையில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.உடல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி முருங்கை கீரையை நன்றாக நிழலில் நன்றாக காயவைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கெட்டு போகாத மாதிரி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.ஒரு நிமிடம் கழித்து முருங்கை கீரை பொடி தேவையான அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த முருங்கை கீரை பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை பொடி – இரண்டு தேக்கரண்டி
2)மிளகு – இரண்டு
3)பூண்டு பல் – இரண்டு
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முருங்கை கீரையை உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இரண்டு மிளகு,இரண்டு வெள்ளைப்பூண்டு பல் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு முருங்கை கீரை பொடியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் இடித்து வைத்துள்ள கலவையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

0

நாட்டு மருத்துவம் பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.பண்டைய காலத்தில் இருந்து நாட்டு மருந்து அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்பொழுது அலோபதி மருத்துவம் அதிகரித்துவிட்டதால் நாட்டு மருந்து பயன்பாடு குறைந்து வருகிறது.

முன்பெல்லாம் சளி பிடித்தால் வீட்டில் இருக்கின்ற துளசி,தூதுவளை,வெற்றிலை போன்ற மூலிகைகளை கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தற்பொழுது மருந்து,ஊசி என்று காலம் மாறிவிட்டது.

சிலருக்கு நாட்டு மருந்து மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.இதில் கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.பல வகை சளி பிரச்சனை இருக்கிறது.இதில் நெஞ்சு சளி பாதிப்பு தீவிர பிரச்சனையாக இருக்கிறது.இந்த தீவிர நெஞ்சு சளி பாதிப்பு இருப்பவர்களுக்கு கருஞ்சீரகம் சாப்பிடுவது செட்டாகாது.

சைனஸ்,மூக்கடைப்பு,சாதாரண சளி போன்ற பாதிப்புகளை கருஞ்சீரகம்,பூண்டு ஆகியவற்றை கொண்டு சரி செய்துவிடலாம்.ஆனால் தீவிர நெஞ்சு சளி பாதிப்பை இந்த மருந்தால் குணப்படுத்த முடியாது.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த கருஞ்சீரகத்தை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு லேசாக தட்டி அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.கருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் லேசாக ஆறவைத்து வடித்து பருக வேண்டும்.

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?” என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??

0

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? என்ற விடுகதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த விடுகதை வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு பெரிய புராண கதையே இருக்கிறது. இந்த விடுகதையின் அர்த்தம் என்ன? இந்த விடுகதைக்கான பதில் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோணம் நட்சத்திரம் தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இப்பொழுது கேரளா என்று அழைக்கக்கூடிய மலையாள தேசம் தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. கேரள மக்கள் இன்றைய நாள் வரையிலும் மதித்து போற்றும் அளவிற்கு உன்னத அரசனாக இருந்தவர் தான் மகாபலி சக்கரவர்த்தி.

முப்பத்து முக்கோடி தேவர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு நல்லாட்சி செய்தவரும் இவர்தான். சரி இப்பொழுது இந்த விடுகதைக்கான அர்த்தம் குறித்து காணலாம்.

1.தட்டான்-தானம் கேட்கும் வரியவர்களுக்கு தட்டாமல் கொடுப்பவர் தான் தட்டான்.(இங்கு மகாபலி சக்கரவர்த்தி தான் தட்டான்)

2.தட்டானுக்கு சட்டை-தானம் கொடுக்க நினைப்பவர்களின் எண்ணத்தை மாற்றுவது தான் தட்டானுக்கு சட்டை போடுவது. அதாவது தானம் செய்யவிடாமல் தடுப்பது.

3. குட்டைப் பையன்-வாமண அவதாரத்தை குறிக்கிறது. (இங்கு மகாவிஷ்ணு தான் குட்டை பையன்)

மகாபலி சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு 100 வது யாகம் செய்யும் பொழுது அனைவருக்கும் தானம் வழங்க நினைத்திருந்தார். இதனை அறிந்த தேவர்களுக்கு பயமும், அதிர்ச்சியும் ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் இந்த யாகத்தை அவர் முடித்து விட்டால் அவருக்கு நிறைய சக்திகளும், பலமும், வரமும் கிடைக்கும்.

அப்படி மகாபலி சக்கரவர்த்திக்கு இந்த வரம் கிடைத்து விட்டால் நம்மை மதிக்க மாட்டார் என்றும், இந்த மூன்று லோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துவிடும் என்றும் தேவர்கள் பயம் கொண்டிருந்தனர். எனவே அனைத்து தேவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று உதவி கேட்கின்றனர். இதனால் மகாவிஷ்ணு அவர்கள் வாமணர் அவதாரம் எடுத்து அங்கு வருகிறார்.

மூன்று அடியை மட்டுமே கொண்ட வாமணர்(மகாவிஷ்ணு) ஒரு கையில் தாழம்பூ கொடையையும், மறுக்கையில் கமண்டலத்துடனும் மகாபலி சக்கரவர்த்தி வேள்வி நடத்தக்கூடிய இடத்திற்கு வருகிறார். வாமணர் வருவதை கண்ட மகாபலி சக்கரவர்த்தி “வாமணரே தான தர்மங்கள் அனைத்தும் முடிந்து விட்டதே, நீங்கள் இப்பொழுது தான் வருகிறீர்கள்” என்று கூறினார்.

அதற்கு வாமணர் “நீங்கள் பெரிய தானத்தை எதுவும் செய்ய வேண்டாம், எனது உயரத்தைப் போலவே இந்த உலகத்தில் மூன்று அடி மண்ணை மட்டும் கொடுத்தால் போதும்” என்று கூறினார். இவர் கேட்டதை மறுக்காமல் தானம் கொடுக்க நினைத்துள்ளார் மகாபலி சக்கரவர்த்தி. அப்போது அங்கு இருந்த அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு தெரிந்து விட்டது வந்திருப்பது மகாவிஷ்ணு என்று.

உடனே சுக்ராச்சாரியார் மகாபலி சக்கரவர்த்தியிடம் வந்திருப்பது மகாவிஷ்ணு, எனவே தானம் கொடுப்பதில் சற்று யோசித்து செயல்படு என்று கூறியுள்ளார். ஆனால் மகாபலி சக்கரவர்த்தி “பெருமாளே என்னிடம் வந்து தானம் கேட்கின்ற புண்ணியம் எனக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்” என்று கூறி கமண்டலத்தில் இருக்கும் நீரை தாரை வார்த்து கொடுக்க முயன்ற பொழுது, சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதபடி அடைத்துவிட்டார்.

அப்பொழுது குட்டை பையன் (மகாவிஷ்ணு) கமண்டலத்தில் அடைத்திருக்கும் பகுதியை தர்ப்பை புல்லை கொண்டு குத்தி இருக்கிறார். இவ்வாறு குத்தும் பொழுது வண்டாக உள்ளே இருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண் பாதிக்கப்பட்டு விடுகிறது. உள்ளே இருந்த வண்டு வெளியே வந்ததும் மகாபலி சக்கரவர்த்தி நீரை வாமனருக்கு கொடுத்து விடுகிறார்.

அதன் பிறகு மகாபலி சக்கரவர்த்தி “வாமணரே உங்களுக்கு வேண்டிய நிலத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். அப்பொழுது அந்த குட்டை பையன் தனது உயரத்தை வானம் வரையிலும் அதிகரித்து தனது உண்மையான ரூபமான மகாவிஷ்ணுவின் ரூபத்திற்கு மாறுகிறார்.

அதன் பிறகு தனது முதல் அடியை மண்ணுலகிலும், இரண்டாவது அடியை விண்ணுலகிலும் வைத்து அளந்து விடுகிறார். “மூன்றாவது அடியை நான் எங்கே வைப்பது?” என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு கேட்கிறார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி கீழே அமர்ந்து மண்டியிட்டு “இறைவா மூன்றாவது அடியை எனது தலையில் வையுங்கள்” என்று கூறியுள்ளார்.

மகாவிஷ்ணுவும் மூன்றாவது அடியை அவரது தலையில் வைத்து பாதாள உலகத்தில் தள்ளி விடுகிறார். அதன் பிறகு அங்கு இருந்த சுக்கிராச்சாரியார் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். இறுதியாக மகாவிஷ்ணு சுக்கிராச்சாரியாரை மன்னித்து, கொடுப்பதில் வல்லவரான மகாபலி சக்கரவர்த்தியின் பெருமையை இந்த உலகிற்கு அறிய வைத்தார்.

இப்பொழுது இந்த விடுகதைக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்பொழுது மகாபலி சக்கரவர்த்தி தானம் செய்வதை தடுக்க முயலும் சுக்கிரச்சாரியாரை மகாவிஷ்ணு தண்டிப்பார் என்பதே இந்த விடுகதைக்காண விளக்கம். கட்டையால் அடிக்கும் குட்டை பையன் யார் என்றால் ‘மகாவிஷ்ணு’. எனவே இதுதான் இந்த விடுகதைக்கான பதில்.

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??

0

கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல முடியும். அதனால்தான் சிவபெருமான் “பூத நாத்” என்று அழைக்கப்படுகிறார். பூதநாத் என்ற பெயருக்கு “பூதங்கள் அல்லது பேய்களின் தலைவர்” என்று பொருள்.

சிவபெருமான் நல்லது, கெட்டது என பாராமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இதனால்தான் தெய்வீக ஆன்மாக்களாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு இல்லாத ஆவிகளாக இருந்தாலும் சரி சிவபெருமானுக்கு இருவருமே சமம் தான். அதனால் தான் சிவபெருமான் தீய சக்திகளின் தலைவனாகவும், அகோரிகளின் கடவுளாகவும் திகழ்கிறார்.

சிவபெருமான் பேய்களிடம் தனக்கான கோவிலை ஒரே இரவில் கட்டும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பேய்கள் ஒரே இரவில் இந்த சிவன் கோவிலை கட்டின. அந்தக் கோவிலின் பெயர் தான் “கக்கன்மாத் கோவில்”. இந்த கோவிலானது மத்திய பிரதேசத்தில், குவாலியர் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுள் இதுவும் முக்கியமான ஒன்று. இந்த கோவில் பேய்களால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அதுவும் சிமெண்ட், கலவை இது போன்ற எதையும் பயன்படுத்தாமல் வெறும் கற்களைக் கொண்டே இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலானது 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த கோவிலை சுற்றி உள்ள அனைத்து கோவில்களும் சேதம் அடைந்து உடைந்து இருந்தாலும், இந்த கக்கன்மாத் கோவில் மட்டும் இன்றும் பாதுகாப்பாகவே உள்ளது. மழை, புயல் என எது வந்தாலும் அந்த கோவிலுக்கு எதுவும் ஆகாமல் இருக்கிறது.

120 அடி உள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கோவிலின் கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் இந்த கோவில் எப்படி கட்டப்பட்டது என்று இன்றுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோவிலை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், 20 கிலோமீட்டர் சுற்றிலும் உள்ள எந்த ஊரிலும் அந்த கற்கள் இல்லை என்று கூறுகிறார்கள்.

இரவு நேரங்களில் அந்த கோவிலில் அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதால் மக்கள் யாரும் அந்த கோவிலுக்கு செல்வதில்லை. சிவபெருமானின் தாண்டவ நடனத்தின் பொழுது பேய்கள், பிசாசுகள், பூதங்கள் போன்ற அனைத்தும் நடனம் ஆடும் என்று புராணங்கள் கூறுகிறது.

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

0

நம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் நம்மிடம் இருக்கின்றது.குறிப்பாக ஆண்மையை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை கொண்டிருக்கின்றனர்.

விறைப்புத் தன்மை குறைபாடு,பாலியல் ஈர்ப்பு குறைதல்,விதைப்பை வீக்கம்,நீர்த்த விந்து,உடலுறவின் போது உடனே விந்து வெளியேறுதல்,உடலுறவின் போது சோர்வு ஏற்படுதல் போன்றவை ஆண்மை குறைபாட்டின் அறிகுறியாகும்.எனவே ஆண்மைத் தன்மையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள்.

ஆண்மை அதிகரிக்க தர்பூசணி பழம் சாப்பிடலாம்.வெள்ளைப்பூண்டு பற்கள்,பிஸ்தா,முந்திரி போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.செர்ரி பழங்களை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.தக்காளி பழத்தை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

சியா விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.கருப்பு மிளகை சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.வாழைப்பழம் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.

பூசணி விதையை வறுத்து பாலில் கலந்து குடித்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.இலவங்கப்பட்டை எண்ணையை தண்ணீரில் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.இஞ்சியை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் ஆண்மை பெருகும்.

ஓரிதழ் தாமரை,அஸ்வகந்தா,முருங்கை விதை போன்றவற்றை பொடித்து சாப்பிடலாம்.முருங்கை கீரை,முருங்கை பருப்பு ஆகியற்றை பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஆண்மை பெருகும்.தர்பூசணி விதையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் விந்து எண்ணிக்கை அதிகமாகும்.

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

0

ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு திதி கொடுக்கக் கூடிய நாளும் வந்தது. அப்பொழுது கயாவிற்குச் சென்று பிண்டம் கொடுத்தால் மூதாதையர்கள் மோட்சம் அடைவார்கள் என்ற ஐதீகம் இருந்தது. எனவே இவர்கள் மூவரும் கயாவிற்கு சென்றனர்.

ராமனும், லட்சுமணனும் திதி கொடுப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வர அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றனர். நேரமும் கடந்து கொண்டே இருந்தது. ராமனும் லட்சுமணனும் இன்னும் வரவில்லை. சூரியன் மறைந்த பிறகு திதி கொடுப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

தசரத சக்கரவர்த்தியும், அவர்களது மூதாதையர்களும் பிண்டத்திற்காக காத்திருப்பது போன்ற காட்சி சீதாதேவிக்கு தோன்றியது. உடனே சீதாதேவி “எனது மாமனாருக்கு நான் ஏன் பிண்டம் கொடுக்க கூடாது?” என எண்ணி அருகிலிருந்த பல்குனி ஆற்றில் குளித்துவிட்டு, பிண்டம் கொடுப்பதற்கு எந்த ஒரு பொருளும் இல்லாததால் அந்த ஆற்றில் இருந்த மண்ணையே எடுத்து உருட்டி வைத்து திதியை கொடுத்தார்.

அந்த பிண்டத்தை தசரத சக்கரவர்த்தியும், அவரது மூதாதையர்களும் மனதார ஏற்றுக்கொண்டு சீதா தேவியை ஆசீர்வதித்தனர். அப்பொழுது அங்கு நடந்த அந்த காட்சிக்கு சாட்சியாக அங்கிருந்த பசுமாடு, துளசி,பிராமணர், பல்குனி ஆறு மற்றும் ஆலமரம் இருந்தன. சிறிது நேரத்தில் ராமனும், லட்சுமணனும் திதிக்கு தேவையான பொருட்களை கொண்டு வந்தனர்.

ராமன் சீதா தேவியை நோக்கி திதி கொடுக்க தொடங்கலாமா என்று கேட்ட பொழுது, எனது மாமனாருக்கு நான் திதி கொடுத்து விட்டேன் அதனை அவரும் மனதார ஏற்றுக் கொண்டார் என்று பதிலளித்தார் சீதாதேவி. ஆனால் ராமன் அதைக் கேட்டதும் மிகவும் கோபம் அடைந்தார்.

எனது தந்தைக்கு நீ பிண்டம் கொடுத்தாயா? பெண்கள் பிண்டம் கொடுக்கலாமா? சாஸ்திரத்தில் அதற்கு இடம் உண்டா? என்று பலவிதமான கேள்விகளை ராமன் சீதையிடம் கேட்டார். அது மட்டுமல்லாமல் நீ கொடுத்த பிண்டத்தை எனது தந்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு என்ன சாட்சி உள்ளது? என்றும் கேட்டார்.

அதற்கு சீதாதேவி சாட்சியாக 5 பேர் உள்ளனர் என்றார். அந்த ஐந்து பேரையும் எனது முன்பு வந்து உண்மையை கூற சொல் என்று ராமர் கேட்டார். சீதா தேவியும் பல்குனி ஆறு, பிராமணர், துளசி செடி மற்றும் பசு மாடு ஆகிய அனைவரிடமும் உண்மையை கூறுமாறு கேட்டார். ஆனால் இந்த நால்வரும் ராமரின் மேல் இருந்த பயத்தினால் உண்மையை கூற மறுத்துவிட்டு மௌனமாக இருந்து விட்டனர்.

இறுதியாக ஆலமரத்திடம் சீதாதேவி கேட்ட பொழுது, அந்த ஆலமரம் முதலில் ராமரை வணங்கி விட்டு “அன்னை சீதா அயோத்தி சக்கரவர்த்தி தசரதருக்கு பிண்டம் கொடுத்தது உண்மை. மன்னரும் மன நிறைவோடு சீதாதேவி கொடுத்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு, சீதா தேவியை வாழ்த்திவிட்டு மோட்ச லோகத்திற்கு சென்றார்”.இதனை நான் பார்த்தேன் இதற்கு நானே சாட்சி என்று ஆலமரம் கூறியது.

எனினும் ராமர் ஆலமரம் கூறியதை நம்பவில்லை. எனவே அவர் திதி கொடுக்க ஆரம்பித்து தனது தந்தையை அழைத்தார், அப்பொழுது தசரத சக்கரவர்த்தி “எனது மருமகள் எனக்கு பிண்டம் கொடுத்து விட்டாள், நானும் அதனை மனதார ஏற்று கொண்டேன்” என்று கூறிய பிறகே ராமர் நம்பினார். பிறகு சீதையிடம் சென்று மன்னிப்பும் கேட்டார்.

அதன் பிறகு சீதாதேவி சாட்சி கூறாத நால்வரையும் சபித்தார். “பல்குனி ஆறே நீ இனிமேல் நீர் இன்றி வற்றிய நிலையில் காணப்படுவாய்”,”துளசி செடியே நீ இனிமேல் விஷ்ணு இருக்கும் இடத்தில் வளர மாட்டாய்”, “பிராமணரே இனிமேல் நீங்கள் உங்களது கையை நீட்டி வாசகம் வாங்கியே உணவு உண்ண வேண்டும்”,”பசுவே உனது முகத்தில் இருக்கும் லட்சுமி இனிமேல் உனக்கு பின்பாகத்தான் இருப்பாள். இதனால் உனக்கு பூஜையும் பின்புறம் தான் நடக்கும். மேலும் அனைத்து வீடுகளில் இருந்தும் கிடைக்கும் பழைய சாதம் தான் உனக்கு இனிமேல் உணவாக கிடைக்கும்” என்று அனைவருக்கும் சாபம் விட்டார்.

ஆலமரமே நீ உண்மையை கூறியதால், நீ என்றென்றைக்கும் நீதிக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வாய் என்று சீதாதேவி வாழ்த்தினார். இதனால்தான் இன்றைக்கும் ஆலமரத்தின் அடியில் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.