Home Blog Page 282

குடல் புண்ணை குணமாக்கும் உணவுகள்!! இதையெல்லாம் சாப்பிடலாம் இருப்பது நல்லது!!

0

வயிற்றில் ஏற்படும் அல்சரை குடல் புண் என்று சொல்கின்றோம்.ஆரோக்கியமற்ற உணவுகள்,சீரற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் குடல் புண் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த குடல் புண் பிரச்சனை இருப்பவர்கள் ஆபத்தை உணராமல் இருந்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

குடல் புண் பாதிப்பின் அறிகுறிகள்:

1)கடுமையான வயிற்று வலி
2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு
3)பசியின்மை
4)வயிறு எரிச்சல்
5)நெஞ்சு பகுதியில் எரிச்சல்
6)வயிறு காலியாக இருப்பது போன்ற உணர்வு
7)வயிறு வீக்கம்

வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காரமான உணவுகளைசாப்பிடக் கூடாது.அதிக புளிப்பான உணவுகளை உட்கொள்ளக் கூடாது.பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.சிட்ரஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

காஃபின் உணவுகள் மற்றும் பானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.மசாலா அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

நார்ச்சத்து,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.வேகவைத்த முட்டை சாப்பிட வேண்டும்.புரோபயாடிக் உணவுகளை சாப்பிட வேண்டும்.பருப்பு,முழுதானியங்கள்,கெபிர்,யோகர்ட் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடல் புண்ணை குணப்படுத்தும் மூலிகை வைத்தியம்:

1)குருதி நெல்லி – சிறிதளவு
2)தண்ணீர் – கால் கிளாஸ்

குருதி நெல்லியை தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாறை வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் குடல் புண் பாதிப்பு குணமாகும்.

குருதி நெல்லியை பொடித்து தயிரில் கலந்து சாப்பிடலாம்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை பானங்களை பருகலாம்.வெந்தயத்தை பொடித்து தயிர் அல்லது மோரில் கலந்து சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும்.

குடல் இம்யூனிட்டி அதிகரிக்க இந்த பொருளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிங்க!!

0

சிலருக்கு சிறிதளவு காரம் சாப்பிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும்.இதற்கு காரணம் குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் இருப்பதுதான்.எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நன்னாரி வேர் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் இரண்டு நன்னாரி வேரை கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த நன்னாரி பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.பிறகு இதை நன்றாக ஆறவைத்து வடிகட்டி குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த சீரக பானத்தை வடிகட்டி குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர் – ஒரு கப்
2)புதினா – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

ஒரு கப் பசுந்தயிரை அதில் கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.புளிக்காத தயிராக இருக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து நான்கு புதினா இலைகளை பொடியாக நறுக்கி தயிரில் கலந்து சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

கல்லீரல் கொழுப்பை வெண்ணெய் போல் உருக்கி எடுக்கும் ஹெர்பல் ட்ரிங்க்!! டெய்லி ஒரு கிளாஸ் குடிங்க!!

0

உங்கள் கல்லீரலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைய இந்த ட்ரிங்க் செய்து குடிங்க.நீங்கள் எதிர்பார்த்த பலன் முழுமையாக கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் படிந்த கொழுப்பு கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து காய்ச்சி ஆறவைத்து குடித்தால் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு நெல்லிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பிறகு அதில் நெல்லிக்காய் துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கெட்ட கொழுப்புகள் கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)தேன்

செய்முறை விளக்கம்:-

ஒரு பெரிய இஞ்சியை எடுத்து அதன் தோலை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிதளவு தேன் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.இந்த தேன் இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்த கொழுப்பு கரையும்.

பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்துடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து வையுங்கள்..!! பண ஈர்ப்பு சக்தி ஏற்படும்..!!

0

குங்குமம் என்பதை திருமணமான பெண்கள் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை குங்குமத்தை கண்டிப்பாக தினமும் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக நெற்றி வகட்டில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நமது முன்னோர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் அறிவியல் ரீதியான உண்மைகள் ஒளிந்து இருக்கும்.

அதேபோன்று பெண்கள் நேர் வாக்கு எடுத்து தலையை சீவ வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் கூறுவார்கள். தலையின் நடு பகுதி அதாவது வாக்கு பகுதி பெண்களின் கர்ப்பப்பையுடன் தொடர்புடைய ஒரு பகுதியாகும்.

திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் எந்தவித கோளாறுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், குழந்தை பெறுவதற்கு தகுதியுடைய கர்ப்பப்பையாக அந்தப் பெண்ணின் கர்ப்பப்பை மாற வேண்டும் என்பதற்காகவும் தினமும் நெற்றி பொட்டில் குங்குமம் வைப்பதன் மூலம் அந்த இடத்தை தூண்டி விட வேண்டும் என்பதற்காக தான் தினமும் குங்குமம் வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அதேபோன்று ஆன்மீகம் ரீதியாகவும் பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதாவது திருமணம் ஆன பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டால் கணவனின் ஆயுள் நீடிக்கும் என்று கூறுவர். அது மட்டுமல்லாமல் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் பணவரவையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதன் மூலம் பண ஈர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது. பெண்கள் அன்றாடம் சாதாரண குங்குமத்தை வைப்பதை காட்டிலும், அந்த குங்குமத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் பண ஈர்ப்பு சக்தி இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குங்குமத்துடன் பச்சை கற்பூரத்தை கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் எழுந்தவுடன் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு, அதன் பிறகு சிறிதளவு பூஜை அறையிலும், சிறிதளவு பணம் வைக்கக்கூடிய இடத்திலும் அந்த குங்குமத்தை வைத்துக் கொண்டால் பண ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதேபோன்று தொடர்ந்து 31 நாட்கள் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை இந்த மூன்று இடங்களிலும் வைத்துப் பாருங்கள் கண்டிப்பாக இதுவரை காணாத அளவிற்கு பணவரவை காண்பீர்கள். குங்குமத்துடன் இந்த பச்சை கற்பூரம் சேரும் பொழுது பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு வசிய பொருளாக அந்த குங்குமம் மாறுகிறது.

இம்யூனிட்டி பவரை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!! 100% பலன் உண்டு!!

0

உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும்.நோய் எதிர்ப்பு சக்தி நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கும்.நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்:

1)தினமும் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும்.

2)உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் ஒரு கொட்டை வகைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3)இலவங்கப்பட்டையை பொடித்து சூடான நீரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

4)பெருஞ்சீரகத்தில் தேநீர் செய்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.துளசி விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

5)எலுமிச்சை சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து குடித்தால் குடித்தால் உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும்.

6)பழங்கள்,காய்கறிகள்,புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.தினமும் உடற்பயிற்சிமேற்கொள்ள வேண்டும்.வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

7)பழச்சாறுகளை அதிகமாக பருக வேண்டும்.தினமும் நல்ல உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.பப்பாளி கஷாயம் செய்து குடிக்க வேண்டும்.

சிவனையே ஆட்டம் காண வைத்த சனி பகவானின் வரலாறு தெரியுமா..?? “சனீஸ்வரர்” என்ற பட்டம் இவருக்கு எதனால் கிடைத்தது..??

0

நம்மில் பலரும் நவகிரகங்களில் இருக்கும் சனிபகவானை கண்டு பயமடைந்துள்ளோம் என்றால் அதில் மிகை இல்லை. சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார்.

சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலேயே மெதுவாக நகரும் கிரகமும் சனி கிரகம் தான்.

சனிபகவானை பார்த்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.நமக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியரே அவர் தான். எனவே அவரைப் பார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை. சரியாக நமது கடமையை செய்து வந்தோம் என்றால் எந்தவித பயமும் தேவையில்லை. அதேபோன்றுதான் சனி பகவானிடம் நாம் நேர்மையாக இருந்தால் பயம் தேவையில்லை.

“சனியைப் போல் கொடுப்பாறும், சனியைப் போல் கெடுப்பாறும் எவருமில்லை” என்பது பழமொழி. இதிலிருந்து தெரிகிறது சனீஸ்வரர் கொடுப்பதில் மிகச் சிறந்த வல்லவர் என்று. அதே போன்று சனிபகவான் தனது கடமையிலிருந்து சிறிதும் தவறாதவர் ஆவார். சனிபகவான் சிவனை பிடிக்கும் காலம் வந்த பொழுதும் கூட, தனது கடமையிலிருந்து தவறவில்லை.

அதாவது ஒரு நாள் சனி பகவான் தேவ லோகத்தை நோக்கி விரைந்து சென்றார். அதனை கண்ட தேவர்கள் அனைவரும் சனிபகவான் இன்று யாரை பிடிக்க போகிறாரோ?! என்று பயந்து ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் அனைத்து தேவர்களும் ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கின்றனர்.

ஆனால் சனி பகவான் தேவ லோகத்தை கடந்து செல்கிறார். அதனை கண்ட தேவர்களுக்கு மிகவும் ஆச்சரியம், உடனே மறைந்திருந்த தேவர்கள் அனைவரும் சனிபகவான் அப்படி யாரை தான் பிடிக்க செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரை பின்தொடர்ந்து சென்றனர். சனி பகவானோ கைலாயத்தை நோக்கி விரைவாக சென்று கொண்டிருக்கிறார்.

சனிபகவான் வரப்போவதை அறிந்த சிவபெருமான், தன்னைத்தான் பிடிக்க போகிறார் என்பதை யூகித்து, சனிபகவானின் பிடியிலிருந்து தப்பித்து ஒளிந்து கொள்ள இடத்தை தேடுகிறார். அதன் பிறகு பெருமாளின் வழிகாட்டுதலின்படி ஒரு குகையில் ஒளிந்து கொண்டு, அதன் வாசலையும் அடைத்துக் கொள்கிறார். அதன் பிறகு சிவபெருமான் தியானத்தில் அமர்ந்து விடுகிறார்.

சில வருடங்களாக அவர் தியானத்திலேயே இருக்கிறார். பின்பு ஒரு நாள் சிவபெருமான் குகையில் இருந்து வெளியே வரும் பொழுது, சனி பகவான் அவருக்காக வெளியில் காத்து அமர்ந்து கொண்டிருந்தார். சனிபகவானை பார்த்த சிவபெருமான் சிரித்துக்கொண்டே பார்த்தாயா சனி நான் உனது பிடியிலிருந்து தப்பித்து விட்டேன், நீ என்னை பிடிக்கும் காலமும் முடிந்து விட்டது என்று கூறினார்.

ஆனால் சனி பகவானோ சுவாமி நான் உங்களை முன்பே பிடித்து விட்டேன், எனது பிடியில் நீங்கள் இருந்ததால் தான் 71/2 ஆண்டுகள் பார்வதி தேவியை கூட பார்க்காமல் இந்தக் குகையில் நீங்கள் இருந்தீர்கள் என்று கூறினார். சனிபகவான் கூறியதை கேட்ட சிவபெருமான் வியப்படைந்து சிவன் என்றும் பாராமல் உனது கடமையை நீ சரிவர செய்ததால் ஈஸ்வரன் என்னும் பெயரை உனக்கு பட்டமாக நான் வழங்குகிறேன் என்று கூறினார்.

இன்று முதல் உன்னை “சனீஸ்வரர்” என்ற பெயரைக் கொண்டு அழைப்பார்கள் என்று வாழ்த்துகிறார். இவ்வாறு தான் நீதி தவறாத சனி பகவானுக்கு ஈஸ்வரன் பட்டம் கிடைத்தது.

உடலுக்கு நம்மை பயக்கும் தயிரை.. இந்த பாத்திரத்தில் வைக்காதீங்க!! அப்புறம் ஆபத்து உங்களுக்குதான்!!

0

நமது உடலுக்கு நன்மைகள் தரும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதில் இருக்கின்ற லாக்டிக் அமிலம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.தயிர் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தயிரை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

உடல் சூட்டை தனித்து ஆரோக்கியமாக இருக்க தயிரை உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.தயிர் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தயிரில் நிறைந்திருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்த பாதிப்பு கட்டுப்படும்.தயிர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தயிரை உட்கொள்ளலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக தயிரை சாப்பிடலாம்.

தோலில் தயிரை பூசினால் இயற்கை ஈரப்பதம் மற்றும் பொலிவு கிடைக்கும்.தயிர் உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.பெண்கள் சந்திக்கும் பிறப்புறுப்பு தொற்று குணமாக தயிரை உட்கொள்ளலாம்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர தயிர் சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வாக தயிர் இருக்கிறது.உடல் கொழுப்பை எரிக்க தயிர் உட்கொள்ளலாம்.கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.தயிரில் வைட்டமின் பி 12,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த தயிரை சாப்பிட்டால் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த தயிரை நாம் பித்தளை,செம்பு,அலுமியம் போன்ற பாத்திரங்களில் வைத்தால் அவை உடலுக்கு பாதமாகிவிடும்.இந்த உலோகங்கள் அமிலம் மற்றும் வேதியியல் ரீதியான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

தயிரை செம்பு,பித்தளை பாத்திரங்களில் வைத்து சாப்பிடுவதால் உடல் சந்திக்கும் பக்கவிளைவுகள்:

1)வயிற்று வலி
2)வாந்தி
3)குமட்டல்
4)வயிற்றுப்போக்கு
5)தலைச்சுற்றல்

இதுபோன்ற வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.எனவே இனி தயிரை மண் பாத்திரம்,எவர் சில்வர் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்துங்கள்.

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு உங்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம் எப்படி தெரியுமா?

0

நாம் புரதச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும்.முட்டை என்றால் புரதம் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் முட்டையில் வைட்டமின் ஏ,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் பி2,வைட்டமின் பி9.வைட்டமின் ஈ,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.

இளம் வயதினர் முட்டை சாப்பிட்டால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.உடல் தசைகள் வலிமைபெற தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.உடலுக்கு தேவையான புரதம்,வைட்டமின்கள் கிடைக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.முட்டை சாப்பிட்டு வந்தால் தோற்றம் நீளும்.முட்டையை வறுத்து சாப்பிடலாம் வேகவைத்து சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும்.

கோலின் என்ற சத்து முட்டையில் அதிகமாக நிறைந்திருக்கிறது.முட்டையில் இருக்கின்ற கோலின் என்ற வேதிப்பொருள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மூளையின் செயல்திறன் மேம்பட முட்டையின் கோலின் சத்து உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த கோலின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.கோலின் உணவுகள் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்திருக்கிறது.வளரும் பருவத்தினர் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் மூளை வளர்ச்சி மேம்படும்.

“ஐயோ” என்ற வார்த்தையை ஏன் சொல்லக் கூடாது..?? சொன்னால் என்ன நடக்கும்..!!

0

ஒரு மரவெட்டி மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கொண்டு, அவன் அமர்ந்து கொண்டிருக்கும் அந்த கிளையையே வெட்டினானாம். உமா தேவியார் அவர்கள் பார்த்துவிட்டு இவன் என்ன முட்டாளாக இருக்கிறான், கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெருமானிடம் கூறினாராம்.

அதற்கு சிவபெருமான் அவர்கள், ஒருவேளை அந்த மரவெட்டி கீழே விழுந்து உதவிக்கு உன்னை அழைத்தால் நீ போய் காப்பாற்று, என்னை அழைத்தால் நான் போய் காப்பாற்றுகிறேன் என்று கூறினாராம். இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

அவன் அமர்ந்து இருந்த கிளை இறுதியாக முறிந்து கீழே விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அவன் இறந்தும் போய் விட்டான். அதனைக் கண்ட உமாதேவியார் என்ன இவன் இறந்து விட்டான் என்ற சிவனிடம் கேட்டார்.

அதற்கு சிவன் சொன்னாராம் அவன் எமனின் மனைவி “ஐயோ”வை அல்லவா கூப்பிட்டான், அதனால்தான் ஐயோ வந்து அவனது உயிரை எடுத்துக் கொண்டு போய்விட்டார் என்று கூறினாராம். இதனால்தான் ஐயோ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர்.

எமதர்மன் மனைவியின் பெயர் “ஐயை தேவி” ஆகும். காலப்போக்கில் அது மருவி ஐயோ தேவி என்று மாறியது. நாம் ஐயோ என்றால் எமதர்மன் மனைவி நம்மை அழைக்கிறார்கள் என்று வருவாள். யாரோ என் மனைவியை அழைக்கிறார்கள் என்று எமதர்ம ராஜாவும் வருவார். அதனால்தான் ஐயோ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவார்கள்.

பெற்றோர்கள் தனது குழந்தைகள் கீழே விழுந்து விட்டால் கூட, ஐயோ என்று பதறி கொண்டு தான் குழந்தையை தூக்குவார்கள். ஐயோ என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுது கீழே விழுந்த குழந்தையின் அழுகை இன்னும் அதிகமாக தான் மாறுமே தவிர குறையாது. ஏனென்றால் அந்த வார்த்தைக்கான பாதிப்பு அந்தக் குழந்தைக்கு சிறிதளவாவது வந்துவிடும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓவர் டிப்ரஷனை விரட்டி அடிக்க 5 அற்புத வழிகள்!! ப்ளீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!

0

தற்பொழுது பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.வேலைப்பளு,தூக்கமின்மை,பணப் பிரச்சனை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.

ஓவர் டிப்ரஷன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.அதிக மன அழுத்தத்தால் தற்பொழுது அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று மன அழுத்தத்தை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இன்று மன அழுத்தம் அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது.ஆரம்ப நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தப் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த மன அழுத்தம் எதிர்மறையான பாதிப்புகளை மட்டுமே உண்டுபண்ணும்.

அதிக மன அழுத்தம் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாக்கிவிடும்.எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள்.

1)முதலில் இருண்ட அதாவது அதிக வெளிச்சம் இல்லாத இடத்தில் இருப்பதை தவிருங்கள்.உங்கள் அறையில் சூரிய வெளிச்சம் படும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

2)உங்கள் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.செல்லப்பிராணிகளுடன் விளையாடும் பொழுது மன அழுத்தம் குறையும்.மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.

3)உங்கள் உணர்வுகளை பேப்பரில் எழுதுங்கள்.மனதில் தோன்றுவதை எழுதினால் மன அழுத்தம் குறையும்.

4)தினமும் காலையில் 15 நிமிடங்களுக்கு தியானம் செய்யுங்கள்.தியானம்,யோகா போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

5)உங்களுக்கு பிடித்த மியூசிக் கேளுங்கள்.சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.கோபத்தை வெளிக்காட்டாமல் சிறிது நேரம் அமைதியாக இருங்கள்.மன அழுத்தம் இருக்கும் பொழுது வெயில் நடைபயிற்சி செய்யுங்கள்.தண்ணீர் குடிக்க வேண்டும்.மூச்சை நன்றாக இழுத்துவிட வேண்டும்.இதையெல்லாம் செய்து வந்தால் மன அழுத்தம் கட்டுப்படும்.