Home Blog Page 281

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்!.. குட் பேட் அக்லி நிறுவனம் விளக்கம்!..

0

விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அஜித்துக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைதிருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கிய குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையா என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என விளக்களித்துள்ளனர்.

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS

0

செயற்குழு கூட்டம் அறிவிப்பு! அதிகரிக்கும் அதிருப்தி குரல்? குழப்பத்தில் EPS

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், மே 2ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பிறகு நடைபெறும் முதல் முக்கிய கூட்டமாகும்.

இந்த கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் விரிவாக்கம், தேர்தல் திட்டங்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று அறிவித்தது. இதை எடப்பாடி பழனிசாமியும் அவ்வப்போது உறுதியாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் டெல்லி சென்று அமித்ஷா அவர்களை சந்தித்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து தமிழகம் வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி இணைந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணியில் இணைவதை அறிவித்தனர். திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை என்ற வகையில் இந்த கூட்டணியை பலர் ஆதரித்தாலும், அண்ணாமலை அதிமுக மற்றும் அதன் தலைவர்களை விமர்சித்து பேசியது, மேலும் பாஜக தேசிய தலைமை அதிமுகவை பிளவு படுத்தும் வகையில் அதன் உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டதை வைத்து பலர் இந்த கூட்டணிக்கு தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக திடீரென பாஜகவுடன் இணைந்ததற்கு உட்கட்சியிலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன. மேலும் இதன் அடிப்படையில் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை கடும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வரும் மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியில் எழுந்த அதிருப்தி குரல்கள் எதிரொலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சி மட்டும்தான்.. கூட்டணி அரசு இல்லை!.. அமித்ஷாவுக்கு செக் வைத்த பழனிச்சாமி!…

0

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ அப்போது முதல் இப்போதுவரை இதைத்தான் செய்து வருகிறார்கள்.

கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் காலூன்ற பாஜக எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. இப்போது 8 சதவீத ஓட்டுகள் வரை வந்துவிட்டார்கள். சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. பொதுவாக கூட்டணி கட்சி தலைவர்தான் கூட்டணி பற்றி அறிவிப்பார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக இருக்க அமித்ஷாவே அறிவித்தார்.

eps

அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருந்தார்.

அதாவது, அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் எனவும் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதன் அர்த்தம் பாஜகவுடன் கூட்டணி போடும் மற்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கும். அதோடு, ஆட்சி அமைப்பது பற்றி தேர்தல் முடிவுக்கு பின் ஆலோசிக்கப்படும் எனவும் கவனமாக சொல்லி இருக்கிறார். இதன் அர்த்தம் இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அமித்ஷா சொல்லவிலை. அதாவது கூட்டணி அரசு என்பது போல அவர் பேசியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையும். வெற்றிக்கு பிறகு மற்றவை பேசி முடிவு செய்யப்படும் என சொல்லியிருக்கிறார். இதிலிருந்து அமித்ஷா மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘கூட்டணி ஆட்சி மட்டும்தான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். டெல்லியில் பிரதமர் மோடி தலமையிலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் என அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். நீங்களாக எதையும் கற்பனை செய்யகூடாது’ என விளக்கம் அளித்திருக்கிறார். அதாவது நான்தான் முதல்வர்.. பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்பதைத்தான் மறைமுகமாக பழனிச்சாமி சொல்லியிருக்கிறார்.

அடடே உடல் கெட்ட கொழுப்பை கரைக்கும் 25/ 5/ 2 மேஜிக் பார்முலா பற்றி தெரியுமா?

0

உடலில் தேங்கிய கெட்ட கொழுப்பை கரைப்பது இன்று சவாலான விஷயமாக இருக்கிறது.கொழுப்பு உணவுகள் தொப்பை உண்டாவது மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்தும் தங்களால் தொப்பை கொழுப்பை கரைக்க முடியவில்லை என்று பலரும் குமுறுகின்றனர்.

கொழுப்பை குறைக்க மோசமான டயட்,கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்படுகிறது.இதனால் உடல் எடை நிரந்தரமாக குறையாது.சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்,காஃபின் உணவுகள் போன்றவை உடல் எடையை அதிகரித்துவிடும்.

நொறுக்குத் தீனி,அடிக்கடி பசி எடுத்தல்,இனிப்பு உணவுகள் ஆகியவை உடல் எடையை அதிகரித்துவிடும்.இப்படி ஏறிப்போன உடம்பை குறைக்க கடுமையான டயட் முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.இங்கு சொல்லப்பட்டுள்ள ஆரோக்கிய டயட் முறையை பின்பற்றினாலே உடல் எடை வேகமாக குறையும்.

உடல் எடையை குறைக்க நிபுணர்கள் 25-5-2 என்ற பார்முலாவை பின்பற்ற சொல்கின்றனர்.25 உணவுகளை சேர்க்க வேண்டும்.5 விஷயங்களை குறைக்க வேண்டும்.2 விஷயங்களை எரிக்க வேண்டும்.

சேர்த்துக் கொள்ள வேண்டிய 25 உணவுகள்:

ஆப்பிள்,எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு,கொய்யா,அன்னாசி,மாதுளை,பப்பாளி,பேரிக்காய்,கத்தரிக்காய்,வெங்காயம்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு,வெள்ளைப்பூண்டு,ராஜ்மா,கருப்பு சுண்டல்,வெள்ளை சுண்டல்,சியா விதைகள்,வால்நட்,பாதாம் பருப்பு,கீரை,தயிர்,தண்ணீர்,தர்பூசணி,பயறு வகைகள்,மீன் ஆகியவற்றை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறைத்துக் கொள்ள வேண்டிய 5 உணவுகள்:

உணவு அளவை குறைத்தல்,எண்ணெய் அளவை குறைத்தல்,சர்க்கரை அளவை குறைத்தல்,உப்பு அளவு குறைத்தல் மற்றும் மது,புகைப்பழக்கத்தை குறைத்தல்.

எரிக்க வேண்டிய விஷயங்கள்:

தினமும் 45 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.அதேபோல் தினமும் ஒரு கிலோ எடை தூக்க வேண்டும்.இந்த பார்முலாவை பின்பற்றி வந்தால் உங்கள் உடல் எடை வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உண்மை.. காலையில் இந்த ட்ரிங்க் குடித்தால் குடலில் ஒரு புழு நடமாட்டம் கூட இருக்காது!!

0

நம் மோசமான உணவுமுறை பழக்கங்களால் குடல் ஆரோக்கியம் பாழாகி வருகிறது.எனவே குடலில் இருக்கின்ற புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)விளக்கெண்ணெய் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை நன்றாக வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி அரைத்த வேப்பிலை பொடியை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அரை தேக்கரண்டி அளவு விளக்கெண்ணையை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த வேப்பிலை பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் குடலில் இருக்கின்ற புழுக்கள் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பாகல் இலை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி பாகல் இலையை வெயில் காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பாகல் இலை பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பாகல் இலை பொடி போட்டு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

இந்த பாகல் பானத்தை பருகி வந்தால் குடலில் புழு உருவாகாமல் இருக்கும்.குடலில் இருக்கின்ற புழுக்கள் மலத்தில் வெளியேறும்.

தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிட்டால்.. உடலுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!!

0

நாம் சாப்பிடும் சிற்றுண்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.முன்பெல்லாம் முளைகட்டிய பயறு,பொரித்த கடலை,அவித்த கடலை போன்றவற்றை ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட்டு வந்தோம்.இந்த ஸ்நாக்ஸ் உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியவையாக இருந்தது.

இதில் கொண்டைக்கடலை அதிக புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் ஆகும்.இந்த கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கொண்டைக்கடலையில் நார்ச்சத்து,புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் உள்ளிட்டவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

அசைவத்திற்கு இணையான சத்துக்களை கொண்டிருக்கும் கொண்டைக்கடலையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிட்டால் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாகும்.

இதய ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிடலாம்.கொண்டைக்கடலையில் பைபர்,இரும்பு,வைட்டமின் பி அதிகமாக நிறைந்திருக்கிறது.கொண்டைக்கடலை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.1 கப் கொண்டைக்கடலையில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாக தினமும் கொண்டைக்கடலை உட்கொள்ளலாம்.எலும்பு ஆரோக்கியம் மேம்பட கொண்டைக்கடலை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்கிறது.

நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் மலம் வெளியேறும்.குடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் கடலை சாப்பிட வேண்டும்.இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க கொண்டைக்கடலை சாப்பிடலாம்.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கொண்டைக்கடலை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் குணமாக குடிக்க வேண்டிய பவர்புல் கஷாயம்!! இந்த மரப்பட்டையை மிஸ் பண்ணிடாதீங்க!!

0

இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்பட இந்த மூலிகை கஷாயம் செய்து தினமும் குடிங்க.மருந்து,மாத்திரை எதுவும் இல்லாமல் இதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வசம்பு
2)மருதம்பட்டை
3)நாவல் மரப்பட்டை
4)குப்பைமேனி
5)மர மஞ்சள்
6)கொன்றைமரப்பட்டை
7)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

மருதம்பட்டை,நாவல் மரப்பட்டை,உலர்ந்த குப்பைமேனி இலை,மர மஞ்சள்,கொன்றை மரப்பட்டை மற்றும் வசம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.உதாரணத்திற்க்கு மருதம்பட்டை 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் இதர பொருட்களையும் 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அரை கிளாஸ் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இதை ஒரு ஆறவைத்து கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.தினமும் ஒருமுறை இந்த கஷாயம் செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முழுமையாக கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)நாவல் விதை
2)பட்டை
3)வெந்தயம்
4)கொய்யா இலை

செய்முறை விளக்கம்:-

நாவல் விதை ஒரு கப்,இலவங்கப்பட்டை நான்கு,இரண்டு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் பத்து கொய்யா இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

உடல் எடையை அதிகப்படுத்த தினமும் குடிக்கும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க!!

0

மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை தொடர்ச்சியாக பின்பற்றி உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

தீர்வு 01:

நிலப்பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
பால் – ஒரு கிளாஸ்

நான்கு அல்லது ஐந்து நிலபனங்கிழங்கை வேகவைத்து வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த நிலப் பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி காய்ச்சி குடித்து வந்தால் தசைகள் வலிமையாகும்.உடல் எடை இயற்கையான முறையில் அதிகரிக்கும்.

தீர்வு 02:

முளைக்கட்டிய உளுந்து – 25 கிராம்
வெல்லம் – சிறிதளவு

முதலில் கருப்பு உளுந்தை தண்ணீரில் கொட்டி நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த உளுந்தை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்ட வேண்டும்.

உளுந்து முளைவிட்டு வந்த பின்னர் மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைக்க வேண்டும்.அடுத்து இதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

தீர்வு 03:

கருப்பு எள் – இரண்டு தேக்கரண்டி
வெல்லம் – இரண்டு தேக்கரண்டி

முதலில் வாணலி ஒன்றில் கருப்பு எள்ளை கொட்டி லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வெல்லத்தை பொடித்து இந்த எள்ளு பொடியில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

எது சாப்பிட்டாலும் பேதி போகுதா? தண்ணீரில் இதை கலந்து குடித்தால்.. 10 நிமிடத்தில் பேதிக்கு தீர்வு கிடைக்கும்!!

0

சிலவகை உணவுகளால் வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.இதை பேதி என்று அழைக்கின்றோம்.பேதி ஏற்பட்டால் உடல் சோர்வு,மயக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவு,காரமான உணவு வயிற்றுப்போக்கிற்கு காரணமாக இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை முயற்சிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தண்ணீர் ஒரு கிளாஸ்
2)சர்க்கரை ஒரு தேக்கரண்டி
3)உப்பு சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.

அடுத்து சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலக்குங்கள்.இந்த நீரை குடித்தால் பேதி உடனே நிற்கும்.இந்த தண்ணீர் குடித்து ஒரு மணி நேரம் கழித்து தயிர் சாதம்,இளநீர் போன்ற குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்ளலாம்.

பேதிக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)மாம்பருப்பு 20 கிராம்
2)சுண்டைக்காய் வற்றல் 20 கிராம்
3)மாதுளை தோல் 20 கிராம்
4)நெல்லிக்காய் வற்றல் 20 கிராம்
5)தண்ணீர் ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் மாம்பருப்பு,சுண்டைக்காய் வற்றல்,மாதுளை தோல் மற்றும் நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த பொடி 10 கிராம் அளவிற்கு கொட்டி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி ஆறவைத்து குடித்தால் பேதி நிற்கும்.

அடிக்கடி உடல் சோர்ந்து போகுதா? அப்போ இந்த ஒரு பொடியை காலையில் சாப்பிட்டு வாருங்கள்!!

0

நம் உடலில் புரதம் குறைந்தால் உடல் சோர்வு அதிகமாகும்.உடல் பலவீனம்,அடிக்கடி நோய் பாதிப்புகள் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.புரதச்சத்து குறைந்தால் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் புரதச்சத்தை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.

வேர்கடலை – ஒருகைப்பிடி
வெல்லம் – தேவையான அளவு

முதலில் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிறிதளவு வெல்லத் தூளை அதில் கொட்டி மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கும்.

பாதாம் – 10 கிராம்
முந்திரி – 10 கிராம்
வால்நட் – 10 கிராம்
பிஸ்தா – 10 கிராம்
பால் – ஒரு கிளாஸ்

வாணலியில் பாதாம் பருப்பு,வால்நட்,முந்திரி பருப்புக்கு,பிஸ்தா பருப்பு ஆகியவற்றை போட்டு
லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைக்க வேண்டும்.அதன் பின்னர் பாத்திரத்தில் பால் ஒரு கிளாஸ் ஊற்றி அரைத்த பொடியை கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்து கிடைக்கும்.

கருப்பு கொண்டைக்கடலை – 20 கிராம்
வேர்கடலை – 20 கிராம்
பால் – ஒரு கப்

கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை தலா 20 கிராம் அளவிற்கு எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி தயாரித்த பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை தினமும் செய்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.