Home Blog Page 283

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணமா..?? ஜோதிடம் கூறுவது என்ன..??

0

பொதுவாக இந்த சுழிகள் என்பது சாமுத்திரிகா லட்சணத்தில் இருக்கும் குணங்களோடு தொடர்புடையது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒருவருடைய கண்கள் இப்படி இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய மூக்கு இப்படி இருந்தால் என்ன பலன்? என்பது குறித்து பலவிதமான தகவல்களை கூறும் ஒரு அறிவு தொகுப்பாகும்.

இந்த தொகுப்பில் ஒருவருடைய தலையில் இரட்டை சுழி இருந்தால் அதற்கு என்ன பலன் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்றும், அவர்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறுவார்கள்.

மனிதர்களைப் போன்று சில உயிரினங்களுக்கும் இரட்டை சுழிகள் இருக்கும். புதிதாக மாடு வாங்கும் பொழுதும் கூட, சுழி பார்த்து வாங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். இந்த சுழிகள் இருப்பதில் பல விதங்கள் உள்ளன. அதாவது ஒருவருக்கு இடது பக்கத்தில் சுழி இருக்கும், மற்றொருவருக்கு வலது பக்கத்தில் சுழி இருக்கும். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுழிகள் இருக்கும்.

பொதுவாக எதிரெதிர் சுழிகள் இருப்பவர்கள் இணைந்தால் அவர்களுக்குள் ஒரு நல்ல நட்புறவு ஏற்படும். அதாவது ஒருவருக்கு வலது பக்கத்திலும் மற்றவருக்கு இடது பக்கத்திலும் சுழிகள் இருந்தால் அவர்கள் நல்ல நண்பராகவோ அல்லது நல்ல கணவன் மனைவியாகவோ இருப்பார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை என்பது அதிகமாக இருக்கும்.

ஆனால் இவ்வாறு இல்லாமல் இருவருக்கும் ஒரே பக்கத்தில் சுழிகள் அமைந்து விட்டால், இருவருக்கும் சிறிது கூட ஒத்துப் போகாது. அதுவே ஒருவருக்கு இரட்டை சுழிகள் அமைந்து இருந்தால் அவர்கள் வாழ்வில் நிறைய வெற்றிகளை காண்பார்கள் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்பது தவறான கருத்து.

இந்த இரட்டை சுழிகள் வலது பக்கத்தில் மட்டுமே இரண்டு சுழிகளும் அமைந்து இருந்தால் அவர்களுக்கு நிறைய பேரும் புகழும் கிடைக்கும் என்றும், வலது பக்கத்தில் ஒரு சுழியும் இடது பக்கத்தில் ஒரு சுழியும் இருந்தால் அவர்கள் சிறிது முயற்சி செய்து தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும், இந்த இரட்டை சுழிகள் இடது பக்கத்தில் மட்டுமே இரண்டு சுழிகளும் அமைந்துவிட்டால் அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் கூறுவார்கள்.

இந்த கருத்துக்கள் அனைத்தும் பலரது வாழ்க்கை அனுபவங்களை ஆராய்ந்து உளவியல் ரீதியாக கூறப்பட்ட கருத்துக்களே ஆகும். ஒரு சிலருக்கு நினைத்தது நினைத்த உடன் கிடைத்து விடும், சிலருக்கு முயற்சி செய்தால் கிடைத்துவிடும், அதேபோன்று ஒரு சிலருக்கு கடினமாக போராடினால் மட்டுமே கிடைக்கும். எனவே அனைவரது வாழ்க்கையிலும் முயற்சி என்பது மிகவும் அவசியம்.

இந்த கருத்துக்கள் அனைத்தும் நமது முன்னோர்கள் கூறி சென்றவையே ஆகும். எனவே எனக்கு இந்த வகையில் சுழி இருப்பதனால், எனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்து விடக்கூடாது. முயற்சி செய்தால் கண்டிப்பாக அனைவருக்கும் பலன் கிடைக்கும்.

நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

0

நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய தானியங்களில் ஒன்றான துவரை புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.துவரம் பருப்பை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

துவரம் பருப்பில் புரதம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.துவரம் பருப்பை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.துவரை உணவுகள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.துவரை உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய துவரை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துவரை பருப்பில் குழம்பு,துவையல்,சட்னி போன்ற பல உணவுகள் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.துவரை பருப்பு போன்று இருக்கும் மைசூர் பருப்பு அதிக ஆபத்துகளை கொண்டிருக்கிறது.இந்த மைசூர் பருப்பை கேசரி பருப்பு என்று அழைக்கின்றனர்.

ரேசன் கடையில் இந்த மைசூர் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.இந்த பருப்பு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.குறைந்த விலைக்கு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பருப்பு தடை செய்யப்பட்டுவிட்டது.

இந்த மைசூர் பருப்பில் இருக்கின்ற அடர் நிறம் தான் நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது.இந்த மைசூர் பருப்பில் காணப்படும் நிறம் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும்.மைசூர் பருப்பு பயன்படுத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிடும்.

கை மற்றும் கால் செயலிழப்பு பிரச்சனை ஏற்படும்.மைசூர் பருப்பு சாப்பிட்டால் முடக்குவாதம் அதிகமாகும்.மைசூர் பருப்பில் யூரிக் அசிட் அதிகமாக நிறைந்திருக்கிறது.இதனால் சிறுநீரக ஆரோக்கியம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் மூட்டு பகுதியில் வலி அதிகமாகிவிடும்.

மைசூர் பருப்பில் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகமாக உள்ளது என்றாலும் இதை அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல பக் விளைவுகள் ஏற்பட்டுவிடும்.இந்த பருப்பை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.கடந்த காலங்களில் இந்த பருப்பின் பயன்பாடு அதிகமாக இருந்தது.

ஆனால் இதன்
ஆபத்து உணர்ந்த பின்னர் அதை உட்கொள்வதை மக்கள் தவிர்த்தனர்.ஆனால் விலைவாசி உயர்வால் தற்பொழுது இந்த பருப்பை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.முடிந்தவரை இந்த மைசூர் பருப்பு பயன்படுத்துவதை நாம் குறைத்து கொள்ள வேண்டும்.

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

0

திருமணம் ஆகின்ற பொழுது ஒரு பெண்ணிற்கு அணிகலனாக தரக்கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்றால் திருமாங்கல்யம், மெட்டி மற்றும் குங்குமம். முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமானதாக கருதி உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் திருமணம் ஆன பெண்களிடம் இந்த மூன்று பொருட்களையும் காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது.

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்த பெண்ணின் கால் விரலில் தடை என்பதை போடுவார்கள். அதாவது இரும்பு வளையம் ஒன்றை போடுவார்கள். அவ்வாறு போட்டுக் கொண்டால் காத்து கருப்பு அண்டாது என்று பலரும் கூறுவர். ஆனால் அது உண்மை கிடையாது.

ஒரு பெண் வயதிற்கு வரும் பொழுது அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய மாற்றமானது, அந்தப் பெண்ணின் உடலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தான் சிறிது நாட்கள் அந்த இரும்பு வளையத்தை போட்டு விடுவார்கள்.

அதேபோன்று திருமணம் ஆன பெண்ணிற்கும் மெட்டி என்பது கால் விரலில் அணிவிக்கப்படும். மெட்டி என்பது ஒருப் பெண் திருமணம் ஆனவள் என்பதை அடையாளம் காட்டக்கூடிய ஒரு பொருள் கிடையாது. ஒரு பெண்ணின் உடலானது திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் பலவிதமான மாறுதல்களை காணும். குறிப்பாக பெண்ணின் கர்ப்பப்பை.

உச்சம் தலையில் இருந்து கால்கள் வரை இருக்கக்கூடிய அனைத்து நரம்புகளும் பாதத்தை தான் சென்றடையும். நமது உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளின் நரம்புகளும் நமது கால்களில் தான் இருக்கிறது. பெண்ணின் கர்ப்பப்பை நரம்பும் கால் விரலுடன் தொடர்புடையது. அதாவது பெண்கள் மெட்டி அணியக்கூடிய அந்த விரலில் தான் கர்ப்பப்பையின் நரம்பு இருக்கிறது.

எனவே அந்த விரலில் வெள்ளியினால் செய்யப்பட்ட மெட்டியை அணியும் பொழுது, அந்த வெள்ளியில் இருக்கக்கூடிய ஈர்ப்பு சக்தி கர்ப்பப்பையை வலுவானதாக மாற்ற உதவுகிறது. இதனால்தான் நமது முன்னோர்கள் இதுபோன்ற பழக்கவழக்கங்களை நம்முடைய சாஸ்திரம், சம்பிரதாயம் என்று கூறி நம்மை இதுபோன்ற செயல்களை செய்ய வைத்து வருகின்றனர்.

பெண்கள் கால் விரலில் மெட்டி அணிவதால் உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் ஏற்படுவது போன்றே ஆன்மீகம் ரீதியாகவும் பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த மெட்டியை ஆன்மீகம் ரீதியாக எந்த விரலில் அணிய வேண்டும்? எந்த நாட்களில் மெட்டியை மாற்றக் கூடாது? இதுபோன்ற தகவல்களை தற்போது காண்போம்.

பெண்கள் மெட்டியை கட்டை விரலுக்கு அருகில் இருக்கும் விரலில் மட்டும் தான் அணிய வேண்டும். உடைந்து போன மற்றும் சேதம் அடைந்த மெட்டிகளை அணியக்கூடாது. இதுபோன்ற மெட்டிகளை பெண்கள் அணிந்து கொண்டிருந்தால், அது வீட்டில் பண கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும்.

இது போன்ற மெட்டிகளை மாற்றிவிட்டு புதிய மெட்டியை வாங்கும் பொழுது வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் உங்களது திருமண நாளின் பொழுது மாற்றக்கூடாது. மெட்டியை நீண்ட நாட்களாக அணிந்து கொண்டிருக்காமல், ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்வது நல்லது.

அதேபோன்று ஒரே காலில் இரண்டு அல்லது மூன்று மெட்டிகளை அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும். உங்களுடைய பணம் ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு உங்கள் கைக்கு வர தாமதம் ஆகின்றது என்றால், அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மெட்டியை வாங்கி கொடுத்தால் வரவேண்டிய பணம் விரைவில் வந்துவிடும்.

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு அதிகரிக்கவும் இந்த ஒரு விளக்கில் தீபம் ஏற்றுங்கள்..!!

0

பொதுவாக ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் தினமும் விளக்கேற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் அந்த ஒளி தான் வீட்டில் இருக்கக் கூடிய இருளை போக்கக்கூடிய ஒரு வெளிச்சம். எந்த ஒரு வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும் விளக்கு ஏற்றப்படுகிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் மங்கலம் உண்டாகி இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் நீக்கி புத்துணர்ச்சியை தரக்கூடிய தீபங்களுள் ஒன்றுதான் கற்பூர தீபம். இந்த விளக்கினை பூஜை அறையில்தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த தீபத்தை நமது வீட்டில் ஏற்றும் பொழுது மகாலட்சுமியின் அனுக்கிரகமும் நமக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது, கண் திருஷ்டியால் பாதிப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது, வியாபாரத்தில் தடைகள், பணம் தொடர்பான பிரச்சனைகள் இதுபோன்ற எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் இந்த ஒரு தீபத்தை நமது வீட்டில் ஏற்றுவதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் பரந்து ஓடிவிடும்.

பச்சைக் கற்பூர தீபம் என்றே கடைகளில் விற்கப்படுகிறது. அந்த தீபத்தை வாங்கி வந்து, அதன் கீழ் பகுதியில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபத்தை ஏற்றிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதன் மேல் பகுதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை போட வேண்டும்.

இப்பொழுது அந்த தீபம் எரிய எரிய அதன் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் சூடாகி, அதில் உள்ள பொருட்களின் நறுமணங்கள் வீடு முழுவதும் பரவத் தொடங்கும். அந்த நறுமணம் தான் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்கள் ஆகிய அனைத்தையும் நமது வீட்டில் இருந்து துரத்தி அடிக்கும்.

இந்த தீபத்தை காலை நேரத்தில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. இந்த தீபத்தில் இருந்து வரக்கூடிய வாசனை எந்தவித மன அழுத்தத்தையும் போக்கிவிடும். இந்த தீபத்தில் நாம் போடக்கூடிய பச்சை கற்பூரம் என்பது பண பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஒரு அற்புத சக்தி வாய்ந்த பொருளாகும். எனவே இதன் வாசனை வீடு முழுவதும் பரவும் பொழுது, வீட்டில் இருக்கும் பணப் பிரச்சனைகள் நீங்கி பணவரவு ஏற்படும்.

நான் மீண்டும் அழகான பண்புடன் கூடிய பெண்ணிற்கு மாமியாராக போகிறேன்!! ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன்!!

0

சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரதபெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் தங்களுக்குள் அது போன்ற முடிவு எதுவும் இல்லை என்பது போல ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அவர்களுடைய மகள் என அனைவரும் ஒன்றாக வெளியே செல்லக்கூடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு திருமணம் ஆன பொழுது அவருடைய மாமியார் அவரை வரவேற்ற வீடியோ இணையத்தில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

நான் மீண்டும் ஒரு அழகான, பண்புடன் கூடிய, மரியாதை மிக்க புன்னகையுள்ள பெண்ணின் மாமியாராக இருக்கப் போகிறேன். நம் குடும்பத்தில் வரவேற்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேன் என ஐஸ்வர்யா ராய் அவர்களின் தன்னுடைய இல்லத்துக்கு மருமகளாக ஜெயா பச்சன் அன்போடு அழைத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் அழைக்கும் பொழுது ஐஸ்வர்யா ராய் அவர்களின் கண்கள் இருந்து ஆனந்த கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ ரசிகர்களால் தற்பொழுது டிரண்டாக்கப்பட்டு வருகிறது. எனினும் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் விவாகரத்து என்றும் பேச்சு எழ காரணமாக அவருடைய மாமியார் இருந்திருப்பது தற்பொழுது வெளிப்படையாகியுள்ளது.

விவாகரத்து..ஜீவனாம்சம் திரை பிரபலங்கள் இடையே உருவாக்கியுள்ள புதிய ட்ரெண்ட்!! இந்த லிஸ்ட்ல நான் இல்லை.. கெத்து காட்டும் நடிகை!!

0

சமீப காலமாகவே அதிக அளவில் திரை பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து பெறக்கூடிய நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகிறது. திருமணம் செய்து அதன் பின்பு உடனடியாக விவாகரத்து பெற்று ஜீவனாம்சம் என்ற பெயரில் அதிக அளவு தொகையை பெண்கள் பெற்றுக் கொள்வதாகவும் திருமணத்தை வியாபாரமாக பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இதுபோன்று எதுவும் இல்லாமல் அதாவது திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்த பெண் விவாகரத்து பெற்ற ஒரு பிரபல நடிகர் தன்னுடைய கணவர் வீட்டில் கொடுப்பதாக கூறிய 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகையை பெற மறுத்த தன்னுடைய சொந்த காலில் தன்னால் நிற்க முடியும் என்றும் தன்னால் தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்றும் தன்னம்பிக்கையோடு கூறி நடை போடக்கூடிய வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் பிளேயர் யுவேந்திர சாகல் அவர்களின் விவாகரத்தானது வழக்காக நீதிமன்றத்திற்கு வந்த பொழுது அவருடைய மனைவி சாகலிடம் 4.75 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கேட்டிருந்தார். திருமணமான சிறிது காலத்திலேயே இது போன்ற ஒரு பெரிய தொகையை ஜீவனாம்சமாக கேட்பது பணத்திற்காகவே திருமணம் செய்து கொண்டது போல் உள்ளதாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற ஒரு சூழல்தான் 2021 ஆம் ஆண்டு தன்னுடைய பல நாள் காதலனும் தன்னுடைய கணவனுமான நாக சைதன்யாவை சமந்தா அவர்கள் பிரிவதாக அறிவித்த விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். இவர்களின் விவாகரத்து காலத்தில் நாக சைதன்யா தரப்பிலிருந்து 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக அறிவித்திருந்த நிலையில் சமந்தா அவர்கள் அதில் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல் விலகி சென்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் சமந்தாவின் மதிப்பு மரியாதையை உயர்த்துவதாக அமைந்திருக்கிறது.

மனோஜ் இறந்தபின் அடிமையாக மாறிய பாரதிராஜா!! சகோதரர் கூறும் உண்மை என்ன!!

0

தமிழ் சினிமா துறையில் முக்கிய இயக்குனரும் பல நடிகர்களை திரையில் அறிமுகப்படுத்திய வருமான பாரதிராஜா அவரின் மகன் மனோஜ் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாரதிராஜாவை யாராலும் தேற்ற முடியவில்லை. ஒருபுறம் கங்கை அமரன் சென்று ஆறுதல் கூற தன்னுடைய பாடல்களை பாடி அவர் மனதை மாற்ற முயன்றார். மற்றொரு நாள் இளையராஜா சென்று ஆறுதல் கூற முடியாமல் அமைதியாக இருந்து திரும்பிவிட்டார்.

தன்னுடைய மகனை நடிகனாக திரையுலகில் மின்ன செய்ய ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அத நடைபெறாமல் போனது. தந்தை போன்றே நல்ல இயக்குனராக மாற நினைத்த மனோஜ் அவர்களுக்கும் அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதய பாதிப்பை கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். தன் மகனினுடைய உயிரிழப்பிற்கு பின் யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் பாரதிராஜா பித்து பிடித்தவர் போல தனிமையே அதிக அளவில் சார்ந்திருந்தார்.

பாரதிராஜா குறித்து அவருடைய சகோதரர் தெரிவித்திருப்பதாவது :-

என்னுடைய அண்ணன் பாரதிராஜா அவர்களை மனோஜ் ரொம்பவே நன்றாக பார்த்துக் கொண்டார் என்றும் அவர் இறந்த பின்பு அவரிடத்தில் இருந்து யாரும் அண்ணனை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். நேற்று கூட காலையில இருந்து அவர் சாப்பிடவில்லை என்றும் குழந்தைகள் சாப்பாட்டை எடுத்து சென்று சாப்பிட்டு ஆக வேண்டும் என ஓட்டி விட்ட பின்பு தான் பாரதிராஜா சாப்பாட்டை சாப்பிட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார். தன் மகனுக்குப் பின்பு பேத்திகளின் மீது தான் அதிக பாசமாக இருக்கிறார் என்றும் பேத்திகளினுடைய அன்பில் அடிமைகளாகவே பாரதிராஜா மாறிவிட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக தன்னால் யாருக்காவது ஏதேனும் தொந்தரவு ஏற்படுமோ என்ற எண்ணத்தில் முழுவதுமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள நினைத்த பாரதிராஜா கடற்கரை பங்களாவில் தனிமையில் இருந்து வருவதாகவும் பாரதிராஜாவின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்கும் எனக்கும் இடையில் இதுதான் இருந்தது!! பல ஆண்டு கழித்து வெளிப்படையாக பேசிய நடிகை!!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பல திரைப்படங்களில் நடித்த வருகிறார் அதிலும் குறிப்பாக கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் கத்தல் ரசிகர்களால் பெரிதளவும் எதிர்பார்க்கக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. அதேபோன்று இயக்குனர் நெல்சன் இயக்கத்தால் ஜெயிலர் 2 திரைப்படமானது தற்பொழுது அட்டப்பாடியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ஆரம்பகால கட்டங்களில் கடந்து வந்த காதல் கிசுகிசுக்கள் குறித்து அவருடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட பிரபல நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். நடிகை லதா ரஜினிகாந்த் குறித்து தெரிவித்திருப்பதாவது :-

ரஜினிகாந்த் மிகவும் நல்லவர் என்றும் அவர் தனக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார் என்றும் தெரிவித்ததோடு அவர் சினிமா துறையில் நுழைந்த பொழுது நான் மிகப்பெரிய அளவில் நடித்துக் கொண்டிருந்தேன் என்றும் அப்பொழுது என்னை எம்ஜிஆரின் நடிகை என்று கூறும் அளவிற்கு சினிமா துறையில் உயர்ந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக நான் ரஜினிகாந்த் மஞ்சுளா விஜயகுமார் சேர்ந்து நடித்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தின் பின்பு எங்களுடன் ரஜினிகாந்த் நண்பராக மாறினார் அதன் பின்பு எங்கு சென்றாலும் ஒன்றாக போவோம் என தெரிவித்ததோடு மற்றபடி என்னையும் பிரச்சனையையும் நினைத்து வைத்து பேச எங்களுக்குள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.இன்று உலக அளவில் உயர்ந்துவிட்டாலும் அன்று என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ எப்படி பேசினாரோ அதேபோன்றுதான் இப்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என நடிகை லதா இன்று உலக அளவில் உயர்ந்துவிட்டாலும் அன்று என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ எப்படி பேசினாரோ அதேபோன்றுதான் இப்பொழுதும் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என நடிகை லதா தெரிவித்திருக்கிறார்.

அஜித்துக்கு சம்பளவும் இவ்வளவு கோடியா?!.. வலை விரிக்கும் தயாரிப்பாளர்கள்…

0

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். முன்பே அஜித்துக்கு போட்டியாக விஜய் இருந்தார். எனவே, விஜய் சம்பளம் ஏற்ற ஏற்ற அஜித்தும் கொஞ்சம் கொஞ்சமாக தனது சம்பளத்தை ஏற்றிகொண்டே போனார். இப்போது விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அஜித் தனிக்காட்டு ராஜாவாக மாறிவிட்டார். ஒருபக்கம், தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதற்கு காரணம் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அஜித்துக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அஜித் தனது சம்பளத்தை 175 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லியை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே அஜித்தின் கால்ஷீட்டை வாங்க முயற்சி செய்து வருகிறதாம். ஒருபக்கம், வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்திருக்கிறதாம். எனவே, அவர் இயக்கத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில், இடையில் அஜித்தை வைத்து படம் இயக்க தனுஷும் காத்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம்,குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்துள்ளதால் அஜித்தை வைத்து படமெடுக்க வேல்ஸ் இண்டர்நேசனல், ரெட் ஜெயண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.

அதிமுக திமுக இரண்டுமே ஊழல் கட்சி!.. அமித்ஷா பேசிய வீடியோ வைரல்!..

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த துவங்கியது. சசிகலா தயவால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் அவர் பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தார். மத்தியில் பாஜக கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியும் உருவானது.

ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேச பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.

eps

மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார். இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என சொன்ன பழனிச்சாமி இப்போது தனது கொள்கையை மாற்றிக்கொண்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையை காட்டி மிரட்டியே அதிமுகவை அமித்ஷா அடிபணிய வைத்திருக்கிறார் என திமுகவினர் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த வருடம் மதுரையில் பாஜக சார்பில் ரத யாத்திரை நடந்தபோது ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்த அமித்ஷா ‘அதிமுக திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். இரண்டு கட்சிகளும் சேர்ந்து தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டன. எனவே, மக்கள் பாஜகவை ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள்’ என சொல்லியிருந்தார். அந்த வீடியோவை இப்போது இணையத்தில் பகிர்ந்து ‘கூட்டணி இல்லாதபோது அதிமுகவை ஊழல் கட்சி என சொன்னவர் இப்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி வைத்திருக்கிறார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.