Home Blog Page 290

இதை ஒரு கிளாஸ் குடித்தால் 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வருவது உறுதி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0

பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறையால் மாதவிடாய் சுழற்சி மாறுகிறது.உடல் பருமன்,தைராய்டு,கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனை போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.நாள்பட்ட மாதவிடாய் பாதிப்பு சரியாக இந்த ட்ரிங்க் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)இஞ்சி அல்லது சுக்கு – ஒரு துண்டு
4)கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை – நான்கு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு வறுத்த வெந்தயத்தை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை உரலில் போட்டு இடித்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு துண்டு இஞ்சி அல்லது சுக்கு எதோலை நீக்கம் செய்துவிட்டு அதில் சேர்க்க வேண்டும்.இறுதியாக நான்கு தேக்கரண்டி அளவிற்கு கருப்பட்டி சேர்க்கவும்.கருப்பட்டி இல்லாத பட்சத்தில் நாட்டு சர்க்கரை இருந்தால் அதை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் இதை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இந்த பானம் பெண்களுக்கு சீக்கிரம் மாதவிடாய் வர வைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)தூளாக்கப்பட்ட வெல்லம் – நான்கு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை உடைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் தோலக் நீக்கப்பட்ட இஞ்சியை ஒன்றிரண்டாக இடித்து அதில் போட வேண்டும்.

அதன் பிறகு இடித்து வைத்துள்ள வெல்லத்தை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சீக்கிரம் மாதவிடாய் ஆகலாம்.

கண் பார்வை கூர்மையாக.. கண்ணாடி அணியாமல் இருக்க இந்த ஒரு பூவை கண் மீது வையுங்கள்!!

0

உங்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள இந்த தீர்வை ட்ரை பண்ணுங்கள்.

தீர்வு 01:

பொன்னாங்கண்ணி கீரை
தண்ணீர்

முதலில் ஒரு கப் பொன்னாங்கண்ணி கீரையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த பொன்னாங்கண்ணி ஜூஸை வடிகட்டி குடித்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் ஏ முதலான ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தீர்வு 02:

நல்லலெண்ணெய்
மருதாணி இலை
செம்பருத்தி பூ

அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து 150 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் கால் கைப்பிடி அளவு மருதாணி இலை மற்றும் இரண்டு செம்பருத்தி பூவை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவினால் உடல் சூடு கண் சூடு தணியும்.கண் பார்வை குறைபாட்டை இந்த எண்ணையை கொண்டு சரி செய்யலாம்.

தீர்வு 03:

நந்தியாவட்டை

பார்ப்பதற்கு குண்டுமல்லி பூ தோற்றத்தை கொண்டிருக்கும் நந்தியாவட்டை சிலவற்றை நன்றாக மலர்ந்த நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கண்கள் மீது வைத்து காட்டன் துணி கொண்டு கட்ட வேண்டும்.இப்படி செய்து வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.

தீர்வு 04:

கேரட்
பாதாம் பருப்பு

இரண்டு பொருட்களும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரண்டு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் இரும்பு வாணலி வைத்து இந்த கேரட் பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி பசுநெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து நான்கு பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி அதோல் போட்டு கெட்டியாகும் வரை கலந்துவிட வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து கேரட் கலவையில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இறுதியாக இனிப்பு சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.

வெயில் காலத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிட மறந்துடாதீங்க!! நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!

0

இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி நிறைந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம்.இவை அனைத்தும் அதிக நீர்சத்து நிறைந்த பழங்களாகும்.

இதில் அதிக சுவை கொண்ட முலாம் பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டசத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த முலாம்பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.

முலாம்பழ ஊட்டச்சத்துக்கள்:

1)வைட்டமின் சி
2)வைட்டமின் ஏ
3)பொட்டாசியம்
4)நார்ச்சத்து

முலாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.இதில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.முலாம் பழத்தை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

2.முலாம்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக முலாம்பழ ஜூஸ் பருகலாம்.

3.அஜீரணப் பிரச்சனை சரியாக முலாம் பழத்தை உட்கொள்ளலாம்.முலாம் பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து குடல் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.

4.இதய ஆரோக்கியம் மேம்பட முலாம் பழத்தை ஜூஸாக செய்து குடிக்கலாம்.இதில் இருக்கின்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5.கர்ப்பிணி பெண்கள் முலாம் பழம் ஜூஸ் செய்து குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.உடல் சூடு தணிய தினமும் ஒரு கிளாஸ் முலாம்பழ ஜூஸ் செய்து குடிக்கலாம்.

6.தோல் சார்ந்த பிரச்சனைகள் அதாவது அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாக முலாம் பழம் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

7.கண் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக தினமும் ஒரு கிளாஸ் முலாம் பழம் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

8.சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக முலாம் பழ ஜூஸ் செய்து குடிக்கலாம்.

அசர வைக்கும் மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தை இந்த 3 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடவே கூடாதாம்!!

0

கருமை நிறத்தில் கசப்பு சுவை நிறைந்த கருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கருஞ்சீரகம் புற்றுநோய் செல்களை அழிக்கும் குணம் கொண்டவையாகும்.கருஞ்சீரகத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கருஞ்சீரக பானம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.கருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து டீ போட்டு குடித்து வந்தால் சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.எலும்பு ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ செய்து குடித்து வந்தால் உடல் ஆற்றல் அதிகரிக்கும்.

தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக கருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு கிளாஸ் கருஞ்சீரக பானம் பருகலாம்.மூளை ஆரோக்கியம் மேம்பட கருஞ்சீரக பொடியை சாப்பிடலாம்.

கருஞ்சீரகத்தை அரைத்து பசை போல் மாற்றி மூட்டு மீது தடவினால் வலி,வீக்கம் குணமாகும்.சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த கருஞ்சீரக டீ குடிக்கலாம்.

உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரைய பெருஞ்சீரக டீ செய்து குடிக்கலாம்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.மாதவிடாய் கோளாறு இருக்கும் பெண்கள் கருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.மாதவிடாய் வயிற்று வலி குணமாக கருஞ்சீரக பொடி சாப்பிடலாம்.சர்க்கரை நோய்,குடற்புழு போன்ற பாதிப்புகள் குணமாக கருஞ்சீரகம்’ஊறவைத்த தண்ணீரை பருகலாம்.

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

உடல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பயன்படும் கருஞ்சீரகத்தை சிலர் உட்கொள்ளும் பொழுது அது ஆபத்தாக மாறிவிடுகிறது.குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளக் கூடாது.

குறை இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளக் கூடாது.கருத்தரித்த பெண்கள் கருஞ்சீரகத்தை தவிர்க்க வேண்டும்.

நின்றால் நடந்தால் தல கிர்ர்னு சுத்துதா? காரணமும் அதற்கு தகுந்த தீர்வும் இதோ!!

0

இன்று பலருக்கும் திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படுகிறது.படுத்தாலோ,நடந்தாலோ திடீரென்று இந்த உலகமே சுற்றவது போன்ற உணர்வு ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் வெர்டிகோ என்று அழைப்பார்கள்.

தலை தானாக சுழல்வது போன்ற உணர்வு,கிறுகிறுவென்ற மயக்கம் ஏற்படுதல் போன்றவை வெர்டிகோ என்று அழைக்கப்படுகிறது.இது அனைவருக்கும் வரும் பாதிப்பு இல்லை.மூளை நரம்பு பாதிப்பு இருப்பவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாகும்.

அதேபோல் காது நரம்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த தலைச்சுற்றல் பிரச்சனை வரும்.இந்த தலைச்சுற்றல் பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று பெரிபெரல் வெர்டிகோ.மற்றொன்று சென்ட்ரல் வெர்டிகோ ஆகும்.நமது காது நரம்பு பிரச்சனையால் ஏற்படும் தலைச்சுற்றலை பெரபெரல் வெர்டிகோ என்று அழைக்கின்றனர்.

அதேபோல் நம் மூளை நரம்பு பிரச்சனையால் ஏற்படும் தலைச்சுற்றலை சென்ட்ரல் வெர்டிகோ என்று அழைக்கின்றோம்.மூளை மற்றும் காது நரம்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படும்.

தலைச்சுற்றல் அறிகுறிகள்:

1)காரணம் இல்லாமல் அடிக்கடி தலைச்சுற்றுதல்
2)பேசும் பொழுது சிரமத்தை சந்தித்தல்
3)வாந்தி உணர்வு
4)குமட்டல் பிரச்சனை
5)உடல் இயக்கத்தில் மாற்றம்

இந்த தலைச்சுற்றல் பாதிப்பை 30 வயது கடந்தவர்கள்தான் அதிகம் சந்திக்கின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த தலைச்சுற்றல் பிரச்சனையால் உயிருக்கு எந்த சேதம் இல்லை என்றாலும் மருத்துவரை அணுகி தீர்வு காண்பதுதான் நல்லது.

தலைச்சுற்றல் பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

தினமும் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.உடலுக்கு அவசியம் ஓய்வு தேவை.எனவே அடிக்கடி ஓய்வெடுப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை இருந்தால் நீங்கள் உடனடியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும்.

தலைச்சுற்றல் பிரச்சனை நீடித்தால் நீங்கள் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.வெர்டிகோ பாதிப்பை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.காது தொடர்பான பாதிப்பு இருந்தால் இந்த வெர்டிகோ பிரச்சனை ஏற்படும்.

தலைச்சுற்றலில் பல வகைகள் இருப்பதால் இதை பலரும் அலட்சியமாக கடந்து பின்னாளில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.எனவே வெர்டிகோ பாதிப்பில் இருந்து மீள நீங்கள் தங்குத மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

தினமும் எத்தனை ஸ்பூன் ஆளிவிதை சாப்பிடுலாம்? இதனால் கிடைக்கும் 06 ஆரோக்கிய பலன்கள் தெரியுமா?

0

உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பலரும் தொடர்ந்து சாப்பிடுகின்றனர்.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.உலர் விதைகளில் ஆளிவிதை அதிக நன்மைகளை கொடுக்கிறது.

தினமும் ஆளி விதை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1)இதில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் தினமும் உட்கொண்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாகும்.

2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஆளிவிதை பானம் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

3)உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆளிவிதை பானம் பருகலாம்.ஆளிவிதையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

4)தினமும் ஆளிவிதை பானம் பருகி வந்தால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.ஆளிவிதையை ஊறவைத்து தலைக்கு தேய்த்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்

5)மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் ஆளிவிதையை ஊறவைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

6)ஆளிவிதை பானம் ஹார்மோனை சமநிலைப் படுத்த உதவுகிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஆளிவிதை பானத்தை பருகலாம்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் ஆளிவிதை சாப்பிடுவதால் குணமாகும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு ஆளிவிதை சாப்பிட வேண்டும்?

ஆண்கள் ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி அளவிற்கு ஆளிவிதை எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல் பெண்கள் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு ஆளிவிதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆளிவிதையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை பருக வேண்டும்.இந்த ஆளிவிதை நீரை தலை மற்றும் சருமத்திற்கு அப்ளை செய்யலாம்.

ஸ்கின்னை காக்கும் சன்ஸ்க்ரீன்!! எது பெஸ்ட்? வாங்கும் முன் இதை கவனிங்க!!

0

சூரிய ஒளியில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்க பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துகின்றோம்.இதில் சன்ஸ்க்ரீன் பயன்பாடு இன்றியமையாதவையாக இருக்கிறது.நம் சருமத்திற்கு சன்ஸ்க்ரீன் ஒரு பாதுகாப்பான பொருளாக பார்க்கப்படுகிறது.

நாம் வெயிலில் சென்றால் நமது சரும நிறம் முற்றிலும் மாறிவிடும்.முகம்,கை என்று ஒவ்வொன்றும் தனி தனி நிறத்தில் காணப்படும்.அதிக வெயில் படும் சருமத்தின் நிறம் கருமையாக மாறிவிடும்.வெளியில் செல்லும் போது அவசியம் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்து கொள்ள வேண்டுமென்று பலரும் அறிவுறுத்துகின்றனர்.

சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் தோல் பாதிக்கப்பட்டுவிட்டும்,புற்றுநோய் பாதிப்பு வந்துவிடும் என்ற தவறான கருத்துக்கள் பரவி வருகிறது.சன்ஸ்க்ரீன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.எல்லா சன்ஸ்க்ரீனும் சருமத்திற்கு நல்லது கிடையாது.

சன்ஸ்க்ரீனில் SPF 15,SPF 30,SPF 50 போன்றவை கிடைக்கும்.இதில் SPF 30 புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.வெயில் காலத்தில் SPF 30 சன்ஸ்க்ரீன்தான் சிறந்ததாக உள்ளது.

அதேபோல் சன்ஸ்க்ரீன் வாங்கும் முன் அதன் காலாவதி தேதியை அவசியம் கவனிக்க வேண்டும்.சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதால் கருமை மற்றும் சுருக்கங்கள் நீங்கும்.நமது முகத்திற்கு 3 மில்லி அளவு சன்ஸ்க்ரீன் பயன்படுத்தினால் போதுமானது.சன்ஸ்க்ரீனில் மூன்று பிளஸ் குறி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.இது நமது சருமத்தை சூரிய கதிர்வீச்சில் இருந்து காக்க கூடியது.

அதாவது SPF PA +++ என்று குறிப்பிட்டுருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.காலையில் போடும் சன்ஸ்க்ரீனை மாலை வரை அப்படியே விடக் கூடாது.ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை சன்ஸ்க்ரீனை நம் சருமத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.அதன் பிறகு சருமத்தை க்ளீன் செய்துவிட்டு மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு இரத்த சோகை வருமா? இதன் அறிகுறிகள் மற்றும் குணமாக்கும் மூலிகை பானம்!!

0

தற்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் பலரும் நோய் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் இரத்த சோகை பாதிப்பால் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இரத்த சோகை அறிகுறிகள்:-

1)உடலில் அதீத சோர்வு
2)மயக்க உணர்வு
3)தலைசுத்தல்
4)உடல் பலவீனம்
5)தொண்டைப்புண்
6)வாய்ப்புண்
7)நாக்கில் புண்
8)மார்பு வலி
9)சுவாசப் பிரச்சனை

இரத்த சோகை வர என்ன காரணம்?

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு உண்டாகும்.வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பவர்களுக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்படும்.இரத்த இழப்பு,இரத்தத்தில் போலேட் குறைபாடு போன்றவை இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள மற்றும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.இரத்த சோகை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மாத்திரையை கொடுக்க வேண்டும்.

இரத்த சோகையை குணமாக்கும் முருங்கை கீரை பானம்:

ஒரு கைப்பிடி முருங்கை கீரையை பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் சிறிது சீரகம்,மிளகு,பூண்டு ஆகியவற்றை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

முருங்கை கீரை பானம் நன்றாக கொதித்து வந்ததும் இதை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி குடிக்க வேண்டும்.முருங்கை கீரையில் இருக்கின்ற இரும்புச்சத்து இரத்த சோகையை குணமாக்க உதவுகிறது.

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

0

நம் அன்றாட பணிகளில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கக்கூடும். இந்த சவாலான வேலையை சுலபமாக செய்யக்கூடிய வகையிலான குறிப்புகளை தான் தற்போது காணப் போகிறோம்.

எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமலும் படி வைத்திருந்தால் மகாலட்சுமி ஆனவள் நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள்.

1. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டு மஞ்சளை குறைத்து வைக்காமல்,சந்தனம் குழைத்து வைத்தால் நீண்ட நாள் வரை அழியாமல், உதிராமல் இருக்கும்.சந்தனத்தை சிறிதளவு பன்னீர் ஊற்றி,ஜவ்வாது அல்லது தசாங்கம் பவ்டர் கலந்து உபயோகித்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.

2. பூஜை அறையில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் எப்போதும் நல்லெண்ணையாக இருப்பது நல்லது. இந்த நல்லெண்ணெயுடன் ஜவ்வாது அல்லது தசாங்கு பவுடரை கலந்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை விளக்கேற்றும் பொழுதும் தெய்வீக மணம் வீசும். தசாங்கு பவுடர் என்பது நாட்டு மருந்து கடை அல்லது பூஜை பொருட்கள் விற்கக் கூடிய கடைகளில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்று.

3. மஞ்சள் மற்றும் குங்குமத்தை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைப்பதை விட கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கட்டி தட்டாமல் பூச்சி, புழுக்கள் வராமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். அதில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டுக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

4. விசேஷ நாட்களில் பூஜை அறையில் கோலம் போட கோலமாவு பயன்படுத்துவதை விட, அரிசி மாவை கரைத்து அதில் கோலம் போட்டால் நீண்ட நேரம் கலையாமல், பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும். மூன்று பங்கு அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்து அரைத்துப் போட்டால் கோலம் பளிச்சென்று இருக்கும்.

5. பூஜைக்கு உரிய பொருட்களை எல்லாம் தனித்தனியாக வைத்துக் கொள்வதை விட, நாம் சமையலறையில் பயன்படுத்தும் அஞ்சறை பெட்டியை புதிதாக வாங்கி அதன் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு பொருட்களையும் போட்டு வைத்துக் கொண்டால் போதும். மஞ்சள், குங்குமம், கற்பூரம், சந்தனம், திரி, வத்திப்பட்டி என நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

6. வாரத்திற்கு ஒரு முறையாவது சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காண்பிப்பது என்பது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் என்பது ஐதீகம். அப்படி சாம்பிராணி போடும் பொழுது அதனுடன் வெட்டிவேர் மற்றும் தசாங்கம் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். இது நம்முடைய சிந்தனையை தெளிவாக்கும். தீய வழிகளில் நமது மனம் செல்லாமல் ஆன்மீக வழியில் செல்ல உதவும்.

7. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை சுத்தம் செய்யும் பொழுது காட்டன் துணியில் நீங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ் லிக்யூடை கொஞ்சமாக ஊற்றி துடைத்தால் நொடியில் பளபளப்பாக மாறி, வேலையும் எளிதாகி விடும்.

8. பூஜை அறையில் இருக்கும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அதில் இருக்கும் எண்ணெய் பசை எளிதாக நீங்க சிறிது ஹேண்ட் வாஷ் அல்லது வாஷிங் லிக்யூட் விட்டு தேங்காய் நார் கொண்டு லேசாக துடைத்தால் போதும். கொஞ்சம் கூட எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பளபளவென இருக்கும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல சுத்தம் செய்து கொள்ளலாம்.

9. உங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் பஞ்ச பாத்திரத் தண்ணீரில் சிறிதளவு பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, நான்கு அல்லது ஐந்து துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து வைத்தால் கோவில்களில் கொடுக்கும் தீர்த்தம் தயாராகிவிடும். பூஜை முடிந்ததும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதிலிருந்து தீர்த்தம் கொடுக்க தீராத நோயும் குணமாகும்.

10. கற்பூரம் கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை ஏற்றும்பொழுது அந்த கற்பூரத் தட்டில் சிறிய அகல் விளக்கு ஒன்றை வைத்து ஏற்ற கருப்பு படியாமல், சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் சாம்பிராணி கட்டியை தண்ணீரில் நனைத்து விட்டு பின்பு கற்பூரத்தை வைத்து ஏற்ற நீண்ட நேரம் நின்று எரியும். மேலும் வாசனையும் அதிகரித்து வரும்.

11. கற்பூர டப்பாவில் இருக்கும் கற்பூரம் விரைவில் கரைந்து விடுகிறது என்றால், அதில் நாலைந்து மிளகுகளை போட்டு வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

12. பூஜை அறையில் ஊதுபத்தியை ஏற்றும்பொழுது நீண்ட நேரம் எரிய வேண்டும் என்றால் ஊதுபத்தியின் முனையை மட்டும் விட்டு, மற்ற பகுதிகளில் சிறிதளவு தண்ணீரை தடவி விட்டு ஏற்றினால் நீண்ட நேரம் ஊதுபத்தி மணமுடன் எரியும்.

13. மஞ்சள் மற்றும் குங்குமம் பூஜை அறையில் வைக்கும் பொழுது அந்த டப்பாவில் ஒரு கற்பூரம் போட்டு வையுங்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதில் பூஞ்சைகள் பிடிக்காது, நமத்து போகவும் செய்யாது.

14. பூஜை அறையில் எப்பொழுதும் மயிலிறகை வைத்திருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு குறையும். மேலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க, பூஜை அறையில் உங்கள் குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வையுங்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது அதை காணிக்கையாக கொடுங்கள்.

15. பூஜை அறையை துடைக்கும் பொழுது அந்த தண்ணீரில் சிறிதளவு கற்பூரத்தை நுனிக்கு போட்டு துடைத்தால் எந்த ஒரு பூச்சிகளும், எறும்புகளும் வராமல் இருக்கும். பூஜை அறையும் தெய்வீக மணமாக இருக்கும்.

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் எனும் அரக்கன்!! தண்ணீர் குடிப்பதற்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!!

0

நாம் உயிர் வாழ அவசியமான ஒன்று தண்ணீர்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள அவசியம் தண்ணீர் பருக வேண்டும்.உடல் உறுப்புகள் இயங்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.அனைவரும் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அவசியம் பருக வேண்டும்.

உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.வீட்டில் இருக்கும் பொழுது பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கலாம்.ஆனால் வெயிலில் செல்லும் பொழுது வாட்டர் பாட்டிலில்தான் தண்ணீரை கொண்டு சென்று பருக முடியும்.தண்ணீர் கொண்டு செல்ல முடியாதவர்கள் கடையில் விற்கும் தண்ணீரை வாங்கி பருகுகின்றனர்.

நாம் வீட்டில் வாட்டர் பாட்டிலை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்துவோம்.ஆனால் வெளியில் விற்கப்படும் வாட்டர் பாட்டிலில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.வெளியில் வாங்கி பருகும் தண்ணீரால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

வெளியில் வாங்கும் தண்ணீர் மற்றும் பாட்டிலில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.நாம் வீட்டில் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை கழுவத் தவறினால் கிருமித் தொற்றுகள் அண்டிவிடும்.அப்படி இருக்கையில் வெளியில் வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலின் நிலையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

அதிக கிருமித் தொற்றுகள் இருக்கின்ற வாட்டர் பாட்டிலை பயன்படுத்தும் பொழுது வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.வயிற்றுவலி,வயிறு வீக்கம்,சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

வாட்டர் பாட்டிலில் வாய் வைத்தபடி குடித்தல்,வாட்டர் பாட்டில் நீரை நீண்ட நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்துதல்,வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் நமது உடலில் நேரடியாக பாக்டீரியா,கிருமிகள் தேங்கிவிடுகிறது.எனவே கடைகளில் வாட்டர் வாங்கி பருகாமல் வீட்டில் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தினமும் வாட்டர் பாட்டிலை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிய பின்னர் தண்ணீர் ஊற்றி பருக வேண்டும்.அதேபோல் அடிக்கடி சோப் பயன்படுத்தி வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.