ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025
Home Blog Page 3

விஜய் தலையில் இறங்கிய இடி.. சுக்குநூறான அரசியல் கணக்கு!! மண்ணை கவ்விய PK!!

0

TVK: பீகாரின் சட்டமன்ற தேர்தலின் முடிவானது பாஜகவிற்கு சாதகமாக தான் அமையும் என்று தெரிந்திருந்தாலும் மற்றொரு பக்கம் பிரசாந்த் கிஷோர் இருந்ததால் முடிவுகள் குறித்து சற்று எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பீகார் முடிவு குறித்து விஜய்யை மதிப்பீட்டு விடலாம் என பலரும் எண்ணியிருந்தனர். இவையனைத்தும் தற்போது பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

ஒரு தொகுதியில் வருவதே சற்று கடினம்தான். என்னதான் புதியதாக வந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் ஆரம்ப கட்டத்திலிருந்து புழக்கத்தில் உள்ள கட்சிக்குதான் வாக்களித்துள்ளனர். அந்த வகையில் பீகாரின் பெண்கள் தான் அதிகளவு பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் தான் வெற்றியடைந்துள்ளது. தேர்தலில் வியூக மன்னனாக வலம் வந்தவர் பிரசாந்த் கிஷோர் அவருக்கே தனது கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அடிமட்ட நிர்வாகிகளிடம் தொடங்கி, சாதிவார வாக்குகள் என அனைத்திலும் இவர் பக்கம் ஆதரவு கிடையாது. இதே நிலையை தான் விஜய்யும் தமிழகத்தில் சந்திக்க கூடும். மக்கள் ஆரம்ப கட்டத்திலிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பர். அந்த வகையில் சாதிவாரிய ஓட்டு, நிர்வாகிகள் செயல்பாடு என எதுவும் விஜய்க்கு கை கொடுக்காது என்று கணக்கிடுகின்றனர். இதை வைத்து விஜய் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை கவனமாக நகரத்தினால் மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்வாக முடியும்.

பாமகவில் எல்லாமே நான் தான்.. பரபரப்பை கிளப்பி விட்ட அன்புமணி!! ஷாக்கில் ராமதாஸ்!!

0

PMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக கட்சிகளனைத்தும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் நடுவில் நிலவும் பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையமோ கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக அறிவித்திருந்தார் ராமதாஸ்.

இதற்கடுத்து, ராமதாசின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் உண்மையான பாமக யார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. மேலும் பாமக இரண்டாக இருப்பதால் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், அன்புமணி பேசிய பேச்சு ராமதாசுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, என்னை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது, சின்னத்தையும் எனக்கு ஒதுக்கி  விட்டனர், யாராலும் எதுவும் செய்ய முடியாது. இதனை காரணமாக வைத்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நிகழ போவதில்லை, அதனால் அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இவரின் இந்த கருத்து பாமகவில் எல்லாமே நான் தான்  என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை ராமதாசின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

நீங்க இத பண்ணி தான் ஆகணும்.. திமுக கூட்டணி கட்சி ஆவேசம்!! கலக்கத்தில் ஸ்டாலின்!!

0

DMK VCK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக, திமுக, பாமக, போன்ற கட்சிகளில் உட்கட்சி பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவானது, பாமகவில் ஏற்பட்ட தந்தை மகன் பிரச்சனை, திமுகவின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கை போன்றவை புதிய வேகமேடுத்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்று பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வரும் சமயத்தில், அதன் கூட்டணி கட்சிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கை கேட்டு வலியுறுத்தி வரும் சமயத்தில், விசிக அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளில் முதலிடம் பிடித்திருப்பது விசிக தான் அப்படி இருக்க விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது எந்த வகையில், நியாயம் என்று விசிகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்த திருமா வேறு கட்சியில் இணைய போகிறார் என்ற தகவலும் பரவியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக திருமாவளவன் திமுகவிற்கு எதிராக ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதனை நிறைவேற்றி தரவேண்டுமென விசிகவின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்த மாதிரியான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறுவது வழக்கம். ஆனால் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சியே இந்த முழக்கத்தை முன் வைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக திமுகவை எதிர்க்க விசிக தயாராகி விட்டது என்ற கருத்தும் வலுபெற்று வருகிறது. 

இந்த படத்திலிருந்து சுட்ட கதை தான் ஜனநாயகனா.. 70% மேட்ச் ஆன சீன்ஸ்!!

0
TVK: தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு கடைசியாக தரும் படம் தான் ஜனநாயகன். இப்படத்தின் மீது மக்கள் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இன்றளவும் இதுதான் அவருடைய கடைசி படம் என்று அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கலில் தியேட்டர் சென்று FDFS பார்த்தால்தான் தரிசனம் பூர்த்தி அடையும் என்று அவரது ரசிகர்கள் கூறுவர்.
 
ஆனால் இதுதான் தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது முழு வேலையாக அரசியலில் இறங்குவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார். மேற்கொண்டு இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து மெருகேற்றியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியான ஜூனியர் பாலையாவின் பகவந்த கேசரி படத்தின் ரீமேக் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனநாயகன்படக்குழு வெளியிடவில்லை. இதனின் முதல் பாடல் தளபதி கச்சேரி வெளியானதில் கிட்டத்தட்ட 70% உறுதியாகி உள்ளது.
 
தளபதி கச்சேரி பாடலில் ஒரு சில சீன்கள் பகவந்த் கேசரி படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல ஜூனியர் பாலையா அப்படத்தில் இருந்த தோற்றம், அவருடன் இருந்த துணை நடிகர்களை ஒத்துதான் ஜனநாயகத்திலும் இருக்கின்றனர். அந்த வகையில் இது தெலுங்கு ரீமேக் படமாக தான் இருக்கும் என பலர் கூறினாலும் இதனை அவரது ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

அதிமுக திமுகவுக்கு ரெட் சிக்னல்.. ஓபிஎஸ் மட்டும் போதும்!! அமைச்சர் போட்ட வெடி!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிகளும், தொகுதி பங்கீடும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாற்று கட்சியில் இணைவது வழக்கம். அதிலும் இந்த முறை அது மிக அதிகமாக உள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில், அந்த பிரிவுகளிலிருந்தும் சிலர் பிரிந்து அதிமுகவின் தீவிர அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளனர்.

மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகு ராஜா, போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது புதிதாக ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை வைத்தியலிங்கம் முழுமையாக மறுத்துள்ளார். இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்ட வைத்தியலிங்கம், என்னை பற்றி பரவும் தகவல் அனைத்தும் பொய், எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டி காக்கப்பட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் என்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார்.

திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது, அதிமுகவில் நான் இணைய போகிறேன் என்று பரவும் தகவல் அனைத்தும் வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவில் அதிமுகவை சேர்ந்த பலர் இணைந்த நிலையில் வைத்தியலிங்கத்தையும் சேர்த்து விட்டால் திமுகவின் பலம் பெருகும் என்று ஸ்டாலின் திட்டமிட்ட நிலையில், இவரின் இந்த கருத்து ஸ்டாலினை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும், ஓபிஎஸ் உடன் மீதமிருக்கும் ஒருவரையும் தன் பக்கம் சேர்த்து விட்டால் ஓபிஎஸ் தனி மரம் ஆகி விடுவார் என்று இபிஎஸ் திட்டம் தீட்டிய நிலையில் இந்த அசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

நெல்லையில் திமுக வெற்றி உறுதி.. இபிஎஸ் செய்த காரியம் அப்படி!! குஷியில் ஸ்டாலின்!!

0

ADMK DMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக மாநில கட்சிகள் தேர்தல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற நோக்கிலும், இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பாமகவும், தேமுதிகவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற திமுக கடந்த தேர்தலில் தோல்வியுற்ற இடங்களில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை தொகுதி வாரியாக நியமித்து அந்த பகுதியில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடமான நெல்லையில் இந்த முறை திமுக தோல்வியுற்றால் அங்குள்ள திமுக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், நெல்லையில் இபிஎஸ்யால் நெல்லை மாநகர் மாவட்ட அமைப்பில், பெரும்பாலான நிர்வாகிகள் மாற்றப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக பாலை தெற்கு பகுதி செயலாளர் திருட்டு சின்னதுறை உட்பட பல முக்கிய பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் வெற்றி பெற வேண்டுமென்று தீவிரமாக செயல்பட்டு வரும் திமுகவிற்கு இது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இபிஎஸ்யின் இந்த செயலே திமுகவின் வெற்றியை உறுதி செய்து விட்டது என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதிமுக கூட்டத்தில் சித்து வேலையைக் காட்டிய திமுக.. கொதித்த இபிஎஸ்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முறையும் ஆட்சியில் அமர வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திமுகவிற்கு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களால், இந்த ஆசை நிராசையாக மாறிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஏனென்றால், திமுக அமைசச்ரகளான கே.என். நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான முறைக்கேடு வழக்கு தேர்தல் சமயத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அதிமுகவிலும் அரங்கேறியுள்ளது. அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் தற்போது புதிய திருப்பமாக அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான போதைப்பொருள் வழக்கை மீண்டும் நியாபகப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நயினாரும், விஜயபாஸ்கரும்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  பேசிய போது, திமுக ஆட்சி காலத்தில் கஞ்சா, மதுபானம் போன்ற போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று நயினார் கூறினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், கையை மேலே காட்டி விஜயபாஸ்கரை நோக்கி குட்கா, குட்கா என்று கத்தியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சி காலத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் தவெகவின் பரப்புரையிலும் செந்தில் பாலாஜியை பற்றி விஜய் பேசிய அடுத்த கணமே விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. இதனையெல்லாம்  வைத்து பார்த்தால் இது திமுகவின் சதி திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

தவெகவை இழிவாக பேசிய நயினார் நாகேந்திரன்.. இட்ஸ் வெரி ராங் புரோ!! டென்ஷன் ஆன விஜய்!!

0

TVK BJP: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் வியூகங்களும், கூட்டணி கணக்குகளும் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த பரபரப்பை மேலும் மெருகேற்றும் வகையில், விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெக கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை விஜய் உடனான கூட்டணிக்கு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் தனது கூட்டணி முடிவை ஜனவரியில் தான் அறிவிப்பேன் என்று உறுதியாக உள்ளார். ஆனாலும் இப்போதிலிருந்தே அதிமுகவும், பாஜகவும் விஜய் கூட்டணிக்கு மன்றாடி வருகிறது.

பாஜக உடன் கூட்டணி இல்லையென்பதை விஜய் உறுதியாக கூறியதிலிருந்தே பாஜகவை சேர்ந்தவர்கள் அவரை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தவர்கள் தற்போது விஜய் மீது இவ்வளவு வன்மத்தை கக்குவது அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை மேலும் வலுப்பெற்று விஜய்யின் தவெக ஒரு கட்சியே இல்லையென்பது போன்ற ஒரு கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விஜய் உடனான கூட்டணி குறித்து அவர் பேசிய போது, ஒரு பொதுத் தேர்தலை கூட சந்திக்காதவர்களுடன், ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாதவர்களுடன் பாஜக-அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது போன்ற பெரிய வார்த்தைகளை பேசலாமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவற்றின் இந்த கூற்று தமிழக வெற்றிக் கழகம் ஒரு கட்சியே இல்லை என்பது போன்ற சிந்தனையை வரவழைக்கிறது என்றும், தவெகவை பாஜக எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதையும் நிரூபிக்கிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பாஜகவை விஜய் கொள்கை எதிரி என்று கூறி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், நயினாரின் இந்த பேச்சு விஜய்க்கு மேலும் ஆத்திரத்தை கூட்டியுள்ளது என்று தவெகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

திமுகவுடன் இணையப்போகிறேன்??.. அதிமுக முக்கிய புள்ளி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

ADMK: அதிமுக தலைமை இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், வாக்கு சதவீதமானது குறைய தொடங்கியது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு வரும் தேர்தல் அனைத்திலும் தோல்வியை தான் சந்தித்து வருகின்றனர். அதிலும் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழு ஒரு பக்கமும், சசிகலாவின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றொரு பக்கமும் அதிமுகவின் கொடி மூன்று திசைகளில் உள்ளது.

இதனிடையே பாஜகவுடன் கை கோர்த்த அதிமுக, மீண்டும் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டவர்ர்களை இணைந்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தது. ஆனால் மத்திய அமைச்சரவை வரை பேசியும் எதுவும் எடுபடவில்லை. நான் அவர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என கூறி எடப்பாடி உறுதியாக உள்ளார். இதில் உரிமை மீட்பு குழுவிலிருந்து சமீபத்தில் மனோஜ் பாண்டியன் உட்பட பல முக்கிய புள்ளிகள் திமுகவை தஞ்சம் அடைந்தனர்.

அந்த வரிசையில் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழுவின் இணைச் செயலாளராக இருக்கும் வைத்தியலிங்கமும் திமுகவிடம் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவியது. அதுமட்டுமின்றி திமுக இணைத்துக் கொள்ளவில்லை என்றால் கட்டாயம் எடப்பாடி-யிடம் சேர்ந்து கொள்வார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது ரீதியாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக அதில் அவர், எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காட்டப்பட்ட அதிமுகவை மீட்டெடுப்பது தான் எனது கடமை எனக் கூறியுள்ளார். இதன்படி இவர் அதிமுக எடப்பாடி உடனும், ஆளும் கட்சி திமுக விடவும் இணைய போவதில்லை என்பது தெரிவருகிறது.

நயினார் அதிகாரத்தில் கை வைக்கும் பாஜக தலைமை!! அண்ணாமலை தலைக்கு போகும் கிரீடம்!!

0

BJP: பாஜக தமிழக தலைமை பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுப்பதாக பேசி கொண்டார்கள், ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயம் அண்ணாமலையின் நாற்காலிக்கு நயினார் நாகேந்திரன் வந்தார். இதை அறவே பிடிக்காத நிர்வாகிகள் சரிவர அவரை மதிப்பதில்லை. இது ரீதியானக குமுறலை கூட பொது நிகழ்ச்சி ஒன்றில் நயினார் தெரிவித்திருப்பார். அதாவது எனக்கு நிர்வாகிகள் குறைந்தபட்சம் மரியாதை கூட தருவதில்லை என கூறியுள்ளார். அதேபோல தமிழகத்தில் வாக்கு சதவீதம் பாஜகவிற்கு அதிகரித்து இருக்கிறது என்றால் அதன் முக்கிய பங்கு அண்ணாமலையை தான் சாரும்.

அப்படி இருக்கையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நயினாரால் அந்த வாக்கு சதவீதத்தை எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அதனால் மத்தியில் ரகசிய ஆலோசனை இது ரீதியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியை தாண்டி ஒரு முக்கிய பொறுப்பை அண்ணாமலைக்கு வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.

அதன்படி கட்சிக்குள் செயல் தலைவராக மட்டும் நயினார் இருந்தால் போதும் முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் அண்ணாமலை பார்த்துக்கொள்வாராம். ஆனால் இதனை நயினார் ஒப்புக்கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.