Home Blog Page 305

நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..

0

ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால்தான் மக்களின் கவனத்தை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது சரிதான் என்றாலும் எல்லாவற்றுக்கு ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கக் கூடாது. மத்திய அரசு தொடர்பான விஷயங்களில் அதையும் விமர்சிக்க வேண்டும். ஆனால் விஜயோ திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் வெளியிடும் எல்லா அறிக்கைகளும் திமுகவுக்கு எதிராக மட்டுமே இருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், திமுகவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. ஏனெனில், நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை திமுக அரசு கூட்டவுள்ளது. இதையடுத்து ‘இது ஏமாற்று வேலை’ என விமர்சனம் செய்திருக்கிறார். இந்நிலையில், சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்டமாறன் விஜயை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வழக்கில் வெற்றி.

அண்டை மாநிலமான கர்நாடகத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு. காவிரி தீர்ப்பில் வெற்றி.

சொந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வரின் சொத்து குவிப்பிற்கு எதிராக வழக்காடி.. சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி.

பேச்சுவாரத்தை, போராட்டம், சட்டசபை தீர்மானம் என அனைத்தையும் செய்து பார்த்தும் வழிக்கு வராவிட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடி சாதகமான தீர்ப்பை பெறுவது திராவிட கட்சிகளின் வரலாறு.

பிரச்னை செய்வது மத்திய அரசு, மாநில அரசு, பக்கத்து மாநில‌ அரசு என எதுவாக இருந்தாலும்.. இதுதான் ஜனநாயக நடைமுறை.

ஆனால் இந்த ஜனநாயகன் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, நீட் விலக்கு என அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்.. போக மாட்டாராம். இவற்றை எதிர்த்து போராட்டம் செய்ய களத்திற்கும் போக மாட்டாராம். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க மாட்டாராம். ஊர்ப்பக்கம்.. திண்ணையில் அமர்ந்திருக்கும் பெருசு ‘நடுத்தெருவுல இருக்கற கல்லை தூக்கி ஓரமா போடுங்கப்பா. யாருக்காச்சும் அடி பட்டுற போகுது’ என பலநாட்களாக சொல்லுமே தவிர..‌ அந்த கல்லை.. அது தூக்கி போடாது. அப்படிப்பட்ட ஆள்தான் இவர்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து நீக்கப்படும் டோல்கேட்!! அறிமுகமாக போகும் புதிய முறை!!

0

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்டுகளையும் அகற்றுவதற்கும் அதற்கு மாற்றாக புதிய நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளை களைவதற்காக விரைவில் புதிய நடைமுறை ஒன்று வர இருப்பதாகவும் FasTag பயன்படுத்துவதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் GNSS என அழைக்கப்படும் குளோபல் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படைகள் புதிய கட்டண முறை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த புதிய முறையின் மூலம் ஒவ்வொரு வாகனங்களும் டிவைஸ்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட எவ்வளவு தூரம் பயணத்திற்கு இருக்கிறதோ அதற்கான கட்டடம் வசூலிக்கப்படும் என்றும் இனி டோல்கேட் அருகில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் போக்குவரத்து நெரிசல் காத்திருப்பு நேரம் போன்றவை இந்த முறையில் இருக்காது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக நாள் ஒன்றுக்கு 20 கிலோமீட்டர் வரை பயணிக்க கூடியவர்களுக்கு கட்டண விளக்கு வழங்கப்படும் என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இஸ்ரோ தொழில்நுட்ப ஒத்துழைப்பு இந்த புதிய தொழில்நுட்பமான GNSS செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையானது புழக்கத்திற்கு வந்தவுடன் இந்தியர் நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்களும் நீக்கப்படும் என்றும் அதன் பிறகு இந்த புதிய முறை சாட்டிலைட் மூலமாக இயங்கி அதற்கேற்றவாறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் இதற்கான கட்டண விவரங்கள் மிக குறைவாகவே இருக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMI ல கடன் வாங்கியுள்ளீர்களா!! இந்த நற்செய்தி உங்களுக்காக!!

0

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பிப்ரவரி மாதத்தில் ரெப்கோவட்டி விகிதத்தை குறைத்து இருந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் அதே அளவு வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இது தவணை முறையில் வீடு வாகனம் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரெப்கோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 6.50% ஆக இருந்த ரெப்கோ வட்டி விகிதம் முதலில் 0.25% ஆக குறைக்கப்பட்டது. மேலும் தற்பொழுது அதே அளவு அதாவது 0.25% ஆக குறைக்கப்பட்ட தற்பொழுது ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைந்திருப்பது தவணை முறையில் வாகனம் வீடு மற்றும் தனிநபர் கடன் பெற்றுள்ள அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. காரணம் அவர்கள் கட்டக்கூடிய கடன் தவணைகளின் வட்டியானது மிகப்பெரிய அளவில் குறைந்து எளிமையான முறையில் அசலை செலுத்துவதோடு மிக விரைவிலேயே கடந்தவனைகளானது முடிவடைவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

ஆனால் இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கக்கூடிய பட்டியானது குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் நன்மையை வாரி வழங்கினாலும் மறுபுறம் சேமிப்பு வைத்திருக்கக்கூடியவர்களுக்கு வட்டி விகிதம் குறைவு என்பது அதிர்ச்சியை வழங்குவதாகவே உள்ளது.

மேலும் ரெப்கோ வட்டி விதம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியன் ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம் ஜூன் மாதம் 4 மற்றும் 6 தேதிகளில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!

0

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ரைசிங் பாரத் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :-

வக்பு சட்டம் தங்களுக்கு தீங்கு நினைக்கும் என இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை என்றும் வேறு சிலரால் அவ்வாறு நினைக்கப்படுவதாகவும் இதற்கு நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை என்றும் அதனோடு கூட ராகுல் காந்தி வக்பு மசோதா குறித்து எதுவும் பேசவே இல்லை என்று மதிய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இது மட்டுமில்லாது மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது என்றும் யார் மீதும் ஹிந்தி மொழியை திணிப்பது அல்லது இந்தி மொழியையே முதன்மை மொழியாக அறிவிக்க நினைப்பது போன்ற முடிவுகளை மேற்கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார். திமுகவில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒருவருக்கு கூட தமிழில் கையெழுத்து போடத் தெரியாது என்றும் இதனை தான் மீண்டும் மீண்டும் தெரிவித்து கொண்டே இருப்பதாகவும் கட்டாயமாக தமிழகத்தில் நாங்கள் தான் ஜெயிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை பற்றி பேசினால் தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றும் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மட்டும்தான் இவ்வாறெல்லாம் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். பிரிவினையை விரும்புபவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றும் சாமானிய இஸ்லாமியர்கள் பிரிவினையை விரும்பவில்லை ஆனால் வக்பு மசோதா பிரிவினையை உண்டாக்குகிறது என காங்கிரஸ் சார் மட்டுமே தெரிவித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

முன்கூட்டியே வெளியாக இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்!!

0

2024 ஆம் ஆண்டு விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி 10,12 வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வினாத்தாள் திருத்தும் பணியானது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் பல்வேறு நகரங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது பெரும்பாலான பாட வினாத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட விட்டன என்றும் ஒரு சில பாடங்கள் அதாவது வணிகவியல் மனோ தத்துவவியல் போன்ற பாட வினாத்தாள்கள் மட்டுமே மதிப்பிடப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நகரங்களில் இது போன்ற ஓரிரு வினாத்தாள்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதலில் ஒருவர் வினாத்தாள்களை திருத்த மற்றொருவர் மறு மதிப்பீடு செய்ய அதனை தொடர்ந்து அந்த வினாத்தாளை மேற்பார்வையாளர் ஒருவர் பார்த்து திருத்திய பின்பு தான் அதனுடைய கூடுதல் போடப்படுகிறது என்றும் இந்த வேலையானது அதிவேகமாக நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் மே முதல் வாரத்தில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Good bad ugly review: அஜித்தோட மேஜிக்.. நோ லாஜிக்!.. குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு!?….

0

Good bad ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. குட் பேட் அக்லி படம் 10ம் தேதியான இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

twitt
twitt

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலை 9 மணிக்கும் கர்நாடகாவில் மட்டும் 8.30 மணிக்கும் இப்படம் வெளியாகிறது. ஆனால், வெளிநாடுகளில் காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. எனவே, அப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் படத்தை பற்றி டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்..

twitt

படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் லாஜிக்கும் இல்லை. எமொஷனல் கனெக்ட்டும் இல்லை. படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டுமே. பல மாஸான காட்சிகள் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் பெரிதாக ஒன்றுமில்லை. இதனால் படம் பிடிக்காமல் போகிறது. அஜித் ஃபேன்ஸ் மட்டுமே ரசிப்பார்கள்’ என சிலர் பதிவிட்டிருக்கிறார்கள். கதையை எதிர்பார்க்காமல் ஜாலியாக பார்க்கலாம் என்கிற மனநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படம் பிடிக்கும். இல்லையெனில் படம் ஏமாற்றும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். ஒருவரோ ரசிகர்களுக்கு Good.. நடுநிலையாளர்களுக்கு Bad.. ஹேட்டர்ஸ்க்கு Ugly என பதிவிட்டிருக்கிறார்.

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை!!

0

வீடு கட்டும் பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் விபத்து ஏற்பட்ட அவர்களது உயிர் பிரியநேரத்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசால் இழப்பீட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. அதிலும் இதுவரை 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அதனை 8 லட்சம் ரூபாய் ஆக உயர்த்துவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற துறை சார்ந்த மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது பேசிய சிவி கணேசன் அவர்கள் கூறியிருப்பதாவது :-

✓ தமிழகத்தில் 32 அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய 67.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ திருக்குவளையில் இருக்கக்கூடிய அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க 3.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

✓ தொலைதூர மாணவர்களுக்காக 50 தங்கும் விடுதிகள் அமைக்க 22.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

✓ கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர்களுக்கு 2 இலவச முதியோர் இல்லங்கள் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

✓ கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய மற்றும் இல்லாத தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படக்கூடிய 5 லட்சம் ரூபாய் தொகையை 8 லட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

✓ ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் என 3 ஆண்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

✓ மேலும் பட்டப்படிப்பு முதுநிலை படிப்பு உயர்கல்வி தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1000 உயர்த்தி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வினை விலக்க இது ஒன்றுதான் வழி!! முதலமைச்சர் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!!

0

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நீட் தேர்வினை முழுவதுமாக ரத்து செய்வதற்கான போராட்டம் நடந்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசி இருப்பதாவது :-

விடாமல் சட்டத்தின் மூலமாக போராடினால் நீட் தேர்வில் விலக்கு வர முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்தை விடுவிக்க அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்படுத்தி அதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்த அழைப்பினை ஏற்க மறுத்து அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி காங்கிரஸ் மதிமுக பாமக சிபிஎம் விசிக போன்ற கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். அதனோடு நீட் தேர்வினை தமிழகத்தில் இருந்து நீக்க தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கின.

தற்பொழுது வெளியாகி இருக்கக்கூடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பானது தமிழகத்திலிருந்து நீட் தேர்வினை முழுவதுமாக நீக்குவதற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்தும் பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக இருப்பதாகவும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ நுழைவு தேர்வான நீட்டானது விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களை அதிக அளவில் பாதிக்கிறது என்றும் பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான சீட்டுகளை வழங்க வேண்டும் என்றும் அதுதான் தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தது முதலே நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்டத்தை முன்மொழிந்து வருவதாகவும் அவற்றைக்கான நாட்களோடு குறிப்பிட்டு என்னென்ன நாட்களில் என்னென்ன வகையான போராட்டங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்து விவரித்து இருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.

அடுத்த கட்ட போராட்டமாக நீட் தேர்வினை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டம் முன்முடிவுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதற்கு ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஒப்புதல் பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த விஷயம் குறித்து ஒன்றிய அரசு சுகாதாரத்துறை ஆயுஸ் உள்துறை உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களிடம் தமிழ்நாடு அரசினுடைய நீட் விலக்கிற்கான செயல் விளக்கங்களை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நீட் தேர்வானது யாரோ ஒருவர் தன்னுடைய சுயநலத்திற்காக ஒன்றிய அரசை தவறாக பயன்படுத்தி துவங்கியதாகவும் அதை முறையாக ஒன்றிய அரசு நடத்தாமல் இருப்பது குறித்து பல மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாகவும் கூறியதோடு, சட்டப்படியான போராட்டத்தை தொடர்ந்தால் கட்டாயமாக நீட் தேர்வு முழுமையாக நீக்கப்படும் என நம்பிக்கை அளித்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.

ஜூப்லி செயலியால் பறிபோகும் பணம்!! எச்சரிக்கும் சைபர் கிரைம்!!

0

சமீபத்தில் மிகவும் ட்ரெண்டான ஒன்றாக ஜூப்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதழ் தற்பொழுது பல்வேறு அங்கீகரிக்கப்படாத செயலிகள் இருப்பதாகவும் அவற்றில் செல்பி எடுத்த மாற்றும் பொழுது நம்முடைய புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை மோசடி நபர்கள் திருடக்கூடும் என மாநில சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடத்திருக்கின்றனர்.

இது குறித்த தமிழ்நாடு மாநில சைவ கலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

சமீபத்தில் புகைப்படங்களை ஜூப்லி அதாவது கார்ட்டூன் போல மாற்றக்கூடிய செயற்கை நுண்ணறிவு கலையினுடைய பயன்பாடு பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது போன்ற செயல்களில் பயனர்கள் புகைப்படங்கள் அல்லது தங்களுடைய செல்விகளை பதிவேற்றம் செய்யும் பொழுது பயனர்களுக்கு அவர்கள் நினைக்கக்கூடிய மற்றும் அவர்களை மகிழ்விக்க கூடிய முக அமைப்புகளை அனிமேஷன் செய்த இந்த செயலிகள் வழங்குகின்றன. இதனால் பலரும் இது போன்ற செயலிகளை தங்களுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களுடைய தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை ஏஐ செயலிகளிடம் செல்போன் வழங்குகிறது. இவ்வாறு நடக்கும் பொழுது பதிவேற்றம் செய்யப்படக்கூடிய புகைப்படங்கள் பின்னணிகளில் பகுப்பாய்வு செய்து சேமித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நாம் பதிவேற்றம் செய்யக்கூடிய புகைப்படங்கள் மற்றும் அதன் மூலம் பதிவேற்றமாக கூடிய தரவுகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதனால் அங்கீகரிக்கப்படாத செயலிகள் , அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய செயல்கள் மூலம் தனிநபர் அவருடைய மொத்த தரவுகளையும் இலக்க நேரிடும். இவை சைபர் குற்றங்களுக்கு உள்ளாவதற்கான அபாயம் கூட ஏற்படுத்தும் என சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சைபர் மோசடிக்காரர்கள் இந்த ஜூப்லி கதாபாத்திரங்களை பயன்படுத்தி இவற்றில் பதிவிறக்க இணைப்புகளை அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் கூட தனிப்பட்ட தரவு வங்கி தகவல்கள் போன்றவற்றை பெற்று பயனரின் உடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவருக்கான லிஸ்ட் ரெடி!! நாளை சென்னையில் அறிவிக்கும் அமித்ஷா!!

0

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வர இருக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்தில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று இரவு டெல்லியில் இருந்த 7.30 மணிக்கு விமானத்தில் புறப்படும் உள்துறை அமைச்சர் இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் என்றும் அதன் பிறகு அவர் சென்னையில் இருக்கக்கூடிய ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மறுநாள் அதே ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்ற முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் உடைய கட்சி செயல்பாடுகள் அதிமுக உடனான கூட்டணி கருத்துக்களை நிர்வாகிகளிடமிருந்து பெற்று 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்குவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான குருமூர்த்தியை சந்தித்த உள்துறை அமைச்சர் பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் நாளை பிற்பகல் 3 மணி அளவில் சந்திக்க உள்ளதாகவும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் அதிமுக உடனான கூட்டணி பாஜக மாநில தலைவர் நியமனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்பது இனி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழும்பொழுது அதற்கு பாஜகவின் எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் இருக்கிறது. அவரைத் தொடர்ந்து வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் மாஜி பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரின் பெயர்கள் லிஸ்டில் இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் தான் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.