Home Blog Page 304

அன்புமணி தொடங்கப் போகும் புதிய கட்சியின் பெயர் இது தான்!! வெளியாகப்போகும் திடீர் அறிவிப்பு!!

0

PMK : அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேரன் முகுந்தனை பதவி நியமனம் செய்வது குறித்து மோதல் நிலவியது. இதற்கு முற்றிலும் அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். மேற்கொண்டு முகுந்தனும் பதவி ரீதியாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இளைஞரணி தலைவர் முகுந்தன் பெயர் பொறிக்கப்பட்டாலும் அவர் அந்த இடத்திற்கு வருவதில்லை.

இப்படியே அப்பா மகன் அக்காவின் மகன் என்று மூவரும் கட்சிக்குள் ஒருவருக்கொருவர் தலைகாட்டாத சூழல் நிலவி வந்தது. திடீரென்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை பதவிலிருந்து நீக்கிவிட்டார். இது கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது. மேற்கொண்டு இது அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள மோதல் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஆனால் அன்புமணி அப்பாவின் செயலுக்கு பதிலடி கொடுக்காமல் அமைதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில் பெரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதென்று கூறுகின்றனர். அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அக்கட்சியின் பெயரைக் குறித்து ஆலோசனையில் உள்ளாராம். “புதிய பாட்டாளி மக்கள் கட்சி” என்ற பெயருடன் புது அதிகாரத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என்று பனையூர் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மேற்கொண்டு புதிய கட்சி புதிய தலைமை என்று அப்பாவை எதிர்த்து அரசியல் செய்யக் போவதாகவும் நாளடைவில் இவர் தொடங்கும் கட்சியுடன் யாரை கூட்டு வைக்கலாம் என்பது குறித்த அறிவிப்புக்கள் அனைத்தும் வரும் என்று கூறியுள்ளனர்.

மாதவிலக்கால் மாணவியை வகுப்பறைக்கு அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்: வாசலில் தேர்வெழுதிய அதிர்ச்சி சம்பவம்

0

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்டபோது, பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது. இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தனது முதல் மாதவிலக்கு ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் 7ஆம் தேதி அறிவியல் மற்றும் ஏப்ரல் 9ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை எழுத பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி நிர்வாகம் அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறை வாசலில் உள்ள படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்தது.

மாணவியின் தாய் மற்றும் உறவினர் ஒருவர், மாணவியை பார்க்க பள்ளிக்கு வந்தபோது, இந்த நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவியிடம் காரணம் கேட்டபோது, மாணவி பதிலளிக்க முடியாமல் இருந்தார். இந்த சம்பவத்தை உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

பின்னர், மாணவியின் தாய் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டபோது, “இங்கு அப்படித்தான் நடக்கும்; வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், இனிமேல் இத்தகைய செயல்கள் நடைபெறக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..

0

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளோடு பாஜகவும் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என பாஜக கருதுகிறது.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிச்சாமி அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று இரவு சென்னை வந்த அமித்ஷா நாளை தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

இந்நிலையில், நாளை அதிமுக – பாஜக கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதிமுகவுக்கு எவ்வளவு தொகுதிகள் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது நாளை காலை பேசி முடிவெடுக்கப்பட்டு உறுதி செய்யப்படும் எனவும் அது முடிந்தவுடன் கூட்டணியை அறிவிப்பார்கள் என்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து கட்சியின் முக்கிய எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 5 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை என்றாலும் யாரும் சொந்த ஊருக்கு போகமல் சென்னையிலும் இருக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகளை அறிவுறுத்தியிருக்கிறார். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி, ஆர்.பி. உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், செங்கோட்டையனுக்கு எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் க்கு போன் போட்ட அன்புமணி.. கூட்டணி குறித்த ரகசிய பேச்சுவார்த்தை!! வெளியான பரபர தகவல்!!

0

PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவராக இருந்த அன்புமணியை பதவி விட்டு நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு அப்பா மகன் இருவருக்கும் அக்காவின் மகனை நிர்வாகியாக அமர்த்துவதில் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதன் வெளிப்பாட்டை பார்க்க முடிந்தது. மேலும் குடும்ப நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டு வந்தால் குடும்ப அரசியலாக மாறிவிடும் என்று அன்புமணி வலியுறுத்தி பேசியிருந்தார்.

ஆனால் ராமதாஸ் இது நான் கொண்டு வந்த கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் இன்று கூறினார். அக்கணமே ராமதாஸ் பனையூரில் புதிய அலுவலகம் திறந்து உள்ளேன் அங்கே வந்து என்னை சந்தேகங்கள் என கூறிவிட்டு கோபத்துடன் வெளியேறினார். மேற்கொண்டு இருவருக்கும் சமாதானம் செய்து கட்சி வழக்கம்போல் செயல்பட்டது. ஆனால் இந்த பனி போரானது முடிந்த பாடில்லை, இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து செயல் தலைவராக உத்தரவிட்டு உள்ளார்.

மேற்கொண்டு தானே தலைவர் பதவியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிறுவனர் பதவி நீக்கம் செய்தது குறித்து அன்புமணி வாய் திறக்கவில்லை. வரும் நாட்களில் அன்புமணி ராமதாஸ் புதிய கட்சி தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக கூட்டணியின்றி தவிக்கும் விஜய்யுடன் கைகோர்த்து 2026 சட்டமன்றத் தேர்தலை களம் காணப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தான் இவர் முன்கூட்டியே பனையூரில் அலுவலகத்தை திறந்து உள்ளதாகவும் கூறுகின்றனர்.

கோயில் விழாக்களில் சாதி பெயர் குறிப்பிட தடை உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் இடைக்காலத் தடை

0

தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் குறிப்பிட்ட சாதி பெயர்களை குறிப்பிடக்கூடாது என Hindu Religious and Charitable Endowments (HR&CE) துறை வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆறுமுக நயினார் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவின் அடிப்படையில் விசாரணைக்கு வந்தது. அவர், இந்து ஆலயங்களில் நீண்ட காலமாக இருந்து வரும் பாரம்பரிய நடவடிக்கைகள் மற்றும் சமூகக் குழுக்களின் அடையாளங்களை தடை செய்யும் வகையில் HR&CE வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, அவர்களின் உரிமைகளுக்கு எதிரானது என்றும், மத வழிபாட்டுச் சுதந்திரத்தை பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம், அறநிலையத் துறை ஆணையரின் சுற்றறிக்கைக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த துறை ஆணையர் இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ள கோயில் விழா மரபுகள், சமுதாய அடையாளங்கள் மற்றும் அதிகாரங்களுக்குச் சட்ட ரீதியான முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சமூக அமைப்புகள் மற்றும் வழிபாட்டாளர் குழுக்கள் இச்சுற்றறிக்கையின் பின்னணியையும், அதனை எதிர்த்து வந்த கருத்துகளையும் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணைகள் நடைபெற உள்ள நிலையில், கோயில் பண்பாட்டிலும், சமூக அடையாளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி இது என பலர் கருதுகின்றனர்.

கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள் 

கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலும் கட்சி நிர்வாகிகளை அவர் தனியே சந்திப்பதை தொடர்ந்து வந்தார், இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ் பாமக தலைவர் பதவியில் தானே தொடர்வதாகவும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு செயல் தலைவர் பதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவரை செயல் தலைவராக நியமித்துள்ள இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த முடிவை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியும் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

பாமக விதிகளின்படி, தலைவர் பதவியில் மாற்றங்களை செய்ய பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில், அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனவே, அவரை நீக்க பொதுக்குழுவின் அனுமதி அவசியம். ​இந்நிலையில் கட்சியின் நிர்வாகிகள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பின் படி செயல்படுவார்களா அல்லது அன்புமணி அவர்களின் கட்டளைப்படி செயல்படுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த அறிவிப்பு, கட்சியின் உள் விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கட்சியின் விதிகளின்படி, ராமதாஸின் இந்த அறிவிப்பு செல்லாது எனவும், தேர்தல் ஆணையம் இதை ஏற்காது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வரை, இந்த விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து ஒற்றுமை ஏற்படாத பட்சத்தில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என தமிழக அரசியலில் இந்த அறிவிப்பானது அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது.

பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!

0

பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அத்திசையை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இன்று முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாமகவின் கட்சி தலைவராக பதவி டாக்டர் அன்புமணி ராமதாஸ், தற்போது அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் எஸ். ராமதாஸ் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் தற்போது “செயல் தலைவர்” என்ற புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆகியவற்றை மிக நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை டாக்டர் ராமதாஸ் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக, அன்புமணி மற்றும் முகுந்தன் (ராமதாஸ் பேரன்) ஆகியோருக்கு இடையில் கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாக முறைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்ததைக் அன்புமணி எதிர்த்தது மற்றும் தனி அலுவலகம் திறந்து தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகள் நடத்தியது, பாமகவில் உள்கட்சி நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புதிய மாற்றம், பாமகவின் எதிர்கால அரசியல் செயல்பாடுகளை மாற்றக்கூடிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில், பாமக எந்த பாதையில் பயணிக்கப் போகிறது என்பதையும் இது தீர்மானிக்கும். இந்த மாற்றம், தமிழக அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்குமா என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.

அமித்ஷாவை பார்க்கணும்!.. ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்!. கெஞ்சினாரா ஓபிஎஸ்?!…

0

ஜெயலலிதா கருணையால் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.வின் மறைவுக்கு பின்னரும் சசிகலா இவரையே முதல்வராக நியமித்தார். எனவே, கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக சொல்லி இவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார் சசிகலா. அந்த கோபத்தில் ஜெ.வின் சமாதியில் போய் அமர்ந்து தியானம் செய்தார் ஓபிஎஸ்.

அதன்பின் செய்தியாளர்களிடம் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என பேட்டி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். மேலும், ஜெ.வின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தர்ம யுத்தம் துவங்கினார். ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துவிட்டு சிறைக்கு போய்விட்டார் சசிகலா.

பழனிச்சாமி, ஓபிஎஸ் என அதிமுக இரண்டாக பிரிந்தது. அதிமுகவை ஒருங்கிணைத்து அதை பாஜகவுடன் கூட்டணி போட வைக்க வேண்டும் பாஜக மேலிடம் விரும்பியது. எனவே, மோடியும், அமித்ஷாவும் எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் நடந்துகொண்டது பிடிக்காமல் அவரை கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி ஆகிய இரண்டையும் தனது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிச்சாமி.

ops

எனவே, தனித்து விடப்பட்டார் ஓபிஎஸ். அதன்பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாத புரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அதிமுக தோற்க காரணமாக இருந்தார். அதன்பின் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் விட பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ஒருபக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். பழனிச்சாமியிடம் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இன்று சென்னையில் இருக்கிறார் அமித்ஷா.

இந்நிலையில், சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எப்படியாவது சந்திக்க முயற்சிகளை எடுத்து வருகிறார் ஓபிஎஸ். பிஜேபி தமிழக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தின் பி.ஏவை காலை 6 மணிக்கே அழைத்து எப்படியாவது அமித்ஷாவை பார்க்க வைத்து விடுங்கள். நாளை மாலை குருமூர்த்தி வீட்டுக்கு அமித்ஷா வரும் போதாவது பார்க்க வையுங்கள்’ என்று ஓபிஎஸ் கெஞ்சியிருக்கிறார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் டிவிட் செய்திருக்கிறார்.

அமித்ஷா மூலம் பழனிச்சாமியிடம் பேசி மீண்டும் அதிமுகவில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே பன்னீர் செல்வத்தின் நோக்கம் என கருதப்படுகிறது.

வரி விதிப்பு விவகாரத்தில் டஃப் கொடுக்கும் சீனா!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!…

0

அமெரிக்கா மீது அதிகமான இறக்குமதியை விதிக்கும் இந்தியா சீனா உள்ளிட்ட 75 நாடுகளுக்குல் அமெரிக்கும் அதிக வரி விதிக்கும் என ஏற்கனவே அறிவித்த டிரம்ப் சொன்ன படை வரி விதிப்பையும் அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவித்தார். எனவே, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார் டிரம்ப். இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தது..

அடுத்து சீனா பக்கம் திரும்பிய டிரம்ப் ‘அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு 34 சதவீத வரியை சீனா விதிக்கிறது. அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியாக 50 சதவீத கூடுதல் வரி விதிப்போம்’ என எச்சரித்தார். ஆனால், சீனா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சீனா மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து சீன பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப்போர் துவங்கியது.

ஆனால், அப்போதும் இறங்கிவராத சீனா அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக உயர்த்தியது சீனா. நீங்கள் 50 சதவீத கூடுதல் வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் என காட்டினார் சீன அதிபர்.

இந்நிலையில், சீனாவுக்கு 125 சதவீத வரியை அதிகப்படுத்திய டிரம்ப் இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான பதிலுகு பதில் விதிக்கும் வரியை 96 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறார். டிரம்பின் அறிவிப்புக்கு சீனா என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.

சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..

0

பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தங்களின் காரியங்களை சாதிக்க வருமான வரித்துறையை பயன்படுத்த துவங்கினார்கள். தங்களுடன் கூட்டணியில் சேராதவர்கள், எதிர்த்து பேசுபவர்கள், அரசியல்ரீதியாக குடைச்சல் கொடுப்பவர்கள் என பலரையும் டார்கெட் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விடுகிறார்கள்.

நடிகர் விஜய் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி ஒரு வசனம் பேசிவிட்டார் என்பதற்காக நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துகொண்டிருந்த போது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே போய் அவரை காரில் அழைத்து சென்று விசாரித்தார்கள். இப்படிப்பட்ட சம்பவங்களினால்தான் நாமும் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற முடிவை எடுத்தார் விஜய்.

ஒருபக்கம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் என அமித்ஷா நினைக்கிறார். அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளோடு பாஜகவும் சேர்ந்தால் திமுகவை தோற்கடிக்க முடியும் என பாஜக கருதுகிறது.

eps

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிச்சாமி அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று இரவு சென்னை வந்த அமித்ஷா நாளை தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள்டைம் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

ஒருபக்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் சந்திரசேகர் மற்றும் செய்யாதுரைக்கு தொடர்புடைய 40 இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில், 500 கோடி அளவில் கணக்கில் வராத வருமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமித்ஷா சென்னையில் உள்ள நிலையி இது கூட்டணியில் சேர அதிமுகவுக்கு பாஜக கொடுக்கும் அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.