Home Blog Page 313

மூட்டு வலியை மாயமாக்கும் கற்பூர தைலம்!! அதிசயம் 2 நிமிடத்தில் வலி மறையும்!!

0

பெரியவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினருக்கு ஏற்படுகிறது.எலும்பு வலிமையின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்,எதிர்பாராத விதமாக மூட்டு பகுதியில் அடிபடுதல் போன்ற காரணங்களால் மூட்டு வலி,மூட்டு பகுதியில் வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்பூர தைலத்தை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
2)விளக்கெண்ணெய் – 50 மில்லி
3)நல்லெண்ணெய் – 50 மில்லி
4)கற்பூரம் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 50 மில்லி தேங்காய் எண்ணெய்,50 மில்லி விளக்கெண்ணெய் மற்றும் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

இந்த எண்ணெய் கலவை சூடானதும் அதில் இரண்டு கற்பூரம் அதாவது சூடத்தை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

எண்ணெய் கெட்டியாகி தைலம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவைத்து மூட்டு பகுதியில் தேய்த்தால் வலி குறையும்.இந்த கபூரை தைலம் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் தன்மை கொண்டது.

மூட்டு வலி குறைய தினமும் ஒரு முட்டை வேகவைத்து உட்கொள்ளலாம்.அதேபோல் கருப்பு உளுந்து பருப்பில் கஞ்சி,கூழ்,களி செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்புகள் வலிமையாகும்.

அதேபோல் பிரண்டையை நல்லெண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து மூட்டு பகுதியில் தடவினால் மூட்டு வலி ஏற்படுவது குறையும்.விளக்கெண்ணெய்யில் பூண்டு,மிளகு,கற்பூரம் போட்டு காய்ச்சி வடித்து மூட்டின் மீது தடவினால் வலி மாயமாகும்.

வயிற்று வலியால் புழு போல் துடிக்கிறீங்களா? அப்போ தேனை இந்த மாதிரி பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

0

ஆரோக்கியம் இல்லாத உணவு,செரிமானமாகாத உணவு மற்றும் உடல் நலப் பிரச்சனையால் வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள நீங்கள் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

இஞ்சி – ஒரு துண்டு
தேன் – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த இஞ்சி துண்டை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இஞ்சி துண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இஞ்சி பானம் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இந்த இஞ்சி பானத்தை வடித்து ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பருகினால் வயிற்று வலி குணமாகும்.

தீர்வு 02:

குப்பைமேனி வேர் பொடி – 10 கிராம்
தேன் – கால் தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் குப்பைமேனி வேர் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி தேன் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.இதை சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.

நீரவ் 03:

பால் – ஒரு கிளாஸ்
தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு கிளாஸ் பாலை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

சொத்தை நகத்தின் மீது இதை தடவினால்.. ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்!!

0

உங்கள் கை,கால் விரல் சொத்தையை குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.நிச்சயம் நல்ல பலனை காண்பீர்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட வேண்டும்.

பின்னர் இதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

தண்ணீர் வெது வெதுப்பான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த நீரை கொண்டு நகங்களை கழுவ வேண்டும்.

அதன் பிறகு தயாரித்து வைத்துள்ள உப்பு மஞ்சள் பேஸ்டை நகங்கள் மீது தடவி சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.பேஸ்ட் நன்றாக காய்ந்த பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு நகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்து வந்தால் ,நகசொத்தை,நகசுத்தி பாதிப்பு சில தினங்களில் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதாணி இலை – ஒரு கப்
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
3)வேப்பிலை – இரண்டு கொத்து

செய்முறை விளக்கம்:-

ஒரு கப் மருதாணி இலை மற்றும் இரண்டு கொத்து வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை நகங்களின் மீது பூசினால் சொத்தையாகாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பல் – நான்கு
2)வினிகர் – ஒரு தேக்கரண்டி
3)சோடா உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் ஒரு தேக்கரண்டி வினிகர் மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து நக சொத்தை மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

அதிகமாக விந்து உற்பத்தியாக.. இந்த கீரையை இப்படி 48 நாட்கள் சாப்பிடுங்கள்!!

0

ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.விந்து தரம் மேம்பட்டு இருந்தால்தான் கர்த்தரித்தலை எளிதாக்க முடியும்.

ஆண்களின் விந்து தரம் மேம்பட மற்றும் பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் சரியாக புளிச்சக்கீரை உணவை உட்கொள்ளலாம்.புளிச்சகீரையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆண்களுக்கு ஆண்மை ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)புளிச்சக்கீரை – ஒரு கட்டு
2)ஜாதிக்காய் – ஒன்று
3)சுக்கு – ஒரு துண்டு
4)பாசி பருப்பு – 20 கிராம்
5)வர மிளகாய் – இரண்டு
6)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கட்டு புளிச்சக்கீரையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வெயிலில் பரப்பி நன்றாக காயவிட வேண்டும்.

பின்னர் ஒரு ஜாதிக்காய் மற்றும் சுக்கு துண்டை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அடுத்து காயவைத்த புளிச்சக்கீரை,இரண்டு வர மிளகாய்,20 கிராம் பாசி பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த புளிச்சக்கீரை பொடியைஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடி சிறிதளவு எடுத்து நெய் கலந்து சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.

புளிச்சக்கீரை பொடி விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.வாரம் ஒருநாள் புளிச்சக்கீரை உட்கொண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட இந்த புளிச்சக்கீரை உணவை சாப்பிடலாம்.

கை கால் வலி குடைச்சல் அதிகமா இருக்கா? இந்த 3 பொருளை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

0

அடிக்கடி கை கால் வலி,குடைச்சல் இருந்தால் புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம் ஆகியவற்றை கொண்டு தீர்வு காணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1.புதினா உப்பு – 20 கிராம்
2.ஓம உப்பு – 20 கிராம்
3.பச்சை கற்பூரம் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

1)புதினா உப்பு,ஓம உப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ள வேண்டும்.

2)நாட்டு மருந்து கடையில் இந்த மூன்று பொருளும் கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கி அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

3)புதினா உப்பு,ஓம உப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகிய மூன்று பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும்.இந்த மூன்று பொருளையும் தலா 20 கிராம் அளவிற்கு எடுத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடிக் கொள்ள வேண்டும்.

4)பின்னர் இதை 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குலுக்க வேண்டும்.இப்படி செய்தால் மூன்று பொருளும் திரவமாகிவிடும்.

5)இந்த திரவத்தை கை கால் வலி பாதிப்பு குணமாகும்.இந்த மூன்று பொருள் சேர்த்த திரவம் உடல் வலியை குணப்படுத்துகிறது.வாரம் ஒருமுறை இந்த திரவத்தை உடலில் அப்ளை செய்து வந்தால் வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1.தேங்காய் எண்ணெய் – 20 மில்லி
2.பச்சை கற்பூரம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1)அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து 20 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

2)அடுத்து ஒரு தேக்கரண்டி பச்சை கற்பூரத்தை அதில் போட்டு சூடுபடுத்த வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து உடலில் தடவி மசாஜ் செய்தால் வலி தானாக குறையும்.கை கால் வலி,குடைச்சல்,மூட்டு வலி போன்றவை குணமாக இதை பயன்படுத்தலாம்.

இந்த காலத்தில் ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க.. வீட்டிலேயே சத்துமாவு செய்து சாப்பிடுங்கள்!!

0

கடைகளில் விற்கும் சத்துமாவைவிட வீட்டில் ஆரோக்கியமான பொருட்களை கொண்டு சத்துமாவு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சத்துமாவு செய்ய தேவைப்படும் பொருள் மற்றும் சத்துமாவு கஞ்சி செய்யும் முறை பற்றி இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

பட்டாணி சோளம் – அரை கப்
கம்பு – அரை கப்
தினை அரிசி – அரை கப்
அவல் – அரை கப்
ராஜ்மா – அரை கப்
ராகி – அரை கப்
உலர் இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மிளகு – கால் தேக்கரண்டி
கருப்பு கவுனி அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஏலக்காய் – நான்கு
பார்லி அரிசி – அரை கப்
ஜவ்வரிசி – அரை கப்
கோதுமை – அரை கப்
வால்நட் – கால் கப்
பாதாம் பருப்பு – கால் கப்
முந்திரி பருப்பு – கால் கப்
கொள்ளு பருப்பு – அரை கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
ஓட்ஸ் – அரை கப்

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் மேல சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து இவை அனைத்தையும் தனி தனியாக வறுக்க வேண்டும்.அனைத்து பொருட்களையும் பக்குவமாக வறுக்க வேண்டும்.பொருட்கள் கருகிடாமல் பார்த்து பக்குவமாக வறுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இந்த ஹெல்த் மிக்ஸ் பவுடரை ஒரு சுத்தமான டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வரும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள ஹெல்த் மிக்ஸ் பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கைவிடாமல் கிளற வேண்டும்.

பாலும் ஹெல்த் மிக்ஸ் பவுடரும் நன்றாக கலந்து பச்சை வாடை நீங்கும் வரை \குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு மாற்றி சுவைக்காக தேன்,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இந்த சத்துமாவு பவுடரில் கஞ்சி,லட்டு,கேக் போன்ற ருசியான உணவுகள் செய்து சாப்பிடலாம்.

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

0

வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள்.

மூலச்சூடு தைலம்

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
2)எலுமிச்சை சாறு – 200 மில்லி
3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி
4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி
5)அதிமதுரப் பொடி – 50 கிராம்
6)சீரகப் பொடி – 50 கிராம்

மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:-

முதலில் அடுப்பில் இரும்பு வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் 500 மில்லி அதாவது அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் சிறிது சூடான பின்னர் ஐந்து அல்லது ஆறு எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நல்லெண்ணெயில் கலக்க வேண்டும்.அதன் பிறகு 5 வெள்ளை வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதையும் சூடாகி கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் ஊற்ற வேண்டும்.இந்த நல்லெண்ணெய் கலவையை குறைவான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

500 மில்லி நல்லெண்ணெய் சுண்டி 250 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு 50 கிராம் அதிமதுரப் பொடி மற்றும் 50 கிராம் சீரகப் பொடி போட்டு கலந்துவிட வேண்டும்.இந்த தைலத்தை ஆறவைத்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இந்த தைலத்தை ஆசனவாய் பகுதியை சுற்றி அப்ளை செய்தால் மூலச்சூடு தணியும்.இந்த தைலத்தை தொப்புள் பகுதியில் தடவினால் உடல் சூடு தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – 200 மில்லி
2)துளசி இலை – கால் கைப்பிடி
3)குப்பைமேனி இலை – கால் கைப்பிடி

செய்முறை விளக்கம்:

முதலில் துளசி இலை மற்றும் குப்பைமேனி இலையை தனி தனியாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.2 நிமிடங்கள் கழித்து அரைத்த துளசி இலைச்சாறு மற்றும் குப்பைமேனி இலை சாறு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

200 மில்லி நல்லெண்ணெய் சுண்டி 150 மில்லியாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த எண்ணையை ஆறவைத்து வைத்து தலை,ஆசனவாய் பகுதியில் தடவினால் சூடு தணியும்.

மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

0

சரும நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் நலுங்கு பொடி.இதை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)பச்சை பயறு
2)கார்போக அரிசி
3)வெட்டி வேர்
4)விளாமிச்சி வேர்
5)சந்தனம்
6)கோரைக்கிழங்கு
7)கிச்சிலி கிழங்கு
8)மஞ்சள் கிழங்கு

செய்முறை விளக்கம்:-

1.பச்சை பயறு 500 கிராம் அளவு எடுத்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

2.அடுத்து 250 கிராம் கார்போக அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.இவை இரண்டையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.

3.பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை பயறு,கார்போக அரிசியை போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கைப்பிடி வெட்டிவேர்,ஒரு கைப்பிடி விளாமிச்சி வேரை மிக்சர் ஜாரில் போட வேண்டும்.

4.அடுத்து ஒரு துண்டு சந்தனக் கட்டை,ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு,சிறிதளவு கோரைக்கிழங்கு மற்றும் கிச்சிலி கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

5.இந்த நலுங்கு பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் இந்த நலுங்கு பொடி 20 கிராம் அளவிற்கு போட்டு பன்னீர் வாட்டர் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.

6.இந்த பேஸ்டை மங்கு,வெண்புள்ளி,கரும்புள்ளி,தேமல்,தழும்பு உள்ளிட்ட அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு
2)மஞ்சள் கிழங்கு
3)ரோஜா இதழ்
4)வெட்டி வேர்
5)குப்பைமேனி இலை
6)வேப்பிலை

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அரை கிலோ பச்சை பயறை லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

2.அதன் பிறகு ஒரு துண்டு மஞ்சள் கிழங்கு,கால் கப் உலர்ந்த ரோஜா இதழ்,20 கிராம் வெட்டி வேர்,ஒரு கைப்பிடி காய்ந்த குப்பைமேனி இலை,ஒரு கைப்பிடி வேப்பிலை ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

3.இந்த பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீர் விட்டு கலந்து உடலில் தேய்த்து குளித்தால் அனைத்துவித சரும நோய்களும் அகலும்.

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

0

இயற்கை இனிப்பு சுவை கொண்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நம் ஊரில் பிரபலமான ஒரு பானமாக உள்ளது.கரும்பை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு,ஐஸ்கட்டி சேர்த்து குடித்தால் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு நன்றாக இருக்கும்.

தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கரும்பு ஜூஸில் இரும்பு,மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.

கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கரும்பில் இருக்கின்ற கால்சியம் சத்து உடலை வலுவாக்க உதவுகிறது.

கரும்பு ஜூஸ் குடிப்பதால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.என்றும் இளமையாக இருக்க கரும்பு ஜூஸ் செய்து குடிக்கலாம்.கரும்பு ஜூஸில் இருக்கின்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

கரும்பு ஜூஸ் குடித்தால் சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.கரும்பு ஜூஸில் எலுமிச்சை சாறு,தேங்காய் தண்ணீர் கலந்து குடித்தால் உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

கரும்பு ஜூஸ் குடித்தால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட,செரிமானப் பிரச்சனை சரியாக கரும்பு ஜூஸ் செய்து குடிக்கலாம்.கரும்பு சாறு தொண்டை எரிச்சல்,தொண்டைப்புண் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய கரும்பு ஜூஸ் செய்து குடிக்கலாம்.கரும்பு ஜூஸ் செய்து குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

0

நம் உடல் எலும்புகள் அடர்த்தியாக இருந்தால்தான் உடலில் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.நிற்க,நடக்க,ஓட,அசைய அனைத்திற்கும் எலும்பு வலிமை அவசியம்.உடல் எலும்புகள் வலிமையாக மாற கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நமது உடலுக்கு நாளொன்றில் சுமார் 1300 மில்லி கிராம் கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.

இளமை காலத்தில் கால்சியம் சத்து,வைட்டமின் சி சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.எலும்பு மஜ்ஜைகளை வலிமைப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

உடல் எலும்புகளை வலிமையாக்கும் ஆரோக்கிய உணவுகள்:

1)வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற பழங்களை ஜூஸாக செய்து குடித்தால் உடல் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

2)பால் மற்றும் பால் பொருட்கள்,சோயா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

3)கால்சியம் சத்து நிறைந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

4)கொய்யா,வாழைப்பழம்,ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

5)முருங்கை கீரை,பாலக்கீரை,வெந்தயக் கீரை ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

6)ராகி கஞ்சி,பாதாம் பால்,முந்திரி ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும்.தினமும் இரண்டு பேரச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

7)உளுந்து களி,உளுந்து கஞ்சி ஆகியவை உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

8)வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.பிரண்டையை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.ஆட்டுக்காலில் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் கூடும்.