Home Blog Page 314

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

0

“வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொன்னால் ஓடிவிடும்” எனக் கூறுவார்கள். எவ்வளவு மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் “முருகா”என மனதார உருகி சொல்லி நெற்றியில் திருநீறு வைப்பவர்களின் தலையெழுத்தை முருகன் மாற்றி விடுவார், என்பது பக்தர்கள் பலர் வாழ்க்கையில் உணர்ந்ததாகும். முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும் அடங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

விதியை மாற்றி எழுதும் சக்தியை பெற்றவர் முருகப்பெருமான். முருகனை தினமும் வழிபடுபவர்களிடம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தீய சக்திகளும் அண்ட முடியாது. எதிரிகளின் தொல்லையையும் போக்க கூடியவர். கொடிய நோயிலிருந்தும் விடுவித்து, மரண பயத்தை போக்க கூடியவர்.

முருகனின் விசேஷ தினங்கள்:

1. பங்குனி உத்திரம்-முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புனித நாள்.

2. சூரசம்ஹாரம்-அசுரர்களின் தலைவரான சூரபத்மனை முருகன் அளிக்கும் நிகழ்வு.

3. தைப்பூசம்- முருகனுக்கு வேல் வழங்கப்பட்ட தினம்.

4. கந்த சஷ்டி-ஆறு நாட்கள் விரதம் இறுதியாக சூரபத்மனை சம்ஹாரம் செய்கின்ற நாள்.

5. வைகாசி விசாகம்- முருகப் பெருமான் அவதரித்த நாள்.

மேலும் செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். நவகிரகத்தில் செவ்வாய் கிரகத்தோடு நேரடி தொடர்பு கொண்டவர் முருகப்பெருமான். எனவே செவ்வாய்க்கிழமையில் விரதம் இருப்பது முருகனுக்கு மிகவும் உகந்ததாகும். முருகன் ஆலயத்தில் செவ்வாய்க் கிழமைகளில் ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முருகப்பெருமானின் அருளை பெற்று வளமுடன் வாழவும் முடியும். பங்குனிஉத்திர நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

இது போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் முருகனை வழிபட்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வாரந்தோறும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை நாட்களில் வெற்றிலை தீபம் ஏற்றி வந்தாலும் குடும்பம் முன்னேற்றம், குடும்ப நிம்மதி ஆகிய அனைத்தும் கிடைக்கும்.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாட்களில் சாமி படங்கள் வைக்கக்கூடிய இடத்தினை பன்னீர் போட்டு துடைக்க வேண்டும். அப்பொழுதுதான் பூஜை அறை முழுவதும் மங்களகரமான வாசனை பரவும். அதன் பிறகு சாமி படங்களுக்கு பூக்களை போட்டு அலங்கரித்துவிட்டு, தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

வாரந்தோறும் வெற்றிலை தீபம் ஏற்றி வரும் பொழுது நாம் நினைத்த காரியம் விரைவில் கைகூடும். எனவே செவ்வாய்க் கிழமை நாட்களில் வெற்றிலை தீபம் ஏற்றுவது அவ்வளவு சிறப்பானது. ஒரு தட்டின் நடுவில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வைத்து, அதனை சுற்றி ஆறு வெற்றிலைகளை வைத்து அந்த வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

இப்பொழுது அந்த ஆறு வெற்றிலையின் மேல் ஆறு அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். அதன் பிறகு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை வைக்க வேண்டும். குறிப்பாக முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தது தேனும் திணை மாவும் ஆகும். பெரிய அளவில் நெய்வேத்தியம் செய்ய இயலாதவர்கள் இந்த எளிதான தேனும் திணை மாவையும் வைத்தாலே போதும்.

இந்த தேனும் திணை மாவும் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. இதனை முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். அல்லது இதனை செய்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாகவும் கொடுக்கலாம். இவ்வாறு செய்வது பல சிறப்புகளை உங்களுக்கு தேடித் தரும். மேலும் முருகப் பெருமானின் அருளையும் பெறலாம்.

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

0

நாம் உயிர்வாழ உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.நாம் உணவு உட்கொள்ள வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் அளவோடு உட்கொள்ள வேண்டியது முக்கியம்.

பசியின்மை பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை.அதிக பசி இருந்தாலும் பிரச்சனைதான்.உங்களுக்கு தொடர்ச்சியாக பசி எடுத்துக் கொண்டே இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

தொடர் பசி சீரான உணவுமுறை இல்லை என்பதை குறிக்கிறது.எனவே உங்கள் பசியை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

1)நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படுவது கட்டுப்படும்.புரதம் நிறைந்த உணவுகள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

2)சாப்பிடுவதற்கு முன் அதிக தண்ணீர் குடித்தால் பசி உணர்வு குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

3)திட உணவுகளை சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு கட்டுப்படும்.அதேபோல் உணவை மெதுவாக உட்கொண்டால் பசி கட்டுப்படும்.

4)காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.காலை உணவை தவிர்த்தால் பசி அதிகமாகும்.

5)உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.கொழுப்பு நிறைந்த பாலை குடித்தால் பசி கட்டுப்படும்.

6)ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் பசியை கட்டுப்படுத்தலாம்.தினமும் ஒரு உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பசி கட்டுப்படும்.

7)போதிய உறக்கத்தை கடைபிடித்தால் பசி ஏற்படாமல் இருக்கும்.மூன்றுவேளை உணவை பிரித்து ஆறுவேளையாக சாப்பிட்டு வந்தால் பசி கட்டுப்படும்.

8)கார்போஹைட்ரேட் உணவுடன் கொழுப்பு சத்து உணவை உட்கொண்டால் பசி கட்டுப்படும்.

உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

0

உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியமாக கருதினால் நிச்சயம் அவை நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.குறிப்பாக கைகளில் வலி இருந்தால் அவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.கைகளில் பெருவிரல்,ஆல்காட்டி விரல்,மோதிர விரல்,சுண்டு விரல்,நடுவிரல் என்று ஐவகை விரல்கள் இருக்கிறது.

இதில் எந்த விரலில் அடி,காயம்,அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.நமது கைகளில் நரம்பு பிடிப்பு,வாதம்,நோய் தொற்று,காயங்கள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வலி,வீக்கம் உண்டாகலாம்.

கை விரல்களில் எலும்பு முறிதல்,கை நரம்பு பிடிப்பு,கால்வாதம்,முடக்கு வாதம் போன்ற காரணங்களால் வலி ஏற்படலாம்.அதேபோல் வைட்டமின் குறைபாடு காரணமாகவும் வலி ஏற்படும்.

கணினி,மடிக்கணினி ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் கை விரல்களில் அதிக வலி ஏற்படும்.

கைவிரல் வலிக்கான அறிகுறிகள்:-

1.விரல்களில் உணர்வின்மை
2.கை பலவீனம்
3.கூர்மையான ஊசி குத்தல் உணர்வு
4.கை மூட்டுகளில் எரியும் உணர்வு
5.மூட்டு விறைப்பு
6.கைகளில் கூச்ச உணர்வு

கைவிரல் வலி குணமாக்க வழிகள்:

**முதலில் கைக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும்.வேலைகளுக்கு நடுவே கைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

**ஐஸ் பேக் மற்றும் ஹாட் பேக் ஒத்தடம் கொடுத்தால் கை வலி முழுமையாக குணமாகும்.கைகளுக்கு அதிக வலி கொடுக்கும் வேலையை தவிர்க்க வேண்டும்.

**புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

**வைட்டமின் டி,வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்

0

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.​

ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், மூன்று பிரதான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: முகமது அஸ்லம், முகமது ரிஜ்வான், மற்றும் முகமது சலீம். இவர்கள், யோகா மையத்தின் மறைவில், இளைஞர்களை மத அடிப்படைவாத கருத்துக்களால் மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத இயக்கங்களில் சேர்த்ததாக NIA தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் மேலும், இந்த மையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மையம், வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து நிதி மற்றும் ஆதரவு பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு, இந்தியாவில் மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாத செயல்பாடுகள் எவ்வாறு புதிய வடிவங்களில் உருவெடுக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. அத்தகைய செயல்பாடுகளை அடையாளம் கண்டு, தடுக்க, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம், சமூகத்தில் மத நல்லிணக்கத்தை பேணுவதின் முக்கியத்துவத்தையும், இளைஞர்களை தவறான பாதையில் செல்லாமல் தடுக்க பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதையும் உணர்த்துகிறது. மத மற்றும் கலாச்சார பெயர்களில் நடைபெறும் செயல்பாடுகளை கவனித்து, அவற்றின் உண்மையான நோக்கங்களை புரிந்துகொள்வது அவசியம்.

அஸ்திவாரத்தை கையில் எடுக்க மாஸ் பிளான்.. சீனியர் வீரர்களை அதிரடியா நீக்கும் CSK!!

0

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்பொழுது விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர மூன்றிலும் தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து தற்போது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இனி 10 போட்டிகளில் மட்டுமே விளையாடும் அதில் கட்டாயம் 7 போட்டிகளில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். அந்த வகையில் நாளை பஞ்சாப் அணியுடன் மோதுவது குறித்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பஞ்சாப் அணியானது மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளது. இதனை சிஎஸ்கே எதிர்ப்பது கடினமான ஒன்றுதான். இதனால் சிஎஸ்கே அணியை மேற்கொண்டு பலப்படுத்த பல்வேறு மாறுபாடுகள் நடத்த இருப்பதாக கூறுகின்றனர். அதன்படி, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தூணாக இருப்பார் என்று நம்பப்பட்ட ரச்சின் நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலும் மண்ணை கவ்வினார். ஆரம்ப கட்டத்தில் அவரது விளையாட்டு நன்றாக இருந்தாலும் அதன் பின் மிகவும் மோசமாக மாறி வருகிறது.

இதனால் அவர் சிஎஸ்கே அணையை விட்டு நீக்கம் செய்ய ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இனி வரும் மேட்சுகளில் ருத்ராட்ச் மற்றும் கான்வே இருவரும் ஓப்பனிங் தொடர்வார்கள், இவர்களை அடுத்து மூன்றாவதாக தான் ரச்சினை களம் இறக்க உள்ளார்களாம். மாறாக ரச்சின் அணியை விட்டு வெளியேறும் பட்சத்தில் ஜிம்மி ஓவர்டனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பலப்படுத்த மூத்த வீரர்களை நீக்கம் செய்துவிட்டு இளம் தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக கூறுகின்றனர்.

50% சலுகையுடன் ரயில் டிக்கெட்!! எப்படி பெறுவது என தெரியுமா!!

0

ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட நபர்களுக்கு ரயில் டிக்கெட்டின் விலையில் 50% சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சலுகை யார் யாருக்கு வழங்கப்படுகிறது. 50 சதவிகித சலுகையுடன் டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

IRCTC டிக்கெட் முன்பதிவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ரயிலில் பயணம் செய்யும்பொழுது அவர்களுக்கு 50% சலுகை ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இதில் எப்படி மாணவர்கள் பயன்பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு :-

✓ டிக்கெட் பெரும்பொழுது உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி ஐடி கார்டுகளை காட்டுவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம்

✓ 12 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க கூடியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்

✓ டிக்கெட்டுக்கான முன் பதிவு பெரும் பொழுது செல்லுபடி ஆகக்கூடிய அடையாள அட்டையை காட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று

✓ டிக்கெட்டின் அடிப்படை மற்றும் பயண வகையின் அடிப்படையில் 10% முதல் 50% வரை சலுகைகள் வழங்கப்படுகிறது.

பொதுவாகவே இந்தியன் ரயில்வேயின் உடைய IRCTC ஆனது ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயனர்களுக்கு பல சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அதில் குறிப்பாக சுப் யாத்ரா மற்றும் பாரத் தரிசனம் போன்ற திட்டங்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது இந்தியன் ரயில்வேயில் இருக்கக்கூடிய சலுகைகள் மற்றும் திட்டங்களை நன்கு அறிந்து அதன் பின் அவற்றின் கீழ் பயன்பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் வெகுமதி புள்ளிகள், தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் போன்ற பல விஷயங்கள் வழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கொடுத்த அடி.. பங்குசந்தை கடும் சரிவு!! சின்னாபின்னமாகப் போகும் இந்தியா!!

0

Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் இன்று பங்குச்சந்தை நிலவரமானது படும் சரிவை சந்தித்துள்ளது. மேற்கொண்டு ஆசிய நாடுகள் பெரும்பாலான பாதிப்பை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு பிளட் பாத் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் எங்கள் நாட்டிற்கு நீங்கள் எவ்வளவு வரி விதிக்கிறீர்களோ அப்படியே நாங்களும் விதிப்போம் என்று வரி விலக்கை மாற்றியது தான் இது அனைத்திற்கும் காரணம்.

இந்த வரி விதிப்பால் ஆசிய நாடுகள் பணம் வீக்கத்தை சந்திக்க கூடும். உலகிலேயே அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆசியா தான் பெயர் வாய்ந்தது. இங்குதான் உற்பத்தி என தொடங்கி வேலை செய்ய வரும் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் குறைந்த முதலீட்டை ஒதுக்கினால் போதும். இதுவே வெளிநாடுகளில் அதன் உற்பத்தி முதலீடானது அதிகம். இங்கிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் விலை வாசி உயர்வால் பொருட்கள் விற்காமல் அப்படியே இருக்கும். இந்த மந்த சூழலால் கட்டாயம் உற்பத்தியில் அடிவாங்கும், பணம் வீக்கம் ஏற்படும். முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தை முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். அச்சமயத்தில் ஐடி ரீதியாக பல தொழில்கள் அடி வாங்கும் எனக் கூறுகின்றனர்.

அதேபோல அமெரிக்காவிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் பொருளாதாரம் சற்று சரிவை சந்திக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உற்பத்தி திரானானது முன்பை விட குறைந்துக் கொண்டே வருகிறது. தனது நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்கவே ட்ரம்ப் திட்டமிடுவதாக கூறுகின்றனர்.

சோகம் சூழ்ந்த ரசிகர்கள்!! வசூல்ராஜா திரைப்படத்தின் துணை நடிகர் மரணம்!!

0

வசூல்ராஜா MBBS திரைப்படமானது கமலின் வெற்றி படங்களில் முக்கியமான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவருக்கு தந்தையாக நாகேஷ் உள்ளிட்டவர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து சென்ற கதாபாத்திரமான சுவாமிநாதன் என்கின்ற சாம்பு மவன் சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் பெரிய அளவு தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தி சென்றவர் என்று கூறலாம். பலரும் பல படங்களில் இப்படித்தான் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி அதன் பின் சினிமாவில் இருந்து முழுவதுமாக தொலைந்து போய் விடுகின்றனர்.

வசூல்ராஜா திரைப்படத்திற்கு பின் சாம்பு மவன் எங்கு சென்றார் ? என்ன ஆனார் ? என பலரும் கேள்விகள் எழுப்பி அவரை தேட துவங்கியிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழலில் தான் அவர் தற்பொழுது உயிருடன் இல்லை என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, ரசிகர் ஒருவர் சுவாமிநாதன் குறித்த விவரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக ரெட் இட் வலைதளத்தில் தேடத் வாங்கி இருக்கிறார். அப்பொழுது ஒருவர் அவரின் உண்மையான பெயர் ரத்தின சபாபதி என்றும் தன்னுடைய சகோதரரின் உடன்படித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாது தற்பொழுது ரத்தின சபாபதி உயிரோடு இல்லை என தெரிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் உண்மையில் இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த வலைதளத்தின் தேடலின் முடிவில் இவ்வாறு ஒரு பதில் மட்டுமே கிடைத்திருக்கிறது எனினும் இந்த பதிலால் ரசிகர்களை சோகம் சூழ்ந்தது உண்மையே.

பாஜக – வை செலெக்ட் பண்ணிருக்கலாம்.. கூட்டணிக்கு யாரும் இல்லை!! கதறும் விஜய்!!

0

TVK : எம்ஜிஆர் விஜயகாந்த் போன்ற மறைந்த தலைவர்களை முன் உதாரணமாக வைத்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரது மாநாட்டிற்கு ஏகாதக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் இவர் கூட்டணி குறித்து போட்ட கணக்கெல்லாம் ஒவ்வொன்றாக தவிடு பொடியாகி வருகிறது. இவர் மாநாட்டில் என்னுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு, முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுக கூட்டணி கட்சிகள் ஆரம்ப கட்டத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் நாளடைவில் அதனை அப்படியே விட்டுவிட்டனர்.

விஜய் அடித்த முதல் பாலும் அவுட் ஆனது. திமுக கூட்டணியை பிரிக்க முடியாமல் போனது. இரண்டாவதாக இவரது பாலானது நாம் தமிழர், அதிமுக என இரு பக்கமும் இருந்தது. நாம் தமிழர் சீமானுடன் ஒத்து வராத நிலையில் அவரும் விலகினார். மூன்றாவதாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விஜய் சரிக்கு பாதி தொகுதி வேண்டும், வெற்றி பெற்றால் நாங்கள் தான் முதலில் ஆளுமை செய்வோம் என்று போட்ட கண்டிப்புகளால் எடப்பாடி பின் வாங்கினார்.

இப்படி பெரும்பாரியான கூட்டணி ஏதும் இல்லாமல் விஜய் தன்னந்தனியாக உள்ளார். இவ்வாறு இருக்கையில் விஜய்க்கு நெருக்கமானவர்கள் நீங்கள் செய்தது மிகவும் தவறு என கூற ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் அரசியலுக்கு வந்த உடனே பாஜகவுடன் கூட்டணி எனக் கூறியிருந்தால் இப்படி இருந்திருக்க தேவையில்லை என்று அறிவுறுத்தி வருகின்றனர். தற்சமயம் பாஜக அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், உறுதியாகி உள்ளது என கமலாலய கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் விஜய் மிகவும் அப்சட்டில் உள்ளாராம். கமல்ஹாசன் சரத்குமார் வரிசையில் விஜய் தற்போது இருப்பதாக கூறுகின்றனர்.

இயக்குனர் என்னை அந்த இடத்தில் இப்படி செய்ய சொன்னார்- ரஜினி பட நடிகை ஓபன் டாக்!!

0

சல்மான் கானுடன் ஏ ஆர் முருகதாஸின் “சிக்கந்தர்” படத்தில் நடித்தவர் தான் ஸ்ரேயா குப்தோ. இவர் ஆரம்பக்கட்ட காலத்தில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தர்பார், ரோமியோ ஜூலியட், வாரணம் ஆயிரம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவருக்கு சினிமா துறையில் நடந்த அனுபவம் குறித்து தற்சமயம் பகிர்ந்துள்ளார்.

நான் ஆடிஷனுக்காக சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் என்னை அவர் அலுவலகத்திற்கு வர சொன்னார். நான் என் அம்மாவுடன் அந்த இடத்திற்கு சென்றேன். பின்பு ஆடிஷன் நடக்கும் ரூமிற்குள் நான் மட்டும் உள்ளே சென்றேன். அப்போது அங்கிருந்த இயக்குனர் என்னை உடனே வந்து என் மடியில் உட்காரு என கூறினார். பின்பு அங்கிருந்து நான் வெளியேறி விட்டேன்.

ஆடிஷன் கூட நடத்தாமல் முதலில் அவர் சொன்ன வார்த்தை எனக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது, தற்போது வரை அந்த கசப்பான அனுபவத்தை என்னால் மறக்க முடியவில்லை என பகிர்ந்துள்ளார். இவரைப் போல பல நடிகைகள் தனது நேர்ந்த சினிமா அனுபவத்தை கூறியிருக்கின்றனர்.

சமீபத்தில் கூட தமிழ் சின்னத்திரை நடிகை நிர்வாண வீடியோ ஒன்று வைரலானது. இதற்கு பின்னணியில் ,  அவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி தான் அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் எடுத்துள்ளனர். சினிமா துறை எட்டாத நிலைக்கு வந்தாலும் இது மாதிரியான இன்னல்கள் ஆரம்பக் கட்டத்திலிருந்து தற்போது வரை மாற வாய்ப்பில்லை என்பதே நிதர்சனமான உண்மை.