Home Blog Page 325

30 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..?? எப்படிப்பட்ட திருமண தடையையும் போக்கக்கூடிய பரிகாரம்..!!

0

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டே சென்றாலும் ஜாதகம் மற்றும் தோஷங்களால் பிரச்சனை ஏற்பட்டு கொண்டு தான் வருகிறது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டும் அல்லவா..?

ஜாதக கட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும் என்று சிந்திப்பவர்களுக்கு தெளிவான விளக்கத்தை தரக்கூடிய பதிவு தான் இது.

உங்களுடைய குடும்பத்தில் உங்களுடைய வம்சாவழியில், உங்களது முன்னோர்களோ அல்லது நீங்களோ அடுத்தவர்களின் சொத்தை அனுபவித்தால், அந்த சொத்தை நீங்கள் ஆண்டு அனுபவித்து வந்தால், உங்களுடைய வம்சத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

அதாவது உடன் பிறந்தவர்களின் சொத்தையும் சேர்த்து ஒருவரே அனுபவிப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்கோ, பங்காளிகளுக்கோ சொத்தை பிரித்துக் கொடுத்திருக்க மாட்டார்கள். இரண்டாவதாக வாரிசு இல்லாத சொத்தை அனுபவிப்பவர்களாக இருந்தாலும், அவர்களுடைய வாரிசுக்கு திருமணம் தடைபடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோன்று கோவில் சொத்தை அபகரித்தவர்களது வாரிசுகளுக்கும் திருமணம் தடைபடும். ஆக இப்படிப்பட்ட தவறினை நீங்களோ அல்லது உங்களது முன் சந்ததியினரோ செய்திருந்தால் நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருக்கும் வாரிசுக்கு திருமணம் நடப்பதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.இப்படிப்பட்ட சிக்கலை சுலபமான வழியில் தீர்ப்பதற்கு பரிகாரமும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் முருகன் கோவிலுக்கு சென்று 11 நெய் தீபங்கள் ஏற்றி, அங்கு உள்ள குருக்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உளுந்தை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். அந்த முருகப்பெருமானுக்கு நீர் மோரை நிவேதனமாக வைத்து முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு, அந்த நீர் மோரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம். இது ஒரு பரிகாரம்.

இரண்டாவதாக உங்களுக்கு பிரச்சனை எதில் உள்ளது என்பதே தெரியவில்லை, ஆனால் திருமணம் மட்டும் தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது, வயது கடந்து கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் சித்திரகுப்தர் சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று சித்திரகுப்தற்கு ஒரு வெள்ளிக்கிழமை அன்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும்.

பால் அபிஷேகத்தோடு சேர்த்து 7 விதமான பிரசாதங்களை நிவேதனமாக செய்து வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதோடு 7 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்(வெற்றிலை, பாக்கு, பூ, வாழைப்பழம், மஞ்சள் கிழங்கு). 7 பசு மாட்டிற்கு உங்களால் முடிந்த உணவை தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.

மூன்றாவது பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான். இந்த பரிகாரத்திற்காக ஒரு புதிய கண்ணாடியை வாங்க வேண்டும். அந்தக் கண்ணாடியை திருமணத்திற்காக காத்திருப்பவரது கையால் வாங்கி வீட்டில் மாட்ட வேண்டும். அடுத்து அந்த கண்ணாடியில் முருகர் படத்தை ஒட்ட வேண்டும்.

இதற்கு ஒட்டக்கூடிய முருகர் படமானது ஆறுமுகமும் 12 கைகளையும் உடைய சண்முகநாதர் படத்தை தான் ஒட்ட வேண்டும். இதற்கு வேறு எந்த முருகர் படத்தையும் ஒட்டக்கூடாது, இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது திருமணம் ஆக வேண்டிய பெண்ணோ அல்லது ஆணோ இரவு தூங்குவதற்கு முன்பு கண்ணாடியில் ஒட்டி இருக்கும் முருகருக்கு முன்பு நின்று, தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும், மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பின் உறங்க செல்ல வேண்டும்.

இதே போல் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி 90 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் திருமணம் ஆகக்கூடிய யோகத்தை முருகப்பெருமான் அருள்வார் என்று சொல்லப்படுகிறது.

திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு முருகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய போகின்றோம். இதை பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. நமது நம்பிக்கைக்கு உரிய ஒரு வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும்.

கோடை வெயிலுக்கு நல்லது இளநீர்!! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஆபத்தான பானம்!!

0

வெயில் காலத்தில் சூட்டை தணிக்கும் பானமாக இளநீர் இருக்கின்றது.இளநீரில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிறு மற்றும் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்குகிறது.இளநீரில் உள்ள குளிர்ச்சி தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.

நமது உடலுக்கு ஒருவித புத்துணர்வு கொடுக்கும் பானங்களில் ஒன்றுதான் இளநீர்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இளநீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.

இளநீரை குடிப்பதால் தலை சூடு,கண் எரிச்சல்,கண் சூடு குணமாகும்.ஆனால் சிலருக்கு இளநீர் அதிக பாதிப்பை உண்டாக்கும்.இளநீர் குடிப்பதால் சிலருக்கு சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.இளநீரில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகப் பிரச்சனையை அதிகரித்துவிடும்.

சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடிக்க கூடாது.அதிக இளநீர் குடிப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாகும்.இளநீரில் அதிக கலோரி நிறைந்திருப்பதால் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் அதை பருகுவதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இளநீரை தாராளமாக பருகலாம்.இளநீரில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் இருக்கின்ற குளுக்கோஸ் அளவை அதிகரித்துவிடும்.சிலருக்கு இளநீர் ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அதிக இளநீர் குடித்தால் சைனஸ்,தும்மல்,மூக்கு ஒழுகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சிலருக்கு தோல் அலர்ஜி,தோல் தடிப்பு,தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இளநீர் குடித்தால் இரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.

கர்ப்பிணி பெண்கள் இளநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.அறுவை சிகிச்சை செய்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

0

1. அரிசி மற்றும் தானிய வகைகளை அதிக நேரம் தண்ணீரில் கழுவ கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் தாதுக்கள் கரைந்து விடும்.

2. பச்சை குடமிளகாய் சில நேரங்களில் காரமாக இருக்கும். அப்படி இருக்கும் மிளகாயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தால் காரம் இருக்காது.

3. வெங்காய சட்னியோ அல்லது தக்காளி சட்னியோ செய்யும் பொழுது, அதனுடன் வெள்ளை அல்லது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த சட்னியில் சிறிதளவு சேர்த்தோம் என்றால் சுவையும், மணமும் அதிகமாக இருக்கும்.

4. முள்ளங்கி சமைக்கும் பொழுது எண்ணெயில் நன்றாக வதக்கி சமைத்தால் எளிதில் சளி பிடிக்காது.

5. தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால் அதன் மீது கோலப்பொடி அல்லது அரிசி மாவை தூவி துடைத்தால், எண்ணெய் பிசுக்கு தரையை விட்டு நீங்கி விடும்.

6. மெதுவடைக்கு மாவு அரைக்கும் பொழுது உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சை அரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால், மெதுவடை மொறு மொறுப்பாக இருக்கும்.

7. பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும்.

8. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து சமையலறையின் ஓரங்களில் தெளித்து விட்டால் ஈ மற்றும் எறும்புகள் வராமல் இருக்கும்.

9. ரவையை நெய் விட்டு வறுத்து, காய்ச்சின பால் சேர்த்து கேசரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

10. இஞ்சியை துருவி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால் பால், டீ, குருமா, பொங்கல் இது போன்ற அனைத்திலும் இந்த பவுடரை சேர்த்தால் மணமும், உடல் ஆரோக்கியமும் சிறந்த இருக்கும்.

11. இஞ்சி, பூண்டு விழுது கெட்டுப் போகாமல் இருக்க அரைக்கும் பொழுது சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

12. நெய் காய்ச்சும் பொழுது சிறிதளவு உப்பு சேர்த்து காய்ச்சும் பொழுது நல்ல வாசனையாகவும், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.

13. தேங்காய் துவையல் செய்யும் பொழுது சிறிதளவு கசகசா சேர்த்து செய்தால் சுவையாகவும், இரவில் நல்ல தூக்கமும் ஏற்படும்.

14. கடலை மாவு, அரிசி மாவு, வறுத்த வேர்க்கடலை பொடி ஆகிய மூன்றையும் சேர்த்து பிசைந்து வெங்காய பக்கோடா செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

15. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் பொழுது சிறிதளவு இட்லி பொடி சேர்த்து செய்தால், வறுவலின் சுவை கூடுதலாக இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு கண்ணு பொங்குதா? சூடான சிறுநீர் வெளியேறுதா? இது ஒன்றுதான் தீர்வு!!

0

கோடை காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் சூட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.உடலில் அதிக சூடு இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.குழந்தைகள் பலர் உடல் சூட்டால் வயிற்று வலி,கண்ணு பொங்குதல்,சிறுநீர் கடுப்பு,சில்லி மூக்கு உடைதல்,தலைமுடி உதிர்தல்,வேனல் கட்டி வருதல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

எனவே கோடை காலத்தில் உடல் சூடாகாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள சிலவகை தீர்வுகளை பின்பற்றி பலனடையலாம்.

தீர்வு 01:

பெருங்காயம்

கட்டி பெருங்காயத்தை வாங்கி வரவும்.அதை பாத்திரத்தில் போட்டு சிறிது சூடு படுத்த வேண்டும்.அதன் பிறகு இந்த பெருங்காயத்தை ஆறவைத்து பொடித்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் பெருங்காயத் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பெருங்காய பேஸ்டை வயிற்றின் மீது அப்ளை செய்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 02:

ஓமம்

25 கிராம் ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஓமத்தை கொட்டி அரை கப் தண்ணீராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த ஓம பானத்தை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஓம தண்ணீர் 5 மில்லி அளவு குடித்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 03:

பெருஞ்சீரகம்

25 கிராம் பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு பெருஞ்சீரகத்தை கொட்டி அரை கப் தண்ணீராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பெருஞ்சீரக பானத்தை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பெருஞ்சீரக தண்ணீர் 5 மில்லி அளவு குடித்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 04:

நல்லெண்ணெய்

வயிற்றுப் பகுதியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அப்ளை செய்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.நல்லெண்ணெய்யை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

0

பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சர்வ சாதாரணமாக உலாவ கூடிய ஒரு உயிரினம். இந்த பல்லியை அடித்து விட்டால் தலைவலி வந்துவிடும், பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் பலன் என நிறைய விஷயங்கள் பல்லியை குறித்து பேசப்பட்டு வருகின்றன.

இந்த பல்லியானது சமையலறையில் உள்ள மேடையின் மீது சாதாரணமாக ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அது வெளியிடக்கூடிய சிறுநீர் மற்றும் எச்சத்தின் மூலம் நோய் தொற்றுகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு தெரியாமல் உணவுகளில் விழுந்து விட்டாலும் ஃபுட் பாய்சனாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

இந்த பல்லி என்பது நமது வீட்டில் உள்ள கொசு, ஈக்களைப் போலவே தேவையில்லாத ஒன்றுதான். அதிலும் குறிப்பாக கோடை காலத்தின் வெப்பம் காரணமாக இந்த பல்லிகள் வீடுகளை நோக்கி தான் அதிகம் வரும். சிலர் பாம்புகளை பார்த்து பயம் கொள்கிறார்களோ இல்லையோ, இந்த பல்லியை பார்த்து கண்டிப்பாக பயம் கொள்வார்கள்.

அதிக வெப்பமும் இல்லாத அதிக ஈரப்பதமும் இல்லாத இடத்தை தான் இந்த பல்லிகள் விரும்பும். எனவே தான் நமது வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் இந்த பல்லிகள் இருக்கின்றன. மேலும் குப்பைகள் இருக்கக்கூடிய இடங்களில் அதிகமான பூச்சிகள் இருக்கும். அந்தப் பூச்சியை உணவாக உட்கொள்ளவும் இந்த பல்லிகள் வரும்.

வீடுகளில் தண்ணீர் லீக்கேஜ் இருந்தாலும் அந்த இடத்தில் இருக்கும் குளிர்ச்சியின் காரணமாக, பல்லிகள் அதிகம் வரும். எனவே இது போன்ற பிரச்சனைகளை நமது வீடுகளில் சரி செய்து கொள்ள வேண்டும். வீட்டை சுத்தபத்தமாக, குப்பைகளை சேர்க்காமல் வைத்துக் கொள்வதும் அவசியம்.

இந்த பல்லியை நாம் கொள்ளவும் விரும்ப மாட்டோம். அதே சமயம் சிறிது லேசாக அந்த பல்லியின் மேல் அடித்து விட்டாலும் அது விரைவில் இறந்துவிடும். எனவே பல்லியை கொல்லாமல் எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது, என்பதற்கான குறிப்புகளை தற்போது காண்போம்.

1. முட்டையின் ஓட்டில் இருக்கக்கூடிய வாசனை பல்லியை அந்த இடத்திற்கு வரவழைக்காது. அதாவது இந்த வாசனை பல்லிக்கு பிடிக்காது.

2. அதேபோன்று வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் இன் வாசனையும் பல்லிக்கு பிடிக்காது. எனவே பல்லிகள் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து விட்டால் பல்லிகள் வராது.

3. வெங்காயம் மற்றும் பூண்டினை சேர்த்து அரைத்து அதிலிருந்து சாற்றினை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட்டோம் என்றால் கண்டிப்பாக பல்லிகள் வராது.

4. மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை பல்லிகள் இருக்கக்கூடிய இடத்தில் தெளித்து விட்டாலும் பல்லிகள் வராது.

5. நாப்தலின் உருண்டை வாசனைக்கும் பல்லிகள் வராது.

6.காபியுடன் புகையிலை பொடியைக் கலந்து மற்றொரு சக்திவாய்ந்த பல்லி தடுப்பானை உருவாக்குங்கள். இந்த வலுவான வாசனை இந்த ஊர்வன உயிரினமான பல்லிகள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க உதவுகிறது.

7. சமையல் செய்யும் பொழுது மீதமாக கூடிய குப்பைகளையும், மீதமாக கூடிய சாதத்தினையும் இரவு நேரங்களில் வீட்டிற்கு உள்ளே வைத்துக் கொள்ளாமல் அவ்வபோது அகற்றி விடுவது நல்லது.

8. வீட்டின் ஜன்னல்களில் கொசு வலை அடிப்பது, வீட்டில் குப்பைகளை சேர்க்காமல் இருப்பது இது போன்ற சிறிய சிறிய விஷயங்களை செய்தாலே பல்லிகள் வராது.

குழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!

0

நம்மைப் போலவே ஒரு மானுடனாக அவதாரம் செய்து ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பானோ அத்தையே துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, அந்த துன்பங்களில் இருந்து எப்படி நிவர்த்தி அடையலாம் என்பதை தத்ரூபமாக நமக்கு நிகழ்த்தி காட்டியதனால் தான், ராம அவதாரத்தின் மேல் நமக்கு மிகப்பெரிய பற்று உள்ளது.

ராமனுடைய சிறப்புகளையும், ராமர் இந்த உலக மக்களுக்காக எப்படி வாழ்ந்து காட்டினார் என்கின்ற வாழ்க்கை வரலாற்றையும் மிக அழகாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சரித்திரம் என்றால் அது கம்பர் எழுதிய கம்பராமாயணம்.

இப்படிப்பட்ட ராமனை ஆண்டுதோறும் நாம் கொண்டாடி மகிழக்கூடிய அந்த அழகான திருவிழா தான், ஸ்ரீ ராம நவமி திருவிழா. இந்த ஸ்ரீராம நவமி குழந்தைக்காக காத்திருக்கக் கூடிய நபர்களுக்கு ஒரு பொக்கிஷமான நாள் என்றே கூறலாம்.

ஏனென்றால் தசரத சக்கரவர்த்தி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்து, அந்த தவத்தின் பலனால் தான் ஸ்ரீ ராமரை பெற்று எடுத்தார். இதனைப் போன்று தான் பல ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருப்பவருக்கு இந்த நாள் ஒரு வரமான நாள் ஆகும்.

முந்தைய காலத்தில் இராமாயணத்தை கந்த சேர்வையாக படித்து குழந்தை பாக்கியத்தை பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உண்டு. அதேபோன்று இந்த ராமநவமி அன்று விரதம் இருந்து ராமருடைய கருணையினால் குழந்தை பேறு பெற்றவர்களும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் உள்ளனர்.

இந்த அழகான ராம நவமியை நாம் என்றைக்கு கொண்டாட வேண்டும்? அதற்கான நேரம் என்ன? எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது காண்போம்.

இந்த ராம நவமி 6.4.2025 அன்று அதிகாலை 01:08 மணி முதல் 7.4.2025 அதிகாலை 12:25 மணி வரை அமைந்திருக்கிறது. அதேபோன்று புனர்பூசம் நட்சத்திரம் 5.4.2025 காலை 10:48 மணி முதல் 6.4.2025 காலை 10:31 மணி வரை இருக்கிறது.

ஸ்ரீ ராமர் அவர்கள் புனர்பூசம் நட்சத்திரம், நவமி திதியில் தான் இந்த பூமியில் அவதாரம் புரிந்தார். இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாளான ஞாயிற்றுக்கிழமை அதாவது 6.4.2025 காலை 10:31 மணி வரை இருக்கிறது. எனவே ராமரை வழிபடுவதற்கு காலை நேரம் மிகவும் சிறப்பானது.

இந்த இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:00 மணி முதல் 10:20 மணி வரை ராமரை வழிபாடு செய்து கொள்ளலாம். மாலை நேரத்தில் வழிபாடு செய்ய நினைப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து கொள்ளலாம்.

எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் காலை நேரத்தில் செய்வது சிறப்பானதாக இருக்கும். எனவே முடிந்தவர்கள் காலை நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்வது மேலும் சிறப்பை தரும். ஏனென்றால் குழந்தைகளுக்கும் இறைவழிபாட்டை பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும்.

குழந்தை பாக்கியத்திற்காக இந்த வழிபாட்டை செய்பவர்கள் காலையில் இருந்து விரதம் இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த வழிபாட்டை செய்யலாமா? என்றால் செய்யலாம். ஒருவேளை இந்த வழிபாட்டின் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் நாட்களாக இருந்தாலும் செய்து கொள்ளலாம். ஆனால் பூஜை அறைக்குள் செல்லாமல்.

ஸ்ரீ ராமரின் படம் வீட்டில் இருந்தால் அந்த படத்திற்கு துளசி மாலை அல்லது ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதின மாலை, போன்ற ஏதேனும் ஒன்றை மாலையாக சூட்டிக் கொள்ளலாம். இந்த வழிபாட்டின் பொழுது துளசி தண்ணீர் மற்றும் ராமருக்கு மிகவும் பிடித்தமான பால் பாயாசம் போன்றவற்றையும் வைத்துக் கொள்ளலாம்.

இதனை செய்ய முடியாதவர்கள் பழங்களை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். ராமரின் அற்புதமான நாமம் ஆகிய “ஸ்ரீ ராம ஜெயம்” என்பதை 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாமத்தை நாம் கூறும் பொழுதே நமக்குள் ஒரு அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி என்பது கட்டாயம் ஏற்படும்.

இவ்வாறு நாமத்தை கூறிய பிறகு தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். “ராமா ராமா ராமா” என்று மூன்று முறை கூறினாலே, ஆயிரம் நாமங்களினால் நாம் நாராயணரை அர்ச்சனை செய்த பலன் நமக்கு கிடைக்கும் என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது.

“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!”

ரஜினி – விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!.. ஒரே களேபரமா இருக்குமே!…

0

Rajini vijay: விஜயின் சம்பளம் எப்போது ரஜினியை விட அதிகமாகிப் போனதோ, அவரின் படங்கள் எப்போது ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற துவங்கியதோ அப்போது முதலே ரஜினி – விஜய் போட்டி என்பது கோலிவுட்டில் துவங்கிவிட்டது. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். என்னை அவரோடு ஒப்பிட வேண்டாம் என ரஜினி ஓப்பனாகவே பேசினார். ஆனால், யாரும் அதை கேட்கவில்லை. ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன கழுகு காக்கா கதையில் ரஜினி காக்கா என சொன்னது விஜயைத்தான் என அவரின் ரசிகர்கள் நினைத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ரஜினி படம் வந்தாலே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அப்படத்திற்கு எதிராக ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்ய துவங்கிவிட்டனர். வேட்டையன் படம் வெளியான போதும் இப்படத்தின் ரிலீஸான முதல் நாளே படம் ஃபிளாப் என விஜய் ரசிகர்கள் பதிவிட்டார்கள். இதுவே அப்படத்தின் வசூலையும் பாதித்தது. உண்மையில் ரஜினி பார்த்து வளர்ந்த பையன்தான் விஜய். ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய்.

ஆனால், ஒருகட்டத்தில் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் பேச அமைதியாக அதை ரசித்தார் விஜய். ஆனால், அது சர்ச்சையில் கொண்டு போய் முடிய சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என ஒரு விழாவில் பேசினார். ஒருபக்கம் ரஜினி மற்றும் விஜயின் பழைய படங்களை ரீ- ரிலீஸ் செய்ய துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணம் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸில் 20 கோடி வசூல் செய்தது.

ஆனால், ரஜினியின் பாபா படம் வெளியாகி பெரிய வசூலை பெறவில்லை. இந்நிலையில் வருகிற 18ம் தேதி ரஜினியின் தளபதி படமும், விஜயின் சச்சின் படமும் ஒன்றாக ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. எனவே, ரஜினி – விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதிக்கொள்ளும் சூல்நிலை உருவாகியுள்ளது.

பேச்சுரிமையை குற்ற வழக்கால் தடுக்க முடியாது – சி.வி. சண்முகம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மீது, பொதுக் கூட்டங்களில் தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசை விமர்சித்ததாக வழக்குகள் பதிந்த நிலையில், அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து முக்கியமான legally-binding விளக்கத்தை வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் சி.வி. சண்முகம் ஆற்றிய உரைகள் குறித்து, அவர் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக கூறி, போலீசார் இவர்மீது குண்டர் சட்டத்திற்குட்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் பதிந்து வழக்குகள் தொடர்ந்தனர். இதையடுத்து, அந்த வழக்குகளை ரத்து செய்ய அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சி.வி. சண்முகம் பேசிய உரைகளை முழுமையாகக் கேட்ட பிறகு தனது தீர்ப்பில் கூறியதாவது:

“ஒரு அரசியல் தலைவராக அவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையுடன் பேசலாம். ஆனால் அந்த உரை எப்போது சட்ட ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கிறதோ, அப்போது தான் அது குற்றமாகும். இங்கு அவர் பேசியவை அத்தகையவை அல்ல. பொதுமக்கள், சமூக அமைதி ஆகியவற்றை பாதிக்கும் வார்த்தைகள் இதில் இடம்பெறவில்லை. எனவே, அவர்மீது தொடரப்பட்ட வழக்குகள் தக்காது.”

இந்த தீர்ப்பின் மூலம், ஒருவரது கருத்து சுதந்திரம், குறிப்பாக அரசியல் விமர்சனங்கள், சட்டத்திற்கு உட்பட்டவரையாக இருக்கும்போது அதை குற்றமாகக் கருத முடியாது என்பதை உயர்நீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்துள்ளது.

இது போல் ஒரு தீர்ப்பு, எதிர்கட்சியினரின் உரிமைகளையும், ஜனநாயகத்தில் விமர்சனங்களின் பங்கையும் நினைவூட்டும் வகையில் உள்ளது.

அதே நேரத்தில் எம்பி பதவியில் உள்ள அவர் ஆளும் அரசையோ அல்லது முதல்வரையோ விமர்சிக்கும் போது பொறுப்புணர்ந்து வெறுப்பை காட்டாமல் பேச வேண்டும் எனவும் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

குட் பேட் அக்லிக்கு டிக்கெட்டே கிடைக்காது!.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!..

0

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது.

மேலும், தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும், ‘அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்’ என பிரபுவும் பில்டப் ஏத்துகிறார். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

பட ரிலீஸுக்கு 4 நாட்கள் முன்பே ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. ஆனால், 80 சதவீத டிக்கெட்டுக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதால் பலருக்கும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மீதமிருக்கும் டிக்கெட்டுகளையும் பிய்த்து பிய்த்து கார்ப்பரேட் கம்பெனிகளாலே வாங்கி கொண்டதால் முதல் 4 நாட்களுக்கு ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்காது என்கிறார்கள். அனேகமாக இதுபற்றி அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

திரைக்கு இயக்குனர் போல அரசியலில் விஜய்க்கு பக்கபலமாக நிற்கும் மும்மூர்த்திகள்

0

திரைக்கு இயக்குனர் போல அரசியலில் விஜய்க்கு பக்கபலமாக நிற்கும் மும்மூர்த்திகள்

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதத் தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். அவரது தலைமையில் உருவாகியுள்ள தமிழக வெற்றி கழகம், கடந்த சில வாரங்களில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திரையுலகத்தில் மக்கள் மனதில் ஆழ்ந்த இடம் பிடித்த விஜய், இப்போது அரசியல் மேடையிலும் வெற்றியை நோக்கி திட்டமிட்ட பயணத்தில் உள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் எந்த கூட்டணியாக இருந்தாலும் விஜய்யின் அரசியல் நகர்வை பொறுத்தே முடிவு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில் சினிமாவில் நடிக்க அவருக்கு உதவியாக இயக்குனர் இருந்ததை போல அரசியலிலும் தான் மற்றும் கட்சி நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க அதற்கு தகுதியான திறமையான நபர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதை சமீபத்தில் விசிக கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா முன்னெடுத்து செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

1. பிரசாந்த் கிஷோர் – கட்சியின் நிர்வாக கட்டமைப்பு

இந்திய அரசியலில் சுதந்திரமான வியூகக் கலைஞராக முத்திரை பதித்துள்ள பிரசாந்த் கிஷோர், தற்போது விஜய்க்கும் அவரது கட்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறார். கட்சியின் அடித்தள அமைப்புகள், உறுப்பினர் பதிவுகள், மாநில அளவிலான களப்பணிகள் என அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளார். ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் வழியாக கடந்த சில ஆண்டுகளில் பல வெற்றிகரமான பிரசாரங்களை வழிநடத்திய இவரது அனுபவம், தமிழகம் போன்ற முக்கிய மாநிலத்தில் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.அந்த வகையில் அவர் தவெக கட்சியின் நிர்வாக கட்டமைப்பு பணியை கவனிக்கும் பொறுப்பில் நியமிக்கப்படவுள்ளார்.

2. ஆதவ் அர்ஜுனா – தேர்தல் வியூகம்

நடிகர் விஜய்க்கு நெருங்கிய நபராகவும், தமிழக வெற்றி கழகத்தின் செயலாளராகவும் உள்ள ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வெற்றிக்கான மிகவும் முக்கியமான வியூகம் வகுக்கும் பணியில் உள்ளார். அவரது நிறுவனம் சார்ந்த வல்லுநர்கள், மாவட்ட வாரியாக வாக்காளர் மனநிலைகள், பிரச்சனைப் பகுதிகள், சமூக ஊடக மேலாண்மை உள்ளிட்ட விவரங்களை கணக்கிட்டு இயக்கத் திட்டங்களை தயாரிக்கின்றனர். சமீபத்தில் அவரது டெல்லி பயணம், தேசிய அளவிலான புதிய கூட்டணிக் கருத்துக்களுக்கும் அடித்தளம் போடுகிறது என்றே கருதப்படுகிறது.

3. ஜான் ஆரோக்கியசாமி – விஜய்க்கு நிழல்போல் துணையும், ஆலோசகரும்

முன்னணி கல்வியாளர், மேடைக்கற்பனையாளராக இருப்பதுடன், பல்வேறு சமூக நலப்பணிகளில் பங்காற்றி வருபவர் ஜான் ஆரோக்கியசாமி. நடிகர் விஜய்க்கு கடந்த காலங்களிலிருந்தே நெருங்கிய உறவாகவும், தனிப்பட்ட ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார்.ஏற்கனவே வியூகம் வகுக்கும் பணியில் இருந்த அவர் அரசியல் நுணுக்கங்களை, பொது வாழ்க்கையில் எடுக்கவேண்டிய அடையாளமான முடிவுகளை நேர்மறையாகவும் மக்கள் பார்வையில் அங்கீகாரம் பெறும் வகையிலும் தீர்மானிக்க வழிகாட்டும் நபராவார்.

விஜய்யின் மும் மூர்த்திகள்

விஜய், திரையில் ஹீரோவாக மட்டுமல்லாது, இப்போது அரசியல் மேடையிலும் ஒரு தலைவராக உருவெடுக்கிறார். அந்த வகையில் அவருக்கு பக்கபலமாக உள்ள இந்த மூவர் — பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி — ஆகியோர் அவரின் வெற்றிக்காக உழைக்கும் மும் மூர்த்திகள் என கருதப்படுகிறார்கள். மூவரும் தத்தங்கள் தனித்தனி துறையில் தங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்தி கட்சிக்கு வேரூன்றும் பணி செய்து வருகின்றனர்.

முடிவாக, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக வெற்றி கழகம் தனது பயணத்தை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது. விஜயின் அரசியல் ஆரம்பம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி விட்ட நிலையில், இம்மூன்று முக்கியமான நபர்களின் பங்களிப்பு அவரை வெற்றி மேடைக்கு அழைத்துச் செல்லும் சாத்தியம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.