Home Blog Page 336

ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிஸ்னஸில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!…

0

கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். அஜித்தை வைத்து வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்ட நிலையில் இது அவரின் கடைசி திரைப்படமாகும். எனவே, விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தில் ரீமேக் என்கிறார்கள்.

அதேநேரம் தமிழுக்கு ஏற்ற்படி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக விஜய் அரசியலுக்கு போகவுள்ள நிலையில் ஓட்டு போடுவது பற்றிய விழிப்புணர்வு பற்றிய காட்சியெல்லாம் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 2026ம் வருட பொங்கலூக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், பட ரிலீஸுக்கு முன்பே ஜனநாயகன் படம் பல கோடிகளை அள்ளியிருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடிக்கு வாங்கியிருக்கிறது. மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி 55 கோடிக்கு வாங்கியிருக்கிறது.. எனவே, ரிலீஸுக்கு முன்பு ஜனநாயகன் படம் 176 கோடி வரை லாபம் பார்த்திருக்கிறது. இது இல்லாமல் தியேட்டர் மூலம் கிடைக்கும் வசூல், மற்ற மொழி உரிமைகள் என கணக்கு போட்டு பார்த்தால் ஜனநாயகன் படம் 700 கோடி வரை வசூல் செய்யும் என்றே கணிக்கப்படுகிறது.

தேர்வு எழுதாமல் போன 10 வகுப்பு மாணவர்கள்.. பள்ளிக் கல்வித்துறை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!!

0

TN School: கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களே, தேர்ச்சி விகிதம் குறைந்துவிடும் என்பதற்காக பத்தாம் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதோடு இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் இரண்டு மாணவர்களை பொது தேர்வு எழுத விடாமல் ஆசிரியர்கள் தடுத்துள்ளனர்.

முதலாவதாக நடைபெற்ற தமிழ் தேர்வின் போது உங்களுக்கு தற்போது வரை ஹால் டிக்கெட் வரவில்லை எனக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டனர். இப்படி அனுப்பி வைத்தது மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோரிடமும், உங்கள் மகன் தேர்வு எழுதினால் கூட பாசாக வாய்ப்பில்லை இதற்கு தேர்வு எழுதாமலே இருந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதை கேட்டு கொந்தளித்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இது ரீதியாக தலையிட்டு ஆங்கிலத் தேர்வுக்கு இவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும் இவர்களால் தமிழ் தேர்வு எழுத முடியாமல் போனது. இதற்கு முக்கிய காரணம் அந்த இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தேர்ச்சி விகிதம் குறைந்த விடக்கூடாது என்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கூட, தற்பொழுது நாங்கள் திருப்பி அனுப்பிய மாணவர்கள் ஒரு மாதம் கூட பள்ளிக்கு வரவில்லை அப்படி இருந்தும் அவர்களுக்கு நாங்கள் ஹால் டிக்கெட் கொடுத்து தேர்வு எழுத அனுப்பி வைத்தோம்.

ஆனால் அவர்கள் வந்தார்களா என்பது எங்களுக்கு தெரியவில்லை எனக்கு கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறுவதை அப்பட்டமான பொய் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கல் ,  தலைமையாசிரியர் என அனைவர் மீதும் பள்ளிக்கல்வித்துறை எம் மாதிரியான நடவடிக்கை எடுக்கும் அரசு பள்ளிகளிலேயே இப்படி ஒரு சாரா  நடந்து கொள்ளலாமா என்ற கேள்வியையும் எழுப்பு வருகின்றனர்.

டெல்லிக்கே சவால் விடும் போஸ்டர்.. அதிமுக கூட்டணியை புறக்கணிக்கும் பாஜக தொண்டர்கள்!!

0

BJP Annamalai: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமென்றால்  கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை எடப்பாடி டெல்லி மேலிடத்தில் வைத்துள்ளார். இதற்கு சரி என்று அமித்ஷாவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் இது தமிழக பாஜக தொண்டர்களிடையே அதிருப்த்தி உண்டாக்கியுள்ளது. பாஜக தமிழகத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் கட்டாயம் அண்ணாமலை தான் முக்கிய காரணம் அப்படி இருக்கையில் அவரையே வேண்டாம் என்று ஒதுக்குவது என பல தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை உச்சகட்டமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பாஜக நிர்வாகியான சரவணன் தலைமையில் அவரது பெயர் போட்டு பெரிய போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் வேண்டும் வேண்டும் மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்… வேண்டாம் வேண்டாம் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போட்டுள்ளனர். இந்த போஸ்டரானது ராமநாதபுரம் பரமக்குடி வட்டார முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டப்பட்ட போஸ்டரால் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தொண்டர்களின் அதிருப்தி நீங்க பாஜக நல்ல முடிவு எடுக்குமா அல்லது கூட்டணிக்காக அண்ணாமலை ஒதுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி இவரது இந்த பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது. முதலாவதாக முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரன் பெயரும் , மறுபுறம் வானதி சீனிவாசன், கருப்பு முருகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அடுத்த பாஜக மாநில தலைவராக இடம் பெற போவது யார் என்பதை வரும் 9 ஆம் தேதி தான் பார்க்க முடியும்.

மாநில தலைவர் பதவி வெறும் வெங்காயம்!.. விரக்தியில் புலம்பும் அண்ணாமலை!…

0

தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு பின் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். கடந்த சில வருடங்களாகவே திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

எனவே, அண்ணாமலை மீது திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே கோபம் ஏற்பட்டது. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

மாநில தலைவர் பதவி வெறும் வெங்காயம்!.. விரக்தியில் புலம்பும் அண்ணாமலை!...

எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. இந்நிலையில், இதுபற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என் பதவியை தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. பதவியை தூக்கிப்போட்டு வந்தவன் நான்.

இதைவிட 10 மடங்கு அதிக பவர் என்னிடம் இருந்தது. நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நேற்று கூட என் தோட்டத்துக்கு போனேன். எனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறேன். ஆடு மாடுகளை பார்த்தேன். எனக்கென ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது. அரசியல் நான் சொன்ன கருத்துக்களை மாற்றி பேசமாட்டேன். என்னுடைய தனி உலகத்தில் நான் அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். மோடிக்காக அரசியல் செய்ய வந்தேன். அட்ஜஸ்மெண்ட் பாலிக்டிக்ஸ் என்னிடம் கிடையாது’ என பேசியிருக்கிறார்.

சமையல்காரருக்கு 1 கோடி!.. வளர்ப்பு நாய்க்கு 12 லட்சம்.. ரத்தன் டாடா எழுதிய உயில்…

0

இந்தியாவின் இருந்த தொழிலதிபர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. அப்பா விட்டு சென்ற தொழிலை திறம்பட நடத்தி டாடா குழுமத்தை உலகமெங்கும் விரிவுபடுத்தியவர் இவர். வாகனங்கள் தயாரிப்பது முதல் பல்வேறு தொழில்களில் டாடா நிறுவனம் சிறந்து விளங்கியது 2024ம் வருடம் அக்டோபர் மாதம் இவர் மரணமடைந்தார். பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் இறந்தால் பொதுமக்களிடம் அனுதாபமே இருக்காது. ஆனால், இவர் இறந்து இந்தியாவில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அனுதாபம் தெரிவித்தார்கள். பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் இவரின் இறப்பு பற்றிய செய்தியே இருந்தது.

அதற்கு காரணம் மற்ற பணக்காரர்கள் போல் இல்லாமல் டாடா எளிய மக்களுக்காக யோசித்தார். அவர்கள் சுலபமாக வாங்கும்படியான பொருட்களை உற்பத்தி செய்தார். உலக சந்தையில் இந்தியாவின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருந்தார். அதனால்தான் அவருக்காக மக்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், ரத்தன் டாடா எழுதிய உயில் தொடர்பான விபரங்கள் வெளியே கசிந்துள்ளது.

rathan tata
rathan tata

தனது செல்வத்தின் பெரும் பகுதியை ரத்தன் டாடா தனது அறக்கட்டளைக்கு விட்டு சென்றிருக்கிறார். டாடா தொடர்பான பங்குகளின் மதிப்பே 1684 கோடி என சொல்லப்பாடுகிறது. இது எல்லாம் அறக்கட்டளைக்கே சொந்தம். இதுபோக 3900 கோடி சொத்துக்கள் அவருக்கு இருக்கிறது. இவை அவரின் உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி உயில் எழுதியிருக்கிறார். இதில், தன்னுடைய வளப்பு நாயையும் அவர் மறக்கவில்லை. செல்லப்பிரணிகளின் பராமரிப்புக்கு 12 லட்சம் எழுதி வைத்துள்ளார். காலம் முழுவதும் அது கிடைக்க வேண்டும் எனபதற்காக மாதா மாதம் 30 ஆயிரம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். அவர் உயில் எழுதிய மற்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிக்கிறது.

சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடி ரூபாய்..

உணவு பரிமாறும் வேலை செய்த சுப்பையாவுக்குல் ரூ.66 லட்சம்

உதவியாளர் சாந்தனு நாயுடு படிப்புக்காக வாங்கிய 1 கோடி கடன் ரத்து.

டிரைவர் ராஜூ லியோனுக்கு 1.5 லட்சம். அவர் வாங்கிய 18 லட்சம் கடன் ரத்து..

பக்கத்து வீட்டுக்காரர் ஜேக் மலைட் படிப்புக்காக வாங்கிய 23.7 லட்சம் கடன் ரத்து.

வீட்டு பராமரிப்பாளருக்கு 2 லட்சம், செயலாளருக்கு 10 லட்சம் என ரத்தன் டாடா உயில் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீ தேவி கூட விடிய விடிய நடக்கும்.. ரகசிய காதலன் குறித்து லீக்கான தகவல்!!

0

Cinema Talk: 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர்  தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை கரம் பிடித்து இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் இவரது திருமணத்திற்கு முன்  ஒரு நடிகருடன் மிகுந்த நெருக்கமாகவும் காதல் வயப்பட்டும் இருந்தார்.

சினிமா இண்டஸ்ட்ரி முழுவதும் இவர்கள் இருவரும் கட்டாயம் திருமண செய்து கொள்வார்கள் என்று எண்ணினர். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை, இவரின் ரகசிய காதலனாகவே மிதுன் சக்கரவர்த்தி இருந்துள்ளார்.  மிதுன் சக்கரவர்த்திக்கு முன்னதாகவே திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் இவர் மீது ஸ்ரீதேவி காதல் வசம் பட்டுள்ளார். இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அச்சமயத்தில் செய்திகள் பரவியது.  இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துவிடுமாம் இந்த சண்டையானது இரவு முழுவதும் கூட நீளுமாம்.

அப்படி சண்டை இருந்தாலும் மிதுன் சக்கரவர்த்தி ஒரு பொழுதும் தன் வேலையை விட்டுக் கொடுத்ததில்லையாம், சரியான நேரத்திற்கு வந்து தனக்கு உண்டான ரோலை முடித்துக் கொடுத்து தான் செல்வாராம். இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. இதற்கு மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி கூட காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர். அவர்களின் காதல் கதை குறித்து பாலிவுட் பேட்டி ஒன்றில் தற்பொழுது கரண்ட் ரஸ்தான் கூறியுள்ளார். 

பாஜக வேலையை செய்யும் ரஜினி.. ஸ்டாலின் எடுத்த அடுத்தக்கட்ட மூவ்!! 

0

Rajinikanth: ரஜினிகாந்த்  முதலில் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு அப்படியே பின் வாங்கினார். அதனையடுத்து ஒருபொழுதும் அரசியல் ரீதியாக எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. அது குறித்து பேசுவதும் இல்லை, ஆனால் இவர் பாஜகவின்  வலது கைகளில் ஒன்று என்பது அனைவரும்  அறிந்தது தான். அந்த வகையில் மோடி ஒவ்வொரு முறையும் புதிய அறிவிப்புகளை வெளியிடும்போது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். தற்சமயம் இரண்டு வாரங்களுக்கு முன் தமிழக கடலோர மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது தமிழ்நாட்டின் பாதுகாப்பு தன்மையை கெடுக்கும் வகையில் தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளது. அப்படி சந்தேகிக்கும் வகையில் ஏதேனும் நபர்கள் தென்பட்டால் கட்டாயம் அவர்கள் குறித்து புகாரை காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு இது ரீதியாக சிஎஸ்எப் வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7000 கிலோமீட்டர் தூரம் மேற்குவங்கத்திலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்வர். அப்படி தங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வருபவர்களை வரவேற்று புத்துணர்ச்சி அளிக்க அவர்களுடன் சிறிது தூரம் செல்லலாம் என கூறியுள்ளார்.

இவ்வாறு ரஜினிகாந்த் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்து தமிழக மேலிடத்திற்கு திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. ரஜினி கூறியதை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இவர் ஏன் திடீரென்று இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்?? இதன் பின்னணியில் என்ன உள்ளது?? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதற்கு எதிரான ஆட்சி அமையும் போது மாநில அரசை அச்சுறுத்தும் வகையில் இதுபோல செய்திகளை மத்திய அரசு சித்தரித்து வெளியிடுவது வழக்கம். ஆனால் இம்முறை ரஜினியையே களத்தில் இறக்கியுள்ளார்கள் என்றால் பெரிய நோக்கம் இருக்க வேண்டும். அதனால் தமிழக அரசு இது ரீதியாக குழு அமைத்து விசாரணை செய்து வருகிறது.

மோடிக்கு போன திடீர் மெசேஜ் .. உங்களை சந்தித்தே ஆக வேண்டும்!! ஒற்றைக் காலில் நிற்கும் ஸ்டாலின்!!

0

DMK BJP: தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் திமுக வோ மத்திய அரசை எதிர்த்து பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் கூட்டணி கட்சியான காங்கிரசை கூட அழைக்காமல் ஒரு சில நிகழ்ச்சிகளில் மோடியை முன்னிறுத்தி விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு மாநிலங்களின் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதனை பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இது ரீதியாக அனைத்து கட்சி பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் ஆறாம் தேதி பாம்பன் பாலம் திறப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அந்த தருவாயில் அவரை சந்திக்க வேண்டுமென ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். குறிப்பாக அவரை சந்தித்து தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்திற்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து அனைத்து கட்சி எம்பிகளுடன் தீர்மானத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் இதுரீதியாக பிரதமர் மோடி சார்பாக ஸ்டாலினுக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அதேபோல திமுக மோடியை சந்தித்து எதிர்ப்பு தெரிவிப்பது போல கபட நாடகம் ஆடுகிறது ரகசிய கூட்டணியில் அனைத்து பேச்சு வார்த்தையும் நடந்து முடிந்துவிட்டது என கூறுகின்றனர். இதெல்லாம் மக்களின் கண் துடைப்புக்காக நடத்துவது மட்டுமே என்றும் இவர்கள் பெரும் வாரியான எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதிராஜாவுக்கு கை கொடுத்த ராஜ்கிரண்!.. பதினாறு வயதினிலே படம் ரிலீஸான கதை!…

0

பாரதிராஜா முதலில் இயக்கிய திரைப்படம் பதினாறு வயதினிலே. அந்த படம் உருவானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், அவரை கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. ரஜினி அப்போது வளரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க வைத்தார். ஸ்ரீதேவிக்கு அது இரண்டாவது திரைப்படம். படத்திற்கு இளையராஜா இசை. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் அதுவரை வந்ததே இல்லை. குறிப்பாக முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக பதினாறு வயதினிலே இருந்தது.

இந்த படத்தை பார்த்த வினியோகஸ்தர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை. கமல் ஜாலியான பையன். அவனுக்கு வாயில் வெத்தல பாக்கு, கோமணமெல்லாம் கட்டி நடிக்க வச்சா படம் எப்படி ஓடும் என பின் வாங்கினார்கள். தொடர்ந்து பல வினியோகஸ்தர்கள் படம் பார்த்தும் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. எனவே, அப்செட்டில் இருந்தார் பாரதிராஜா. தயாரிப்பாளருக்கோ ‘போட்ட பணம் போச்சி’ என்கிற மனநிலை.

kamal
kamal

அப்போது கடவுள் போல வந்தவர்தான் ராஜ்கிரண். அப்போது அவர் வினியோகஸ்தர் மொய்தீன் காதர். படத்தை பார்த்த அவருக்கு படம் பிடித்துப்போனது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ஏரியாக்களை வாங்கினார். இதை பாரதிராஜாவே நம்பவில்லை. ‘உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?’ என கேட்டிருக்கிறார்

‘அழகும் உடையும் முக்கியமில்லை. மனசுதான் முக்கியம் என இந்த படத்தில் காட்டியிருக்கிறீர்கள். கிராமம் முதல் நகரம் வரை எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்த படம் கண்டிப்பாக ஓடும்’ என ராஜ்கிரண் சொல்ல அவரை அன்போடு கட்டியணைத்துக்கொண்டாராம் பாரதிராஜா. அப்படி நம்பிக்கை வைத்து ராஜ்கிரண் வாங்கி வெளியிட்ட பதினாறு வயதினிலே படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்து அவருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது.

அண்ணாமலைக்கு எடப்பாடி வைத்த செக்.. இனி பதவிக்கு வாய்ப்பில்லை!! டெல்லி எடுத்த அதிரடி முடிவு!!

0

BJP ADMK: பாஜகவில் மாநிலத் தலைவர்களின் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இப்படிப்பட்ட சூழலில் அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதாவது அதிமுக மற்றும் பாஜக பரஸ்பர உறவு முறிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனால் அதிமுகவிற்கும் மேலிடத்திற்கும் பெரும் அழுத்தம் உண்டானது.

அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதால் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. அதேபோல இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்தால் மட்டுமே வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்க்க இவர்களுக்கு சாதகமாக அமையும். இதனையெல்லாம் சரிகட்டும் விதமாக அதிமுக பாஜக மேலிடத்திற்கு ஒரு சில நிபந்தனைகளை முன் வைத்தது. அதன்படி கட்டாயம் தமிழக பாஜக மாநில தலைவரை மாற்றியே ஆக வேண்டும் என கூறியது.

முதலில் இதனை மறுத்து வந்த டெல்லி மேலிடம் தற்பொழுது அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி தான் கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷா வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இவரை தொடர்ந்து அண்ணாமலையும் சென்றிருந்தார். அவர்களுக்குள் நடந்த ஆலோசனை குறித்து அண்ணாமலை ஏதும் தெரிவிக்காமல், நான் சாதாரண தொண்டனாக கூட பாஜகவில் செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு அண்ணாமலை கூறியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கட்டாயம் அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய டெல்லி முடிவெடுத்து விட்டது, அதனால் தான் இவர் இப்படி கூறுகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதன்படி நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.