Home Blog Page 335

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

0

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர

சென்னையில் ஒரு மணி நேரத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை, ஒரு மணி நேரத்திற்குள், மூன்று நபர்கள் இணைந்து, கிழக்குக் கடற்கரை சாலை, அடையார் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில், முதிய பெண்கள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் குறிவைத்து, சங்கிலி பறிப்பு சம்பவங்களை நடத்தினர். இச்சம்பவங்களில், குறைந்தபட்சம் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் சுமார் 16 சவரன் தங்க நகைகள், மதிப்பில் ரூ.10 லட்சம், இழக்கப்பட்டன.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, சென்னை பெருநகர காவல் துறை சிறப்பு குழுக்கள் அமைத்து, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம், சந்தேக நபர்கள் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றதை கண்டறிந்தனர். அங்கு, ஜாபர் குலாம் ஹுசைன் (28) மற்றும் சுராஜ் என்ற மார்சிங் அம்ஜத் ஆகிய இருவரும், டெல்லி செல்லும் விமானத்தில் ஏற முயற்சிக்கும் போது கைது செய்யப்பட்டனர்.

மேலும், மூன்றாவது நபர், திருடப்பட்ட நகைகளுடன், விஜயவாடா நோக்கி செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து எட்டு சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னர், போலீசார் ஹுசைனைக் கொண்டு, திருடப்பட்ட நகைகள் மறைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண, தாரமணி ரயில் நிலையத்திற்கு அருகே சென்றனர். அங்கு, போலீசாரின் தகவல்படி, ஹுசைன் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும், அவரைத் தடுக்க முயன்ற போது, அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஹுசைன் 2020 ஆம் ஆண்டிலிருந்து மகாராஷ்டிரா போலீசாரால் தேடப்பட்டு வந்தார், மேலும் பல மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட சங்கிலி பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கூறினர்.

இந்த சம்பவம், சென்னை நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதின் அவசியத்தை முன்வைக்கிறது. பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள், தங்கள் சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்களை உடனடியாக போலீசாருக்கு அறிவிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

 

 

 

 

ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு தடை! ஹை கோர்ட் உத்தரவு

0

கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாதவரை, ராபிடோ மற்றும் இதர பைக் டாக்சி சேவைகளை ஆறு வாரங்களுக்குள் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி பி.எம். ஷ்யாம் பிரசாத் தலைமையிலான அமர்வு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கு தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படாத நிலையில், இவ்வாறு உத்தரவிட்டது.

மாநில போக்குவரத்து துறை மற்றும் அரசு, பைக் டாக்சி சேவைகள் நடத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்க மூன்று மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை, இதுவரை பைக் டாக்சி சேவைகளுக்கு தேவையான ஒப்புதல் வழங்கவில்லை, மேலும் இதுபோன்ற சேவைகள் சட்டவிரோதமானவை எனக் கருதுகிறது.

ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள், பயணிகளுக்கு மலிவான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றன. ஆனால், இவை சட்டப்பூர்வமாக செயல்பட தேவையான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இதனால், நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அரசு, பைக் டாக்சி சேவைகளுக்கான விதிமுறைகளை விரைவில் உருவாக்கி, இத்துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழக பாஜகவில் திடீர் டிவிஸ்ட்!.. அதிமுக – பாஜக கூட்டணி நடக்குமா?.. நடக்காதா?..

0

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே செய்திகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களிலிலும் பலரும் இதுபற்றியே பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக திமுகவினர் மிகவும் சந்தோஷமாக இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். அண்ணாமலையை அசிங்கப்படுத்தி கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள் ஆனால், பாஜக மேலிடத்தில் வேறு மாதிரி முடிவை எடுத்திருக்கிறார்கள்.

எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்து வருகிறார். எனவே, அண்ணாமலை மீது திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே கோபம் ஏற்பட்டது. இவர் இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இணைவோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

eps

எனவே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன், எல். முருகன், கருப்பு முருகானந்தம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இருந்தார்கள்.

இந்நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக இன்னும் 3 வருடங்களுக்கு தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என அமித்ஷா முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. திமுகவுக்கு சரியான டஃப் கொடுப்பவர் அண்ணாமலைதான் என அமித்ஷா கருதுகிறார். அதேநேரம், அண்ணாமலை பாஜக தலைவராக நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இணைவாரா என்பது தெரியவில்லை.

மனைவிக்கு காதலுடன் கல்யாணம்!.. மனம் மாறிய கணவன்!.. திடீர்னு என்னாச்சி!…

0

திருமணமான பெண்கள் வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அது கணவருக்கு தெரியவர மனைவியை போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும் பல இடங்களில் நடக்கும். ஒருபக்கம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கள்ளக்காதலனின் துணையுடன் மனைவியே கொலை செய்யும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும். அதுவும் கணவனை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவங்களும் கூட நாட்டில் நடந்து வருகிறது.

ஆனால், உத்தரபிரதேசத்தில் தன் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அந்த ஆணுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன் பற்றிய செய்தி சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் பலராலும் இணையத்தில் பகிரப்பட்டது.

wedding

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ல கபிர் நகர் கடார் ஜாட் கிராமத்தில் வசிப்பவர் பப்லு. இவர் ராதிகா என்கிற பெண்ணை 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உண்டு. பப்லு வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் ராதிகாவும் அதே ஊரில் வசித்து வந்த வேறொரு இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சொந்த ஊருக்கு திரும்பி பப்லுவுக்கு தனது மனைவி கடந்த ஒன்றரை வருடங்களாக வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துகொண்டார்.

கோபப்படாத பப்லி அந்த வாலிபரை அழைத்து பேசி தனது மனைவியை அவருக்கே திருமணம் செய்து வைத்தார். அதோடு, 2 குழந்தைகளை தானே பார்த்துக்கொள்கிறேன் எனவும் கூறிவிட்டார். ராதிகாவின் திருமண வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாக பப்லுவை பலரும் பாராட்டினார்கள். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவிகளே கணவன்களை கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதால் தான் இந்த முடிவை எடுத்ததாக சொன்னார் பப்லு.

இந்நிலையில், திடீர் திருப்பமாக திருமணமாகி 3 நாட்கள் ஆன நிலையில் ராதிகாவை மீண்டும் தனது வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டாராம் பப்லு. குழந்தைகளை தன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

எம் ஜி ஆர் வேண்டாம் சிவாஜி தான் வேண்டும்.. உதறி தள்ளிய சரோஜா தேவி!! மாஸ் எண்ட்ரீ கொடுத்த ஜெயலலிதா!!

0

Cine Stories: எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவரும் இணைந்து பல படங்களை கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நாடோடி மன்னன் படத்தில் பானுமதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் படத்தை விட்டு வெளியேறினார். அவரை படத்தில் இறந்து விட்டதாக காட்டிவிட்டு இடைவெளிக்குப் பிறகு சரோஜாதேவி வருவது போல் காண்பித்து படத்தை முடித்தனர். அதேபோல தான் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்குமிடையேயான சந்திப்பில் துப்பாக்கி சூடு ஏற்பட்டு எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே சரோஜாதேவி மற்றும் எம்ஜிஆர் காம்போ குறித்து பல படங்கள் ஹிட்டானதால், மேற்கொண்டு பல படங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தம் போட்டிருந்தனர். எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது சின்னப்ப தேவர் அவரை நேரில் சந்தித்து நீங்கள் நல்ல உடலை தேற்றி வாருங்கள் மீண்டும் நடிப்பீர்கள் என்று கூறிவிட்டு வந்துள்ளார். இவர் மீண்டும் வருவாரா வரமாட்டாரா என்ற கணிப்பில் சரோஜாதேவி, நான் எம்ஜிஆர் படங்களில் நடிப்பதை காட்டிலும் சிவாஜி படங்களில் நடிப்பதுதான் பிடித்துள்ளது.

அதில் தான் எனது திறமை தெரிகிறது என கூறிவிட்டார். எம்ஜிஆர் உடன் நடித்த நீதிக்கு பின் பாசம் படத்தில் கூட பாதியிலேயே வெளியேறினார். இதனால் அந்த படத்தில் சரோஜா தேவி இறந்தது போல் காட்டிவிட்டு, எம்ஜிஆரின் அத்தை மகளாக ஜெயலலிதா இரண்டாவது ஹீரோயினியாக எண்ட்ரீ கொடுத்திருப்பார். மீண்டும் இந்த படத்தில் நடிப்பதற்காக சரோஜாதேவி இடம் இயக்குனர் சென்றபோது கூட , உங்களுக்கு வேண்டுமென்றால் வேறு எந்த ஒரு நடிகையை நடிக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக பேசியுள்ளார். இதுவே ஜெயலலிதா இந்த படத்திற்குள் நுழைய முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர்.

அச்சச்சோ ADMK கூட்டணியை விட்டுட்டோமே.. புலம்பி தவிக்கும் விஜய்!! உச்சக்கட்ட பிரஷரில் தவெக!!

0

ADMK TVK: தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பமாக புது அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்சமயம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் எங்கு பார்த்தாலும் பேச்சு அடிபட்டு வருகிறது. அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறினால் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற கெடுபிடியை பாஜக மேலிடத்திற்கு எடப்பாடி போட்டுள்ளார். முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் கட்சியின் நலனுக்காக சம்மதித்து விட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் விஜய்க்கு இது பாதகமாகவே அமைந்துள்ளது. இனி எந்த ஒரு கட்டாயத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக சொன்னதை வைத்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து எடப்பாடியுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தொகுதி பிரிவு ஆட்சி அமைத்தல் போன்ற பிரச்சனையினால் இவர்கள் பேச்சுவார்த்தை பாதியிலேயே நின்றது. இருப்பினும் விஜய் விட்டுக் கொடுக்காது மற்ற கட்சிகளை குறித்து குறை கூறினாலும் அதிமுக குறித்து ஒருபோதும் வாய் திறப்பதில்லை.

அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்டாயம் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்து விடும் என்ற பேச்சும் அடிபட்டு வந்தது. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியில் இணைய போவது உறுதியாகி இருக்கிறது. இதனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது குறித்து குழப்பத்தில் உள்ளாராம். சீட் பிரிப்பது குறித்தும் எங்கள் தலைமையின் கீழ் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும் தீர்க்கமாக இருந்ததால் அதிமுக கூட்டணி கைநழுவி போனது.

அரசியலுக்குள் வந்த உடனே முதல்வராக நினைத்து எங்களுக்கு கீழ் தான் ஆட்சி எனக் கூறினால் தற்போது வரை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவிற்கு எந்த மவுசும் இருக்காது. அதனை விட்டுக் கொடுக்க முடியாமல் தான் அதிமுக மீண்டும் பாஜக வை தேடி சென்றது. இதனையெல்லாம் விஜய் தற்பொழுது ஆலோசனை செய்து வருகிறாராம். மேற்கொண்டு வேறு யாருடன் கூட்டணி வைப்பது என்பதறியாமல் குழப்பத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குட் பேட் அக்லி 3வது சிங்கிள் ரெடி மாமே!.. கேப் விடாம ஹைப் ஏத்தும் படக்குழு!…

0

அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் என்றே சொல்லப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்தநிலையில்தான் குட் பேட் அக்லி டீசர் வீடியோ வெளியாகி அவர்களை சந்தோஷப்பட வைத்தது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது அனைத்தும் டீசரில் இருந்தது.

டீசர் வீடியோவை பார்த்தபோது பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக குட் பேட் அக்லி இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் குட் பேட் அக்லி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பல வருடங்களுக்கு பின் அஜித்தின் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதிலும், 2வதாக வெளிவந்த God Bless you பாடல் சிறையில் அஜித் பாடும் பாடல் போல படம் பிடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் 3வது பாடல் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளதாம். படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் பற்றிய தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது படக்குழு. பொதுவாக அஜித் படம் என்றால் ஒரு அப்டேட்டும் இருக்காது. வலிமை படத்திற்கெல்லாம் அப்டேட்டு கேட்டு ஓய்ந்தே போனார்கள் ரசிகர்கள். அதேபோல், விடாமுயற்சி படத்திற்க்கும் பெரிதாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், குட் பேட் அக்லிக்கு தொடர் அப்டேட்டுகள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

இரும்பினாலே ஆபத்து.. புதிய வகை வைரஸ் பரவல்!! இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை!!

0

Virus: புதிய வகை வைரஸானது ரஷ்ய நாட்டில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலினால் அதிக உடல் சூடு ஏற்பட்டு தொடர் இருமல் உண்டாகுகிறதாம். அப்படி இருக்கும் போது ரத்த வாந்தி எடுப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதனை ரஷ்ய நாடானது தொடர்ந்து மறைத்து வருவதாக உலகளாவிய தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாகவே கொரோனா என்ற தொற்றால் பேரழிவை சந்தித்த நாடுகள் தற்போது வரை பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மீள முடியாமல் உள்ளனர். மீண்டும் புதிய வகை வைரஸ் ஏதேனும் பரவ தொடங்கினால் அது குறித்து அறிவிப்பை வெளியிடலாம். இதனால் அண்டை நாடுகள் இது ரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க ஏதுவாக இருக்கும்.

இப்படி ரஷ்ய நாடானது தொடர்ந்து மர்ம வைரஸ் குறித்து தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றால் இது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். அப்படி செல்லும் பட்சத்தில் கட்டாயம் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதேபோல இந்த மர்மமான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்றே தோன்றுகிறதாம். இதனால் குழப்ப நிலையில் இதர நாடுகள் உள்ளன.

மேற்கொண்டு இந்த வைரஸ் பாதித்தால் இந்த அறிகுறிகள் மட்டுமின்றி வேறு சில அறிகுறிகளும் உள்ளதாம். படுத்தால் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் போகும் அளவிற்கு உடல் வலி ஏற்படுமாம். இது போல தான் ரஷ்யாவில் அலெக்சாண்டுரா என்ற பெண்ணுக்கு இந்த பாதிப்பு இருந்தது குறித்து தகவல்கள் பரவி வந்துள்ளது. ஆனால் ரஷ்ய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு வைரஸும் பரவவில்லை, இது ரீதியாக பொய் தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

GV பிரகாஷ் வுடன் டேட்டிங்.. முக்கிய போஸ்ட் போட்ட திவ்ய பாரதி!! சைந்தவியை Divorce செய்ய இதுதான் காரணமா??

0

Cinema Talkies: தமிழ் திரையுலகில் தற்பொழுது விவாகரத்து ரீதியான வழக்கு அதிகரித்து வருகிறது. தனுஷ் ஐஸ்வர்யா என ஆரம்பித்து தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் வரை அனைவரும் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு முக்கிய காரணம் பேச்சுலர் பட நடிகையான திவ்யபாரதி தான் எனக் கூறுகின்றனர்.

இந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி இருவரும் நெருக்கமாக நடித்திருப்பர். அதை வைத்து பலரும் இந்த தகவலை பரப்பி வருகின்றனர். அப்படி பரப்பி வருகின்றவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திவ்யா பாரதி தனது இன்ஸடாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கும் ஜிவி பிரகாஷ் சைந்தவி விவகாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. குறிப்பாக நான் திருமணமான ஆணுடன் கட்டாயம் டேட்டிங் செய்ய மாட்டேன். இவ்வளவு நாட்கள் ஆதாரமற்ற ஒரு தகவலை வைத்து பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன்.

தற்பொழுது இது எல்லையை கடந்து விட்டது. இது மாதிரியான ஆதாரமற்ற தகவல்களால் எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாகிறது. இப்படி தேவையற்ற வதந்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள். இது தொடர்பாக நான் கூறும் முதல் மற்றும் கடைசி அறிக்கை இதுதான் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை கதற விடப்போகும் டிரம்ப்.. கடும் சரிவை சந்திக்கும் டாப் 5 துறைகள்!!

0

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை கொடுத்து வருகிறார். வரியை நீங்கள் உயர்த்தும் பட்சத்தில் அதற்குரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறினார். அதேபோல தற்பொழுது 5 துறைகளுக்கு கடுமையான வரியை விதிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ், இரண்டாவதாக நகை மற்றும் ரத்தின கற்கள் மூன்றாவதாக மருத்துவத்துறை நான்காவதாக கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஐந்தாவதாக டெக்ஸ்டைல் துறை இவை அனைத்திலும் 10% அதிகமான வரி ஏய்ப்பு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் எனக் கூறியுள்ளனர். அப்படி மருத்துவத் துறையில் வரி அதிகரிப்பு செய்தால் 50% அமெரிக்காவில் இறக்குமதி செய்வது நம்முடைய மருந்துகள் தான். அப்படி இருக்கும் பட்சத்தில் இது பெரும் இழப்பை சந்திக்கும். டிரம்ப் விதிக்கும் இந்த வரியால் ஒவ்வொரு மருந்தின் விலையும் அதிகரிக்க தொடங்கும். மேற்கொண்டு இது ரீதியாக நடத்திய ஆய்வில் 10% இருக்கும் கீழ் வரி விதிக்கும் பட்சத்தில் சமாளிக்க முடியும் என்றும் அதற்கு மேல் வரிவிதித்தால் கட்டாயம் மருத்துவத்துறையில் பெருமளவு இழப்பீடு சந்திக்க நேரிடும் என கூறியுள்ளனர்.

இரண்டாவதாக மின்னணு சாதனங்களில் வரி ஏய்ப்பு:

நமது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 32 சதவீதம் அளவில் மின்னணு சாதன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்பொழுது வரி அதிகரிக்கும் பட்சத்தில் அமெரிக்கா இந்தியா இறக்குமதியை தவிர்த்து விட்டு ஜப்பான், சீனா தயாரிப்பு இறக்குமதிகளுக்கு அனுமதி அளித்து விடும். அந்த வகையில் மின்னணு சாதன ரீதியாக வேலை இழப்பும் ஏற்படும்.

அதேபோல நகை இறக்குமதியிலும் 30 சதவீதம் இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது இதனையும் அமெரிக்கா தவிர்த்து விட்டு சிங்கப்பூர் ஓமன் போன்ற நாடுகளிலிருந்து நகையை வாங்க ஆரம்பித்து விடும். இதனால், நகை தயாரிப்பாளர்கள் என தொடங்கி பெரும் வேலை இழப்பை சந்திக்க கூடும். இதேபோல கார் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரித்தல், ஆடைகள் உற்பத்தி துறை என அனைத்தும் பெருமளவில் அடிவாங்க கூடும் எனக் கூறுகின்றனர். இது ரீதியாக இன்று அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் அதனை வைத்து எதில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.