Home Blog Page 337

குங்குமம் கயிறு இதெல்லாம் சங்கிகள் தான் போடுவாங்க.. திமுக காரன் போட மாட்டான்!! போடவும் கூடாது- ஆ ராசா போட்ட கண்டிஷன்!!

0

DMK: திமுக நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆ . ராசா நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாஜகவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாணவர் அணி சார்பில் நீலகிரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆ ராசா கலந்து கொண்டார்.

அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியதாவது, சாமி எல்லாம் கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை தேவைப்படுவோர் வைத்து கும்பிடலாம், ஆனால் திமுக காரர்கள் பொட்டு வைத்து கரை வைத்த வேட்டி கட்டுவது அப்படியே சங்கீகள் போல் உள்ளது. நீங்களும் கயிறு கட்டுகிறீர்கள் சங்கிகளும் கயிறு கட்டுகிறார்கள் இதில் யார் திமுக காரன் என்ற வித்தியாசம் தெரிவதில்லை. அதனால் இனி வரும் நாட்களில் திமுக காரன் கரை வைத்த வேட்டி கட்டினால் பொட்டு வைக்க வேண்டாம்.

உங்கள் தாய் தந்தையார் விபூதி வைத்து விட்டால் வைத்துக் கொள்ளுங்கள். இதனை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் பொழுது குறிப்பாக திமுக வேட்டி கட்டும் பட்சத்தில் கட்டாயம் அதன் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை கடைபிடிக்காமல் போனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அழிந்துவிடும். அப்படிதான் தற்போது அதிமுக உள்ளது. எடப்பாடி தங்களின் அரசியல் கொள்கையை பின்பற்றுவதில்லை என இவர் கூறிய வீடியோவானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குங்குமம் வைப்பது கயிறு கட்டுவது என தனிப்பட்ட சுதந்திரத்தை அதிகார நோக்கில் பறிப்பதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அட்லியிடம் சன் பிக்சர்ஸ் போட்ட டீல்!.. அதனாலதான் படமே டேக் ஆப் ஆகுதாம்!..

0

Allu arjun: ஷங்கரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அட்லி. நண்பன் படம் உருவாகும்போது விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அடுத்து விஜயை வைத்து தெறி படத்த இயக்கினார். அட்லி படமெடுக்கும் ஸ்டைல் விஜய்க்கு பிடித்துப்போனதால் அட்லி இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களிலும் நடித்தார்.

ஏற்கனவே ஹிட் அடித்த பழைய தமிழ் படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் துவக்கம் முதலே அவர் மீது இருக்கிறது. ஆனால், அட்லி இதற்கெல்லாம் பதில் சொல்வது இல்லை. படத்திற்கு படம் அவரின் சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது.

பிகில் படத்திற்கு பின் ஷாருக்கான் அழைத்தார். எனவே, பாலிவுட்டுக்கு போய் ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, பாலிவுட்டிலும் அட்லிக்கு மவுசு கூடியது. எனவே, சல்மான்கானை வைத்து ஒரு படம் பேசப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.

எனவே, அல்லு அர்ஜுன் பக்கம் போனார் அட்லி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் கேட்ட சம்பளத்தில் ஆடிப்போன சன்பிக்சர்ஸ் பின் வாங்கியது. அதன்பின் வேறு சில தயாரிப்பாளர்களை தேடினார்கள். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது உறுதியாகியிருக்கிறது. ஏனெனில், அட்லி மற்றும் அல்லு அர்ஜூனுக்கு சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என பேசப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 8ம் தேதி வெளியாகிறது. ஏனெனில் அன்று அல்லு அர்ஜூன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயரை மாற்றும் அல்லு அர்ஜூன்!.. நல்லாத்தான போய்ட்ருக்கு!…

0

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரை ஸ்டைலீஷ் ஸ்டார் எனவும், ஐகான் ஸ்டார் எனவும் ஆந்திர ரசிகர்கள் அழைக்கிறார்கள். 2003ம் வருடம் உருவான கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜூன் நடிக்க துவங்கினார். அல்லு அர்ஜுன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர், தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

இவரின் அப்பா அல்லு அர்விந்த் தெலுங்கு சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக இருந்தார். எனவே, துவக்கத்தில் மகனை வைத்து திரைப்படங்களை தயாரித்தார். காதல் கதைகளில் நடிக்க துவங்கி அதன்பின் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறினார். பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

இவருக்கென ஆந்திராவில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் நடிப்பில் உருவான புஷ்பா படம் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ஹிட் அடிக்கவே புஷ்பா 2 படம் உருவானது. இந்த படமும் பல மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 1700 கோடி வசூல் செய்து இந்திய அளவில் சாதனை செய்துவிட்டது.

அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளார். பாலிவுட்டில் ஜவான் எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின் அட்லி இயக்கும் படம் இது. இந்த படத்தின் அறிவிப்பு அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் தனது பெயரில் சில மாற்றங்களை செய்யவிருக்கிறாராம். அது என்ன என்பது வருகிற 8, தேதி வெளியாகும் அறிவிப்பில் தெரிய வரும். சினிமா உலகில் நியூமராலஜி செண்டிமெண்ட் அதிகம் உண்டு. அதன்படியே அவர் பெயரை மாற்றி இருப்பார் என சொல்லப்படுகிறது.

சாகும் வரை மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்காமல் இருக்க.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!!

0

மூட்டு பகுதியில் வலி வீக்கம் வருதல்,இடுப்பு வலித்தல்,முதுகு பகுதியில் வலி வருதல் போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர்.எலும்புகளின் அடர்த்தி குறைதல்,எலும்பு தேய்மானமாதல் போன்ற காரணங்களால் சிறிய வயதிலேயே இதுபோன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி பாதிப்பு வராமல் இருக்க இந்த பானம் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)கேழ்வரகு மாவு – 100 கிராம்
2)பாதாம் பருப்பு – இரண்டு தேக்கரண்டி
3)முந்திரி பருப்பு – இரண்டு தேக்கரண்டி
4)பனங்கற்கண்டு – 25 கிராம்
5)பசும் பால் – ஒரு கப்
6)பேரிச்சம் பழம் – இரண்டு
7)ஆப்பிள் பழம் – ஒன்று
8)தாமரை விதை – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கேழ்வரகு எடுத்து வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து சல்லடை கொண்டு சலித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து தாமரை விதை 25 கிராம்,இரண்டு தேக்கரண்டி பாதாம் பருப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி முந்திரி பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.

3.பிறகு ஒரு ஆப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரம் ஒன்றில் கேழ்வரகு மாவை கொட்டி தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.கேழ்வரகு கூழ் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

4.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு கலவையை அதில் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு பேரிச்சம் பழம் மற்றும் காய்ச்சாத பசும் பால்,இனிப்பு சுவை தேவைப்பட்டால் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த பானத்தை காலை நேரத்தில் டீ குடிக்கு மாற்றதாக குடித்து வந்தால்சாகும் வரை மூட்டு வலி தொந்தரவை சந்திக்க மாட்டீங்க.

குழந்தை புஷ்டியாக வளர.. குடிக்கும் பாலில் இந்த சத்து பவுடர் கலந்து கொடுங்க!!

0

உங்கள் குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நீங்கள் வீட்டிலேயே ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து குடிக்க வைக்கலாம்.இங்கு சொல்லப்பட்டுள்ள ஊட்டச்சத்து பவுடர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,எலும்பு வலிமை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பவுடர்:

பாதாம் பருப்பு – 100 கிராம்
முந்திரி பருப்பு – 100 கிராம்
வால்நட் – 50 கிராம்
பிஸ்தா – 50 கிராம்
முழு கோதுமை – 100 கிராம்
தாமரை விதை – 50 கிராம்
பாதாம் பிசின் – இரண்டு தேக்கரண்டி
பசும் பால் – ஒரு கப்
மிளகுத் தூள் – சிட்டிகை அளவு
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

முதலில் 100 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு மற்றும் 100 கிராம் அளவிற்கு முந்திரி பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை இரும்பு வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.நல்ல வாசனை வந்ததும் இதனை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து 50 கிராம் வால்நட் மற்றும் 50 கிராம் பிஸ்தா பருப்பை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை பாதாம் பருப்பு தட்டில் கொட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு முழு கோதுமை,தாமரை விதை ஆகியவற்றை தனித் தனியாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைக்க வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த பொருட்களை போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த சத்து பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பாதாம் பிசின் போட்டு தண்ணீர் ஊற்றி நான்றாக ஊறவைக்க வேண்டும்.

அதன் பின்பு பாத்திரத்தில் ஒரு கப் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இரண்டு மிளகை தட்டி பாலில் போட வேண்டும்.அடுத்ததாக சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் சேர்க்க வேண்டும்.பின்னர் தயாரித்து வைத்துள்ள சத்து பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கிளாஸில் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதில் கொதிக்க வைத்த பாலை ஊற்றி இனிப்பு சுவைக்காக நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்க உடல் எடை அதிகமாகும்.

24 மணி நேரமும் கால் வலியா இருக்கா? அரிசி ஒத்தடம் கொடுத்தால் வலி தானாக குறைந்துவிடும்!!

0

உங்களுக்கு தீராத கால் வலி இருந்தால் அதற்கு வீட்டு வைத்தியத்தின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும்.கால் தசை பிடிப்பு,சர்க்கரை நோய்,நரம்பு அடைப்பு,கால்சியம் குறைபாடு,வயது முதுமை காரணங்களால் கால் வலி,வீக்கம் ஏற்படுகிறது.

தீர்வு 01:

மஞ்சள் தூள்

பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.சிறிது மஞ்சள் தூளை அதில் போட்டு காலை வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.

அதன் பிறகு கால்களுக்கு இதமான மசாஜ் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் கால் பகுதியில் ஏற்பட்ட வலி குறையும்.

தீர்வு 02:

கல் உப்பு

பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் சிறிது கல் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து கால்களை அதில் வைத்து அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.

இப்படி செய்தால் கால் வலி,கால் வீக்கம் குறைவதோடு இனி இந்த பிரச்சனை வராமல் இருக்கும்.

தீர்வு 03:

வைட்டமின் சி பானம்

எலுமிச்சை,ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களை ஜூஸாக குடித்து வந்தால் கால் வலி குறையும்.

தீர்வு 04:

சூடு தண்ணீர்

ஒரு கப்பில் சூடு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் காட்டன் துணியை போட்டு
ஊறவைக்க வேண்டும்.இதை பிழிந்து கால் வீக்கம்,வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் நிரந்தர பலன் கிடைக்கும்.

தீர்வு 05:

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கால்களை அதில் ஊறவைக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் கால் வலி காணாமல் போகும்.

தீர்வு 06:

அரிசி ஒத்தடம்

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கால் கைப்பிடி அரிசி போட்டு சிறிது நேரம் வறுக்க வேண்டும்.பிறகு இதை காட்டன் துணியில் கொட்டி முடிந்து கால் பகுதியில் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நாள்பட்ட உலர்ந்த மலம் இளகி வெளியேற.. இரவு தூங்கும் முன் இதை ஒரு ஸ்பூன் குடிங்க!!

0

நமது குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.எனவே குடல் கழிவுகளை அகற்ற இந்த சிறந்த சித்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க.

தீர்வு 01:

சீரகத் தண்ணீர்

செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற தினமும் சீரகத் தண்ணீர் பருக வேண்டும்.உட்கொள்ளும் உணவு செரித்த பின்னர் குடலில் உள்ள கழிவுகள் ஆசனவாய் வழியாக வெளியேற வேண்டும்.

இந்த செயல்முறை நன்றாக நடக்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் மொத்தமும் பாதிக்கப்பட்டுவிடும்.இந்த கழிவுகள் நீண்ட நாட்களாக குடலில் தேங்கி இருந்தால் மலச்சிக்கல்,பைல்ஸ்,கேஸ்ட்ரபுள் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

எனவே குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்க உணவு உட்கொள்வதற்கு முன் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் மற்றும் உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

தீர்வு 02:

விளக்கெண்ணெய்

குடல் ஆரோக்கியத்தை காக்கும் காவலனாக விளக்கெண்ணெய் இருக்கின்றது.விளக்கெண்ணெய் குடித்தால் குடலில் கழிவுகளே தங்காது.நீண்ட நாட்களாக வராமல் அடம் பிடிக்கும் இறுகிய மலக் கழிவுகள் இளகி வெளியேற இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் குடிக்க வேண்டும்.இரவில் விளக்கெண்ணெய் குடித்தால் அதிகாலை நேரத்தில் மலம் வெளியேற்ற தானாக தூக்கம் தெளிந்துவிடும்.

தீர்வு 03:

லெமன் சாறு

குடலை சுத்தப்படுத்துவதில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.இந்த எலுமிச்சம் பழத்தின் சாறை வெது வெதுப்பான தண்ணீர் கலந்து குடித்தால் மலக் கழிவுகள் சீக்கிரம் வெளியேறிவிடும்.வெறும் வெது வெதுப்பான தண்ணீரை இரவில் குடித்தாலே காலையில் மலக் கழிவுகள் முந்திக் கொண்டு வெளியேறும்.

தீர்வு 04:

உப்பு

ஒரு கப் சூடான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு கரைக்க வேண்டும்.இந்த தண்ணீரை குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் நாள்பட்ட கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்.

உங்கள் விந்து தரம் தெரியணுமா? அப்போ ஒரு கிளாஸில் தண்ணீரில் விந்துவை ஊற்றி இப்படி செய்யுங்கள்!!

0

ஆண்களுக்கு விந்து உற்பத்தி ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.விந்து தரம் நன்றாக இருந்தால்தான் குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் தற்பொழுது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பெரிய சிக்கலே விந்தணு குறைபாடுதான்.

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைவாதல் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது.மோசமான வாழ்க்கைமுறை,மன அழுத்தம்,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் விந்தணு குறைபாடு அதிகரித்து வருகிறது.நீர்த்த விந்து,குறைவான விந்து,ஆரோக்கியம் இல்லாத விந்து தரத்தை ஆரம்பத்தில் கண்டறிந்து தீர்வு காணலாம்.

ஆண்கள் தங்கள் விந்து தரம் பற்றி அறிந்து கொள்ள சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.உங்கள் விந்துவின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிய தண்ணீர் மட்டும் போதுமானது.ஒரு கிளாஸில் நல்ல தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் உங்கள் விந்துவைவிட வேண்டும்.விந்தானது தண்ணீரின் கீழ்மட்டத்தை நோக்கி வேகமாக சென்றால் அது ஆரோக்கியமான விந்து என்று அர்த்தம்.விந்தணு தரம் நன்றாக இருக்கின்றது என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அதுவே உங்கள் விந்து தண்ணீரின் மேற்பரப்பில் நின்று கரைந்தால் அது ஆரோக்கியம் இல்லாத விந்து என்று அர்த்தம்.ஆரோக்கியமான விந்து தண்ணீருக்கு அடியில் தங்கும்.அதுவே ஆரோக்கியம் இல்லாத விந்து தண்ணீரின் மேற்பரப்பில் கரைந்துவிடும்.

உங்கள் விந்து தரத்தை அதிகரிக்கசித்த வைத்தியத்தை பின்பற்றலாம்.முருங்கை பிசின்,பாதாம் பிசின் போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்த சாப்பிடலாம்.பாலில் பாதாம் விழுது கலந்து குடிக்கலாம்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

முருங்கை பருப்பு மற்றும் தாமரை விதையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.பூசணி விதையை வறுத்து பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.பச்சை பயறை ஊறவைத்து முளைகட்டி சாப்பிடலாம்.அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.இப்படி செய்தால் விந்து தரம் மேம்படும்.

மாத்தி யோசிங்க.. தண்ணீரில் ஒரு பின்ச் உப்பு சேர்த்துக் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

0

நம் அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ளும் முக்கிய பொருள் உப்பு.உணவில் உப்பு சுவை இல்லை என்றால் வாயில் வைக்க முடியாது.ஒரு உணவு சுவையை நிர்ணயிப்பதில் உப்பிற்கு முக்கிய பங்குண்டு.இந்த உப்பில் சோடியம் நிறைந்திருக்கிறது.

இந்த உப்பை தண்ணீரில் கலந்தால் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.இந்த உப்பு நீரை குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உப்பு கலந்த நீர் பருகினால் எலக்ட்ரோலைட் சமநிலை அடையும்.

உப்பு கலந்த நீரை பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் குடிக்கும் நீரில் உப்பு கலந்து கொண்டால் சீக்கிரமாக வலி நீங்கும்.உப்பு கலந்த நீரை குடித்தால் சருமப் பிரச்சனைகள் குறையும்.

தோல் பொலிவுபெற உப்பு நீர் பருகலாம்.முகப்பரு,தோல் தடிப்பு,தோல் அரிப்பு பிரச்சனை நீங்க தண்ணீரில் உப்பு கலந்து குடிக்கலாம்.செரிமான சக்தி அதிகரிக்க உப்பு நீர் பருகலாம்.உப்பு கலந்த நீர் குடிப்பதால் உடலில் pH சமநிலையில் இருக்கும்.

தினமும் காலையில் ஒரு கிளாஸ் உப்பு நீர் பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.உங்கள் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்க உப்பு நீர் பருகலாம்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைய உப்பு கலந்த தண்ணீர் பருகலாம்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உப்பு கலந்த தண்ணீர் குடிக்கலாம்.வயிற்றில் உள்ள கழிவுகள் அகல உப்பு கலந்த நீர் பருகலாம்.உப்பு கலந்த நீர் பருகினால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

தொண்டையில் உள்ள தொற்றுக் கிருமிகள் அழிய உப்பு கலந்த தண்ணீர் குடிக்கலாம்.பல் ஆரோக்கியம் மேம்பட உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.உப்பு நீரை குடித்தால் சளி,அலர்ஜி போன்ற பாதிப்புகள் குணமாகும்.சுவாசப் பிரச்சனைகள் அனைத்திற்கும் உப்பு கலந்த நீர் தீர்வாக திகழ்கிறது.குறை இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.உப்பு கலந்த நீர் குடித்தால் உடலில் புத்துணர்வு அதிகரிக்கும்.

இந்த கலர் முட்டைக்கோஸை ஜூஸாக அரைத்து குடித்தால.. உடலில் எந்த நோய் குணமாகும்?

0

நாம் சாப்பிடும் சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஏகப்பட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது.முட்டைக்கோஸில் வைட்டமின் கே,வைட்டமின் சி,நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டைகோஸ் இலையை அரைத்து ஜூஸாக பருகினால் உடலில் பல நோய்கள் குணமாகும்.

இதில் பர்பிள் கலர் முட்டைகோஸ் இலைகளில் ஜூஸ் செய்து குடித்தால் இன்னும் நல்லது.முட்டைக்கோஸ் ஜூஸ் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முட்டைக்கோஸ் இலைச்சாறு பருகலாம்.

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக முட்டைக்கோஸ் இலையை அரைத்து காலை நேரத்தில் ஜூஸாக செய்து பருகலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் முட்டைக்கோஸ் இலைக்கு உண்டு.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைய முட்டைக்கோஸ் சாறு குடிக்கலாம்.

முட்டைக்கோஸ் இலை சாறு குடித்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.முட்டைக்கோஸில் இருக்கின்ற வைட்டமின் கே எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.முட்டைக்கோஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.

உடலில் சர்க்கரை நோய்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாக முட்டைக்கோஸ் சாறு செய்து குடிக்கலாம்.முட்டைக்கோஸில் புரதச்சத்து,வைட்டமின் சி போன்றவை நிறைந்து காணப்படுகிறது.முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் சூடு,தலைமுடி உதிர்வு போன்ற பாதிப்புகள் குணமாகும்.முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்தால் இளமையாக இருக்கலாம்.முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வந்தால் சரும சுருக்கங்கள் நீங்கி இளமையாக இருக்கலாம்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகல முட்டைக்கோஸ் சாறு செய்து குடிக்கலாம்.