Home Blog Page 348

பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி போன செங்கோட்டையன்!.. ஒரு முடிவோடதான் இருக்காய்ங்க!…

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் காண் துவங்கியது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். சமீத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார்.

அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்வதற்கு முன்பே செங்கோட்டையன் கலந்துகொண்டு போய்விட்டார்.

மேலும், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதையும் செங்கோட்டையன் தவிர்த்தார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. அதோடு, வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இதுபற்றி பழனிச்சாமியிடம் செய்தியாளர் கேட்டதற்கு ‘இதை செங்கோட்டையனிடமே கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?’ என கோபப்பட்டார். கொங்கு பெல்ட் என சொல்லப்படும் கொங்கு மண்டலம் செங்கோட்டையன் கையில் இருக்கிறது. அவர் பழனிச்சாமியை எதிர்த்தால் அங்கு அதிமுக வாக்கு வங்கி பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் பேசினார்கள். ஆனால், அதன்பினி அவை நடந்தபோது பழனிச்சாமியிடம் நெருக்கம் காண்பித்தார் பழனிச்சாமி.

இந்நிலையில், செங்கோட்டையன் டெல்லிக்கு ரகசியமாக சென்று அமித்ஷாவை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவந்திருக்கிறது. மதுரையிலிருந்து டில்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷாவிடம்ன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். திமுக ஆட்சி மீது மக்களுக்கு உள்ள எண்ணம், அதிமுகவிற்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயெல்லாம் எங்களுக்கு போட்டியா?!. நோ.. நோ.. சான்சே இல்ல!. கனிமொழி பதிலடி!..

0

TVK DMK: விஜய் மேடைகளில் பேசுவதை பார்க்கும்போது கட்சி ஆரம்பித்ததே அவர் திமுகவை தோற்கடிப்பதற்காகத்தான் என தோன்றுகிறது. ஏனெனில், எந்த மேடையில் அவர் நாம் தமிழர் கட்சியையோ, அதிமுகவையோ, காங்கிரசையோ, பாஜகவையோ திட்டுவது இல்லை. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் திமுகவை திட்டினார் விஜய். திமுகவை மன்னராட்சி என விமர்சித்தார்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

மக்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டால் ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாக பறக்கும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டின் சகோதரிகள்தான் திமுகவின் அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். மன்னராட்சி முடிவுக்கு வரும்’ என பேசினார். அதோடு, ‘எங்களை பார்த்து பயம் இல்லையென்றால் ஏன் நாங்கள் மக்களை சந்திப்பதை தடுக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுகும், திமுகவுக்கும் இடையேதான் போட்டியே’ என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், விஜய் பேசியது செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேட்டபோது ‘எல்லோரும் திமுகவையே போட்டியாக நினைக்கிறார்கள். உண்மையில் திமுகவிற்கு போட்டியாக யாருமே இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது’ என பேசியிருக்கிறார்.

வக்பு சொத்து என்கிற பெயரில் இப்படியொரு மோசடி நடக்கிறது: பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா பகீர் தகவல்!

0

பா.ஜ. மூத்த தலைவர் எச். ராஜா தமிழகத்தில் வக்பு வாரிய சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, அது ஹிந்து கோவில்களின் சொத்துக்களையும் ஏழை, எளிய மக்களின் நிலங்களையும் அபகரிக்கச் செய்யும் விதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பினார். 1996ம் ஆண்டு வரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் 4 லட்சம் ஏக்கர் அளவிலிருந்த நிலையில், தற்போது அது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதை விளக்குகிறது. மேலும், இந்த நிலங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புடையவை என்பதால், இது பொதுமக்கள் சொத்துக்களை முறைகேடாகக் கைப்பற்றுவதாக இருக்கிறது.

இந்த நிலங்களை மீட்டெடுத்து, ஏழை, எளிய முஸ்லிம் மக்களுக்கே வழங்க வேண்டியது மிக முக்கியம். ஏனெனில், வக்பு சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது. அவர் மேலும் கூறுகையில், “வக்பு சொத்துக்கள் இல்லையென்றால், உங்களுக்காகவே நான் போராட தயாராக இருக்கிறேன்” என்று முஸ்லிம் சமூகத்துக்கு உறுதியளித்தார். இருப்பினும், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தில் கலெக்டர் விசாரணை நடத்தி, நில விவகாரங்களை தீர்ப்பது என்பது தவறானது அல்ல. இது ஒரு நீதியுரிமை, ஏனெனில் அனைத்து நிலங்களும் கணக்கில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய தமிழக அரசு இதனை தவறாக எடுத்துக்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

முஸ்லிம் சகோதரர்கள், தமிழக அரசின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், 2026 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஒருநாள் கூட இந்த அரசு இருக்காது எனவும் அவர் தெரிவித்தார். இதனால், அரசின் நிலைப்பாடு வெறும் அரசியல் நோக்கத்திற்காக இருந்திருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய தமிழக அரசு முஸ்லிம் மக்களை ஏமாற்றும் விதமாக செயல்பட்டு வருகிறது, ஆனால், ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், ஹிந்து கோவில்களின் சொத்துக்களை வக்பு வாரியம் எடுக்க முடியாது.

இதனுடன், தமிழகத்தில் வக்பு வாரிய நில உரிமைகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சில இடங்களில் தனியார் சொத்துக்களையும், அரசு நிலங்களையும் வக்பு வாரிய சொத்துகளாக அறிவிக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. சில ஊர்களில், பல தலைமுறைகளாக குடும்பங்களுக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக மாற்றப்பட்டிருக்கிறது என மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடியது, வக்பு வாரிய நில உரிமைகள் தொடர்பாக சரியான ஆய்வு செய்யப்பட வேண்டும். அனைத்து சமூகத்தினருக்கும் சமத்துவமான அணுகுமுறையுடன் நிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஏமாற்றும் விதமாக வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். எனவே, முஸ்லிம் சமூகத்தினரே இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளை புரிந்துகொண்டு, உண்மையான நியாயம் நிலைநாட்டப்படுவதற்காக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விஜய்க்கு தில்லு இருந்தா இத பத்தி பேசட்டும்!.. தவெகவை பொளந்த புளூசட்ட மாறன்!…

0

சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள். எனவே, அதிமுகவுடன் பாஜக கூட்டணை அமைக்கிறது என பலரும் பேசினார்கள்.

ஆனால் ‘மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி  ஆனால், இன்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா ‘அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது.

eps

இந்நிலையில், விஜயின் அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் யுடியூபர் மற்றும் சினிமா விமர்சகருமான புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் அமித்ஷா சொன்ன தகவலை பதிவிட்டு ‘உண்மையான பாசிசமும், பாயாசமும்… 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக. பிரச்சார நேரத்தில்..மசூதி வாசல்களில் நின்று வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக அமைச்சர்கள் உட்பட அனைவரையும் விரட்டி அடித்தனர் இஸ்லாமியர்கள். அதிமுக தேர்தலில் தோற்றது.

இப்போது சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல. விஜய்க்கு உண்மையாகவே திராணி இருந்தால் இதை விமர்சிக்க வேண்டும். ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை. அதிமுக பாயாசம் என்றால் NDA எனும் பாயாச அண்டாவில் மிதக்கும் ஜவ்வரிசிதான் இந்த தவெக‌’ என பதிவிட்டிருக்கிறார்.

விஜயகாந்தை பெல்ட்டால் அடித்தேன்!.. ஷாக்கிங் நியூஸ் சொல்லி அதிரவைத்த ராதாரவி!…

0

Viijayakanth: சினிமாவில் எந்த பின்னணி இல்லாமல் நுழைந்து முன்னேறியவர்தான் விஜயகாந்த். மதுரையில் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்துக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் தாண்டியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

துவக்கத்தில் தடுமாறினாலும் விஜயின் அப்பா எஸ்.கே.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அந்த ஹிட்டை தக்க வைத்துக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையவில்லை. அதன்பின் மீண்டும் எஸ்.ஏ.சி சந்திரசேகர் இயக்கிய சாட்சி படம் ஹிட் அடித்தது. சினிமாவில் ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். விஜயகாந்தை வைத்து ஆக்சன் படங்கள் எடுக்கலாம் என்கிற நம்பிக்கை இயக்குனர்களுக்கு வந்தது.

ஆக்சன் ஹீரோவாக நடித்து கொண்டிருந்த விஜயகாந்துக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்து அவரால் நடிக்கவும் முடியும் என ரசிகர்களுக்கு காட்டினார். அப்படி அவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் போன்ற எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான ராதாரவி ’வைதேகி காத்திருந்தாள் படத்தில் நான் விஜயகாந்தை பெல்ட்டால் அடிப்பது போல காட்சி. விஜயகாந்த் அப்பவே பெரிய ஆக்‌ஷன் ஹீரோ. எனவே, அவரை எப்படி அடிப்பது என தயங்கினேன். ஆனால், விஜயகாந்தோ ‘நீ எதையும் யோசிக்காத.. நீ அடி’ என அடிக்க சொன்னார். விஜயகாந்துடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு என வந்துவிட்டால் விஜயகாந்த் எதையுமே யோசிக்கமாட்டார். இயக்குனர் என்ன சொன்னாலும் அதை செய்துவிடுவார்’ என பகிர்ந்துகொண்டார்.

அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே!…

0

கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அதிமுக. ஆனால், தேர்தலில் தோல்வி அடையவே இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை.

அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள்.. சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசனை செய்தனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி வேறு மாதிரி சொன்னார்.

eps

மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி சொல்வது பொய்.. பாஜகவுடன் வேறென்ன பேசியிருக்க போகிறார்கள்? என திமுகவினர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா ‘அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது.

அடுத்த முதல்வர் பட்டியலில் விஜய்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!…

0

Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.

அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள்.

vijay

அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பில் விஜயும் இடம் பிடித்திருக்கிறார். சி-வோட்டர் என்கிற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீத வாக்குகளை பெற்று மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் இருக்க, 18 சதவீத இடத்தை பிடித்து விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும், 10 சதவீத இடத்தை பிடித்து எடப்பாடி பழனிச்சாமி 3வது இடத்திலும், 9 சதவீத வாக்குகளை பெற்று பாஜக தலைவர் அண்ணாமலை 4வது இடத்திலும் இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒரே ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம்.

பந்தாடப்படும் பெண் அதிகாரி: நேர்மையா இருந்தாவே இப்படி தான் செய்வாங்களா?

0

திருநெல்வேலி மாநகராட்சியில் ஊழல் விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால், சிவகாசி நகராட்சிக்கு மாற்றப்பட்ட நகர்நல அலுவலர் சரோஜா, தற்போது மேலும் ஒரு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்ததற்காக, பணியிலிருந்து ஒதுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி, 2022 ஏப்ரல் மாதம் முதல் துப்புரவுப் பணிகளை ‘ராம் அண்ட் கோ’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஒப்பந்த விதிகளின்படி, 270 பணியாளர்களை நியமித்து, குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டியது. ஆனால், நிறுவனம் போதிய பணியாளர்களை நியமிக்காமல், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன் (ESI, PF) வழங்காமல், மாநகராட்சி வாகனங்களை பராமரிக்காமல், பல விதிமீறல்களை மேற்கொண்டுள்ளது.

இந்த குறைகாணலுக்கு எதிராக நகர்நல அலுவலர் சரோஜா, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரை செய்தார். ஆனால், உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து, 2025 ஜனவரியில் நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், மாநகராட்சியிலும், ஆளுங்கட்சியினரும், ஒப்பந்த நிறுவனமும் சரோஜாவின் மீது அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதன் விளைவாக, அவர் தென்காசி நகராட்சிக்கு மாற்றப்பட்டார்.

இதற்கு முன்பு, திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்தபோது, ஒரே மாதத்தில் 55 லட்சம் ரூபாய் பினாயில் வாங்கிய முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார். இதனால், அங்கிருந்து சிவகாசிக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் பணியிடமின்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதை, ஊழலை எதிர்த்த அதிகாரிகள் மீதான பழிவாங்கலாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

தவெகவுக்கு ஒன்னும் தெரியாது!.. விஜய் தவழும் குழந்தை!.. போட்டு தாக்கும் சேகர்பாபு!…

0

Tamilaga vetrik kalagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் நேற்று காலை நடந்தது.. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள்.

அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

மக்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டால் ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாக பறக்கும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டின் சகோதரிகள்தான் திமுகவின் அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். மன்னராட்சி முடிவுக்கு வரும்’ என பேசினார். அதோடு, ‘எங்களை பார்த்து பயம் இல்லையென்றால் ஏன் நாங்கள் மக்களை சந்திப்பதை தடுக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், விஜய் பேசியது பற்றி திமுக அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தவெக தலைவர் விஜய் ஒரு தவழ்கின்ற குழந்தை.. நாங்கள் பல்வேறு ஒட்டப்பந்தயங்களில் வென்றவர்கள்.. மன்னராட்சி காத்த கரங்கள்.. மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம்.. எங்களாட்சி என்றும் ஆளும். இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.. தவெகவுக்கு சிறை, போராட்டக்களம், ஆர்ப்பாட்டக்களம், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று கூட தெரியாது’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.

தாய்லாந்தில் தொடர் நிலநடுக்கம்!.. மியான்மரில் 163 பேர் பலி!.. ஆப்கானிஸ்தானிலும் எதிரொலி!…

0

இயற்கையின் சீற்றத்தில் கொடூரமானது நிலநடுக்கும். கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் சென்று பலரின் உயிரையும் பலியாக்கிவிடும். உலகிலேயே ஜப்பானில் மட்டுமே அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படும். ஆனால், தற்போது தாய்லாந்து நாடு நிலநடுக்கத்தை சந்தித்திருக்கிறது.

மியான்மரில் நேற்று அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது.

earthquake

அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய கிரேன் கீழே விழுந்தது. கட்டிடத்தின் உச்சியில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் தழும்பி தழும்பி கீழே கொட்டிய வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும், பல கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தது. பாங்காங் நகரத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டது.

earth

இதுவரை 163 பேர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானாலும் இறப்பு எண்ணிக்கை பல நூறாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தாய்லாந்து மியான்மர், பாங்காக் ஆகியவற்றில் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில், தாய்லாந்தில் மட்டுமே 100 பேரும், மியான்மரில் 100 பேரும் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், பல நூறு பேர் காயமடைந்திருக்கிறார்கள். மியான்மர் நாட்டில் இணையசேவை முற்றிலும் முடங்கி இருப்பாதால் அங்கு என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு இந்தியாவும் நிவாரண பொருட்களை அனுப்பவதோடு, மீட்பு பணியிலும் கைகார்க்கவுள்ளது. ஒருபக்கம், இன்று காலை 5.16 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.7 ஆக பதிவாகியிருந்தது.