Home Blog Page 358

“ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

0

முருகனின் உயர்ந்த நாமங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் “ஓம் சரவண பவ” என்ற நாமம். மூல மந்திரமாக உச்சரிக்கக் கூடிய இந்த நாமத்திற்கு பல்வேறு சிறப்புகளும், பொருள்களும் உண்டு. சரவணப் பொய்கையில் முருகன் அவதரித்ததால் சரவணன் என்று பெயர் அவருக்கு வந்தது. சரம் என்றால் ‘தர்ப்பை’ வனம் என்றால் ‘காடு’.சரவண – தர்ப்பை காடு என்று பொருள்.

அத்தகைய தர்ப்பை காட்டில் இயற்கையாக தோன்றிய நீர் நிலையத்தில் அவர் தோன்றியதனால், அந்த நீர் நிலையத்திற்கு ‘சரவண பொய்கை’ என்றும் அதில் அவதரித்த முருகருக்கு ‘சரவணன்’ என்ற பெயரும் வந்தது.

இந்தப் பெயரைக் கொண்டுதான் “ஓம் சரவண பவ” என்ற அழகான நாமமும் முருகனுக்கு உச்சரிக்கப்படுகிறது. பலவிதமான நாமங்கள் முருகனுக்கு இருந்தாலும் கூட, இந்த ஒரு நாமத்தை நாம் உச்சரிப்பதினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? அதனை எவ்வாறு உச்சரிக்க வேண்டும்? என்பது குறித்து தற்போது காண்போம்.

பொதுவாக இந்த “ஓம் சரவண பவ” என்ற நாமம் ஒரு அருங்கோணம் அமைப்பாக அமையும். இந்த அருங்கோணம் அமைப்பில் “ஓம் சரவணபவ என்பதில் இருந்து” ஒவ்வொரு எழுத்தாக நாம் பொருத்தி பார்த்தோம் என்றால் அது ஒரு எந்திரமாக நமக்கு கிடைக்கும்.

இந்த நாமத்தை நாம் கூறும் பொழுது எந்திர சக்தியை, மந்திர சக்தியாக மாற்றி நமக்கு தரும். எனவே இந்த நாமத்தை எந்திர வடிவில் வைத்து வழிபட்டோம் என்றால் அதற்கான சரியான வழிபாடுகளை நாம் கொடுக்க வேண்டும். மாறாக மனதில் நினைத்துக் கொண்டும்,அதாவது நம் மனதில் அந்த மந்திரத்தை எந்திரமாக மாற்றி வைத்து மனதார வேண்டிக் கொண்டோம் என்றாலும் அந்த எந்திரத்திற்கான சக்தி நமக்கு கண்டிப்பாகக் கிடைக்கும்.

“ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களும் ஒவ்வொரு விதமான பொருளையும், சக்தியையும் கொண்டது.

ச -செல்வத்தையும், மங்கலத்தையும் குறிக்கிறது
ர -கல்வியையும், ஒளித்தன்மை நிறைந்தவர் என்பதையும் குறிக்கும்
வ -முக்தியையும், சாத்வீகத் தன்மையையும் பெற்று தரும்
ண-பகையை வெல்லும் திறனை ஏற்படுத்தும்
ப -எம பயத்தை நீக்கும், முருகனின் அருளைத் தரும்
வ -ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக்கூடிய ஒன்று

இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்க தொடங்க வேண்டும், முருகனின் அருளைப் பெற வேண்டும் என நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இதனை தொடங்கலாம்.

செவ்வாய்க்கிழமையில் அதிகாலையில் குளித்துவிட்டு, நெய் தீபம் ஒன்றை முருகனுக்கு ஏற்றிவிட்டு முருகனுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி, செம்பருத்தி இது போன்ற பூக்களை சூட்டி விட்டு 108 முறை இந்த “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை நம் மனதார கூற வேண்டும்.

இவ்வாறு கூறிய பிறகு அந்த முருகனையே நமது குருவாக நினைத்து ‘முருகப்பெருமானே எனக்கு வேண்டிய அனைத்தையும் நீயே தந்தருள வேண்டும்’ என அவரது பாதத்தில் நமது வேண்டுதல்களை வைத்து விட வேண்டும். அதன் பிறகு தீப தூப ஆராதனை காட்டி, ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் வைத்து வழிபாட்டை செய்து கொள்ளலாம்.

இந்த முருகனின் நாமத்தை நமக்கு எப்பொழுது தோன்றுகிறதோ, அந்த நேரங்களில் எல்லாம் நம் மனதில் ஜெபித்துக் கொள்ளலாம். அந்த நாமத்திற்கான பலன் என்பது நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

0

இந்த வழிபாட்டினை பெண்கள் செய்யும் பொழுது அவருடைய கணவரின் உயர்வினை கண்கூடாக காண முடியும். தன்னுடைய கணவர் கடுமையாக உழைக்கிறார் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை, மேலும் அவருக்கான மரியாதையும் கிடைப்பதில்லை என்று எண்ணுகிற பெண்கள், இந்த எளிய வழிபாட்டினை செய்வதன் மூலம் அவருடைய பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர்வதை கண்டிப்பாக காண முடியும்.

தன்னுடைய கணவருக்கு இந்த சமூகத்திலும், உறவினர்களின் மத்தியிலும் எந்த ஒரு அந்தஸ்தும் கிடைப்பதில்லை. அவரை மட்டம் தட்டியே பார்க்கிறார்கள் என்று எண்ணுபவர்கள் இந்த பரிகாரத்தை நிச்சயம் செய்யலாம். ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுதே அதற்கான பலனை உங்களால் உணர முடியும்.

சொந்தமாக தொழில் செய்பவர்களும் அதில் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் செய்தால் போதுமானது.

தனது தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றம் வேண்டும் என நினைக்கக் கூடிய ஆண்கள், பெண்கள் என இருவருமே இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். பிறப்பு, இறப்பு தீட்டு மற்றும் மாதவிடாய் தீட்டு இது போன்ற தீட்டுகள் இருக்கக்கூடிய சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

அசைவம் சாப்பிட்டால் தவறில்லை. இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று செய்து கொள்ளலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய பாத்திரத்தில் கல் உப்பு, படிகார கல் மற்றும் அடுப்புக்கரி ஆகிய மூன்றையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு இந்த மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் வைத்து, உங்களது கணவரோ அல்லது நீங்களோ உறங்கக் கூடிய இடத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை மூடி வைக்கக் கூடாது, திறந்த நிலையில் மட்டுமே வைக்க வேண்டும். இது மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு இதிலிருந்து வரக்கூடிய ஒரு விதமான ஆற்றல்கள் நாம் தூங்கும் பொழுது நமக்கு அருகில் இருந்தால், நேர்மறை ஆற்றல்களை நமக்குள்ளும் நமது வீடு முழுவதிலும் பரவச் செய்யும். மேலும் நமது குடும்பத்தின் மீது இருந்த கண் திருஷ்டிகளும் விலகும். இதனால் முன்னேற்றம் என்பது நிச்சயம் கிடைக்கும்.

இவ்வாறு இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை செய்து வைத்துக் கொண்டால், அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த பொருட்களை மாற்றி விட்டு புதியதாக வேறு பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இதனை முழு நம்பிக்கையுடன் செய்து வைத்துப் பாருங்கள் நிச்சயம் குடும்பம் முன்னேற்றம் மற்றும் கணவருடைய முன்னேற்றம் என்பது நடக்கும்.

தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

0

இந்த வருட சித்திரை 1 தமிழ் வருட பிறப்பானது, விசுவாசுவ தமிழ் புத்தாண்டு என்று கூறப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டானது ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகும் நிலையில், விசுவாசுவ வருடம் பிறக்கும். இதனால் ஏற்படும் யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.

சூரியன் மற்றும் மேஷம் ராசி ஆகிய இரண்டுமே நெருப்பின் அம்சம் கொண்டவை. இத்தகைய சூழ்நிலையில் வலுவாக மேஷம் ராசியில் சூரியன் அமர்ந்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் கொடுக்கப் போகிறார். அந்த அதிர்ஷ்டத்தை பெறப் போகிற ஐந்து ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது காண்போம்.

1. ரிஷப ராசி:

ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன் மிகவும் சுப ஸ்தானத்தில் இருப்பார். உங்கள் பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். திடீர் வருமான உயர்வையும் காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். வாழ்க்கையில் சில பெரிய வெற்றிகளை அடைவீர்கள்.

2. கடகம் ராசி:

கடக ராசியினருக்கு கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி பெறும். தனியார் வேலை செய்பவர்களுக்கு சூரியனின் தாக்கத்தால் பெரிய வாய்ப்பு கிடைக்கும். அதிகாரமும் பதவியும் பெறுவீர்கள். உங்களுக்குப் புகழும் நிறையப் பணமும் கிடைக்கப் போகிறது. கடந்த சில மாதங்களில் உங்களின் கடின உழைப்பின் பலனை இப்போது பெறுவீர்கள்.

3. துலாம் ராசி:

துலாம் ராசிக்கு சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருப்பார். உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். கடந்த சில நாட்களாக திருமண வாழ்க்கையில் பதற்றம் நிலவி வருகிறது. இப்போது அது முடிவடையும். வருமானத்தை பெருக்குவதில் வெற்றி பெறுவீர்கள்.

4. மகரம் ராசி:

மகர ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் என ஆடம்பரம் மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் கிடைக்கும். வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்கலாம். வேலையில் இருப்பவர்களின் செயல்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இந்தக் காலத்தில் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.

5. கும்பம் ராசி:

கும்ப ராசிக்காரர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். உங்கள் பொழுதுபோக்குகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் துணிச்சலான முடிவுகளால் ஆதாயமடைவீர்கள். தடைபட்ட காரியம் அனைத்தும் நிறைவேறும். பண வரவு மூலம் பொருளதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

பிரபாஸ் பட நடிகை தட்டி தூக்கிய ஜேசன் சஞ்சய்!. ஷூட்டிங் வேகமா போகுதாமே..

0

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் வந்து நடனமாடினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பின்னாளில் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனராக மாறிவிட்டர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை சஞ்சய் இயக்குகிறார் என்கிற செய்தி ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது. ஆனால், அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை.

விஜயின் மகன் இயக்குனராகிறார் என்கிற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஒருபக்கம் விஜய் இப்போது தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசித்து வருகிறார்கள். அதோடு, விஜய்க்கும் அவர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், இதுபற்றியெல்லாம் விஜய் விளகக்ம் கொடுப்பதில்லை. இப்போது ஜனநாயகனில் நடித்து வரும் அவர் அடுத்து தீவிர அரசியலில் ஈடுபடவிருக்கிறார். ஒருபக்கம் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் கல்கி படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும், இவர் ஜதி ரத்னலு, ராவனசுரா உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

faria

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், தம்பி ராமையா உள்ளிட்ட சிலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இயக்குனராக ஜேசன் சஞ்சய் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடியா?!. அடங்காத விக்னேஷ் சிவன்!. சிக்கலில் எல்.ஐ.கே!…

0

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு வந்தது. ஆனால், விக்னேஷ் நடந்துகொண்டது அஜித்துக்கு பிடிக்காமல் போனதால் அந்த படத்திலிருந்து தூக்கப்பட்டார். விக்னேஷ் சிவன் போனதால்தான் மகிழ் திருமேனிக்கு அந்த வாய்ப்பு வந்தது.

lik

அதன்பின் லவ் டுவே படத்தில் ஹீரோவாக நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்க துவங்கினார். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார். 60 சதவீதம் படம் முடிந்தபோது சொன்ன பட்ஜெட்டை படம் தாண்டியதால் இனிமேல் இந்த படத்திற்கு என்னால் செலவு செய்ய முடியாது என அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் ஒதுங்கினார்.

ஒருவழியாக அந்த பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. இப்போது ஒரு பாடல் காட்சிக்கு 5 கோடி வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க லலித்குமார் ஆடிப்போய்விட்டாராம். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது என சொல்ல மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தபட்டிருக்கிறது. இதற்கிடையில் கீர்த்தீஸ்வரன் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போய்விட்டார் பிரதீப்.

பாசிசம்.. பாயாசம் என விஜய் சொன்னது இதுதான் போல!.. கலாய்க்கும் பிரபலம்!..

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். எல்லா மேடைகளிலும் திமுகவை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார். இதுவரை எந்த மேடையில் அவரின் வாயில் இருந்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என வரவே இல்லை. திமுகவை திட்ட வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்கிறது.

விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது கூட ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ எனக்கேட்டார். அதாவது பாஜகவை நீங்கள் பாசிசம் என சொல்கிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா என நக்கலடித்தார். அதாவது, நீங்கள் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதுதான் விஜய் சொன்ன கருத்து. தமிழக வெற்றிக் கழகம் துவங்கி ஒரு வருடம் முடிந்தபின் நடந்த விழாவிலும் இந்த பாயாச மேட்டரை குறிப்பிட்டு பேசினார் விஜய்.

விஜய் திமுகவை பற்றி மட்டுமே பேசுகிறார்.. அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பற்றி அவர் பேசவில்லை என்கிற விமர்சனமும் விஜய் மீது இருக்கிறது. மேலும், திமுகவை தோற்கடிக்க விஜய் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகமும் வளர்ச்சியடையும். இல்லையேல் நாம் தமிழர் கட்சி போல மாறிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதற்கிடையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என இப்போதே பலரும் பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து ‘பாசிசமும், பாயாசமும் நாடகம் போடுகிறார்கள். ரகசிய கூட்டணியில் இருக்கிறார்கள் என இத்தனை நாளாக விஜய் கூறியது இதைத்தான் போல. திமுக எனும் வார்த்தைக்கு முன்பு‌ ‘அ’ வை சேர்க்க மறந்துவிட்டார்’ என பதிவிட்டிருக்கிறார்.

வைப்ரேட் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு மாறிய செங்கோட்டையன்: பின்னணியில் என்ன நடந்தது?

0

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் அண்மைக்காலமாக சில மாற்றங்கள் மற்றும் அதிருப்திகள் உருவாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததால், கட்சியில் சிறிய அளவிலான உட்பிளவு ஏற்பட்டது.

இதனால், செங்கோட்டையன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முன்பு போல உறவுபட்டுப் பழகாமல், சட்டசபைக்கு தனியாக செல்வதை தொடர்ந்தார். அவர் பழனிசாமியின் பெயரை கூட குறிப்பிடுவதைத் தவிர்த்தார். மேலும், சட்டசபையில் நடந்த முக்கியமான விவாதங்களில் அவர் தனித்துவமாக செயல்பட்டார். குறிப்பாக, சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானத்தின் போது, அவர் தனியாக சந்தித்து பேசினார், இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே சமயம், கட்சியின் கொறடா வேலுமணியின் ஆலோசனைப்படி, சட்டசபை நடவடிக்கைகளில் அவர் கலந்துகொண்டு, கட்சி நிலைப்பாட்டின்படி நடந்துகொண்டார். இதனால், அவருக்கு கட்சியில் இன்னும் முழுமையான இடம் வழங்கப்படுமா என கேள்விகள் எழுந்தன.

இந்த சூழ்நிலையால், செங்கோட்டையனை மீண்டும் வழியில் கொண்டு வர, பழனிசாமி சிறப்பு நடவடிக்கைகளை எடுத்தார். அவரின் முக்கிய கூட்டாளியான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டையனுடன் தொடர்ச்சியாக பேசி, அவரை சமரசம் செய்ய முயன்றார். இதன் விளைவாக, செங்கோட்டையன் மீண்டும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் பழகத் தொடங்கினார்.

நேற்று சட்டமன்றத்தில் மும்மொழி கொள்கை தொடர்பாக நடந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார், உலக தமிழ் மாநாடு தொடர்பான விவரங்களை விளக்க சிரமப்பட்டார். உடனடியாக, செங்கோட்டையன் அவருக்கு தேவையான தகவல்களை வழங்கினார். இதன் மூலம், அவர் மீண்டும் கட்சியுடன் ஒத்துழைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. செங்கோட்டையன் வழியில் திரும்பியிருப்பது, பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக ஒரு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…

0

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும்.

எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இருக்கும்போதும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும். விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்த போது அவர் நாக்கை துறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சண்டை போட்டதெல்லாம் சட்டசபையில்தான் நடந்தது.

கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!...
#image_title

சரி விஷயத்திற்கு வருவோம். இன்று காலை சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ ‘அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து எங்கள் கணக்கை தொடங்குவோம்’ என திமுகவினரை பார்த்து சொன்னார்.

அதற்கு பதிலடி கொடுத்த திமுக நிதியமைச்சர் தென்னரசு ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இப்போது நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள்’ என சொன்னார். அப்போது எழுந்து பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ‘எடப்பாடி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழிச்சி பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும்’ என பேச அவையில் இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்ததைத்தான் வேலுமணி குறிப்பிட்டிருக்கிறார் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணியா?!.. எதற்காக சந்திப்பு?.. அமித்ஷா சந்திப்பு பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!..

0

சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் அமித்ஷாவின் வீட்டிற்கு சென்றார் பழனிச்சாமி. அவருடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசித்தார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை என்றாலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

eps

மேலும், டெல்லியில் நடந்த அமித்ஷா – பழனிச்சாமி சந்திப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்றே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறர்கள். ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி வேறு மாதிரி விளக்களித்திருக்கிறார்.

மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்திருக்கிறார். கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி சொல்வது பொய்.. பாஜகவுடன் வேறென்ன பேசியிருக்க போகிறார்கள்? என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தோற்கப் போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?!. அண்ணாமலையிடம் சொன்ன பழனிச்சாமி!..

0

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை அதிமுகவும், பாஜகவும் இணக்கமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார். பாராளுமன்றாத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாக்களுக்கும் அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவை அடிமைகள் எனவும் பேசினார்.

அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஒருபக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுக தலைவர்கள் பற்றி தவறாக பேசவே அதையே காரணம் காட்டி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுக.

The AIADMK's main point is that it has single-handedly taken over Annamalai!! The alliance is again a question mark!!
The AIADMK’s main point is that it has single-handedly taken over Annamalai!! The alliance is again a question mark!!

ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எப்படியெனில், நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியிருந்தார். கண்டிப்பாக திமுகவை தோற்கடிக்க அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என அவர்கள் பேசியிருப்பார்கள் என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில்தான், 2 வருடங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பின் அண்ணாமலை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. 2019 தேர்தலில் மோடி வாரணாசியில் போட்டியிட்ட போது ‘ வேட்புமனு தாக்கல் செய்ய மோடி செல்கிறார். கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் வருகிறார்கள். நீங்கள் வாருங்கள்’ என நான் பழனிச்சாமியை அழைத்தபோது ‘தோல்வி அடையப்போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?’ என கேட்டார் பழனிச்சாமி. மற்றவர்களின் காலை பிடித்து, மக்களால் தேந்தெடுக்கப்பட்டாத எம்.எல்.ஏக்களுக்கு காசு கொடுத்து முதல்வர் ஆன பழனிச்சாமி என் தலைவனை பேசியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனவே, கூட்டணி கட்சி தலைவராக ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்’ என பேசியிருக்கிறார்.

தற்போது அதிமுகவும் பாஜகவும் மீண்டும் இணையும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.