Home Blog Page 360

இது தெரியுமா? இந்த 8 உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்!!

0

நாம் உணவு சாப்பிட்டால்தான் உயிர் வாழ முடியும்.உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக உணவு திகழ்கிறது.நீண்ட ஆயுளுடன் வாழ ஆரோக்கிய உணவு அவசியமாகும்.தண்ணீருக்கு அடுத்து நாம் உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை விஷயமாக இருப்பது உணவுதான்.

இப்படி உயிர் வாழ அவசியமானவையாக திகழும் உணவு தான் தற்பொழுது விஷமாக மாறி வருகிறது.தற்பொழுது நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் உடல் நலத்திற்கு கேடு தரக் கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிட்டு கொண்டிருப்பது உணவு அல்ல.அது உயிரை பறிக்கும் ஸ்லோ பாய்சன் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காரசாரமான பொரித்த அசைவ உணவுகள்,பதப்படுத்தி சமைக்கும் உணவுகள்,மீண்டும் சூடுபடுத்தப்படும் உணவுகளை தான் மக்கள் விரும்புகின்றனர்.தற்பொழுது உள்ள உணவுகளில் வேறும் ருசி மட்டும் இருக்கின்றது.ஆரோக்கியத்தை அதில் பார்க்க முடிவதில்லை.

ஜங்க் புட்,பாஸ்ட் புட் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் ஆயுட்காலம் வேகமாக குறைகிறது.சிலவகை ஆரோக்கிய உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை விஷமாகிவிடுகிறது.அப்படி எந்தெந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1)கோழி

புரதச்சத்துக்கு பெயர் போன கோழி இறைச்சி உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் புட் பாய்சனாகிவிடும்.

2)கீரை

போலிக் அமிலம்,இரும்பு போன்ற உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை கொண்டிருக்கும் கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு போன்றவை ஏற்படும்.

3)உருளைக்கிழங்கு

மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுப் பட்டியலில் உருளைக்கிழங்கும் உள்ளது.இந்த உணவை சூடுபடுத்தி சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகிவிடும்.

4)முட்டை

ஆரோக்கியம் நிறைந்த முட்டையில் செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும்.

5)அரிசி உணவு

நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் அரிசி உணவை சூடுபடுத்தினால் நச்சுத் தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.

6)பிரியாணி

சிலர் பிரியாணி உணவை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.இப்படி சாப்பிட்டால் அவை ஸ்லோ பாய்சனாக மாறிவிடும்.

7)காளான்

ருசி நிறைந்த காளானில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.காளானில் செய்யப்படும் உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு ஏற்படும்.

8)மீன்

ஒமேகா 3 கொழுப்பு,புரதம் போன்றவை நிறைந்த மீன் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் நச்சுத் தன்மை அதிகமாகிவிடும்.

கீரைகளின் ராஜா.. இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் 100 வருஷம் உயிரோடு இருப்பீங்க!!

0

நாம் பெரும்பாலும் மணத்தக்காளி,சிறுகீரை,முருங்கை கீரை போன்றவற்றை உணவாக செய்து சாப்பிட்டு வருகின்றோம்.ஆனால் இந்த கீரைகளைவிட எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் கொண்ட சிலவகை கீரைகளின் பெயர் கூட நமக்கு தெரியாமல் இருக்கிறது.இப்படி நாம் பார்க்காத மற்றும் அதிகம் பயன்படுத்தாத கீரைகள் வரிசையில் “பொன்னாங்கண்ணி” கீரை இடம் பெற்றிருக்கிறது.

பொன்னாங்கண்ணி கீரை அதீத மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இந்த கீரையில் கூட்டு,கடையல்,பொரியல்,குழம்பு என்று உணவுகள் செய்து சாப்பிடலாம்.இக்கீரையில் பாஸ்பரஸ்,புரதம்,கால்சியம்,நல்ல கொழுப்பு,வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:

1)உடல் சூட்டை தணிக்க பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடலாம்.கண் பிரச்சனைகளை குணப்படுத்த இந்த கீரையை சாப்பிடலாம்.

2)செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடலாம்.பொன்னாங்கண்ணி கீரையை தேங்காய் எண்ணையில் வதக்கி சாப்பிடலாம்.

3)பொன்னாங்கண்ணி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

4)கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை ஜூஸாக செய்து பருகலாம்.

5)பொன்னாங்கண்ணி கீரையில் உப்பு சேர்த்து வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

6)பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.

7)சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக பொன்னாங்கண்ணி கீரை சாறு பருகி வரலாம்.

8)முடி வளர்ச்சியை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரையை பருப்பில் சேர்த்து சாப்பிடலாம்.மாலை கண் பாதிப்பு குணமாக பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து சாப்பிடலாம்.

9)பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குணமாகும்.

10)மூல நோய்,மண்ணீரல் பாதிப்பு,கல்லீரல் பாதிப்பு குணமாக பொன்னாங்கண்ணி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

உடலில் இந்த பிரச்சனை இருக்கா? நீங்கள் ஆரஞ்சு பழத்தை டச் கூட பண்ணிடாதீங்க!!

0

நம் இந்தியாவில் அதிகம் விளையும் பழமான ஆரஞ்சு அனைவரும் விரும்பக் கூடிய பழமாகும்.வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ்,ஐஸ்க்ரீம்,கேக் என்று பல இனிப்பு உணவுகள் செய்து ருசிக்கப்படுகிறது.

ஆரஞ்சு பழ ஊட்டச்சத்துக்கள்:

1)வைட்டமின் ஏ
2)வைட்டமின் சி
3)வைட்டமின் பி
4)கால்சியம்
5)பொட்டாசியம
6)மெக்னீசியம்
7)பாஸ்பரஸ்

ஆரஞ்சு பழ நன்மைகள்:

1.உடல் உஷ்ணத்தை குறைக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது.இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைய ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

2.சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

3.குடல் இயக்கத்தை சீராக வைக்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

4.சிறுநீர் கடுப்பு பிரச்சனை சரியாக ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடலாம்.பக்கவாதம்,கொலஸ்ட்ரால் பிரச்சனையை ஆரஞ்சு பழம் சாப்பிட்டு சரி செய்யலாம்.

5.உடல் எடையை குறைக்க தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் செய்து பருகலாம்.ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க முடியும்.

6.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.

ஆரஞ்சு பழத்தை யார் சாப்பிடக் கூடாது?

1.செரிமானப் பிரச்சனை இருபவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடக் கூடாது.வயிற்றுப்போக்கு,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

2.திடீர் வயிற்று வலி பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை தவிர்க்க வேண்டும்.நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

3.கேவிட்டி பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை தவிர்க்க வேண்டும்.வயிறு எரிச்சல்,அல்சர் இருப்பவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடக் கூடாது.

ஆரஞ்சு பழம் சாப்பிட உகந்த நேரம்:

காலை மற்றும் இரவு நேரத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஆரஞ்சு சிட்ரஸ் பழம் என்பதால் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

அதேபோல் இரவு நேரத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை ஏற்படும்.நாளொன்றில் இரண்டு அல்லது மூன்று ஆரஞ்சு பழம் மட்டுமே சாப்பிட வேண்டும்.அளவிற்கு அதிகமாக ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வயிற்றில் அமில அளவு அதிகரித்துவிடும்.

துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

0

துளசி என்பது வழிபாட்டு பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இந்த துளசி செடியை நமது வீட்டில் வைத்து தினமும் வழிபட்டும் வருகிறோம். இந்த துளசி செடியை வீட்டிற்கு உள்ளே வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு முன்பாக அல்லது பின்புறமாக தான் வளர்க்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இவ்வாறு நாம் தினமும் வழிபடக்கூடிய துளசி செடியிலிருந்து ஒருபோதும் துளசியை எந்த நாட்களிலும் பறிக்கக்கூடாது. நமது வீட்டின் பூஜைக்காக அல்லது கோவிலுக்கு எடுத்துச் செல்ல துளசி வேண்டும் என்றால் அதற்காக தனியாக ஒரு துளசி செடியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, நாம் தினமும் விளக்கேற்றி வழிபடக்கூடிய துளசி செடியிலிருந்து ஒருபோதும் துளசியை பறிக்க கூடாது.

இவ்வாறு கடவுளுக்கு நாம் வைத்து வழிபடுவதற்கு என, ஒரு துளசி செடியை தனியாக வைத்து வளர்த்தாலும் கூட, எல்லா நாட்களிலும் அந்தச் செடியிலிருந்து துளசியை பறிக்கக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மட்டுமே இந்த துளசியை பறிக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது.

கிரகண நேரத்தில் துளசியை பறிக்கக் கூடாது. அது சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி அந்த கிரகண நேரத்தில் துளசியை பறிக்கக் கூடாது. கிரகண நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ தான் துளசியை பறிக்க வேண்டும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் துளசியை பறிக்கக் கூடாது. அதேபோன்று ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் துளசியை பறிக்கக் கூடாது. இது மட்டுமன்றி அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணிக்கு மேல் துளசியை பறிக்கக் கூடாது.

அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு கண்டிப்பாக துளசியை பறிக்கக் கூடாது. அதேபோன்று வருடப்பிறப்பு மற்றும் தமிழ் மாதங்களின் பிறப்பு நாட்களில் துளசியை பறிக்கக் கூடாது.

வீட்டில் யாருக்கேனும் இறந்தவர்களுக்காக திதி கொடுக்கிறோம் என்றால் அந்த நாட்களிலும் துளசியை பறிக்கக் கூடாது. திருவோண நட்சத்திரத்தின் பொழுதும் இந்த துளசியை பறிக்கக் கூடாது.

சப்தமி, அஷ்டமி, ஸ்வாதசி, சதுர்த்தசி, ஏகாதசி இதுபோன்ற திதிகளின் பொழுதும் துளசியை பறிக்கக் கூடாது. ஆகவே இது போன்ற நாட்களில் துளசியை பறிக்காமல் மற்ற நாட்களில் துளசியை பறித்துக் கொள்ளலாம்.

ஒருவேளை முன்பாகவே பறித்து வைத்திருந்த துளசி வாடி இருந்தால், அதனை கடவுளுக்கு பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். துளசிக்கு நிர்மால்ய தன்மை உண்டு. அதாவது துளசி வாடி இருந்தாலும், காய்ந்த நிலையில் இருந்தாலும் பயன்படுத்தாத துளசி என்றால், அதனை பூஜைக்கு தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே நமக்கு கிடைக்கின்ற சமயத்தில் இந்த துளசியை பறித்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் துளசியை கத்தரிக்கோல் மற்றும் நமது நகங்களைக் கொண்டு பறிக்கக் கூடாது. துளசியை கடவுளிடம் வேண்டிக் கொண்ட பின்பு மிகவும் மென்மையான முறையில் பறிக்க வேண்டும்.

உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்..!!

0

பண்டைய இந்திய ஜோதிடம் மற்றும் சாமுத்ரிக சாஸ்திரத்தில் உடலில் உள்ள மச்சங்களை பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இது மச்சங்களின் குணாதிசயம், அதிர்ஷ்டம் மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையை வடிவமைக்கும் எண்ணற்ற நிகழ்வுகளின் நுணுக்கங்களை கொண்டுள்ளது.

மனித உடலை அலங்கரிக்கும் பல சின்னங்களுள் ஒன்றுதான் மச்சங்கள். அந்த மச்சத்தின் இருப்பிடம், அளவு மற்றும் நிறம் ஆகியவற்றை கொண்டு ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. நமது முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பது குறித்து தற்போது காண்போம்.

1.நெற்றியில் மச்சம் இருந்தால்:

நெற்றியின் வலது பக்கத்தில் அமைந்துள்ள மச்சம் நல்ல அதிர்ஷ்டத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இது செழிப்பு, மரியாதை மற்றும் சமூகத்தில் ஒரு மதிப்புமிக்க நிலையைக் குறிக்கிறது, தனிநபர் நிதி நிலைத்தன்மை மற்றும் சமூக அங்கீகாரம் நிறைந்த ஒரு வசதியான வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.

நெற்றியின் இடது பக்கம் உள்ள மச்சம் அசுபமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் சாத்தியமான சவால்களைக் குறிக்கிறது. இது நிதிப் போராட்டங்கள், தொழில் பாதைகளில் தடைகளை நோக்கிய போக்கை குறிக்கலாம். நெற்றியில் உள்ள ஒரு பக்கம் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது, மறுபுறம் சவாலைக் குறிக்கிறது.

2.புருவங்களில் மச்சம் இருந்தால்:

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அது பல அதிர்ஷ்டங்களையும், வெற்றிகளையும் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் தங்களது இலக்குகளை எளிதாக இவர்கள் அடைந்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இடது புருவத்தில் மச்சம் இருந்தால் அது தொழில் மற்றும் வியாபாரத்தில் பல தடைகள் உருவாகும் என்பதை குறிக்கிறது. இவர்களது வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

3. கண்களுக்கு அருகில் மச்சம் இருந்தால்:

வலது கண்ணுக்கு அருகிலுள்ள உள்ள மச்சம் பொதுவாக செல்வம் மற்றும் ஆறுதலுடன் தொடர்புடையது, இது தனிநபர் நிதி பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட திருப்தி நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

இடது கண்ணுக்கு அருகில் மச்சம் இருந்தால் பல நிதி நெருக்கடிகள் உருவாகும் என்பதையும், பணம் தொடர்பான பிரச்சனைகள் இவர்களது வாழ்க்கையில் நிறைய ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.

4. மூக்கு மற்றும் உதடுகளில் மச்சம் இருந்தால்:

மூக்கு மற்றும் உதடுகளில் மச்சம் இருப்பவர்கள் பலவிதமான நுண்ணறிவுகளை கொண்டிருப்பார்கள். ஆனால் மூக்கின் நுனியில் மச்சம் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது.

மேல் உதட்டில் மச்சம் இருப்பவர்கள் மென்மையானவர்களாகவும், இறக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அது படைப்பாற்றலை குறிக்கிறது. எனவே இவர்கள் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

5. கன்னத்திலும், காதிலும் மச்சம் இருந்தால்:

கன்னங்களைப் பொறுத்தவரை, மச்சம் மிகவும் சாதகமாக இருக்கும். கன்னத்தில் உள்ள மச்சம் நிலைத்தன்மை மற்றும் மரியாதையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது, இது வலுவான உறவுகள் மற்றும் சமூக அந்தஸ்துடன் கூடிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

வலது காதில் மச்சம் இருப்பவர்கள் குறைந்த முயற்சியில் வெற்றிகளையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள். இடது காதில் மச்சம் இருப்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் வெற்றியை காண விடாமுயற்சியுடன் உழைக்க நேரிடும். அவர்களது வாழ்க்கையில் பல சிரமங்களையும் எதிர் கொள்வார்கள்.

HAIR CARE TIPS: இந்த கீரையை அரைத்து தலைக்கு பூசினால்.. எந்த பிரச்சனை சரியாகும் தெரியுமா?

0

தலைமுடியை பராமரிக்கவும்,பொடுகு,பேன் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடவும் விரும்பினால் இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணலாம்.

முடி உதிர்வு:

முடக்கத்தான் கீரையை தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலை முடியை அலச வேண்டும்.இப்படி வரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும்.

பேன் தொல்லை:

சீத்தாப்பழ விதையை பொடித்து நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து ஆறியப் பிறகு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பேன் தொல்லை நீங்கும்.

பொடுகுத் தொல்லை:

வேப்பிலை மற்றும் பொடுதலை இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலையில் தடவி வந்தால் பொடுகு நீங்கும்.

எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணையில் கலந்து தலைமுழுவதும் தடவி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.வேப்பம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தடவினால் பொடுகு நீங்கும்.

வழுக்கை:

சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.

கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயில் கலந்து அதிக முடி உதிர்வு இருக்கும் இடத்தில் தடவினால் முடி உதிர்வு நின்று வளர்ச்சி அதிகரிக்கும்.

தலை சூடு

வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலை சூடு நீங்கும்.இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும்.

தலை எண்ணெய் பசை

தலையில் உள்ள எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக மாற சீகைக்காய் பொடியை வடித்து ஆறவைத்த கஞ்சியில் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

ஆளி விதையை தண்ணீரில் ஊறவைத்து தலைக்கு தடவி குளித்தால் முடி பளபளப்பாக மாறும்.அரிசி ஊறவைத்த நீரில் வெந்தய பேஸ்ட் சேர்த்து தலையில் தடவி குளித்தால் முடி மிருதுவாக மாறும்.

தலை அரிப்பு

தேங்காய் எண்ணையில் வேப்பிலை,கடுக்காய் போன்றவற்றை போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தடவி வந்தால் அரிப்பு,எரிச்சல் நீங்கும்.

முடி வளர்ச்சி

செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை பேஸ்டாக அரைத்து தலைக்கு தடவி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இளநரை

தேங்காய் எண்ணையில் கருஞ்சீரகப் பொடி கலந்து தலையில் தடவினால் இளநரை நீங்கும்.கறிவேப்பிலை எண்ணையை தலைக்கு அப்ளை செய்தால் முடி கருமையாக மாறும்.

வெள்ளரிக்காயில் மறைந்திருக்கும் ஆபத்து!! இந்த நேரத்தில் மட்டும் இதை சாப்பிடாதீங்க!!

0

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவது குறையும்.

வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.வெள்ளரிக்காய் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவும்.அதிக நன்மைகள் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயை எல்லா நேரங்களிலும் சாப்பிட முடியாது.குறிப்பாக இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் காயின் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடும்.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் என்னாகும்?

தூங்கச் செல்வதற்கு முன்னர் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால் இவற்றை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

வெள்ளரிக்காயில் அதிக பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.இந்த வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

அதிகளவு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனை ஏற்படும்.ஒவ்வாமை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிக வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

வெள்ளரியை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீர் பெருகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.இதனால் உடலில் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும்.எனவே காலை மற்றும் மதிய நேரத்தில் சிறிதளவு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

0

திருப்புகழில் முருகனைக் குறித்து அருணகிரிநாதர் கூறியதாவது, “அரை நிமிடம் மட்டும் உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, உண்மையான அன்புடனும், உண்மையான பக்தியுடனும், உண்மையான காதலுடன் வேறு எதையும் வேண்டாமல், முருகா நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று யார் ஒருவர் முருகனின் திருவடியை பிடிக்கிறார்களோ” அவர்களுக்கு தேவையான சகல விதமான யோகங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அவர்கள் கூறியுள்ளார்.

ஆனால் மக்களாகிய நாம் கடவுளிடம் சென்றாலே ஒரு லிஸ்ட்டையே வைத்திருப்போம், அதை கொடு இதை கொடு என்று கேட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் நம்மை படைத்த (பெற்ற) கடவுளுக்கு தெரியும் நமக்கு எது தேவை? எது கொடுக்க வேண்டும்? என்று எனவே கடவுள் நமக்கு வேண்டியதை கண்டிப்பாக கொடுப்பார்.

அதிலும் முருக பெருமான் கேட்டதை கேட்ட வண்ணம் கொடுக்கக் கூடியவர் அல்ல. நாம் நினைத்ததை நினைத்ததற்கும் மேலாக நமக்கு கொடுக்கக் கூடியவர். அதிலும் முருகப்பெருமானுக்கு நமக்கு கொடுப்பதற்கு என 12 கரங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வாங்குவதற்கு இரண்டு கரங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறு நாம் நினைத்ததற்கும் மேலாக அள்ளி அள்ளி கொடுக்கக் கூடியவர் முருகப்பெருமான்.

அத்தகைய வள்ளல் பெருமான் தான் நமது முருகப்பெருமான். அதேபோன்றுதான் வள்ளி தேவியும். இவர்கள் இருவரும் மக்களாகிய நமக்கு பல்வேறு நலன்களை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதனை வாங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அரை நிமிடமாவது மனம் உருகி முருகனை நினைக்க வேண்டும்.

முருகப் பெருமானை உள்ளம் உருகி அதாவது முழுமையாக நமது ஆன்மா முருகப்பெருமானிடம் சரணாகதி அடைந்து “முருகா நீ எனக்கு எதை கொடுத்தாலும் சரி உனது அடி தொண்டனாக என்னை ஏற்றுக் கொண்டால் போதும்”என்ற விண்ணப்பத்தை முருகப் பெருமானிடம் வைத்துவிட்டு, திருப்புகழை பாடினோம் என்றால் அதனால் கிடைக்கக்கூடிய பலனுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

முருகப்பெருமானை அரை நிமிடம் உள்ளம் உருகி நினைத்து, இந்த திருப்புகழை படித்தோம் என்றால் சகல விதமான சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். இவை அனைத்துக்கும் மேலாக முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

முருகப் பெருமானுடைய திருப்புகழுக்கு அத்தனை மகிமைகள் உள்ளது. எனவே அனுதினமும் முருகனை நினைத்து திருப்புகழை படித்தோம் என்றால் நாம் வேண்டிய அனைத்தும் மற்றும் நமக்கு வேண்டிய அனைத்தும் நிச்சயம் கிடைக்கும்.

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

0

ஒரு வீடு என்பதில் மிகவும் முக்கியமான அறை என்றால், அது பூஜை அறை தான். அந்த பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் நமக்குள் இருக்கும். அதற்கான ஒரு எளிய விளக்கத்தை பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள் கூறியுள்ளார். அதனை தற்போது காண்போம்.

1. பூஜை அறை என்பதில் நமக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது முன்னோர்களின் படத்தை தவிர.

2. நமது முன்னோர்களின் படத்தை பூஜை அறையில் வைக்காமல் வீட்டில் ஹாலில் வைத்துக் கொள்ளலாம். நமது முன்னோர்களின் படத்தை வடக்கு பக்க சுற்றில் மாட்ட வேண்டும். அதாவது அந்த படமானது தெற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். இதுதான் படத்தை மாட்டுவதற்கான சரியான திசை.

3. நமது வீட்டில் பூஜை செய்யும் பொழுது நமது முன்னோர்களையும் மறவாமல் அவர்களுக்கும் தீப தூப ஆராதனை, சாம்பிராணி ஆகியவற்றையும் காட்டி வழிபட வேண்டும்.

4. நாம் ஏதேனும் கோவிலுக்கு சென்று வழிபடும் பொழுது அந்த வழிபாட்டில் ஆயுதங்களை கொடுப்பார்கள். அதாவது ‘வேல்’ போன்ற ஆயுதங்களை நமக்கு கொடுப்பார்கள். அதனை நமது வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.

5. இது போன்ற ஆயுதங்களை நமக்கு யாரேனும் கொடுத்தால், அதனை நீர் நிலையங்களில் விட்டு விடுவது தான் நல்லது.

6. ஏனென்றால் இந்த வேல் போன்ற ஆயுதங்களை நமது வீடுகளில் வைத்து வழிபட்டால் அதற்கு ஏதேனும் ஒரு சிறிய எலுமிச்சை பழம் காவாவது (பலி) கண்டிப்பாக தினமும் கொடுக்க வேண்டும்.

7. வேலினை நமது பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அதற்கு தினமும் ஒரு எலுமிச்சம் பழத்தை அந்த வேலில் குத்தி வைக்க வேண்டும்.

8. ஆனால் இவ்வாறு வேலினை வைத்து வழிபடுவதை காட்டிலும், அதனை நீர் நிலையங்களில் விட்டு விடுவது தான் சிறப்பு.

9. நமது பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை பயன்படுத்தி தீபம் ஏற்றினாலே போதும். பல்வேறு பலன்களை நமக்கு தேடித் தரும்.

10. சுத்தமான பசு நெய் பயன்படுத்தி விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும். அதே போன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வீடு முழுவதும் சாம்பிராணி தூபமும் போட வேண்டும்.

குடலை முழு சுத்தமாக்க இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! உண்மையில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

0

நமது குடலில் தேவையற்ற கழிவுகள் அதிகமாக தேங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.சாப்பிடும் உணவு செரிமானம் செய்யப்பட்ட பிறகு கழிவுகள் மலமாக வெளியேறுவது வழக்கம்.இந்த செயல்முறை சீராக நடந்தால் தான் உடலிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பின் ஆரோக்கியமும் மேம்படும்.அப்படி இருக்கையில் இந்த ப்ராசஸ் சரியாக நடக்கவில்லை என்றால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,பைல்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்கினால் வாய் துர்நாற்றம் மற்றும் துர்நாற்றம் கொண்ட வாயுக்கள் அதிகமாக வெளியேறும்.

வயிறு வீங்குதல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் குடல் கழிவுகளால்தான் ஏற்படுகிறது.குடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகிவிடும்.குடல் புழுக்கள்,குடல் அலர்ஜி நோய்கள் குடல் கழிவுகளால் தான் ஏற்படுகிறது.

செரிமானப் பிரச்சனை இருந்தால் குடலில் கழிவுகள் தேங்கிவிடும்.இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு நாளடைவில் பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும்.குடலில் அதிகமான கழிவுகள் இருந்தால் பசியின்மை பிரச்சனை ஏற்படும்.

குடலில் அதிகப்படியான கெட்ட கழிவுகள் தேங்கி இருந்தால் முகப்பரு,நாக்கில் வெள்ளை புள்ளி போன்றவை ஏற்படும்.குடல் கழிவுகளால் வியர்வை துர்நாற்றம் அதிகமாக இருக்கும்.உடல் சோர்வு,சோம்பல் உணர்வு,மூட்டு வீக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

குடல் கழிவுகளை நீக்க வழிகள்:

1)புரோபயாட்டிக் நிறைந்த தயிர்,இட்லி,தோசை போன்ற உணவுகளை காலை நேரத்தில் சாப்பிட வேண்டும்.

2)ப்ரபயாட்டிக் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.வெது வெதுப்பான தண்ணீர் பருக வேண்டும்.அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

3)அதிகம் பால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.விளக்கெண்ணெயை தண்ணீரில் கலந்து பருகினால் கழிவுகள் வெளியேறும்.

4)வாழைப்பழம்,பப்பாளி பழம் சாப்பிட்டால் குடல் கழிவுகள் வெளியேறிவிடும்.ஓமத்தை சூடான நீரில் கலந்து குடித்தால் குடல் கழிவுகள் நீங்கும்.

5)செரிமானத்தை தூண்டும் இஞ்சி,பெருஞ்சீரகம்,பட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6)கீரை உணவுகளை சாப்பிட்டால் குடலில் உள்ள கழிவுகள் மலத்தில் வெளியேறிவிடும்.எலுமிச்சை பானம் பருகினால் குடல் கழிவுகள் வெளியேறிவிடும்.