Home Blog Page 361

இந்த பிஸ்கட் சாப்பிட்டால் குடலில் ஓட்டை விழும்.. உயிர் போகும்!! எச்சரிக்கும் நிபுணர்கள்!!

0

சமீப காலமாக வித்தியாசமான உணவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது.தற்பொழுது மக்களை கவரும் எந்த உணவும் ஆரோக்கியமானதாக இல்லை.வித்தியாசமான உணவுகளை கண்டுபிடித்து சாப்பிடுவதால் தான் உடலில் புது நோய்கள் என்ட்ரி கொடுக்கிறது.

நாம் காலையில் குடிக்கும் டீ முதல் இரவு சாப்பிடும் சப்பாத்தி வரை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பவையாகவே இருக்கிறது.குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும் பெரும்பாலான பொருட்கள் கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஸ்மோக் பிஸ்கட் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.இந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிடும் பொழுது வாய்,மூக்கு போன்றவற்றில் புகை வரும்.இந்த அனுபவத்தை பெற குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் ஆசையாக வாங்கி சாப்பிடுகின்றனர்.ஆனால் ஸ்மோக் பிஸ்கட் மிகவும் ஆபத்தான பொருள் என்பதை அறியாமல் வாங்கி சாப்பிடுகின்றனர்.

நார்மல் பிஸ்கட்டில் திரவ நைட்ரஜன் சேர்த்து ஸ்மோக் பிஸ்கட்டாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த திரவ நைட்ரஜன் பிஸ்கட்டை சாப்பிட்டால் வாய்,மூக்கில் புகை வரும்.

இருநூறு டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கொண்ட திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்க்கப்படுகிறது.இந்த ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டால் குடலில் ஓட்டை விழுந்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.திரவ நைட்ரஜன் குளிர்ச்சி நிறைந்தவையாகும்.இவை எந்த பொருளையும் நொடியில் உறைய வைத்துவிடும்.இந்த திரவ நைட்ரஜன் நமது உடலுக்குள் சென்றால் திசுக்கள் உறைந்துவிடும்.

திரவ நைட்ரஜன் உடலில் நேரடியாக செல்வதால் வயிற்று வலி,சுவாசப் பிரச்சனை,குடல் துளை விழுதல் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வயிறு வலி,குடலில் துளை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது என்ற செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.எனவே இதுபோன்ற ஆபத்து நிறைந்த பொருட்களை குழந்தைகள்,பெரியவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீண்ட நாட்களாக அடமானத்தில் இருக்கும் நகையை மீட்க சக்தி வாய்ந்த ஒரு வழி..!! மூன்று மாதத்தில் உங்கள் வீடு வந்து சேரும்..!!

0

இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே அந்த குடும்பத்தை ஓரளவிற்காவது காப்பாற்ற முடியும் என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இருந்தாலும் கூட குடும்பத் தேவைகளை நிறைவாக பூர்த்தி செய்யவும், திடீர் அவசர தேவைக்காகவும் தங்களுக்கு என வைத்திருக்கக் கூடிய தங்க ஆபரணங்களை அடகு கடையில் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.

அவ்வாறு வைக்கக்கூடிய தங்க ஆபரணங்களை என்னதான் முயன்றாலும் அதனை மீட்க முடியாமலே போய்விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது சிறிது சிறிதாக நமது ஆபரணங்களை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு அமையும்.

நமது குடும்பத்தில் ஏதேனும் விசேஷங்கள் என்றால் நமது தங்க நகைகளை போட முடியவில்லையே என ஏங்குகிற அனைவருக்கும் இந்த பரிகாரம் பலனளிக்கும். இந்த பரிகாரம் நமது வீட்டில் இருந்தே செய்யக்கூடிய மற்றும் குறைந்த செலவில் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம் ஆகும்.

மூன்று குண்டு மஞ்சளை வைத்து தான் நாம் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம். இந்த பரிகாரம் செய்வதற்கு உகந்த நாள் வியாழன் கிழமை. எனவே வியாழன் கிழமை அன்று குரு ஹோரை நேரத்தில் இந்த பரிகாரத்தை நாம் செய்து கொள்ளலாம்.

இந்த குரு ஹோரை நேரமானது அதிகாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரையிலும், இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் இருக்கும். இந்த மூன்று நேரத்தில் நம்மால் எந்த நேரத்தில் செய்ய முடியுமோ அந்த ஒரு நேரத்தில் செய்து கொள்ளலாம்.

வீட்டில் உள்ள பெண்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வியாழன் கிழமை செய்ய வேண்டும். ஒரு வாரம் ஏதேனும் தடை ஏற்பட்டால் ஒரு வாரம் விட்டு, அடுத்த வாரம் கூட இதனைத் தொடர்ந்து செய்துக் கொள்ளலாம்.

நகைகளை அடமானத்தில் வைக்காதவர்கள் கூட, தனது பெண் குழந்தைகளுக்காக நகைகளை சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொண்டும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

வியாழன் கிழமை என்பது குரு பகவானின் ஆதிக்கத்திற்கு உரிய நாளாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் மட்டுமே, அவர் வாழ்க்கையில் உச்சத்தை அடைய முடியும். நமக்கு தேவையான அனைத்தையும் தரக்கூடியவர் குரு பகவான். எனவே அவருக்கு உகந்த வியாழன் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வதுதான் சிறப்பு.

முதல் வார வியாழன் கிழமை அன்று ஒரு மஞ்சள் நிற துணியில் ஒரு குண்டு மஞ்சள் மட்டும் வைத்து, அதனுடன் நாம் அடமானம் வைத்திருக்கும் நகையின் சீட்டையும் சேர்த்து மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயின் முன்பாக அதனை நமது கையில் வைத்துக்கொண்டு “ஓம் சொர்ணஸ்ரஜே நமஹ”என்ற மந்திரத்தை நம்மால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூறி வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று அடுத்த வார வியாழன் கிழமை அன்று இன்னொரு குண்டு மஞ்சளையும் சேர்த்து வைத்து இந்த மந்திரத்தை கூறி வேண்டிக் கொள்ள வேண்டும். இதே போன்ற தொடர்ந்து மூன்று வாரம் செய்த பிறகு அந்த மஞ்சளை உடைத்து தூளாக செய்து நமது தாலி சரடு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்துக் கொள்ளலாம் அல்லது வீடு சுத்தம் செய்யும் தண்ணீரில் சேர்த்தும் துடைக்கலாம்.

இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரம் இந்த எளிய பரிகாரத்தை முழு நம்பிக்கையுடனும், கடவுள் பக்தியுடனும் செய்யும்பொழுது நமது அடகு வைத்த நகை நிச்சயம் மூன்று மாதங்களில் நமது கைவந்து சேரும்.

செலவின்றி இடுப்பு வலி நீங்கணுமா? அப்போ கட்டை விரலை கொண்டு இந்த இடத்தை அழுத்துங்கள்!!

0

ஆண்,பெண் என்று அனைவருக்கும் இடுப்பு வலி ஏற்படுகிறது.அடிக்கடி குனிந்து வேலை செய்தல்,கால்சியம் குறைபாடு,வயது முதுமை போன்ற காரணங்களால் இடுப்பு வலி பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது.

பிரசவித்த பெண்கள்,30 வயதை கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி பாதிப்பு அதிகரிக்கிறது என்று ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.முந்தைய காலங்களில் இடுப்பு வலி பாதிப்பு உள்ளது என்று குறைவான நபர்களே கூறினர்.அதுவும் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த இடுப்பு வலி பாதிப்பு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதினருக்கு கூட இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த இடுப்பு வலி பாதிப்பை நமது முன்னோர்கள் கண்டுபிடித்த வர்மக்கலை மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.நம் முன்னோர்கள் ஏரளமான வர்மக்கலையை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்பொழுது வர்மக்கலை அழிந்து வருவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

நமது உடலில் 500க்கும் அதிகமான வர்ம புள்ளிகள் இருக்கிறது.மேல் தட்டு வர்மம்,மூட்டு வர்மம்,கால் பெருவிரல் வர்மம,சுழி வர்மம்,நட்டல் வர்மம்,கச்சை வர்மம்,பூட்டு வர்மம் என்று 553 வர்ம புள்ளிகள் இருக்கிறது.இதுபோன்ற வர்மக்கலைகள் மூலம் நமது இடுப்பு வலியை எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

இடுப்பு வலி பாதிப்பு இருப்பவர்கள் தரையில் பாய் போட்டு குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இடுப்பு பகுதியில் இரண்டு குழி போன்ற அமைப்பு இருக்கும்.அவற்றின் மீது கை கட்டை விரலை வைத்து கடிகார திசையில் 5 முறை மற்றும் கடிகார திசைக்கு எதிர் திசையில் 5 முறை என்று அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.

பிறகு இலுப்பை எண்ணையை லேசாக சூடாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஊற்றி இரண்டு கட்டை விரலை வைத்து தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் இடுப்பு வலி பாதிப்பு குணமாகிவிடும்.வாரத்தில் ஒருமுறை உடலில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து குளித்து வந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!

0

நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது.

சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று விதமான சுவைகளைக் கொண்டது.
இந்த செடியின் இலை, விதை மற்றும் வேர் ஆகிய அனைத்தும் அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது.

இந்த இலைகளை கொண்டு பல்வேறு விதமான நோய்களுக்கான ஆகச் சிறந்த மருந்துகளை தயாரிக்கலாம்.
அதேபோன்று இந்த நாயுருவி செடிக்கும், செல்வத்துக்கும் மிகப்பெரிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடிய இந்த செடியின் வேரினை எடுத்து, நமது வீட்டில் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்களில் பணம் வைக்கக் கூடிய இடங்களில் வைத்துக் கொண்டால், பணம் பெருகும் என்று கூறப்படுகிறது.

இந்தச் செடியின் வேரினை எடுக்கும் பொழுது கற்கள் அல்லது நமது கைகளைக் கொண்டுதான் எடுக்க வேண்டும். இந்த வேரினை எடுத்த பிறகு அதனை பசுமாட்டின் கோமியத்தால் நன்கு கழுவி விட வேண்டும்.

அதன் பிறகு இந்த வேரினை ஒரு மஞ்சள் நிற துணி அல்லது வெள்ளை நிற துணியில் குங்குமம், குண்டு மஞ்சள் மற்றும் நாயுருவிச் செடியின் வேர் ஆகிய மூன்றையும் வைத்து நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கட்டி வைத்ததை நமது வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு வைக்க வேண்டும். வைக்கும் பொழுது ‘எனது வீட்டில் இருக்கக்கூடிய பணமானது மென்மேலும் வளர வேண்டும். நிலையான செல்வம் வேண்டும். இந்த செல்வத்தின் மூலம் அழியாத சொத்தை நான் வாங்க வேண்டும்’ என்று மனதார தெய்வத்தை வேண்டிக்கொண்டு பணம் இருக்கக்கூடிய இடத்தில் இந்த வேரினை வைக்க வேண்டும்.

இந்தச் செடியின் இலைகளை அரைத்து நமது உடலில் எங்கேனும் ஆறாத புண்கள் இருந்தால் அதன் மீது வைக்கலாம். சர்க்கரை நோயாளிகள் உடம்பில் ஏற்படக்கூடிய புண்கள் மீதும் இந்த இலைகளை அரைத்து வைக்கலாம். இந்த இலைகளை அரைத்து வைப்பதன் மூலம் காயங்கள் விரைவில் குணமாகிவிடும்.

இந்த நாயுருவி செடியானது நரம்புகளை வலுவாக்கும், சிறுநீரை பெருக்கும், காய்ச்சலை குணப்படுத்தும், முக வசீகரத்தை ஏற்படுத்தும், சீதபேதியை குணமாக்கும், வியர்வையை தடுக்கும் இது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களுக்கு இந்த செடிகள் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

0

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனிபகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்றும் அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்வார்.

அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின் படி சனிபகவானின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சில ஆண்டுகளாக அவர்கள் பெற்ற துன்பங்கள் அனைத்தும் குறையும். இவ்வாறு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் மாற்றம் நன்மையை பயக்கும் என்பது குறித்து காண்போம்.

மிதுனம்:

சனிபகவானின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான பலன்களையே தரும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரும் வெற்றியை பெறுவீர்கள். வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வேலைகளில் இருந்து வந்த அவப்பெயர் நீங்கி நல்ல பெயர் கிடைக்கும்.

நீங்கள் விரும்பிய முடிவுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு கொண்டு இருந்த வேலைகள் நடக்கும். இத்தனை நாட்களாக பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி மிதுன ராசியினர் மகிழ்ச்சியுடனும், வசதியுடனும் வாழ்வீர்கள். சமூகத்தில் மரியாதை உண்டாகும்.

சிம்மம்:

மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சனி பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். வரப்போகிற ஆண்டில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நிதி நிலைமை வளர்ச்சி அடையும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். செல்வ செழிப்பும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் இறைவழிபாட்டினை அதிகரித்தால் சனி பெயர்ச்சியின் கெட்ட தாக்கம் மிக குறைவாக இருக்கும். சமூக அந்தஸ்தும் உயரும்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு பெயர்ச்சியாகும் சனி பகவானால் தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கன்னி ராசியினரின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பிய துறைகள் அனைத்திலும் வெற்றியை பெறுவீர்கள். கன்னி ராசியினருக்கு செல்வம் பெருகும். பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ உயர்வு கிடைக்கும். பிறரிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் சற்று கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது பலவிதமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த ராசியினரின் ஆற்றல்களும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெகு நாட்களாக உடல் நிலையில் இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி நல்ல தேக ஆரோக்கியம் மேம்படும்.

நிதி சிக்கல்கள் அனைத்தும் நீங்கி பணவரவு ஏற்படும். புதிய வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த பலன்களும் கிடைக்கும். சட்ட விவகாரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதிலும் வெற்றியை காண்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த திருமண வாழ்க்கை பாதிப்புகள் நீங்கி மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

0

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிதளவு காற்றையே தரும்.

சீலிங் ஃபேன் இன் வேகம் குறைகிறது என்றால் அந்த பேனில் தூசி மற்றும் குப்பைகள் படிந்து இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். எனவே ஃபேன் இன் ரெக்கையில் உள்ள குப்பைகளை நாம் சுத்தம் செய்தும் வைப்போம். ஆனாலும் ஒரு சில சமயங்களில் ஃபேன் னின் வேகம் அதிகரிக்காது.

ஃபேன் ஐ சுத்தம் செய்தும் காற்றின் வேகம் அதிகரிக்கவில்லை என்றால், பேனில் உள்ள கண்டன்ஸர் என்கின்ற பொருளை மாற்றினால் கண்டிப்பாக காற்றின் வேகம் அதிகரிக்கும். பொதுவாக இந்த கண்டன்சர் 70-80 ரூபாய்க்குள் தான் வரும்.

கண்டென்ஸர் மாற்றுவது அவ்வளவு கடினம் அல்ல. அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். இது ஃபேனின் மோட்டருக்கு மேலே இருக்கும். பழைய கண்டென்ஸரை அகற்றும் போது அதன் ஒயர் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள்.

சரியாக அதே வழியில் புதிய கண்டென்சரை மாற்றுங்கள் அதன் பிறகு மின்விசிறியை ஆன் செய்தால் அது சூப்பர் ஸ்பீடில் சுழலும்.
ஃபேன் ஐ அவ்வபோது சரியாக சுத்தம் செய்து, அதில் உள்ள பிரச்சனைகளையும் சரி செய்து கொண்டோம் என்றால் நீண்ட காலத்திற்கு அந்த ஃபேன் உழைக்கும்.

பர்தா பயிற்சி செய்யும் பெண் சொர்க்கத்தை அடையலாம்! சர்ச்சைக்குரிய கண்காட்சி

0

கர்நாடக மாணவர் அறிவியல் கண்காட்சி திட்டம் விசாரணையைத் தூண்டுகிறது: ‘பர்தா பயிற்சி செய்யும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம்’

கர்நாடக பள்ளி மாணவி ஒருவர் அறிவியல் கண்காட்சியில் பர்தா அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தியுள்ளது. பர்தா அணியும் பெண்கள் சொர்க்கத்தை அடையலாம் என்றும், பர்தா அணியாத பெண்கள் நரகத்தில் வாடுவார்கள் என்றும் மாணவி கூறியதை அடுத்து, பொதுக்கல்வித்துறை துணை இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவின் சாமராஜ்நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பள்ளி அறிவியல் கண்காட்சியில் “பர்தா” குறித்த தனது திட்டத்தைப் பற்றி விவாதித்த தேதியிடப்படாத வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், சில முஸ்லிம் சமூகங்களில் பர்தாவின் முக்கியத்துவத்தை அந்த பெண் விளக்குகிறார், “பர்தா செய்யும் பெண்கள் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைய முடியும்” என்றும், பர்தா அணியாதவர்கள் “நரகத்தில் அழுகுவார்கள்” என்றும் கூறுகிறார். இந்த வீடியோ ஆன்லைனில் விவாதங்களைத் தூண்டியுள்ளது, அறிவியல் கண்காட்சியில் மத நம்பிக்கைகளைச் சேர்ப்பது குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாரிகள் இன்னும் இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பள்ளி மாணவியின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தைத் தூண்டியுள்ளன, பலர் இந்த அறிக்கையைக் கண்டித்தும், பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். பல பயனர்கள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் மாநில டி.ஜி.பி. ஆகியோரை டேக் செய்து, உடனடி நடவடிக்கை மற்றும் முழுமையான விசாரணையைக் கோரினர்.

இதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். ஜனவரி 5 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ சமீபத்தில் ஆன்லைனில் வெளியானது, இது அதிகாரிகளை கவனிக்கத் தூண்டியது.
சாமராஜநகரில் உள்ள பொது அறிவுறுத்தல் துணை இயக்குநர் (DDPI) ராஜேந்திர ராஜே உர்ஸ், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோவில், “நீங்கள் பர்தா அணிந்தால், இறந்த பிறகு உடலுக்கு எதுவும் நடக்காது. ஆனால் நீங்கள் குட்டையான ஆடைகளை அணிந்தால், நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள், பாம்புகளும் தேள்களும் உங்கள் உடலைத் தின்றுவிடும்” என்று அந்தப் பெண் கூறுவதைக் கேட்கலாம்.

“பர்தா அணிந்திருக்கும் ஒரு பெண், இரத்தம் சிந்தும் தியாகியைப் போல தூய்மையானவள். பர்தா அணிந்திருக்கும் ஒரு பெண், ஹலால் சார்ந்த எந்த வேலையையும் செய்ய வல்லவள், பர்தா அணிந்திருக்கும் ஒரு பெண், எந்த ஹலால் வேலையையும் செய்ய வல்லவள், பர்தா ஒரு தடையல்ல, ஆனால் அது அவளை ஜன்னத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு வழியாகும்.”

பின்னர் அவர் மேலும் கூறுகையில், “பர்தாவின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒரு பெண் ஒரு ஆணையும் ஆணும் அவளையும் பார்ப்பதில்லை. பர்தா அணியாமல் சுற்றித் திரியும் ஒரு பெண்ணும், அவளைக் கேள்வி கேட்காத கணவனும் ஒரு ஜோடியாக இருக்கக் கூடாது. தனது மனைவியை பர்தா அணியாமல் இருக்க அனுமதிக்கும் எந்த ஆணும் ஒரு தய்யூஸ் (புத்திசாலி) மற்றும் அல்லாஹ் அத்தகைய நபரின் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதில்லை.”

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்!. அதிர்ச்சியில் ரசிகர்கள்!..

0

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை.

தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல படங்களிலும் மனோஜ் நடித்தார். துவக்கத்தில் ஹீரோவாக மட்டுமே நடித்த மனோஜ் ஒரு கட்டத்தில் கிடைக்கும் வேடங்களில் நடிக்க துவங்கினார்.

manoj

அப்பா பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தையும் மனோஜ் இயக்கினார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. கடந்த சில வருடங்களில் சினிமாவில் நடிக்கும் வேலையை மட்டும் மனோஜ் பார்த்து வந்தார். அதேநேரம், 2022ம் வருடத்திற்கு பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில்தான், தற்போது அவர் மரணம்டைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக சொல்லப்படும் நிலையில், சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று மாலை 6.30 மணியளவில் அவர் மரணமடைந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரின் இரங்கலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிராகன் ஹீரோ நடிக்கும் புதிய படம்!.. இயக்குனர் யார் தெரியுமா?…

0

துவக்கத்தில் குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். ஒரு கதையை எழுதி பல நடிகர்களிடம் சொல்லி ஒன்றும் நடக்காமல் கடைசியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் கோமாளி. அது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்து தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார். திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளம் பெண்ணும், பையனும் தங்களின் செல்போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லி இருந்தார் பிரதீப்.

இந்த படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து மற்ற இயக்குனர்களின் கதைகளில் நடிக்க விரும்பிய பிரதீப் இயக்குனர்கள் சொன்ன கதைகளை டிக் செய்தார். அதில் ஒருவர் விக்னேஷ் சிவன். ஆனால், எல்.ஐ.கே என்கிற பெயரில் துவங்கிய அந்த படம் பாதியிலேயே நிற்கிறது. பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

pradeep

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதிப் நடித்து வெளியான டிராகன் படமும் அசத்தலான வெற்றியை பெற்று 150 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரதீப் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. அதோடு, இந்த படத்திற்கு இப்போது வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கள் இசையமைக்கவுள்ளார்.

இரண்டு திட்டங்கள் வைத்திருந்தேன்!.. ஆனால் இப்படி நடந்துவிட்டது!. பவன் கல்யாண் உருக்கம்!…

0

80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார். புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார்.

ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை கிளப்பினார். ஹுசைனி தனது உடலை தானமும் செய்திருந்தார். அதேநேரம், எனது இதயத்தை எனது கராத்தே பயிற்சி மாணவர்களிடம் கொடுத்துவிடுங்கள் என கோரிக்கையும் வைத்திருந்தார்.

husaini

இந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஹுசைனை மரணமடைந்தார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜயையும், நடிகர் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் சந்திக்க ஆசைப்படுவதாக ஹுசனி கூறியிருந்தார். ஏனெனில், பத்ரி படம் உருவானபோது அவர்கள் இரண்டு பேருக்கும் சில பயிற்சிகளை ஹுசைனி கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே ஹுசைனியை சென்று பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் மரணமடைந்திருக்கிறார் ஹுசைனி.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பவன் கல்யாண் ‘ஹுசைனி உடல்நிலை சரியில்லாமல் போனது 4 நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியும். சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என சொல்லியிருந்தேன். வரும் 29ம் தேதி சென்னையில் ஹுசைனியை பாரக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், அவரின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் வேதனையாக இருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.