Home Blog Page 362

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

0

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். பாஜகவுடன் கூட்டணி அமைத்தே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை அதிமுக சந்தித்தது. ஆனால், இரண்டு தேர்தலிலுமே தோல்வி.

eps

இதற்கு மேல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அவ்வளவுதான் என அலார்ட் ஆன எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது. பாஜக தரப்பில் எடுக்கப்பட்ட சமரச பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில்தான் இன்று காலை டெல்லி சென்றுள்ளார் பழனிச்சாமி. அங்கு அமித்ஷா உள்ளிட்ட பாஜக பெரிய தலைகளை அவர் சந்திக்கவுள்ளார் என்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. சமீபத்தில் ‘பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என செய்தியாளர்கள் பழனிச்சாமியிடம் கேட்டபோது ‘தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லை’ என அவர் சொல்லாதது அவரின் மனமாற்றத்தை காட்டுவதாக இருந்தது. இந்நிலையில்தான் இன்று டெல்லி சென்றிருக்கிறார். ஏற்கனவே, ஈஷோ மையத்தில் சிவராத்திரி விழாவில் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசியிருந்தார். இன்று மாலை வேலுமணியும் டெல்லி செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி இன்று டெல்லி சென்றிருக்கிறார். அவர் யாரை சந்திக்க போகிறார் என்கிற செய்தியும் எங்களுக்கு வந்துள்ளது. எனவே, மும்மொழிக் கொள்கை தவறு என சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் வலியுறுத்த வேண்டும்’ எனவும் நாசுக்காக பேசியிருக்கிறார்.

செயின் பறிப்பு!.. சினிமா பாணியில் விமானத்தை நிறுத்தி 2 பேரை தூக்கிய போலீசார்!. குவியும் பாராட்டுக்கள்!..

0

சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் தலைநகர் சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.

சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. 15 சவரனுக்கு மேல் நகைகளை பெண்கள் பறிகொடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்நிலையில்தான் தலைநகரில் இன்று காலை 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

60 canceled flights!! Ban on air travel between India and USA!!
60 canceled flights!! Ban on air travel between India and USA!!

எனவே, செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது. அதில் 2 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விமானம் வழியாக அவர்கள் தப்பி செல்ல முயன்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விமான நிலையம் சென்று விமானத்தை நிறுத்தி அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டிகளை குறி வைத்து தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதோடு, அவர்களின் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் சென்னையில் எங்கெல்லாம் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பிளஸ் டூ மாணவியை ஓட விட்ட ஓட்டுனர்!.. போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!..

0

தமிழகத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல அரசு பேருந்தையே நம்பி இருக்கிறார்கள். குறிப்பாக கிராமம் மற்றும் சிறிய நகரத்தில் வசிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். ஏனெனில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பயணத்தை கொடுக்கிறது.

ஆனால், பேருந்து ஓட்டுனர்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு இலவச பயணம் என்பதால் நடத்துனர்களும் அவர்களை பேருந்தில் ஏற்ற ஆர்வம் காட்டுவது இல்லை. பேருந்து நிறுத்தத்தில் கூட நிற்காமல் வண்டியை ஓட்டி சென்றுவிடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று பிளஸ் டூ மாணவர்களுக்கு கடைசி தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் வாணியம்பாடி அருகேயுள்ள கோத்தக்கோட்டை எனும் பகுதியில் தேர்வு எழுத செல்ல மாணவி காத்திருந்தார். ஆனால், பேருந்து ஓட்டுனர் அவரை ஏற்றமால் கடந்து சென்றார். இதனால், அந்த மாணவி பேருந்தின் பின்னாலேயே ஓடினார். மாணவி ஓடி வருவதை பார்த்த பேருந்தில் இருந்த சிலர் ஓட்டுனரிடம் சொல்ல பேருந்து நிறுத்தப்பட்டது. அதன்பின் மாணவி பேருந்தில் ஏறி சென்றார்.

இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்த பலரும் அந்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கண்டனம் தெரிவித்தனர். விசாரணையில் அந்த ஓட்டுனர் பெயர் முனிராஜ் என்பது தெரியவந்துள்ளது. ஆம்பூர் பனிமனையில் இருந்து சென்ற பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு முனிராஜ் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். போக்குவரத்து கழகம் எடுத்த இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்!.. பொதுமக்கள் அச்சம்!..

0

பெண்கள் கழுத்தில் அணிந்திரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 65 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வருட இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தொடும் என்கிறார்கள்.

எனவே, சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள்.

சில சமயம் அப்படி தங்க செயினை பிடித்து இழுக்கும்போது பெண்கள் கீழே விழுந்து அவர்களின் கழுத்தில் காயம் ஏற்படுவதும் உண்டு. சிசிவிடி கேமராக்கள் இருந்தால் போலீசார் அடையாளம் காண முடியும். இல்லையென்றால் அவர்களை கண்டுபிடிப்பதே போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுதான் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக இருக்கிறது. தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் சிங்கார சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. 15 சவரனுக்கு மேல் நகைகளை பெண்கள் பறிகொடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்நிலையில்தான் தலைநகரில் இன்று காலை 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

0

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்கரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

savukku shanak

சுமார் 3 மணி நேரங்கள் அவர்கள் என் வீட்டில் இருந்தும் போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார்கள். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.. அவரின் வீட்டில் நடந்த இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதன்பின் ஊடகங்களில் பேசிய சவுக்கு சங்கர் ‘ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டு. இது திருவேங்டம் என்பவருக்கு தெரியும். அதனால்தான், சென்னை கமிஷனர் வருண் அறிவுரைப்படி திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இத நான் ஊடகங்களில் சொன்னதால் அவரின் வலியுறுத்தல்படியே என் வீட்டை சூறையாடியதோடு, வீட்டில் மலக்கழிவுகளை கொட்டியிருக்கிறார்கள். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் வருணுக்கும் தொடர்பு உண்டு ’ என பகீர் புகார் கூறினார். இதனையடுத்து, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டா என விசாரிக்கும்படி பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருக்கிறது.

armstrong

செல்வ பெருந்தைகை சொன்னதின் பேரில் வாணிஸ்ரீ விஜயகுமார் என்பவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார். அவர்தான் இரண்டு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று சவுக்கு சங்கர் வீட்டில் அராஜகம் செய்திருக்கிறார். இது வீடியோவில் பதிவாகியுள்ளது. தனது பெயர் வெளியே வந்தவுடன் தனது பேஸ்புக் கணக்கை அவர் அழித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். தற்போது கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டையும், தி.நகரில் உள்ள சவுக்கு அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லிவிட்டார்கள். மிரட்டல் காரணமாக இந்த நெருக்கடியை சங்கர் சந்தித்திருக்கிறார். இன்றோடு சவுக்கு மீடியா மூடப்படும் எனவும் அவர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

shankar

இந்நிலையில்தான், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறியிருக்கிறது. சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்தது திமுக ஆட்சியைத்தான். அதிலும், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோரை அவர் தொடர்ந்து திட்டி வந்தார். எனவே, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான ரியாக்‌ஷன் காட்டுவார் என்பது தெரியவில்லை. இதற்கு துணையாக சென்னை மாநகர காவல் ஆணையரே இருக்கும்போது சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் பலரும் சொல்லி வருகிறார்கள்.

 

IPL 2025 : 10 அணியில் இந்த அணி அதிக ஓட்டை கொண்டது!! முத்து சொல்லும் உண்மை என்ன!!

0

மார்ச் 22 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் மேட்ச் ஆனது ரசிகர்களை அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. காரணம் இந்த முறை ஐபிஎல்லில் இடம் பெற்று இருக்க கூடிய 10 அணிகளுக்கும் பல்வேறு வீரர்கள் மற்றும் கேப்டன்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகளில் மிகவும் மோசமான அணியாக எந்த அணி உள்ளது என்பது குறித்தும் அந்த அணியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் தொகுப்பாளர் முத்து அவர்கள் விவரித்து இருக்கிறார்.

தொகுப்பாளர் முத்து அதிக ஓட்டை இருப்பதாக தெரிவித்த அணி மற்றும் அதற்கான விவரங்கள் பின் வருமாறு :-

லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியில் தான் அதிக அளவு ஓட்டை இருப்பதாகவும் காரணம் கடந்த ஆண்டு அதாவது IPL 2024 ஆம் ஆண்டு கே எல் ராகுல் கேப்டனாக இருந்த பொழுது அவருடைய கேப்டன்ஷியில் குறுக்கீடுகள் நடந்ததாகவும் இது போன்ற குறுக்கீடுகள் நடைபெறுவதால் அந்த அணியால் சரியாக பர்ஃபார்மன்ஸ் செய்ய முடியவில்லை என்றும் அதேபோன்றுதான் இப்பொழுது ரிஷப் பண்ட் அவர்கள் அணியின் தலைவராக இருக்கக்கூடிய தருணத்திலும் நிகழ்கிறது என தெரிவித்திருக்கிறார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியில் மிச்சல் மார்ஸ், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டவர்கள் சிறந்த ஆட்ட வீரர்களாக இருக்கக்கூடிய நிலையில் அவர்களுடைய ஆட்டத்தை முடிவு செய்ய அந்த அணியின் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அணியில் அது போன்று நிகழ்வுகள் இல்லாத காரணத்தால் பல குழப்பங்கள் ஏற்படுவதாகவும் முத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் தெரிவித்தது போலவே நேற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின் பொழுது நிக்கோலஸ் பூரன் தன்னுடைய சிறந்த ஆட்டத்தால் 35 பந்துகளுக்கு 70 ரன்கள் அடித்த தன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரைத்தொடர்ந்த மிச்சல் மார்ஸ் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்கோர்களை குவித்த பொழுதும் நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தாலும் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியானது தோல்வியை சந்தித்திருக்கிறது.

இப்படியும் ஒரு விவாகரத்தா!! திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்த ஜீவி சைந்தவி ஜோடி!!

0

12 வருட காதலானது திருமணமாக மாறியது. அந்தத் திருமணத்திலிருந்து தற்பொழுது பல்வேறு திரை உலக்கினர் போல தாங்களும் விவாகரத்து பெற்ற பெரிய நினைப்பதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி தகவலை வெளியிட்டனர். இவர்கள் வெளியிட்ட தகவல் அவர்களுடைய ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

பிரியப் போகிறோம் என தெரிவித்த பொழுதும் ஒன்றாகவே இணைந்து இசை கச்சேரிகளில் பணிபுரிவது திரைப்படங்களில் பணிபுரிவது என பல வேலைகளை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் பிரியாமலேயே இருந்து விடமாட்டார்களா என்பது போல ரசிகர்களை ஏக்கம் கொள்ள செய்த இந்த ஜோடி, நீதிமன்றத்தை அணுகி பிரிவதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல் இருந்த நிலையில் நேற்று மார்ச் 24 அன்று நீதிமன்றத்திற்கு சென்ற தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய பின்பு இசையில் பின் தங்கத் தொடங்கினார். தற்பொழுது இசை மட்டுமே என முடிவெடுத்து களம் இறங்கி பல வெற்றி பாடல்களையும் இசைகளையும் ரசிகர்களுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறார். ட்ரெண்டில் உள்ள இசையமைப்பாளர் என்றால் அது ஜீவிதான் என சொல்வதற்கு இணங்க தன்னுடைய இசையால் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட தருணத்தில் தான் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பிரிவதற்காக நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதிலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இருவரும் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்த பின்பு ஒரே காரில் ஒன்றாக வீடு திரும்பியிருக்கின்றனர்
. பொதுவாக விவாகரத்து பெற நினைப்பவர்கள் தங்களுக்கு இடையே இருக்கக்கூடிய மனக்கசப்புகளால் தான் பிரிந்து வாழ நினைப்பார்கள் ஆனால் இவர்களோ என்ன காரணத்திற்காக பிரிந்து வாழ நினைக்கிறார்கள் என்பதே இங்கு குழப்பமாக அமைந்திருக்கிறது. இருவருக்கும் இடையில் நல்ல காதல் இருக்கிறது என்பதை தாண்டி இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளதாகவே இவர்களின் செயல்கள் தோன்ற வைப்பதாக அமைந்திருக்கிறது.

LSG vs DC : கலந்து கொள்ளாத கே எல் ராகுல்!! அழகிய பெண் குழந்தைக்கு தந்தையான தருணம்!!

0

நேற்று இந்தியன் பிரீமியர் லீக் தரப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் அணி இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் கே எல் ராகுல் அவர்கள் பங்குபெறாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்த பொழுது தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருப்பதாக தன்னுடைய INSTAGRAM பதிவில் தெரிவித்திருக்கிறார். ஏதோ கே எல் ராகுலின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயின்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் இடையே நடைபெற்ற ஆட்டம் முதல் இன்னிங்ஸ் முடிவடையும் பொழுது டெல்லி கேப்பிட்டல் அணி என்ன செய்யப் போகிறார்களோ என்பது போன்ற கேள்வியை எழுப்பினாலும் தங்களுடைய முதல் 10 ஓவர்களில் பெரிதளவு ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிறுத்தி நிறுத்தி ஆடிவந்த நிலையில் ரசிகர்கள் அவ்வளவுதான் என நினைத்த தருணத்தில் கடைசி 2 ஓவர்களில் அசிதோஸ் பரோல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை நோக்கிச் சென்ற டெல்லி கேப்பிட்டல் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.

ஆட்டம் ஒரு பக்கம் விறு விறு என சென்ற பொழுது மற்றொரு பக்கம் கே எல் ராகுல் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் தான் ஆசீர்வதிக்கப்பட்டேன் என INSTAGRAMல் பதிவிட்டு இருப்பது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வ பெருந்தகைக்கு தொடர்பா?!.. குவியும் புகார்கள்!…

0

திமுகவை தொடந்து கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

சுமார் 3 மணி நேரங்கள் அவர்கள் என் வீட்டில் இருந்தும் போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார்கள். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.. அவரின் வீட்டில் நடந்த இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

savukku shankar

அதன்பின் ஊடகங்களில் பேசிய சவுக்கு சங்கர் ‘ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டு. இது திருவேங்டம் என்பவருக்கு தெரியும். அதனால்தான், சென்னை கமிஷனர் வருண் அறிவுரைப்படி திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இத நான் ஊடகங்களில் சொன்னதால் அவரின் வலியுறுத்தல்படியே என் வீட்டை சூறையாடியதோடு, வீட்டில் மலக்கழிவுகளை கொட்டியிருக்கிறார்கள். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் வருணுக்கும் தொடர்பு உண்டு ’ என பகீர் புகார் கூறினார்.

இந்நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டா என விசாரிக்கும்படி பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருக்கிறது. ஒருபக்கம், சவுக்கு சங்கருக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கவுள்ளது.

வீட்டில் இருந்தபடியே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற!! விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்!!

0

கூட்டு பட்டா என்பது ஒரு நிலம் பல உரிமையாளர்களுக்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவில் அனைவரின் உடைய பெயரும் இடம் பெற்று இருக்கும். இது போன்ற கூட்டு பட்டாக்களில் இருந்து தனிப் பட்டா பெற நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

முதலில் தனிப்பட்ட பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் :-

✓ முந்தைய பட்டா நகல் ✓ தற்போதைய கூட்டு பட்டா
✓ விற்பனைச் சான்று (Sale Deed)
✓ பரிசளிப்பு ஆவணம் (Gift Deed)
✓ பகிர்வு உடன்படிக்கை (Partition Deed)
✓ பத்திர பதிவு நகல் (Registration Document Copy)
✓ நில வரைபடம் (FMB – Field Measurement Book)
✓ நகல் A-Register Extract
✓ நில உரிமை விவரங்களை உறுதி செய்யும் அரசு பதிவேடு
✓ தற்போதைய சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது
✓ ஆதார் அட்டை
✓ ரேஷன் அட்டை
✓ வாக்காளர் அட்டை
✓ உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற நினைப்பவர்கள் கூட்டு பட்டாவில் இடம் பெற்று இருக்க கூடிய அனைவரின் ஒப்புதலோடும் பெறுதல் அவசியம். இதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றால் மட்டுமே தனி பட்டா பெற முடியும். அதனைத் தொடர்ந்து சரியான நில அளவீடு மிக முக்கியமான ஒன்று.

விண்ணப்பிக்கும் முறை :-

நேரடியாக சென்று விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அவரவருடைய தாசில்தார் அலுவலகங்களுக்கு நீரல் சென்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் இ சேவை மையத்தின் உதவியுடன் பட்டா டிரான்ஸ்பர் என்பதை தேர்வு செய்து அதன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட ஆவணங்களோடு இணைத்த பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பெறுவதில் நில உரிமைச் சிக்கல் அல்லது மற்ற உரிமையாளர்களின் உடைய ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றால் முதலில் நீதிமன்றத்தை நாடி பிரச்சினைகளை தீர்த்த பின்பு தான் பிரச்சினைகளை தீர்த்த பின்பு தான் தனி பட்டா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பட்டா விண்ணப்பம் ஆனது நிராகரிப்பு செய்யப்பட்டால் அதற்கான முறையான காரணங்களோடு தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்யலாம்.