Home Blog Page 371

Health Tips: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த டிப்ஸை டெய்லி பாலோ பண்ணிட்டு வாங்க!!

0

இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டியது மிக முக்கியமான விஷயமாக உள்ளது.நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

1)விளக்கெண்ணெய்

தொப்பிளில் விளக்கெண்ணெய் வைத்தால் மூட்டு வலி,கால் வலி பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய விளக்கெண்ணையை தலைக்கு அப்ளை செய்யலாம்.

2)நல்லெண்ணெய் குளியல்

உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணய் குளியல் போடலாம்.கண் எரிச்சல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய நல்லெண்ணய் குளியல் போடலாம்.தூக்கமின்மை,சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக நல்லெண்ணெய் குளியல் போடலாம்.

3)திராட்சை சாறு

உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்த திராட்சை சாறு பருகலாம்.கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக திராட்சை சாறு பருகலாம்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக திராட்சை உட்கொள்ளலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திராட்சை சாப்பிடலாம்.

4)வயிற்று தொப்பை

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் வயிற்று தொப்பை குறையும்.

5)மருக்கள்

நாயுருவி இலை மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து அரைத்து மருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.

6)சிறுநீரக கல்

இளநீரில் சீரகம் சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சில வாரங்களில் சிறுநீரக கற்கள் கரைந்து வந்துவிடும்.

7)உளைச்சதை

வெண் பூசணியை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் வயிற்றில் உள்ள ஊளைச்சதை குறைந்துவிடும்.வெண் பூசணி சாறுடன் மிளகுத் தூள்,சீரகத் தூள் சேர்த்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

8)சர்க்கரை நோய்

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் மருந்து இல்லாமல் கட்டுப்படும்.கொய்யா பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

9)வயிற்றுப் போக்கு

கொத்தமல்லி விதையை ஊறவைத்து காலை நேரத்தில் பருகி வந்தால் வயிற்றுப்போக்கு பாதிப்பு குணமாகும்.

10)சளி இருமல்

வில்வ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் சளி,இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.வில்வ இலை பானம் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குழப்பம் வேண்டாம்.. தெளிவான விளக்கம் இதோ!!

0

உடலுக்கு நீர் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.உடலில் போதிய தண்ணீர் இல்லையென்றால் சிறுநீர் வெளியேற்றுவது கடினமாகிவிடும்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் தண்ணீர் குடிக்காமையால் ஏற்படுகிறது.

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.சிலர் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

சிலருக்கு தண்ணீர் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்காது.சாப்பிடும் பொழுது விக்கி கொள்ளாமல் இருக்க தண்ணீர் குடிக்கின்றோம்.தண்ணீர் குடித்தால் சாப்பாடு சீக்கிரம் செரிமானமாகும் என்று பலர் நினைக்கின்றனர்.

ஆனால் சிலர் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று சொல்கின்றனர்.உண்மையில் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.சாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்துவது நல்ல பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவிற்கு இடையில் அல்லது உணவு கொண்ட உடனே தண்ணீர் அருந்தினால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் பருகினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுமாம்.

உணவு உட்கொண்ட பிறகு குளிர்ந்த நீரை பருகினால் வயிற்று பிடிப்பு ஏற்படும்.உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் அருந்தும் பழக்கம் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.உணவு சாப்பிடும் பொழுது அதிகளவு தண்ணீர் குடிப்பதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும்.இதனால் உடலுக்கு போதிய உணவு உட்கொள்ள முடியாமல் ஊட்டச்சத்து குறைபாட்டை சந்திக்க நேரிடும்.

எனவே நிபுணர்கள் கூற்றுப்படி உணவு உட்கொள்வதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர்குடிக்கலாம்.அதேபோல் உணவு உட்கொண்ட அரை மணி நேரத்திற்கு பின்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம்.உணவு சாப்பிடும் பொழுது அவசியம் தண்ணீர் பருக வேண்டுமென்றால் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

உணவுக்கு கொண்டு சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.உணவை நன்கு மென்று சாப்பிட்டால் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படாது.

அதிக நேரம் நின்றபடி வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின் அபாயம்!! இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால் பிரச்சனை நீங்கும்!!

0

இன்று பெரும்பாலான மக்கள் நின்ற நிலையில் தான் அதிகமான வேலைகளை பார்க்கின்றனர்.தினமும் அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்களுக்கு உடலளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆண்,பெண் அனைவருக்கும் நின்றபடி வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.பெண்கள் சமையல் கட்டில் நெடு நேரம் நின்றபடி வேலை பார்க்கின்றனர்.தொடர்ந்து நின்றபடி வேலை பார்ப்பவர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அதை கவனிக்க தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக நேரம் நின்றபடி வேலை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)கால் பகுதியில் வீக்கம்

தொடர்ந்து அதிக நேரம் நின்றபடி வேலை பார்ப்பவர்களுக்கு கால் பகுதியில் அதிகமான வலி மற்றும் வீக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.தொடர்ச்சியாக நிற்காமல் சிறிது நேரம் அமர்வது,நடப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

2)வெரிகோஸ் வெயின்

தினமும் அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின் என்ற நரம்பு பிரச்சனை ஏற்படும்.பாதங்களில் அழுத்தம் ஏற்படுவதால் இந்த பாதிப்பு உண்டாகிறது.

3)தசை தளர்வு

நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு கால் தசை தளர்வு ஏற்படும்.இதனால் நிற்பதில் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

4)முதுகு வலி

அதிக நேரம் நின்று வேலை செய்தால் முதுகு வலி பாதிப்பு ஏற்படும்.அதிக நேரம் நிற்பதால் முதுகு தண்டுவடம் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது.

5)முதுகெலும்பு பிரச்சனை

நீண்ட நீரம் நின்றபடி வேலை செய்து வந்தால் முதுகெலும்பு பிரச்சனை ஏற்படும்.எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

6)மூட்டு வலி

தினமும் நின்றபடி பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு மூட்டு வலி பாதிப்பு கூடிய விரைவில் வந்துவிடும்.

எனவே நின்றபடி வேலை பார்ப்பவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.செவ்வாழையில் மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் சி,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த செவ்வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி பாலில் கலந்தும் சாப்பிடலாம்.அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம்.தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நின்றபடி வேலை செய்வதால் வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.

குடல் கழிவுகளை வெளியே தள்ளும் 3 இலைகள் கொண்ட பானம்!! உடனே ட்ரை பாண்ணுங்க!!

0

நமது குடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.குடல் கழிவுகளை ஆசனவாயில் வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)மாவிலை – இரண்டு
2)கொய்யா இலை – இரண்டு
3)நுணா இலை -இரண்டு
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

முதலில் மாவிலை இரண்டு பறித்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரண்டு கொய்யா இலை மற்றும் இரண்டு நுணா இலை பறித்துக் கொள்ளுங்கள்.மஞ்சணத்தி இலையை தான் நுணா இலை என்கின்றோம்.இந்த நுணா இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் நுணா இலை பொடியை வாங்கிக் கொள்ளவும்.

இந்த இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்துக் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பின்னர் அரைத்த பொடி கால் தேக்கரண்டி அளவு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் உள்ள கழிவுகள் மலத்தில் வந்துவிடும்.

குடல் கழிவுகளை வெளியேத் தள்ளும் மற்றொரு பானம்:

தேவையான பொருட்கள்:-

1)நிலாவரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

நாட்டு மருந்து கடையில் நிலாவரை பொடி கிடைக்கும்.இந்த பொடியை வாங்கி ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது கலந்து காலை நேரத்தில் பருக வேண்டும்.இப்படி செய்தால் குடல் கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் பருகினால் குடல் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு கலந்து பருகினாலும் குடல் கழிவுகள் முழுமையாக வெளியே வந்துவிடும்.

கோடை சூடு உடலை நெருங்காமல் இருக்க.. இந்த 6 வகை ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!!

0

வெயில் காலத்தில் அதிகப்படியான உடல் சூட்டால் பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க நேரிடுகிறது.அம்மை,வியர்க்குரு,வேனல் கட்டி,அரிப்பு,எரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் உடல் சூடுவதால் ஏற்படுகிறது.எனவே உடல் சூட்டை தணித்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 வகை ஜூஸ் செய்து பருகுங்கள்.

ஜூஸ் 01:

1)புதினா
2)எலுமிச்சை

முதலில் பத்து புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடல் சூடு குறைந்துவிடும்.உடல் சூட்டை தணிக்க புதினா இலை பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஜூஸ் 02:

1)வெண்பூசணி
2)புதினா

ஒரு கீற்று வெண்பூசணி காயை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஐந்து புதினா இலைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.

ஜூஸ் 03:

1)கொத்தமல்லி
2)இஞ்சி
3)எலுமிச்சை

கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு கொத்தமல்லி தலையுடன் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை கிளாஸிற்கு ஊற்றி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடல் சூடாகாமல் இருக்கும்.

ஜூஸ் 04:

1)வெந்தயம்
2)தண்ணீர்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

ஜூஸ் 05:

1)பெருஞ்சீரகம்
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் பெருஞ்சீரகம் 10 கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து குடித்தால் உடல் சூடாவது கட்டுப்படும்.வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

ஜூஸ் 06:

1)சோற்றுக்கற்றாழை
2)தண்ணீர்

ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தண்ணீரில் போட்டு நன்றாக அலசி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஜூஸாக பருகி வந்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.அதேபோல் துளசி இலை ஊறவைத்த பானத்தை பருகி வந்தால் உடல் சூடு தணியும்.

மாரடைப்பு Vs கார்டியாக் அரெஸ்ட்!! இவற்றின் அறிகுறிகள் மற்றும் உண்மை காரணங்கள்!!

0

கடந்த சில காலங்களாக இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வண்ணம் உள்ளது.சிறியவர்கள்,பெரியவர்கள் அனைவரும் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.இதய நோய் பிரச்சனை ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் முதலிடத்தில் இருக்கிறது.மோசமான உணவுகள் மாரடைப்பு பாதிப்பிற்கு வழிவகை செய்கிறது.மன அழுத்தம்,தூக்கமின்மை போன்ற காரணங்களால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

ஹார்ட் அட்டாக் மட்டும் இதய நோய் அல்ல.கார்டியாக் அரெஸ்ட்,இருதய நோய்,சீரற்ற இதயத் துடிப்பு போன்றவைகளும் இதய நோயில்அடங்கும்.இந்த இதய நோய்களால் ஆண்டு தோறும் 17 மில்லியனுக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.இதய நோய்க்கு அடிப்படை காரணம் மன அழுத்தம் மற்றும் சோம்பல் வாழ்க்கை முறையும்தான்.

இதய நோய்களான ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் ஆகிய இரண்டும் ஒன்று என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.இவை இரண்டும் ஒரே மாதிரி அறிகுறிகளை கொண்டிருப்பதால் இவற்றை ஒரே நோய் பாதிப்பு என்று நினைக்கின்றனர்.ஆனால் உண்மையில் இவை இரண்டு வெவேறான பாதிப்புகளாகும்.

இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது மாரடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் இரத்த ஓட்டம் தடைபடுவதால் கார்டியாக் அரெஸ்ட் உருவாகிறது.மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.ஆனால் கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் செயலற்று போவதை குறிக்கிறது.கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் சில நிமிடங்கள் மூளை மட்டும் இயங்கும்.

மாரடைப்பு வர காரணங்கள்:

1)ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம்
2)பிபி அதாவது உயர் இரத்த அழுத்தம்
3)மோசமான குடி மற்றும் புகைப்பழக்கம
4)சோம்பல் வாழ்க்கைமுறை
5)உடல் பருமன்
6)கெட்ட கொலஸ்ட்ரால்

மாரடைப்பு அறிகுறிகள் எப்படி இருக்கும்?

1)நெஞ்சு பகுதியில் வலி
2)இடது முதுகு பகுதியில் கடும் வலி
3)இடது தோள்பட்டை வலி
4)பதற்றம்
5)அதிக வியர்வை
6)மார்பு இறுக்கம்

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணங்கள்:

1)இதய தமனி அடைப்பு
2)சீரற்ற இதயத் துடிப்பு
3)உயர் இரத்த அழுத்தம்

கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

1)சுவாசிப்பதில் சிரமம்
2)மயக்கம்
3)நெஞ்சு வலி
4)உடல் சோர்வு
5)தலைச் சுற்றல்

மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் போன்ற எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி செய்ய வேண்டும்.சிறிது தாமதமானாலும் உயிர் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கோவிலுக்குப் போகும் பொழுது கடைபிடிக்க வேண்டிய செயல்கள்..!! செய்யக்கூடாத செயல்கள்..!!

0

நாம் கடவுளைக் காண கோவிலுக்கு செல்வதே நமது மன அமைதிக்காகவும், நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண்பதற்காகவும் தான். அவ்வாறு செல்லக்கூடிய கோவிலுக்கு முறைப்படி செல்ல வேண்டும். நமது பிரச்சனைகளுக்கான தீர்வை காண கோவிலுக்கு சென்று, அங்கு ஒரு புதிய பிரச்சினையை நமக்கு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பொழுது, நாம் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய செயல்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து தற்போது காணோம்.

ஒரு சில ஆண்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது சாட்ஸ் என்று சொல்லக்கூடிய உடையை அணிந்து கொண்டு செல்வார்கள். அவ்வாறு அணிந்து கொண்டு கோவிலுக்கு செல்ல கூடாது. கோவிலுக்கு செல்வதற்கு என பலவிதமான பாரம்பரிய உடைகள் உள்ளன. அவற்றை அணிந்து கொண்டு செல்வதுதான் நல்லது.

கோவிலுக்கு செல்லும் பொழுதே நமது நெற்றியில் திருநீரை வைத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். கோவிலில் கொடுக்கக்கூடிய திருநீறையும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கோவிலில் கொடுக்கக்கூடிய திருநீரை கோவிலின் சுவற்றில் துடைப்பது, கோவிலை அசுத்தப்படுத்துவது கூடாது.

கோவிலுக்கு வெளியே விட்டு வரக்கூடிய செருப்பு எவ்வளவு விலை மதிப்பானதாக இருந்தாலும் கூட, அந்த செருப்பினை குறித்து கோவிலுக்கு உள்ளே நினைத்துக் கொண்டே இருக்கக் கூடாது.

எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் முழுமுதற் கடவுளாகிய பிள்ளையாரை தான் நாம் முதலில் வணங்குவோம். அவ்வாறு வணங்குவதற்கு முன்பாக நமது கை, கால்களை நன்றாக கழுவி விட்டு, அதற்கு பிறகு தான் பிள்ளையாரை வணங்க வேண்டும்.

கோவிலில் உள்ள கொடி மரத்தின் அடியில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். கோவிலில் உள்ள அனைத்து கடவுளையும் வணங்கிய பின்னர், இறுதியாக கோவிலில் உள்ள கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்கி விட்டு தான் வீட்டுக்கு வரவேண்டும்.

இந்த கொடி மரத்திற்கு ஆண்கள் அஷ்ட நமஸ்காரத்தையும், பெண்கள் பஞ்ச நமஸ்காரத்தையும் செய்ய வேண்டும். கோவிலில் வாங்கக்கூடிய பிரசாதத்தை கோவிலில் வைக்க கூடாது. அதனை ஏதேனும் ஒரு பேப்பரில் மடித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

வீட்டில் நமது கையினால் கட்டிய பூவினையும், தேங்காய், பழத்தையும் கோவிலுக்கு கொண்டு செல்வது மிகவும் சிறந்தது. கோவிலில் அர்ச்சகர் கொடுத்த பூவினை மட்டுமே வாங்க வேண்டும்.

வேறு யாரிடமிருந்தும் பூவினை வாங்கக்கூடாது. அதேபோன்று கோவிலில் கொடுக்கக்கூடிய பூ எதுவாக இருந்தாலும், அப்பொழுதே தலையில் வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

கோவிலுக்கு தேவையான பொருட்களை நாம் கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.ஆனால் கோவிலில் இருந்து வெளியில் வரும் பொழுது நாம் எந்த ஒரு பொருட்களையும் அதாவது பிரசாதத்தை தவிர வேறு எந்த பொருட்களையும் நமது வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது.

அதேபோன்று கோவிலில் அர்ச்சகர் கொடுக்கக்கூடிய பூவினை தலையில் வைத்துக் கொண்டு, அதன் பிறகு கைகளை கழுவி விட வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற சன்னதிக்கு கடவுளை வணங்க செல்ல வேண்டும்.

கோவிலில் அமர்ந்து ஊர் கதை, உலக கதைகளை பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக தெய்வத்தின் நாமங்களை மனதில் பாராயணம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த தெய்வத்தின் முழு அருளும் நமக்கு கிடைக்கும்.

கோவில், கோவிலில் வேலை செய்பவர்கள், அங்கு உள்ளவர்கள், அர்ச்சகர்கள் என இதுபோன்ற யாரையும் குறை கூற கூடாது. கோவிலுக்கு உள்ளே நுழையும் பொழுதே அங்கு உள்ளவர்களுக்கு, அதாவது பிச்சை எடுப்பவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்து விட வேண்டும். கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது செய்யக்கூடாது.

பல வருட வயிற்றுப்புண்ணை ஒரு வாரத்தில் குணப்படுத்தும் உணவுகள்!! அல்சர் இருப்பவர்கள் அவசியம் பாலோ பண்ணுங்க!!

0

நமது வயிற்றுப் பகுதியில் அதாவது இரைப்பையில் உருவாகும் புண்களைதான் அல்சர் என்று அழைக்கின்றோம்.இந்த வயிற்று அல்சர் புண்ணை பெப்டிக் அல்சர் என்று கூறுகின்றனர்.அதிக அமில உணவுகளால் இந்த பாதிப்பு எளிதில் தோன்றுகிறது.

இந்த அல்சர் பாதிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் முதலிடத்தில் இருக்கின்றது.காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அல்சர் பாதிப்பு அதிகமாகும்.உணவு உட்கொள்வதை தவிர்த்தால் அல்சர் புண்கள் உருவாகும்.

வயிற்றுப் புண்கள் பாதிப்பை அலட்சியமாக கருதினால் அவை புற்றுநோய் பாதிப்பாக மாறிவிடும்.எனவே அல்சர் புண்கள் வந்தவர்கள் அவை தீவிரமடைவதற்கு முன்னர் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

அல்சர் புண்கள் உருவாக காரணங்கள்:

1)புளிப்பு மற்றும் காரணமான உணவுகள்
2)மோசமான உணவுப்பழக்கம்
3)அமில உணவுகள்
4)உணவு தவிர்த்தல்

அல்சர் புண் அறிகுறிகள்:

1)புளித்த ஏப்பம்
2)அசிடிட்டி
3)வயிறு எரிச்சல்
4)கருப்பு மலம்
5)ஆசனவாய் ஓட்டையில் எரிச்சல் உணர்வு
6)உணவை சாப்பிட்ட உடனே மலம் கழித்தல் நிலை

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:

பானங்களை சூடாக பருகுவதை தவிர்க்க வேண்டும்.காஃபின் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.காபி,டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிக காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.உணவை அந்தந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.முட்டைகோஸ்,காளிஃபிளவர்,ப்ரோக்கலி போன்ற காய்கறிகளை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.சிட்ரிக் அமில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மது,புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.உணவை பதப்படுத்தி சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.ஹோட்டல் உணவகளை தவிர்க்க வேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் செய்ய கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்:

உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.வெறும் வயிற்றில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் பருக வேண்டும்.பழைய சாதத்தை காலை நேரத்தில் சாப்பிடலாம்.காலை நேரத்தில் பீட்ரூட்,மாதுளை,ஆப்பிள் போன்றவற்றை ஜூஸாக செய்து சாப்பிடலாம்.

இந்த ஒரு பொருளை காகத்திற்கு உணவாக வையுங்கள்..!! தீராத கஷ்டங்களும் தீரும்..!!

0

நமது முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகின்றனர், என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது.
ஒரு குடும்பத்திற்கு வரவிருக்கும் நல்லது மற்றும் கெட்டதை முன்கூட்டியே அறிந்து, அதனை வலியுறுத்தக்கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு.

மற்ற பறவைகளிடம் இல்லாத ஒரு குணமும் இந்த காகத்திற்கு உண்டு. பொதுவாக மற்ற பறவைகள் எந்தவித தீட்டுகளையும் பார்க்காது, ஆனால் காகம் ஆனது தீட்டை உணர்ந்து நடக்கும்.

காகம் கூட்டங்களுள் ஏதேனும் ஒரு காகம் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி காக கூட்டங்கள் நிறைந்து இருக்கும். மேலும் தனது துக்கத்தையும் தெரிவித்து ஏதேனும் ஒரு நீர் நிலையங்களுக்கு சென்று குளிக்கவும் செய்யும். இவ்வாறு மனிதனுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் உயிரினங்களுள் காகமும் ஒன்று.

இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற இந்த காகத்திற்கு தினமும் நமது கையினால் உலர் திராட்சைகளை உணவாக வைக்க வேண்டும். தினமும் காகத்திற்கு உலர் திராட்சையை உணவாக வைத்து வந்தால், அதன் புண்ணியம் நமது ஏழேழு ஜென்மங்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களது வாழ்க்கை முடியும் வரை, எந்த வித தீர்க்க முடியாத பிரச்சனைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நமது வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படக் கூடாது என நினைப்பவர்கள், இந்த ஒரு பொருளை காகத்திற்கு தினமும் உணவாக வைத்து வந்தோம் என்றால், அதற்கான பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

காகம் நமது வீட்டிற்கு அருகில் வந்து கத்தினால் அதற்கு உணவு வைப்போம். ஆனால் அந்த காகம் உணவினை எடுக்காமல், கரைந்து கொண்டே இருக்கிறது என்றால், நமது வீட்டில் சுப செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வரப்போவதை உணர்த்துகிறது என்று அர்த்தம்.

அதேபோன்று நாம் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென காகம் அதன் இறக்கைகளினால் அல்லது கால்களினால் நமது தலையில் தட்டி சென்றாலோ அல்லது அதன் எச்சத்தை நம் மீது போட்டாலோ நமக்கு உடல் ரீதியான ஏதேனும் ஒரு பிரச்சனை வரப்போவதை குறிக்கிறது.

நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே வலியுறுத்தக் கூடிய தன்மை இந்த காகத்திற்கு இருப்பதினால் தான், இதுபோன்று செயல்களை நம்மிடம் வெளிப்படுத்துகிறது. அதேபோன்று காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது, ஒரு காகம் உணவு உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து, அனைத்து காகங்களும் சேர்ந்து உணவை அருந்தினால், நமது பித்ருக்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக இருப்பதாக அர்த்தம்.

எனவே காகத்திற்கு தினமும் உணவு வைப்பதனால் நமது பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனிபகவானின் ஆசீர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காகத்திற்கு பழைய, கெட்டுப்போன, மற்றும் எச்சில் சாதத்தை ஒருபோதும் வைக்க கூடாது.

மேலும் தினமும் காகத்திற்கு வைக்கக்கூடிய உணவுடன் உலர் திராட்சையையும் சேர்த்து வைத்து பாருங்கள், உங்களது வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை கண்கூடாக உணர முடியும்.

இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுனா.. அடம் பிடிக்கும் குழந்தைகளை சட்டுன்னு சாப்பிட வச்சிடலாம்!!

0

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க போராடுகின்றனர்.குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் அவர்களுக்கு களைத்துவிடுகிறது.ஸ்நாக்ஸ்,கடை உணவுகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகளை வீட்டு சாப்பாடு சாப்பிட வைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது.

ஜங்க் புட்,ஹோட்டல் உணவுகளைதான் குழந்தைகள் சாப்பிடுகிறர்கள் என்று பெற்றோரும் அதையே வாங்கி தருகின்றனர்.இது குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை முழுமையாக பாழாக்கிவிடும்.குழந்தைகள் நீங்கள் செய்து கொடுக்கும் உணவை அடம் பிடிக்காமல் சாப்பிட சில ட்ரிக்ஸை பாலோ செய்ய வேண்டும்.

முதலில் குழந்தைகளுக்கு கடையில் இருந்து ஸ்னாக்ஸ்,புட்ஸ் வாங்கி தருவதை நிறுத்த வேண்டும்.வீட்டில் செய்யக் கூடிய உணவுகளின் நன்மைகள் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவுகளை தயாரித்து கொடுப்பதை நிறுத்திவிட்டு வித விதமான உணவு சமைக்க தொடங்குங்கள்.இட்லி,தோசை போன்றவற்றை வெரைட்டியாக செய்து கொடுங்கள்.

தோசையை அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் உருவத்தில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.அதேபோல் இட்லி மீது கேரட்,பீட்ரூட் தூவி கொடுக்கலாம்.குழந்தைகளை கவர கேரட்,பீட்ரூட் இட்லி செய்து கொடுக்கலாம்.மினி இட்லி செய்து சாம்பாரில் ஊறவைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு உணவின் அருமையை எடுத்து சொல்ல வேண்டும்.அவர்களை காய்கறி கடைக்கு கூட்டி அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை எடுத்து தர சொல்லவும்.இப்படி செய்தால் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மீது விருப்பம் ஏற்படும்.

குழந்தைகளுடன் சேர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும்.குழந்தைகளுடன் பொறுமையாக பேசி சாப்பிட வையுங்கள்.கதைகள் சொல்லி சாப்பிட வையுங்கள்.குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுது டிவி,மொபைல் போன்றவற்றை பார்க்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுகளை அழகாக டெக்ரேட் செய்து கொடுத்தால் அதை ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.குழந்தைகள் சாப்பிடும் பொழுது திட்டுவது,கண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.குழந்தைகளுக்கு பசி இல்லாத பொழுது கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பால் மட்டும் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஹெல்த் மிக்ஸ்,முளைகட்டிய உணவு,வேக வைத்த வேர்க்கடலை,தாளித்த சுண்டல் போன்ற ஆரோக்கிய காலை உணவுகளை கொடுக்க வேண்டும்.காய்கறிகளை மசித்து கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.இப்படி அவர்களுக்கு பிடித்தபடி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.