Home Blog Page 372

நமது வீட்டின் ஹாலில் வைக்க வேண்டிய முக்கியமான வாஸ்து பொருட்கள்..!! லட்சுமி கடாட்சம் உருவாகும்..!!

0

நாம் வாழக்கூடிய வீடு தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது நமது வீட்டை நாம் எவ்வாறு வைத்து இருக்கிறோம், எந்தெந்த பொருட்களை வைத்து இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமது வாழ்க்கை மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியும்.

ஒரு சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வ வளம் குறையும் என்று கூறுவதைப் போன்று, ஒரு சில பொருட்களை நமது வீட்டில் வைத்தால் செல்வ வளம் மற்றும் லட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்தும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நம்முடைய வீட்டில் வைத்திருக்கும் சில மங்கலகரமான பொருட்கள் செல்வ செழிப்பை அதிகரித்து வீட்டை லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்தப் பதிவில் அந்த பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி தெளிவாக காண்போம்.

1. விநாயகர் படம்:

நமது வீட்டின் ஹாலில் கண்டிப்பாக விநாயகர் படம் வைத்திருக்க வேண்டும். நம் வீட்டிற்கு புதிய நபர்கள் வரும்போது இந்த விநாயர் படத்தை பார்க்கும் போது அது அவர்களுக்கு சாந்தத்தையும், மனநிம்மதியையும் தரும் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் சிலையை ஹாலில் வைக்கும் போது அவர் அமைதியான தியானம் செய்யக்கூடிய நிலை, சண்டை சச்சரவு இன்றி சாந்தமாக பேசக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

2. கண்ணாடி:
வீட்டின் வாசலில் கண்ணாடியை வைப்பது மிகவும் நல்லது. இது எதிர்மறையான விஷயங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்றையான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களின் மனதை மாற்றக்கூடிய ஆற்றலையும் கொண்டது.

3. மாவிலை தோரணம்:
வீட்டில் ஏதேனும் விஷேசம் நடக்கும் போது மாவிலை தோரணம் கட்டும் பழக்கம் இருக்கும். இதை விஷேச நாட்களில் தான் கட்ட வேண்டும் என்றில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாவிலை தோரணம் கட்டலாம். மாவிலை தோரணத்தை மஞ்சள் கயிற்றில் கட்டுவது இன்னும் விஷேசம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறையான ஆற்றலையும் கொண்டு வரும்.

4. இயற்கை தொடர்பான படங்கள்:
வீட்டினுடைய ஹாலில் இயற்கை சம்மந்தமான படங்களை வைப்பது சிறப்பு. இயற்கையான விஷயங்களை படங்களாகவோ அல்லது ஓவியமாகாவோ பார்க்கும் போது மனதுக்கு ஆத்மதிருப்தி ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சி, கடல், காடு, ஆறு போன்றவையாக அப்படங்கள் இருக்கலாம். இதை பார்க்கும் போது நமக்கு பல்வேறு செயல்களை செய்வதற்கான ஊக்கத்தை கொடுக்கும்.

5. மங்கல பொருட்கள்:
நமது வீட்டின் ஹாலில் ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற மங்கலகரமான பொருட்களை வைத்திருக்க வேண்டும். சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், குழந்தைகள் வந்தால் விபூதியிட்டு ஆசிர்வதிப்பதும் நல்ல செயலாக கருதப்படுகிறது.

6. தண்ணீர்:
நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு வந்த உடனேயே தண்ணீர் குடிக்க தருவது ஆத்ம சாந்தியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. எனவே வீட்டின் ஹாலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வது சிறப்பை தரும்.

தலையை அசைத்தாலே கிர்ருன்னு சுத்துதா? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்!!

0

உங்களில் சிலர் Vertigo அதாவது தலைசுற்றல் உணர்வை அடிக்கடி அனுபவித்து வரலாம்.திடீரென்று தலையை அசைக்கும் பொழுது உலகமே சுற்றுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.தலை சுழல்வது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த வெர்டிகோ பிரச்சனையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிடுகிறது.

உடல் நலப் பிரச்சனை குறிப்பாக காது மற்றும் மூளை நரம்புகளில் பிரச்சனை ஏற்பட்டால் இந்த வெர்டிகோ பாதிப்பு ஏற்படும்.வெர்டிகோவில் பெரிபெரல் வெர்டிகோ,சென்ட்ரல் வெர்டிகோ என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் மூளைதொடர்பான தலைசுற்றல் பிரச்சனை சென்ட்ரல் வெர்டிகோவால் ஏற்படுகிறது.

அதேபோல் காது தொடர்பான தலைசுற்றல் பிரச்சனை பெரபெரல் வெர்டிகோவால் ஏற்படுகிறது.மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுதல்,மூளையில் கட்டி இருத்தல்,இரத்த ஓட்டம் குறைதல் போன்ற காரணங்களால் சென்ட்ரல் வெர்டிகோ பிரச்சனை ஏற்படுகிறது.

காதுகளில் மெனியர்ஸ் பாதிப்பு,வெஸ்டிபுலர் நியூரிடிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் பெரிபெரல் வெர்டிகோ பிரச்சனை ஏற்படும்.

வெர்டிகோ அறிகுறிகள் எப்படி இருக்கும்?

அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படும்
வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்
உடல் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்படும்
பேசுவதில் சிரமம் ஏற்படும்
சமநிலையில் மாற்றம்

வெர்டிகோ பிரச்சனையை தடுப்பது எப்படி?

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண வேண்டும்.

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.

உங்களுக்கு திடீர் தலைச்சுற்றல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் படுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

வெர்டிகோ பாதிப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.இந்த வெர்டிகோ தீவிர உடல் நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.வெர்டிகோ பிரச்சனை இருந்தால் நீங்கள் MRI,CT ஸ்கேன் செய்து உடல்நிலை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

வெர்டிகோ பாதிப்பை அலட்சியமாக கருதி எந்தஒரு சிகிச்சையும் மேற்கொள்ளவிட்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள்.எனவே உரிய மருத்துவ சிகிச்சை மூலம் வெர்டிகோ பாதிப்பை சரி செய்து கொள்ளுங்கள்.

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மாத்திரை!! ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்!!

0

கேன்சர் உலகின் கொடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது.இந்த கேன்சர் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் கேன்சர் பாதிப்பு ஆரம்ப நிலையை கடந்துவிட்டால் குணப்படுத்துவது சவாலான விஷயமாகிவிடும்.

புற்றுநோய் பல்வேறு காரணங்களால் வருகிறது.வாழ்க்கைமுறை,பாலியல் சார்ந்த பிரச்சனை,புகைப்பழக்கம்,மோசமான உணவுப் பழக்கம் என்று பல காரணங்களால புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மனித உடலில் கட்டிகள் போன்று உருவாகும் புற்றுநோய் நாளடைவில் உடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது.

இந்த புற்றுநோய் பாதிப்பு நடுத்தர வயதினரையே அதிகம் பாதிக்கிறது.இந்த புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்த மருந்து,மாத்திரைகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஆஸ்பிரின் மாத்திரை புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது என்ற பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.நடுத்தர வயதினர் மற்றும் முதிய வயதினர் இருதய நோய்,புற்றுநோய் போன்ற பாதிப்புகளை அதிகமாக சந்திக்கின்றனர்.இந்த பாதிப்புகள் குறைய ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் எழுபத்து ஐந்து மில்லி கிராம் அளவிற்கு உட்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்பிரின் என்பது வலி நிவாரணி மாத்திரை ஆகும்.இந்த ஆஸ்பிரின் மாத்திரை உடலில் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.இந்த ஆஸ்பிரின் மாத்திரை அனைத்து மருந்தகங்களிலும் குறைவான விலையில் கிடைக்கும்.இருப்பினும் நீங்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.நீங்கள் அளவிற்கு அதிகமாக ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் ஆஸ்பிரின் மாத்திரை புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்குமா என்ற ஆராய்ச்சி இன்றுவரை நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொருட்களை வைத்து நவகிரகங்களை வழிபடுவதன் மூலம் உங்கள் ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்..!!

0

இந்து மதத்தின் படி ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவக்கிரகங்களின் நிலையைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

நமது விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவைதான் நாம் கூறக்கூடிய ஒன்பது நவகிரகங்கள். இவற்றுள் ஏழு கிரகங்கள் வானத்தில் உள்ள கோள்களை வைத்து கணக்கிடப்படுகிறது. ராகு, கேது என்பது தீய சக்திகளை நிர்வகிக்கும் இரண்டு முக்கிய கிரகங்களாக கூறப்படுகிறது.

இந்த கிரகங்களின் சுழற்சியை பொறுத்து தான் நமது வாழ்க்கையில் நன்மைகள், தீமைகள் என மாறி மாறி வருகின்றன. இந்த கிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால், நம்மை ஒரே இரவில் ராஜாவாகவும் மாற்றிவிடும். ஆனால் தவறான இடத்தில் இருந்தால் ராஜாவையும் ஏழையாக மாற்றி விடும்.

இந்த நவகிரகங்களுக்கு பிடித்தமான உணவினை நெய்வேத்தியமாக வைத்து வணங்குவதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதத்தை நாம் பெற முடியும்.

1. சூரியன்:
ஞாயிறு என்பது சூரியனின் நாளாக கருதப்படுகிறது. நெருப்பின் கடவுளான இவருக்கு மிகவும் பிடித்தமான நிறம் என்பது சிவப்பு. அவருக்கு பிடித்த உணவுகள் வெல்லம், சிவப்பு பருப்பு, குங்குமப்பூ, சந்தனம், கோதுமை, சிவப்பு வண்ண பழங்கள் இந்த பொருட்களை வைத்து சூரியனை வழிபடுவது நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

2. சந்திரன்:
நிலவானது திங்கள்கிழமையை குறிக்கும். சந்திரனுக்கு வெள்ளை நிற பொருட்கள் அனைத்தும் பிடிக்கும். அரிசி, பால், தயிர், நெய், உப்பு, சர்க்கரை, முந்திரி, வெள்ளை இனிப்புகள், முள்ளங்கி இவற்றை பிரசாதமாக படைக்கலாம். இதன் மூலம் வாழ்க்கையில் அமைதி நிலவும்.

3. செவ்வாய்:
செவ்வாய் கிரகத்திற்கு உகந்த கிழமை செவ்வாய். செவ்வாய் கிரகத்திற்கான கடவுள் வாயுபுத்திரன் ஹனுமன். இவருக்கு மிகவும் பிடித்த பொருள் சிவப்பு பருப்பு, வெல்லம், மாதுளை, அனைத்து சிவப்பு வண்ண பழங்கள். இரத்தம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இந்த கிரகம் குணப்படுத்தும்.

4. புதன்:
புதன் கிரகம் மெர்குரி என்று அழைக்கப்படுகிறது. புதன் கிரகத்திற்கு பிடித்த நிறம் பச்சை. எனவே பச்சைப் பருப்பு, பச்சை நிற பழங்கள், பூசணிக்காய், பச்சை நிற இனிப்பு இவற்றை வைத்து வழிபடுவதன் மூலம் மன சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.

5. வியாழன்:
வியாழன் என்பது பிரகஷ்வதி கடவுளை குறிக்கும். இவருக்கு பிடித்தமான நிறம் மஞ்சள். எனவே லட்டு, சுண்டல், மஞ்சள் நிற பழங்கள் இது போன்றவைகளை பிரசாதமாக படைக்கலாம். இதன் மூலம் அனைத்து சிறுநீரக பிரச்சனைகளும் குணமாவதுடன், நோயற்ற வாழ்வை வாழலாம்.

6. சுக்கிரன்:
சுக்கிரனுக்கு உரிய கிழமை என்றால் வெள்ளிக்கிழமை. இவர் செல்வத்திற்கு அதிபதியாகவும் திகழ்கிறார். இவருக்கு வெள்ளை நிறத்தில் உள்ள பொருட்களை வைத்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். எனவே அரிசி, சர்க்கரை, ரவை, வெள்ளை நிற பழங்கள் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்யலாம். இவரை வழிபடுவதன் மூலம் பண கஷ்டங்கள் நீங்கும்.

7. சனி:
பெயரைக் கேட்டாலே அனைவரும் பயப்படக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். இவருக்கு பிடித்தமான நிறம் கருப்பு. இவருக்கு கருப்பு உளுந்து, கருப்பு எள், கடுகு எண்ணெய், கருப்பு சுண்டல், கருப்பு பழங்கள் இவற்றை படைக்கலாம். எதிரிகளின் தொல்லைகளில் இருந்து இவர் நம்மை காப்பாற்றுவார். இவரின் கருணை பார்வையை பெறுவது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.

8. ராகு, கேது:
ராகு கேது என்பது சந்திரனின் ஏறுமுனை மற்றும் இறங்கு முனையை குறிக்கும். ராகு கேது என்பது ஒரு நிழல் கிரகம் ஆகும். அதாவது ஒருவர் எங்கு சென்றாலும் மற்றவரும் அவர் உடனே செல்வர். இவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே நகரக்கூடியவர்கள்.இவர்களுக்கு பிடித்தமான நிறம் என்றால் கருப்பு.

எனவே கருப்பு எள், கருப்பு பழங்கள், கருப்பு நிற பூக்கள், இனிப்புகள் இவற்றை வைத்து வழிபடலாம். இவர்களை வழிபடுவதன் மூலம் நமக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குவார்கள்.

திருப்பதிக்கு போகும் பொழுது பக்தர்களாகிய நாம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..!! என்னவென்று தெரியுமா..??

0

வைகுண்ட பரந்தாமனாகிய ஸ்ரீனிவாசர் அவரது திருமணத்திற்கு தேவையான பணத்தை குபேரரிடம் இருந்துதான் கடனாக வாங்கினார் என்பதை நம்முள் பலரும் அறிந்து இருப்போம். கடன் கொடுத்த குபேரனும் சில கட்டுப்பாடுகளை முன் வைத்த பின்னரே ஸ்ரீனிவாசருக்கு கடன் கொடுத்தார். அந்த கட்டுப்பாடுகள் என்ன என்பது தற்பொழுதும் திருப்பதியில் உள்ள வராகர் சன்னதியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று ஸ்ரீனிவாசர் குபேரருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதுமட்டுமன்றி அவரை காண வரும் பக்தர்களுக்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மக்கள் யாரும் பெருமாள் கூறிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது கிடையாது. அந்த விதிமுறைகளை தெரியாமலும் இருக்கின்றோம்.

கலியுக வைகுண்டமான திருப்பதி சென்றும் எனது கஷ்டங்கள் சிறிதும் குறையவில்லை, நான் வேண்டிய எதுவும் நடப்பதில்லை என கவலை கொள்பவர்கள் இந்த உலகில் நிறைய பேர் உள்ளனர். அவ்வாறு நினைப்பவர்கள் திருப்பதி செல்லும் பொழுது, தவறியும் செய்யக்கூடாத சில தவறுகள் என்னென்ன என்பது குறித்து தற்போது காண்போம்.

1.ஏழு மலை ,ஏழு கடல்களை தாண்டி தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பெருமாளே நீங்கள் என்னை காண்பதற்கு முன்பாக, வேறு ஒருவரை பார்த்து விட்டு தான் என்னை காண வரவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்தான் வராக மூர்த்தி. இந்த வராக பெருமானை தரிசித்து வழிபட்ட பின்னர் தான் ஏழுமலையானை காண செல்ல வேண்டும்.

திருப்பதி வெங்கடாஜலபதியின் வடக்கு ஆலயத்தில் தான், இந்த வராக மூர்த்தியின் ஆலயம் உள்ளது. எனவே இவரை முதலில் வணங்கிய பின்னர் தான் ஏழுமலையானை வணங்க செல்ல வேண்டும். மேலும் இவரை வணங்காமல் வந்தாலும் நமது திருப்பதி யாத்திரை முழுமை அடையாது என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால் வேங்கடவன் இருக்கக்கூடிய திருமலை என்பது இந்த வராக பெருமானின் இடமாகும். இவருடைய இடத்தில் தான் நமது வெங்கடாஜலபதி அவர்கள் குடிகொண்டு இருக்கிறார்.

2. நமது இந்து மதத்தின்படி திருமணம் ஆகி ஒரு வருடங்கள் வரை புதுமண தம்பதிகள் மலை ஏறக்கூடாது, கடலில் கால் நினைக்க கூடாது, கும்பாபிஷேகம் பார்க்க கூடாது, தேர் வடம் பிடித்து இழுக்க கூடாது என சில விதிமுறைகள் புதுமண தம்பதிகளுக்கு இருக்கும்.

ஆனால் இன்றைய காலத்தில் புதுமண தம்பதிகள் தேன் நிலவிற்கு வருவது போல, ஒரு வருடம் ஆவதற்கு முன்பாகவே திருப்பதி ஏழுமலையானை காண சென்று விடுகின்றனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பரந்தாமன் குடிகொண்டுள்ள பூலோக வைகுண்டம் என்பதை மறந்து அங்கு செல்கின்றனர்.

இவ்வாறு புதுமண தம்பதிகள் திருமலைக்கு சென்றாலும் கூட, அங்கு தனியாக ஒரு அறை எடுத்து தங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திருமலையில் இல்லற வாழ்க்கையை தொடங்கக்கூடாது.

3. திருமலையில் வசிக்கும் லட்சுமி தாயிடமோ, வராகரிடமோ, ஆஞ்சநேயரிடமோ, கருடனிடமோ நாம் செல்கின்ற அவசரத்தில் காசுகளை தூக்கி எறிந்து விட்டு வரக்கூடாது. அவ்வாறு கடவுளிடம் காசுகளை தூக்கி எறிவது கடவுளை அவமானப்படுத்துவதற்கு சமம்.
திருமலையில் உள்ள தெய்வங்களிடம் ‘எங்களுக்கு தேவையான செல்வங்களை கொடு’ என்று கேட்கக்கூடிய பக்தர்களாகிய நாம், அந்த தெய்வங்களின் மீது செல்வங்களை தூக்கி எறிய கூடாது.

நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடு என வேண்டிக் கொண்டு காசுகளை உண்டியல்களில் போட வேண்டுமே தவிர தூக்கி எறிய கூடாது.
இது திருப்பதியில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும் நாம் செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு ஆகும்.

அதேபோன்று திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாக நமது இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தையோ வணங்கி விட்டு தான் யாத்திரையை தொடங்க வேண்டும்.

இறைவனை வணங்குவதை தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் திருமலைக்குச் செல்லக்கூடாது. பெருமாளை வணங்கும் பொழுது பெருமானின் பாதத்திலிருந்து தான் வணங்க வேண்டும்.

இவ்வாறு பெருமானின் பாதத்திலிருந்து வணங்கி கொண்டே வரும்பொழுது பெருமாளின் நெஞ்சில் மகாலட்சுமி தாயார் இருப்பார். அவரை வணங்க மறக்கக்கூடாது. இறுதியாக தான் பெருமாளின் முகத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.

இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைக்க வேண்டிய இடம் மற்றும் திசை..!! வழிபடும் முறை..!!

0

நம்மை பெற்று, வளர்த்து, பேணி பாதுகாத்த நமது பெற்றோர்கள் அல்லது நமது முன்னோர்கள் அனைவரையும் நாம் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று அவர்கள் இறந்த பின்னரும் அவர்களை மறக்காமல் அவர்களுக்கு உரிய வழிபாட்டினை நாம் கொடுக்க வேண்டும்.
இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இறந்தவர்களின் படத்தை நமது வீட்டில் வைத்திருந்தால் தான், நமது வருங்கால சன்னதியினருக்கு நமது முன்னோர்கள் குறித்த ஒரு விழிப்புணர்வு அவர்களுக்கு கிடைக்கும்.

நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோரின் புகைப்படத்தை நமது பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும் இந்த புகைப்படங்கள் உதவும். நம்மை பெற்று வளர்த்த நமது தாய் தந்தையரின் புகைப்படத்தை, கடவுளுக்கு நிகராக கருதினாலும் கூட, இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது.

ஏனென்றால் நமது தாய் தந்தையர் நமக்கு கடவுளாக இருந்தாலும் கூட, அவர்களும் ஒரு மனிதர்கள் தான். மனிதர்கள் என்றாலே ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அல்லது ஏதேனும் ஒரு நேரத்தில் தீய குணங்களுக்கு ஆட்பட்டு இருப்பார்கள். எனவே தான் இறந்த மனிதர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது.

அனைத்தையும் துறந்த தெய்வ நிலையில் உள்ளவர்களின் புகைப்படத்தை மட்டுமே பூஜை அறையில் வைக்க வேண்டும். அதேபோன்று படுக்கையறையிலும் வைக்கக் கூடாது. வீட்டில் உள்ள சமையல் அறை மற்றும் ஹாலில் இறந்தவர்களின் புகைப்படத்தை தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

இறந்தவர்களின் புகைப்படத்தை வழிபடுவதற்கு என தனியாக ஒரு விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் பயன்படுத்தக்கூடிய விளக்கை இதற்கு பயன்படுத்தக் கூடாது. அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு இது போன்ற எந்த வகை விளக்கானாலும், ஒரு தனி விளக்காக வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமும் காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி தீப தூப ஆராதனை காட்டுவது என்பது மிக முக்கியமான பழக்கவழக்கங்களில் ஒன்று. அதேபோன்றுதான் நமது இறந்த முன்னோர்களின் புகைப்படத்திற்கும் தினமும் பூ வைத்து,விளக்கேற்றி தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.

கடவுளுக்கு தினமும் ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் வைப்பது போன்று, நமது முன்னோருக்கும் ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் என்பதும் தினமும் வைக்க வேண்டும். அமாவாசை நாட்களில் அந்தப் படத்தை ஒரு மனையில் வைத்து, இலை போட்டு படையல் வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம்.

இறந்தவர்களின் புகைப்படத்திற்கு ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி போன்ற அனைத்தையும் காட்டி வழிபாடு செய்யலாம். அதேபோன்று இறந்தவர்களின் பார்வை தெற்கு பார்த்தவாறு இருக்கும்படி அவர்களின் புகைப்படத்தை நமது வீடுகளில் மாட்ட வேண்டும்.

அதாவது நமது வீட்டில் வடக்கு பக்கமாக இருக்கக்கூடிய சுவற்றில் இறந்தவர்களின் படத்தை மாட்டினால், அந்தப் புகைப்படம் தெற்கு பார்த்தவாறு அமையும். இந்த திசை தான் இறந்தவர்களின் படத்தை மாட்டுவதற்கு சரியான மற்றும் உகந்த திசையும் ஆகும்.

இந்த திசையில் இறந்தவர்களின் புகைப்படத்தை மாட்டினால், அந்த குடும்பத்திற்கு தேவையான வளர்ச்சியை கொடுக்கும்.

நிலையான குறையாத செல்வத்தைத் தரக்கூடிய அதீத சக்தி வாய்ந்த வேர்..!!

0

நமது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பது மென்மேலும் நாம் சந்தோஷமாக வாழ்வதற்கும், நமது எதிர்கால சன்னதிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் இவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதித்து, நாம் ஒன்று நினைத்து பணத்தை சேமித்து வைத்தால், அது வீண் செலவாக அதிலும் தேவையில்லாத விரைய செலவாக ஆனால் நமக்கு மிகவும் கவலையாக இருக்கும்.

ஆனால் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயங்கள் ஆகாமல், மென்மேலும் நமது பணத்தை சேமித்து வைப்பதற்கு என ஒரு சிறந்த வழிகள் உள்ளது. அந்த வழியை பின்பற்றினால் நமது வீட்டில் எப்பொழுதும் நிலையான மற்றும் குறையாத செல்வங்கள் என்பது எப்பொழுதும் நீடித்து இருக்கும்.

அதிர்ஷ்டம் தரக்கூடிய வேர்:

ஒரு செடி, மரம், இலை, பூ இது போன்றவைகளில் இருந்து நல்ல செல்வமும், நல்ல வரமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ஒரு வேரின் மூலம் நமது வாழ்க்கைக்கு தேவையான சந்தோஷம், நிம்மதி, பணவரவு ஆகிய அனைத்தையும் பெற முடியும் என்பதை நம்முள் பலரும் அறியாமல் இருப்போம்.

ஒரு பெரிய மரமாக இருந்தாலும் சரி, சிறிய செடியாக இருந்தாலும் சரி அதனுடைய செழுமைக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருப்பது அதன் வேர் தான். அந்த வேர்தான் அந்த செடியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.

வேர்களின் முக்கிய பணி என்பது செடிகளுக்கு தேவையான சத்துக்களையும், நீரினையும் உரிந்து கொடுப்பது. இவ்வாறு இந்த வேர் செடிகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதன் மூலம், அந்த செடி மென்மேலும் வளர்ச்சி அடைந்து மிகப்பெரிய மரமாக மாறும்.
அதேபோன்றுதான் இந்த வேரினை நமது வீட்டில் வைத்திருக்கும் பொழுது நமது வீட்டில் உள்ள செல்வ வளம் என்பது மென்மேலும் வளர்ச்சி அடையும் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வாறு திகழக்கூடிய சில குறிப்பிட்ட சக்தி வாய்ந்த வேர்களைப் பற்றிதான் தற்போது காணப் போகிறோம்.

1. கீழாநெல்லி செடியின் வேர்:
மருத்துவ குணம் நிறைந்த இந்த கீழாநெல்லி செடியின் வேரினை நமது கையாலோ அல்லது கற்களைக் கொண்டோ வேர் அறுபடாமலும் பிளவு படாமலும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சம்பந்தமான பொருட்களைக் கொண்டு இந்த வேரினை எடுக்கக் கூடாது.

இவ்வாறு எடுத்த அந்த வேரினை பசு மாட்டின் கோமியத்தில் நன்றாக கழுவி விட்டு, ஒரு வெற்றிலையில் அந்த வேரினை வைத்து மடித்து சுருட்டி நமது வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும்.

2. நாயுருவிச் செடியின் வேர்:
இந்த செடியானது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. இந்தச் செடியின் வேரினையும் எடுத்து, பசு மாட்டின் கோமியத்தில் கழுவியப் பின்னர், அந்த வேரினை குங்குமம், குண்டு மஞ்சள் ஆகியவற்றுடன் சேர்த்து மஞ்சள் நிற துணியில் கட்டி பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

3. ஆலமரத்தின் விழுது:
இந்த விழுதானது அடகு வைத்த நகையை மீட்பதற்கு பெரிதும் உதவும் ஒரு சக்தி வாய்ந்த பொருள். நாம் இழந்த பணம் மற்றும் நகையை மீட்டுக் கொடுக்கும் சக்தி இந்த ஆலமரத்தின் விழுதிற்கு உண்டு.

இந்த விழுதினை பசு மாட்டின் கோமியத்தில் கழுவி விட்டு, பச்சை கற்பூரத்தை எரிய செய்து அதன் சூடு இந்த வேரின் மேல் படும்படி காட்ட வேண்டும். கருக விடக்கூடாது, லேசாக காட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு வெற்றிலையில் இருந்த வேர், பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, மஞ்சள் நூல் கொண்டு கட்டி, ஒரு துணியில் இதனை சுருட்டி பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

4. வெள்ளருக்கன் செடி வேர்:
இந்த செடியானது விநாயகரின் மகிமையை பெற்றது. இந்தச் செடியின் மூலம் சர்வ சித்தி காரிய வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும். அதாவது அனைத்து விதமான வெற்றிகளையும் கொடுக்கக் கூடியது இந்த செடி.

இந்த வேரினை எடுத்து பசு மாட்டின் கோமியத்தில் கழுவியப் பின்னர் விநாயகருக்கு எவ்வாறு பூஜை செய்வோமோ அதனைப் போன்று இந்த வேருக்கும் பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு சிவப்பு நிற நூலினால் அந்த வேர் தெரியாதவாறு சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வெற்றிலையில் அந்த வேரினை வைத்து மடித்து பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய ED..!! யாரும் தப்பிக்க முடியாது..!! செந்தில் பாலாஜி விரைவில் கைது..? அண்ணாமலை எச்சரிக்கை

0

டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், சென்னையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம். தொகுதி மறுசீரமைப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சனையும் வராது. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப் போவதில்லை.

தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். 4 முறை கேரளாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஒரு முறை கூட மாநில பிரச்சனை குறித்து பேசவில்லை. அதேபோல், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அணை கட்டியே தீருவேன் என சொல்கிறார். அதற்கு கூட முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கக் கூடிய வகையில் இருக்கும் என நம்புகிறேன். திமுகவினர் யாரும் பகல் கனவு காண வேண்டாம். ஏனென்றால், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, இந்த ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும்” என தெரிவித்துள்ளார். அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?

0

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆனைகுன்றம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர், அங்கு கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனால், கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டுமென முனுசாமியின் மகன் ராஜகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும், அதுவும் 3 மாதங்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு வேலை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், ராஜகிரி கடந்த 2024ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும், தனக்கு வேலை வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகுமாறு சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார். இந்நிலையில் தான், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த வழக்கில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூடிய முதலமைச்சர்கள்!. யார் யார் வராங்க தெரியுமா?…

0

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. யார் பிரதமர் என தேர்ந்தெடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது.

இந்த முறை இந்த 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் எதையும் கேட்டு பெறமுடியவில்லை. 39 எம்.பி.க்கள் இருந்தும் ஒரு பலனும் இல்லை. பாராளுமன்றத்தில் பாஜகவை விமர்சிக்க மட்டுமே தமிழக எம்.பி.க்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்நிலையில்தான் தொகுதி மறுசீரமைப்பு என்கிற விஷயத்தை பாஜக அரசு அமுல்படுத்த நினைக்கிறது. அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்பட்ட ஒவ்வொரு மாநிலங்களிலும் பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் திட்டம் இது. இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும், தொகுதி மறுவரையரை தொடர்பாக பல மாநில முதல்வர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இதில், பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா எம்.பி. உள்ளிட்ட 7 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜய், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் சிங், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.