Home Blog Page 374

ஒரு வாரத்தில் “மங்கு” மறைய.. வடித்த கஞ்சியில் இந்த பொடியை கலந்து அப்ளை பண்ணுங்க!!

0

சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றான மங்குவை மறைய வைக்க இந்த பயனுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வடித்த கஞ்சி – 50 மில்லி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
3)பசு வெண்ணெய் – 25 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் 25 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து 50 மில்லி அளவு வடித்து ஆறவைத்த கஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கஞ்சியில் பசு வெண்ணையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

இதை மங்கு மீது தடவி நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் மங்கு பிரச்சனை சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)திப்பிலி – 10 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 10 கிராம் அளவிற்கு திப்பிலி எடுத்துக் கொள்ளுங்கள்.திப்பிலி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த திப்பிலியை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஆறவைத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த திப்பிலி பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மங்கு மீது பூசுங்கள்.இரண்டு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

இந்த ரெமிடியை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முயற்சித்து வந்தால் மங்கு பாதிப்பு தானாக மறைந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வேப்பிலை – ஒரு கப்
2)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு – ஒன்று
3)குப்பைமேனி இலை – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் வேப்பிலை மற்றும் குப்பைமேனி இலையை சொல்லிய அளவுப்படி எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு இதனுடன் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த பவுடரை டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த பொடி தேவையான அளவு போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு தண்ணீர் சிறிதளவு சேர்த்து குழைத்து மங்கு மீது தடவி சுத்தம் செய்து வந்தால் சீக்கிரம் மறைந்துவிடும்.

இரத்த சோகை முதல் முடி உதிர்வு பிரச்சனை வரை.. இந்த ஜூஸில் தீர்வு இருக்கு!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க!!

0

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும.இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இந்த ஜூஸால் முடி உதிர்வு,சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட் – ஒன்று
2)பீட்ரூட் – ஒன்று
3)கறிவேப்பிலை – ஒரு கொத்து
4)மாதுளம் பழம் – ஒன்று
5)தண்ணீர் – தேவையான அளவு
6)பேரிச்சம் பழம் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கேரட் எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கிய கேரட் மற்றும் பீட்ரூட்டை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு மாதுளம் பழத்தின் விதைகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்.இந்த ஜூஸை குடித்து வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

உங்கள் சரும நிறம் மாற,முடி வளர்ச்சி அதிகரிக்க இந்த ஜூஸை பருகலாம்.இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள இந்த ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் – ஒன்று
2)கேரட் – ஒன்று
3)பீட்ரூட் – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஆப்பிள்,கேரட் மற்றும் பீட்ரூட்டின் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

சருமம் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.இந்த ஜூஸை பருகி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இந்த பொருளை தேனில் கலந்து சாப்பிட்டால்.. நரம்பு தளர்ச்சி குணமாகும்!! நரம்பு பலத்தை அதிகரிக்க இப்போவே ட்ரை பண்ணுங்க!!

0

ஆண்கள் அதிகமானோர் நரம்பு தளர்ச்சி பாதிப்பை சந்திக்கின்றனர்.நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பை உரிய நேரத்தில் குணப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்.

நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணம்:

1.நரம்பு சேதம்
2.நரம்பு பலவீனமடைதல்
3.குடிப்பழக்கம்
4.நரம்புகளில் அடிபடுதல்

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:

*உடல் நடுக்கம்
*நரம்பு வீக்கம்
*நரம்பு வலி
*நரம்பு எரிச்சல்
*உடல் தசை பலவீனம்
*உணர்வின்மை
*இதயத் துடிப்பில் மாற்றம்
*அதீத தலைவலி
*அதிகமாக வியர்த்தல்

நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் அற்புத சித்த வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)கம்பு – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

சிறு தானியங்களில் ஒன்றான கம்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து பயறு வகைகளில் ஒன்றான உளுந்து பருப்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.இவை மூன்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 முதல் 10 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

அதன் பின்னர் காட்டன் துணியில் இதை கொட்டி முளைகட்ட வைக்க வேண்டும்.பிறகு இந்த முளைகட்டிய பொருட்களை கிண்ணத்தில் போட்டு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இதை தொடர்ந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.

நரம்பு தளர்ச்சிக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)ராகி – ஒரு தேக்கரண்டி
2)உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
4)பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி ராகி ஆதாவது கேழ்வரகு சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி உளுந்து பருப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும்.பிறகு காட்டன் துணியில் கொட்டி இரண்டு நாட்களுக்கு முளைகட்ட வைக்க வேண்டும்.பிறகு பனங்கற்கண்டை பொடித்து அதில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.அதேபோல் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முளைகட்ட வைத்து பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தாலும் நரம்பு தளர்ச்சி குணமாகும்.பலவீனமான நரம்புகளை பலப்படுத்த இந்த வைத்தியம் நிச்சயம் உதவும்.

Body Detox Drink: உடல் நச்சுக் கழிவுகளை வெளியற்றும் பானம்!! உடனடி பலன் கொடுக்கும்!!

0

உடலில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற டீடாக்ஸ் பானம் செய்து பருகலாம்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள இந்த பானத்தை பருகலாம்.

1)ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
2)இரண்டு கிளாஸ் தண்ணீர்

**அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

**இரண்டு கிளாஸ் தண்ணீர் சுண்டி ஒரு கிளாஸாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை வடிகட்டி காலைவேளையில் பருகி வந்தால் உடலில் தேக்கமடைந்த கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

1)ஒரு தேக்கரண்டி மரமஞ்சள் சூரணம்
2)ஒன்றரை கிளாஸ் தண்ணீர்

**நாட்டு மருந்து கடையில் மரமஞ்சள் சூரணம் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.

**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு மரமஞ்சள் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

**இந்த பானத்தை ஆறவைத்து பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

1)நான்கு புதினா இலைகள்
2)ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
3)ஒரு தேக்கரண்டி தேன்
4)ஒரு கப் தண்ணீர்

**ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

**பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாறை புதினா நீரில் பிழிந்துவிட வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

வாழ்நாளில் மூட்டு வலி முதுகு வலி தொந்தரவு வராமல் இருக்க.. காலையில் இதை குடிங்க!!

0

இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர்.எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க ராகி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து காலை நேரத்தில் பருகி வாருங்கள்.

மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இந்த பானத்தை பருகி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – 50 கிராம்
2)ஆப்பிள் – ஒன்று
3)தாமரை விதை – 20 கிராம்
4)பேரிச்சம் பழம் – ஐந்து
5)காய்ச்சாத பசும் பால் – ஒரு கிளாஸ்
6)பாதாம் பருப்பு – நான்கு
7)ஏலக்காய் – ஒன்று
8)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் 50 கிராம் அளவிற்கு ராகி எடுத்து தண்ணீரில் அலசி வெயிலில் நன்றாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஜல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.

3.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 20 கிராம் அளவிற்கு தாமரை விதை போட்டு மிதமான தீயில் வறுத்து ஆற வைக்க வேண்டும்.

4.அதன் பின்னர் ஒரு முழு ஆப்பிளை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி தோல் நீக்கிகொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

5.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் கரைத்த ராகி மாவை அதில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் ராகி கூழை நன்றாக ஆறவைக்க வேண்டும்.

6.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து தாமரை விதயை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஆப்பிள் துண்டுகள்,பேரிச்சம் பழத்தை அதில் போட வேண்டும்.பின்னர் நான்கு பாதாம் பருப்பு,ஒரு ஏலக்காயை போட்டு பால் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.

7.பின்னர் ராகி கூழை அதில் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருக வேண்டும்.இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனையே வாழ்நாளில் வராது.

அனுபவ உண்மை! 48 நாட்கள் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்.. குழந்தைப் பேறு உண்டாகும்!!

0

குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் காரணமாகின்றனர்.பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,தைராய்டு பாதிப்பு,நீர்க்கட்டி,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் தாமதமாக கருவுறுதல்,குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆண்களுக்கு விந்து குறைபட,மலட்டு தன்மை,விதைப்பை பிரச்சனை.நீர்த்த விந்து,தரமற்ற விந்து போன்ற பிரச்சனைகளால் துணையை கருவுற வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தீவிரமாகி வருகிறது.

தற்பொழுது செயற்கை முறையில் குழந்தை பிறப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வர வாழ்க்கை முறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்,மோசமான வாழ்க்கை முறை,குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமை போன்ற பல காரணங்கள் பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணமாக இருக்கின்றது.

திருமணமான தம்பதிகள் மூன்று மாதத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் உடலில் பிரச்சனை இருக்கும்
என்று அஞ்சுகின்றனர்.சிலர் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ளாமல் செயற்கை கருவுறுதலை நாடுகின்றனர்.

பெண்களின் கருப்பையில் நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் கருவுறுதல் தாமதமாக நடைபெறும்.ஆண்,பெண் தங்கள் உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றினால் சிகிச்சை எதுவும் இன்றி எளிதில் கருவுறுதல் நடைபெறும்.

இதற்கு நீங்கள் சின்ன வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்.நம் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் சின்ன வெங்காயம்.இவை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடடுங்கள்.இப்படி தொடர்ந்து 48 காலை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் கர்ப்பம் தரிப்பீர்கள்.

சின்ன வெங்காயத்தை இப்படி பச்சையாக சாப்பிட விரும்பாதவர்கள் சட்னி,குழம்பு,துவையல் அல்லது பிரட்டல் செய்து சாப்பிடலாம்.நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் சின்ன வெங்காயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் உரிய பலன் கிடைக்கும்.

மாதவிடாய் இரத்தப்போக்கு கட்டி கட்டியாக போகுதா? அப்போ க்யூராக தென்னம் பூ கஷாயம் வச்சி குடிங்க!!

0

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக அதிகப்படியான உதிரப்போக்கு பிரச்சனையால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கால் ஏற்படும் பாதிப்புகள்:

**வயிற்று வலி
**வயிறு கனமான உணர்வு
**மனநிலை மாற்றம்
**அசௌகரிய உணர்வு

அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட காரணங்கள்:

**ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
**மன அழுத்தம்
**கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை
**தைராய்டு பாதிப்பு

மாதவிடாய் கால கெட்டி உதிரப்போக்கை சரி செய்ய உதவும் சித்த மருத்துவ குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

1)சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப்
2)தயிர் – ஒரு கப்
3)உப்பு – சிறிதளவு
4)மிளகு – கால் தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு வாழைப்பூ எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி வாழைப்பூவை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கப்பில் பசுந்தயிர் ஊற்றி வேகவைத்த வாழைப்பூவை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அதில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கெட்டி உதிரப்போக்கு பிரச்சனை சரியாகும்.

மற்றொரு தீர்வு:

தென்னம் பூ கஷாயம்:

தேவையான பொருட்கள்:-

1)தென்னம் பூ – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

தென்னம் பூவை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஆதில் ஒரு தேக்கரண்டி தென்னம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை இளஞ்சூடான பதத்தில் பருகி வந்தால் மாதவிடாய் கால கட்டி இரத்தப்போக்கு பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டு – ஒன்று
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை துண்டை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி பருகினால் கட்டி
உதிரப்போக்கு பிரச்சனை சரியாகும்.

குளவி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..?? நல்லதா..?!கெட்டதா..?!

0

குளவி என்பது விஷத்தன்மை வாய்ந்த ஒரு பூச்சி. இந்தக் குளவி நம்மை கடித்தால் விஷத்தன்மை தான். ஆனால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தப் பூச்சி நமது வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்? என்பது குறித்து தற்போது காண்போம்.

நமது இந்தியன் அஸ்ட்ராலஜி ப்ரொடக்ஷனில் இந்த குளவிக்கு என ஒரு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தக் குளவியின் பண்பு என்னவென்றால், தனக்கு தேவையான வீட்டினை கட்டுவதற்கு, மனிதனின் கால் படாத மண்ணை எடுத்து வந்து கட்டும் என கூறுகின்றனர்.

அதனுடைய கூட்டில் ஏராளமான மருத்துவ நலன்கள் நிறைந்து இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்தப் பூச்சி கட்டின கூட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த மண்ணை எடுத்து விபூதியில் கலந்து, தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குளவி ஒருவரது வீட்டிற்கு வருகிறது என்றால், அந்த வீட்டில் உள்ள செல்வம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், கடன் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும். அதாவது பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து வித பிரச்சனைகளும் சரியாகும் என கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக அடகு வைத்திருக்கக் கூடிய நகையை மீட்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடம் கொடுத்த பணம் நமது கைக்கு வரும். இந்த குளவி ஒருவரது வீட்டிற்கு வரும் பொழுது மகாலட்சுமியின் அருளையும், ஆசியையும் கொடுப்பதாகவே கருதப்படுகிறது.

மேலும் இந்த குளவி நமது வீட்டிற்குள் இருக்கும் பொழுது நேர்மறையான ஆற்றல்களையே நமக்குத் தரும் எனவும் கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் அதிகப்படியான சந்தோசத்தை தரக்கூடிய செய்திகள், சந்தோஷமான விஷயங்கள், சிரிப்பு சத்தங்கள் இது போன்றவைகள் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் இருக்கக்கூடிய வீட்டில், இந்த குளவி வந்து கூடு கட்டுகிறது என்றால், அந்த வீட்டில் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கப் போவதாக அர்த்தம்.
மேலும் இந்த குளவி நமது வீட்டிற்குள் வருவதன் மூலம், நமது வீட்டில் அதிகப்படியான சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் மக்களிடையே நிலவக்கூடிய சில நம்பிக்கைகளாகவும் இது கூறப்படுகிறது. சிலர் இதை மூடநம்பிக்கை எனக் கூறினாலும், பெரும்பாலான மக்களிடையே இது மிகுந்த ஆழமான மற்றும் நல்ல நம்பிக்கையாகவே திகழ்ந்து வருகிறது.

ஒரு வீட்டில் இந்த குளவி செம்மண்னை பயன்படுத்தி கூடு கட்டினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மற்ற மண்களை பயன்படுத்தி கூடு கட்டினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் நமது முன்னோர்கள் கூறுகின்றனர்.

இந்த குளவி வீட்டிற்குள் வருவதால் பொருளாதார ரீதியாகவும், குடும்ப மகிழ்ச்சியை ரீதியாகவும் பல நன்மைகள் ஏற்பட்டாலும் கூட, இது ஒரு விஷத் தன்மை வாய்ந்த பூச்சி. எனவே இந்த பூச்சிகளிடம் இருந்து குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளவி ஒரு வீட்டிற்குள் வருகிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கிறது எனவும், அந்த குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனவும் புரிந்து கொள்ளலாம்.

உடல் வியாதிகளை குணப்படுத்தும் உலர் விதைகள்!! எந்த நோய்க்கு எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்?

0

தினமும் உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.உலர் விதைகளில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக் கூடியதாக இருக்கிறது.

உலர் விதைகள்:

முந்திரி
பாதாம்
வால்நட்
வேர்க்கடலை
பிஸ்தா

1)முந்திரி

நார்ச்சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் முந்திரி பருப்பில் நிறைந்து காணப்படுகிறது.

தினமும் முந்திரி பருப்பு சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.முந்திரி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முந்திரியை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.முந்திரியில் இருக்கின்ற நிறைவுறா கொழுப்பு இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

2)பாதாம் பருப்பு

நார்ச்சத்து,மெக்னீசியம்,வைட்டமின்,கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் பாதாமில் நிறைந்து காணப்படுகிறது.இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.

இதய ஆரோக்கியம் மேம்பட ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடலாம்.எலும்பு பிரச்சனையை சரி செய்ய பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

3)வால்நட்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீசு,செலினியம்,பாஸ்பரஸ்,புரதம்,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வால்நட்டில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

இந்த வால்நட்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.வால்நட் சாப்பிட்டு வந்தால் மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.வால்நட் சாப்பிட்டு வந்தால் அல்சைமர் நோய் பாதிப்ப வருவதை கட்டுப்படுத்தலாம்.

4)வேர்க்கடலை

நார்ச்சத்து,இரும்பு,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,கால்சியம்,மாங்கனீசு,பொட்டாசியம்,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் நிறைந்து காணப்படுகிறது.

வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க வேர்க்கடலை உட்கொள்ளலாம்.உடல் எடையை பராமரிக்க,இதய ஆரோக்கியத்தை காக்க வேர்கடலையை சாப்பிடலாம்.

5)பிஸ்தா

புரதம்,பைபர்,வைட்டமின்கள்,மெக்னீசியம்,பொட்டாசியம்,தாமிரம,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்து காணப்படுகிறது.இந்த பிஸ்தாவை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்க,நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க பிஸ்தாவை சாப்பிடலாம்.இரத்த அழுத்தம்,இதய பாதிப்புகளை குணப்படுத்த பிஸ்தா சாப்பிடலாம்.

சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

0

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரிய நாள் என்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சனி பகவானின் சில மோசமான தாக்குதல்களை தவிர்க்க, மக்கள் பல பரிகாரங்களையும் செய்து வருவார்கள். சிலர் சனி பகவானின் ஆசியைப் பெற விரதத்தையும் கடைப்பிடிப்பார்கள். சில பொருட்களை இந்த கிழமையில் தானமும் செய்வார்கள்.

அதேபோன்று சனி பகவானின் கோபத்தை தவிர்க்க சனிக்கிழமை அன்று சில விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத செயல்கள் மற்றும் வாங்க கூடாத பொருட்கள் எவை என்பது குறித்து காண்போம்.

சனிபகவானின் கோபத்திற்கு ஆளானவர்கள் சில அசுபங்கள் மற்றும் சில பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். முக்கியமாக இது ஒருவருடைய கர்மாவை பொருத்து, அவர்களை தண்டித்து ஒழுக்கத்துடன் வாழ்க்கையை நடத்த அனுமதிக்கும்.அதே சமயம் சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் அபரிவிதமான வெற்றிகளையும், பொருள்சார் வளர்ச்சிகளையும் பெறுவார்கள்.

சனிக்கிழமை அன்று மது அருந்துவதை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளையும், பல சிக்கல்களையும் உண்டாக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்கள், மது அருந்துவது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி சனிக்கிழமை அன்று நகம் வெட்டுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. அதேபோன்று முடியையும் வெட்டக்கூடாது. இவ்வாறு செய்தால் சனி பகவானின் கோபத்தை அதிகரித்து வாழ்க்கையில் துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.

சனிக்கிழமை அன்று எண்ணெய் மற்றும் செருப்பு போன்ற தோல் பொருட்களை வாங்குவதை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்களை சனிக்கிழமை அன்று வாங்கினால் கடன் அதிகரிக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் குறையும்.

பால், தயிர் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை அன்று உட்கொள்ளக் கூடாது. ஒருவேளை உட்கொண்டால் அதில் சிறிதளவு மஞ்சள் அல்லது வெள்ளம் சேர்த்து உண்ண வேண்டும். அதேபோன்று ஊறுகாய், கத்தரிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் போன்றவற்றையும் உண்ணக் கூடாது.

சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை வாங்குவது அசுப குணங்களாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை தானம் செய்வதால் சனி பகவானின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமை அன்று கரி கட்டையை வேறு இடத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. இவ்வாறு கொண்டு வந்தால் அது குடும்பத்தில் பல பதற்றங்களை உண்டாக்கும்.

சனிக்கிழமை அன்று துடைப்பம் வாங்கக்கூடாது. சனிக்கிழமை அன்று துடைப்பம் வாங்கினால் வீட்டில் உள்ள செல்வத்தை அழிக்க நேரிடும்.

அதேபோன்று சனிக்கிழமை அன்று உப்பு வாங்குவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தை குறைத்து விடும்.