Home Blog Page 373

சிறைக்கு செல்ல தயாரான உதயநிதி ஸ்டாலின்!! அடுத்தது முதல்வர் குடும்பம் தான்!!

0

தமிழக டாஸ்மாக் ஊழல் 1000 கோடி நடைபெற்ற இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி, இந்த ஊழலில் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு அதிக அளவு பங்கு இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமலாக்க துறையின் இந்த அறிவிப்பிற்கு துணை போகும் வகையில் திமுகவின் போக்கும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத் துறையின் உடைய அறிவிப்பில் ஆயிரம் கோடி ஊழல் என்பது சட்டவிரோதமானது என்றும் இதற்கு இடைக்கால தடை விதிக்கும் படி தமிழக அரசு மற்றும் டாஸ்மார்க் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து கொடுத்ததன் காரணமாக தான் அவர் சிறைக்கு சென்று திரும்பும் பொழுது கூட அவருடைய பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் செந்தில் பாலாஜி அவர்கள் மீண்டு வந்த பிறகுதான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று இருக்கிறார் ஆகவே திமுகவில் அவர் சம்பாதித்து கொடுத்த பணத்திற்காக மரியாதை வழங்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.

இவை மட்டுமே காரணமா என்று கேட்டால் அமலாக்கத்துறை அதனை மறுத்து டாஸ்மார்க் ஊழலில் ஆயிரம் கோடி மட்டுமல்லாது லட்ச கோடிகள் ஊழல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்ததோடு தற்பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த டாஸ்மார்க் ஊழலில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதற்கு தொலைபேசி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இவை முழுமையாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் டெல்லியில் கெஜ்ரிவாலை சிறைக் அனுப்பியது போல தமிழகத்தில் முதல்வர் குடும்பம் முழுவதும் சிறைக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நிகழும் குழப்பம்!! அதிர்ச்சியில் தேர்வர்கள்!!

0

SET ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2024 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மார்ச் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் 6 முதல் 9 வரை நடைபெற்றது. தேர்வுகளிலும் பல்வேறு தாமதங்களைக் கடந்து ஒரு வழியாக 2025 ஆம் ஆண்டு இந்த தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வில் உத்தேச விதை குறிப்பானது மார்ச் 13ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. தகுதி தேர்வு எழுதிய தேர்வர்கள் உத்தேச விடை குறிப்பை வைத்து தங்களுடைய ஆட்சியபனைகளை இணையதளம் வழியாக தெரிவித்து வரக்கூடிய சூழலில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உத்தேச விடை குறிப்புகள் திரும்பப் பெறப்பட்டு இருப்பது தேர்வர்களை அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தரப்பு கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாவது :-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாநில தகுதி தேர்வு கணினி மூலமாக மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை நடைபெற்றது என்றும் இதற்கான உத்தேச விடை தொகுப்பு மார்ச் 13 அன்று வெளியிடப்பட்டது என்றும் தற்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் மீண்டும் புதிய உத்தேச விடை குறிப்பானது வெளியிடப்படும் என்றும் அதில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சியவனைகள் இருந்தால் ரெஸ்பான்ஸ் சீட் மூலமாக மார்ச் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்களுடைய விருப்பங்களை பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பண்ணை வைக்க ஆசையா!! அரசு தரும் மானியம் உங்களுக்காக!!

0

தமிழக அரசு தொழில் முனைவோருக்கான திட்டத்தின் கீழ் கால்நடை பண்ணை அமைப்பதற்கான மானியங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் கால்நடைகளின் உடைய உற்பத்தியை பெருக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை செம்மறி ஆட்டு பண்ணை வெள்ளாட்டுப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை போன்றவற்றை அமைத்த இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என முடிவு செய்த 2021 2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவற்றிற்கெல்லாம் எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா :-

✓ கோழி வளர்ப்பு பண்ணை & குஞ்சு பொரிப்பகம் – 25 லட்சம் ரூபாய்

✓ செம்மறி ஆட்டுப்பண்ணை – 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை

✓ வெள்ளாட்டுப் பண்ணை – 10 லட்சும் முதல் 50 லட்சம் வரை

✓ பன்றி பண்ணை – 15 லட்சும் முதல் 30 லட்சம் வரை

✓ தீவன பயிர் சேமிப்பு

✓ தீவன விதைகள் உற்பத்தி

இந்த திட்டங்களின் கீழ் பயன்பட நினைக்க கூடியவர்கள் தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் போன்றவர்களில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம் :-

✓ https://nlm.udyamimitra.in/
✓ http://www.tnlda.tn.gov.in/
✓ http://www.tnlda.tn.gov.in/

விவசாயிகளுக்கான அடையாள அட்டை!! மார்ச் 31 தான் கடைசி தேதி!!

0

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு கடன், சந்தை படுத்துதல் கொள்முதல் போன்றவற்றிற்கென பல நலத்திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விவசாயி கால தங்களுடைய நிலங்களின் உடமை விவரங்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் வழங்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விரைவாக விவசாயிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மத்திய அரசு தரப்பில் முக்கியமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த முடிவின்படி, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளினுடைய உடமை நிலவிவரங்கள் சுய விவரங்கள் என அனைத்தையும் இணைத்து ஆதார் அடையாள அட்டை போன்று விவசாயிகளுக்கான பிரத்தியேக அடையாள அட்டை ஒன்று விநியோகிக்கப்படும் என்றும் காலதாமதம் செய்யாமல் விவசாயிகள் அனைவரும் தங்களுடைய கிராமங்களில் நடக்கக்கூடிய சிறப்பு முகாம்களை கலந்து கொண்டு தங்களுடைய நிலங்களின் விவரங்கள் சுய விவரங்கள் என அனைத்தையும் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தங்களுடைய கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை என்றால் உடனடியாக இ சேவை மையங்களுக்கு சென்று எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகவே தங்களுடைய நிலத்தின் விவரங்கள் சுயவிவரங்களான ஆதார் எண் பான் கார்டு என் போன்ற முக்கிய சுய விவரங்களை இணைத்து விவசாயிகளின் பிரத்தியக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் எளிமையாக மத்திய மற்றும் மாநில அரசினுடைய அனைத்து திட்டங்களிலும் பயன்பட முடியும் என்றும் இதற்கு காலதாமதம் எடுத்துக் கொள்ளாது என்றும் ஒவ்வொரு முறையும் விவசாயிகளினுடைய அலைச்சலை குறைப்பதற்காகவே இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள்!! அடடா இத்தனை இருக்கா!!

0

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதை நலத்திட்டங்களில் பல லட்சம் கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். எனினும் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்த இங்கு பெரிதளவில் மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதிலும் எத்தனை வகையான தொழில் முனைவோர் திட்டங்கள் இருக்கிறது என்பது கூட அனைவருக்கும் முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசு வழங்கக்கூடிய பெண் தொழில் முனைவோர் திட்டங்கள் பின்வருமாறு :-

✓ பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம்

✓ பெண்களுக்கான தென்னை நார் திட்டங்கள்

✓ ஸ்டாண்ட்-அப் இந்தியா

✓ முத்ரா கடனுதவி திட்டம்

✓ பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள்

✓ மகிளா உதயம் நிதி யோஜனா

✓ தேனா சக்தி திட்டம்

✓ பெண் தொழில்முனைவோருக்கான ஸ்த்ரீ சக்தி தொகுப்பு

✓ சென்ட் கல்யாணி திட்டம்

மக்களவையின் கேள்வி நேரத்தின் பொழுது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் இந்த திட்டங்கள் குறித்தும் இதனால் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

தொழில் முனைவோர் ஆக மாற நினைக்கும் பெண்கள் உடனடியாக இந்த திட்டங்களின் கீழ் இணைந்து உங்களுடைய ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்களை துவங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

0

மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.

✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :-

காலி பணியிடம் – 54
கல்வித் தகுதி – BSc diploma
சம்பள விவரம் – 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை

✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :-

காலிப்பணியிடம் – 03
கல்வித் தகுதி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பள விவரம் – 20,000 ரூபாய் முதல் 55,000 ரூபாய் வரை

✓ Junior Fireman Grade II :-

காலி பணியிடங்கள் – 02
கல்வி தகுதி – 10 ஆம் வகுப்பு பயிற்சி
சம்பள விவரம் – 18,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை

✓ செவிலியர் தரம் II :-

காலி பணியிடங்கள் – 01
கல்வித் தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் வைப்ரரி, பிஎஸ்சி நர்சிங்
சம்பள விவரம் – 22,000 முதல் 60,000 வரை

✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (கருவி) :-

காலி பணியிடங்கள் – 04
கல்வி தகுதி – பிஎஸ்சி டிப்ளமோ
சம்பள விவரம் – 22,000 முதல் 60,000 ரூபாய் வரை

✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (எலக்ட்ரிக்கல்) :-

காலி பணியிடங்கள் – 02
கல்வித் தகுதி – எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ
சம்பள விவரம் – 22,000 முதல் 60,000 வரை

✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (மெக்கானிக்கல்) :-

காலி பணியிடங்கள் – 08
கல்வி தகுதி – மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ
சம்பள விவரம் – 22000 முதல் 60,000 ரூபாய் வரை

விண்ணப்பிக்கும் முறை :-

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க பொது நபர்களுக்கு 700 ரூபாய் விண்ணப்ப கட்டணம் என்றும் எஸ் சி எஸ் டி பெண்கள் மாற்று திறனாளிகள் போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்க மார்ச் 21 தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளங்கள் :-

✓ www.rcfltd.com
✓ https://ibpsonline.ibps.in/rcfdece24/

சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் போக வேண்டும் என்றால் அனுமதி அவசியம்!! புதிய விதிகளை நடைமுறைப்படுத்த முடிவு!!

0

சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் தேவையற்ற நுழையக் கூடியவர்களை தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 582 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபாஸ்ட் அவுட் என்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போல தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், முதலில் வந்தவர்களை விட்டுவிட்டு பின்னால் வந்தவர்கள் எப்படியாவது நாம் முன்னால் சென்று விட வேண்டும் என பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாகவும் சார் பதிவாளர் அலுவலகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது அதனை மாற்றி புதிய முறை ஒன்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக இருக்கிறது.

சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது என்றால் ஆன்லைனிலேயே அவர்களுடைய பத்திர பதிவிற்கான அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு விடும் என்றும் அதன் பின் அவர்களுக்கு உருக்கிய நேரத்தில் அவர்கள் அதாவது காலை 10 மணிக்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றால் சரியாக அந்த நேரத்தில் வந்தால் மட்டுமே பத்திர பதிவு என்றும் அந்நேரத்தில் வர தவறிவிட்டால் பின்பு மாலையில் தான் அவர்களுக்கான பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலையில் நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் காலையில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பத்திர பதிவு செய்ய வரக்கூடியவர்களுக்கு நேரம் குறைவாகவும் மற்றும் அலைச்சலின்றியும் இருக்க உதவும் என்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இது மிகப்பெரிய விஷயமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருக்கக்கூடிய சில சார்பதிவாளர் அலுவலகங்களில் உள் நுழைவு அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் யார் அந்த அட்டையை பெறுகிறார்களோ அவர்கள் மட்டுமே சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் நுழைய முடியும் என்றும் தேவையற்றவர்கள் உள்நுழைதலை தடுப்பதற்காக இந்த வழியானது பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

0

அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

* செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்

* பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம்.

* அதேபோல் வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களையும் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கு அவசியமே இல்லை.. பைப் மூலம் கிடைக்கும் இயற்கை எரிவாயு!!Indian Oil நிறுவனம் அதிரடி!!

0

ராமநாதபுரம் தென் மண்டலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைப் வழியாக இயக்க எரிவாயு விநியோகமானது மேற்கொள்ளப்படுவதற்கு பைப்பினைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பைப் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கப்படும் பட்சத்தில் சிலிண்டர்களின் தேவை இருக்காது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பைப் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் நிறுவனத்தை சுற்றி இருக்கக்கூடிய வீடுகளில் இயற்கை எரிவாயு கனெக்சன் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாகவும் இந்தியன் ஆயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பைப் வழியாக இயற்கை வாயுவை தங்கள் வீடுகளுக்கு பொறுத்துக் கொண்டார்கள் என்றால் ஒரு கிலோவிற்கு 86 ரூபாய் மட்டுமே செலவிருக்கும் என்றும் இந்த செலவானது சிலிண்டரை விட மலிவு விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருக்கக்கூடிய வீடுகளுக்கு பைபிள் வழியாக இயற்கை எரிவாயு கனெக்சன் கொடுக்கப்பட்டு விட்டால் அதனை தொடர்ந்து நெல்லைக்கும் இந்த வசதியை கொடுப்பதற்கான வேலைகள் தொடங்கப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேட் லிமிடெட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைப் கலெக்ஷனில் தங்களுடைய வீடுகளில் மக்கள் போட்டுக் கொண்டார்கள் என்றால் மின்சாரத்திற்கு எப்படி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மீட்டர் அளவீடு செய்யப்பட்ட பணம் வசூலிக்கப்படுகிறது அது போலவே இனி இயற்கை எரிவாயுவிற்கும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீட்டர் அளவில் கொண்டு பயன்படுத்திய கேஸ் இருக்கு மட்டும் பணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சர்க்கரை லெவல் 300-ஐ தாண்டி விட்டதா? அப்போ உடனே டாக்டர் சொன்ன இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

0

நம் நாட்டில் சர்க்கரை ஆதிக்கம் தொடர்ந்து அதிமாகி கொண்டிருக்கிறது.பரம்பரைத் தன்மை,மோசமான உணவுகளால் சர்க்கரை நோய் பாதிப்பை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:

பரம்பரைத் தன்மை
உணவுமுறை
உடல் பருமன்
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை

சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை இல்லாத தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
2)நெய் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் வேப்பம் பிசின் பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வாருங்கள்.அல்லது வேப்பம் பிசினாகவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

இதை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
2)சிறுகுறிஞ்சான் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில்
ஒரு தேக்கரண்டி வேப்பம் பிசின் பொடி மற்றும் சிறுகுறிஞ்சான் பொடி சேர்த்து சிறிது சூடாக்கி காலை உணவிற்கு முன் பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதம் பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மருதம்பட்டை பொடி போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு பதில் இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் சர்க்கரை அள்வு கட்டுப்பாட்டில் இருக்கும்.