Home Blog Page 380

வழுக்கையான தலையில் முடி முளைக்க செலவு இல்லாத சிம்பிள் டிப்ஸ்!! இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுங்க!!

0

முடி உதிர்வு பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது.தலை சூடு,வயது,இரசாயன பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகமாகி கொண்டே செல்கிறது.சிலர் முடி உதிர்வை கட்டுப்படுத்த மொட்டை அடித்துக் கொள்கின்றனர்.இப்படி மொட்டை அடித்தவர்கள் வெற்றிலை எண்ணையை தலைக்கு தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – இரண்டு
2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
3)சின்ன வெங்காயம் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் இரண்டு வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள வெற்றிலை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து அதில் இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயத்தை இடித்து போட்டு நிறம் மாறும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மொட்டை அடித்தவர்கள் இந்த எண்ணையை தடவி வந்தால் முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.முடி உதிர்தல்,தலை சூடு பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெற்றிலை எண்ணையை தலைக்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – நான்கு கொத்து
2)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்

செய்முறை விளக்கம்:-

ஈரமில்லாத பாத்திரத்தில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் நான்கு கொத்து கறிவேப்பிலை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கறிவேப்பிலை எண்ணையை நன்றாக ஆறவைத்து வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

ரேசன் பாமாயில் யூஸ் பண்றிங்களா? இதன் நல்லது கெட்டதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

0

ஏழை மக்கள் பலருக்கும் ரேசனில் இருந்து கிடைக்கும் அரிசி,சர்க்கரை,பாமாயில்,பருப்பு போன்றவை பயனுள்ளதாக இருக்கின்றது.இதில் சிலர் பாமாயிலை மட்டும் தவிர்க்கின்றனர்.பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும் என்று அஞ்சி பலரும் இந்த எண்ணையை ஒதுக்குகின்றனர்.

பனை மர பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் பாமாயில்.இன்று இந்த எண்ணையை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.விலைவாசி உயர்வால் மலிவு விலையில் கிடைக்க கூடிய இந்த எண்ணையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர்.சிலர் ரேசன் பாமயிலை சமைக்க பயன்படுத்தவில்லை என்றாலும் பொரிக்க உபயோகின்றனர்.

மலிவு விலையில் கிடைக்கும் இந்த பாமாயிலில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை.மாறாக இதில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக காணப்படுகிறது.பாமாயில் உணவை அதிகமாக உட்கொண்டால் உடலில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும்.இது பக்கவாதம்,மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.

பாமாயில் உணவுகளை உட்கொண்டால் மோசமான செரிமானப் பிரச்சனை ஏற்படும்.பாமாயில் உணவுகள் நீரிழிவு நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.பாமாயிலை அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.பாமாயில் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால் இந்த எண்ணையை தவிர்த்துவிடுவது நல்லது.பித்தம் இருப்பவர்கள் பாமாயில் எண்ணையை பயன்படுத்த வேண்டாம்.

இருப்பினும் கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது என்பது போல் பாமாயிலிலும் சில நன்மைகள் நிறைந்திருக்கிறது.பாமாயிலில் இருக்கின்றன பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து கண் பார்வையை தெளிவுபடுத்த உதவுகிறது.பாமாயில் உணவை உட்கொள்வதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை சரியாகிறது.வைட்டமின் ஏ சத்து குறைபாடு இருப்பவர்கள் பாமாயில் எண்ணையில் உணவு சமைத்து சாப்பிடலாம்.

இந்த 8 அறிகுறிகள் இருக்கா? கவனம் அப்போ உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து காத்திருக்கு!!

0

நமது சுவாச உறுப்பான நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.நுரையீரலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.நுரையீரல் ஆரோக்கியமற்றதாக மாற நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம்.

நுரையீரல் ஆரோக்கியம் கெட காரணங்கள்:

1)புகைப்பிடித்தல்
2)காற்று மாசுபாடு
3)ஆஸ்துமா
4)சைனஸ்
5)சளி
6)நுரையீரல் நோய்

நுரையீரல் உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:

1)உங்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால் நுரையீரல் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது என்று அர்த்தம்.

2)மார்பு பகுதியில் வலி அதிகமாக இருந்தால் அவை நுரையீரல் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

3)தொடர் இருமல் பாதிப்பு நுரையீரல் தொற்றை உறுதி செய்கிறது.உங்களுக்கு இடைவிடாத இருமல் பிரச்சனை இருந்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

4)இரும்பும் பொழுது இரத்தம் வந்தால் அவை நுரையீரல் நோய் தொற்று இருப்பதை உணர்த்துகிறது.

5)அடிக்கடி மார்பு தொற்று பிரச்சனை ஏற்பட்டால் நுரையீரல் சேதமாகி கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

6)தும்மல்,மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் தொடர்ந்து ஏற்ப்பட்டால் நுரையீரல் தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

7)நடக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படுதல்,நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய இயலாமை போன்ற காரணங்கள் நுரையீரல் சேதத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.

8)மார்பு இறுக்கம்,சரியாக சுவாசிக்க முடியாமல் போதல் போன்ற பிரச்சனை நுரையீரல் சேதத்தை குறிக்கிறது.

நுரையீரல் சேதமாகாமல் இருக்க செய்ய வேண்டியவை:

**புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
**வெளியில் செல்லும் பொழுது மாஸ்க் அணிய வேண்டும்.
**வெளியில் சென்று வந்த பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
**மூலிகை பானங்களை அருந்தி நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

நுரையீரல் பாதிப்பு தீவிரமாக இருந்தால் சளி பரிசோதனை,எக்ஸ் கதிர் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

0

உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் நம்மால் நடத்தல்,ஓடுதல்,உடலை இயக்குதல் போன்ற செயல்களை செய்ய முடியும்.உடல் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.உடலில் கால்சியம் சத்து குறைவதை ஹைபோகால்சீமியா என்று அழைக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

கால்சியம் குறைபாடு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்?

மூட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.எலும்புகள் தன் வலிமையை இழந்து பலவீனமாகிவிடும்.இதனால் எலும்பு முறிவு,எலும்பு வலி போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.

தசை பலவீனம் பிரச்சனை அதிகமாக ஏற்படும்.அதிகப்படியான உடல் சோர்வு கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.

நரம்பு தொடர்பான பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.கை கால் மரத்து போதல் பிரச்சனை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.

நகங்கள் எளிதில் உடைந்து போதல்,பல் சிதைவு ஏற்படுதல் போன்றவை கால்சியம் குறைபாட்டால் தான் ஏற்படுகிறது.தூக்கமின்மை பிரச்சனை கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாகும்.

கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்:

1)சிறுநீரகம் தொடர்பான நோய் பாதிப்புகள்
2)தைராய்டு நோய் பாதிப்பு
3)குடல் தொடர்பான நோய் பாதிப்புகள்
4)வைட்டமின் டி குறைபாடு

கால்சியம் குறைபாட்டை சரி செய்யும் உணவுகள்:-

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.சோயா பொருட்களில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பசலை கீரை போன்றவற்றில் அதிகமான கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

உலர் அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து கிடைக்கும்.

கருப்பு எள்,சியா விதைகள்,ராகி,தினை,சால்மன் மீன் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!

0

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் குலதெய்வங்கள் தான் அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய ஆணிவேராக திகழும். அத்தகைய குலதெய்வம் ஒரு சில குடும்பங்களுக்கு, அவர்கள் இருக்கக்கூடிய பூர்வீகத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு சில குடும்பங்களுக்கு மிக தொலைவில் அந்த குலதெய்வம் அமைந்திருக்கும்.

அருகில் இருப்பவர்கள் அடிக்கடி அவர்களது குலதெய்வத்தை சென்று வணங்கி வருவார்கள். ஆனால் தொலைவில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கண்டிப்பாக சென்று வணங்கி வர வேண்டும்.

குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வந்தால் மட்டுமே அவரது அருள் நமது குடும்பத்தில் பரவி இருக்கும். அவ்வாறு குலதெய்வம் நமக்கு துணையாக இருக்கிறது அதாவது நமது வீட்டில் குடி கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஐந்து அறிகுறிகள் குறித்து தற்போது காண்போம்.

1. எலுமிச்சை பழம்:
குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் அங்கு கொடுக்கக்கூடிய எலுமிச்சை பழத்தை நமது வீட்டின் பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கக்கூடிய பெட்டிகளிலோ நாம் வைப்போம்.

அவ்வாறு வைக்கக்கூடிய எலுமிச்சம் பழம் சில நாட்களுக்குப் பிறகு நன்கு காய்ந்து இருக்கும். அவ்வாறு காய்ந்து இருந்தால் அது நல்லது தான். அதாவது நமது குலதெய்வம் நமது வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு மாறாக எலுமிச்சம்பழம் அழுகி இருந்தால் குலதெய்வம் நமது வீட்டில் இல்லை என்று அர்த்தம்.

2. பல்லிகள்:
நமது வீட்டில் பள்ளிகள் நிறைய இருக்கிறது என்றாலும் நமது குலதெய்வம் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது. பல்லிகள் சத்தம் போடுவதும் ஒரு விதமான குலதெய்வத்தின் வாக்கு என்றும் கூறப்படுகிறது.

நாம் வெளியில் செல்லும் பொழுது பல்லிகள் சத்தமிட்டால் நாம் செய்ய இருக்கக்கூடிய காரியம் நிச்சயம் வெற்றி அடையும்.இது போன்று பள்ளிகள், பூச்சிகள், பறவைகள் நமது வீட்டிற்குள் வந்தால் குலதெய்வம் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம்.

3. தெய்வீக மனம்:
நமது வீட்டில் திடீரென விபூதி, சந்தனம், சாம்பிராணி, மல்லிகைப் பூ, சுருட்டு இது போன்ற வாசனைகள் வந்தாலும் நமது குலதெய்வம் நமது வீட்டில் இருப்பதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது.

4. மணி ஓசை:
நமது வீட்டின் பூஜையறையில் நாம் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென நமது வீட்டின் அருகில் இருந்தோ அல்லது தூரத்தில் இருந்தோ மணி எழுப்பும் ஓசை கேட்டால் அதுவும் ஒரு நல்ல சகுனம் தான்.

அதேபோன்று நாம் நமது கண்களை மூடி கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென கடவுளிடம் இருந்து பூவோ அல்லது எலுமிச்சம் கனியோ கீழே விழுந்தால் அதுவும் நமது வீட்டில் இறையருள் இருப்பதை உணர்த்துவதாக அர்த்தம்.
இது போன்ற சகுனங்கள் ஏற்பட்டால், நமது குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு வரவிருந்த பெரிய கண்டம் விலகும் என்றும் கூறப்படுகிறது.

5. கண்ணீர்:
நாம் நமது குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது நமது தாய் தந்தை வீட்டுக்கு செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ அல்லது அங்கு சென்று கடவுளை வணங்கும் பொழுது கண்ணீர் வந்தாலோ நமது குலதெய்வத்தின் அருள் நமக்கு இருப்பதாக அர்த்தம்.

இது போன்ற ஐந்து அறிகுறிகளையும் நீங்கள் உணர்ந்தால் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்வாறு இல்லை எனில் நீங்கள் அவ்வப்போது உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, சரியான வழிபாட்டு முறைகளை செய்து வந்தால் உங்கள் குடும்பத்திலும் உங்களது குலதெய்வம் வந்து குடியேறும்.

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

0

மனிதர்கள் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் கோபம் என்பது இயல்பான விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது.சிலர் தங்கள் கோபத்தை அடக்கி வைக்க முடியாமல் கத்தி வெளிப்படுத்தி விடுகின்றனர்.ஆனால் ஒருசிலர் என்ன நிலை வந்தாலும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர்.கோபத்தை அடக்கி பொறுமை காப்பதுநல்ல விஷயம் என்றாலும் கோபத்தை அடக்கி வைப்பதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படும்.

கோபத்தை கட்டுப்படுத்தினால் நமது உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பே முழுமையான சேதத்தை சந்திக்க நேரிடும்.நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு கல்லீரல்.கோபத்தை அடக்கி வைத்தால் இந்த கல்லீரல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.நாம் நமது கோபத்தை உள்ளடக்கி வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் கல்லீரல் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.எனவே கோபத்தை அடக்கி வைப்பதை தவிர்த்து விட்டு அதை வெளிப்படுத்திவிடுங்கள்.

கல்லீரல் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் பணியை செய்கிறது.செரிமானத்திற்கு தேவைப்படும் இரசாயனங்களை இந்த கல்லீரல் உற்பத்தி செய்கிறது.உணவின் மூலம் உடலுக்குள் செல்லும் நச்சுக் கிருமிகளை வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது.

இரத்தத்தில் படியும் கழிவுகளை வடிகட்டும் பணியை கல்லீரல் செய்கிறது.இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பை ஒழுங்குபடுத்தும் பணியை செய்கிறது.உடலுக்கு தேவையான வைட்டமின்களை சேகரித்து வைத்து சரியான நேரத்தில் வழங்குகிறது.இப்படி கல்லீரல் என்ற உறுப்பு 500க்கும் அதிகமான வேலையை செய்கின்றது.

நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கு ஏற்ற வடிவில் மாற்றிக் கொடுக்கும் பணியை கல்லீரல் செய்கிறது.கல்லீரல் நோய் ஏற்பட்டால் எடை இழப்பு,குமட்டல்,வாந்தி,வயிற்று வலி,கால் வீக்கம்,பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

0

தற்பொழுது இளம் வயதில் உள்ள பெண்கள் நெஞ்சு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இதற்கான காரணம்,அறிகுறி மற்றும் தீர்வு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு நெஞ்சு வலி வர காரணங்கள்:

**மன அழுத்தம்
**தூக்கமின்மை
**அலர்ஜி
**அதிகப்படியான கவலை
**வாயுத் தொல்லை
**தசைப்பிடிப்பு
**நுரையீரல் பிரச்சனை

இளம் வயது நெஞ்சு வலி அறிகுறிகள்:

**பதட்டம்
**அதிகமாக வியர்த்தல்
**மூச்சுத்திணறல்
**அதிக தலைவலி
**குமட்டல்
**அதிக உடல் சோர்வு
**தலைச்சுற்றல்
**தோள்பட்டை வலி
**கழுத்து வலி
**மார்பு பகுதியில் இறுக்க உணர்வு

இளம் வயது நெஞ்சு வலியை குணப்படுத்தும் சித்த வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)குங்குமப் பூ – சிறிதளவு
2)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

குங்குமப் பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பூவை மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

குங்குமப் பூ தேவையான அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பால் நன்றாக கொதித்து வந்ததும் இடித்து தூளாக்கி வைத்துள்ள குங்குமப் பூவை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த குங்குமப் பூ பாலை பருகி வந்தால் மன அழுத்தம் கட்டுப்படும்.இதனால் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு பொடி – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாதாம் பருப்பை பொடித்து வைத்துக் கொள்வும்.பிறகு பாத்திரம் ஒன்றில் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலில் பாதாம் பருப்பு பொடி போட்டு பருகினால் இளம் வயது நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகினால் மன அழுத்தத்தால் ஏற்படும் நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்..!!

0

1. மகாலட்சுமி தாயார் அமர்ந்த நிலையில் உள்ள படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

2. நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நான் அணைக்க கூடாது.

3. கோவிலின் உள்ளே செல்லும் பொழுது கோவிலின் பிரதான வாயில் வழியே தான் உள்ளே நுழைய வேண்டும். வேறு வாயிலின் வழியாக கடவுளை காண உள்ளே நுழையக்கூடாது.

4. கடவுளுக்கான அர்ச்சனை பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்து தான் கை, கால்களை கழுவ வேண்டும். ஆனால் குளிக்கக் கூடாது.

6. எலுமிச்சை பழத்தில் ஏற்றக்கூடிய தீபத்தை வீடுகளில் ஏற்றக்கூடாது. கோவில்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.

7. சுவாமிக்கு எடுக்கக் கூடிய ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக்கூடாது. மனிதர்களுக்கு எடுக்கக்கூடிய ஆரத்தியில் மட்டுமே சுண்ணாம்பு சேர்க்க வேண்டும்.

8. சனிபகவானுக்கு என எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது. ஆலயங்களில் மட்டுமே ஏற்ற வேண்டும்.

9. ஏதேனும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு முடிவு எடுக்க வேண்டும் என்றால், இறைவன் சன்னதி மற்றும் தெய்வீக அலை உள்ள இடங்களில் அமர்ந்து யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

10. நல்ல காரியங்களைப் பற்றி பேசும் பொழுது எள் மற்றும் எண்ணெய் குறித்த விஷயங்களை பேசக்கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

11. ருத்ராட்சம் அணிந்திருப்போர் இறுதிச் சடங்குகளுக்கு செல்லும் பொழுது அதனை கழற்றி வைத்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

12. கோவில் மூடி இருக்கும் பொழுதும், சுவாமி அலங்காரத்தின் பொழுது திரை மூடி இருக்கும் பொழுதும் கடவுளை வணங்கக் கூடாது.

13. கோவிலில் தீப ஆராதனை காட்டும் பொழுது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.

14. பெண்கள் மாதவிலக்கின் போது எக்காரணம் கொண்டும் தலையில் பூ வைக்க கூடாது.

15. செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கை சுத்தம் செய்யக் கூடாது.

16. இறந்த முன்னோர்களின் படங்களை சுவாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

17. பூஜை அறையில் தெய்வங்களின் படத்தை வடக்கு பார்த்தவாறு வைக்கக் கூடாது.

18. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படத்தை, விக்கிரகத்தை அல்லது காலண்டரை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. பசுவுடன் அல்லது ராதையுடன் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்குமாறு இருக்கக்கூடிய கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

19. கர்ப்பிணி பெண்களோ அல்லது அவரது கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.

20. சிங்கம், புலி, கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை வீடுகளில் வைப்பதன் மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

தோள்பட்டை வலி எதனால் வருகிறது? இவை குணமாக இந்த 3 பொருட்களை அரைத்து குடிங்க!!

0

குழந்தைகள்,வயதானவர்கள் என்று அனைவரும் தோள்பட்டை வலியை அனுபவித்து வருகின்றனர். தோள்பட்டையில் ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்வதனால் வலி ஏற்படும்.பள்ளி செல்லும் பிள்ளைகள் புத்தப்பையை முதுகில் சுமக்கின்றனர்.இதனால் தோள்பட்டை பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி மற்றும் தோள்பட்டை தேய்மானம் ஏற்படுகிறது.தோள்பட்டை வலியை கவனிக்கவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.

தோள்பட்டை வலி வர காரணங்கள்:

**காயம் உண்டதால்
**ஒருபக்கமாக படுத்தல்
**நரம்பு தொடர்பான பிரச்சனைகள்
**எலும்பு தேய்மானம்
**தோலில் அதிக சுமை தூக்குதல்

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு – 17
2)கருப்பு உலர் திராட்சை – 15
3)கிஸ்மிஸ் பழம் – 15
4)தண்ணீர் – ஒரு கப்

தயாரிக்கும் முறை:-

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 17 பாதாம் பருப்பை போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 15 கருப்பு உலர் திராட்சை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் 15 கிஸ்மிஸ் பழத்தை போட்டு இரவு முழுவதும் ஊறவையுங்கள்.மறுநாள் இந்த ஊறவைத்த பொருட்களை தண்ணீருடன் மிக்சர் ஜாரில் போட்டு ஜூஸ் பதத்திற்கு மைய்ய அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸை குடித்து வந்தால் தோள்பட்டை வலி,எலும்பு தேய்மானமாதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

தோள்பட்டை வலியை குறைக்க வழிகள்:

1.தோள்பட்டை மீது ஐஸ்பேக் வைத்து அழுத்தம் கொடுப்பதால் வலி குறையும்.தோள்பட்டை வலியை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

2.மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் தோள்பட்டை வலியை குறைக்கலாம்.

3.சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலியை குறைக்கலாம்.தோள்பட்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.தோள்பட்டை வலி தொடர்ந்து இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

0

ஒரு சிலரின் வேண்டுதல்கள் அவர்கள் வேண்டிய சில நாட்களுக்கு உள்ளேயே நிறைவேறி விடும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தி அதிக அளவில் உள்ள இடங்களில் தான் நமது முன்னோர்கள் கோவில்களை கட்டி வைத்துள்ளனர். எனவே தான் இந்தப் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழியை நமக்கு கூறுகின்றனர்.

அந்தக் கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக நமது பிரச்சனை சரியாகிவிடும் என்பதை ஒரு சிலர் உணர்ந்து இருப்போம். நமக்கு தேவைகள் என நிறைய இருக்கும். ஆனால் வேண்டுதல்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டுமே இருக்கும்.

அத்தகைய வேண்டுதல்களுள் எந்த வேண்டுதல் நமக்கு உடனடியாக நிறைவேற வேண்டுமோ, அந்த வேண்டுதல்களை நம் மனதில் நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அம்மன் கோவில்களுக்கு சென்றாலே உப்பு வாங்கி போட்டு வேண்டுதல் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.ஏனென்றால் உப்புக்கும் நமது வேண்டுதல்களுக்கும் இடையே ஒரு பிரபஞ்சத்தின் சக்தி இருப்பதாக அர்த்தம்.

நமக்கு உடனடி தேவையாக இருக்கக்கூடிய ஒரு வேண்டுதலை நினைத்து அதிகாலை நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து நமது இரண்டு கைகளிலும் கல் உப்பினை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நமது கண்களை மூடி நமக்கு என்ன வேண்டுமோ அந்த வேண்டுதல் நிறைவேறியவாறு பிரபஞ்சத்திற்கு நன்றி கூற வேண்டும்.

உதாரணமாக நிலம் வாங்க வேண்டும் என்றால் “இன்று எனக்கு இதை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு நன்றி பிரபஞ்ச சக்தியே”என்று கூற வேண்டும். இதில் உள்ள ‘இன்று’ என்ற வார்த்தை மிகவும் முக்கியம். இந்த வார்த்தையை கூறி நமது வேண்டுதல்கள் நிறைவேறியதாக கருதி, பிரபஞ்சத்திற்கு நன்றி கூற வேண்டும்.

நமது இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்துக்கொண்டு ‘இன்று எனக்கு சொந்த நிலம் கொடுத்ததற்கு நன்றி பிரபஞ்ச சக்தியே’ என்று நம்மால் எவ்வளவு நேரம் அமர்ந்து கூற முடியுமோ அவ்வளவு நேரம் கூறலாம்.
இவ்வாறு கூறிய பின்னர் நமது கையில் உள்ள உப்பை ஓடுகின்ற நீரில் அதாவது ஏரி, குளம், கிணறு இது போன்றவைகளில் போட்டு விட வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் நமது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த உப்பை போட்டு விட வேண்டும்.
இந்த உப்பு கரைந்த பின்னர் அந்த தண்ணீரை நமது சமையலறையில் உள்ள சிங்க் தொட்டியில் ஊற்றிவிட்டு, சிறிது தண்ணீரை திறந்து விட்டால் ஓடுகின்ற நீரில் விட்டது போல அர்த்தம்.

நமது வாழ்க்கையில் நமக்கு கிடைத்துள்ள அனைத்து விஷயங்களுக்கும், பொருட்களுக்கும் இந்த பிரபஞ்சம் தான் காரணம். இந்த பிரபஞ்சத்திடம் நாம் முழு மனதுடன், முழு நம்பிக்கையுடன் கேட்கும் பொழுது நாம் கேட்க கூடிய அனைத்து செயல்களும் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்.