Home Blog Page 379

தேவையாடா இது.. 25 பிரபலங்கள் மீது போடப்பட்ட வழக்கு!! விஜய் தேவர் கொண்டா.. பிரகாஷ் ராஜ் உட்பட பலருக்கு சிக்கல்!!

0

சூதாட்ட விளம்பரங்களும் நடித்ததற்காக டோலிவூட்டை சேர்ந்த விஜய் தேவர் கொண்ட நிதி அகர்வால் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 25 பிரபலங்கள் மீது சைபராபாத்தில் உள்ள மியாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

மியாபூர் காவல் துறை வெளியிட்ட தகவலின்படி, முதலில் இந்த சூதாட்ட வழக்கின் கீழ் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி போன்ற பல பிரபலங்கள் கைது போன்ற பல பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நிதி அகர்வால், பிரணிதா மற்றும் அனன்யா நாகல்லா என மொத்தமாக தற்பொழுது 25 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களின் மீது, ஹைதராபாத் மற்றும் சைதராபாத் போலீசார் பந்தய ஆப்புகளை ஊக்குவித்ததற்காக முதல்முறையாக நடிகர்களின் மீது வழக்கு பதிவு செய்த எஃப் ஐ ஆர் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 318 (4), 112 r/w 49, தெலுங்கானா கேமிங் சட்டத்தின் 3, 3(A), மற்றும் 4 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 இன் பிரிவு 66D போன்ற சட்டங்களின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மியாப்பூர் காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இது போன்ற குற்றங்களுக்காக நடிகர்கள் மீது எஃப் ஐ ஆர் போடப்படுவது இதுதான் முதல் முறை என்றும் ஏற்கனவே இது குறித்த நோட்டீசுகளை அவர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் ஹைதராபாத் மற்றும் சைதரபாத் காவல் துறையினர் விளக்கமளித்திருக்கின்றனர்.

சரளமா இங்கிலீஷ் பேச முடியலையா!! உடனே இதை செய்து பாருங்கள்!!

0

Communication skill : இது ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம் தான் நினைக்கக் கூடிய எண்ணங்களை தெளிவாகவும் எந்தவித தயக்கமும் இன்றி புரிய வைப்பதற்கான ஒரு மொழி வடிவமாக உள்ளது. அதாவது கம்யூனிகேஷன் ஸ்கில் பொருத்தவரை எந்த மொழியிலும் ஒருவர் நினைக்கக்கூடிய கருத்தை வெளிப்படையாக மற்றும் எந்தவித தயக்கமும் இன்றி தெரிவிக்க முடியும்.

பலருக்கு தமிழில் தாராளமாக பேச முடிந்தாலும் ஆங்கிலத்தில் பேசும் பொழுது சரியாகத்தான் பேசுகிறோமா நாம் பேசுவதில் ஏதேனும் தவறு இருந்து பிறர் நம்மை பார்த்து சிரித்து விடுவார்களோ என்பது போற்ற பல தயக்கங்கள் உள்ளது. இதனால் கம்யூனிகேஷன் ஸ்கில் என்பது ஆங்கிலத்தில் பேசும் பொழுது உடைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன பேச நினைக்கிறோமோ அதை தைரியமாக பேச வேண்டும். ஆரம்பத்தில் சில தவறுகள் இருப்பினும் போகப்போக அந்த தவறுகளும் சரி செய்யப்படும்.

உங்களுடைய கம்யூனிகேஷன் இல்லை மேம்படுத்த முக்கிய வழிகள் இதோ :-

✓ தினமும் வீடியோ ரெக்கார்டர் முன்பு நின்று 5 நிமிடங்கள் பேசிப் பாருங்கள். அப்பொழுது அதில் மீண்டும் பார்க்கும் பொழுது உங்களுடைய தவறுகள் என்ன என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும் அந்த தவறுகளை அடுத்த நாள் திருத்திக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து செய்யும்பொழுது ஐந்து நிமிடம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

✓ உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடியவர்கள் புதிய மனிதர்கள் போன்றவர்களை அணுகி பேசுவதன் மூலம் உங்களுடைய தயக்கம் நீங்கி செல்லும். எடுத்தவுடன் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என இல்லை தமிழில் பேசினாலும் எந்தவித தயக்கமும் இன்றி பேச முற்பட வேண்டும்.

✓ முக்கியமான விஷயம், எந்த மொழியில் பேசுகிறோம் என்பதை விட என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். இந்த வார்த்தை ஆளுமை இருந்து விட்டால் தவறான வார்த்தைகள் வெளிவராது.

✓ நீங்கள் பேசக் கூடியவர்கள் மீது உங்களுக்கு ஏதேனும் பயமோ பதற்றமோ இருந்து விட்டால் உடனடியாக தன் நண்பர்களிடத்தில் பேசுவது போல பேச நினைக்க வேண்டும். குறிப்பாக தன் நண்பர்களிடம் பயன்படுத்தும் சில வார்த்தைகளை இடம் அறிந்து பயன்படுத்துதல் அவசியம்.

✓ சில நேரங்களில் யாரையாவது சந்திக்க செல்லும் பொழுது அல்லது ஏதேனும் ஒரு விஷயங்களுக்கு செல்லும் பொழுது அங்கு என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பது குறித்து பயிற்சி செய்து செல்வது அந்த சூழலை திறமையாக கையாள உங்களுக்கு உதவும்.

✓ உங்களுடைய குரல் தைரியமாகவும் நீங்கள் பேசுவதில் எந்த தவறும் இல்லை என்ற நம்பிக்கையும் இருந்து விட்டால் உங்களுடைய உடலும் அதற்கு ஏற்றபடி அமைத்தல் வேண்டும். வார்த்தை ஜாலங்களால் மட்டுமே நாம் நினைத்தபடி கம்யூனிகேஷன் ஸ்கில் வளராது நம்முடைய உடல் மொழியும் அது அடங்கும்.

✓ கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்த்துக் கொள்ளக்கூடிய தருணத்தில் இலக்கண பிழைகள் குறித்து கவலை கொள்ளுதல் தேவையில்லாத விஷயம். அது வெறும் பிழையாக மட்டும் தான் இருக்கும் போகப் போக திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

டாஸ்மாக்கை மூட வேண்டும்.. குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம்!! தவெக எடுத்த அதிரடி முடிவு!!

0

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ரயிலடி தெருவில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறியதாவது :-

ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மார்க்கை சுற்றி மருத்துவமனை, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி போன்றவை செயல் பட்டு வருவதாகவும் இந்த டாஸ்மார்க்கில் குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பொது மக்கள் என அனைவரையும் குடிமகன்கள் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதற்காகத்தான் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உட்பட 200 பேர் இணைந்து இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலளிக்கவில்லை என்றால் அடுத்த முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பொழுது அரசு செவி சாய்க்கவில்லை என்றால் குடும்பத்தோடு குடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பார்த்திபன் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி குழந்தைகள் தங்களுடைய சீருடைகளுடன் கலந்து கொண்டது அந்த பகுதியை பரபரப்பாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்கள்!!

0

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகள்:

*உடல் சோர்வு
*மூச்சுத் திணறல்
*சருமப் பிரச்சனை
*முடி உதிர்வு
*இதயத் துடிப்பில் மாற்றம்
*அரிப்பு

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

1)லெமன்,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை அரைத்து சாறு எடுத்து பருக வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

2)மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த மாதுளம் பழத்தை அரைத்து ஜூஸ் எடுத்து பருகி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

3)பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து பருகினால் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.

4)பசும் பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

5)தர்பூசணி பழத்தை பொடியாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.

6)நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும்.

7)பூசணி விதையை நெயில் வறுத்து பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் ஹீமோகுளோபின் பன்மடங்கு உயரும்.

8)நிலக்கடலை,பீன்ஸ் போன்ற பருப்புகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவின் அதிகரிக்கும்.

9)போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.திராட்சை பழச்சாறை பருகி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

யூரிக் அமில அளவை குறைக்கும் எலுமிச்சை இலை!! இதை எப்படி பயன்படுத்துவது?

0

நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது மூட்டு வலி,கிட்னி ஸ்டோன்,மூட்டு பகுதியில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எலுமிச்சை இலை,புதினா போன்றவற்றை கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள்.

யூரிக் அமிலம் அதிகரித்ததன் அறிகுறிகள்:

**சிறுநீரக கல்
**மூட்டு வலி
**சிறுநீரக செயலிழப்பு
**கீல்வாதம்
**நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்
**இடுப்பு பகுதியில் வலி
**முதுகில் கூர்மை வலி

யூரிக் அமிலத்தை குறைக்கும் நான்கு இலை கொண்ட சட்னி:

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை
2)புதினா தழை
3)துளசி இலைகள்
4)எலுமிச்சை இலைகள்
5)பூண்டு
6)பச்சை மிளகாய்
7)உப்பு
8)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் கொத்தமல்லி,புதினா,துளசி மற்றும் எலுமிச்சை ஆகிய இலைகளை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.இதனை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது சுத்தமான மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள நான்கு வகை இலைகளை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாயை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை சாதம்,சப்பாத்தி போன்றவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

மூட்டு வலி,எலும்பு வலி போன்ற பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இந்த சட்னி செய்து சாப்பிட்டு வாருங்கள்.

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு பிரச்சனை இருக்கா? ரிலீஃப் கிடைக்க இந்த ஜெல்லை ஊற்றி மசாஜ் செய்யுங்கள்!!

0

உங்கள் ஈறுகள் பலவீனமாக இருந்தால் இரத்த கசிவு பிரச்சனை இருந்தால் அலட்சியம் செய்யாமல் அவற்றை குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட காரணங்கள்:

**அலர்ஜி
**ஈறுகளை அழுத்தி பல் துலக்குதல்
**சிலவகை உணவுகள்
**ஈறு நோய்
**ஹார்மோன் மாற்றங்கள்
**வைட்டமின் குறைபாடு

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள்:

1)தேங்காய் எண்ணெய்

காலையில் எழுந்த பின்னர் தேங்காய் எண்ணெயை கொண்டு ஆயில் புல்லிங் செய்தால் பல் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.தேங்காய் எண்ணையில் கிராம்பு பொடி கலந்து பற்களை தேய்த்து கழுவினால் ஈறுகளில் கசிவு ஏற்படாமல் இருக்கும்.பல் கறைகள் உருவாவதும் தடுக்கப்படும்.

2)கற்றாழை ஜெல்

பிரஸ்ஸான கற்றாழை துண்டுகளை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைத்து
பல் ஈறுகளில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும்.கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.

3)க்ரீன் டீ

தினமும் காலை நேரத்தில் க்ரீன் டீ செய்து பருகினால் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.க்ரீன் டீ கொண்டு வாய் கொப்பளித்தால் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.

4)கொய்யா இலைகள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை நன்றாக காய வைத்து பொடித்து பற்கள் தேய்த்து வந்தால் பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.கொய்யா இலை கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் வலிமையாகும்.

5)பூண்டு + இந்துப்பு

சிறிதளவு பூண்டு பற்களை இடித்து இந்துப்பு சேர்த்து பற்களை தேய்த்து வந்தால் கறைகள் உருவாவது கட்டுப்படும்.ஈறுகளின் வலிமை அதிகரிக்க பூண்டு பற்களை பயன்படுத்தலாம்.

6)சின்ன வெங்காயம்

வடித்த கஞ்சியில் இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயத்தை இடித்து போட்டு நன்றாக கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் இரத்த கசிவு வருவது கட்டுப்படும்.

7)வேப்பிலை

கசப்பு சுவை கொண்ட வேப்பிலையை பொடித்து பல் துலக்கி வந்தால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படாமல் இருக்கும்.

வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

0

நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்ப வேண்டும், கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஸ்டிரைக்கில் ஊழியர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், இயக்குனர் உட்பட அனைத்துப் பணியிடங்களை சேர்ந்தோரும் பங்கேற்கப்பதாக கூறப்படுகிறது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகள், தமிழ்நாட்டில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், ஊடக வங்கி ஊழியர்களும் இதில் பங்கேற்கவுள்ளதால், போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக வங்கிப் பணிகள் வரும் சனிக்கிழமை முதலே  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், சனிக்கிழமை 4-வது சனிக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு அன்றைய தினம் பொதுவாகவே விடுமுறை அறிவிக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றும் விடுமுறை. இதனைத் தொடர்ந்து, ஸ்டிரைக் மார்ச் 24, 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஓவர் வெயிட்டை குறைத்து ஒல்லியாக மாற.. இந்த 4 டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்க!!

0

ஆரோக்கியமான உடலுக்கு எடை மேலாண்மை அவசியமான ஒன்றாகும்.உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே நோய் பாதிப்புகள் நம் அருகில் நெருங்காமல் இருக்கும்.ஆனால் இக்காலத்தில் ஆண்கள்,பெண்கள் அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்சனை உடல் பருமன் தான்.

உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் சேர்வதை தான் உடல் பருமன் என்று சொல்கின்றோம்.உடல் பருமனால் நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.மாரடைப்பு,சர்க்கரை நோய்,பக்கவாதம்,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு.

ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் விளைவாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்க்கிறது.இந்த கொழுப்பை குறைக்க கடினமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை.சில சிம்பிள் வழிகளை பின்பற்றி வந்தாலே உடல் எடையை தானாக குறைந்துவிடும்.

1)உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இதனால் அதிகமாக உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் குறையும்.உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.எண்ணெய்,கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

2)காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கலோரிகளை எரித்துவிடலாம்.காலையில் எழுந்த உடன் தண்ணீர் பருகி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படிவது கட்டுப்படும்.

3)மாலை 6 மணிக்குள் உணவு சாப்பிட்டுவிட வேண்டும்.நீங்கள் சிறிது சிறிதாக நான்கு அல்லது ஐந்து வேளையாக உணவு உட்கொள்ள வேண்டும்.இரவில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.எளிதில் செரிக்க கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

4)தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும்.காலை நேரத்தில் நடப்பதால் உடல் எடை சீக்கிரம் குறையும்.குறிப்பாக உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடந்தால் உடலில் உள்ள கலோரிகள் குறையும்.சாப்பிட்ட பிறகு நடந்தால் உடல் எடை இழப்பு ஏற்படும்.சாப்பிட பிறகு நடந்தால் செரிமானப் பிரச்சனை,சர்க்கரை நோய் பாதிப்புகள் வராமல் இருக்கும்.

இடுப்பு வலி முதல் கை கால் வலி வரை.. இந்த மாத்திரை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளுங்கள்!!

0

இளமை பருவத்தினர் முதல் முதுமை பருவத்தினர் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக இடுப்பு வலி,முதுகு வலி,கழுத்து வலி,கை கால் வலி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்புகள் ஏற்பட காரணம் கால்சியம் சத்து குறைபாடுதான்.

வைட்டமின் பற்றாக்குறை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் இதுபோன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இளமை பருவத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

எலும்புகள் வலிமை அதிகரிக்க சிறுதானிய உணவுகளை உட்கொள்ளலாம்.சிறுதானியங்களில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம்,விட்டமின்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.ராகியில் செய்யப்பட்ட புட்டு,இடியாப்பம்,களி போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

சாமை அரிசியில் புரதம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.சாமை அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு,இடுப்பு எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.கருப்பு கவுனி அரிசியை அரைத்து புட்டு,கொழுக்கட்டை,கஞ்சி போன்றவற்றை செய்து உட்கொண்டு வந்தால் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

அடுத்து உணவு உட்கொண்ட பிறகு சல்லாக்கி என்ற சித்த மருந்தை உட்கொள்ளலாம்.இது எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.இந்த சல்லாக்கி மருந்தை உணவு உட்கொண்ட பிறகு 500 முதல் 600 மில்லி கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.இந்த சல்லாக்கி மருந்து அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.இந்த மருந்து குதிகால் வலி,கை கால் வலியையும் சரி செய்யும்.

அலோபதி அல்லாத தீர்வாக இது திகழ்கிறது.இந்த மருந்தை சரியான அளவு சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்காமல் இருக்கலாம்.

Kidney Stone: இந்த காயை கொதிக்க வைத்து குடித்தால்.. கிட்னியில் ஒரு கல்லு கூட மிஞ்சாது!!

0

சிறுநீரகத்தில் இருக்கின்ற கற்களை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

கிட்னி ஸ்டோன் அறிகுறிகள்:

**சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்
**சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
**சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு
**சிறுநீர் கழிக்கும் பொழுது அசௌகரிய நிலை ஏற்படுதல்
**இடுப்பு அல்லையில் வலி ஏற்படுதல்

கிட்னி ஸ்டோனை கரைக்கும் வீட்டு வைத்தியங்கள்:

1)பீன்ஸ்

இந்த காயில் புரதம்,இரும்பு,நார்ச்சத்து,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.முதலில் தரமான பத்து பீன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு கப் அதாவது ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.தண்ணீர் நன்றாக சுண்டி கால் லிட்டராக வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இந்த பீன்ஸ் பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி பருகி வந்தால் கிட்னி கற்கள் கரைந்து சிறுநீரில் வந்துவிடும்.

பீன்ஸ் பானம் பருகி வந்தால் இதயம்,கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

2)நூல்கூல்

மருத்துவ குணம் நிறைந்த காய்களில் ஒன்று நூல்கூல்.இந்த காயில் மாங்கனீஸ்,வைட்டமின்கள்,பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.நூல்கூல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நூல்கூல் சாப்பிடுவதால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படுவது கட்டுப்படுகிறது.இந்த நூல்கூளை சாப்பிட்டு வந்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நூல்கூல் பானம் கிட்னியில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றுகிறது.இந்த நூல்கூலை சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு 500 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.குறைவான தீயில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பிறகு இந்த பானத்தை வடிகட்டி பருகினால் கிட்னி கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

3)முள்ளங்கி

இதில் நார்ச்சத்து,பொட்டாசியம் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த முள்ளங்கியை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அரை லிட்டராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை சிறிது ஆறவைத்து பெருகி வந்தால் கிட்னியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.