வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 4

திணறும் திமுக!! அரசியல் களத்திலும் ஹீரோவாகும் விஜய்.. மவுசு குறையும் உதயநிதி!!

0

TVK DMK: தமிழக அரசியல் களத்தில் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரைப்போல களம், சரத்குமார் என மற்ற நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்த போது கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் விஜய்க்கு அலாவதியான வருகையை தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். தனக்கு மார்க்கெட் இருக்கும் போதே அரசியலுக்குள் நுழைவது தான் இதற்கு முக்கிய காரணம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே கொள்கை மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை கூறிவிட்டார்.

அந்தவகையில் பாஜக-வை காட்டிலும் திமுக இவரை முடக்குவதையே வேலையாக வைத்துள்ளது. இதனால் அவர் பொதுவெளியில் மக்களை சந்தித்தாலும் அதிக நேரம் ஒதுக்காதது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறது. இவையனைத்தும் தவெக கட்சி மீது திமுக வுக்கு உள்ள அச்சத்தை பார்க்க முடிகிறது. நாளடைவில் துணை முதல்வராக உள்ள உதயநிதிக்கான மவுசும் குறைந்து வருகிறது. விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பு இவருக்கு இல்லை. இதுரீதியான பேச்சு அறிவாலையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

விஜய் தனது பிரச்சார பரப்புரையை இன்று முதல் திருச்சி மரக்கடையில் தொடங்கியுள்ளார். விஜய்க்கு இணையாக தனது மகனை ஈடு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே உதயநிதி தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். இம்முறை சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என்பதை விட விஜய்க்கும் உதயநிதிக்கும் தீவீரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உதயநிதியை காட்டிலும் விஜய் ஸ்கோர் செய்தால் திமுக-விற்கே அது பெரும் இழப்பீடை கொடுக்கும்.

கேள்விக்குறியாகும் எடப்பாடி பதவி.. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போகும் சசிகலா!!

0

ADMK: அதிமுக-வில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்சியும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதற்கு காரணம் இ.பி.எஸ்-யின் தலைமையும், கட்சியின் மூத்த அதிகரிகளை அவர் ஒதுக்கி வைத்ததுமே என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளை மறுத்த இ.பி.எஸ் அவரை பதவியிலிருந்து நீக்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதை எதிர் கட்சிகளும் அதிமுக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவரான சி.வி. சண்முகம் அவர்களும் பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் ஒருமைப்பாடு அவசியம் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் சசிகலா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது இ.பி.எஸ்-க்கு புதிய அழுத்தமாக உருவாகியுள்ளது. சசிகலா மீண்டும் அதிமுக-வில் சேர்வதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. “சசிகலா-விற்கு இடமில்லை” என்று இ.பி.எஸ் பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சசிகலா மீண்டும் இணைந்தால் அதனால் கட்சி பலப்படும் என்று சிலர் கூற, மற்றொரு புறம் அது இ.பி.எஸ்-யின் தலைமையை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றுமையை நிலை நிறுத்துவாரா? இல்லை வெளியேறிய தலைவர்களை மீண்டும் இணைக்க கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்க்கு அடுத்தடுத்து நெருக்கடி.. பிரச்சாரத்துக்கு வந்த சிக்கல்!! தவெக வளர்ச்சியை நசுக்க திமுக நடத்தும் சதி!!

0

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் முன்னணி கட்சிகளுக்கு மிகப்பெரும் போட்டியாக வளர்ந்து வருகிறார். இது அதிமுக-விற்கும், திமுக-விற்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜய் நடத்திய இரண்டு மாநாட்டிலும் யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இது ஆளும் கட்சியான திமுக-வையும் எதிர்கட்சியான அதிமுக-வையும் கதிகலங்க வைத்தது.

இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு 3 முறை அனுமதி கோரியும் காவல் துறையினர் அனுமதி தராததால், விஜய் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையெல்லாம் தாண்டி இன்று திருச்சியில் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும், ரசிகர்களும் திரண்டனர்.

இந்த கூட்டமே அவரின் வெற்றிக்கான முதற்படி என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அடுத்ததாக விஜய் செப்டம்பர்-20 ஆம் தேதி நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கபட்ட போதே விஜய் அவர்கள் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

வாக்குகள் தவெக பக்கம் வந்துவிடுமோ என்ற பயத்தினால் தான் ஆளுங்கட்சி இவ்வாறான மறைமுக வேலைகளை செய்து வருவதாகவும், யாராலும் தவெக-வை வீழ்த்த முடியாது என்றும் கூறினார். தற்போது அதற்கேற்றார் போல் நாகையில் நடைபெறவிருக்கும் பிரச்சாரத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் தவெக-வின் வளர்ச்சியை சிதைக்க திமுக இதனை திட்டமிட்டு செய்து வருகின்றது என்று, தவெக தரப்பினர் கூறி வருகின்றனர்.

அரசாங்கத்தின் அனுமதி மறுப்பின் மூலம் திமுக, தவெக-வை பார்த்து பயப்படுகிறது என்ற உணர்வை தூண்டியுள்ளது. சாதாரண பிரச்சாரத்தை விட “அனுமதி மறுப்பு” என்பதே அதிகளவில் பேசப்படும் என்பதால், இந்த சம்பவத்தினால் விஜய் இன்னும் வளர்ந்து வருவார் என்ற கருத்தும் நிலவுகிறது. எதிர்கட்சிகளுக்கு கூட இல்லாத நிபந்தனைகளும், அனுமதி மறுப்பும் தவெக-விற்கு மட்டும் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராமதாஸ் அதிரடி: அன்புமணிக்கு பதிலாக மகள் காந்திமதி – பாமகவில் புதிய பிளவு!!

0

PMK: பாமக-வில் நடைபெற்ற பிரிவுகளின் புதிய திருப்பமாக, தற்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரின் மகள் காந்திமதியை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் பதவியில் அமரவைக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. திமுக-வை வாரிசு அரசியல் என்று விமர்சித்து வரும் வேலையில், பாமக-விலும் அந்த நிலையே தொடர்கிறது.

ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தி வந்தார். தொடர்ந்து அன்புமணியும் தலைமை வகித்து வந்தார். அதற்கு பிறகு ராமதாஸ்-யின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணியின் தலைவர் பதவி கொடுக்கப் பட்டது. இந்த வரிசையில் காந்திமதியும் இணையப் போவதாக கூறப்படுகிறது. இது விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ராமதாஸ் பிரச்சாரத்திற்கு செல்லும் போது சில பிரச்சாரங்களில் காந்திமதியும் இருந்துள்ளார். இதன் காரணமாக சிலர் இதனை ராமதாஸ் திட்டமிட்டு தான் செய்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அன்புமணியின் பதவி பறிப்புக்கு பின்னால் காந்திமதியின் சதித்திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் பாமக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் செய்தியாக இது பார்க்கப்படுகிறது.

ஒருவேளை காந்திமதி பதவிக்கு வந்தால் அது “குடும்ப அரசியல்” என்ற வாதத்தை வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது கட்சியை பலப்படுத்துமா? இல்லை மேலும் பிளவை ஏற்படுத்துமா என்பதை வருங்கால அரசியல் தான் தீர்மானிக்க வேண்டும்.

விஜய்க்கு செல்லும் பா.ம.க வாக்குகள்.. முன்னிலையில் உள்ள த.வெ.க !

0

PMK TVK: சமீப காலமாகவே பாமக-வில் ராமதாஸ்-க்கும், அன்புமணி-க்கும் இடையே சச்சரவு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் அன்புமணியை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு வாக்கு யார் பக்கம் செல்லும் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக அரசியலில் பாமக எப்போதுமே ஒரு வலுவான அடித்தளத்தை வைத்திருக்கும் கட்சியாகும். குறிப்பாக வன்னியர் சமூக வாக்குகளை தன் பக்கம் வைத்திருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பாமக-விற்கு துணையாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட பிளவினால் ராமதாஸ் அணியும் அன்புமணி அணியும் தனித்தனி அரசியல் நடைமுறைகளை பின்பற்றுவதாக தெரிகிறது.

இதனால் பாமக வாக்காளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகின்றனர். இந்த சமயத்தில், விஜய் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். விஜய் ஏற்கனவே இளைஞர் ஆதரவை அதிகளவில் பெற்றிருக்கும் பட்சத்தில், பாமக பிரிவால் அதிருப்தியில் உள்ள கட்சி தொண்டர்களின் வாக்கும் விஜய் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

பாமக பிளவுப்பட்டதால் வாக்குகள் முழுவதும் விஜய்க்கு மாறுமா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை, ஆனால் அதிருப்தி அடைந்த வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2026 தேர்தலை முன்னிட்டு யாருக்கு ஆதரவாக செல்லப் போகிறது என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

அரசியலில் சென்டிமென்டை உருவாக்கும் விஜய்.. எம்.ஜி.ஆர்-யை முன்னிலைப்படுத்தி அரசியலா?

0

TVK: த.வெ.க தலைவர் விஜய் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். அவரின் முதல் பிரச்சாரம் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று தொடங்கியுள்ளது. அவர் ஏன் முதலில் இந்த பகுதியை தேர்தெடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருச்சி மரக்கடை பகுதி என்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பல கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மரக்கடை பகுதியில் பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியது வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.

எம்.ஜி.ஆர்.- அவர்களுக்கு மரக்கடை பகுதியில் ஒரு சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வும், எம்.ஜி.ஆர்-யின் நினைவுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் மரக்கடை பகுதியில் பெரிய கூட்டங்களை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக-வும் தனது பிரச்சாரங்களை இப்பகுதியில் நடத்தியது.

மரக்கடை பகுதி அதிமுக–திமுக விற்கு முக்கிய தேர்தல் களமாக மாறியது. இவர்களை தொடர்ந்து மு.க. ஸ்டாலின், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரும் தங்களின் பிரச்சாரங்களை இங்கு மேற்கொண்டுள்ளனர். தற்போது 2025-இல் நடிகர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மரக்கடை பகுதியில் தொடங்கியிருப்பது, பேசு பொருளாகவும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இவர் தேர்ந்தெடுத்த இந்த பகுதி எம்.ஜி.ஆர்-யின் அரசியலை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இது மக்களிடையே ஒரு அரசியல் சென்டிமென்டை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்-யின் பெயரும் புகழும் இன்றும் பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் அந்த செண்டிமென்டை தனது அரசியல் தொடக்கத்துடன் இணைக்க முயல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக அரசியலில் தனது அடையாளத்தை உருவாக்குவதாகவும் இது உள்ளது. மேலும் முன்னணி தலைவர்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான முதல் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

திமுக – விசிக கூட்டணியில் பிளவு ? தொண்டர்களின் கேள்வி: வெறும் இரண்டு சீட்டு தானா !!

0

DMK VSK: காலை முதலே திருமாவளவன் கூறிய செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, “நான் இரண்டு சீட்டுக்காக திமுக-வின் பின்னால் ஓடுவதாக என்னை விமர்சிக்கிறார்கள், ஆனால் அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

திமுக-வுடனான கூட்டணியில் நீண்ட காலமாக இணைந்து பயணம் செய்துவரும் திருமாவளவனின் கட்சிக்கு மிகக் குறைவான சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, தன்னுடைய கட்சியின் வலிமையை முன்னிறுத்தி கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கி வருகிறது. இதுவே “முதன்மை கட்சி – துணைக் கட்சி” என்பதை தெளிவாக காட்டுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெறும் துணைக் கட்சி அல்ல. குறிப்பாக, தென் மாவட்டங்களில் திமுக-வுக்கு அதிக வாக்கை பெற்று தரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. திருமாவளவன் திமுக-வின் பின்னால் நிழல் போல நடக்கிறார் என்று மக்கள் மத்தியில் நிலவும் விமர்சனத்தை முறியடிக்க விரும்புவதால் தான் திறந்தவெளியில் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

“வெறும் இரண்டு சீட்டுக்காக விமர்சிக்கப்படுகிறேன்” என்ற அவரது குற்றச்சாட்டு, திமுக-வி.சி.க கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது. திருமாவளவனின் இந்த கருத்து அவர் கூட்டணியில் தொடர்ந்தாலும், தனது கட்சியை முன்னிலைப் படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்வார் என்பதும் தெளிவாகிறது. இல்லையெனில், அவர் வெளியேறுவாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவிடம் திருமாவளவன் அதிக சீட்டுகள் கேட்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கோரிக்கைக்கு திமுக எப்படி பதிலளிக்கிறது என்பதை பொறுத்தே கூட்டணி தீர்மானிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது 2026 தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அன்புமணியா? ராமதாஸா? தொடர்கிறது பா.ம.க விரிசல்!!

0

PMK: சமீப காலமாகவே பாமக-வில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடும், தலைமை போட்டியும் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை நான் தான் என்பதை நிலை நிறுத்தும் வகையிலும், உலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், ராமதாஸ் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளில் இருத்தும் நீக்கினார்.

இந்த பதவி நீக்க அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவுப்பட்டு இருக்கிறது. இதில், முன்னாள் எம்.பி. பாலு, “அனைத்து அதிகாரமும் அன்புமணியிடம் தான் உள்ளது என்றும், அவர் விரும்பினால் எவரையும் உயர்த்தவும் முடியும், தாழ்த்தவும் முடியும்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், அன்புமணியின் கையில் தான் பா.ம.க.வின் எதிர்காலம் நிலைத்திருக்கும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மாற்று கருத்தாக, கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர், “ராமதாஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அன்புமணிக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் , அதற்கான அதிகாரம் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தான் கட்சியின் தலைமையில் நீடித்திருப்பார் என்பது தெளிவாகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் பாமக-வின் விரிசலுக்கு மேலும் தீனிபோடும் விதமாக அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

பெண்ணாக மாற அந்தரங்க உறுப்பை அறுத்துக் கொண்ட 17 வயது சிறுவன்!!

0

பிரயாகிராஜில் உள்ள ஒரு 17 வயது மாணவர் UPSC தேர்வுக்குத் தயாராகும் போது , தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தனது அந்தரங்க உறுப்பைக் வெட்டியுள்ளார்.

அவர் “எவ்வாறு ஒரு பெண்ணாக உடல் மாற்றம் செய்யலாம்” என்று கூகுள் மற்றும் யூடியூப் மூலம் தேடியுள்ளார்.முதலில், அவர் அனஸ்தீஷியா எப்படி கொடுப்பது என்பது  மேற்கொண்டு  “அந்தரங்க  உறுப்பைக் வெட்டுதல்” போன்ற வீடியோக்களை பார்த்துள்ளார்.

ஆபரேஷன் செய்வதற்கு முன், தானே அன்த்தீஷியா கொடுத்துள்ளார். மேற்கொண்டு சிகிச்சை செய்து கொள்ளவே வலி தாங்க முடியவில்லை.இப்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

பா.ஜ.க அரசை குறி வைத்த ஆ.ராசா- பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக விமர்சனம்

0

BJP: அதிமுக, பாஜக-வின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக-வினர் இன்று எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவர்களது தலைமை அல்ல; பாஜக-வினர் தான், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தையை அதிமுக-வின் அரசியல் நகர்வை தீர்மானிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டு இருக்கிறார்.

அதிமுக எப்போது கூட்டணி முடிவு எடுக்க வேண்டும், எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும், எந்த கோஷங்களை எழுப்ப வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது கட்சித் தலைவர் அல்ல, அமித்ஷா தான் என்று தன்னுடைய கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளார். கட்சியின் தலைவருக்கு சுயமாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவானது அந்த கட்சிக்கும், தமிழக அரசியலுக்கு ஆபத்தானதாகும் என்று தெரிவித்தார்.

அதிமுக-வின் முடிவெடுக்கும் சுதந்திரம் அனைத்தும் இன்று பாஜக-வின் கையில் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதிமுக-வின் தற்போதைய நிலையைப் பார்த்தால் கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியடைந்து வேறு வழிக்கு மாறிவிடுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.

இப்படியே தொடர்ந்தால் அதிமுக-வுக்கு எதிர்காலமே இல்லாமல் போகும், தங்களின் சுயமரியாதையை இழக்கும் நிலை வந்துவிடும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கடுமையான விமர்சனத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் தீவிரமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.